3 – Iron (2004 ) – South Korean
கிம் கி டுக். மறுபடியும். நாம் இந்த வலைத்தளத்தில் பார்க்கும் மூன்றாவது கிம் கி டுக் படம் இது. இந்த வரிசை, இன்னமும் தொடரும்.
ஏன் கிம் கி டுக்? பொதுவாக, ஒரு திரைப்படம் என்றால், சும்மா ஸ்க்ரீனில் சில காட்சிகள் ஓடுவது, நாம் சில பல உணர்ச்சிகளை அடைவது, பின் படம் முடிவது என்றிருக்கும் நிலையை மாற்றி, பார்ப்பவர்களை யோசிக்க வைப்பது அவரது ஸ்டைல். கதையில் நிகழும் நிகழ்வுகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். அதனால் என்ன உணர்த்தப்படுகிறது என்பது, நமது தீர்ப்புக்கே விடப்படுகிறது. ஆகவே, அவரது படங்களின் மூலம், நம்முடன் உரையாடுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். உரையாடலின் போக்கு எப்படி வேண்டுமானாலும் செல்லக்கூடும். ஆனால், உரையாடலின் முடிவில், நமது புரிதல் தகர்க்கப்பட்டு, மனம் முழுவதும் ஒரு அழகியல் உணர்ச்சி நிரம்பிக் கொள்கிறது. உலகை நாம் பார்க்கும் பார்வையை, இந்த உணர்ச்சி மாற்றுகிறது.
எந்தக் காரணமுமே இல்லாத சில செயல்களை கிம் கி டுக்கின் கதாபாத்திரங்கள் செய்யக்கூடும். உற்றுக் கவனித்தால், அந்தச் செயல்கள் நமது வாழ்வில் என்றோ ஒரு நாள் நம்மால் செய்யப்பட்டதை நாம் உணர முடியும். ஆகவே, நமது வாழ்வை, அவரது படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
கிம் கி டுக்கின் ஏனைய படங்களைப் போலவே, உணர்ச்சிகள் இப்படத்திலும் முக்கியத்துவம் வகிக்கின்றன. காயப்பட்ட மனதின் வலி, பீறிடுகிறது. இந்த வலியுடன், இயற்கையின் அழகு, மனிதர்களின் குணாதிசயங்கள் ஆகிய பிற விஷயங்கள் சேர்க்கப்படும்போது, நமக்குக் கிடைக்கும் அந்த அழகியல் உணர்வை விவரிக்க இயலாது. அனுபவித்தால் மட்டுமே அது புரியும்.
டே-சுக், ஒரு உணவகத்தின் டெலிவரி பாய். அந்த உணவகத்தின் பல்வேறு மெனுக்கள் அடங்கிய விளம்பரங்களை, வீடு வீடாகச் சென்று கதவுகளில் ஒட்டுவதே அவனது பணி. அப்படிப் பகலில் ஒட்டும் வீடுகளை, இரவில் சென்று அவ்வப்போது கவனிக்கிறான் டே-சுக். எந்தக் கதவுகளில் இருந்து அந்த மெனு பிய்க்கப்படவில்லையோ, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், ஊரில் இல்லை என்று யூகித்துக்கொண்டு, அந்த வீட்டின் பூட்டைப் பிரித்து, உள்ளே நுழைகிறான். அந்த வீட்டின் பொருட்களை உபயோகிக்கிறான். உணவு உண்கிறான். துவைக்கிறான். குளிக்கிறான். அந்த வீட்டின் எஜமானன் போலவே நடந்து கொள்கிறான். அந்த வீட்டில் இருக்கும் உடைந்து போன பொருட்களை சரி செய்தும் வைக்கிறான். விடிந்ததும், வந்த சுவடே இல்லாமல் திரும்புகிறான். ஒவ்வொரு வீட்டிலும், ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறான்.
படம் தொடங்கி, அவன் உட்புகும் இரண்டாவது வீடு,, பிரம்மாண்டமான தோட்டத்துடன், அழகாக விளங்குகிறது. வழக்கப்படி ஒவ்வொரு அறையாக நுழைந்து பார்க்கும் அவனை, இன்னொரு அறையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண், பார்த்துவிடுகிறாள். இது அறியாத டே-சுக், தனிமையில் இருப்பதாகக் கருதி, அந்த வீட்டில் இருக்கும் அந்தப் பெண்ணின் பல புகைப்படங்களை எடுத்துப் பார்க்கிறான். அவள் ஒரு மாடல் என்றும் அறிந்து கொள்கிறான்.
அப்போது, ஃபோன் அடிக்கிறது. ஆவேசமாகப் பேசும் ஒரு ஆணின் குரல், ஃபோனை எடுக்கச்சொல்லிக் கத்துகிறது. தான் ஒரு மிருகமாக மாறிவிட்டதால், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாகவும், இனி அப்படி நடக்காது என்றும் சொல்லிவிட்டு, அந்த அழைப்பு துண்டிக்கப்படுகிறது (படம் தொடங்கி முதன்முதலாக ஒரு வசனத்தைக் கேட்கிறோம் – பத்து நிமிடங்களுக்குப் பின்).
வீட்டிலுள்ள துணிகளைத் துவைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் கோல்ஃப் ஆடி முடித்துவிட்டு, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தவாறே, மாஸ்டர்பேட் செய்கிறான் டே-சுக்.
அந்த நேரத்தில், அந்தப் பெண், நேராகப் படுக்கையறையின் உள்ளே நுழைகிறாள். அதிர்ச்சியடையும் டே-சுக், அவசரமாக உடுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடப்பார்க்கையில், தொலைபேசி மறுபடியும் அடிக்கிறது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நிற்கும் அந்தப் பெண், திடீரென, அடியாழத்திலிருந்து துன்பியல் கதறல் ஒன்றை ரிசீவரில் வெளிப்படுத்திவிட்டு, தொலைபேசியை வைத்துவிடுகிறாள்.
அவளது கணவன் வீடுதிரும்புவதைப் பார்க்கிறோம். அந்தப் பெண்ணை அவன் ஆவேசமாகத் திட்டத் தொடங்குகையில், டே-சுக், தோட்டத்தில் அமைதியாக நடந்து சென்று, கோல்ஃப் விளையாடத் தொடங்குகிறான் . அங்கு ஓடிச்செல்லும் கணவனை, கோல்ஃப் பந்துகளாலேயே அடிக்கும் டே-சுக், துடிதுடித்துக் கொண்டிருக்கும் கணவனை விட்டு ஓடி, தனது பைக்கைக் கிளப்புகிறான். ஆனால், அங்கிருந்து செல்லாமல், த்ராட்டிலைத் திருப்பிக்கொண்டே நிற்கிறான். மெதுவாக அந்தப் பெண் வந்து வண்டியில் அமர, வண்டியைக் கிளப்புகிறான் டே-சுக்.
இந்த இடத்திலிருந்து, ஒரு மௌனமான உறவு தொடங்குகிறது. டே-சுக் செல்லும் வீடுகளுக்கெல்லாம் அவனுடன் வரும் அப்பெண், அவனுக்கு எல்லா வகைகளிலும் உதவுகிறாள்.
ஒருநாள், ஒரு வீட்டில், ஒரு பிணம் இருப்பதை இருவரும் பார்க்கிறார்கள். அந்தப் பிணத்துக்கு அருகில் இருக்கும் தொலைபேசியை எடுத்து, அங்கு கிடைக்கும் அந்த மனிதனின் மகனின் எண்ணுக்கு, டே-சுக் ஃபோன் செய்கிறான். ஆனால், அந்த அழைப்பு எடுக்கப்படுவதில்லை. பின், தென்கொரிய வழக்கப்படி அந்த மனிதனைத் துணியில் சுற்றி, இருவரும் புதைக்கிறார்கள். பின், அந்த வீட்டில் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, அங்கு வரும் அந்த மனிதனின் மகன், இருவரையும் கண்டு பதறி, காவல்துறையினரை அழைத்து விடுகிறான்.
போலீஸ் ஸ்டேஷனில், டே-சுக்குடன் இருக்கும் பெண்ணை அடையாளம் கண்டுபிடித்து, அவளது கணவனிடம் ஒப்புவித்துவிடுகிறார்கள். அந்த மரணம், நுரையீரல் புற்றுநோயால் நிகழ்ந்தது என்று அறிந்து, டே-சுக் விடுவிக்கப்படுகிறான். ஆனால், அந்தப் பெண்ணின் கணவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, டே-சுக்கை அவனிடம் விட்டுவிடுகிறார்கள் போலீஸார்.
விலங்கிடப்பட்டிருக்கும் டே-சுக்கை, கோல்ஃப் பந்துகளால் வெறித்தனமாக அடிக்கிறான் அந்தக் கணவன். ஆத்திரமடைந்து, விலங்குகளினால் அவனது கழுத்தை நெறிக்கும் டே-சுக், மறுபடி கொலைமுயற்சிக்காகக் கைது செய்யப்படுகிறான்.
ஆனால், இம்முறை, ஜெயிலில் டே-சுக்கின் நடவடிக்கை, மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை உணவு கொண்டுவரப்படும்போதும், கதவுக்கு மிக அருகில் ஒளிந்து நிற்க முயற்சி செய்கிறான் டே-சுக். இதனாலேயே, காவலாளியிடம் அடியும் வாங்குகிறான். ஆனாலும் தனது முயற்சிகளை டே-சுக் விடுவதாக இல்லை. ஒருமுறை, ஜெயிலின் உள் சுவரின் மேல் வவ்வால் போல தொற்றிக்கொண்டு நிற்கும் டே-சுக்கைக் கீழே இழுத்து வந்து, அடி பின்னிவிடுகிறார்கள்.
தனது முயற்சிகளில் மிகத்தீவிரமாக இருக்கும் டே-சுக், ஒரு வகையான மார்ஷியல் ஆர்ட் மூலம், தனது உள்ளங்கையில் ஒரு கண்ணின் படத்தை வரைந்து வைத்துக் கொண்டு, காவலாளியின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க, பயிற்சி செய்துகொண்டே இருக்கிறான்.
உணவு எடுத்துவரும் காவலாளி, ஓர்நாள், டே-சுக்கை எங்கும் காணாமல், பதற்றமடைகிறான். அவனது அறை, காலியாக இருக்கிறது! அத்தனை காவலாளிகளும் வந்து கதவைத் திறக்கையில், அங்கு இருக்கும் டே-சுக்கைப் பார்க்கிறார்கள்.
டே-சுக், விடுதலையளிக்கப்படுகிறான்.
இதன்பின், படத்தில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.
இறுதியில் என்ன ஆனது? டே-சுக், மாயமாக மறைந்ததன் காரணம் என்ன? அந்தப் பெண்ணிடம் டே-சுக் செல்ல முடிந்ததா? அப்பெண்ணின் கணவன் என்ன ஆனான்?
படத்தைப் பாருங்கள்.
வழக்கப்படி இப்படத்திலும், முடிவில் நாம் நிறைய யோசிப்பது நடக்கிறது. படத்தில் நிகழும் பல விஷயங்களுக்குக் காரணமோ மூலமோ சொல்லப்படுவதில்லை. நாமே புரிந்துகொள்ள வேண்டியதுதான்.
படத்தின் ஒளிப்பதிவு, வழக்கப்படி அட்டகாசம். என்னதான் நகரின் உள்ளேயே நடந்தாலும், கண்ணுக்குக் குளுமையான விதத்திலும், அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. லைட்டிங்கும் பிரமாதம்.
அதேபோல், மற்ற எல்லாக் கிம் கி டுக் படங்களைப் போலவும், இப்படத்திலும் வசனங்களே இல்லை. இருக்கும் வசனங்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதிவிடலாம். இதையெல்லாம் விட, படத்தின் நாயகனும் நாயகியும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்வதில்லை (படத்தின் இறுதியில் ஒரே வார்த்தை நாயகி சொல்வதோடு சரி).
இப்படத்தில் மௌனம், ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பின் அடையாளமாக, மௌனமே இருக்கிறது. அந்த மௌனத்தை, இருவரும் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் திரைக்கதை, ஒரே மாதத்தில் கிம் கி டுக்கால் எழுதப்பட்டு, பதினாறு நாட்களில் எடுத்துமுடிக்கப்பட்டு, பத்தே நாட்களில் எடிட் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது.
3 – Iron பாருங்கள். கிம் கி டுக்கினால் எழுதப்பட்ட கவிதைகளில் இதுவும் ஒன்று.
3- Iron படத்தின் ட்ரைலர் இங்கே
பி.கு – இந்தப் படம், தமிழில், ‘லாடம்’ என்ற பெயரில் காப்பியடிக்கப்பட்டு, சார்மி இப்படத்தின் ஹீரோவைப் போலவே ஒரு ரோலில் நடித்தது பலருக்கு நினைவிருக்கலாம். லாடத்தின் ஹீரோயின் சார்மி வரும் காட்சிகள் அனைத்துமே இப்படத்தின் ஈயடிச்சாங்காப்பி
சவுத் கொரியா ஒழிக.
ஹாலிவுட் வாழ்க
//ஏன் கிம் கி டுக்? பொதுவாக, ஒரு திரைப்படம் என்றால், சும்மா ஸ்க்ரீனில் சில காட்சிகள் ஓடுவது, நாம் சில பல உணர்ச்சிகளை அடைவது, பின் படம் முடிவது என்றிருக்கும் நிலையை மாற்றி, பார்ப்பவர்களை யோசிக்க வைப்பது அவரது ஸ்டைல். கதையில் நிகழும் நிகழ்வுகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். அதனால் என்ன உணர்த்தப்படுகிறது என்பது, நமது தீர்ப்புக்கே விடப்படுகிறது. ஆகவே, அவரது படங்களின் மூலம், நம்முடன் உரையாடுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். உரையாடலின் போக்கு எப்படி வேண்டுமானாலும் செல்லக்கூடும். ஆனால், உரையாடலின் முடிவில், நமது புரிதல் தகர்க்கப்பட்டு, மனம் முழுவதும் ஒரு அழகியல் உணர்ச்சி நிரம்பிக் கொள்கிறது. உலகை நாம் பார்க்கும் பார்வையை, இந்த உணர்ச்சி மாற்றுகிறது.
////
வாட் ஹேப்பண்ட்?? ஹேங் ஓவர்??
//வாட் ஹேப்பண்ட்?? ஹேங் ஓவர்??//
ஹீ ஹீ 😉 அப்புடியும் வெச்சிக்கலாம் 😉
//சவுத் கொரியா ஒழிக.
ஹாலிவுட் வாழ்க//
அப்ப நானும் வாழ்க கோஷம் போடுவேன்.. 😉 ராம நாராயணன் வாழ்க.. பெண் சிங்கம் வாழ்க. . 😉
//துன்பியல் கதறல் ஒன்றை ரிசீவரில் வெளிப்படுத்திவிட்டு,//
இது நிஜமாவே அபாயமணி ஒலிக்கும் இடம். ஓவரா பின்நவீனத்துவ மேட்டரை படிக்கறீங்கன்னு நினைக்கிறேன். 🙂
இமேஜ் எதுவும் டிஸ்ப்ளே ஆகலையே கருந்தேள்??!
இங்க ஏதோ உள்குத்து வெளிக்குத்து நடக்குது. அதுல ஒலக சினிமா பெருந்தலைகள் எல்லாம் உருளுது (திரு கிம் கீ டுக், திரு இராம நாராயணன் இதர, இதர)
நான் அப்புறமா வர்றேன்.
//வழக்கப்படி இப்படத்திலும், முடிவில் நாம் நிறைய யோசிப்பது நடக்கிறது. //
எங்க பரம்பரையிலேயே.. ‘யோசிக்கறது’ மட்டும் நடக்காது. குல வழக்கம்!!
//நான் அப்புறமா வர்றேன்//
மீ த ஃபர்ஸ்ட் போட முடியாத வருத்தத்தில் விஷ்வா மனமுடைந்தார்.
வேறு வேலையாக இருப்பதால், இப்போது மீ தி எஸ்கேப்.
இருந்தாலும் ஒரு தகவல்: இந்த படத்தின் போஸ்டர் ஒரு ஹிந்திப் படத்தின் போஸ்டருக்கு சமீபத்தில் உபயோகப்படுத்தி விட்டார்கள் (என்று நினைக்கிறேன்)
@ பாலா – //இது நிஜமாவே அபாயமணி ஒலிக்கும் இடம். ஓவரா பின்நவீனத்துவ மேட்டரை படிக்கறீங்கன்னு நினைக்கிறேன். :)//
ஹாஹ்ஹா.. 😉 நானு, இத எழுதும்போது, ராஜீவ் கொலையப் பத்தி பிரபாகரன் கொடுத்த பேட்டி நினைவு வந்திச்சி.. அதுல, ராஜீவ் கொலை, ஒரு துன்பியல் சம்பவம்ன்னு சொல்லிட்டு, டக்குனு தலைவர் அடுத்த கேள்விக்கிப் போயிருவாரு 😉
அப்புறம், இமேஜ் டிஸ்ப்ளே ஆகுதே தல இங்க? மத்த ப்ரௌசர்லயும் பார்த்தேன்.. ஆகுது.. ஒருவேளை அங்க எதாவது பிராப்ளமோ?
//இப்படத்தில் மௌனம், ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பின் அடையாளமாக, மௌனமே இருக்கிறது. அந்த மௌனத்தை, இருவரும் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்//
இப்பதானே கல்யாணம் ஆகியிருக்கு. இன்னும் 1-2 வருசத்தில்… பாருங்க!! இதெல்லாம் உணர்வுப்பூர்வமா எழுதுவீங்க!!! 🙂 🙂
@ விஸ்வா – //இங்க ஏதோ உள்குத்து வெளிக்குத்து நடக்குது. அதுல ஒலக சினிமா பெருந்தலைகள் எல்லாம் உருளுது (திரு கிம் கீ டுக், திரு இராம நாராயணன் இதர, இதர)
நான் அப்புறமா வர்றேன்//
😉 குட்டிப்பிசாசு -2 வந்திக்கினே கீது நைனா . . . 😉 நீங்கதான் மொதோ போணி.. பார்த்துக்கினே இருங்க 😉
//மீ த ஃபர்ஸ்ட் போட முடியாத வருத்தத்தில் விஷ்வா மனமுடைந்தார்//
என்ன கொடுமை சார்? தலைமை பதவிக்கு போட்டியா?
பை தி வே, தமிழ்ல குரு என் ஆளு என்று மாதவன் பட போஸ்டரில் வேறு நடந்தது.
என்ன தல இன்னும் இந்த கிம் கி டுக்க விடற மாதிரி தெரியேலையே
// இந்த வரிசை, இன்னமும் தொடரும். //
என்னாது இன்னமும் தொடருமா……!!!!!!!!!!!!!
// இந்த இடத்திலிருந்து, ஒரு மௌனமான உறவு தொடங்குகிறது. டே-சுக் செல்லும் வீடுகளுக்கெல்லாம் அவனுடன் வரும் அப்பெண், அவனுக்கு எல்லா வகைகளிலும் உதவுகிறாள். //
எப்படி அப்புடின்னு கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன் (:))
.
//அப்புறம், இமேஜ் டிஸ்ப்ளே ஆகுதே தல//
மூணு ப்ரவுஸரிலும் வொர்க் ஆகலை. க்ளிக் பண்ணினாதான் அடுத்த பேஜில் தெரியுது.
@ பாலா – //எங்க பரம்பரையிலேயே.. ‘யோசிக்கறது’ மட்டும் நடக்காது. குல வழக்கம்!!//
அய் !! சேம் பின்ச்.. எங்க பரம்பரைல பல பேரு பரிட்சைல ஃபெயிலாகுறத ஒரு ஹாபியாவே பண்ணிக்கினு இருந்தோம் 😉
//மீ த ஃபர்ஸ்ட் போட முடியாத வருத்தத்தில் விஷ்வா மனமுடைந்தார்//
😉 அங்க புடிச்சீங்க பாயிண்ட்ட !! தலைவர் அதுபத்தி ஒன்யுமே சொல்லக்காணோமே 😉
@ விஸ்வா – கரெக்டா சொன்னிங்க.. இது ஒரு ஹிந்திப்பட போஸ்டர் தான்.. வந்து 4-5 வருஷம் ஆச்சி.. படம் பேரு மறந்து போச்சி.. யோசிச்சி சொல்றேன்
//இப்பதானே கல்யாணம் ஆகியிருக்கு. இன்னும் 1-2 வருசத்தில்… பாருங்க!! இதெல்லாம் உணர்வுப்பூர்வமா எழுதுவீங்க!!! 🙂 :)//
ஹீஹீ… ஆல்ரெடி அப்புடித்தான் ஆயிருச்சி 😉 (அய்யோ அடி உளுது)
@ விஸ்வா – //பை தி வே, தமிழ்ல குரு என் ஆளு என்று மாதவன் பட போஸ்டரில் வேறு நடந்தது//
ஆஹா இது வேறயா??? என்ன கொடும சார் இது
//, தமிழ்ல குரு என் ஆளு என்று மாதவன் பட போஸ்டரில் வேறு நடந்தது//
இது நினைப்பு இருக்கு.
//என்னாது இன்னமும் தொடருமா……!!!!!!!!!!!!!//
ஆமாமோ ஆமாம் !! செத்தீங்க !! கிம் கி டுக் கிட்ட பேசிட்டேன்.. அவரு எடுக்குற ஃப்யூச்சர் படத்த பத்தி மொதல்ல என் கிட்ட தான் டிஸ்கஸ் பண்றேன்னு சொல்லிகீறாரு 😉
//எப்படி அப்புடின்னு கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன் (:))//
அதத்தான் எழுதலான்னு நினைச்சேன்.. ஆனா அத நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கங்க 😉 ஹீ ஹீ
அந்த குரு என் ஆளு படத்த முழுசா பார்த்துட்டு உயிரோடு இருக்கும் மூன்று நபர்களில் நானும் ஒருவன் (மத்த ரெண்டு பேர், மாதவனும் இயக்குனரும்)
இருங்க நைட்டு வந்து பதில் போடுறேன்.. ஒக சின்ன வேலை (ஆஃபீஸ்)..
ஓகே… ஏரியாவை… “உலக சினிமா” ரசிகர்களுக்கு விட்டுவிட்டு ஏரியாவை காலி செய்கிறேன்.
//அந்த குரு என் ஆளு படத்த முழுசா பார்த்துட்டு உயிரோடு இருக்கும் மூன்று நபர்களில் நானும் ஒருவன் //
அது… எங்க.. து…. து…. து…… அதிர்ஷ்டம்!!!
அப்பாடி me the 25th
என்ன நடக்குது இங்கே ஒரே கும்மியா இருக்குதே
////அந்த குரு என் ஆளு படத்த முழுசா பார்த்துட்டு உயிரோடு இருக்கும் மூன்று நபர்களில் நானும் ஒருவன் //
அது… எங்க.. து…. து…. து…… அதிர்ஷ்டம்!!!//
பாலாண்ணே,
நீங்க அந்த படத்த பார்த்தது பத்திதானே சொல்றீங்க?
விஸ்வா மற்றும் பாலா அண்ணன் போன்ற பெரியவங்க விளையாட்டுக்கு நான் இன்னமும் தயாராகலீங்கோ
.
கருந்தேளை இப்பத்தான் பாக்குறேன்.. கலக்கலா இருக்கு..வாழ்த்துக்கள்
இந்த படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் “world movies”இல் பார்த்தேன் !!
படம் ஒரு மௌன கவிதை மாதிரி இருந்தது !!!
உங்கள் கட்டுரையை படித்த பிறகு மறுபடியும் பார்க்க துண்டுகிறது !!
நன்றி !!!
ஒரு விஷயம் கவனித்தீர்களா ??
இந்த படத்தின் போஸ்டர் நம்ம ” குரு என் ஆளு ” படத்திலும் ,
கதாநாயகனின் அந்த விடு புகும் குணாதிசயம் “லாடம் ” படத்திலும் காப்பி அடிக்க பட்டுள்ளது !!!
நம்ம ஆளுங்க பின்றாங்க !!!
கிம் கி டுக் அகில உலக ரசிக மன்ற தலைவராக தேளை முன் மொழிகிறேன்
This comment has been removed by the author.
எனக்கு மிக பிடித்த படம்..நான் எழுதிய விமர்சனம் இங்கே…http://amuthakrish.blogspot.com/2009/09/3.html
நண்பா மிக சிறப்பான விமர்சனம்,கிம்கிடுக்கின் 15படங்களுக்கும் உங்களிடமிருந்து விம்ரசனம் எதிர்பார்க்கிறோம்,இன்னும் 12 இருக்கா?நண்பா.வேலை ஓவரு.ஷார்ஜாவுல 10மணிநேரம் கரண்ட் இல்லை,அதும் எப்படி ஆல்டர்னேட் பில்டிங்கில் ரேண்டமாய் கரண்ட் இல்லை,என்ன எழவோ,50டிகிரி வெயிலில் 30 மாடி வேறு இறங்க வேண்டியதாகிவிட்டது.நாளை சேட்டில் பார்ப்போம்
// மனம் முழுவதும் ஒரு அழகியல் உணர்ச்சி நிரம்பிக் கொள்கிறது. //
அழகியலா?? பாஸ்… நீங்க சொன்னீங்கன்னு Bad Guy படம் பார்த்தேன்… நல்லாத்தான் இருந்துச்சு… ஆனா ஒரே டெர்ரரா இல்ல இருந்துச்சு… நைட்டு தூக்கம் வராத அளவுக்கு மனசை ரணகளமாக்கிடுது… இவர் படங்களை அழகியல்னு சொல்லிட்டீங்களே..!!
இந்தப்படத்தையும் வச்சுருக்கேன்… பார்க்கிறேன்…
// சவுத் கொரியா ஒழிக.
ஹாலிவுட் வாழ்க //
இதை முழுமையாக வழிமொழிந்து வெளிநடப்பு செய்கிறேன்…
இந்த இயக்குனரின் ரசிகர் ஆகிவிட்ட நீங்கள் எங்களையும் உங்கள் பாடைக்கு அழைக்கிறீர்கள்
விமர்சனம் என்ற பெயரில் கதை சொல்வது சரியா!?
நண்பரே,
கிம் கி டுக் என்றால், உங்கள் வரிகளில் ஒரு இதம் சொல்லாமல் வந்து உட்கார்ந்துவிடுகிறது. உங்கள் கதை சொல்லல் படிப்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. மெளனத்தில் ஒளிந்திருக்கும் அன்பை புரிதல் என்பது அரிதான ஒன்று [ இப்போதுதான் என் மனைவி என்னுடன் நீ பேசும் வார்த்தைகளை விரல்களில் எண்ணிவிடலாம் என்றார் :))]. மிகவும் அருமையான விமர்சனம்.
உலக சினிமா ஒழிக..
பாலா.. இப்போ சந்தோஷமா..??
//இப்போதுதான் என் மனைவி என்னுடன் நீ பேசும் வார்த்தைகளை விரல்களில் எண்ணிவிடலாம் என்றார் :))//
ஹிஹி,கன்னத்துல கை வச்சுகினு இருக்குறப்ப பேசுறது அவ்ளோ சுலபமா என்ன?
நானு அவங்க கன்னத்துல உங்க கைய பத்தி சொன்னேன்.வேற ஏதும் இல்ல. 😉
//விரல்களில் எண்ணிவிடலாம்//
ஹிஹி,உள் ‘குத்து’? 🙂
நண்பர் இலுமினாட்டி, :))
@ ஜெயக்குமார் – நன்றி நண்பா.. அடிக்கடி இந்தப் பக்கம் வரவும்
@ psycho – கரெகிட்டு ! அந்த சமயத்துல, வோர்ல்ட் மூவி சேனல்ல அடிக்கடி இந்தப் படம் போடுவாங்க.. அந்தச்
சமயத்துல தான் டிவிடில இந்தப் படம் பார்த்தேன்..
@ உலக சினிமா ரசிகரே – இந்த குசும்பு தானே வாணாங்குறது !!! 😉
@ அமுதா கிருஷ்ணா – உங்கள் விமரிசனத்தைப் படித்தேன்… நன்றாக இருந்தது.. 😉 அடிக்கடி வரவும்
@ கார்த்திகேயன் – நண்பா.. மத்த படங்களுக்கு மெதுவா அப்பப்ப போடுறேன்.. இப்பவே, கிம் கி டுக்னா அங்கங்க
அலறல் சத்தம் கேட்குது 😉
அப்புறம், முப்பது மாடி இறங்கி வந்த எங்கள் சிங்கமே.. இன்றுமுதல், நீவிர் ‘மா(ட்)டிக்கொண்டான்’ என்று
அழைக்கப்படுவீர்கள் ! 😉
@ ஜெய் – ஆஹா… பேட் கய் பார்த்தாச்சா?? சூப்பர்…. அப்பப்ப அந்த மாதிரி படங்களை எழுதுறேன்.. தவறாம
பார்த்து, நைட்டு கனவுல ’நல்ல நல்ல’ விஷயமா வரட்டும் 😉
@ சி.பி. செந்தில்குமார் – //இந்த இயக்குனரின் ரசிகர் ஆகிவிட்ட நீங்கள் எங்களையும் உங்கள் பாடைக்கு அழைக்கிறீர்கள்//
அது பாதையா பாடையான்னு தெளிவு படுத்திருங்க பாஸ் 😉
@ வால்பையன் – //விமர்சனம் என்ற பெயரில் கதை சொல்வது சரியா!?//
அது வேற ஒண்ணுமில்லை.. கதை சொல்லாம விமரிசனம் எப்புடி பண்ணுறதுன்னு தெரியாமத்தான் இப்புடி போடுறேன் நண்பா.. அது மட்டுமில்லாமல், முழுக்கதையும் சொல்லல.. பாதில நிறுத்திபுட்டு, ஒரு இஃகு வெச்சிட்டேனே..
@ காதலரே – //கிம் கி டுக் என்றால், உங்கள் வரிகளில் ஒரு இதம் சொல்லாமல் வந்து உட்கார்ந்துவிடுகிறது//
அது வேறொன்றுமில்லை. கிம்மின் படங்களைப் பார்க்கையில், வாழ்வுக்கு மிக நெருக்கமாக நான் உணருவதனால் தான் அப்படி.. அவர் எனது ஆல் டைம் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவர்..
//இப்போதுதான் என் மனைவி என்னுடன் நீ பேசும் வார்த்தைகளை விரல்களில் எண்ணிவிடலாம் என்றார்//
ஆஹா… அங்கயுமா 😉 சேம் பின்ச் !! 😉
@ சூர்யா – அட என்ன இப்புடி சொல்லிட்டீங்க 😉
@ இலுமி – எங்கயோ ஆடு கூப்புட்டு வர்ர சத்தம் கேட்குதே 😉
I am looking for such type of informative news and i get through this blog so i am very much thankful to you for sharing such a great information.
– typo3 development
see this movie On this website
http://mymovieonline.blogspot.com/2011/07/3-iron-2004-bin-jip.html
for all கிம் கி டுக் movies – http://mymovieonline.blogspot.com/search/label/South%20Korea