திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 15

by Karundhel Rajesh March 28, 2012   series

கிட்டத்தட்ட ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் எழுதிய இந்தத் தொடரின் முந்தைய பாகத்தில் இப்படி எழுதி இருந்தேன்.

Inciting Incident, Key Incident ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம். இந்தக் கட்டுரையைப் பொறுமையாக இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதன்பின், அடுத்த கட்டுரையில், ஒரு டக்கரான படத்தை உதாரணமாக வைத்து, இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

திரைக்கதை என்பதன் அடிப்படை வடிவத்தையே காலி செய்து, படம் பார்ப்பவர்கள் அனைவரையும் மூக்கின்மேல் விரல் மட்டுமல்லாமல் மொத்த கையையும் வைத்து குத்திக்கொள்ள வைத்த அந்தப் படம் …..?

இதோ அந்தப் படத்தைப்  பற்றி இப்போது பார்க்கப்போகிறோம். அதுமட்டுமல்லாமல், இனிமேல் பெரிய gap விடாமல், வெகு விரைவில் வரிசையாக எழுதி, இதனையும் LOTR தொடரையும் முடிக்கப்போகிறேன். இடையில் ஏலியன் தொடரின் பாகங்களையும் ஒவ்வொன்றாக நோக்குவோம்.

Right. Let’s begin.

Inciting  Incident  மற்றும் Key Incident ஆகியவற்றை சிட் ஃபீல்ட் Pulp Fiction படத்தில் தேடியபோது, முதலில் பயங்கரமாகக் குழம்பியே போயிருந்திருக்கிறார். ஏனெனில், படம் முழுக்கப் பல சம்பவங்கள் நடக்கின்றன. மட்டுமல்லாமல், படமே நான் – லீனியர் ஸ்டைலில் இருக்கிறது. முன்பின்னாகப் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை மட்டுமல்லாமல், Pulp Fiction படத்தின் திரைக்கதை ஆரம்பிக்கும்போதே, Pulp Fiction என்பதன் இரண்டு அகராதி விளக்கங்கள் திரைக்கதையின் முதல் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, ‘மூன்று கதைகளைப் பற்றிய ஒரு கதை’ என்ற விளக்கமும் அதில் இருக்கிறது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு, அடுத்த பக்கத்தில் இருந்த விஷயம் தான் டாப். அப்பக்கத்தில், அத்தியாயங்களின் தலைப்புகளோடு திரைக்கதையின் பொருளடக்கம் இடம் பெற்றிருந்தது! அதாவது, திரைக்கதையின் எந்தப் பக்கத்தில் எது இருக்கிறது என்ற பொதுவான பொருளடக்கம் இல்லை. திரைக்கதையே, பொருளடக்க வடிவில் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பொருளடக்கமும் திரைக்கதையில் ஒரு பிரதான பங்கு வகிக்கிறது.

திரைக்கதையில் பொருளடக்கத்தை இதுவரை சிட் ஃபீல்ட் பார்த்திருக்கவில்லை என்பதால், முதலில் குழம்பவே செய்தார். அதன்பின், ஒவ்வொரு பகுதியாக இந்தத் திரைக்கதையைப் பிரிக்க முடிவுசெய்து, பகுதி பகுதியாகப் படித்தார். அப்போது அவருக்கு மெல்ல மெல்ல இந்தத் திரைக்கதையில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. திரைக்கதையின் பிரிவுகளின்படி, ஐந்து பிரிவுகளாக இந்தத் திரைக்கதை பிரிக்கப்பட்டிருக்கிறது.

முதல் பாகம்: Prologue  – முன்னுரை
இரண்டாம் பாகம்: Vincent Vega & Marcellus Wallace’s Wife
மூன்றாம் பாகம்: The Gold Watch
நான்காம் பாகம்: The Bonnie Situation
ஐந்தாம் பாகம்: Epilogue – முடிவுரை

இந்த ஐந்து பாகங்களையும் படித்த சிட் ஃபீல்ட், இந்த ஐந்து பாகங்களுமே, ஒரே ஒரு சம்பவத்தினாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிந்துகொண்டார். அந்த சம்பவம் என்ன?

(இதிலிருந்து, புத்தகத்தில் இல்லாத, என்னுடைய தனிப்பட்ட அனாலிசிஸ் ஆரம்பம்)

ஜூல்ஸும் (ஸாமுவேல் ஜாக்ஸன்) வின்சென்ட்டும் (ட்ரவோல்டா), மார்செலஸ் வாலஸின் பெட்டியை நான்கு இளைஞர்களிடமிருந்து மீட்கும் காட்சி நினைவிருக்கிறதா? இதோ அதை இங்கே காணலாம்.

Burger Scene என்ற பெயரில் படத்தின் புகழ்பெற்ற ஸீன்களில் இது ஒன்று.

இந்த நிகழ்ச்சிதான் அந்த முக்கியமான நிகழ்ச்சி.அது ஏன் என்று கொஞ்சம் பார்க்க முயற்சி செய்யலாமா?

Pulp Fiction படத்தின் கதையை ஒரே நேர்க்கோட்டில் சொல்ல முடிந்தால் அது இப்படி இருக்கும் (இது என்னுடைய ஒரிஜினல் முயற்சியாக்கும்).

மார்செலஸ் வாலஸ் –> அடியாட்கள் வின்சென்ட் & ஜூல்ஸ் –> பெட்டியை திரும்பப்பெறும் முயற்சி –> பெட்டியைத் திருடியவர்கள் சுடப்படுதல் –>எதிர்பாராமல் சுடப்பட்டும் காயமே இல்லாமல் உயிர்பிழைக்கும் வின்சென்ட் & ஜூல்ஸ் –> ஜூல்ஸின் ஞானோதயம் –> இருவரும் சாப்பிடப் போதல் –> ரெஸ்டாரென்ட் ஹைஜாக் by honey bunny & pumpkin –> ஜூல்ஸ் சூட்கேஸ் பறிப்பு –> ஜூல்ஸின் துப்பாக்கி முனையில் honey bunny & pumpkin –> இருவரையும் ஜூல்ஸ் விட்டுவிடுதல் (ஞானோதய effect) –> தொழிலை விட்டுவிடும் ஜூல்ஸ் –> இப்போது, வின்சென்ட் மட்டும் மார்செலஸின் அடியாள் –> வின்சென்ட் மற்றும் மார்செலஸின் மனைவி –>புட்ச்சிடம்  மார்செலஸ், boxing போட்டியில் தோற்கச் சொல்லுதல் –> போட்டியில் திருப்பம் –> புட்ச்சின் escape –> வின்சென்ட் புட்ச்சைக் கொல்ல அவன் வீட்டுக்கு அனுப்பப்படுதல் –> வின்சென்ட்டை accidentalலாகக் கொல்கிறான் புட்ச் –> மார்செலஸ் & புட்ச், gayகளால் அடைக்கப்படுதல் –> புட்ச் ஒருவனைக் கொல்லுதல் –> மார்செலஸ் இன்னொருவனின் விரைகளில் சுடுதல்  –> இருவரும் தப்பித்தல் –> மார்செலஸ், புட்ச்சை ஊரைவிட்டே ஓடிவிடச் சொல்லுதல் –> சுபம்.

இந்த வரிகளை மாற்றிப் போட்டுத்தான் இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது (திரைக்கதையை இப்படி சிம்பிளாக எழுதிக்கொள்வதன் நன்மையைப் பார்த்தீர்கள் அல்லவா?)

இதில், block செய்யப்பட்டிருக்கும் வரிகளை மட்டும் உற்றுக் கவனியுங்கள். இதுதான் மேலே உள்ள வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ஸீன். படத்தின் உயிர்நாடியான ஸீன். இந்தக் காட்சியால்தான், ஜூல்ஸ் மனம் திருந்துகிறான். அதனால்தான் மார்செலஸிடம்  இருந்து பிரிகிறான். அதனால்தான் வின்சென்ட் தனியாக புட்ச்சைத் தேடி அவன் வீட்டுக்குச் செல்கிறான். அதனால்தான் புட்ச், பாத்ரூமில் இருந்து வெளிவரும் வின்சென்ட்டை சுட்டுக் கொல்கிறான். அதனால்தான் புட்ச்சால் தப்பிக்க முடிகிறது. அதனால்தான் புட்ச்சும் மார்செலஸும் gay வில்லன்களிடம் பிடிபடுகிறார்கள். ஆகையால்தான் அந்த இரண்டு வில்லன்களும் கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் – அவர்களில் ஒருவனைக் கொன்று தன்னைக் காப்பாற்றிய புட்ச்சை – மார்செலஸ் மன்னித்து, ஊரை விட்டே ஓடிவிடச் சொல்கிறான்.

இதனால்தான்,  இந்த ஒரு காட்சிதான் படத்தின் பிரதானமான காட்சி என்று புரிந்துகொண்டார் சிட் ஃபீல்ட்.

இது புரிந்தவுடன், திரைக்கதையின் போக்கும் தெளிவாகிவிட்டது. இந்த மூன்று கதைகளை எடுத்துக்கொண்டால் (ஹனி பன்னி & பம்ப்கின் கதை, வின்சென்ட் & ஜூல்ஸ் கதை மற்றும் புட்ச்சின் கதை), இதிலுள்ள ஒவ்வொரு கதை படத்தில் இடம்பெறும்போதும், அந்த ஒவ்வொரு கதைக்குமே தெளிவான ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியவை இதே வரிசையில் இருப்பதையும் சிட் ஃபீல்ட் புரிந்துகொண்டார்.

அதேபோல், நாம் ஏற்கெனவே பார்த்த முரண்கள் (contradictions – கதையில் முரண்கள் இருந்தால்தான் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பார்த்தோமே) இப்படத்தில் விரவி இருக்கின்றன. உதாரணத்துக்கு, படத்தின் ஆரம்பக் காட்சியான ரெஸ்டாரென்ட் கொள்ளையடிக்கப்படும் காட்சியில், ஹனி பன்னி & பம்ப்கின் ஆகிய இருவரும் துப்பாக்கிகளோடு எழும் காட்சியோடு திரை ஃப்ரீஸ் ஆகி, வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ் ஆகிய இருவரையும் பார்க்கிறோம்.  (வீடியோவின் ஆரம்பம்). அதில், இருவரும் படு சுவாரஸ்யமாக Mcdonalds பற்றி விவாதித்துக்கொண்டே, எங்கோ நடந்து செல்கிறார்கள் என்று அறிகிறோம். அவர்கள் ஒரு கதவைத் தட்டி, அது திறக்கப்பட்டு, உள்ளே சென்று, ஜூல்ஸ் பேச ஆரம்பிக்கும்போதுதான் அவர்கள் இருவரும் அடியாட்கள் என்பதே நமக்குத் தெரிகிறது. இதுதான் முரண். இருவரும் வாழ்க்கையின் அபத்தங்களைப் பற்றிப் பேசுவதையும், திடுதிப்பென்று துப்பாக்கிகளை உருவுவதையும் ஒப்பிட்டால் இந்த முரண் புரியும். இப்படிப்பட்ட முரண்கள் திரைக்கதையில் இருப்பது, படம் பார்க்கும் ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.

ஆக, படத்தின் key incident என்பது, ஜூல்ஸும் வின்சென்ட்டும் மார்செலஸ் வாலஸின் பெட்டியை நான்கு இளைஞர்களிடமிருந்து மீட்கும் காட்சி என்பது நமக்குப் புரிகிறது.

அப்படியென்றால், படத்தின் inciting incident என்ன?

இதற்கு சிட் ஃபீல்ட் விடையளிக்கவில்லை. இருந்தாலும், படத்தைப் பார்ப்பவர்களுக்கே அது எளிதில் புரிந்துவிடும். ஆகவே, என் விளக்கத்தைக் கொடுக்க முயல்கிறேன். அதற்கு முன்னர், inciting incident என்றால் என்ன என்பதையும் ஒருமுறை பார்த்துவிடுவோம்.

Inciting  Incident என்பது ஒரு குறிப்பிட்ட காட்சி. திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான ஓபனிங் கொடுப்பது. இந்தக் காட்சிக்குப் பின், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆடியன்ஸுக்கு எழவேண்டும். அத்தகைய ஒரு thumping  ஸீனே Inciting  Incident  என்று அழைக்கப்படுகிறது.

Pulp Fiction படத்துக்கு அப்படிப்பட்ட ஓபனிங் கொடுத்த காட்சி எது? ரெஸ்டாரண்டைக்  கொள்ளையடிக்க ஹனி பன்னி மற்றும் பம்ப்கின் முடிவுசெய்து, துப்பாக்கிகளோடு எழும் காட்சி. அங்குதான் காட்சி ஃப்ரீஸ் செய்யப்பட்டு, டைட்டில்கள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஓபனிங் காட்சியைப் பார்க்கும் ஆடியன்ஸ், தியேட்டரை விட்டு எழுந்துபோய்விடுவார்களா என்ன? (இந்தக் காட்சியிலுமே, இரண்டு காதலர்கள் பேசிக்கொள்வதைப் போல ஆரம்பித்து, திடீரென்று இருவரும் ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிப்பதில் உள்ள முரணையும் கவனியுங்கள்).

திரைக்கதை எந்த விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், key incident மற்றும் inciting incident ஆகியவை இல்லாமல் போகாது என்கிறார் சிட் ஃபீல்ட். திரைக்கதை புரியவில்லை என்றால், திரைக்கதையை சிறு சிறு துணுக்குகளாகப் பிரித்துக்கொண்டால், முடிவில் இந்த இரண்டு சம்பவங்களும் புரிந்துவிடும் என்பது அவரது கருத்து.

இதேபோல், க்வெண்டினின் மற்றொரு மாஸ்டர்பீஸான Kill Bill படத்தின் பிரதான சம்பவம் எது? எந்த சம்பவம் நடந்ததால், படத்தின் மற்ற காட்சிகள் நடக்கின்றன?

Bride, திருமணத்தின்போது சுடப்படும் காட்சி.

ஆக, அதுதான் அப்படத்தின் key incident.

அப்படியென்றால், படத்தின் inciting incident?

படத்தின் ஆரம்பக் காட்சி. மரணத் தருவாயில், மூச்சிரைத்துக்கொண்டு தரையில் விழுந்திருக்கும் கதாநாயகியின் தலையில் வில்லன் பில் சுடும் காட்சி (என்பது என் விளக்கம்).

இப்படியாக,திரைக்கதையின் முதல் வரி எழுதப்படும் முன்னரே inciting incident மற்றும் key incident ஆகியவை தயாராக இருக்கவேண்டும் என்கிறார் சிட் ஃபீல்ட். படத்தின் ஓபனிங் ஸீனும், படத்தின் அதிமுக்கியமான ஸீனும் நம்மிடம் இருந்தால், அவற்றை வைத்து திரைக்கதையில் விளையாட முடியும். க்வெண்டின் அமைத்ததுபோல், நான் லீனியர் திரைக்கதை ஒன்றை அமைத்து, ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தலாம்.

இத்துடன், சிட் ஃபீல்டின் புத்தகத்தில் எட்டாவது அத்தியாயமான Two Incidentsஎன்பது முடிவடைகிறது.

‘ஓபனிங் ஸீன் என்னிடம் இருக்கிறது. படத்தின் பிரதான ஸீனும் தெரியும். அடுத்து நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்கும் நண்பர்களுக்கு….இதோ அடுத்த அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார் சிட் ஃபீல்ட் … வெகு விரைவில் !

தொடரும்…..

பி.கு – பல்ப் ஃபிக்‌ஷன் பற்றி ஹாலிவுட் பாலாவின் பதிவுகளை இங்கே படிக்கலாம். குறிப்பாக இரண்டாவது பதிவைப் படியுங்கள். உபயோகமாக இருக்கும்.

Pulp Fiction – A Chronological view
Pulp Fiction – படம் வரைந்து பாகம் குறித்து
Pulp Fiction – Looking Gradient

Pulp Fiction poster taken from here

  Comments

25 Comments

  1. எத்தனை தடவ பாத்தாலும் அலுக்காத படம் .., முதல் தடவ படம் பாத்துட்டு ஒண்ணும் புரியாம கிறக்கமாகிட்டு அப்புறம் நெட்ல கொஞ்சம் நோண்டி படிச்சிட்டு பாத்ததும் படமே வேற மாதிரி இருந்துச்சு..,

    பாலா படம் வரைஞ்சு எழுத பதிவும் ரொம்ப விளக்கமா இருக்கும் அதோடெ லிங்க் குடுத்திங்கண்ணா புதுசா வர்றவங்களுக்கு உதவுயா இருக்கும்..,

    பல்ப் ஃபிக்ஷன் பத்தி குவுன்டின் பிறந்த நாள் அன்னிக்கு மறுநாள் போட்டு இருக்கிங்க.., Intentional ah ?? Co-incidence ah ?? :))

    Reply
  2. ஆனந்த் – போட்டாச்சி 🙂

    க்வெண்டின் பிறந்தநாள் என்பதையே உங்க கமெண்ட் பார்த்துதான் கண்டுபிடிச்சேன் 🙂

    Reply
  3. என்னது சிட் ஃபீல்ட் இந்த படத்த பாத்தாரா ?????? அவர் பல வருசங்களுக்கு முன்னாடியே செத்துட்டாருன்னு இன்னைய தேதி வரை நெனச்சுகிட்டு இருந்தேன்…….

    Reply
  4. From Syd field’s interview……

    // What do you believe is the most influential screenplay in the last 20 years?

    Pulp Fiction. People say Tarantino broke the mold, but in fact it’s three stories about one story. It’s just a shift in the point of view. Pulp Fiction doesn’t break the mold of Three Act Structure, what it does is incorporate the Three Act in a new way. All three stories bounce off the key incident: Jules and Vincent retrieving Marcellus Wallace’s briefcase. I did an experiment; I put all three stories in a linear progression. It makes it boring and dull. The genius of Tarantino was that he could see that, so he moved the story around. Each section is a short story, in linear fashion, presented from a different character’s point of view.

    The revolution that Pulp Fiction led is that films are becoming more novelistic. Pulp Fiction, Kill Bill and The Royal Tennenbaums use titles, chapters and other novelistic tools. //

    syd field + pul fictionன்னு தட்டுனா இது வந்து நிக்குது.

    http://www.writersstore.com/interview-with-syd-field

    Reply
  5. அய்யா……

    Pulp Fiction (1994) – A Chronological View, இதில் சுலபமாக படம் பார்த்தவர்களுக்கு புரியப் போகும் விஷயத்தை பயங்கரமாக எழுதி பயமுறுத்த காரணம் ??

    Reply
  6. பொறாமை.

    ஸிட் யாருன்னே தெரியாத காலத்துல நானெழுதினதைத்தான் ஸிட்-டும் சொல்லியிருக்காருங்கறதை பார்த்ததும்.. ஜாக்கியின் பாராட்டை பெற்றதற்கு நான் முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என்று வந்த எண்ணத்தினால் உண்டான பொறாமை!!

    பத்தோடு பதினொன்றாக இருந்தவர்கள்.. இன்று மோதிரக்கையால் குட்டுபட்டு முன்னுக்கு வந்த பின்னும், இன்னும் 18-வது இடத்திலேயே இருக்கிறோமே – என்ற வஞ்சக எண்ணத்தில் வந்த பொறாமை.

    பொறாமை

    Reply
  7. ஐயன்மீர்……….18, என் பொறந்தநாள்……..ஒருவேள நீங்க குட்டு வாங்கின மோதிரக் கை, என்னை பதினெட்டாவது இடத்திலாவது வைக்குமானால், அதைவிட எனக்கு என்ன பெரும்பேறு இருக்க முடியும் ? ஆனால், அவர்தான் என்னெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டேங்குறார்….
    (இப்புடி கமென்ட் போட்டுகிட்டே இருந்தா, கருந்தேள் கமென்ட் செக்சன் chat box மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க…….)

    என்னயிருந்தாலும், அந்த பதிவு ரொம்ப குழப்பிருச்சு….

    Reply
  8. அட்டகாசம் தல….அப்பவே நினைச்சேன் நீங்க சொல்லப்போறது ஏதாவதொரு குவென்டின் படம் பத்தி தான்னு…. ஆனா Kill Bill-ஆ இல்ல Pulp Fiction-ஆன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு இப்போ க்ளியர்….திரைக்கதை போலவே தொடரையும் நீங்க ஒவ்வொரு வாரமும் ஒரு Inciting Incident-ஓடே முடிக்கிறீங்க…!! 🙂 🙂 அடுத்த எபிசோடுக்காக வெயிட்டிங்… 🙂 🙂 சீக்கிரமா ரிலீஸ் பண்ணிடுங்க…

    Reply
  9. இந்த கொசு தொல்ல தாங்க முடியல………பிரபல பதிவர் மாதிரி ஒண்ணு இதுக்கும் எழுதலாம்ன்னு பாக்குறேன். அந்தளவுக்கு இதெல்லாம் வொர்த் இல்லைன்னு விடுறேன்.

    Reply
  10. அடடே.. இப்ப என்ன மாதிரியே.. ப்ரொஃபைல் போட்டோவும் வந்துட்டுச்சே!! 🙂

    ஆமா.. ப்ரொஃபைல் நம்பருக்கு என்ன பண்ணப் போறீங்க?

    Reply
  11. @ Rajesh,
    Excellent Explanation. After reading the explanation of Inciting Incident and Key Incident with pulp fiction, I can easily guess the same for Killbill.

    Are these incidents present in every movie ? For eg, some Kim’s movie like “Spring Summer …”

    – Suresh

    Reply
  12. ஹலோ..யாரும் இல்லையா..எல்லாம் எஸ்காண்டா ? சரி, நான் பிரபல பதிவர அப்டேட் செய்யுற வேலய பாக்குறேன். ரொம்ப நாள் ஆச்சு.

    Reply
  13. @ கொழந்த – உம்ம வாயில வசம்ப வெச்சி தேய்க்க…சிட் ஃபீல்ட் இன்னும் கல்லுக்குண்டு மாதிரி ஜம்முனு இருக்காரு. அவருக்கு எதுனா ஆச்சுது, உங்களோட இந்த கமெண்டை விகிபீடியால பப்ளிஷ் பண்ண வேண்டியிருக்கும் 🙂

    நீங்க கொடுத்துருக்குற பேட்டில இருக்குற மேட்டர்தான் அவரோட புக்கு பூரா சொல்லிருக்காரு. இன்னும் Pulp Fiction படத்தை சிலாகிக்கும் சிலரில் அவரும் ஒருவர். அவரையே ஆடிப்போக வெச்சிருச்சில்ல… அந்த மரியாதை 🙂

    @ திருவாரூரிலிருந்து சுதர்சன் – அடுத்த எபிசோட் இன்னும் விரைவில் வர இருக்கிறது. உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ச்சி. என்னாது ரெண்டு இன்சிடென்ட்டும் ரெடி பண்ணிட்டீங்களா? அப்புறம் என்ன? ஆரம்பிக்க வேண்டியதுதானே 🙂

    @ suresh babu – நல்ல கேள்வி கேட்டுருக்கீங்க. சிட் ஃபீல்ட் கொடுக்கும் ஃபார்முலா, ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான ஒன்று. சுவாரசியமா ஒரு படம் இருக்கணும்ன்றது அவரோட கொள்கை. உலகப் படங்கள் குறித்து அவரு கம்மியாதான் பேசிருக்காரு. அவருக்கு கிம் கி டுக் படங்கள் புடிக்குமான்னே எனக்குத் தெரியல. புடிக்காம போவதற்குதான் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான உலகப்படங்களுக்கு இந்த ஃபார்முலா ஒத்து வராதுன்னு தோணுது. காரணம், அவைகள் மெதுவாகவே நகரும். சர்ருன்னு ஒரு ஓபனிங், பயங்கரத் திருப்பம் உள்ள ஒரு நடுப்பகுதி, வேகமான க்ளைமேக்ஸ் என்ற கணக்கு உலகப்படங்கள்ள இருக்காது. ஆனா, அதுக்கும் சில விதிவிலக்குகள் உண்டு. Run Lola Run, Lives of Others, Oldboy மாதிரி படங்கள்ல இந்த ஃபார்முலாவை நம்மால் உணர முடியும் (அந்தப் படங்கள் இந்த ஃபார்முலாவை மனசுல வச்சி எடுக்கப்படாவிட்டாலும் கூட). அதாவது, ஒரு தரமான படத்தில், இந்த ஃபார்முலா அறிந்தோ அறியாமையோ எப்படியும் இருக்கும் என்பதே சிட் ஃபீல்டின் கொள்கை.

    ஆனால், கிம் கி டுக் படங்கள்ல, திரைக்கதை என்பது ஒரு விஷயமே இல்ல. சம்பவங்களின் கோர்வையாகவே அவரோட படங்கள் பெரும்பாலும் நகரும் (ஆனா, அவரோட ‘Isle’ படத்துல இந்த ஃபார்முலாவை நம்மால் உணர முடியும். இதுபோன்ற விதிவிலக்குகளும் உண்டு). ஆகவே, கிம் கி டுக் ரீதியான படங்களில் இந்த ஃபார்முலா வொர்க் ஔட் ஆகாது என்பது என் கருத்து பாஸ்.

    @ ஆள்தோட்ட பூபதி(கள்) – யோவ். இதுல யாரு எவர்ன்னே எனக்கு புரியல. ஒருவேளை எல்லாமே ஒண்ணுதானா? அல்லது எல்லாமே வேற வேறையா? மொதல்ல அதைப் புரிய வைங்க .. அப்பால வரேன்

    Reply
  14. //ஆனால், கிம் கி டுக் படங்கள்ல, திரைக்கதை என்பது ஒரு விஷயமே இல்ல. சம்பவங்களின் கோர்வையாகவே அவரோட படங்கள் பெரும்பாலும் நகரும்//
    Yes. Even I thought the same and asked your explanation on this.

    – SureshBabu

    Reply
  15. நண்பரே, “Munich” பார்த்திருக்கிறீர்களா? ஒரிஜினல் வாங்கி பார்க்கும் அளவு நல்ல படமா? உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன்! மொஸாட் சம்பந்தமான புக் படித்ததன் விளைவு இந்த கேள்வி!

    அடிச்சொருகல்:
    இந்த சுட்டி காமிக்ஸ் ரசிகர்களுக்கு மட்டும்!

    Reply
  16. இப்படி தொடராக எழுதி, முந்தைய மற்றும் அடுத்த பாகக்திற்கு லிங்க் கொடுத்தால், ப்ளாக்கை டெலிட் பண்ணி விடுவார்களா? எனதை அப்படி டெலிட்டிவிட்டார்கள் 🙁 அப்புறம் ரெகவர் செய்தேன்! இணையத்தில் தேடியதில் ஆட்டோ ப்ளாக் என்று ஏதோ ஒரு சங்கதி என்று நினைத்து டெலிட்டியிருப்பார்கள் என தெரிந்தது. உங்களுக்கு இவ்வாறு ஆகி இருக்கிறதா? இதை தவிர்ப்பது எப்படி?

    Reply
  17. @ karthik – கட்டாயம் ‘Munich’ பார்க்கலாம் நண்பரே. ஆனா என்ன… ஸ்பீல்பெர்க், யூதர்களை ரொம்பவே தாங்கிப்புடிப்பாரு. இருந்தாலும் பாருங்க.

    @ கட்டாயம் அப்புடியெல்லாம் டெலீட்ட மாட்டார்கள் நண்பரே.. எனக்கு இதுவரை அப்படி ஆனதில்லை. ஏதாவது தேடிவிட்டு சொல்லட்டுமா?

    Reply
  18. மிக்க நன்றி நண்பரே! சீக்கிரம் பார்த்து விடுகிறேன்!

    இப்போதெல்லாம் ஒவ்வொரு பதிவுக்கு அப்புறமும் ஒரு புல் சைட் backup எடுத்து விடுகிறேன், உங்களுக்கு அவ்வாறு ஆகவில்லை என்பது ஆறுதலை அளிக்கிறது…

    Reply
  19. found some useful info here!. I guess I should stop promoting my blog through others’ blog 🙂

    Reply
  20. @ Karthik – படிச்சேன். Adsense வெச்சி விளையாடினா இதுதான் கதியோ? என்ன இது அக்கிரமம்…நானும் ரெகுலரா பேக்கப் எடுப்பேன். என்னமோ போங்க 🙂

    Reply
  21. ஆனா இதுல காமெடி என்னன்னா நான் ஒழுங்கா பதிவு போட ஆரம்பிச்சே பத்து நாள்தான் ஆகுது. Adsense போடற அளவுக்கு பெரிய ஆள் ஆகலங்கறதால அதையும் போடல – என்னத்த சொல்ல 🙁

    Reply
  22. Well, Jackie Brown is a good film. I like it. But to me, his bests are Pulp fiction & Kill Bill

    Reply

Join the conversation