எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – ஆச்சரியம்! – 1

by Karundhel Rajesh June 10, 2010   80s Tamil

தமிழ்ப்படங்களைப் பற்றி இந்தத் தளத்தில் மிக அபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். காரணம் – சலிப்பு. ’என்ன கொடும இது’ என்ற உணர்வு மேலோங்கியதே காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் – சிங்கம். ஆரம்பித்த 43ம் நிமிடம் தியேட்டரை விட்டு வெளியே குடும்பத்துடன் வெளியேறினேன். எங்கள் எவருக்குமே படம் துளிக்கூட பிடிக்கவில்லை. ஹரி இந்த ரேஞ்சிலேயே படம் எடுத்தால், அடுத்த ராமநாராயணன் ஆகும் காலம் விரைவில் வந்துவிடும். யோவ் – ஏய்ய்யா இப்புடி ஒரு படத்த எடுத்த . . கருமமய்யா . . சத்தியமாக இந்தப் படம் எங்கள் யாருக்குமே பிடிக்கவில்லை. இந்தப் படத்தைப் பற்றி விமரிசனம் எழுதவேண்டும் என்றால், இட்லிவடை, கனகவேல் காக்க என்ற படத்தைப் பற்றி எழுதிய விமரிசனத்தைத் தான் இங்கே கொடுக்க வேண்டும் – அது – நபநப.. ஒரே வார்த்தை. இதற்கு அர்த்தம் – ‘நல்ல பதிவு – நன்றி பத்ரி’. இதற்கும் அருஞ்சொற்பொருள் வேண்டுமென்றால், எழுத்தாளர் பா. ராகவனது வலைத்தளம் பார்க்கவும். படு கிண்டலான ஒரு சொற்றொடர் இது.

இப்படி இருக்கையில், இன்று ஒரு டிவிடி கிடைத்தது. அதன் பெயர் – ‘இளையராஜா இசை சங்கமம்’. இது, ஐங்கரன் வெளியீடு. ஆண்டு – 2007. கேட்லாக் எண் – WRDVD – 279. அதில் மொத்தம் 43 பாடல்கள். முக்கால்வாசி எண்பதுகளில் வெளிவந்த படங்கள். முழுமையாக இன்று கேட்டேன். உடனே, நாஸ்டால்ஜியா போட்டுத் தாக்கியது. கேட்ட ‘மூடு’ வேறு அப்படி… உடனே என்னால் இப்பதிவை எழுதாமல் இருக்க இயலவில்லை. எனவே, இதோ . . . . . .. எண்பதுகளின் படங்களோ இசையோ பிடிக்காதவர்கள் உடனடியாக வெளியேறலாம்.

ரைட்டு. எண்பதுகள். எனது பள்ளி நாட்கள். நான் எல்.கே.ஜி சேர்ந்தது எனது மூன்றரையாவது வயதில். அதாகப்பட்டது ஆண்டு 1982வின் நடுப்பகுதி. மிகச்சரியாக அடுத்த ஓராண்டில் கபில்தேவ் உலகக்கோப்பை வென்றார். அதை விட்டுத் தள்ளுங்கள்.

எண்பத்தி இரண்டின் நடுப்பகுதியில் பள்ளி சேர்ந்தேனா.. எனது தாய்மாமன் நிர். இரண்டு – ஒரு இசைத்தட்டு நூலகம் வைத்திருந்தார் (அது இன்றும் உண்டு). இதன் மூலம், எந்தப் படம் வெளிவந்தாலும், அதன் இசைத்தட்டு (பெரிய வினைல் ரெக்கார்டு… கிராமஃபோன் இசைத்தட்டு போல் இருக்கும்.. 33 1/3 R.P.M அதாவது முப்பத்தி மூன்றரை ரொட்டேஷன் பெர் மினிட் என்ற விகிதத்தில் சுற்றினால், இசை ஒரு ஆம்ப்ளிஃபையர் மூலம் வெளியேறும்.. ஆடியோ காஸெட்டுகளின் முன்னோடி) வெளிவந்துவிடும். ஆடியோ காஸெட்டுகள், எண்பதுகளில் மிகப்பெரிய விஷயம். எனவே, இந்த இசைத்தட்டு நூலகங்களின் மூலம், இசைத்தட்டுகளில் இருந்து காஸெட்டுகளில் பதிவு செய்து கொள்வர் – ஸிக்ஸ்ட்டி மற்றும் நைண்ட்டி என்ற இரு காஸெட்டு வடிவங்கள் அன்று இருந்தன.. ஸிக்ஸ்ட்டி என்றால், ஒரு மணி நேரம்.. ஸிக்ஸ்ட்டி நிமிடங்கள். நைண்ட்டி – ஒன்றரை மணி நேரங்கள். இப்படிப் பட்ட கேஸெட்டுகளில் அந்நாட்களில் முதலிடம் வகித்தது டி- ஸீரீஸ். மிகத் தரமான ஒலிநாடாக்களை வெளியிட்டு, சாதனை படைத்தது இதன் சாதனை.

.எனவே, நேச்சுரலாக, எண்பதுகளின் நடுவில் இருந்து, தொண்ணூறுகளின் நடுப்பகுதிவரை, இந்த இசையின் நடுவேயே வாழ்ந்தேன். எந்தப் பாடலைக் கேட்டாலும், அப்படத்தை என்னால் சொல்ல முடியும். மட்டுமல்லாமல், அதைப் பாடியவர், இசையமைப்பாளர், படம் போன்ற அத்தனைத் தகவல்களையும் மிக இயற்கையாகப் பெற்றுக் கொண்டேன் – இந்த இசைத்தட்டுகளின் மூலம். இந்த இசைத்தட்டுகளின் பின்புறம், அத்தனைத் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் எனக்குப் பிடித்த இசைத்தட்டுகளின் அத்தனை உறைகளையும், அந்த மாமாவிடம் இருந்து பெற்று, ஒரு நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தேன் (நான்கு ஆண்டுகள் முன் – அவைகளை ஸ்கேன் செய்யும் பொருட்டு.. இன்னமும் அவரிடம் அவை இருக்கும் என்று நம்புகிறேன்.. இம்முறை கோவை செல்லும்போது அவரைப் பார்க்க வேண்டும்.. பார்த்து மிக நீண்ட நாட்கள் ஆயிற்று).

இப்படி நான் கேட்டு இன்புற்ற இசைத்தட்டுகள் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் இருக்கும். இது மட்டுமல்லாமல், வரும் கஸ்டமர்களிடம், அவர்களது விருப்பமான பாடல்கள் அடங்கிய பட்டியலை வாங்கி, அதனைப் பதிவு செய்யும் திறனையும் பெற்றிருந்தேன்( கிட்டத்தட்ட மாமாவின் அப்ரசந்தி மாதிரி – இவையெல்லாமே எனது பள்ளி நாட்களில்).

அந்த இசைத்தட்டுகளில் சில: ABBA, MAN MACHINE, THRILLER, United Artists: Great Western Themes (இதில் பட்டையைக் கிளப்பும் என்னியோ மாரிக்கோனின் பல இசைக்கோர்ப்புகள் உண்டு), OSIBISA, BONEY M, BEATLES போன்ற பல ஆங்கில இசைக்கோர்ப்புகள் அடங்கும். மட்டுமல்லாது, பல ஹிந்தி ஆல்பங்களும் உண்டு – QURBANI, ARADHANA, TARZAAN, HERO, EK DUJE KELIYE, YAADON KI BAARAAT, KARZ, MUQADDAR KA SIKANDAR, AAKRI RASTAA (ஒரு கைதியின் டைரி – ஹிந்தியில் பாக்யராஜ் இயக்கிய முதல் படம் – சூப்பர் ஹிட்) போன்ற இன்னமும் நினைவுக்கு வராத படங்கள் ஏராளம்.

சரி. தமிழில் என்னய்யா கேட்டே என்பவர்களுக்கு – இதோ லிஸ்ட்.

ராஜபார்வை, நினைத்தாலே இனிக்கும் (MSV), எல்லாம் இன்பமயம், கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், மிஸ்டர் பாரத், நான் சிகப்பு மனிதன் (ரஜினி நடித்து எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பிடித்த படம்.. இன்றும் – இதன் இசைத்தட்டின் பின்னட்டையில், ரஜினியும் பாக்யராஜும் தோளோடு தோள் சேர்ந்திருக்கும் மிக அழகான கறுப்பு வெள்ளைப் படம் இடம்பெற்றிருக்கும் – இப்படத்தில், ரயிலில் ராபின்ஹூட்டாகப் பயணிக்கும்போது, பேப்பர் படிப்பார் ரஜினி. அப்போது, ஒரே ஷாட்டில், மிக அனாயாசமாக, ஒரு பக்கத்தை விரிக்கும்போதே, வாயில் உள்ள சிகரெட்டை உள்ளங்கையில் ஒரே கையில் இருக்கும் தீக்குச்சியை உரசுவதன் மூலம் பற்ற வைப்பார்.. இது ‘ஸ்டைல்’ என்று அவர் செய்யும் வகையில் சேராது.. அது மிக சீரியஸான ஒரு ஸீன்.. அந்த ஷாட், மூன்று நொடிகளே வரும்.. மிக மிக சாதாரணமான ஒரு ஷாட். அது இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் – ‘ராபின்ஹூட், பேப்பர் படிக்கிறான். ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்தை விரிக்கிறான்’. அந்தக் காட்சியில் கூட இப்படி ஒரு பட்டையைக் கிளப்பும் விஷயம் – . இதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று அன்று புரிந்து கொண்டேன் – ஆனால் இதே போல் ஒரு ஷாட், Good bad and the uglyயில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் செய்ததைக் கவனித்திருக்கிறேன்., அந்த ஷாட்டின் அட்டக்காப்பிதான் நான் சிகப்பு மனிதனில் வரும் ஷாட்), உன் கண்ணில் நீர் வழிந்தால் (பாலு மஹேந்திரா – ரஜினி கூட்டணியில் வெளிவந்த ஒரு நல்ல – ஆனால் ஃப்ளாப் திரைப்படம்). சலங்கை ஒலி, வாழ்வே மாயம் (இசை: கங்கை அமரன்), சத்யா, நல்லவனுக்கு நல்லவன், முரட்டுக்காளை, கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன் (ராதே என் ராதே – மறக்க முடியாத பாடல் – அப்பாடலைப் பாடியவரின் பெயரும் ராஜேஷ் தான்.. மனோவின் குரலை நினைவு படுத்தும் ஒரு குரல்), ஊமை விழிகள் (மனோஜ் கியான் – இந்த மனோஜ் தான் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில், என்றென்றும் காதல் என்ற படுமொக்கையான விஜய் படத்தை இயக்கியவர்), முள்ளும் மலரும் (இத்தலைப்பில் இருக்கும் கவிதையை மிக நீண்ட காலத்துக்குப் பின் தான் கவனிக்க ஆரம்பித்தேன்), வேலைக்காரன், படிக்காதவன், மாவீரன், நாயகன்…….ஆஹா… லிஸ்ட் கண்டின்யூஸ்..

இது மட்டுமல்லாது, ஏழாவது மனிதன் (எல். சுப்ரமண்யம் இசை – ரகுவரனின் முதல் படம் – ஹரிஹரன் இயக்கம் – இதில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் பாரதியார் பாடல்கள் – காக்கைச் சிறகினிலே நந்தலாலா – யேசுதாஸ் – நினைவிருக்கிறதா?).

இப்படிப்பட்ட இசையின் நடுவே நான் முழுகியதாலோ என்னவோ, எந்தப் பாடல் கேட்டாலும் அதன் புள்ளி விபரங்களைக் கடகடவென்று கொட்டக்கூடியவனாக வளர்ந்தேன்.

ஓகே. இவ்வளவு நீளமான பதிவின் காரணம், நான் பார்த்த அந்த டிவிடி. ‘இளையராஜா இசை சங்கமம்’. இது, ஐங்கரன் வெளியீடு. ஆண்டு – 2007. கேட்லாக் எண் – WRDVD – 279.

இந்த டிவிடியின் முதல் பாடல், ‘கொடியிலே மல்லிகைப்பூ’ – கடலோரக் கவிதைகள். பட்டையைக் கிளப்பும் படம். அட்டகாசமான பாடல். அடுத்த பாடல், ‘பூங்கதவே தாழ்திறவாய்’ – நிழல்கள். அடுத்தது, ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் – முதல் மரியாதை’. பின்னர், ’பொத்திவெச்ச மல்லிக மொட்டு – மண்வாசனை’. இதற்குப் பின், ‘அடி ஆத்தாடி’ – கடலோரக் கவிதைகள். உடனேயே ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே ’– அலைகள் ஓய்வதில்லை, பின் ‘பூங்காற்று ’ – மூன்றாம் பிறை, ‘மௌனமான நேரம்’ – சலங்கை ஒலி, ’ஒரு இனியமனது’ – ஜானி, ‘ஏதோ மோகம்’ – கோழி கூவுது, ’மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ – நானே ராஜா நானே மந்திரி, ‘பேசக்கூடாது ‘ – அடுத்த வாரிசு (ஸ்ரீதேவியின் கடைசி தமிழ்ப்படம் – ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தபின் உள்ள ‘ஹிந்தி’ ஸ்ரீதேவியை இதில் காணலாம்), ’வளையோசை’ – சத்யா, ’வானிலே தேனிலா’ – காக்கிசட்டை, ’ஓம் நமஹா’ – இதயத்தைத் திருடாதே (எனக்குப் பிடிக்காத ஒரு அட்டக்காப்பி இயக்குநர் – மணிரத்னம். காப்பியடிக்காமல் இவர் எடுத்த படங்கள் ஒன்றுகூட இல்லை – இதயக் கோயில் என்ற மொக்கைப்படம் ஒருவேளை இவர் ஒரிஜினலாக எடுத்திருக்கலாம் – அந்த இசைத்தட்டு அட்டையில், சோடாபுட்டிக் கண்ணாடி போட்டு, ‘மணிரத்தினம்’ என்ற பெயர் தாங்கி இவரது ஃபோட்டோ வெளிவந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது).

இன்னமும் பல பாடல்கள் அதில் இருந்தன. அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்குத் தோன்றிய எண்ணம் – ‘இளையராஜா.. இப்ப எங்கய்யா இருக்கீங்க?’.

எண்பதுகளில் எனது மனம் கவர்ந்த படங்களைப் பற்றி இன்னமும் எழுதுவேன் . .

—-தொடரும்

பி.கு – இந்த இசைத்தட்டுகள் பெரும்பலும் ‘எக்கோ (Echo)’ நிறுவனத்தைச் சேர்ந்த தட்டுகள். இந்நிறுவனத்தின் ஓனர்….. வெல்.. இளையராஜா (என நினைக்கிறேன்).

  Comments

62 Comments

  1. யோவ் வெண்ணை .. நேத்து போபால் பத்தி எழுதிட்டு இண்ணிக்கி நாஸ்டால்ஜியா பதிவு எப்புடிய்யா எழுதுறே? – அடிங்’ என்று எப்படியும் பின்னூட்டம் வரத்தான் போகிறது.. இதற்கு எனது பதில் – வெல்.. இதுதான் வாழ்க்கை. .

    Reply
  2. யோவ் வெண்ணை .. நேத்து போபால் பத்தி எழுதிட்டு இண்ணிக்கி நாஸ்டால்ஜியா பதிவு எப்புடிய்யா எழுதுறே? – அடிங்’ என்று எப்படியும் பின்னூட்டம் வரத்தான் போகிறது.. இதற்கு எனது பதில் – வெல்.. இதுதான் வாழ்க்கை. .

    வரிக்கு வரி வழி மொழிகிறேன்…

    Reply
  3. நல்ல பதிவு தேள். எண்பதுகளில் வந்த படங்களின் பாடல்கள் எல்லாம் மதுர காணங்கள். நீங்க சொன்ன எல்லாமே என்னோட பேவரைட்ஸ்.

    Reply
    • On Yan’s blog I found a great lifestyle family seen;os&#8230iplsase tell me you don’t know who Yan is..if not, you need to check her out here:  Franny takes us out on the portland town

      Reply
  4. //யோவ் வெண்ணை .. நேத்து போபால் பத்தி எழுதிட்டு இண்ணிக்கி நாஸ்டால்ஜியா பதிவு எப்புடிய்யா எழுதுறே? – அடிங்’ என்று எப்படியும் பின்னூட்டம் வரத்தான் போகிறது.. இதற்கு எனது பதில் – வெல்.. இதுதான் வாழ்க்கை. .

    வரிக்கு வரி வழி மொழிகிறேன்…//

    வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து வழி மொழிகிறேன்… இந்த வாட்டியும் வடை போச்சா…

    Reply
  5. சொன்ன அத்தனை படங்களில் பாடல்களும் பட்டையை கிளப்பியவை….
    இன்னும் நிறைய இருக்கு தேளு…
    அப்புறம் மனோஜ் கியான், எக்கோ ஓனர் மேட்டரு இப்பத்தான் தெரியும்…
    மனோஜ் கியான் ஊமைவிழிகளில் பட்டையை கிளப்பு இருப்பாரு….பாவம் ஏன் வாயப்புகிடைக்கலைன்னு தெரியல…

    Reply
  6. Anonymous

    பி.கு – இந்த இசைத்தட்டுகள் பெரும்பலும் ‘எக்கோ (Echo)’ நிறுவனத்தைச் சேர்ந்த தட்டுகள். இந்நிறுவனத்தின் ஓனர்….. வெல்.. இளையராஜா (என நினைக்கிறேன்).
    .

    Read more: http://www.karundhel.com/2010/06/1.html#ixzz0qUsgZ1UM
    Under Creative Commons License: Attribution//

    noooooooooooooooooooooooo,,

    Reply
  7. சிகப்பு மனிதனே charles bronson ன் Death wish ன் காப்பி தான்

    Reply
  8. 60, 90, T-Series, Echo…பிண்ணுறீங்க பாஸு! திடீர்னு இஸ்கோலு படிக்கிறப்ப நடந்ததெல்லாம் ஞாபகம் வருது!

    ஆடியோவுக்கு Echo மாதிரி அப்போ வந்த வீடியோ கேசட்டெல்லாம் முக்கால்வாசி ஏக்நாத் தான் வெளியிடுவாங்க!

    //எனது தாய்மாமன் நிர். இரண்டு – ஒரு இசைத்தட்டு நூலகம் வைத்திருந்தார் (அது இன்றும் உண்டு).//

    கோவையில் அந்தக் கடை எங்கே இருக்கிறது?

    //எந்தப் பாடலைக் கேட்டாலும், அப்படத்தை என்னால் சொல்ல முடியும். மட்டுமல்லாமல், அதைப் பாடியவர், இசையமைப்பாளர், படம் போன்ற அத்தனைத் தகவல்களையும் மிக இயற்கையாகப் பெற்றுக் கொண்டேன்//

    அது என்னமோ தெரியல இப்பெல்லாம் வர்ற பாட்டக் கேட்டா அது என்ன படங்கறதையே ரொம்ப யோசிக்க வேண்டியதிருக்கு!

    //’ஒரு இனியமனது’ – ஜானி//

    புது டிவிடிலயாவது இந்தப் பாட்டு இரைச்சல் இல்லாம தெளிவான ஸ்டீரியோ ஓலிப்பதிவுடன் இருக்கா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  9. ஏங்க தமிழ்ப்படத்தை ஓட்டுவீங்கன்னு பார்த்தா.. உங்கப் படத்தை ஓட்டியிருக்கீங்க???

    அப்புறம் ‘குடும்பத்தோட’ வெளியேறியதா சொன்னீங்களே? வீட்டுல விசேஷங்களா?? 😉

    Reply
    • Well, the BEST gift you could give is probably one of the expensive ones left on the gift registry. But a giftcard to Babies R’ Us would be nice if you don28#&17;t want to do that.

      Reply
  10. ரீடர் சுத்தமா வேலை செய்ய மாட்டேங்குது. கேபிளோட ஃபீடை (பீடை இல்லை.. கவனமா படிக்கவும்) தவிர வேற எதுவும் அப்டேட் ஆக மாட்டேங்குது.

    ஷார்ட்கட் போட்டு… அப்பப்ப செக் பண்ணிக்கிறேன். லேட்டா வந்தா கண்டுக்காதீங்க.

    Reply
  11. மணிரத்தினத்தின் காப்பியடிக்கும் திறனைப் பற்றி ஒரு பதிவு எழுதவும்.. அல்லது எதாவது லிங்க் இருந்தால் சொல்லுங்கள்…

    Reply
  12. Nalla padivu , ellam super songs of raja , waiting for more updates

    Reply
  13. Anonymous

    பட்டை appears 5 times in this page, oh! No, 6 times including this one. Otherwise பட்டைya kellapareenga. OMG, my count is wrong again.

    Reply
  14. ராஜா

    இந்த மணிரத்னத்தை ஏன் தலைல தூக்கிவச்சுக்கிட்டு ஆடுறாங்கன்னு இதுவரைக்கும் என்னக்கு புரியல…

    Reply
  15. சிங்கம் உங்களை அழவச்சிடுச்சு போல…, நல்ல வேலை இன்னும் கேரளாவுல சிங்கத்தை ரிலீஸ் பண்ணலை, இல்லாட்டி இந்நேரம் பார்த்திருப்பேன் 🙂
    //எண்பதுகளின் படங்களோ இசையோ பிடிக்காதவர்கள் உடனடியாக வெளியேறலாம்//
    இந்த காலகட்ட பாடல்களை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன …???
    ந.ப. Really Nostalgic 🙂

    Reply
  16. // எண்பதுகளின் படங்களோ இசையோ பிடிக்காதவர்கள் உடனடியாக வெளியேறலாம். //

    யாரு சொன்னது அப்புடி

    இன்னமும் தினமும் கேட்பது அதைத்தான்

    இப்பொழுதும் தினமும் மதியம் சன் மியூசிக் சேனலில் 2 to 3 கேட்கலாம்

    // இப்படிப் பட்ட கேஸெட்டுகளில் அந்நாட்களில் முதலிடம் வகித்தது டி- ஸீரீஸ். மிகத் தரமான ஒலிநாடாக்களை வெளியிட்டு, சாதனை படைத்தது இதன் சாதனை. //

    இப்பொழுதும் கூடத் தான்

    // (ஸ்ரீதேவியின் கடைசி தமிழ்ப்படம் – ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தபின் உள்ள ‘ஹிந்தி’ ஸ்ரீதேவியை இதில் காணலாம்), //

    மிக முக்கியமான செய்தி

    மொத்தத்தில் நபநப!

    Reply
  17. நண்பா இது பரமானந்தம் கொடுத்த இடுகை. நண்பா 80,90களின் பாடல்களும் ஏன் இன்றைக்கும் இளையராஜா என் ஆல் டைம் ஃபேவரிட்,இவர் இசை மூலமே நான் உலகை ரசிக்க கற்றுக்கொண்டேன் என்றால் மிகை அல்ல,

    எனக்கு வினைல் ரெக்கார்டுகள் பரிட்சயமில்லை,இப்போது ஊருக்கு போகும் போது க்ராமபோன் வாங்கிபோனேன்,அதை என் புத்தாஹட் நண்பனுக்கு கொடுத்துவிட்டேன்,வினைல் ரெக்கார்டுகள் கீறல்கள் இல்லாமல் எங்கும் கிடைக்கவில்லை,

    நான் அந்தகாலத்து நேஷனல் பேனசோனிக் மோனோ டேப்பில் அப்போது வந்த டிடிகே,கோனி,மெல்ட்ராக்,போன்றவற்றில் ரெகுலராய் பாடல் பதிந்து கேட்டு வந்துள்ளேன்,45,60,90 மூன்றையும் உபயோகித்துள்ளேன்.பின்னர் ஆம்ப்ளிஃபைர் செட் செய்து சரவுண்டு ச்பீக்கர்,ட்வீட்டர்களுடன் அப்டேட் செய்தேன். அப்போது தான் சால்ட்ரிங்கும் கற்றுக்கொண்டேன். வார விடுமுறையில் ,கேசட்டு வாங்கவே ஹவுஸ்கீபிங் வேலைக்கு போய் மாப் அடித்துள்ளேன்.இது நல்ல நோஸ்டால்ஜியா கிளப்பிய பதிவு.

    எனக்கு இன்னமும் ஆனந்தத்தை கேட்டவுடன் கொடுப்பது பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்-கழுகு படம், என்ன ? ரெக்காரிங் தரம் கேசட் டு எம் பி த்ரி மாற்றத்தால் குறைந்துவிடும், ஆயினும் அருமையான பாடல்,இன்றைய தேதியில் ராஜா பாடலகளை டிஜிட்டலில் கன்வெர்சன் செய்து வெளியிட்டால் சுமார் 600 அற்புத பாடல்கள் தேறும்,600/10=60 சீடியேனும் தேறும்,அது காலத்துக்கும் அழியாது. ராஜா ரசிகர் அனைவரும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

    அறுவடை நாள்,புன்னகை மன்னன்,கல்லுக்குள் ஈரம்.நட்பு,நீதானா அந்த குயில், பாலைவன ரோஜாக்கள்,முதல் வசந்தம்,நானும் ஒரு தொழிலாளி,ராகவேந்திரா என நீண்டு கொண்டுதான் போகுமே தவிர குறையாது.எதை விடுவது,அச்சமாயுள்ளது.பின்னூட்டம் போதாது. அதுவும் அந்த புதிய பூவிது பூத்ததுவில் தொடக்க இசையும்,டிக்,டிக் டிக் என்பதன் கண்டின்யூட்டியும்,பேஸ் கிடாரின் துணையும்!!எப்போதும் உள்ளம் துள்ள வைக்கும்.மேலும் ராஜா என்னும் விசிறி படம் போட்ட கம்பெனி தான் ராஜாசாருடையது,யோகிராம்சுரத் குமாரின் நினைவாகவே அந்த சின்னம். எக்கோ ஒரு சர்வ தேச நிறுவனமாம் நண்பா.
    http://www.echoaudio.com/Sales/International/#India

    Reply
  18. நாயகன் கிட்டத்தட்ட முழுசுமே காபிதான்… சரி..

    ஆனா, மௌனராகம், அஞ்சலி, அலைபாயுதே, இருவர், ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், குரு இதெல்லாம் எங்க இருந்து காபின்னு தெரிஞ்சுக்கணும்… உங்களுக்கு தெரியுமா? (அஞ்சலிக்கு E.T.-ன்னு சொல்லாதீங்க… அந்த பாட்டு மட்டும்தான்… ரோஜாவை சத்தியவான் சாவித்திரின்னும், இருவரை கருணா-எம்ஜிஆர்னும், குருவை அம்பானி கதைன்னும் சொல்லாதீங்க… அதெல்லாம் காபி இல்ல.. )

    Reply
    • LdA,Não estou a dizer para começar a desencatar a torto a direito, mas a mim pessoalmente sabia-me muito bem começar a ver uma maior rea§onsabilizsÃpão.Eu não duvido do esforço, do empenho mas parece sempre que a nível mental as coisas nunca estão a 100%. Parece que não estão inteiramente focados, conscientes do que lhes é exigido.Não sei se me faço explicar.

      Reply
    • That’s the short definition of a “Lousy Blogger” Mitch.LOL, I’ve not yet been called a ‘Webmaster’! But yeah, after all, they’re almost bots! Just that they visit your ‘Contact’ page and copy-paste stuff manually. Thanks for the comment, and Abhi has asked you a question here lol

      Reply
  19. //ஏழாவது மனிதன் (எல். சுப்ரமண்யம் இசை //

    அண்ணே (அல்லது தம்பி)…! அது எல்.வைத்தியநாதன்.”காக்கைச் சிறகினிலே நந்தலாலா”.வித்தியாசமான அருமையான இசை.இதில் jazz டைப் இசை முயற்சித்திருக்கிறார்(?).பல்லவி முடிந்தவுடன் வரும் இசை அருமை.பாட்டு முடியும்போது விசில் ஒலியுடன் முடியும்.

    ”நல்லதோர் வீணை”ஹம்சாநந்தி ராகத்தில்.இதுவும் அருமை.(ராஜ்குமார் பாரதி(பாரதியார் பேரன் பாடுவார்).இவர் இசையில் ஒரு “அருள்’ இருக்கும்.மேஸ்ட்ரோவின் தாக்கம் இந்தப் பாட்டில் தெரியும்.

    Reply
  20. நண்பா,
    அப்போது மிகவும் தமிழ் பட இசை ஒலிநாடாக்களை வெளியிட்டது
    எக்கோ,ராகம்,ராஜா.கீதாஞ்சலி என நினைக்கிறேன்.

    டீசீரீஸ் எம்ப்டி கேசட் குரைந்த விலை,அஃபோர்டபிள்,அவர்கள் ஹிந்தி படங்களுக்கு தான் பாடல் ஒலிநாடாவுக்கு பெயர் போனவர்கள் என நினைக்கிறேன்,சரிபார்க்கவும். நிறுவனர் குல்ஷன் குமாரையும் போட்டே தள்ளிவிட்டனர் மாஃபியாக்கள்.

    Reply
  21. //எண்பதுகளின் நடுவில் இருந்து, தொண்ணூறுகளின் நடுப்பகுதிவரை, இந்த இசையின் நடுவேயே வாழ்ந்தேன். //
    காரணங்கள்
    1.மெலடி..மெலடி…மெலடி…மெலடி
    2.rich orchestration
    3.ராஜாவின் பீக்.புது முயற்சிகளால் இசை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.
    “இது ஒரு பொன் மாலை” “பனிவிழும் மலர்” “அந்தி மழை”
    4.கலர் படங்கள் அதிகரித்தது.படத்தின் கதைக்கு ஏற்றார்போல் பாட்டு.
    5.தமிழ் சினிமாவும் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.
    6.”துடுதே”…”துடரும் உர்வு” “மெய்க்கம்” ”நெர்க்கம்””உன்னுர்வு வெரட்டுது” இப்போதுப் பாடும் மார்வாடி பையன்/பெண்களின் சொப்பு வாய் மழுப்பல் உச்சரிப்பு அப்போது கிடையாது.(ஷ்ரேயா/சாதனா பாடல்களை உற்றுக்கேளுங்கள் மழுப்பி மழுப்பி பாடுவார்கள்.வீர்யம் இல்லாத மழலை உச்சரிப்பு.)
    7.லைவ் ரிகார்டிங்.லைவ் இசைக்கருவிகள்.
    8.அப்போது உற்றுக் கேட்டோம்.இப்போது நிறையப் “பார்க்கிறோம்”
    9.பொழுதுபோக்கு அப்போது கம்மி
    10.படத்தின் பின்னணி இசை ராஜாவின் திறமையால் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.

    Reply
  22. தலைவர் ரவிஷங்கர் பின்னூட்டமும் பேரானந்தம் தந்தது.
    அத்தனை பாய்ட்டும் அருமை.
    ========
    எனக்கு பெரியம்மா பெண்னை ரசிக்கலாம் தப்பில்லை என கேட்டுவிட்டு ,என்ன தப்பில்லையா?என்னடா சொல்றீங்கன்னு ,பலமுறை திருப்பி கேட்டால்,பிரியமான பெண்ணை ரசிக்கலாம் தப்பில்லையாம்.அழகிய பாடல் வரிகளை இசை அமுக்கி விடுகிறது,

    மாதுளம் கனியே நல்ல மலர்வனக்குயிலே (சாமி போட்ட முடிச்சு) என்னும் ராஜாவின் பாடலை அவசியம் கேளுங்கள்,எவ்வளவு விரக தாபம் தூண்டும் வரிகள்,காதலர்கள் காதல் செய்யவே தலைவர் 100க்கும் மேற்பட்ட அற்புதமான பாடல்களை வைத்துள்ளார்,இசை வேறு ட்ராக்கில் வரிகளை தொந்தரவு செய்யாமல் பயனிக்கும்.

    Reply
  23. Hmmmmmmmmmmmmmm

    Me the 26th.வேறென்ன சொல்ல?

    Reply
  24. 80 தமிழ்படங்களின்,பாடல்களின் பொற்காலம்..அது போல் திரும்பி வருமா தெரியலை..

    Reply
  25. //இப்படிப் பட்ட கேஸெட்டுகளில் அந்நாட்களில் முதலிடம் வகித்தது டி- ஸீரீஸ்.//

    நீங்க சொல்ல வந்தது TDKன்னு நினைக்கிறேன்! கடைல கொடுத்து பாடல் பதிவு செய்ய பலரும் அந்த காலகட்டத்துல TDK காஸெட்டை தான் விரும்பி உபயோகிப்பாங்க! நல்லா உழைக்கும்னு பொதுவான கருத்து நிலவியது! அது மட்டுமின்றி அப்போ மார்க்கெட்டிலிருந்த காஸெட்டுகளிலேயே TDKதான் செம லுக்கா இருக்கும்!

    T-Series என்பது ஒரு இந்திய ஆடியோ நிறுவனம்! TDK காஸெட்டுகள் மற்றும் பல எலெக்ட்ரானிக் சாதனங்களை இன்று வரை சிறப்புடன் தயாரித்து வரும் நிறுவனம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  26. அடிக்கடி நோஸ்டால்ஜிக் இடுகையாப் பார்த்து மாட்டிக்கிறேன்! :)) ராஜாவின் அருமையான மெலோடிகளை ஒரு லிஸ்ட் எடுத்துப்போட்டா நல்லா இருக்கும் 🙂

    இப்பொழுதைய சவுண்ட் குவாலிட்டியோட அந்த பாடல்கள் எல்லாவற்றையும் மாற்றி அமைத்தால்..

    வாவ்..!

    Reply
  27. ஜெய்…

    //நாயகன் கிட்டத்தட்ட முழுசுமே காபிதான்… சரி..

    ஆனா, மௌனராகம், அஞ்சலி, அலைபாயுதே, இருவர், ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், குரு இதெல்லாம் எங்க இருந்து காபின்னு தெரிஞ்சுக்கணும்… உங்களுக்கு தெரியுமா? (அஞ்சலிக்கு E.T.-ன்னு சொல்லாதீங்க… அந்த பாட்டு மட்டும்தான்… ரோஜாவை சத்தியவான் சாவித்திரின்னும், இருவரை கருணா-எம்ஜிஆர்னும், குருவை அம்பானி கதைன்னும் சொல்லாதீங்க… அதெல்லாம் காபி இல்ல.. )//

    அஞ்சலி படத்துல பாடல்களில் STAR WARS, ET போன்ற பல படங்களின் பாதிப்பு இருந்தாலும், படத்தின் ஒரு பகுதி முழுக்க முழுக்க TO KILL A MOCKING BIRD என்ற GREOGORY PECK நடித்த அற்புத திரைப்படத்தின் அப்பட்டமான தழுவலாகும்! இந்த படத்திலிருந்துதான் அஞ்சலி பாப்பா வர்ற சீன்களை தவிர்த்து மற்ற நல்ல நல்ல சீன்களையெல்லாம் உருவியிருப்பார் மணிரத்னம்! பிரபு வரும் காட்சிகள் அனைத்தும் இந்த படத்திலிருந்துதான் சுடப்பட்டவை!

    குரு படம் பார்ப்பதற்கு முன்னாடியே நாங்க MARTIN SCORSCESE-ன் AVIATOR படம் பாத்துட்டோம்! ஆனால் AVIATOR க்ளைமாக்ஸை கம்பேர் பண்ணும் போது குரு க்ளைமாக்ஸ் காமெடி தான்!

    ஆய்த எழுத்து படத்தில் கதை சொல்லும் பாங்கு அப்படியே AMORES PERROSங்கிற மெக்ஸிகன் படத்தை தழுவியது!

    மணிரத்னம் ரொம்ப விவரமான ஆளு! ஒரு படத்தை அப்படியே அப்பட்டமா காப்பியடிக்க மாட்டாரு! உதாரணத்துக்கு நாயகன் படத்தை முழுக்க முழுக்க GODFATHER-ஐ மட்டுமே தழுவி எடுக்கவில்லை! ONCE UPON A TIME IN AMERICAங்கற படத்திலிருந்து அந்த சரக்கை டயரிலே கட்டி கடலில் கவிழ்த்து கடத்தும் காட்சியை மட்டும் அழகாக சுட்டிருப்பார்!

    அதே போல் காட்ஃபாதர் படத்தின் பல காட்சிகளை இன்னமும் கூட உபயோகித்து வருகிறார்! கதைக்கு பொருந்துறாப்புல அதை அப்படியே INDIANISE பண்ணுறதில அவர் கில்லாடி! அதுதான் அவரின் வெற்றியின் ரகசியம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  28. @ ஜெய்.. தலைவர் அவர்கள் சொன்னதுடன், இதையும் சேர்த்துக்கொள்ளவும்..

    மௌனராகம் படத்தில், கார்த்திக் வருவது, அவர் சாவது இதெல்லாம், ஹிந்தியில் வெளிவந்த ‘அந்தாஸ்’ படத்திலிருந்து அட்டக்காப்பி அடிக்கப்பட்டவை.. அப்படத்தில் ராஜேஷ் கன்னா இதையே தான் செய்வார்.. செத்தும் போவார்.. (ஸிந்தகி ஏக் சஃபர் ஹை சுஹானா – பாடல் நினைவிருக்கிறதா?) . .

    //கதைக்கு பொருந்துறாப்புல அதை அப்படியே INDIANISE பண்ணுறதில அவர் கில்லாடி! அதுதான் அவரின் வெற்றியின் ரகசியம்!//

    முழுக்க முழுக்க உண்மை..

    Reply
  29. To Kill a mocking bird-ல் இருந்து எடுத்து இருப்பது உண்மைதான்… அந்த மூணு குழந்தைகளின் குறும்பு, Boo கேரக்டர், இந்த இரண்டைத்தவிர, இரண்டு படங்களும் வேறு வேறு வகை இல்லையா…

    ஆய்த எழுத்து ஸ்டைலும் அமெரோஸ் பெரோஸ்தான்..

    அது மட்டுமில்ல.. கன்னத்தில் முத்தமிட்டால்ல மாதவன் நேரடியா பொண்ணு கேக்கறது, அலைபாயுதேல அப்பாகிட்டயே போய் யாரு இந்த பொண்ணுனு கேக்கறது, மாதவனும் ஷாலினியும் போஸ்டரைப்பார்த்துதான் அப்பா இறந்ததை தெரிஞ்சுக்கறது, ஃபோன்ல ஐ லவ் யூ சொல்லுன்னு அடம் பிடிக்கறது எல்லாமே காட்ஃபாதர்தான்.. இந்த விஷயத்துல அவர் பண்ணறது தப்புதான்..

    ஆனா, இந்த காப்பி சீன்களைத் தாண்டி, படத்துல பல விஷயங்கள் இருக்குதில்லையா…? அயோத்தி பிரச்சினையின் வீரியத்தை மத்தவங்க எல்லாம் அப்படி புரிஞ்சுகிட்டங்கன்னு தெரியலைங்க.. நான் புரிஞ்சுகிட்டதே பம்பாய் பாத்துதான்… நாட்டு பிரச்சினையை விடுங்க…(அதுல பல அரசியல் இருக்குதுன்னு சொல்லறாங்க) மௌனராகம், அஞ்சலி, அலைபாயுதே மாதிரி படங்களுக்காகவே அவரு செஞ்ச தப்புகளை மன்னிக்கலாம்…

    Reply
  30. //நான் சிகப்பு மனிதன் (ரஜினி நடித்து எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பிடித்த படம்..//
    எனக்கும் மிகவும் பிடிக்கும்
    //ஊமை விழிகள் (மனோஜ் கியான் – இந்த மனோஜ் தான் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில், என்றென்றும் காதல் என்ற படுமொக்கையான விஜய் படத்தை இயக்கியவர்),
    //

    குட்லக் என்ற மொக்கை படமும் இவர் இயக்கியதுதான்….

    //அடுத்த வாரிசு (ஸ்ரீதேவியின் கடைசி தமிழ்ப்படம் //
    அப்ப தேவ ராகம்?

    Reply
  31. //மௌனராகம், அஞ்சலி, அலைபாயுதே மாதிரி படங்களுக்காகவே அவரு செஞ்ச தப்புகளை மன்னிக்கலாம்…//

    அடப்பாவி.. அப்ப காப்பி இஷ்டத்துக்கு அடிக்கலாம்… எப்புடி வேணா ஏமாத்தலாம்.. ஆனா அந்த டைரக்டர பத்தி எதுவும் சொல்லக்கூடாது.. அவர மன்னிச்சிரலாம்.. என்ன கொடும இது !

    //ஆனா, இந்த காப்பி சீன்களைத் தாண்டி, படத்துல பல விஷயங்கள் இருக்குதில்லையா…?//

    என்னங்க இது.. அந்த நல்ல விஷயங்களே காப்பி தான்னு நாங்க சொல்லிக்கினு கீறோம்.. நீங்க என்னடான்னா…

    இந்தியாவுலயே சிறந்த டைருடக்கரு, ‘மணி சார்’ இப்புடி எல்லாம் அவுர பாராட்டுராயிங்க. . அவுரு காப்பி அடிச்சதுக்கு ஒரு கிரெடிட்டு கூட டைட்டில்ல போடாம அவுரு படம்னு சொல்லிக்கினு கீறாரு.. ஒரு தொழில் நேர்மையே இல்லையே அவுரு கிட்ட..

    இதுல இன்னொண்ணு இருக்கு… அதுக்குப் பேரு Iconoclast. ஒரு பப்ளிக் ஃபிகரப் பத்தி எதிர்மறையான கருத்து சொல்றது.. ஆனா அது பொய்யில்ல.. உண்மை.. இருந்தாலும், அந்த ஆளப் பத்தின அந்தக் கருத்துக்களை ஏத்துக்க மனம் இடம் கொடுக்காது.. அந்த ஆளப்பத்தி உயர்வாத்தான் நினைக்கணும்னு நமக்குத் தோணும்.. அதுக்கு ஒரு உதாரணம் தான் மணிரத்னத்தைப் பற்றிய இந்தியப் பார்வைன்னு எனக்குத் தோணுது..

    ஒரு உதாரணத்துக்கு இப்புடி யோசிச்சிப் பாருங்க: நித்யாநந்தா பல பேர றேப்பு பண்ணினான்.. மஜா பண்ணினான்.. ஆனா, அவரு சின்னப்பையன் ஆச்சே. . அதுவும் கடவுள்னு வேற சொல்லிக்குறாரு.. ஸோ, அவரு இத்தனை தப்பு பண்ணிருந்தாலும், அவரு நல்லவுருதாய்யா !

    இது எவ்வளவு அபத்தம் சொல்லுங்கள்.. அதுபோல் தான் இருக்கு நீங்க இப்புடி சொல்றது..

    //மௌனராகம், அஞ்சலி, அலைபாயுதே மாதிரி படங்களுக்காகவே அவரு செஞ்ச தப்புகளை மன்னிக்கலாம்…//

    Reply
  32. @ ரமேஷ் – தேவராகம், தெலுங்கில் அவர் நடித்து, சில காட்சிகள் மட்டும் தமிழில் எடுக்கப்பட்ட படம்.. அதனால் அது லிஸ்டில் கரெக்டாக சேராது 😉 நான் சொல்லவந்தது, அடுத்த வாரிசுக்குப் பிறகு, ஸ்ரீதேவி ஹிந்தியில் பிஸியாகிவிட்டதை.. உங்கள் கருத்துக்கு நன்றி..

    Reply
  33. ஜெய்…

    //இந்த விஷயத்துல அவர் பண்ணறது தப்புதான்..//

    தப்புன்னு நாம எங்கேயுமே சொல்லலியே! உலகத்திலே இதப் பண்ணாத டைரக்டரே கிடையாதுன்னலாம்! ஆனா அவர் மேல குற்றம்னு சொல்றது முக்கியமான பிரச்சனைகளை கையாளும் போது அதை சரியான விதத்தில் கையாளாமல் பூசி மழுப்புவதுதான்!

    நானும் அவரது தளபதி வரையிலான படங்களுக்கு தீவிர ரசிகன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    Reply
  34. அட்ரா சக்கை! தமிழ் படங்களப் பத்தியும் அப்பப்போ எழுதுங்க! இளையரஜாவப் பத்தி என்ன சொல்ல?

    அவர் ஒரு இசைச் சித்தர்!

    echo ஓனர் அவர் இல்லன்னு நினைக்கிறேன், இப்போ தானே echo மேல கேஸ் போட்டாரு! அவர் பாடல்களை உஸ் பண்ணி நெறைய சம்பாதிக்கிராங்கன்னு சொல்லி, சமீபத்தில போலீஸ் கமிஷ்ணரப் போய்
    பார்த்தாரே?

    நீங்க நெறைய உலகப் படங்கள் பார்ப்பதால் மணிரத்தினம் காப்பி அடிக்கிரார்ந்னு தெரியுது! எங்களக்கு நெறைய நல்ல படங்கள குடுத்தார்ந்னு தான் தெரியும்!

    Anyway, First Impression is the Best Impression!

    Now you can understand Maniratnam fan’s point!

    Reply
  35. இப்பொழுதைய சவுண்ட் குவாலிட்டியோட அந்த பாடல்கள் எல்லாவற்றையும் மாற்றி அமைத்தால்….. டி வி யிலிருந்து விடுபட்டு ஒலிக் கேட்பான்களுக்கு வாழ்வு கிடைக்கும்.

    சீனி மோகன்

    Reply
  36. மொழி படத்துல பாஸ்கர் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் மனதளவில் நின்று போய்விடுவாரே. அது மாதிரி நீங்களும் 80களில் நின்று போய் விட்டீர்களா?

    அந்தக்காலப்பாடல்கள் அருமைதான். அதிலும் அட்டுப் பாடல்களும் உண்டு.

    ஆனாலும் இந்தக்காலப்பாடல்கள் இளயவர்களுக்கானது. இதில் ஒப்பிடுவதே அர்த்தமற்றது.

    இயக்குனர்கள் காப்பி, இசை அமைப்பாளர்கள் காப்பி என்று குறை கூரும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களை காப்பி அடித்துத்தான் வாழ்கிறீர்கள் என்பதை மறக்கலாகாது.

    மனிதர்கள் அனைவரும் மற்றொரு மனிதனை காப்பி அடித்துதான் வாழ்கிறான் என்பதை உணரவேண்டும்.

    சிங்கம்
    உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டுமே உண்மை.

    படம் சரியில்லை என்பது உண்மையல்ல.

    உங்களுக்குப்பிடிக்காதது எதுவுமே சரியில்லை என்பது தவறான அணுகுமுறை.

    உங்களுக்குப் பிடிப்பது அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என்று நினைப்பதும் தவறே.

    Reply
  37. நண்பரே,

    80களில் எடுத்த போட்டோக்களை இப்போது பார்த்தால் அவற்றின் மீது காலம் கனமாகப் படிந்திருக்கும். எம் சிரிப்புக்களை அவற்றில் பாக்கும்போது எங்கே தொலைந்தது அந்த வாழ்வு எனக் கேட்கத் தோன்றும்.

    வானொலி தன் வலிமையுடன் இருந்த காலத்தில் பாடல்கள் கேட்பதுதானே பெரும் பொழுது போக்கு. ஒளியும் ஒலியும் வருமுன்பாக வானொலி அறிவிப்பாளர்கள் ரசிகர்களின் பெயர்களை அறிவித்து விட்டு பாடல்களை ஒலிபரப்புவார்கள். பாடல்களும் இனிமையானவையாகவே இருக்கும். தங்கள் பெயர்களை வானொலியில் கேட்ட ரசிகர்களின் முகத்தினை கற்பனை செய்து பார்க்கிறேன்.

    சந்கீதமே என் தெய்வீகமே, பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் போன்ற பாடல்கள் எல்லாம் இன்றும் மனதில் ஒலிப்பவை. அவ்வகையில் மீண்டும் அப்பாடல்களினூடு[ திரைப்படங்களோடு] உங்கள் பதிவுகள் வழி கைகோர்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

    தண்ணி கருத்திருச்சு, தவளை சத்தம் கேட்டிருச்சு என்ற பாடல் நானே அறியாமல் நினைவில் எழுகிறது. மனதை இதமாக்கும் பதிவு.

    Reply
  38. ohhhh hhooo.. ithu athu illaya.. naa kooda cinema vimarjanam nu nenachu ulla vanthitten .. paatha.. ithu atha vida oru sooper posta illa irukku… nijama ellame beautiful songs.. actually speaking ithu ellame naa porakkarathukku munnadi vantha intha padalgal 😉 but still ithu oru nostalgia thaan.. pala naal college cut adichitu veetla yaarum illatha nerathula mallakka paduthukittu naa sight adicha ponna nenachu vitta feelings ellam nenavu varuthu boss.. 🙂
    mm.. pattayai kelappungal… 🙂

    Reply
  39. கருந்தேள்:

    சரியான சுவிட்சை தான் தட்டி விட்டுருகீங்க, 80s மற்றும் இளையராஜா இசை.. பேசிக்கொண்டே இருக்கலாம். ரெகார்டிங் சென்டரில் உங்கள் அனுபவம் அற்புதம். மதுரையில் “அற்புதம் ரெகார்டிங்ஸ்” என்று ஒரு கடை இருந்தது, இந்த கடை முதலாளி இசைஞானியின் இசையை இசைதட்டில் இருந்து டேப்புக்கு ஒலிப்பதிவு செய்வதில் வல்லவர் என்று என் நண்பன் சொல்வான்.

    “வைனல்” இசைதட்டில் இசைஞானியின் இசையை கேட்பதே அலாதி சுகம் தான். சில வருடங்களுக்கு முன் மதுரை சந்தையில் பத்து ரூபாய்க்கு ஒரு தட்டு என்று ஒரு முப்பது சொச்சம் தட்டுக்கள் (பிரபலமான படங்கள் ) வாங்கி வந்தேன். சில தட்டுக்களில் கீறல்கள் அதிகம் ஆனால் பெரும்பாலும் கேட்கும் போது தெரியாது.

    உங்கள் மாமாவின் இசை தட்டு நூலகத்தை அப்படியே பாதுகாத்து வையுங்கள். இப்போது பெரிய ஆங்கில இசைக் குழுக்கள் அவர்களது ஆல்பங்களை இசைத்தட்டிலும் வெளியிடுகிறார்கள். கேசட்டுகள் அழிந்தாலும் இசைத்தட்டுகள் அழியாது. MP3 இசை வடிவம் கம்ப்ரெஸ் செயப்பட்டது, இசைதட்டில் கேட்கும் போது “Base” மற்றும் “Treble” துல்லியமாக வெளிப்படும். முக்கியமாக ராஜாவின் “பேஸ் கிடார்” புரட்சி இசைதட்டில் துல்லியமாக வெளிப்படும்.

    நான் சொல்வதை விட நான் ரெகார்ட் செய்த இந்த வீடியோவை பாருங்கள் (கேளுங்கள் !). படம் கொஞ்சம் இருட்டாக உள்ளது (மணி படம் மாதிரி 🙂 ) விரைவில் சரி செய்து அப்லோடுகிறேன்.

    http://www.youtube.com/watch?v=glhoXCDM2cY

    //‘இளையராஜா.. இப்ப எங்கய்யா இருக்கீங்க?’//

    இன்னும் இங்கு தான் இருக்கிறார், “பா”வில் இந்தி “சங்கத்தில்” பாடலில் பல புதுமைகள் உள்ளது. பழைய மெட்டு தான் என்றாலும் இடையே “Jazz Piano ” மற்றும் “Electric Guitar” வருடுகிறது.

    மேலே கீதப்ரியனின் மற்றும் ரவிஷங்கரின் பின்னூட்டங்கள் அருமை!

    ராதே என் ராதே பாடியவரின் பெயர் ரமேஷ் என்று நினைக்கிறேன். அவர் பாடிய “வா வா மைசூரு மல்லியே (அடுத்தாத்து ஆல்பர்ட்) எனக்கு பிடித்த பாடல்.

    அட்டகாசமான பதிவு, தொடருங்கள்.

    அன்புடன்,
    மீனாட்சிசுந்தரம்

    Reply
  40. இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை http://WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    Reply
  41. என் பின்னூட்டத்தில் விடுபட்டது.
    //‘இளையராஜா.. இப்ப எங்கய்யா இருக்கீங்க?’//

    இவ்வளவு நாள் தாக்குப்பிடித்ததே அவரின் creativityஆல் தான்.கிழ் வரும் பாடலைக்கேளுங்கள்.

    1. http://devaragam.com/vbscript/musicNew.aspx

    “அல்லிப்பூவே… மல்லிப்பூவே”(மலையாளம்)
    (Bhagyadevatha (2009) -[Vijay Yesudas, Chithra], [Sarathchandra Varma], [Ilaya Raja].)

    2.http://devaragam.com/vbscript/musicNew.aspx
    ஆரோ பாடுன்னு(மலையாளம்)

    Katha Thudarunnu (2010) -[Hariharan, Vijay Yesudas], [Sarathchandra Varma], [Ilaya Raja].

    கேட்டுவிட்டு உங்கள் எண்ணத்தைச் சொல்ல்லுங்களேன் ப்ளீஸ்…!

    Reply
  42. Anonymous

    //நீங்க சொல்ல வந்தது TDKன்னு நினைக்கிறேன்! கடைல கொடுத்து பாடல் பதிவு செய்ய பலரும் அந்த காலகட்டத்துல TDK காஸெட்டை தான் விரும்பி உபயோகிப்பாங்க! நல்லா உழைக்கும்னு பொதுவான கருத்து நிலவியது! அது மட்டுமின்றி அப்போ மார்க்கெட்டிலிருந்த காஸெட்டுகளிலேயே TDKதான் செம லுக்கா இருக்கும்!

    T-Series என்பது ஒரு இந்திய ஆடியோ நிறுவனம்! TDK காஸெட்டுகள் மற்றும் பல எலெக்ட்ரானிக் சாதனங்களை இன்று வரை சிறப்புடன் தயாரித்து வரும் நிறுவனம்//

    உண்மை.

    – ராஜராஜன்

    Reply
  43. ஆம் நண்பா, எக்கோ நிறுவனம் இளையராஜாவினுடயதுத்தான் என்ற செய்திகள் உலவியது உண்டு. முன்பெல்லாம் HMV , கொலம்பியா, பாலிக்ரம்(?) போன்ற நிறுவனங்கள் இசைத்தட்டுகளை தயாரித்து வந்தன. பிறகு சூப்பர் செவன் என்ற நிறுவனம் வந்தது. அதன் பிறகு இன்ரிகோ நிறுவனம். அதன் பிறகுத்தான் எக்கோ வந்தது. தமிழின் முதல் ஸ்டீரியோவான ப்ரியாவை வெளியிட்டது இன்ரிகோ. அந்த நாட்களில் நான் பார்த்த இசைத்தட்டு உறைகளில் என்னை மிகவும் கவர்ந்தவை, அமிதாப் பச்சனின் ‘ யாரானா’வும் , ‘ஷான்’ இசைத்தட்டுகளின் உறைகள்தான். அதிக செலவில் தயாரிக்கப்பட்டு, மிகவும் அட்டகாசமாக இருந்தன. அவைகளெல்லாம் போக்கீஷங்கள். மீண்டும் கிடைக்காது. உங்களின் நண்பரிடம் பத்திரமாக உள்ளதாவேன்று மீண்டும் ஒருமுறை உறுதி செய்யவேண்டுகிறேன்.அந்த நாட்கள் டிவி பாதிப்பு இல்லாத ரேடியோ, ட்ரன்சிஸ்டர் மற்றும் டேப் ரிக்கார்டர் காலங்கள். காதுக்கு மட்டுமே வேலை. ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு ஒலிப்பரப்பாகும்’ நேயர் விருப்பமும், இரவில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியும். விவித பாரதியின் ‘L R சாமி அளித்த விளம்பரதாரர்’ நிகழ்ச்சியும்(L R சாமி பில்டிங்க்ஸ், சென்னை 18 க்கு எழுதுங்கள், /இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது பிரபு…பிரபு…பிரபு…) மறக்க முடியாதவை. இதில் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை நிகழ்சிகளும் குறிப்பிடத்தகுந்தவை. இந்திய வானொலிகளில் தடை (?) செய்யப்பட்ட, ராஜாவின் ‘ஓரம்போ’ பாடலும், அவரின் வெளிவராத, மணிபூர் மாமியார் படத்தின்’ ஆனந்தத் தென்காற்று தாலாட்டுதே ‘ பாடலும் அவர்கள் தான் ஒலிப்பரப்புவார்கள்.உங்களின் பதிவு, என் ஆம்பூர் ‘சீனு மியுசிக் சென்டர்’ நாட்களை நினைவுப் படுத்தி விட்டன. நன்றி நண்பா.

    Reply
  44. Anonymous

    எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் னு டைட்டிலை பார்த்தவுடனே படங்கள் பத்தி சொல்லப் போறீங்கன்னு வந்தேன். பாடல்கள் பத்தின்னா “எண்பதுகளின் தமிழ்ப் படப் பாடல்கள்” னு பதிவு போடலாம்ல.. – எஸ்கா

    http://yeskha.blogspot.com/2010/06/blog-post_12.html

    Reply
  45. அப்போ தனிக்காட்டு ராசாவா அடிச்சு ஆடியிருக்கார் நம்ம இசையராஜா..அருமை அருமை.பதிவு.

    Reply
  46. @M.S.E.R.K.
    நண்பரே விரிவான மேலதிக தகவலுக்கு நன்றி,
    எனக்கு ஓரம்போ பாடலில் ராஜாவின் குரலில் உள்ள தேர்ந்த நையாண்டி பிடிக்கும்,அது ஏன் இந்திய வானொலியில் தடை செய்யப்பட்டது?என தெரியுமா?

    Reply
  47. @மீனாட்சி சுந்தரம்
    நண்பரே,நானும் 85வரை ப்ராப்பர் மதுரை தான் ,ஆனால் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் மதுரை வந்து விடுவேன்,நான் படித்த ரோஸரி சர்ச் ஸ்கூகுக்கு டவுன்ஹால் ரோடு வழியாக செல்லுகையில் இடது பக்கம் பூரா கேசட்டு கடைகளும்,டேப் கடைகளும் தான்,அந்த ரோடுமுழுக்க ராஜா பாடல்கள் தான் கேட்கும்,அப்போது வந்த உதயகீதம்,இதய்கோவில்,மிஸ்டர் பாரத்,என கேட்டு வந்துள்ளேன்

    Reply
  48. Dear Geethappriyan….
    // @M.S.E.R.K.
    நண்பரே விரிவான மேலதிக தகவலுக்கு நன்றி,
    எனக்கு ஓரம்போ பாடலில் ராஜாவின் குரலில் உள்ள தேர்ந்த நையாண்டி பிடிக்கும்,அது ஏன் இந்திய வானொலியில் தடை செய்யப்பட்டது?என தெரியுமா?//

    ‘ஏட்டையா ரோட்டுமேலே நிக்கிறாரு நிக்கிறாரு …
    அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு , ஒதுங்கிக்கிங்க ஒதுங்கிக்கிங்க …’ என்ற பாடல் வரிகளுக்கு தமிழகக் காவல் துறையிடம் இருந்து எதிர்ப்பு வந்ததாக கேள்வி!

    Reply
  49. @M.S.E.R.K.
    நண்பரே அது ‘பொண்ணு ஊருக்குப் புதுசு‘படம் தானே? இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் குழுவினருடன் பாடி ஊரையே கலக்கிய ஓரம்போ… ஓரம்போ… ருக்குமணி வண்டி வருது… பாடலுக்கு இப்படி ஒரு பிண்ணனி உண்டா?அதில் நையாண்டி செமயா இருக்கும்.விளக்கத்துக்கு நன்றி.

    Reply
  50. தல,80’s ராஜா மட்டுமல்லாமல்,90 களின் ரஹ்மானும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அப்புறம்,மணிரத்னம்… he has been over credited and over appreciated.அவ்ளோதான்.அது தான் உண்மை.

    Reply
  51. என்னோட வலைத்தளத்துல உங்க பின்னூட்டம் பார்த்தேன் . .வந்து படிச்சேன் . . நீங்கள் அழைத்ததால், என்னுடைய வெளிப்படையான கருத்துக்களை இங்கே எழுதுகிறேன்.

    வெல். இலவச காப்பீடு அட்டையை அந்த நண்பர் எடுத்தது தவறு – இது உங்க வாதம். மேலே இருக்கும் பின்னூட்டங்களையும், உங்களது பதில்களையும் படித்தால், ஒன்று நிச்சயம் புரிகிறது. அதாகப்பட்டது,அந்த நண்பர் என்ன காரணத்தினால் அதனை எடுத்தார் என்பது உங்களுக்கும் சரி, எனக்கும் சரி இன்னும் எவருக்கும் சரி, தெரியாது. அது, அந்த நண்பருக்குத்தான் தெரியும். இப்படி இருக்கும்போது, ஜஸ்ட் அவரது பதிவில் அவர் எழுதிய நான்கு வரிகளை வைத்து, எப்படி அவர் மீது இப்படி உங்களது தீர்ப்புகளை வாரி வழங்க முடிகிறது உங்களால் என்பது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.

    இன்னொன்று – அவரது தளத்தில் நீங்கள் போட்ட ஆங்கிலப் பின்னூட்டம் எந்தத் தொனியில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? என்னமோ ஒரு கொலைகாரனிடம் தார்மீகக்கேள்வி கேட்கும் ஒரு தொனி அதில் தெரிகிறது.. இதோ அதை இங்கே மறுபடி வெளியிடுகிறேன்.

    ‘Being a NRI, hopefully with a handful salary, how are you eligible for this insurance scheme?? I hope there is a maximum cap in the annual income for eligibility. Kindly explain gentleman! Waiting for your reply’

    படித்தீர்களா? எப்படி உங்களால் இப்படி ஒரு தொனியில் சட்டென்று ஒரு தீர்ப்பு வழங்க முடிகிறது?

    என்னிடம் யாராவது இந்தத் தொனியில் பின்னூட்டம் இட்டிருந்தால், நடப்பதே வேறு. இரண்டாகக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பேன். உங்களது தொனியினால் தான் அவர் பதில் அந்தத் தொனியில் உள்ளது.

    எனவே, இந்த விஷயத்தை ட்ராப் செய்துவிட்டு, அவருக்கே நல்ல முறையில் ஒரு மின்னஞ்சல் போடுங்கள். அதன்பின், அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்தலாம்.
    அதை விட்டுவிட்டு, இதைப் பற்றி ஒரு பதிவும் போட்டு, அதில் மக்களின் ஃபீட்பேக் வேறு கேட்டால், என்னுடைய மனதில் தோன்றிய வெளிப்படையான எண்ணத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

    என்னுடைய சிம்பிள் பதில் – ஒரே வரியில்.

    ’இப்புடி பிக்காளித்தனமா யோசிக்குறத நிறுத்திட்டு, போய் புள்ள குட்டிங்கள படிக்க வெய்ங்கய்யா !!’

    Reply
  52. Arjun Kannan

    மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    Reply

Join the conversation