மொத்தக் கதைகள் 36

by Karundhel Rajesh April 5, 2013   Cinema articles

Georges Polti என்று ஒரு ஃப்ரெஞ்ச் நபர் இருந்தார் (வழக்கப்படி இவரது பெயரை உச்சரிக்க தமிழில் வார்த்தைகள் இல்லை. Georges என்ற ஃப்ரெஞ்ச் பெயரை Zhorzh என்றுதான் உச்சரிக்க வேண்டும். அதாவது, உல்லாசமான மூடில் குரங்கு, அதன் வாயை ‘ஊ’ என்று வைத்துக்கொண்டிருக்குமே அதுபோல் வாயை வைத்துக்கொண்டு, நாக்கை மேலண்ணத்தைத் தொடும் அளவு லைட்டாக மடித்துக்கொண்டு (ஆனால் தொடாமல்) அங்கே இருக்கும் சைக்கிள் கேப்புக்குள் காற்றை பம்ப் செய்தால் ஒருமாதிரியான zzz சத்தம் வரும். உடனேயே இந்தப் பெயரை தம் கட்டி உச்சரிக்க வேண்டும்). அன்னார் ஒரு எழுத்தாளரும் கூட. தேமே என்று எழுதிக்கொண்டிராமல், திடீரென்று ஒரு நாள் அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. அவர் பிறந்தது 1867. பத்தொன்பதாம் நூற்றாண்டு. அப்போதே வெளிவந்த நாவல்கள், நாடகங்கள் எல்லாம் அவருக்கு பயங்கர அலுப்பாக இருந்திருந்தன போலும். ‘என்னடா இது.. எந்த புத்தகத்தைப் படித்தாலும், எந்த நாடகத்தைப் பார்த்தாலும் அவற்றில் பல, ஒரே போன்று இருக்கிறதே?’ என்று யோசிக்க ஆரம்பித்த போல்டி (இப்படியே அழைப்போம். zzz என்று ஆரம்பித்து நாக்கு மடங்கிவிட்டால் பிரச்னை), ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவின்படி க்ரீக், லாடின் மற்றும் ஃப்ரெஞ்ச் நாவல்கள் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றைப் படிக்க ஆரம்பித்தார். ஒரு சுபயோக சுபதினத்தில் (???!!) முடிந்தவரை படித்துமுடித்துவிட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே (1895) ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார்.

அந்தப் புத்தகம்தான் இன்றுவரை பல திரைக்கதை எழுத்தாளர்களை தெரிந்தோ தெரியாமலோ வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

அந்தப் புத்தகத்தில் முப்பத்தாறு ஒன் லைன்களை அவர் எழுதி, ஒவ்வொன்றையும் விவரித்து ஒவ்வொரு அத்தியாயம் எழுதியிருந்தார். அவரது கருத்துப்படி, உலகில் எந்த நாவல், எந்த நாடகமாக இருந்தாலும் சரி – இந்த முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் ஒன்றை வைத்துத்தான் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதியிருந்தாலும் அப்படியே. ஏனெனில், கணக்கிலடங்காத புத்தகங்களை அவர் படித்து வைத்திருந்தார். அவரிடம் யாராவது இதைப்பற்றி கிண்டல் செய்திருந்தால் புத்தகங்களாலேயே அடித்திருப்பார். எனவே அவரது புத்தகம் புகழடைந்தது. அவர் எழுதிய காலத்தில் சினிமா என்றால் ஏதோ லாலாக்கடை ஜிலேபி என்ற எண்ணமே மக்களிடையே மிகுந்திருந்ததால், நாடகங்கள் மற்றும் நாவல்களையே இந்த முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் பொருத்திப் பார்த்தனர். ஆனால் அதன்பின் திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தபின்னர் பார்த்தால், அவரது கணிப்பு ஏறத்தாழ சரியாகவே இருந்தது. திரைப்படங்களின் ஒன் லைனர்கள் இவரது முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் கச்சிதமாக வந்து பொருந்தின.

இப்படி யோசித்துப் பாருங்கள். ஆயிரமாயிரம் வருடங்களில் எழுதப்பட்ட எத்தனையோ கதைகளை போல்டி வெறும் முப்பத்தாறே ஒன் லைன்களுக்குள் கொண்டுவந்துவிட்டார். ‘இவ்வளவுதாய்யா இருக்கு. இதுக்குமேல எதையும் கண்டுபுடிக்க முடியாது. இதைவெச்சிதான் எழுதியாகணும்’ என்று தடாலடியாக அவரது புத்தகம் சொல்லியது. அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அவரது இந்தக் கணக்கைப் பற்றி போல்டியே பெருமிதமாகவும் நம்பிக்கையுடனும் இவ்வாறு எழுதியிருக்கிறார். அவரது புத்தகத்தில் காளிதாஸரைப் பற்றிய மேற்கோள் கூட இருக்கிறது. காளிதாஸரின் ‘சாகுந்தலம்’ என்ற நாடகத்தின் ஒன் லைன் பற்றி இவ்வாறு சொல்கிறார் போல்டி – ‘அம்னீஷியா’. அதாவது, நமது அன்பிற்குரியவர்களை அம்னீஷியாவின் மூலம் இழப்பது. இதுதான் சாகுந்தலத்தின் ஒன்லைன். அதேபோல் காளிதாஸரின் முதல் நாடகமான ‘மாளவிகாக்னிமித்ரம்’ என்பதையும் இப்படி ஒன்லைன் மேற்கோளாக கொடுக்கிறார் போல்டி. அது – ‘இரண்டு மனிதர்களின் விரோதம்’ (அக்னிமித்ரன் என்ற மன்னன், அவனது மனைவியின் பணிப்பெண்ணான மாளவிகா என்ற பெண்ணிடம் காதல் கொள்கிறான். கோபமடையும் அரசி, மாளவிகாவை சிறை வைக்கிறாள். இதன்பின் இறுதியில் மன்னன் மாளவிகாவை மணந்துகொள்கிறான். காரணம், மாளவிகா ராஜபரம்பரையைச் சேர்ந்தவள் என்று தெரிகிறது).

இப்படி எல்லா நாடகங்கள், நாவல்களின் கதைக்கருவையும் கட்டுடைத்தார் போல்டி. இவரது முப்பத்தாறு ஒன் லைன்களைப் படித்தாலே அவற்றில் ஒன்றையோ பலதையோ இணைத்து ஜாலியாக ஒரு திரைக்கதை எழுதிவிடலாம். அவைகளைப் படித்தபின் நீங்களும் இப்படித்தான் சொல்வீர்கள்.

போல்டியின் புத்தகத்தைப் படித்தபின் ஒன்று தோன்றியது. முப்பத்தாறு சிச்சுவேஷன்கள் என்று அவர் எழுதியிருப்பவையெல்லாமே, அந்தந்தப் புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றின் கரு. ஒன்லைன். கச்சிதமாக அவற்றைப் பிரித்தெடுத்து விவரித்திருக்கிறார் போல்டி. அந்தவகையில் திரைப்பட கதாசிரியர்களின் முன்னோடி இவர்தான். ஆனால் இவர் செய்தது ரிவர்ஸ் ப்ராசஸ்.

எனவே, இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்றால், போல்டியின் முப்பத்தாறு ஒன்லைன்களையும் ஒவ்வொன்றாக சுருக்கமாகப் பார்க்கப்போகிறோம். கூடவே, போல்டி செய்யாத ஒன்றாக, இவற்றுக்குத் திரைப்பட உதாரணங்களும் பார்க்கப்போகிறோம் (கவலைப்படேல். இது தொடரெல்லாம் இல்லை. ஓரிரண்டு கட்டுரைகளில் முப்பத்தாறு ஒன்லைன்களையும் பார்த்துமுடித்துவிடலாம்).

அடுத்த கட்டுரையில் இருந்து ஜாலியான இந்த ஒன்லைனர்களைப் பார்க்க ஆரம்பிக்கப்போகிறோம்.

தொடரும் . . .

பி.கு – இதைப்பற்றி எழுதச்சொல்லிய நண்பர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.

  Comments

13 Comments

  1. amir

    இதைப்பற்றி எழுதச்சொல்லிய நண்பர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.— நன்றி நன்றி நன்றி!!!

    Reply
  2. Anand

    Nice.. Waiting for it.. I remember even Cartoonist Madhan once told about this.. சீக்கிரம் சொல்லுங்க ஒன்னு ரெண்ட சுட்டு ஒரு நாவல் எழுத முடியுதா பார்கிறேன்.. 🙂 — . 🙂

    Reply
  3. Krishna VV

    முன்னுரை எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது.
    அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    Reply
  4. Godwin

    ஒன் லைனெர் எழுதுறது ரொம்ப சந்தோஷம்… கொஞ்சம் அப்படியே திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை கொஞ்சம் சீக்கிரம் முடியுங்கள் பாஸ்….

    Reply
  5. sekar

    waiting

    Reply
  6. சேக்காளி

    ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம்

    Reply
  7. Your previous post “Django unchained” suthama puriyala. but this post paravaala ragam.

    Reply
  8. siva

    Dear friends,
    மொபைல் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் டோர்றேன்ட்ல் டவுன்லோட் போடமுடியாது. எங்களுக்கும் வலைபூக்களில் விமர்சிக்கும் படங்களைப் பார்க்க ஆசை.ஆனால் in our town கடைகளில் கூட இந்த படங்கள் கிடைபதில்லை.டவுன்லோட் செயும் நண்பர்கள் என்னை போன்ற மொபைல் இன்டர்நெட் உபயோகிப்பாளர்களுக்கு தாங்கள் டவுன்லோட் செய்பவையை டி வி டிஇல் write செய்து உதவலாமே(டி வி டி மற்றும் கொரியர் கட்டணம் பெற்றுக்கொண்டு)

    Reply
  9. மனித புத்திரன்

    இம்மாத தயிர்மையில் எனது கவிதை இடம்பெற இடமில்லாததால் இங்கே வெளியிடுகிறேன்,
    *************************************************************
    இசுலாமியனுக்கு வூடு கெடக்கல
    எந்த மாதிரியான சிமண்டில் வூடு கட்டுகிறோம்?
    இசுலாமியனுக்கு பகோடா கிடைக்கல
    எந்த மாதிரியான எண்ணையில் பகோடா போடுகிறோம்?

    Reply
  10. மனித புத்திரன்

    ஓசியில் உண்ட கஞ்சி வேணும்னு கேக்குற?அப்படிதானே?ஏன் மாதம் ஆயிரம் ரூபாய் செலவு செய்து இன்டர்நெட் கனக்ஷன் வாங்க காசில்லையா?

    Reply
  11. srinivas

    wow i will waiting……..

    Reply
  12. manivasaagam

    waiting

    Reply

Join the conversation