Bahubali: The Beginning (2015) – Tamil & Telugu

by Karundhel Rajesh July 14, 2015   Tamil cinema

‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’ என்ற டாக்லைன் இப்படத்துக்குப் பொருந்துகிறதா? ‘ஒரு திரைப்படம்’ என்ற அளவில் பாஹுபலி (தெலுங்கில் பாஹுபலி. தமிழில் பாகுபலி. பாஹுபலி என்பதே சரியான வார்த்தை. பரந்த தோள்களை உடையவன் என்பது அதன் பொருள்) எப்படி?

முதலில் நான் சொல்லவிரும்பும் ஒரு விஷயம் – இப்படம் நமக்குப் பிடித்திருக்கிறது/பிடிக்கவில்லை என்பதைத்தாண்டிப் பல விஷயங்கள் உள்ளன. ஒரு படம் இப்படி நாடு முழுதும் வெறித்தனமாக மார்க்கெட்டிங் செய்யப்படும்போது, கிட்டத்தட்ட எல்லாத் திரைப்பட ரசிகர்களின் பின்னங்கழுத்தையும் பிடித்துத்தள்ளி, இப்படத்தைப் பார்க்கச் செய்யும் அளவு விளம்பரங்கள் ஒவ்வொரு மணி நேரமும் வந்துகொண்டே இருக்கும்போது, ஒரு திரைப்பட ரசிகனாக நமது வேலை, அவற்றுக்கெல்லாம் மயங்கி, கண்மூடித்தனமாக இதுபோன்ற படங்களைப் பார்ப்பது அல்ல. ஒரு திரைப்படம் என்ற வகையில், கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை உட்பட்ட எல்லா அம்சங்களிலும் இப்படம் நம்மைத் திருப்தி செய்கிறதா என்பதைப் பிற படங்களைப் பார்த்து முடிவுசெய்வதுபோலவே இப்படத்தையும் பார்ப்பதுதான் நம் வேலையாக இருக்கவேண்டும். அப்படித்தான் எல்லாப் படங்களையும் பார்க்கவேண்டும் என்பது என் கருத்து. நான் அப்படித்தான் பார்க்கிறேன். எந்த ஹைப்பும் என்னை பாதிக்க முடியாது. எனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதன் காரணங்களை முழுதாக எழுதுவதே என் இயல்பு.

பாஹுபலியின் முதல் காட்சியே, இப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரியப்படுத்திவிட்டது. ரசனையில் நமக்கும் ஆந்திராவுக்கும் சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன அல்லவா? ஹீரோவைக் கடவுள் ரேஞ்சில் வைத்து வழிபடுவது போன்ற சில ஒற்றுமைகள் இருந்தாலும், தரைரேட் விட்டலாச்சார்யா படம் ஒன்றை நம்மால் இன்றைய காலகட்டத்தில் முழுதுமாக ரசித்தல் இயலாத காரியம். காரணம், தமிழ்ப்படங்கள் இதுபோன்ற மொக்கைகளில் இருந்து விடுபட்டு, தரமான படங்களை ஏற்கெனவே கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஒரு விட்டலாச்சார்யா படத்தின் தரத்தில் ஒரு படத்தை எடுத்து, ‘இதுதான் இந்தியாவின் பிரம்மாண்டம்’ என்று அனைவரின் மீதும் திணித்தால் அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? தண்ணீருக்குள்ளேயே தன்னிஷ்டத்துக்கு நடக்கிறாள் ஒரு அம்மணி. அவள் உயர்த்தப்பட்ட கையில் ஒரு குழந்தை. பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய அருவியோ, ஸிஜி என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படியாக, துளிக்கூட ஒன்ற முடியாத ஒரு காட்சியோடுதான் பாஹுபலி துவங்குகிறது. இந்தக் காட்சியைப் பார்த்தாலே, படத்தில் பின்னால் என்னவெல்லாம் வரப்போகிறது, படத்தின் மேக்கிங் எப்படி இருக்கப்போகிறது என்பதெல்லாம் தெளிவாகவே புரிந்துவிடும்.

இந்தக் குழந்தை யார்? அது எப்படி வளர்க்கப்படுகிறது? இதெல்லாம் படம் துவங்குமுன்னரே நமக்குத் தெரிந்த சங்கதிகளே. எனவே, இந்தக் காட்சிகளை அட்லீஸ்ட் கொஞ்சமாவது சுவாரஸ்யமாகவோ வித்தியாசமாகவோ எழுதியிருப்பார்கள் என்று நினைத்தால், பட்ட காலிலேயே மறுபடி மறுபடி மடேல் மடேலென்று அடிக்கிறார் ராஜமௌலி.

படத்தின் கதை நடக்கும் நிலப்பரப்பு எத்தகையது? அந்த நிலப்பரப்பை எப்படிக் கற்பனை செய்துகொள்வது? மிகப்பெரிய அருவி. மேலே ஒரு நாடு. கீழே சில காட்டு மக்கள். அங்கே லோக்கல் ஹல்க்காக வளர்கிறார் ஹீரோ. இதுதான் நிலப்பரப்பின் பின்னணி. அந்த நிலத்தில் திடீரென்று பனி பெய்கிறது. இந்தப் பனிக்கு சம்மந்தமே இல்லாமல் வசந்தம். இறுதிக்காட்சியின் போர்க்களம் நிகழும் இடமே அதுவரை வரவில்லை. இப்படி, தானும் குழம்பி, நம்மையும் குழப்பியுள்ளனர்.  கொஞ்சம் தள்ளி, ஹீரோயின் ஒரு பெரிய ரகசிய கும்பலுடன் புரட்சிக்காரியாக இருக்கிறார். அதுகூட எப்படி ஹீரோவுக்குத் தெரிகிறது என்றால், திடீரென ஒரு முகமூடி அவருக்குக் கிடைப்பதால்தான். அந்த முகமூடியின் பின்னணியைத் தேடிச் செல்லும் ஹீரோவுக்கு, அந்த முகமூடி இந்தப் புரட்சிக்கார கும்பலுடையது என்று தெரிகிறது.

அந்த மிகப்பெரிய அருவியின் உச்சியில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடிவுசெய்கிறார் ஹீரோ. Dark Knight Rises படத்தில் இந்தியாவில் ஒரு பாதாள சிறைக்குள் சிக்கிக்கொண்ட ப்ரூஸ் வேய்ன், கீழிருந்து மேலே வரப் போராடுவார் இல்லையா? அதுதான் இந்தப் படத்திலும் அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதிலாவது கிணறு. இதிலோ பிரம்மாண்ட அருவி. ஆனால் அதில் ப்ரூஸ் வேய்ன் கஷ்டப்பட்டதைக் கூட இதில் பிரபாஸ் செய்வதில்லை. அவர் பாட்டுக்கு சிம்பன்ஸி போல தாவித்தாவி அருவியைத் தாண்டிவிடுகிறார். அப்பட்டமான, கொடூரமான தெலுங்குப்படத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் உறுதிப்பட்டது இந்தக் காட்சியில்தான்.

புரட்சிக்காரியை சந்திக்கிறார் ஹீரோ. அவளுக்கு ஒரு நோக்கம் உள்ளது. உடனேயே இருவருக்கும் காதல். டகாலென்று காட்சிகள் மாறி, Game of Thrones சீரீஸில் மூன்றாவது சீஸனில் ஜான் ஸ்னோ யிக்ரிட்டை சுவற்றுக்கு வெளியே சென்று சந்திப்பான் இல்லையா? அந்தக் காட்சிகள் ஓடுகின்றன. தமன்னாவின் உடைகள் வேறு அப்படியே யிக்ரிட்டை நினைவுபடுத்தவும் செய்கின்றன. இந்த ஜான் ஸ்னோ-யிக்ரிட் சந்திப்பு முடிந்ததும், ஹீரோ அருவியின் மேல் இருக்கும் நாட்டுக்கு மாறுவேடத்தில் செல்கிறார். அங்கு செல்லும் ஹீரோ சும்மா இருக்காமல், அமெரிக்க சுதந்திரதேவியின் சிலை சைஸில் இருக்கும் ஒரு சிலையை சும்மா ஜாலியாகத் தூக்கி, ஹல்க்கின் மார்க்கெட்டைக் காலி செய்கிறார். உடனடியாக மக்கள் அனைவரும் ஆர்கஸம் அடைந்து ஓலமிட, கொடுங்கோல் மன்னன் ஹீரோவைப் பார்த்துக் கடுப்பாகிறான். அவனிடம் இருக்கும் ஒரு அம்மணியைக் காப்பாற்றுகிறார் ஹீரோ. அவனைத் தடுக்க வருகிறார் கட்டப்பா (சத்யராஜ்). ஆனால் ஹீரோவின் முகத்தைப் பார்த்ததும், படுபயங்கர செண்ட்டிமெண்ட் இசை முழங்க, அவனது காலைத் தூக்கித் தனது (மொட்டை)த்தலையில் வைத்துக்கொள்கிறார். அந்த சீனில் உள்ள அனைவரும் மறுபடி ஆர்கசத்தில் ஓலமிடுகின்றனர். விட்டலாச்சார்யா காலத்துப் பின்னணி இசை நம் காதைப் பதம் பார்க்கிறது.

இந்த இடத்தில் அமரேந்திர பாஹுபலி யார் என்று கிட்டப்பா..ச்சே.. கட்டப்பா விளக்குகிறார். ப்ளாஷ்பேக் துவக்கம். அதுவும் புதிதான ப்ளாஷ்பேக் இல்லை. அதே மஹாபாரதக்கதைதான். பாண்டுவுக்கும் திருதிராஷ்ட்ரனுக்கும் இடையே நிலவிய பிரச்னை. பாண்டுவுக்கு ஒரே மகன். அமரேந்திர பாஹுபலி. திருதிராஷ்ட்ரனுக்கு ஒரு மகன். பல்லாள (பல்வாள்) தேவன். தாயாக ரம்யா கிருஷ்ணன்.

இந்த ப்ளாஷ்பேக்கை அப்படியே முடித்துவிட்டால் படமே முடிந்துவிடுமே? எனவே வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்ட ஒரு போர்க்காட்சி. இந்தப் போர்க்காட்சிக்கு ஒரு காரணமே இல்லை. உதாரணமாக, த டூ டவர்ஸ் படத்திலோ அல்லது ரிடர்ன் ஆஃப் த கிங் படத்திலோ இறுதியில் வரும் போர்க்களக் காட்சிகளுக்குப் படங்களின் துவக்கத்தில் இருந்தே அருமையான பில்டப்கள் இருக்கும். ஆடியன்ஸை சிறுகச்சிறுக அப்போர்க்களங்களுக்குத் தயார்படுத்தும் முயற்சி இது. இதனால் அப்போர்கள் செயற்கையாக இரல்லாமல் மிகவும் இயல்பாகக் கதையோடு பொருந்தும். ஆனால் இது அக்மார்க் தெலுங்குப் படமாயிற்றே? அதிலெல்லாம் எங்க்கே லாஜிக் இருக்கும்? திடீரென இந்தப் போர்க்காட்சிக்கு ஓரிரு வசனங்களின் மூலமே காரணம் சொல்லப்பட்டுப் போரும் துவங்கிவிடுகிறது. இந்தப் போர்க்களத்தில் வரும் எதிரிகளோ கதையில் இல்லவே இல்லாத ஆட்கள். இந்தப் போர்க்களத்துக்காகவே உருவாக்கப்பட்ட செயற்கையான கும்பல்.

இதுதான் பாஹுபலி in a nutshell.

இதுவரை நான் எழுதியதைப் படித்தாலே பாஹுபலியின் பிரச்னைகள் என்னென்ன என்பது தெரிந்துவிடும். ஒரு துளிக்கூட ‘கதை’ என்னும் வஸ்துவே இல்லாத படம் இது. கதை இல்லாததால், இஷ்டத்துக்கு அலைபாய்கின்றன இதன் காட்சிகள். ஆடியன்ஸை நம்பவைக்கவேண்டும் என்ற முனைப்பு சிறிதும் இல்லாமல், கண்டபடி கொடூரமான கற்பனை வறட்சியில் எழுதப்பட்ட காட்சிகள் படம் முழுக்க இருக்கின்றன. ‘பிரம்மாண்டம்’ என்பது மட்டுமே இப்படத்தைக் காப்பாற்றிவிடும் என்பதுதான் ராஜமௌலியின் எண்ணம் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் சம்மந்தா சம்மந்தமில்லாத, மிகவும் ஆவரேஜான காட்சிகள் படம் முழுக்கவே இருந்தால் எப்படி? இரண்டாம் பாதியில் வரும் போர்க்காட்சிகளில் சற்றே பரவாயில்லாத ஸிஜி காட்சிகள் இருக்கின்றனதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவை இப்படம் விளம்பரப்படுத்தப்படுவதுபோல் ‘மிகச்சிறந்த’, ‘Ground breaking’ என்ற வார்த்தைகளுக்கெல்லாம் சற்றுக்கூட தகுதி இல்லாதவை. ‘தெலுங்குப்படங்களின் தரத்துக்கு இவை பரவாயில்லை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படங்களின் செய்நேர்த்திக்கு அருகேகூட பாஹுபலி வர முடியாது என்பதே உண்மை.

பாஹுபலியின் அதே genreல் எடுக்கப்பட்ட பல ஹாலிவுட் படங்களைக் கவனித்தாலே போதும் – ஒரு கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்படவேண்டும்? அது இடம்பெறும் காட்சிகள் எவ்வளவு தரமாக இருக்கவேண்டும்? ஒட்டுமொத்தமான திரைக்கதை மூலம் ஆடியன்ஸின் மனதுக்கு நெருக்கமாக எப்படி சொல்ல வரும் கதையை மாற்றுவது? என்பதெல்லாம் எளிதில் விளங்கிவிடும். அறுபதுகளில் வெளிவந்த நம்மூர் ‘கர்ணன்’ படம் இன்றும் அட்டகாசமாக இருக்கும். காரணம் ஸ்பெஷல் எஃபக்ட்கள் அல்ல. கதையும் திரைக்கதையும்தான். ஆனால் பாஹுபலியில் இவை இரண்டுமே மறக்கப்பட்டு, காட்சிகளில் பிரம்மாண்டம் என்பதுமட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. எத்தனை கோடி பட்ஜெட்டை நம்மாட்களிடம் கொடுத்தாலும், அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம், குத்துப்பாட்டு, டூயட், எரிச்சல் வரவழைக்கும் காதல் காட்சிகள், ரத்தம் காளி சிலையின் மீது தெறிப்பது போன்ற தெலுங்கு செண்டிமெண்ட்கள் இல்லாமல் படம் வராது என்பது பாஹுபலியின்மூலம் புரிந்தது.

பாஹுபலிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் மொழி பற்றியும் சில வார்த்தைகள். நம்மாட்களுக்கு ஒரு புதிய மொழியை உருவாக்குவது அத்தனை எளிது என்ற எண்ணம். டால்கீன் உருவாக்கிய எல்விஷ் மொழியைப் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள சிக்கலான வார்த்தைகள் பற்றியும், அதற்கு எத்தனை காலம் ஆனது என்பது பற்றியும் இவர்கள் கொஞ்சமாவது படிக்கவேண்டும். புதிதாக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ‘தக்கிரி பிக்கிரி’ என்று வார்த்தைகளைப் போட்டு உருவாக்கலாம். ஆனால் அவைகளைப் படத்தில் எப்படி உபயோகிக்கவேண்டும் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாவிட்டால் பாஹுபலியில் வரும் மொழி போலத்தான் ஆகும். சுருக்கமாக, பல ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் அம்சங்களை அவற்றைப்பற்றிய எந்த அறிவும் இல்லாமல் மனம்போனபோக்கில் தெலுங்கு கைமாவாக அளித்துள்ளனர்.

ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஒரு திரைக்கதை எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு நான் ஈ ஒரு மிகச்சிறந்த உதாரணம். எனது திரைக்கதை வகுப்புகளில் நான் ஈயின் சில காட்சிகளை எடுத்துக்கொண்டு விவாதிப்பது என் வழக்கம். இப்படிப்பட்ட ஒரு விறுவிறுப்பான படத்தை இயக்கிய ராஜமௌலியை பாஹுபலி போன்ற ஒரு படத்தை எடுக்கத் தூண்டியது எது? எத்தனை யோசித்தாலும் விளங்கவில்லை. பாஹுபலி ஒரு அக்மார்க் தெலுங்குப்படம் மட்டுமே. அப்படிப்பட்ட படங்களை ரசிக்கும் ஆடியன்ஸுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் மட்டும் வெளியானால் போட்ட பணத்தை எப்படி எடுப்பது? இதனால், ‘மாபெரும் ஸிஜி’, ‘இந்தியா கண்டிராத பிரம்மாண்டம்’ என்றெல்லாம் போலியாக விளம்பரம் செய்யப்பட்டு, இந்திய மக்கள் அனைவரின் தலையிலும் சுமத்தப்பட்டுள்ளது இப்படம். தமிழ் சினிமா பாஹுபலியையெல்லாம் தாண்டி எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாற்பது வருடங்கள் முன்னர் வந்திருக்கவேண்டிய பாஹுபலி போன்ற கொடூரங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வெளியாகி நம் ரசனையைப் பதம் பார்ப்பது ஒரு துன்பியல் நிகழ்வு தவிர வேறில்லை. சத்யராஜ், சில காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன், இதன் production design ஆகியவற்றைத் தவிர பாஹுபலியில் பாராட்டப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பது என் கருத்து. இத்தனை வருட உழைப்பையும் இத்தனை கோடி ரூபாய்களையும் இவ்வளவு பொறுப்பற்றவகையில் வீணடித்ததை நினைத்தால் மனம் வலிக்கிறது.

பி.கு

1. இந்தக் கட்டுரை, தரமான சினிமா வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மார்க்கெட்டிங்கினால் நாடு முழுதும் இருக்கும் திரைரசிகர்களை ஒரு அக்மார்க் தெலுங்குப்படம் பார்க்கவைத்து ஏமாற்றும் கொடுமையை எதிர்த்தே இதை எழுதியிருக்கிறேன். எனக்கும் ராஜமௌலிக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை என்பதை, இக்கட்டுரை படித்துவிட்டு ‘ஹேட்டர்’ என்று எழுதப்போகும் நண்பர்களுக்குப் புரியவைப்பதற்காகவே இந்த டிஸ்க்ளெய்மர்.

2. ‘பாஹுபலி’ எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு இதுபோன்ற சண்டைக்காட்சிகள் மட்டுமே தேவை. கதை வேண்டாம் என்னும் நண்பர்களை நான் எந்த வகையிலும் இன்ஃப்ளுயன்ஸ் செய்யவில்லை. இங்கே நான் எழுதியிருப்பது என் கருத்து மட்டுமே.

3. படத்தில் வரும் காலகேயர்களுக்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் டோத்ராகிகளுக்கும் வேற்றுமையே இல்லை. போலவே, க்ளைமாக்ஸில் நெருப்பின் உதவியால் காலகேயர்களைத் தாக்குவதற்கும், கேம் ஆஃப் த்ரோன்ஸின் இரண்டாம் சீஸனின் இறுதியில் டிரியன் ஸ்டான்னிஸின் படைகளை நெருப்பினால் தாக்குவதற்கும் தொடர்புகள் உண்டு.

4. ‘பாஹுபலி ஒரு tale. இதற்கெல்லாம் திரைக்கதையே தேவையில்லை. இந்த உண்மை கூட எனக்குப் புரியவில்லை’ என்று ஒரு நபர் – சினிமாவுக்குப் போகிறேன் என்பதைக்கூட, ‘வெண்திரையில் பளிச்சிடும் பிம்பக்கோர்வைகள் வரிசையாக சலனமடையும் ஒரு அரங்குக்கு என் கால்களின் உதவியால் சிறுகச்சிறுக நடந்து சென்றேன்’ என்று ஒரு வாக்கியத்தையே ஃபுல் ஸ்டாப் இடாமல் ஒரு முழுப் பக்கத்துக்கு வேண்டுமென்றே வலிந்து வரவழைத்துக்கொண்ட புரியாத ‘இலக்கிய’த்தரத்தில் எழுதும் ‘சினிமா கண்டிராத பேரரிஞர்’ – எழுதியிருப்பதை ஃபேஸ்புக்கில் ஸ்க்ரால் செய்யும்போது கஷ்டப்பட்டு எழுத்துக்கூட்டிப் படித்துப் புரிந்துகொண்டேன் (அவரைப் போன்றவர்களைப் பற்றி எழுதினால் ஆட்டோமேடிக்காக அவர்களின் நடை வந்துவிடுகிறது பாருங்கள்). Tale என்பதன் ஸ்பெல்லிங் கூடத் தெரியாத நபர்களிடம் சினிமா மாட்டிக்கொண்டு முழிப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. என்ன செய்வது? இதுவரை இந்தக் கட்டுரையில் நான் கொடுத்திருக்கும் உதாரணங்களைப் பார்த்தாலே போதும். குறிப்பாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ போன்றவற்றைப் பார்த்தாலே, ஒரு tale என்றால் என்ன என்பது இவர்களைப் போன்றவர்களுக்குப் புரிந்துவிடும். நம் தளத்தைப் படிப்பவர்களுக்கெல்லாம் இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அன்னாருக்கு லார்ட் ஆஃப் த ரிங்ஸ் புரியவில்லை என்றால், அது பற்றி நான் எழுதியிருக்கும் இலவச மின்புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்கலாம். மிக எளிமையான நடையில் அது எழுதப்பட்டிருப்பதால் ஒருவேளை இவர்களைப் போன்றவர்கள் அது புரியாமல் தவிக்கக்கூடும். அது பரவாயில்லை. சுருக்கமாக, பணத்தைப்போட்டு எடுக்கப்படும் எந்தப் படத்துக்கும் திரைக்கதை என்பது அவசியம் தேவை. அது எப்படிப்பட்ட படமாகவும் இருக்கலாம். திரைக்கதையே இல்லாமல் இஷ்டத்துக்குக் காட்சிகளை அமைத்து எடுக்கப்படும் படங்கள், பட்ஜெட்டை எடுத்து வெற்றிகரமான வசூலில் ஜெயித்தாலும் மிக எளிதில் மறக்கப்பட்டு விடும். அதற்குத் தமிழிலேயே பல உதாரணங்கள் உள்ளன (இந்தப் பேரறிஞரை முதலில் ignore செய்யவே விரும்பினேன். காரணம், நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சம்மந்தமே இல்லாமல் நம்மை வம்புக்கு அழைப்பவர்களை ignore செய்வதே என் பாணி. ஆனாலும், இவரது மொக்கையான அறிக்கை எத்தனை தவறானது என்பதைப் புரியவைத்தால்தான் அவருக்கே அது நன்மைகூட பயக்கலாம்; அது அவரது கண்ணோட்டத்தை மாற்றக்கூடும் என்பதால்தான் இந்த விளக்கம். இதைப் படித்துவிட்டு அந்த அறிஞர் ஒரு முழுப்பக்கத்துக்கு ஃபுல் ஸ்டாப் வைக்காமல் பதில் எழுதக்கூடும். ஆனால் என் வேலை முடிந்தது. அவர் இனி எந்தப் பதில் எழுதினாலும் அதை எழுத்துக்கூட்டிப் படிக்கும் பொறுமை எனக்கு இல்லை. செய்யவேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக உள்ளன. இவரிடம் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சம்மந்தமே இல்லாமல் என்னை ஏன் வம்புக்கு இழுக்கவேண்டும் என்பது விளங்கவில்லை).

  Comments

98 Comments

  1. This is a perfect thought about cinema. Thank you once again brother for keep taking me into a good way. We can’t say this movie as our proud one. Mother India, Pather panjaali, salaam bombay, swades, the japanese wife, veedu, santhiya ragam, mullum malarum , uthiri pookkal, pasi, thannerthanneer and even more which I have not seen yet. This our proud movies of Indian cinema. As u said that karnan, chandralekha, adimai penn were spectacular story tellers with visual. I 100% agreed with you. Thank u so much brother.

    Reply
    • AC

      Why? you people are trying to this much intellectual, can’t you just enjoy a movie. I think u all see a movie not entertaining, you see the same as a seminar.

      Reply
      • Prakash – Thanks for the view. I agree 100 %

        AC – I never see films like an intellectual. My only hope while seeing a film is that it should entertain me. This movie didn’t. That’s why my post. At the same time, I never impose my views on anyone. As I have told here, this is my view. I do not have a problem with those who like the film. Cheers.

        Reply
  2. Rajan

    Perfect Review !!!

    Reply
  3. hi,

    Really got lot of info..
    rocking
    keep up the good work..
    What ever said in the post is correct..
    a creator needs these kinds of criticisms …
    superb writing raj…

    Reply
    • Thank you madhu.

      Reply
  4. You have got patience to go and watch this movie in the theater:)

    Reply
    • You bet Sandhya. I got cheated initially by the rave reviews, and hence I underwent this experience 🙁

      Reply
  5. You might be too intellectual or trying to show an intellectual….

    இந்த கட்டுரைக்கு நோ கமெண்ட்ஸ். உங்கள் ‘கருத்தை’ நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள். //ஒரு படம் இப்படி நாடு முழுதும் வெறித்தனமாக மார்க்கெட்டிங் செய்யப்படும்போது, கிட்டத்தட்ட எல்லாத் திரைப்பட ரசிகர்களின் பின்னங்கழுத்தையும் பிடித்துத்தள்ளி, இப்படத்தைப் பார்க்கச் செய்யும் அளவு விளம்பரங்கள் ஒவ்வொரு மணி நேரமும் வந்துகொண்டே இருக்கும்போது…// இதனால் எல்லாம் ரசிகர்கள் மயங்கிவிட மாட்டார்கள். அந்தளவுக்கு அவர்களை முட்டாளாக நினைக்க வேண்டாம் 🙂 படைப்பாளிகளை விட ரசிகர்கள் புத்திசாலிகள். ‘கையை பிடித்து இழுத்தாலும்’ சரக்கு இல்லையென்றால் காறி துப்பிவிட்டு செல்வார்கள். ‘பாபா’வுக்கும் ‘லிங்கா’வுக்கும் செய்யாத மார்கெட்டிங்கா? ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் ஏதாவது படத்தில் இருந்தால்தான் அதை ‘வெறி’த்தனமாக பார்ப்பார்கள். ப்ளாக் பஸ்டராக மாற்றுவார்கள். வெறும் மார்கெட்டிங்குக்கு மயங்கும் அளவுக்கு மக்கள், மாக்கள் அல்ல 🙂 பை தி வே படம் ரூ.200 கோடி கலெக்‌ஷனை தாண்டிவிட்டது. – I AGREE THIS POINT FROM MR.K.N.SIVARAMAN. THIS MOVIE COMPLETELY SATISFIED ME…. `

    Reply
    • Mano – கலெக்ஷனுக்கும் படத்தின் தரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது என் கருத்து. ஆரண்ய காண்டம் ஓடியதா? ஆனால் அது இதுவரை வந்துள்ள படங்களில் சிறந்தவைகளில் ஒன்றுதானே? And, as I have mentioned in my article, I never impose my views on anyone. As I have told here, this is my view. I do not have a problem with those who like the film. Cheers.

      Reply
  6. Rajkumar

    I watch this film in first day the film is ok first off slow boring but second off is better from war c g works

    Reply
    • Good to know your opinion boss. Cheers.

      Reply
  7. உங்கள் விமர்சனம் அருமை i agree .,.. Bore அடிக்காமல் செல்வதால் மட்டுமே படம் பிடித்திருந்தது..

    Reply
    • That’s cool boss. Cheers

      Reply
  8. Karthikeyan Palanisamy

    ஒரு வேளை நீங்க திரைக்கதை அமைத்து குடுத்து இருந்தா நல்லா இருந்துச்சுன்னு சொல்லிருப்பிங்களோ… வைய்த்தெரிச்சல்.. வேற என்ன சொல்ல..

    இதே இத ஒரு அமெரிக்காகரன் எடுத்து இருந்த இப்படியா எழுதி இருப்பிங்க..

    ஆயிரம் கைகள் தடுத்தாலும் ஆதவன் மறைவதில்லை!!!!

    Reply
    • Parthiban V

      Correct.
      I agreed your comments.
      Rajesh sir, your reference from movies, detailing of script is interesting always. After giving your reference, i have searched and watched lots of movies. But i feel after reading this blog that you are some what hating telugu movie makers. Let it be. Movie is ok. Satisfied the expectation. Sankar’s movies also always marketed. Enthiran movie climax is fully cg.. and fully headache…cg is not done well too. but Baahubali, cg work is amazing..compared sankar’s Enthiran. I am from Tamil.

      Reply
    • ஒருவேளை நான் திரைக்கதை அமைத்திருந்தால் அவசியம் இதைவிட இன்னமும் சுவாரஸ்யமாக அமைத்திருப்பேன். ஹாலிவுட்டில் இதுபோன்ற பல படங்கள் மைக்கேல் பேயால் இயக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை நான் இதுவரை கண்டுகொண்டதே இல்லையே?

      எனக்கு வயிற்றெரிச்சல் என்பதை நீங்கள் கண்டுபிடித்திருப்பதைப் பார்க்க சிரிப்பு வருகிறது. எனக்கு என்ன வயித்தெரிச்சல் இருக்கமுடியும்? என் கருத்தை எழுதத்தானே என் வெப்சைட்? நான் என் கருத்தை யார் மீதும் திணிக்கவே இல்லையே? படம் பிடித்திருப்பவர்களை நான் இன்ஃப்ளுயன்ஸ் செய்யவில்லை என்றுதானே சொல்லியிருக்கிறேன்?

      Reply
      • Parthiban – I do not hate Telugu movie makers. Infact I loved ‘Eega’. And, yes. compared to Endhiran, this is okay. But my point is, that is not enough. It should not be ‘okay’. It should be ‘the best’.

        Reply
      • Karthikeyan Palanisamy

        ஹி ஹி அப்படியா…
        இன்று நேற்று நாளைக்கு நீங்க தான திரைக்கதை பண்ணிங்க.. படம் எப்படி சூப்பர் டுப்பர் ஹிட்டா..

        எனக்கு திரைக்கதைய பத்தி ரெம்ப தெரியாது… தியேட்டருக்கு போனமா ஜாலியா கவலை இல்லாம ஒரு ரெண்டு மணி நேரம் இருந்தோமான்னு நினைக்கிறவங்க நம்ம மக்கள்.. பழைய சோறு சாப்பிடுற எங்கள பிட்சா பர்கர் சாப்பிட சொல்லாதிங்க… நீங்க வேணா உலக படங்கள மட்டும் விமர்சனம் பண்ணுங்க.. நம்ம மொழி படங்கள் இப்படிதான் இருக்கும் எங்களுக்கு இதுவே போதும்…

        Reply
    • Hom5

      Good

      Reply
  9. siva kumar

    i expect lot but ???????.
    very good review ,
    fact fact fact.

    Reply
  10. Ramesh Vasudevan

    நண்பா நல்ல விமர்சனம் ….நன்றி….இந்த படம் பார்க்கதவங்க தயவு செய்து சீறிஞ்சீவி காரு நடித்த காதல் தேவதை தெலுங்கு படம் பாருங்க….குழந்தைகளோடு பார்க்க கூடிய நல்ல தெலுங்கு மசாலா படம்…..

    Reply
    • Thanks Ramesh. Cheers.

      Reply
    • பார்த்தேன். காமெடின்னா என்னன்னு இவங்களுக்கு நான் க்ளாஸ் எடுக்கணும் போல 🙂 . என்னைக் கேட்டிருந்தா இதைவிட இன்னும் நல்லா ஸ்பூஃப் பண்ணிருப்பேன் பாஸ்.. RIP Spoof 😛

      Reply
      • 😀 😀 😀 கண்டிப்பா… RIP Spoof…

        Reply
    • ROFL. I saw that boss :D..

      Reply
  11. Sathish

    Good review bro. Mostly you are right. Also lots of scenes copied from various movies. for example prabhas saving tamanna in a mountain scene was copied from a animation movie Mulan (1998).In that mulan movie heroine saves hero, but here story is different by sequence. The statue falling and prabhas saving the statue is copied from a chinese movie(sorry i forget the name)… But over all movie is good to watch. i like it unconditionally.

    Reply
    • Parthiban V

      Then, who will save heroin. villain should save ?? there is no need of reference. with your comments i understood that James cameron also copied from Mulan 1998 for his AVTAR. Right..

      Reply
      • //The statue falling and prabhas saving the statue is copied from a chinese movie// – That’s news to me. Let me check. Mulan too is a new news. I have seen it, but lemme see it again.

        Reply
  12. Kannan B.K.

    100% True Review. They are try to cheat the people, misuse the media with ADVERTISEMENT Juggling

    Reply
    • Thank you kannan

      Reply
  13. vijay

    மார்க்கெட்டிங் மூலமாக படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தால் போதும்.. படம் வெற்றி

    Reply
    • Absolutely right. That’s the trend now

      Reply
  14. vijay

    முண்டாசுப்பட்டி..
    பீட்சா.. ஜிகர்தண்டா..
    குக்கூ.. மெட்ராஸ்… பரதேசி..
    சூது கவ்வும் போன்ற கதையம்சம் உள்ள படங்களை முதல் நாள் தியேட்டரில் கூட்டமே
    இல்லாமல் பார்த்திருக்கிறேன்..
    ஆனால் பாகுபலிக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.. மக்களின் ரசனை மார்க்கெட்டிங்கை நோக்கி ஓடுகிறது…

    Reply
    • மக்களுக்குப் புடிச்சமாதிரி ரெண்டு மூணு செண்ட்டிமெண்ட் சீன். அதை வெறித்தனமா மார்க்கெட் பண்ண ஒரு டீம். அதான் இந்தப் படம்

      Reply
  15. suriya

    you specifed abou the landscape.. In tile card it self a map is showned That song also intimate both the travel of river and the lady (Ramyakrishnan). There is no snow on the area near the water fall it is only at above the hill that place is denoted as(Kunthala dhesam).
    I think your are not carefully watched the film. Like this you mistakely portrait a lot.

    CG on the climax fight seuqnce is almost goos but you said that OK. The sets are really super (Mahizhmathi).

    Overall it is a good entertaining movie.

    Reply
    • No Suriya. I too saw the map in the beginning. And I understand your comment. But my intention was that, when you show a landscape, show it in such a way that it grabs the audience’s attention. In this film, if you notice, everything has been shown in a very urgent, haphazard manner. There are a flurry of needless scenes which are there just for the megalomaniacal purposes, and not to establish the story strongly in the minds of the audience. I meant it that way

      Reply
  16. காரிகன்

    http://tamil.oneindia.com/news/tamilnadu/karundhel-rajesh-slams-bahubali-231131.html

    கருந்தேள்,

    மேலே உள்ளது பாகுபலி பற்றிய உங்கள் விமர்சனம் பற்றிய விமர்சனம்.

    பாகுபலி ஒரு தெலுங்குப் படம். அது எந்த தரத்தில் இருக்கும் என்று தெரிந்ததுதான். நீங்கள் சரியாகவே சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. எனக்கு நான் ஈ, மாவீரன் போன்ற ராஜ மவுலி யின் எந்தப் படங்களின் மீதும் எந்தவித ஈர்ப்பும் உண்டானதில்லை. வெறும் பிரம்மாண்டம் என்ற ஜிகினா தூவி எந்த புதுமையும் இல்லாமல் படங்கள் வருவதுதான் இப்போதைய டிரெண்ட் போலும். இந்தப் படத்திற்கு அளவுக்கு அதிகமான ஹைப் உண்டாகிவிட்டது. எனவே உங்கள் விமர்சனத்தை இப்படித்தான் எதிர்கொள்வார்கள்.

    Reply
    • //வெறும் பிரம்மாண்டம் என்ற ஜிகினா தூவி எந்த புதுமையும் இல்லாமல் படங்கள் வருவதுதான் இப்போதைய டிரெண்ட் போலும். இந்தப் படத்திற்கு அளவுக்கு அதிகமான ஹைப் உண்டாகிவிட்டது. எனவே உங்கள் விமர்சனத்தை இப்படித்தான் எதிர்கொள்வார்கள்.// – காரிகன். நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்.. அதுதான் இந்தப் படத்தின் பிரச்னையும் கூட.

      Reply
  17. Rxkumar

    Fantasy film..let’s ignore the logic and enjoy the movie. What about Sathyaraj? He said his “bums are not drums” for Rajini to kick……now he has given his head to Prabhas to put his foot on!

    Reply
    • //Fantasy film..let’s ignore the logic and enjoy the movie// – This is exactly my point. The filmmakers too want the audience to say this. If this continues, then we will NEVER have a quality fantasy, and all they would give us are lacklustre plots like Bahubali.

      Reply
  18. You are such a moron

    Reply
  19. Yenda panni, nee edutha indru netru naaali mattum yokiyama.. paradesi.. poramboku, oru time machine kedacha udane oru lover and one villain.. otha kathai.. evaru indha mathiri reviews elutharathu.. ommala.. sutha mudidu poda.. periya pudungi.. if you cant appreciate just dont show off your intellectuality..

    Reply
  20. //தரைரேட் விட்டலாச்சார்யா படம்
    otha un indru netru naalai mattum ena vazthu.. fantastic movienu nenepa..unaku ellam enada thaguthi iruku.. oru 10 books eluthida nee periya monnaya.. vayathu erichal.. aduthavana parata theriyanum.. intha mathiri silra thanama pesakoodtha b@$t@rd.

    Reply
  21. Yenda panni, nee edutha indru netru naaali mattum yokiyama.. paradesi.. poramboku, oru time machine kedacha udane oru lover and one villain.. otha kathai.. evaru indha mathiri reviews elutharathu.. ommala.. sutha mudidu poda.. periya pudungi.. if you cant appreciate just dont show off your intellectuality..1

    Reply
  22. Yenda panni, nee edutha indru netru naaali mattum yokiyama.. paradesi.. poramboku, oru time machine kedacha udane oru lover and one villain.. otha kathai.. evaru indha mathiri reviews elutharathu.. ommala.. sutha mudidu poda.. periya pudungi.. if you cant appreciate just dont show off your intellectuality..2

    Reply
  23. Yenda arivu ketavane.. nee pudungana “indru netru naalai” ithanoda vimarsanatha elutha thuppu iruka.. yenda monna naye.. antha padathula intha 1000rs note if he goes back to 1960s sellathunu oru manga madyanuku kooda theriyum.. un heroku theriyatha.. nee discussionla iruntha appa solla vendiyathu thane.. kevelamana oru padathuku discussion poitu athu sooper padamnu un adivarudigal sonnangala? athuku nee pulakangitham adanchitiya.. panni naye.. un mathiri naigala.. theruvula nadu rodala vittu savadikanum da.. i read some of the reviews.. i understood that you are pakka racist. try to accept all movies from all languages.. pizaa burger thinra panniyada nee..

    oru time machine’a vachi evlavo sooper’a padam eduthu irkalam.. like going to past and interacting with them and going to future and interactign with themnu.. but you monna panni naye. oru figure, oru villana vachi atha masalava arachitu ippa pecha parru.. panni payale..

    Reply
  24. this is just a shit and nothing else.. pure racist..

    Reply
    • good man

      yes… f o

      Reply
  25. Ture Man

    horrible review

    Reply
  26. Ture Man

    thats tamil is making you to be super hero.. prabla ezthualara.. thu.. i dont want to make you famous for nothing.. cheap advertisement.. waste of time for you..

    Reply
    • Thanks for the comment. Cheers.

      Reply
  27. ஜகன்

    என்னண்ணே பண்றது?பிளாகர் பேஸ்புக் ப்ரோபைல் வச்சிருக்குறவன் எல்லாம் விமர்சகனாயிட்டான்டான்னு சொன்னா நம்ப மாட்றான் ..பயபுள்ள பொய் சொல்றதா நெனச்சிட்டான்..
    ட்ராய் படத்தில் போர் துவங்குவதற்கு “இவன் பொண்டாட்டிய அவன் அழைச்சிட்டு பொய்ட்டான். அவன் பொண்டாட்டிய இவன் அழைச்சிட்டு பொய்ட்டான்” என்ற ஒரு வலுவான காரணம் இருக்கும். ஆனால் இங்கு எல்லாருடைய மனைவிகளும் அப்படியே இருக்கின்றனர். ஆனாலும் போர் துவங்குகிறது. என்ன கன்றாவி லாஜிக்கோ.

    Reply
    • emperor

      nice comment .

      Reply
      • 😀 😀 ;).. பாஸ்.. உங்க கோபம் புரியுது. இருந்தாலும், படம் பிடித்தவர்களை நான் பாதிக்கவில்லைன்னு ஆல்ரெடி சொல்லிட்டேனே.. இது என் கருத்து மட்டுமே

        Reply
  28. Ramesh Kumar

    என்னங்க விமர்சனம் இது, தரம்கெட்ட பிதற்றல் போல உள்ளது. கண்டபடி சினிமாவை
    ரசிக்கும் மூன்றாம் தர ரசிகன் கூட உங்களைவிட அதிக ரசனை உள்ளவனாகத்தான் கண்டிப்பாக இருப்பான். என்னது,!!! தமிழ் திரை உலகம் எங்கேயோ போய்விட்டதா?… இல்லையே, நான் பார்த்தவரை அங்கேயேதான் நின்று கொண்டு இருக்கிறது. உங்கள் விமர்சனத்தில், இல்லை வயித்தெரிச்சலில் தமிழர், தெலுங்கர் பாகுபாடும், தெலுங்கர் மீதான இன துவேசத்தைதான் வாந்தியாக எடுத்து வைத்துள்ளீர்களே தவிர, இது ஒரு தரமான விமர்சனமாக இல்லை. கலைக்கும், இசைக்கும் மொழி ஏது. இதில் வேறு, படத்தை ரசிப்பவன் எல்லாம் முட்டாள் போலவும், நீங்கள் என்னமோ உலக மகா அறிவாளி போலவும் நினைப்பு வேறு. நினைப்புதான் மனிதனின் பொழைப்பை கெடுக்கிறது சார். தெலுங்கு, தமிழ் என்ற இன உணர்வு கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு ஒரு சாதாரண இரசிகனாக படம் பார்த்து விட்டு நடுநிலையோடு விமர்சனம் செய்யுங்கள். இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு வேறு ஏதாவது நல்ல உருப்படியான வேலை இருந்தால் அதைப் போய் பாருங்கள். என்னதான் விளம்பரம் கொடுத்தாலும் படத்தில் சரக்கு இல்லை என்றால் படம் படுத்துவிடும் என்ற சின்ன விஷயம் கூடவா உங்களுக்கு தெரியாது. இது கூட தெரியாத என்ன விமர்சகர் சார் நீங்கள். எவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்றிவிடுகிறார்களோ அவ்வளவு ஆபத்தும் அதில் உள்ளது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் அடுத்த காட்சியே எதிர் விளைவுகளை அது ஏற்படுத்திவிடும். ஒரு வேளை அனைவரும் பாராட்டும் விஷயத்தை எதிர்த்தால் தன்னை அறிவு ஜீவியாக எல்லாரும் நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். யார் மனதை யார் அறிவார்!!!

    Reply
    • ரமேஷ் – எனக்கு ‘நான் ஈ’ மிகவும் பிடித்த படம். அதைத் தெளிவாக சொல்லியிருக்கிறேனே? எனக்கு ஜாதி, மதம் போன்ற ஒண்ணரையணா பிரச்னைகளில் நம்பிக்கையே இல்லை. படத்தைப் பற்றி என் கருத்து இது. உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக, எனக்குப் பிடிக்காவிட்டாலும் ‘சூப்பர்” என்று தான் எழுதவேண்டுமா சொல்லுங்கள்?

      //என்னதான் விளம்பரம் கொடுத்தாலும் படத்தில் சரக்கு இல்லை என்றால் படம் படுத்துவிடும் என்ற சின்ன விஷயம் கூடவா உங்களுக்கு தெரியாது. இது கூட தெரியாத என்ன விமர்சகர் சார் நீங்கள்.// – இந்தப் படத்தின் வெறிகொண்ட மார்க்கெட்டிங் இந்தியா முழுதும் வேலை செய்தது. படம் பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்னால் தொலைந்தீர்கள். அதுதான் இந்த மார்க்கெட்டிங்கின் வெற்றி. உங்கள் கமெண்ட்டிலேயே அது தெரிகிறதே நண்பரே?

      எனக்கு அறிவுஜீவியாகவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால், அது தவறு என்று சொல்லிவிடுகிறேன். மற்றபடி, உங்கள் கருத்துக்கு நன்றி

      Reply
  29. Bad

    This psychopath have gone brainless. If this guy gave a real review reply to the comments. Karundhel Rajesh enada peru? Racist psychopath.. If I see another review like this you will be done forever.

    Reply
    • Dude. You have all the rights to criticize my post. I respect it, and I welcome it. But you absolutely DO NOT have any rights to pass your judgements on me. I can note that you are pissed here. Couldn’t do anything. It’s your problem. BTW, //If I see another review like this you will be done forever.// – Oh is it? Feeling very afraid 😛 .. ROFL. I have seen even your grandfathers dude. I know you are a retard, who is afraid to even post your comment with your full name 😀 .. தம்பி.. போயி ஓரமா வெளயாடு.. உன்னை மாதிரி தொடைநடுங்கிகளுக்கு இந்தப் பக்கமே வர அருகதையில்ல 😛

      Reply
      • Good vs Bad

        Super reply ji…..

        Reply
        • Bad

          இவன் யாரு. இந்த பன்னியோட அடிவருடியா? மொத்தம் உனக்கு ஒரு 200 அடிவருடி இருப்பாங்கலா? அதுக்கு இந்த அலப்பறை?!!!

          Reply
          • dad of bad

            im ur father mr.bad

          • Fuck of bad

            Mr. bad go to home if u dont like rajesh review go and read biased medias review dont cry here mental punda

      • Bad

        ஏன்டா மானங்கெட்டவனே.. கருந்தேள் ராஜேஷ் – உன் அப்பன் வெச்ச பேரா? இல்ல மக்கள் வெச்ச பேரா? நீயே புடுங்கி மாதிரி வசிகிடு பேச்சை பாரு. நீ எல்லாம் தொடைநடுங்கின்னு பேசறதுக்கு துப்பு இல்ல..

        //அந்த சீனில் உள்ள அனைவரும் மறுபடி ஆர்கசத்தில் ஓலமிடுகின்றனர்.

        இதுதாண்ட தரம் கெட்ட விமர்சனம். தர டிக்கட்டு விமர்சனம். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தை போட்ட பக்கி பயலே.. நீ எல்லாம் தமிழன் சொல்றதக்கே அருகதை இல்லாத ஒரு பண்ணி. தமிழ் இனத்துக்கே சாபக்கேடு.. ஒரு படத்தை எடுக்கறதுக்கு துப்பு இல்ல. இப்படி ஒரு பொழப்பு தேவய?

        Reply
  30. Arun

    Thanks Rajesh. Very true.

    Reply
      • Bala

        Adapavigala… Oru review kaga ipdi verithanama comments podranungaaa. Ungaluku padam pudikalana padam pudichirukravangaloda rasanaya neenga asinga paduthringa nu nenachikranungaa. Sema comedy… Ennala first half suthama paka mudila. Sammandham sammandham illadha scenes adhula vera drama thanamana acting. Especially tamanna and prabhas. Arva kolarla ennanamo pannudhu pulla.. Second half war is a visual treat. I really enjoyed. Indha mathri oru story edukradhuku history lernshu edhavudhu oru king oda kadhaya detail ah azhaga solli irukalam. Ana marketing panna mudiyadhu

        Reply
  31. Puduvai Kamalraj

    I absolutely go with your review. I felt the same what you are said while watching Bahubali. As, regular moviegoer, the initial scenes itself tell how the movie would be. The story(actually speaking, there is no story and screenplay in Bahubali) is easily predictable and boring. At the outset, CG seems to be the forte of this film for somebody, even they didn’t like the film. But, actually the quality of the CG is not better than that of “Maaveeran” and “Nan E”. The adventurous scenes(though it is legendary film) hard to believe and ridiculous. I have doubt where Baubali is a Rajamouli’s film when compare to his earlier works ? Its 250 crore fake cinema.

    Reply
  32. Ture Man

    bgrade reviewer..

    Reply
  33. Vaasagan

    உங்கள் விமர்சனத்துடன் ஒத்துப் போகிறேன் ராஜேஷ்.

    அந்த மகிழ்மதி நாட்டின் நிகழ்வுகள் அப்போகேலிப்டோ படத்தையும், போர்களக் காட்சிகள் ட்ராய் படத்தையும் நினைவுபடுத்தின. இதில் இந்தியத் துணைக்கண்டத்தின் தனித்துவமான போர்முறைகள் என்பது சிறிதளவும் காண முடியவில்லை. மேலும் இக்கதை நடக்கும் காலகட்டத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. குந்தள தேசத்துக்கும், அதுக்கு மேலே உள்ள மகிழ்மதி தேசத்துக்கும் வாசிம் கான், மன்னிக்கவும் அந்த சுதீப் கான் எப்படி வருகிறார்? வேறு எளிதான பாதை இருந்தால் ஏன் ஷிவு பாறைகளைப் பற்றியே மேலே செல்கிறார்? அந்த நிலப்பரப்பு வேண்டுமானால் சூடான், எத்தியோப்பியா எல்லைகளில் வேண்டுமானால் இருக்கலாம். இந்தியாவில் அப்படியொரு terrainஐ கற்பனை செய்ய முடியவில்லை.

    நம்புவீர்களா, கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளில் தூங்கி விட்டேன். இதுக்கு 23 ஆஸி டாலர் தண்டம்.
    பாஹுபலி, it entertained in parts. Thats it.

    இதுவே இப்படின்னா, குணசேகரின் ருத்ரம்மா தேவி எப்படி இருக்கப் போகுதோ?

    Reply
    • Anon

      Itz a fantasy movie, doesnt need to happen in Indian terrian or in any place we can think it off. Itz just a fantasy movie, question whether it is entertained ppl or not. Bases on the collection, and demand for the movie, it entertained ppl

      Reply
      • Anon

        Selvaraghan’s movie z abt chola, though it is another fantasy. However we can question abt logic in chola’s culture, but not abt the others he visualizef in his movie. There r some flaws in Baahubali but it still truely entertained many ppl

        Reply
  34. Karthik Sivakumar

    Sooper thala!!

    Reply
  35. Good vs Bad

    Hi,
    here so many peoples have said their opinions.. but those are their opinions
    no one can interfere in that… as Hollywood has did this kind of movies earlier.. and if we need to make a something like 300 or troy, lotr, etc.. defiantly we need awesome script else we only need to say this is great Indian filn… because in other countries kids are making movies like this.. shit movie of era

    Reply
  36. Times of cinema

    Hi Guys,

    I am from US a Indian born US resident, me and my friends went to this movie iincluding Americans, they were keep on laughing while the movie goes on. Then I asked why u guys are laughing they said. Its looks like Meet the Spartans part 2. I felt very bad. Stop making movies like this. 🙁

    Reply
  37. Raghu

    சரியாக சொன்னிர்கள் ராஜேஷ், படம் பிடித்தவர்கள் பார்க்கட்டும் , ஆனா நாம காசு கொடுத்து பார்த்து தானே சொல்றோம் அதுவும் இந்த படம் ஹாலிவுட் கு மேல அப்டி இப்டி சொன்ன , நாங்க என்ன பண்றது அதுவும் ஒரு ஏமாற்று வேலை தானே. இன்னைக்கு எல்லாம் படத்தையும் நம்ம தமிழ்ல மொழி மாற்றம் செய்து நாமளும் அப்டேட் தான் இருக்கோம், இப்ப போய் ஒரு புதிய அனுபவமா இல்லாம பழைய கதை , அதுவும் ஒரு சுவாரசியமே இல்லை. ஆனா ஒரு தடவ பார்க்கலாம்னா பாருங்க அது அவுங்க அவுங்க இஷ்டம். இது என்னோட கருத்து.

    Reply
    • good man

      correct ji

      Reply
  38. Sureshkumar

    Hi Rajesh, ur review just reflected what I thought. One of your nice review. About film, I felt that there is no strong reason for the scenes.. story in this movie is just five minutes that’s all.. I felt Adimai Penn is even more exciting.. But, in a big screen CG is definitely a visual treat. Sathyaraj role is very nice and he did really good. Move entertained me here and there.. This kind of movie should have a strong background music, that will remind the movie for a long time. I felt the music in this film is a big let down. Thanks…

    Reply
  39. Raj

    LOL

    Reply
  40. Raj

    alert(‘Hello’);

    Reply
  41. Raj

    alert(“Hello”);

    Reply
  42. Raj

    <Script>
    alert("Hello");
    </Script>

    Reply
  43. Raj

    document.write(” alert (“deon”); “);

    Reply
  44. Raj

    document.write(“alert(“DONE”);”);

    Reply
  45. veetri

    Rajesh.. make an another review of same film saying good super awesome …. people wii not change same thing happen to rj balaji… only movie makers have rights for freedom of speech.. if we say something true and we are not allowed to say.. 🙁

    Reply
  46. sridhar

    Lot of people are going to movie only for relaxation this movie satisfies the normal audience who want to enjoy their weekend with families. Rajamouli succeeds in satisfying audience whom he targeted.Movie is for enjoying and not to concentrate deeply and find mistakes.

    Reply
    • Vaasagan

      There are also people who expect more than * just relaxation*. Movie can also be an experience. If it is only for relaxation, why I should anyone spend this much time, effort and money? They could have make a simple formulaic Vijaynna movie.

      Reply
  47. suresh.g

    Rajesh sir neenga thediya oliyarra osai (kalanther) kidaithathu thevai pattal kuraum..

    Reply
  48. arul

    சரியான விமர்சனம் ராஜேஷ்.வாழ்த்துக்கள்

    Reply
  49. Thiyagarajan

    உங்களுடைய பதிவுகளை சில காலமாக தொடர்ந்து படித்து வருகிறேன். ஏறத்தாழ எல்லா விமர்சனங்களும் எனது எண்ணங்களுடன் பொருந்துவதாகவே இருக்கும். உங்களுக்கு “Journey to the End of the Night(ஆரண்ய காண்டம் படத்தின் original )” பற்றி முகநூலில் தெரிவித்தேன். இந்த விமர்சினமும் அப்படியே. நீங்கள் சொல்வது போல படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருக்கவே செய்கின்றன. 1. தெளிவில்லாத திரைக்கதை, 2. இழுவையான முதற்பகுதி, 3. பொறுமையை சோதிக்கும் காதல் காட்சிகள், 4. ஹீரோ ஓவர் பில்டப், 5. சில இடங்களில் தரமற்ற CG, 6. கிளிஷே காட்சிகள், 6. நம்பத்தகாத பல காட்சிகள் (பனிமலை, ஹீரோ அம்மாவை காப்பாற்றி வெளியேறுவது…), etc..

    .//ஒரு துளிக்கூட ‘கதை’ என்னும் வஸ்துவே இல்லாத படம் இது.
    கொடூரமான கற்பனை வறட்சியில் எழுதப்பட்ட காட்சிகள்//

    உங்களின் இந்த வரிகளை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. கதை ஏற்கனவே பல புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டது தான். போருக்கு பெரிதாக காரணமே இல்லாமல் இல்லை. அந்த காரணத்தை 2-3 காட்சிகளில் சொன்னது மொக்கையாக இருந்தது. அதுவும் வசனத்திலேயே. போர்க்கள காட்சியில் சில ரசிக்க தக்க காட்சிகளும் இருக்கவே செய்தன. யார் எந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் நமக்கு நம் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. இருந்தாலும் உங்களை திருப்தி படுத்தாத படத்தின் விமர்சனம் என்று வரும்போது அதில் இருக்கும் ஒருசில நிறைகளை கூட நீங்கள் குறிப்பிட தவருகிறீர்கள் என்று தோன்றுகிறது.

    தேவையில்லாத இழுவையான முதல் பாதி என்று சொல்லிய பிறகு //அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம், குத்துப்பாட்டு, டூயட், எரிச்சல் வரவழைக்கும் காதல் காட்சிகள்,// என்று தனித்தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லையே. அதுவும் //அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம்// என்பது தேவையில்லாத ஒன்றா? அது கதையுடன் தொடர்புடையதாகவே எனக்கு தோன்றுகிறது.

    மொழி உருவாக்கம் அவ்வளவு முக்கியமான ஒன்றா? எனக்கு தெரியவில்லை. பார்வையாளனுக்கு ” அந்த முரட்டு ஆள் ஏதோ புரியாத மொழியில தான் பேசறான் பா ” என்பது வரையில் சொன்னால் போதாதா?

    Reply
  50. Jenith

    Bahubali is really a very good answer to Hollywood movies like we can too create films like Avatar. It should be appreciated creating movies like this in Indian budget. So marketing is important to welcome efforts like this. The CG supervisor Srinivas told that the movie used only 20% of budget compared to Hollywood and gives 80% output compared to Hollywood. Here it is told the war scene is seamless. Actually it was used to decide the king based on their characteristics. As some said in the thread WHY WE HAVE TO COOK FOOD LIKE BURGER. We people like full meals Engalukku biriani vachalum, ice cream, oorukai, appalam venum, beedavum venum. Think films in our localization and appreciate efforts like this and encourage our creators. Also first part is fully visual treat. Rajamouli will excel his screenplay in the second part. Avaruuku ithu kastam illa. Ref (Naan E, Base version of Siruthai etc…) This part is just for Visual excellence answer to world cinema

    Reply
  51. kameswaran

    நீங்கள் என்ன சொன்னாலும் படத்தை சாதாரண சராசரி ரசிகர்கள், ெகாண்டாடவே செய்வார்கள், ப டத்தை தாக்கி எழதும் நேஈ க்கில் உங்கள் லிபர மான லிமர்சன ஸ்டைல் மிஸ்ஸிங் ,விளம்பரம் மார்க்கெட் பிங்க் லிடயங்கள் சரியாக இருக்கலாம் . . ப பதத்தின் வெற்றி தரவு களும் பில் டப்பா கலே தோன்றுகிறது

    Reply
  52. Kannan

    இப்பக்கத்துக்கு நான் புதிது

    படம் பாத்துட்டு நான் போட்ட பதிவு கீழே

    படத்தோட செலவுல இன்னோரு மடங்கு இஸ்ரோ ட்ட குடுத்து இருந்தா ஜுப்பிட்டர்க்கு ராக்கெட் விட்ருப்பாங்க, அத்த விட்டு 200 கோடில 1600 ரூபாய்க்கு சிவகாசில parachute ராக்கெட் ஆர்டர் பன்னிட்டு மிச்ச காச நாங்க ராக்கெட் விட போரோம்னு நோட்டீஸ் அடிச்சு குடுத்த மாதிரி இருக்கு.

    தமிழ்ல “அபிமன்யூ” னு ஒரு அயர பழைய படம் சேனல் மாத்த சொல ராஜ் டீவீல பார்த்தேன், அதுக்கு கால் தூசி கூட வராது இந்ந பாகுபலி.

    Baahubali sucks in every way as in my way, I feel like lunatic wen some people compared it to avatar, if u need entertainment u have got 100+ channels, don’t compare this shit to some other good movies, even Enthiran is good compared to this shit CG…

    Reply

Join the conversation