80களின் தமிழ்ப்படங்கள் – 5 – நான் சிவப்பு மனிதனும் ரஜினியும்

by Karundhel Rajesh October 30, 2011   80s Tamil

பல ரஜினி துதிபாடி கட்டுரைகளைப்போல் இது அமையாது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ரஜினி என்கிற மனிதன் எனக்கு அறிமுகமாது எப்போது? அந்தத் தாக்கம் எப்படி என்னுள் இறங்கியது என்பதை எழுதுவதே நோக்கம்.

ஆண்டு. 1985. இந்த எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் வரிசையில், எனது தாய்மாமாவுக்கு ஒரு இசைத்தட்டு நூலகம் இருந்ததையும், அதனால் எண்பதுகளின் அத்தனை தமிழ்ப்படங்களின் பாடல்களையும் தவறாமல் கேட்டு வந்ததையும் முன்பே எழுதியிருக்கிறேன். LP என்கிற 33 1/2 RPM (Rotation per minute) இசைத்தட்டுகள் மிகப்பிரபலமாக இருந்த காலம் அது. இவை, க்ராமஃபோன்கள் அல்ல. அவற்றைவிடவும் வேகமாகச் சுழலக்கூடிய இசைத்தட்டுகள். வினைல் என்கிற பொருளால் செய்யப்பட்டவை. எண்பதுகளின் துவக்கத்தில் எனது மாமா ஆரம்பித்த இசைத்தட்டு நூலகம், கோவையில் மிகப்பிரபலமாக விளங்கியது. அதன் பெயர் – ‘ஸ்ரீராகம் இசைத்தட்டு நூலகம்’. அப்போதைய கோவையின் தெலுங்கு வீதியில், தங்கப்பட்டறைகள் ஏராளம். அந்தப்பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 60 அல்லது 90 நிமிட T Series அல்லது Sony கேஸட்டுகளில் தங்களுக்குப் பிடித்த தமிழ்ப்பாடல்களைப் பதிவு செய்வது வழக்கம். ஆகையால், எனது மாமாவின் தொழில் களைகட்டியது. எந்தத் தமிழ்ப்படமாக இருந்தாலும், அதன் இசைத்தட்டு எங்களுக்கு ஒரு வாரத்தினுள் வந்துவிடும். அந்த சமயத்தில், ஆடியோ கேஸட்டுகள் மிக மிக அரிது. ஆகவே, இந்த இசைத்தட்டுகளில் இருந்து புதிய கேஸட்டுகளில் நேயர்கள் விரும்பிய தமிழ்ப்பாடல்கள் பதிவுசெய்வது, அவரது வழக்கம். Sonodyne என்ற பிரபல நிறுவனத்தின் Amplifier மற்றும் sound system வைத்திருந்தார் அவர். எண்பதுகளின் துவக்கத்தில் Sonodyne வைத்திருந்த நபர்கள், தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றுமே அது ஒரு விலையுயர்ந்த பொருள் – இந்த இடத்தில் ஒரு துணுக்குச் செய்தி – அன்றைய காலத்தில், தமிழகத்தில், சிறந்த ஆடியோ சிஸ்டம் வைத்திருந்த பிரபலம் – MGR. உலகின் மிகச்சிறந்த ஆடியோ சிஸ்டங்கள் அவரிடம் இருந்தன (MGR விசிறிகள் பலருக்கு இது நினைவிருக்கலாம்).

இப்படியிருக்க, ‘நான் சிவப்பு மனிதன்’ என்ற படத்தின் இசைத்தட்டு, அந்தப் பெயரில் அமைந்திருந்த தமிழ்ப்படம் வெளிவருவதற்குச் சில வாரங்கள் முன்பு அவரிடம் வந்தது. அதன் அட்டையில், கறுப்பு ஜெர்கின் அணிந்து, கையில் ஒரு ரிவால்வர் வைத்திருந்த ரஜினிகாந்த் என்ற நடிகரின் உருவத்தை நான் பார்க்க நேர்ந்தது. அந்த ரிவால்வரின் அடிப்பகுதியில், ஒரு இரும்பு வளையமும் இருக்கும். அதுகூட நினைவிருக்கிறது.

அந்தப் புகைப்படம், கெத்தாக இருந்தது. ஆகையால், அப்படத்தின் வீடியோ கேஸட்டை, படம் வெளியான அடுத்த வருடம், என்னால் வரவழைக்க முடிந்தது. காரணம்? என் வீட்டில் நான் வைத்ததே சட்டம். ஆகையால், VCR என்று அழைக்கப்பட்ட சாதனத்தின் மூலம், அப்படத்தின் ஒரிஜினல் காஸெட்டை நாங்கள் பார்த்தோம். அப்போது, எனது ஏழு அல்லது எட்டாவது வயதில், நான் சிவப்பு மனிதன் என்ற படம், Death Wish என்ற Charles Bronson படத்தின் காப்பி என்பது எனக்குத் தெரியவில்லையாதலால், அப்படத்தை ரசித்துப் பார்த்தேன். படத்தின் தயாரிப்பாளர், A. poornachandrarao என்ற மனிதர். இயக்குநர், திருவாளர் எஸ்.ஏ. சந்திரசேகர். மருத்துவர் விசய்யின் தந்தை.

இந்தப் படத்தின் ‘எல்லோருமே திருடங்கதான்’ என்ற டைட்டில் பாடலில் நடித்திருப்பவர், விஜய்யின் மாமாவான சுரேந்தர். மோகனுக்குக் குரல் கொடுத்த அதே சுரேந்தர்தான். அந்தப் பாடலை, இங்கே காணலாம். இந்தப் படத்தில்தான் அவர் அறிமுகம் ஆனார். இந்தப் பாடலிலேயே, விஜய் நடித்திருப்பதைக் காணமுடியும். ஒரு பாரதி பாடல் எழுதிய தட்டியை வைத்துக்கொண்டு அவர் இரண்டுமுறை இடையில் வருவதைக் காணலாம்.

படத்தின் வில்லன்களில் ஒருவர், சத்யராஜ் (click to read).

படத்தின் கதையின்படி, கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருப்பவர், ரஜினிகாந்த். அவரது தங்கையை, திருட்டு கும்பல் ஒன்று கற்பழிக்கிறது. காரணம்? இந்த விரிவுரையாளர், அந்தத் திருட்டு கும்பலின் சட்டவிரோதமான காரியங்களைப் போலீஸில் போட்டுக்கொடுத்ததே. இந்த விரிவுரையாளருக்கு உதவிகரமாக இருப்பவர், அவரது தங்கையை மணமுடிக்கப் போகும் நிழல்கள் ரவி (சத்யராஜ் நடித்த ‘ஜீவா’ படத்திலும், நிழல்கள் ரவிக்கு இதே கதாபாத்திரம்).

விரிவுரையாளராக நடித்திருக்கும் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் நினைவிருக்கிறதா? அது, விஜய்! இயக்குநரின் புதல்வராக இருந்த ஒரே காரணத்தினால், அவரது பெயர், படத்தின் கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டது.

படத்தைப் பார்த்த மறுகணம், எனக்குப் பிடித்துப் போனது (இதைப்போல் பார்த்தவுடன் பிடித்த சில படங்கள்: ‘விக்ரம்’, ‘ஜீவா’, ‘ஜல்லிக்கட்டு’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’ ஆகியன).

அந்தப்படத்தில்தான் ரஜினி என்கிற நடிகர் எனக்கு அறிமுகமானார்.

நான் சிவப்பு மனிதனின் டைட்டில் பாடலுக்குப் பின்னர், எனக்கு இன்றுவரை மிகப்பிடித்த ஒரு பாடம், ‘வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று கண்ணீர் தூவும்’ என்ற பாடல். இப்போதும்கூட அப்பாடலைக்கேட்டால், செண்டிமெண்டுக்கு என்றுமே அடிபணியாத எனது மனம், உருகும். எனக்கு ஒரு தங்கை இல்லாதது கூடக் காரணமாக இருக்கலாம். ரஜினி பட்டையைக் கிளப்பி நடித்திருக்கும் அப்பாடல் இங்கே காணலாம்.

இதைப்போலவே, எனது ‘கருந்தேள் கண்ணாயிரம்’ என்ற இந்தத் தளத்தில், கருந்தேளின் கோபம் என்ற பிரிவில் நான் போட்டிருக்கும் சில வரிகள், ‘காந்திதேசமே காவலில்லையா’ என்ற நான் சிகப்பு மனிதனின் பாடலிலிருக்கும் இரண்டாவது சரணத்தின் வரிகள்தான்.இந்தியாவின் தற்போதைய நிலையைத் தோலுரித்துக் காட்டும் பாடல். அதை இங்கே காணலாம்.

இதோ அந்தப் பாடல் வரிகள்.

இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள் எல்லையில் நிறைந்திருப்பார்..
நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர் ஊருக்குள் ஒளிந்திருப்பார்..
அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா ..
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல் வான்வரை ஏறுதடா..
விடுதலை வாங்க அன்று நாம் தந்த விலைகள் தான் கொஞ்சமா ..
வேலியே இன்று பயிரை மேய்கின்ற நிலைமைதான் மாறுமா !

மாவீரன் என்ற படம், கமலின் ‘விக்ரம்’ (click to read) படத்துடன் 1986ன் தீபாவளிக்கு வந்திருந்தபோது,கோவை லக்‌ஷ்மி தியேட்டரில் அதைப்பார்ப்பதற்காகப் பெற்றோருடன் சண்டையிட்டது நினைவிருக்கிறது (மாவீரனுமே, அமிதாப் பச்சன் நடித்த ‘மர்த்’ – Mard என்ற படத்தின் ரீமேக் என்பது கல்லூரியில் படிக்கையில்தான் எனக்குப் புரிந்தது).

ரஜினியை ஏழு வயதிலேயே எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது எதனால்?

எனக்குத் தோன்றும் காரணம், அக்காலத்திய தமிழ்ப்பட ஹீரோக்கள் போல, ரஜினி கர்லிங் கிராப் வைக்காதது. கமல் உட்பட, எண்பதுகளின் அத்தனை ஹீரோக்களும், கர்லிங் க்ராப் வைத்திருந்தது நன்றாக நினைவிருக்கிறது (ஆனந்த்பாபு, மோகன், கமல்ஹாஸன், ராஜீவ், வாகை சந்திரசேகர் (இவர், கர்லிங் கிராப்பின் முன்னோடி), சுரேஷ் ஆகிய அத்தனை ஹீரோக்களும்). இது தவிர, இருபத்தோராம் நூற்றாண்டில் கூட, கர்லிங் கிராப் வைத்து, அதை வீடியோவில் demonstrate செய்து காண்பித்த நபர், சந்தனக்கடத்தல் வீரப்பன்.

இதுதவிர, ரஜினியின் கேஷுவலான நடிப்பு, வேகமான மூவ்மெண்ட்டுகள் இத்யாதி. ஆகவே, அவரைப் பிடிக்க ஆரம்பித்தது, மிகவும் இயற்கையானதே என்று தோன்றுகிறது.

‘மாப்பிள்ளை’ படத்தை, எங்கள் தெலுங்கு வீதியிலேயே, Solidaire கலர் டிவி வைத்திருந்த ஒரே காரணத்தால், அக்கம்பக்கத்தார் எங்கள் வீட்டில் ஞாயிறு மாலை தூர்தர்ஷன் படம் பார்க்க வந்திருந்தபோது திரையிட்டது நன்றாக நினைவிருக்கிறது.

’கொடி பறக்குது’ படத்தையும் மறக்க முடியாது. அப்படம் வரையிலும் ஒரு பக்கமாக வகிடு எடுத்து சீவியிருந்த ரஜினி, அப்படத்திலிருந்து நடு வகிடு எடுத்த hairstyle வைத்தார். பாரதிராஜாவின் அப்படத்தில் வில்லனாக நடித்தவர், மணிவண்ணன். அவருக்குப் பின்னணிக் குரல் அளித்தவர், சாட்சாத் பாரதிராஜா. அடுத்து வந்தது, தர்மத்தின் தலைவன் (இதுவும், அமிதாப்பின் kasme vaade படத்தின் ரீமேக்).

அதன்பின் ‘குரு சிஷ்யன்’ வெளிவந்தது. அதில், சற்றே கட்டை மீசை வைத்திருந்த ரஜினியைப் பார்க்க முடிந்தது.

அதிலிருந்து, ரஜினி திரும்பிப் பார்க்கவே இல்லை. படுவேகமான வளர்ச்சி அவருடையது. இத்தொடர் எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் என்பதால், தொண்ணூறுகளில், ரசிகனைச் சொறிந்துகொடுத்து முன்னேறிய ரஜினியைப் பற்றிச் சொல்லமுடியவில்லை (’அரசியலுக்கு வருகிறேன்’ லொட்டு லொசுக்கு).

கடைசியாக நான் VCRல் பார்த்த ரஜினி படம், நாட்டுக்கொரு நல்லவன்’. சத்தியமாக, அதைப்பார்த்ததும் நொந்துபோனேன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு, மூன்றிலும் படுதோல்வி அடைந்த ரஜினி படம். எனக்குத் தெரிந்து, தமிழில் இதற்குமுன்னர் கொடும்தோல்வியடைந்த ரஜினி படம், ‘கர்ஜனை’ என்ற படம். தமிழகத்தின் திரையரங்குகளில், ஒரே வாரம் மட்டும் ஓடிய பெருமையுடையது. நாட்டுக்கொரு நல்லவனில், குஷ்புவுக்கு சண்டையிடக் கற்றுத்தரும் ரஜினியை நன்றாக நினைவிருக்கிறது (ஆங்கிலப் பாடல் ஒன்றுவேறு அவர் பாடுவார். ‘fight like a bull’ என்று வரும்).

நான் சிவப்பு மனிதன் – இன்றுவரை எனக்கு மிகப்பிடித்த ஒரே ரஜினி படம். கூடவே, தளபதி மற்றும் நினைத்தாலே இனிக்கும் படங்களில் ஒரு சில காட்சிகள்.

எண்பதுகளில், கமல்ஹாஸனுக்குப் போட்டியாக, ரஜினியின் படங்கள் வெளிவரும். 1986ல், மாவீரன் மற்றும் விக்ரம் – ஒரு உதாரணம். இரண்டுமே சரியாகப் போகவில்லை. அதேபோல், தொண்ணூறுகளில், 1992ல் பாண்டியன் மற்றும் தேவர்மகன். இதில், தேவர்மகன் சக்கைப்போடு போட்டது. பாண்டியன், ஃப்ளாப் ஆனது. தளபதிக்கு அடுத்த படம் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் சிவப்பு மனிதன் படத்தின் இசைத்தட்டு போஸ்டரில், இடுப்பு பெல்ட்டில் சிறிய பூட்டைப் பிணைத்துக்கொண்டிருக்கும் ரஜினி மற்றும் பாக்யராஜைப் பார்க்கலாம். எனது நண்பர் ஒருவரிடம், நான்கு வருடங்கள் முன்னர், இந்த எண்பதுகளின் தமிழ்ப்படங்களின் இசைத்தட்டு போஸ்டர்களை scan செய்வதற்காகக் கொடுத்திருக்கிறேன். அவரிடம் அவை இன்னமும் பத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன். கூடிய சீக்கிரமே, அப்படங்களை வாங்கி, இங்கே பதியவேண்டும்.

கூடியவிரைவில், வேறொரு படத்துடன் சந்திப்போம்..

  Comments

22 Comments

  1. வட …
    தேளு .. தில்லு முள்ளு …

    Reply
  2. ராஜ்,

    இந்த பதிவு என்னுள் எத்தனையோ எண்ண ஓட்டங்களை ஏற்படுத்துகின்றது .

    நாம் இருவரும் பிறந்த வருடம் ஒன்றே , எனினும் என் தமிழ் திரை மலரும் நினைவுகளை இத்தனை காலம் பின்னோக்கி எடுத்து செல்ல முடியவில்லை.

    நான் பார்த்து ரசித்த எண்பதுகளின் படங்கள் பல ( பூவே பூச்சூடவா, முதல் மரியாதை ) பின்பு பார்த்தவை தான்.

    காலம் ஒவ்வொருவருக்கும் எப்படி வேறுபடுகின்றது ?

    திரை படங்களை எப்படி உங்கள் அப்பா பார்க்க அனுமதித்தார் மழலை பருவத்தில் ?

    please dont say, he took you to all these movies first day first show…. kidding…

    Reply
  3. அருமையான பதிவு தல. நான் இசைத்தட்டுகளை எல்லாம் பார்த்ததே இல்லை. கேசட்டுகள். அவைகளின் புகைப்படங்கள் இருந்தால் வெளியிடுங்கள்.

    நான் சிகப்பு மனிதன் படத்தில் நான் இரசித்த காட்சிகள் பாக்யராஜ் வரும் காட்சிகள். மிக இயல்பாக பல விஷயங்களை செய்துவிட்டு செல்வார். அதுவும் அவரது நகைச்சுவை உணர்வு படத்தை மிக சீரியஸாக இருப்பதை தவிர்த்தது.

    80-களின் படங்கள் பற்றி எழுதுகிறீர்கள்… பாக்யராஜ் அவர்களின் படங்கள் பற்றி கண்டிப்பாக எழுத வேண்டுமென கேட்டு கொள்கிறேன். 🙂

    Reply
  4. superuuuuuuuuuu..:கொடி பறக்குது’ படத்தையும் மறக்க முடியாது. அப்படம் வரையிலும் ஒரு பக்கமாக வகிடு எடுத்து சீவியிருந்த ரஜினி, அப்படத்திலிருந்து நடு வகிடு எடுத்த hairstyle வைத்தார்”..idha mattum naa othuka mudiyathu…rajini pudhu hairstyle ku maarnadhu guru shishyan la irundhu thaan..velaikaran padathula irundhe konkam hairstyle marra arambichudhu..guru shishyan ku appram thaan kodi parakuthu vandhuchu

    Reply
  5. நல்ல பதிவு நண்பா. நீங்கள் இந்தத் தொடரை மறந்துவிட்டீர்களோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படியே சடசடன்னு அடுத்தடுத்த பகுதிகளையும் எழுதுங்கள் நண்பா.

    Reply
  6. // இந்தப் பாடலிலேயே, விஜய் நடித்திருப்பதைக் காணமுடியும். ஒரு பாரதி பாடல் எழுதிய தட்டியை வைத்துக்கொண்டு அவர் இரண்டுமுறை இடையில் வருவதைக் காணலாம். //

    விசய் கூட இது மறந்திருக்கும்…………….

    Reply
  7. என் வாழ்கையில எந்தவொரு நடிகரின் படத்தையும் எடுத்து – சேகரிச்சு வெச்சதுலாம் கிடையாது………ரஜினி படத்த தவிர……..நாலாப்பு படிக்கும் போது – ஸ்டிக்கர் கெடச்சுது..அத ஒட்டி வச்சதோட சரி……..

    தவிர,சின்ன வயசுல கமல் என்றால் – கெட்ட ஆளு என்ற எண்ணம் இருந்துச்சு………..சமயம் புரியாம ஒதட்ட புடிச்சு கடிச்சு வெச்சிருவாரு – மகாநதி சுகன்யா மாதிரி – என்ற பிம்பம் இருந்ததனால் வந்ததாக இருக்கலாம்….

    பின்னாலே…….கமல் படங்கள பாக்குறதும், de-construct(?) செய்யுறவன் தான் மேதாவி என்ற எண்ணம் வளர்ந்த காலமும் உண்டு………

    அற்புதமான நினைவுகளை மீள்கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி…

    // எனது தாய்மாமாவுக்கு ஒரு இசைத்தட்டு நூலகம் இருந்ததையும், அதனால் எண்பதுகளின் அத்தனை தமிழ்ப்படங்களின் பாடல்களையும் தவறாமல் கேட்டு வந்ததையும் முன்பே எழுதியிருக்கிறேன் //

    எல்லி இதே ?????

    Reply
  8. எனக்கும் பாக்யராஜ் வரும் காட்சிகள் ரொம்ப பிடிக்கும். அவர் வந்த பிறகு படம் இன்னும் சுவாரசியமாகி விடும். இதேபோல் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் இருவரும் இணைந்து கொஞ்ச நேரம் வருவார்கள்!

    Reply
  9. படத்துல எப்பவுமே எனக்கு பிடிச்சது பாக்கியராஜ் வர்ற காட்சிகள் தான்…..

    எண்பதுகள்-ல இன்னொரு முக்கியமான ரஜினி படம் நெற்றிக்கண்…..செம படம்…ரஜினிக்கு சொல்லிக்கிற மாதிரி படத்துல இது முக்கியமான படம்…

    கர்ஜனை படம் செம மொக்கை…ஆனா அந்த படத்தோட கதையத்தான் ஈ அப்படீனு ரீமேக்கினாய்ங்க….
    ஆனா அந்த படத்துல ரெண்டு டக்கர் பாட்டு இருக்கும்…அதோட ராஜா பின்னணியில செம ட்ரீட் குடுத்து இருப்பாரு….மொக்கை படத்துலயும் அந்தாளு தனியா எகிறிடுராரு…

    கேளுங்க..

    http://youtu.be/4ps-8Zjb-iM

    http://youtu.be/G8m_seFYS8c

    Reply
  10. எங்கோ படித்தது : நான் சிகப்பு மனிதன் மம்முட்டி நடித்து மலையாளத்திலும் வெளிவந்தது. நா.சி.ம.தயாரிப்பாளர் தன்படத்தை முறையாக காப்பி ரைட்ஸ் வாங்காமல் மலையாளத்தில் எடுக்கப்பட்டது என முறையிட, மலையாள இயக்குனர் அவரை அழைத்து அது சுடப்பட்ட ஒரிஜீனல் ஆங்கிலத்தை படத்தை போட்டு காண்பித்தாராம். பார்ட்டி முடிட்டு போய்ட்டாராம். :))

    என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ரஜீனி படம் தளபதி… அந்த மாதிரி ஒரு படத்தை ரஜீனி அதுக்கப்புறம் கொடுக்கவே இல்ல…. அவரை பொன்முட்டையிடும் வாத்தாகவே தயாரிப்பாளர்கள் பார்க்கிறார்கள். அவருக்குள் இருக்கும் நடிகனை நான் பார்த்தது தளபதியில்தான்.

    ஒரு காட்சி: பானுப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தவுடன் மம்முட்டியுன் குழந்தையை பார்க்கச்செல்வார். தான் கொன்றவனின் குழந்தை என தெரிந்தவுடன் பானுப்பிரியா ரஜீனியை பார்க்கும்போது தன்குற்ற உணர்ச்சியை முகத்தில் கொண்டுவருவார்….க்ளாசிக்…:))

    Reply
  11. The Original English movie is Death Wish.

    Reply
  12. @ மின்மினி – எனக்கு இந்த விஷயங்கள் பளிச்சென்று நினைவிருப்பதற்கு ஒரே காரணம் -சிறுவயதிலிருந்தே சினிமா ரொம்பப் பிடித்த காரணம்தான். இன்னொன்று – நான் வளர்ந்த சூழல். இசைத்தட்டு நூலகத்தில் இருபத்திநான்கு மணிநேரமும் இருந்தேன். பல வருடங்கள். ஆகவே, இப்போதும் பல பாடல்களும் படங்களும் நன்றாக நினைவிருக்கின்றன. கூடவே, அந்தக்கால விகடன், குமுதம், கல்கி, சாவி ஆகிய பத்திரிக்கைகள் 🙂 . . எங்கப்பா அப்பவே வீசீஆர் ரெடி பண்ணி, கேசட்டுகளை ரெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாரு 🙂 . அதுவும், அவரு பல ஆங்கிலப்படங்களுக்கு என்னை அழைத்துப்போனதும் மற்ற காரணங்கள் 🙂

    @ kanaguonline – இசைத்தட்டுகளைப் பத்தி தனியா ஒரு போஸ்ட் போடுவதாக உத்தேசம் :-). நீங்க சொன்னமாதிரி, பாக்யராஜை மறக்கவே முடியாது. அதுனால, அவரைப்பற்றியும் சீக்கிரமே போஸ்ட் போட்ரலாம் 🙂

    @ balu – உண்மைதான். ஒத்துக்குறேன். குறு சிஷ்யன்தான் ரஜினி மொதல்ல ஹேர்ஸ்டைல் மாதத்தின படம். ஒரு ஃப்ளோல மாத்தி எழுத்திட்டேன். அதைத் திருத்திடுறேன் 🙂

    @ செ.சரவணக்குமார் – 🙂 இந்தத் தொடரை எழுத ஒரு ஸ்பெஷல் மூடு தேவைப்படும் நண்பா. அப்பப்ப பழைய பாடல்களை டிவிடியில் பார்க்கும்போது மட்டுமே அது வரும். அந்தச் சமயங்களில் எல்லாம் அதனை எழுதிவிடுகிறேன். சீக்கிரமே இன்னொரு பகுதி வரும் 🙂

    @ கொழந்த – இன்னும் இருக்கு அந்த நூலகம். ஆனா இப்ப ரொம்ப சின்னதா ஆயிருச்சி. காலத்தின் சுழற்சி அப்புடி. ஆனா இன்னமும் அவராண்ட பல இசைத்தட்டுகள் இருக்கு.

    @ எஸ்.கே – எஸ். பாக்யராஜ் வந்தப்புறம், படம் ஜாலியாயிரும். அன்புள்ள ரஜினிகாந்த் – கடவுள் உள்ளமே பாடலும், ரஜினி – பாக்யராஜ் காட்சிகளும் மறக்க முடியாதவை 🙂

    @ யோஜிம்போ – நெற்றிக்கண் – நம்ம கோவிலையே எடுத்த படமாச்சே. என்னால மறக்க முடியாத படம். கர்ஜனை பாடல்கள் பத்தின லிங்க்குக்கு மனமார்ந்த நன்றிகள் 🙂 .

    @ கீதப்ரியன் – மிக்க நன்றி நண்பா

    @ நாஞ்சில் பிரதாப் – //எங்கோ படித்தது : நான் சிகப்பு மனிதன் மம்முட்டி நடித்து மலையாளத்திலும் வெளிவந்தது. நா.சி.ம.தயாரிப்பாளர் தன்படத்தை முறையாக காப்பி ரைட்ஸ் வாங்காமல் மலையாளத்தில் எடுக்கப்பட்டது என முறையிட, மலையாள இயக்குனர் அவரை அழைத்து அது சுடப்பட்ட ஒரிஜீனல் ஆங்கிலத்தை படத்தை போட்டு காண்பித்தாராம். பார்ட்டி முடிட்டு போய்ட்டாராம். :))// – அதை எங்கயும் படிக்கல. கொஞ்ச நாள் முன்னால மீடியா வாய்ஸ்ல காப்பிகள் பத்தின கட்டுரைல அது இருந்தது 🙂 ..

    தளபதி – எஸ். ரஜினி அதுல கம்பீரமாவும், அழகாவும் இருப்பாரு. மறக்கவே முடியாத படம் 🙂

    @ seetheavatar – ஆமாங்க. அதையும் என்னோட கட்டுரைலயே போட்ருக்கேன் பாருங்க.

    Reply
  13. Hello karundhel, you have to see mullum malarum, 6 to sixty, Johnny for Rajinikanth acting.

    Reply
  14. மாவீரனுடன் மோதியது விக்ரம் அல்ல….புன்னகை மன்னன்…கமலின் புன்னகை மன்னனே ரேசில் வெற்றிபடமும் கூட…

    //கமல் உட்பட, எண்பதுகளின் அத்தனை ஹீரோக்களும், கர்லிங் க்ராப் வைத்திருந்தது நன்றாக நினைவிருக்கிறது (ஆனந்த்பாபு, மோகன், கமல்ஹாஸன், ராஜீவ், வாகை சந்திரசேகர் (இவர், கர்லிங் கிராப்பின் முன்னோடி), சுரேஷ் ஆகிய அத்தனை ஹீரோக்களும்).//

    கமலே கர்லிங் கிராப்பின் முன்னோடி…அவர் மன்மதலீலை (1976) படத்திலிருந்தே வைத்திருக்கிறார்…நீளமான மீசை கூட…

    Reply
  15. Guru Sishyan kooda oru hindi padathoda remake than Dharmendra jeetendra – rajini- prabhu role but guru sishyan appadi nnu kedayathu yenna rendu perum periya heroes
    padam peru – Jaan hatheli pe appadinnu ninaikaren

    Reply
  16. அடக்கடவுளே… உங்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா வியாதி இருப்பது இப்போதான் தெரிய வருகிறது. ஒவ்வொரு வரியிலும் இருக்கும் அபத்தங்களை சொல்ல ஆரம்பித்தால் மண்டை காய்ந்துவிடும்.. ஸ்ஸஸ.. செம கடி

    Reply
  17. ராம்கி – ஓ அப்புடிங்களா? எங்க ஏதாவது ஒரு அபத்தத்தை முடிஞ்சா சொல்லுங்க பார்ப்போம். சில பேரு ஏர்வாடில இருந்து ஸ்ட்ரெய்ட்டா இங்க கமெண்டு போடுறாங்களாமே… பேரு கூட ஏதோ ராம்கியாம்ல… 🙂 ..

    Reply
  18. விக்ரம் என்ற படத்தோடு புன்னகை மன்னனும் கூடவே வந்து மாவீரனோடு போட்டி போட்டதாம். அப்போ விஜயகாந்து கூட கேப்டன் பிரபாகரன் ஒரு படத்துல நடிக்க அட்வான்ஸ் வாங்கியருந்தாராம். தளபதிக்கு முன்னால் வெளிவந்த படம்தான் பாட்ஷா, அதில் சத்யராஜ் அசத்தியிருப்பார். மாப்பிள்ளை படத்தை வந்த ஒரே மாதத்தில் டிவியில் போட்டார்கள். அன்று எங்கள் வீட்டு ரிமோட்டில் ஏதோ ஒரு பிரச்னை, டிவி மெக்கானிக் வர லேட்டாகும் என்று வேறு எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார், அதனால் பார்க்கமுடியவில்லை, கொடி பறக்குது என்னும் படம் பதினாறு வயதினிலே வரும்போதே வந்திருக்க வேண்டிய படம், கமல் முடியாது என்று சொன்னதால் முடியவில்லை, இங்கே முடியாது என்பது படம் மட்டுமே. கடைசியாக நான் டிவிடியில் ரசித்து நொந்துபோன படம் பணக்கார குடும்பம்., சிவாஜி நடிப்பில் பின்னியிருப்பார். தளபதிக்கு அடுத்ததாக வந்த படம் பாண்டியன், பாண்டியனுக்கு அப்புறம் வந்ததுதான் இந்த நான் சிகப்பு மனிதன். அது வெளியான நான்கே மாதத்தில் அண்ணாமலை வந்தது, அதைத் தொடர்ந்து தளபதி. இப்போ தெளிவா புரிஞ்சிருக்குமே! கூடிய விரைவில் சந்திக்கலாம், இப்போ கொஞ்சம் மயக்கமா இருக்கு. கோயிஞ்சாமி ப்ரம் ஏர்வாடி

    Reply

Join the conversation