கருந்தேள் டைம்ஸ் – 1
வேறு ஒன்றுமில்லை. சினிமா விமரிசனங்கள் தவிர, வேறு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால், அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நம் நண்பர் கண்ணாயிரம், இந்தக் கருந்தேள் டைம்ஸை உருவாக்கச் சொல்லி ஒரு யோசனை தெரிவித்தார். அது நல்ல யோசனையாகப் படவே, இதோ அதன் முதல் வெளியீடு. இது எப்பொழுதெல்லாம் வரும் என்று எனக்கே தெரியாது. ஆனால் எப்போது வரவேண்டுமோ அப்போது கனகச்சிதமாக வரும்.
இன்றைய தலைப்புச் செய்தி
எளுத்தாளர் லூசுமோகன், பல காலமாக அவதிப்பட்டு வந்த வயிற்றெரிச்சல் தாளாமல், சமீபத்தில் அவரது தளத்தில், தனக்குத் தானே எழுதிக்கொண்ட ஒரு கடிதத்தைப் பதிப்பித்திருக்கிறார். அது ஒருவேளை வேறு யாரிடமிருந்தோ வந்திருந்தாலும், அதில் இவர் அடிக்கடிச் செய்யும் தில்லுமுல்லு வேலையைப்போல், இதிலும் சில வரிகளைச் சேர்த்திருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது என்ன இவர் ஏற்கெனவே செய்யும் தில்லுமுல்லு வேலை?
ஒரு சிறிய கதை. ஒரு மனிதருக்கு வேண்டப்பட்ட நெருங்கிய உறவினர், கொடூரமான விபத்தில் இறந்துவிட்டார். அந்தச் சோகத்தில் இருந்த அந்த மனிதர் – அவர் ஒரு பிரபல எழுத்தாளரும் கூட – சில நாட்களாக நண்பர்கள் எவரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்தார். அப்போது, இதே லூஸ் மோகன் செய்த தகிடுத்தத்தத் தில்லுமுல்லு என்னவெனில், ஒரு கண்டனக் கடிதத்தில், அந்த எழுத்தாளரின் பெயரைத் தாமாகச் சேர்த்துக் கொண்டு, என்னமோ அந்த எழுத்தாளரே முன்வந்து தனது பெயரை முன்மொழிந்திருப்பது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை உண்டுபண்ணிய பெருமைக்குரியவர் இந்த லூஸ் மோகன். இதே எழுத்தாளரின் கட்டுரை ஒன்றில், மனம் போன போக்கில் புதிய வசைச்சொற்களைச் சேர்த்துவிட்டு, பின் குட்டு வெளிப்பட்டு அடிவாங்கிய பெருமையும் இந்த லூசுமோகனுக்கு உண்டு.
லூசுமோகனின் மேலே சொல்லப்பட்ட பிக்காளித்தனம் பற்றித் தெரிந்துகொள்ள, இதோ இந்தச் சுட்டிகளில் விவரமாகப் படிக்கலாம்.
சுட்டி ஒன்று
சுட்டி இரண்டு
சுட்டி மூன்று
யோசித்துப் பாருங்கள். இறப்புகளின் வலி தாளாது, துக்கத்தில் இருக்கும் ஒரு மனிதரின் பெயரை, இப்படி அவருக்கே தெரியாமல் மற்றொருவரைத் திட்டும் ஒரு கடிதத்தில் சாட்சியாகச் சேர்க்கும் கேடித்தனத்தை வேறு யாராவது செய்வார்களா?
ஆனால், நம் லூசுமோகன் தான் வெட்கம், மானம் ஆகிய விஷயங்களுக்கு அப்பாற்பட்ட எளக்கியவாதி ஆயிற்றே. எனவே, தொடர்ந்து இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்து வருகிறார்.
இது குறித்து மேலும் விசாரித்த நமது நிருபர் திரட்டிய தகவல்கள் இதோ:
இந்த லூஸ் மோகனுக்கு ஒரு குணம். யாராவது இறந்தால் போதும் – உடனே அவரைப் பற்றிய வசைக் கட்டுரை ஒன்றைத் தயார் செய்து தனது தளத்தில் ஏற்றிவிட்டு விடுவார். மேலுக்கு அந்தக் கட்டுரை, இறந்த நபரைப் பாராட்டும் கட்டுரையாக இருந்தாலும், அவற்றில் உள்ள விஷம் தோய்ந்த வார்த்தைகளைப் படித்தால், பொறாமைத் தீயில் வெந்து கருகிய ஒரு காக்கையின் எச்சங்கள் அவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் இந்த லூஸ்மோகன், சுஜாதாவைப் பற்றி ஏடாகூடமாக எழுதி, பின்னர் கண்டபடி வாங்கிக்கட்டிக்கொண்டு டவுசர் (அப்படி அவர் எதாவது போட்டிருந்தால்) கிழிபட்டது ஊரே சிரித்த ஒரு விஷயம்.
அதேபோல், கமலா தாஸ் பற்றி, அவர் இறந்ததும், இந்த லூசுமோகன் எழுதிய வரிகளைப் படிக்க நேரும் இலக்கிய வாசகர்கள் யாருமே, வெறிகொண்டு இந்த லூசை அடிக்கப் பாய்வது நிச்சயம். அந்த வரிகள் என்ன? இதோ அவை:
‘கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.
தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்’
எப்படி இருக்கிறது கதை? அடப்பாவி லூசுமோகா.. உன் மனதில் இருக்கும் வன்மத்தை, இப்படி இறந்தவர்கள் மீதுதான் காண்பிக்க வேண்டுமா?
இதே லூசுமோகன், மனுஷ்யபுத்திரனின் கால் ஊனமாக இருப்பதுதான், அவரது கவிதைகள் தன்னிரக்க வடிவில் இருப்பதற்குக் காரணம் என்றும் எழுதிய ஒரு தற்குறி ஆவார்.
அவரது வரிகள் இங்கே:
‘அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது’
‘மனுஷ்யபுத்திரனில் புரட்சிகரம் உருவாகாது போகக் காரணமாக அமைந்த ஆளுமைக் கூறு என்ன? அவரது உடலின் ஊனம்தான்.’
’உடல் ஊனமுற்ற ஒருவர் தன்னை ‘குறைபட்ட’ புரட்சியாளராகவே உணரமுடியும். புரட்சியாளனாக ஆக முடியாத போதாமையையே அவர் ஒவ்வொரு தருணத்திலும் அறிந்து கொண்டிருப்பார்’
’படிப்படியாக மனுஷ்யபுத்திரன் புரட்சிகர மனநிலையை முற்றாகவே உதறிவிட்டு தன்னிரக்கத்திற்குள் செல்வதை நாம் காண்கிறோம்.’
லூசுமோகன் இப்படி உளறிவைத்திருப்பதை மட்டுமல்லாமல், அவரது பித்தலாட்டத்தின் முழுக் கதையையும், அபிலாஷின் தளத்தில் காணலாம். முதல் கட்டுரை. இரண்டாம் கட்டுரை. இந்த இரண்டு கட்டுரைகளையும் படியுங்கள்.
பொதுவாகவே, லூசுமோகனாரின் குணாதிசயமே, வயிற்றெரிச்சல் என்ற ஒரே குணத்தின் அடிப்படையில் மட்டும் தான் இயங்குகிறது. அடுத்தவர்கள் மீது எப்பொழுது பார்த்தாலும் எரிச்சல். இதனால் ஏற்படும் கழிவிரக்கம். அந்தக் கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஈகோ.. அந்த ஈகோவினால், அவர்களைத் திட்டத் துவங்கும் கட்டுரைகள். இதுதான் இந்த லூசுமோகனின் பாணி. அவற்றின் உதாரணங்கள் தான் மேலே கொடுத்தது.
நண்பர்களுக்கு, இந்த அரைலூஸ்மோகன், சிவாஜியையும், எம்ஜியாரையும் கண்டபடி தாக்கி எழுதிய கட்டுரை நினைவிருக்கலாம். அவற்றின் சில பகுதிகள், விகடனில் பதிப்பிக்கப்பட, அவற்றின் அசிங்கமான வசைகளைப் படித்துவிட்டு, திரையுலகம், இவருக்கு ரெட் கார்ட் போட்ட விஷயமும் நடந்தேறியிருக்கிறது. ஆனால், நமது லூசுமோகன் தான் வெட்கம் மானம் ஆகியவற்றை முற்றும் துறந்துவிட்டு, யதியாக மாறிய நிலையில் இருக்கிறாரே? எனவே, அதே திரையுலகத்தினரின் பின்னால் ஓட சற்றும் தயக்கம் காட்டியவரல்லர்.
அவரது தளத்தில் இருக்கும் முக்காலே மூணு வீசம் கட்டுரைகள், ஆர்.எஸ்.எஸ்ஸின் துதிபாடும் கட்டுரைகள் மட்டுமே. இவரது அதிமேதாவித்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவெனில், பெரியாரைப் பற்றி இவர் வாரித் தெளித்திருக்கும் அவதூறுகள்.. இதோ அவற்றையும் படித்துவிடலாம்.
‘எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்’
’வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல’
’(வைக்கம்) போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை. ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை’
பெரியாரைப் பற்றிய இந்த லூஸ்மோகனின் அவதூறுகளுக்குப் பதிலடி கொடுத்து இவரது டவுசரை ஒட்டுப் போட முடியாத அளவு கிழித்த பதில்களை, தமிழச்சியின் இந்தப் பதிவில் காணலாம்.
இதைப்போலவே, சாதி அடிப்படையில் திட்டும் பல வசவுகள், அன்னாரின் படைப்புகளில் இடம்பெறும். அவரது காடு நாவலில், பல சாதிகளையும், கிண்டல் செய்தும் இருக்கிறார்.
இப்படி, எப்போது பார்த்தாலும் காழ்ப்பு உணர்ச்சியிலும், எரிச்சலிலும், புகைச்சலிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த லூசுமோகன், சீக்கிரமே மெண்டலாக மாறிவிடுவார் என்று அவரே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக, அவரது நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவையே நமது சிறப்புப் புலனாய்வு நிருபர் வெறுந்தேள் வெங்காயம் அளித்த செய்தி.
இன்று இவ்வளவுதான். வரும் வாரங்களில் வரும் கருந்தேள் டைம்ஸ், நகைச்சுவை கலந்து இருக்கும். முதல் இதழ் என்பதால், சற்றே காரம் ஜாஸ்தியாகி விட்டது.
வந்து படிச்சுட்டேங்க… இக்கி….இக்கி 🙂
உங்கள் விமர்சனம் நன்று 🙂
ஆஹா! ஆகாககாகா!
நீங்க எதைப் பற்றி எழுதினாலும் அதை எழுதுகிற விதம் என்னை ரொம்பவே கவர்கிறது!!
ஆஹா! ஆகாககாகா!
நீங்க எதைப் பற்றி எழுதினாலும் அதை எழுதுகிற விதம் என்னை ரொம்பவே கவர்கிறது!!
—
இப்படியே ஏத்தீ விடுங்க மக்கா !
hi boss!
we dont need all these crab, post some intresting movie review.pls interduce some best directors around the world.
-gaja
ஹி ஹி ஹி ஹி ஹி
எப்புடிங்க உங்களால மட்டும் இப்புடியெல்லாம் முடியுது
ரூம் போட்டு யோசிப்பாங்களோ 😉
நடத்துங்க நடத்துங்க
.
ஒரு பெரும் எழுத்தாளரின் மீது தேவையற்ற தாக்குதல். இதை வேறு யாரவது எழுதியிருந்தால், இத்தனை வருடம் எழுதிவரும் பெரிய எழுத்தாளனைப் பற்றி எழுத நீ யார் என்று சாரு சொல்லியிருப்பார். ஆனால், நீங்கதான் பிரதான அடிப்பொடி ஆச்சே. அதனால அவருடைய பிளாக்கில் இந்தப் பதிவப் படிக்க சொல்லி லிங்க் தருவார்.
நண்பா
மிகச்சரியான வாதத்தை எடுத்து வைத்துள்ளீர்கள்.நீங்கள் சினிமா பதிவுடன் சேர்த்து இதுபோல அதிமுட்டாள்களுக்கு வேப்பிலை அடிக்கவும் வேண்டும்.
இவன் ஜாதிவெறி மிகவும் கீழ்தரமானது,
http://geethappriyan.blogspot.com/search/label/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அதை என் ஏழாம் உலகம் விமர்சனத்தில் எழுதி அதை இவனுக்கும் சிசி போட்டு மெயில் அனுப்பியும் பதில் இல்லை.அக்காவின் மார்பை ரசிப்பதை வியப்பதைப்போல மகளை புணர்வதுபோல கலைச்சொற்களை கொண்ட எழுத்தில் வடிப்பதும்,தெனிந்தியாவில் உள்ள எல்லா சாதிகளையுமே குருரநகைச்சுவையால் எள்ளி நகையாடுவதுமே இவனுக்கு வேலையாயிருக்கிறது.உலகிலேயே தன் பிள்ளைகள் தான் அறிவாளிகள் என்னும் கேவலமான கர்வத்தினையும் கொண்டிருப்பவன்.
இவன் கொடுக்கும் லின்க் எல்லாமே மட்டி லின்க்.தன்னைவிட நன்றாக எழுதுபவரின் லின்கை இவன் தரவே மாட்டான்.நான் ஒருமையில் பேசுவதே இது போல கேவலமான ஆட்களுக்கு மரியாதையே தரக்கூடாது என்பதால் தான்.இவன் சாதிவெறி எள்ளல்கள் விடாது தொடரும்,மக்கள் ஒருநாள் இவனின் பேடித்தனத்தை புரிந்துகொள்வர்.
எப்படி வெள்ளையாருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்னும் முட்டாள்தனமான சிந்தனையை மக்கள் இன்னமும் கொண்டிருக்கிறார்களோ,அது போலவே கோபமாக எழுதுபவன் திட்டி ,விமர்சித்து எழுதுபவன் எழுதுவது பொய் என்றும்,சாதுவான பூனை போல குசும்புடன்,வக்கிரங்களை,சாதிவெறியை,மாற்றுதிறனாளிகளை,பெண்களை இழிவு செய்வது போலான எழுத்துக்களை எழுதும் இவனை நம்புகின்றனர்.இவர் மோடியின் ஆபத்தான அடிவருடி.இவன் நிழலில் நின்றாலே நமக்கு அவப்பெயர்.
இது நீங்க எழுதின கட்டுரையா? அப்படியென்றால் சாருவின் ஜெயமோகன் அவதூறுக்கு முன்னாள் ஒன்றுமே இல்லை. ரொம்ப ட்ரை பண்ணி தோற்று விட்டீர்கள். அப்புறம், சாருவாலே முடியலை, உங்களால முடியாது. இன்னும் படிப்பு தேவை தம்பி. சாரு உங்களை வைச்சு விளையாடுவது நல்லா தெரியுது. இன்னும் ட்ரை பண்ணு…
@ இராமசாமி கண்ணன் – 🙂 படிச்சிட்டீங்களா.. ரொம்ப சந்தோஷம் 🙂
@ எஸ்.கே – அது வேறொன்றுமில்லை. இவரது பித்தலாட்டங்களைப் பற்றி ரஜினி பாணியில், ‘உண்மைய சொன்னேன்’ . . நான் குறிப்பிட்டுள்ளவை எல்லாமே உண்மைகள். அந்தச் சுட்டிகளைப் படித்துப் பாருங்கள் 🙂
@ thangaraju – போன பதிவில், மாய்ந்து மாய்ந்து குரஸவாவின் Red Beard பற்றி எழுதியிருந்தேனே படித்தீர்களா? அதில் உங்கள் கருத்தைச் சொல்லவே இல்லையே? நல்ல திரைப்படப் பதிவுகளிலும் வந்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்..
@ சிபி – ஹீ ஹீ… 🙂 அவங்கள நிறுத்தச் சொல்லுங்க.. நான் நிறுத்துறேன் 🙂
@ kuthu – உங்களது இந்தப் பின்னூட்டத்துக்கு, சாருவின் தளத்தில் அவரே பதில் அளித்திருக்கிறார் 🙂 .. அங்கு போய்ப் பார்க்கவும் 🙂
@ கீதப்ரியன் – நண்பா.. இதெல்லாம் ஒரு சாம்பிள் மட்டுமே 🙂 .. உங்களுக்கும் தெரியுமே இவரது பித்தலாட்டங்களைப் பற்றி 🙂 .. உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியுள்ள அனைத்துமே மிகவும் உண்மை .. என்ன செய்வது? குயுக்தியான குள்ளநரிகளுக்குத் தான் இது காலம்.. அவ்வப்போது இதுபோன்ற பதிவுகள் வெளிவரும் நண்பா 🙂
@ சாரு புழிஞ்சதா – ஓ இது அவதூறுங்களா? அப்ப ஜெயமோகன் சைட்டுல அப்பப்ப அவரு உளறும் அவதூறுகளுக்கும் இதே போலத்தான் அவருக்கு மின்னஞ்சல் செய்வீர்களா? நான் அவதூறு கூறவே இல்லை. ஆதாரமே இல்லாமல், முட்டாள்தனமாக அவ்வப்போது லூசுமோகனார் உளறுவதுதான் அவதூறு.. நான், அவரது quotesகளை இங்கே தெள்ளத்தெளிவாகக் கொடுத்திருக்கிறேனே 🙂 இவையெல்லாம் அவரே திருவாயால் உளறியவை.. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் ஆழ்ந்த கருத்தும் வாசிப்பனுபவமும் பிரமிப்பாக இருக்கிறது……ஆனால் நீங்க இன்னும் கொஞ்சம் வளரனும் தம்பி.அவசரப்பட்டுட்டீங்க….ரெடி..ஸ்டார்ட் .மீஜிக் 🙂
@ மரா – என்னலே நைஸா கமெண்டு? பின்னிப்புடுவேன் 🙂 ..
போச்சு.. போச்சு.. கூடிய சீக்கிரம் ஏதாவது ஒரு பட்டப் பேரு கிடைக்கப் போவுது..
இதை சாருவுக்கு அனுப்புங்க.. கண்டிப்பா லின்க் விளம்பரம் கிடைக்கும்..!
//இவையெல்லாம் அவரே திருவாயால் உளறியவை.//
true…
Supppppper!! 🙂
@ உண்மைத்தமிழன் – அது என்னங்க அது? ஜெயமோகன் ஒளறினதைப் பத்திப் போட்டா, உடனே ஒரு அறிக்கை விடுறீங்க? உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்களும் ஜெயமோகன் மாதிரித்தானோ? 🙂 மேலே நான் கொடுத்துருக்குறது எல்லாமே, அவரே ஒளறினதுதான்… இண்னிக்கி வரை, அவரு கிட்ட இருந்து இதைப்பத்தி பேச்சு மூச்சே இல்லை 🙂
அப்புறம், அதென்ன லின்க் விளம்பரம்னு தேவையில்லாம ஒரு லைன் விட்ருக்கீங்க? அப்ப சரி.. ஒரு வேளை, உஙளுக்கு அது கிடைக்காமல் போனதுனால, எதாவது புகைச்சலோ? 🙂
@ ஜீ – 🙂 லூசுமோகன் அப்புடித்தாங்க எதாவது சொல்லிக்கினே இருப்பான் 🙂 நன்றி
//@ ஜீ – 🙂 லூசுமோகன் அப்புடித்தாங்க எதாவது சொல்லிக்கினே இருப்பான் 🙂 நன்றி//
ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம், அதற்காக ஒரு எழுத்தாளரை ஒருமையில் விளிப்பது ரொம்ப தப்பு.
கருந்தேளு..
நான் எழுதினதுக்கு அவர் லின்க் கொடுப்பாருன்ற கேள்விக்கே இடமில்லையே..? சாருவைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன..? உ.த.எ.-வை பரேடு எடுக்கிற பதிவுன்னா உடனே லின்க் கொடுப்பாரே. அதுனாலே சொன்னேன்..!
Tasteless first issue.
முதல் கோணல் முற்றும் கோணல் என்ற அளவில் போய் விடாமல் இருந்தால் சரி.
ஒரு வித்யாசமான இடுகையைப் படித்த திருப்தி என்னுள்!!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
@ damildumil – ரைட்டு… வேற ஒன்யுமில்ல தலிவா.. இந்தாள் பண்ற தில்லுமுல்லு பார்த்தா இப்புடித்தான் பேசத் தோணுது.. இந்த விஷயத்தைக் கூட மொதல்ல ஆரம்பிச்சி வெச்சது, ஜெயமோகன் தான்.. அதான் அப்புடி.. இனி அவையடக்கம் காத்துரலாம் உடுங்க.. 🙂
@ உண்மைத்தமிழன் – 🙂 அது வேற ஒன்யுமில்ல.. ஜெயமோகன் ஆரம்பிச்ச மேட்டர் தான் இது.. தேவையே இல்லாம, அலெக்ஸா பத்தி எழுதி, அதுல ஜாக்கிய வேற கண்டபடி நக்கலடிச்சி… எதுக்கு அந்தாளுக்கு இந்த வயித்தெரிச்சல்? அதான் இப்புடி ஒரு பதிவு போட்டேன்.. பரேடு எடுத்தது, அந்தாள் பண்ண இந்த அசிங்கமான வேலைனால தான் 🙂
@ ஏவிஎஸ் – அடுத்த இஸ்யூஸ் எல்லாம் பொறுத்திருந்து பாருங்கள் 🙂
@ ஆர். ராமமூர்த்தி – நன்றி.. இனி வரும் இதழ்கள், இன்னமும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்..
இதைத்தான் கண்ணாயிரம் ஏற்கனவே சொல்லிவிட்டாரே! உங்கள் பதிவின் லிங்கை சாருஆன்லைனில் வலதுபுறமாக நிரந்தரமாக போடச்சொல்லுங்கள்.பாவம் நீங்களும் பிரபலமாக என்னவெல்லாம் செய்கிறீர்கள்!
இன்னும் எத்தனை காலம்தான் சாரு தன்னைச்சுற்றி அடிபொடிகளை வைத்திருப்பாரோ! நித்யானந்தருக்கே வெளிச்சம் 🙂
@ கார்மேகராஜா – அதானே பார்த்தேன்.. எங்கடா இன்னும் இது போன்ற மொக்கை கமெண்ட்டு வரலையேன்னு 🙂 .. கரெக்டா வந்து குதிச்சிட்டீங்க..
பிரபலமாகணும்னு சொல்லி, கட்டணம் வாங்கிக்கினு ஒரு ஜோசியம், கட்டணம் வாங்காம ஒரு ஜோசியம் என்று உங்க கும்பலைப் போல் பணம் பண்ணும் வேலையெல்லாம் எனக்குத் தெரியாது 🙂 .. நிர்வாண உண்மைகள், டிரஸ் போட்ட பொய்மைகள்னெல்லாம் கவர்ச்சியா பேரு வேற வெச்சிருக்கீங்க.. 🙂
நித்யானந்தரா? அப்ப நித்ய சைதன்ய யதியை என்னன்னு சொல்லலாம் ? 🙂 கேட்டு சொல்றீங்களா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த மாதிரி மொக்கைப் பதிவருங்க வந்து இங்க வாந்தியெடுக்கப்போறாங்களோ? நித்ய சைதன்ய யதிக்குக்கூட இது வெளிச்சமில்ல 🙂
@கருந்தேள் இப்ப என்ன சொல்லிப்புட்டேனு இவ்வளவு கோபப்படுறீங்க ராசா? நான் ஜோதிடனல்ல கருந்தேள், எனக்கு இருக்குற வேலையே பார்க்க முடியல, இதுல இன்னொரு வேலை குடுக்காதிங்க. நித்ய சைதன்ய யதியை என்னான்னு எனக்கு தெரியலை சார். மொக்கை பதிவில் மொக்கை பின்னூட்டம் மட்டும் தான் வரும் சார்.
ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை’ கட்டுரையின் சுட்டி அனுப்பித் தரமுடியுமா
@ சீனி மோகன் – இதோ சுட்டி. ஊட்டியில் தளையசிங்கத்துக்கு நடந்த தொழுகை
நண்பர்களும் இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான், மேலும் பல உண்மைகள் புலப்படும்
அதேபோள், இந்தக் கட்டுரையும் படியுங்கள் – விலங்கும் நாணிக் கண் புதைக்கும் .. இதில், ஜெயமோகனின் ஃப்ராடுத்தனம் பற்றித் தெளிவாகவே இருக்கிறது.
really very nice information sharing and i am looking for such type of informative news and i get through this blog so i am very much thankful to you.
– magento development