எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 2 – விக்ரம்
இந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு.
டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை.
vikram . . .
எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம்.
விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு.
வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற கமலின் பிரம்மாண்டமான ஒரு கட் அவுட். மத்தியப் பேருந்து நிலையத்தின் ஹைலைட்டான அப்ஸரா தியேட்டரின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பக்கம் போகும் எவராலும் அந்தக் கட் அவுட்டைப் பார்க்காமல் இருக்கவே முடியாது. அட்டகாசமான ஒரு கட் அவுட் அது.
அத்தகைய கட் அவுட்டின் கீழ், வி க் ர ம் என்று கம்ப்யூட்டர் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒரு பிரம்மாண்டமான விஷயம், ஒரு சிறுவனின் மனதில் எத்தகைய ஒரு பாதிப்பினை உருவாக்கியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
எனது தந்தை, எனது நண்பராகவே இன்னமும் இருக்கிறார். அவர் எனது மிகச்சிறு வயதில் அழைத்துப்போன முதல் படம், Jaws. அதுதான் தியேட்டரில் நான் பார்த்த முதல் படம். அதன்பின், ராம்போ 2. அதன்பின் பல ஆங்கிலப்படங்கள். நாங்கள் இருவரும் பார்த்த தமிழ்ப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கோவையில் செண்ட்ரல் தியேட்டரில், அவரின் கரம் கோர்த்து நின்று, பெரிய கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் ஆங்கிலப்படத்தின் கதைச்சுருக்கத்தைப் பல முறை படித்திருக்கிறேன். அவர் தான் எனக்கு லயன் மற்றும் திகில் காமிக்ஸையும் அறிமுகப்படுத்தியவர்.
அவரிடம் கேட்டு, எனது தாய்மாமாவுடன் (போன பதிவில் பார்த்தோமே – இசைத்தட்டு நூலகம் வைத்திருப்பவர்) போன படமே விக்ரம்.
கடந்த ஐந்து வருடங்களில், விக்ரம் டிவிடியைத் தேடியதுபோல், வேறு எந்த உலகப்படங்களின் டிவிடியையும் நான் தேடியதில்லை. சென்னை (பர்மா பஜார்), பாண்டிச்சேரி, மதுரை என்று நான் தேடாத இடமில்லை. ஐந்து வருடங்கள் தேடி, கோவையில் ஒரு இடத்தில் கண்டுபிடித்தேன். அதன்பின், அவர் எனது நண்பராகவே ஆகிப்போனார். அவரிடம் இல்லாத உலகப்படமே இல்லை என்று கூறலாம். அந்தக் கடை, என்னைப்போல் உலகப்படங்களின் ரசிகர்களுக்கு ஒரு சொர்க்கமாகவே விளங்கியது. அவரிடம் நான் வாங்கிய படங்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 200 இருக்கும்.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர், ஒரு பிரச்னையில் சிக்கி, அந்தக் கடை மூடப்பட்டது. இத்தனைக்கும் அவர், ஒரு உலகத் திரைப்பட க்ளப்பையும் கோவையில் நடத்தி வந்தார். அது ஒரு கொடுமை. கோவையின் உலகத் திரைப்பட ரசிகர்கள், அவரை மறக்கவே இயலாது. அவரது கடையில், ஜோல்னாப்பை சகிதம் வரும் பல உலகப்பட ரசிகர்களிடம் அளவளாவியது என்றென்றும் என்னால் மறக்க முடியாத விஷயம்.
சரி. விக்ரம் படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
இப்படத்தில், சுகிர்தராஜாவை மறக்க முடியுமா?
சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதையான விக்ரமை முழுதாகப் படித்திருக்கிறேன். அந்தத் தொடர்கதைக்கும் திரைப்படத்துக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும், அந்தக் கதையும் என்னால் மறக்க இயலாது.
இப்படம் ஆரம்பிக்கும் தொனியே, ஜேம்ஸ்பாண்ட் படங்களை நினைவுபடுத்தும் (குறிப்பாக மூன்ரேக்கர்).
நீதிபதி, ‘அஷ்ரப் ஹுஸேன், ஃப்ரான்ஸிஸ் அடைக்கலராஜ், டி சி வோரா’ ஆகிய மூன்று குற்றவாளிகளுக்கும் 25 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. இந்த மூவரும், வீசியடிக்கும் மழைக்காற்றில், போலீஸ் வேனில் ஏற்றப்படுகிறார்கள். காட்சி ஃப்ரீஸ் செய்யப்படுகிறது. கமலின் வால்த்தர் பிபிகே ஃபோட்டோ, டிம்பிள் கபாடியாவின் ஃபோட்டோ, அம்ஜத்கானின் ஃபோட்டோ, லிஸியின் ஃபோட்டோக்கள் காட்டப்படுகின்றன. அதன்பின், அந்த டிஜிட்டல் எழுத்துக்கள் மிளிர்கின்றன.
வி க் ர ம்.
டைட்டில் சாங் ஆரம்பம்.
பாட்டு முடிந்தவுடன், காட்சி ஒரு புறாவைக் காண்பிக்கிறது. அத்துடன் காட்சி ஃப்ரீஸ் செய்யப்படுகிறது. அப்போது, வயலின்களின் கூட்டணி பின்னியெடுக்கிறது. எழுத்துக்கள், அந்தப் புறாவின் பின்னணியில் மிளிர்கின்றன.
கதை – வசனம் – சுஜாதா.
திரைக்கதை – கமல்ஹாஸன் – சுஜாதா.
கலை – B. சலம் (இவர், அக்காலத்தின் பல படங்களில் பணிபுரிந்தவர்).
எடிட்டிங் – R. விட்டல் & C. லான்ஸி (இவர்களும் தான்).
ஒளிப்பதிவு டைரக்டர் – V. ரங்கா
இயக்கம் – ராஜசேகர் (இவரைப் பற்றியே ஒரு தனிப்பதிவு எழுத உத்தேசம்).
படம் தொடங்குகிறது. ராணுவ அணிவகுப்பு. இந்திய ராணுவ முகாம் அது. அக்னிபுத்திரன் ஒரு பெரிய ட்ரக்கில் கொண்டுவரப்படுகிறான் (என்னது? அக்னிபுத்திரன் யாரா? அடப்பாவிகளா). ஸ்ரீஹரிகோட்டாவை இன்னமும் ஒருமணிநேரத்தில் சென்று சேர வேண்டும் என்று அதிகாரி ஆணையிடுகிறார்.
அணிவகுப்பு புறப்படுகிறது. அதனை, பைனாக்குலரில் ஒருவன் பார்க்கிறான் (விக்ரம் தர்மா – முதல் படம்). தனது பாஸுக்குத் தகவல் கொடுக்கிறான் –
‘சார் . .வண்டி வந்துக்கிட்டிருக்கு சார் – ஓவர்’.
ஒரு பெரிய ப்ளைமோத் காரைப் பார்க்கிறோம். அதன் பின் சீட்டிலிருந்து, ஒரு கை எழுகிறது – வயர்லெஸ்ஸுடன்
– ‘நெசம்மாவா? நீ வாத்தியங்களையெல்லம் எடுத்துக்கிட்டு அங்க போயிரு. நான் முகூர்த்தத்துக்கு அங்க வந்துர்ரேன் – ஓவர்’.
அக்கினிபுத்திரன் கடத்தப்படுகிறது. ஒரு ஹெலிகாப்டர் அங்கு வந்து, அந்த ஏவுகணையை எடுத்துச் செல்கிறது. அப்போது, காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அதிகாரி துப்பாக்கியுடன் எழ, எரியும் பிணத்தைத் தாண்டி வரும் ஒரு உருவம், இரு கைகளையும் உயர்த்தி, கையினடியில் இருக்கும் துப்பாக்கியால் அந்த அதிகாரியைச் சுட்டுக் கொல்கிறது (’போகும்போது நினைவுபடுத்துங்க. . அஞ்சலி செலுத்தணும். கடுமையான தேசபக்தனா இருப்பான் போல இருக்கு’).
அது – சுகிர்தராஜா (என்ன ஒரு பெயர் !!!) – சத்யராஜ்.
அதன்பின், ராணுவ அதிகாரிகளின் கூட்டம் – அமைச்சர் விகே ராமசாமி வருகை -விக்ரம் தேர்ந்தெடுக்கப்படுவது – அம்பிகா கொல்லப்படுவது – துரோகி ராகவேந்தர் – சாருஹாஸன் (மிஸ்டர் ராவ் – எம்மின் தமிழ் வடிவம்) – விக்ரம் மறுபடி வேலையில் சேர்வது – லிஸியைப் பார்ப்பது – தியேட்டரில் பைக் சைட்கார் சாகஸம் – சலாமியா செல்வது – ஜனகராஜ் (துபாஷ்) அறிமுகம் – டிம்பிள் கபாடியா அறிமுகம் (இளவரசி இனிமாஸி), அம்ஜத்கான் – மனோரமா அறிமுகம் – தலைமைப் பூசாரி – எஞ்சோடி மஞ்சக்குருவி பாடல் – எலிக்கோவில் – அங்கு விக்ரம் பிடிபடுவது – பாலைவனம் – அங்கு விக்ரமைப் பாம்பு கடிப்பது – மீண்டும் மீண்டும் வா பாடல் – அதன்பின் க்ளைமாக்ஸ் சாகஸம் – இவ்வாறாகப் படம் செல்கிறது.
இப்படத்தில் என்னால் மறக்க முடியாத அம்சம், சத்யராஜ் – சத்யராஜ் – சத்யராஜ்!!!
அவர் இல்லாவிடில், இப்படமே இல்லை. அத்தகைய ஒரு வேடம் அவருக்கு. ஒரு உதாரணமாக, ஸலாமியாவின் தலைமைப்பூசாரி மொட்டையிடம் அவர் பேசும் ஒரு காட்சி. அரசரின் மனைவி மனோரமா சத்யராஜைக் கண்டு எகிற, அதற்கு சத்யராஜ் பேசும் வசனம் நக்கலின் உச்சம் – ‘டேய் மொட்ட . . இந்தக் கோட்டைப் புடி . . இவள ரேப் பண்ணிர்றேன்’ .
அதற்கு மொட்டை, ‘அண்ணே . . அதுக்கெல்லாம் இப்ப டைம் இல்லண்ணே . வாங்க நீங்க’.
இதுதான் சுஜாதா. இதுதான் சத்யராஜ்.
அதேபோல், ஜப்பானில் கல்யாணராமன் படத்திலும், கமல் என்று நினைத்து, கவுண்டமணியை கிட்நாப் செய்துவிடுவார்கள் வில்லன் சத்யராஜின் ஆட்கள். அப்போது, கட்டுண்டு கிடக்கும் கவுண்டமணியையும் அவரது மனைவி கோவை சரளாவையும் சத்யராஜ் பார்க்க வருவார். அப்போது அலறும் கவுண்டமணியைப் பார்த்து, எந்த ஊர் என்று சத்யராஜ் கேட்க, கோவை என்று கவுண்டமணி சொல்வார்.
அதற்கு சத்யராஜ், ‘அட.. நமக்கும் அதே ஊர்தானுங்ண்ணா’ என்று கூற, சந்தோஷமாகும் கவுண்டர்., கோவையில் எந்த இடம் என்று கேட்க, ‘பாப்பநாய்க்கன் பாளையம்’ என்று கோவை பாஷையில் சத்யராஜ் சொல்வார். இக்காட்சியைக் கவனித்துப் பார்த்தீர்களென்றால், இந்த இருவரின் கெமிஸ்ட்ரியையும் அறியலாம். அந்தப் படத்தில் இருந்து தான் இந்த இருவரின் அட்டகாசமான கூட்டணி உருவானது என்று நினைக்கிறேன்.
இப்படியாக சத்யராஜ் சுகிர்தராஜாவாக நடித்த விக்ரம் படம், எனது மிக ஃபேவரைட்டான படமாக மாறிப்போனது.
விரம் விசிறிகள் யாராவது இருக்கிறீர்களா?
இதோ . .உங்களுக்காக . . ஆர்க்குட்டில் நான்கு வருடங்கள் முன்னர் நான் ஆரம்பித்த ‘விக்ரம்’ கம்யூனிடி.. உங்களுக்குப் படம் பிடிக்குமென்றால், அந்தக் கம்யூனிடியில் வந்து மெம்பராகிக் கொள்ளலாம். அதே போல், IMDBயில் விக்ரம் படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் இங்கே பார்க்கலாம். IMDBயில் தேடினீர்களென்றால், பழைய மசாலாப் படங்களுக்கு நான் எழுதிய விமர்சனங்களும் உங்களுக்குக் கிடைக்கும் ? (எழுதிய ஆண்டு – 2006).
பி.கு – கோவை மணீஸ் தியேட்டரில் இப்படம் சில வருடங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனபோது, ‘ஜாலியாக’ நானும் எனது நண்பன் பாலுவும் இரவுக்காட்சி இப்படத்துக்கு ரமனோவ் வோட்கா அடித்துவிட்டுப் போய்ப் பார்த்து உற்சாகமடைந்தது நினைவு வருகிறது.
மீண்டும் சந்திப்போம்….
—– தொடரும்
டைட்டிலை காணாம்!! மிஸ்டர் விக்ரம்.. கண்டுபிடிச்சிக் கொடுங்க.
தேங்க்ஸ் விக்ரம். யு த க்ரேட்!! 🙂
////ஆர்க்குட்டில் நான்கு வருடங்கள் முன்னர் நான் ஆரம்பித்த ‘விக்ரம்’ கம்யூனிடி.. உங்களுக்குப் படம் பிடிக்குமென்றால், அந்தக் கம்யூனிடியில் வந்து மெம்பராகிக் கொள்ளலாம்.
//////
என்னது.. ஆர்குட் ‘கம்யூனிட்டி’யா???
திரும்ப மொதல்ல இருந்து ஆரம்பிக்கனும். பரவாயில்லையா தல?
வாங்க பாலா 😉
ஃபோட்டோ பின்னியெடுக்குது? !! 😉
பரவாயில்ல தல.. வாங்க.. ஆர்க்குட்ல சேருங்க. . அப்புடியே ஃபேஸ்புக்லயும் வாங்க.. பின்னிரலாம். .
தேளு கமல் போட்டோ சூப்பர்…. தலைவர் தலைவர்தான்…
இந்தப்படத்துல இன்னொரு ஸ்டில் வரும் கறுப்பு டீஷர்ட் போட்டு உக்காந்திருக்கற மாதிரி அதைத்தான் எங்கவீட்டு டயனரோ டிவி சின்ன வயசுல ஒட்டிவச்சேன்… இந்தப்படத்தை அடுத்த வீக்என்ட்ல இன்னொரு வாட்டி பார்த்துடவேண்டியதுதான்.
சூப்பர் படம் நண்பா
எல்லா பாட்டுமே ஹிட்டு
//பரவாயில்ல தல.. வாங்க.. ஆர்க்குட்ல சேருங்க. . //
எதுக்குங்க..?? அப்புறம் பிரச்சனைன்னு வந்தா…, நான் விக்ரம் படத்துக்கு சப்போர்ட் பண்ணுறதா.. என் கம்யூனிடியை எல்லாம்.. தோண்டுவாங்களே! 🙂
நோ ஆர்குட்… நோ ஃபேஸ்புக்….!! 🙂 🙂
என் ஜோடி மஞ்சக்குருவி,
வனிதாவனி
மீண்டும் மீண்டும்
எல்லாம் இன்னிக்கு கூட கேட்டேன்
//பரவாயில்ல தல.. வாங்க.. ஆர்க்குட்ல சேருங்க. . //
எதுக்குங்க..?? அப்புறம் பிரச்சனைன்னு வந்தா…, நான் விக்ரம் படத்துக்கு சப்போர்ட் பண்ணுறதா.. என் கம்யூனிடியை எல்லாம்.. தோண்டுவாங்களே! 🙂
நோ ஆர்குட்… நோ ஃபேஸ்புக்….!! 🙂 :)//
தல இது அந்த கம்யூனிட்டி இல்ல
அய்யோ!!!!!!!!!!!
நண்பா எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்?
இதுல மீண்டும் மீண்டும் வா பாட்டில் முன்னாள் நடிகை – சிவராத்திரி தூக்கமேது-ரூபினி எக்ஸ்ட்ராவாக வருவாரா?
எனி க்ளூ?
ஆர்குட் கம்யுனிட்டுல சேர்ந்துட்டுத்தான் தல மறுவேலை…
அனைக்கு எனக்குகூட விக்ரம் படம் ஞபாகம் வந்துடுச்சு… அதைதான் ஏக் துஜேகேலியே பதிவுல எழுதினேன். சூப்பர் படம். இன்னும் மறக்க முடியாது. ஆன்லைன்ல கிடைக்குமான்னு தேடனும்….
தல போட்டோ வெல்லாம் சூப்பர்.
தல ஹாலிவுட் மலையையும் ஹோர்டிங்கையும் யூஸ் பண்ண கூடாதுன்னு தடை வாங்கலையே?வினோத் தான் கொளுத்திபோட்டார் சைட்ல
இந்தப் படத்தில் வரும் கமலோட ஒரு ஸ்டில்லை….. சொன்னா நம்புங்க…. கிட்டத்தட்ட கமல் மாதிரியே வரைஞ்சிருக்கேன். அது அந்தக் காலம்.
////பரவாயில்ல தல.. வாங்க.. ஆர்க்குட்ல சேருங்க. . //
எதுக்குங்க..?? அப்புறம் பிரச்சனைன்னு வந்தா…, நான் விக்ரம் படத்துக்கு சப்போர்ட் பண்ணுறதா.. என் கம்யூனிடியை எல்லாம்.. தோண்டுவாங்களே! 🙂
நோ ஆர்குட்… நோ ஃபேஸ்புக்….!! 🙂 :)//
அண்ணே அவ்ளோ தூரம் யோசிக்கீகளா? மனசு கஷ்டமா இருக்கு! விடுங்க தல…. இதுவும் கடந்து போகும்.சீக்கிரம் எண்ணெய் கசிவு பற்றி ஒரு பதிவு போடுங்க்..நன்றி
//அப்புறம் பிரச்சனைன்னு வந்தா…, நான் விக்ரம் படத்துக்கு சப்போர்ட் பண்ணுறதா.. என் கம்யூனிடியை எல்லாம்.. தோண்டுவாங்களே! :)//
ஆகா…நம்ம தல இன்னும் பயந்துப்போய் கிடக்காரே…தல என்ன இன்னும் நார்மலாகலியா…போய் வேப்பிலை அடிங்க முதல்ல.:)))
இதுல மூனுஜோடில்ல ஒலகநாயகருக்கு
எதுக்கு ஹாலிவுட்டுக்கு ஃப்ரீயா விளம்பரம் கொடுக்கணும்னுதான்!! 🙂
படம்,பாடல்கள் அருமையா இருக்கும். நிறையா யோசிச்சிருப்பாரு சுஜாதா. எனக்கு புடிச்சது கமல், ஜனகராஜ் , அப்புறம் அந்த ராணி 🙂
//சீக்கிரம் எண்ணெய் கசிவு பற்றி ஒரு பதிவு போடுங்க்..நன்றி//
இதில் இரட்டை அர்த்த உள்குத்து இருப்பது போலிருக்கே புலவரே!!!
//இதுல மூனுஜோடில்ல ஒலகநாயகருக்கு//
தல கார்த்தி…இதை சொல்லிட்டு ஒரு பெருமுச்சு வேற ஏன் விடறீங்க..)ஒலகநாயகருக்கு முன்ணுறு ஜோடி வச்சாலும் சமாளிப்பாரு….
இங்கன ஆர்குட்டை பேன் பண்ணியிருக்காங்க,நண்பா,
எல்லா ஆபாச சைட்டும் பெப்பரப்பேன்னு சிரிக்கி,ஆர்குட்ட போய்!!!
நினைவு வருதான்னு பார்க்கறேன்….!!
கண்ணே…….
ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்
தொட்டுக்கவா… கட்டிக்கவா..
ஹூஹும்….
கட்டிக்கிட்டு… ஒட்டிக்கவா…
.
.
ஒட்டிக்கிட்டா.. பத்திக்குமே..
பத்திக்கிட்டா… ஒட்டிக்குமே..
ம்ம்ம்ம்ஹும்…
.
.
அஞ்சுகமே உன்னை எண்ணி
விட்டு.. விட்டு..
துடிக்குது…
கட்டழகே.. உன்னை எண்ணி
கண்ணுமுழி பிதுங்குது…
கொத்திடவிட வேணுமுன்னு
கொக்கு ஒன்னு துடிக்குது..
தப்பிவிட வேணுமின்னு
கெண்ட மீனு தவிக்குது..
ஹ்ஹ.. குளிக்கிற மீனுக்கு
குளிரென்ன அடிக்குது..
பசி.. தாங்குமா..
இளமையினி..
பறிமாறவா.. ஹ்ஹா
இளமாங்கனி……………..
வனிதாவனி… வனமோகினி… வந்தாடு……
@பிரதாப்,
ஆமாம்ல
ஹேராம்ல நல்லவேளை ஹேமமாலினி யையும் பிக்கப் செய்வது போல் கதையை மாத்தல!!அதுல ரெண்டு தான் சோடி
//பத்திக்கிட்டா… ஒட்டிக்குமே..///
ஸாரி….
பத்திக்கிட்டா….. பத்தட்டுமே..
என்பதுதான்.. சரியான வரி என.. தீர்ப்பு கூறுகிறேன்.
/////சீக்கிரம் எண்ணெய் கசிவு பற்றி ஒரு பதிவு போடுங்க்..நன்றி//
இதில் இரட்டை அர்த்த உள்குத்து இருப்பது போலிருக்கே புலவரே!///
அடப்பாவிகளா…………
ஆஹா… சூப்பர்.. .இங்க விக்ரமுக்கு இவ்ளோ ரசிகர்கள் இருக்காய்ங்களா ?? ஃபண்டாஸ்டிக் !!
@ பாலா – உங்க நினைவு சூப்பரு !! பின்னிட்டீங்க. . அட்டகாசம் !! அப்புடியே அந்த ஸ்டில்லை ஸ்கேன் பண்ணி, போடுங்க !!
@ கார்த்திகேயன் – //இங்கன ஆர்குட்டை பேன் பண்ணியிருக்காங்க,நண்பா,
எல்லா ஆபாச சைட்டும் பெப்பரப்பேன்னு சிரிக்கி,ஆர்குட்ட போய்!!!
//
இதுதான் ஒலக காமெடி !! 😉
/////சீக்கிரம் எண்ணெய் கசிவு பற்றி ஒரு பதிவு போடுங்க்..நன்றி//
இதில் இரட்டை அர்த்த உள்குத்து இருப்பது போலிருக்கே புலவரே!///
அட !! நானுமே இப்புடித்தேன் நினைச்சேன் 😉
ஐஎம்டிபி போனேன் நண்பா
பெரிய தமிழ்தொண்டு எல்லாம் செய்யறீங்க சூப்பர்.
காப்பிரைட் இல்லாத போட்டோ போடமுடியாதுல்ல?
//இதுல மீண்டும் மீண்டும் வா பாட்டில் முன்னாள் நடிகை – சிவராத்திரி தூக்கமேது-ரூபினி எக்ஸ்ட்ராவாக வருவாரா?
எனி க்ளூ?
////
என்னேயொரு….. ஆராய்ச்சி?!!!
சத்யராஜின் நெருங்கிய நண்பர்கள் ரகுவரனும்,நிழல்கள் ரவியும்னு எங்கோ படிச்சேன்,ஆங் ரகுவரன் இறந்தபோது சத்யராஜ் சொன்னது
//ஆஹா… சூப்பர்.. .இங்க விக்ரமுக்கு இவ்ளோ ரசிகர்கள் இருக்காய்ங்களா ?? ஃபண்டாஸ்டிக்
//
ஏங்க.. மொத்தமா.. மூணு பேருதானே.. மாத்தி மாத்தி கும்மறோம்?? அதுக்கேவா??!!! 🙂
இப்படித்தான்.. ‘பிரபல’ பதிவர்கள் எல்லாம்.. ‘நமக்கு’ ஏகப்பட்ட சப்போர்ட் இருக்குன்னு நினைச்சிக்கிறாங்களோ??!! 🙂
//சத்யராஜின் நெருங்கிய நண்பர்கள் ரகுவரனும்,நிழல்கள் ரவியும்///
மக்கள் என் தீர்ப்பு!!!
என் நியாபகத்துல கொள்ளிக்கட்டையை வைக்க!!
மக்கள் என் பக்கம்!!
ஓகே.. மீ த கும்மி ஓவர்!!!
நௌ… மை.. பிஸி வொர்க்கிங் ஆக்டிங் ஸ்டார்ட்..!!
ச்லைட் ஷோ விட்ஜெட்டை அகலம் சிறிசு பண்ண ஹாலிபாலி 180 விட்த் வைக்க சொன்னார்.வொர்கவுட் ஆகுது
//பிஸி வொர்க்கிங் ஆக்டிங் ஸ்டார்ட்..!!//
தல இன்னும் 8 மணிநேரத்தில் இதை நான் செய்யனும்
சூப்பர் படம் தேள் இது. கமல் படம் முழுக்க ரொம்ப ஸ்டைலிஷா பின்னி இருப்பார்.
ஐய்………. நான் முதன் முதலில் திரையில் பார்த்த தமிழ்படம்..மறக்க முடியாத நினைவு..!!ரெண்டாவது “தாய்க்கொரு தாலாட்டு”னு நினைக்கிறேன்..பாஸ் நானும் உங்களைப் போலத்தான் i was a கமல் விசிறி..ரஜினி விசிறி அல்ல..! உங்களுக்கு உங்க அப்பா போல எனக்கு என் மாமா..!:)
விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன் பகையை முட்டிவிட்டவன் தீயைச் சுட்டுவிட்டவன் என நான் சிறுவ்யதில் பாடித்திருந்த பாடல் இன்னமும் என் மனசில் நிற்கின்றது.
உங்கள் விமர்சனம் அருமை.
உலகநாயகனின் ரசிகனான என்னால் உங்கள் முன்னுரையை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் வானும் மண்ணும் என் பெயர் சொல்லும் என அவர் என்று சொன்னபடியால் அவர் என்றைக்கும் உலக நாயகன் தான்.
விக்ரம் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம், வனிதாமணி பாடலும் ஆண்டவர் அந்தப்பாடலில் பாடும் ராப்பும் இசைஞானியின் இசையும் இந்தப் படத்தை மீண்டும் எடுத்தால் இன்னும் கலக்கலாக இருக்கும் என நினைக்க்கின்றேன்.
வாழ்க கமல் வளர்க அவரின் பணிகள்.
பழைய நினைவுளை நினைத்து பார்க்க வைத்து விட்டீர்கள்…இப்போது வீட்டில் குமுதம் புத்தகம் எங்கள் வீட்டில் வாங்குவார்கள்…அதில் தொடராக வந்தது.. ஒவ்வொரு வாரமும் கதையில் கமலின் ஆக்ஷன் காட்சிகளுடன் அந்த பகுதி வரும்… அதை நான் இரண்டு வரி கூட படித்தது இல்லை…
தியேட்டர் வாசலில் விக்ரம்.. டிக்கெட் விக்ரம் என்று கத்தியது நினைவுக்கு வருகின்றது.. நன்றி கருந்தேள்..
my favorite movie too. the good thing is they (film makers) themselves didn’t take it seriously, handled the whole film very funny way (even though the subject is serious)
my favorite scene is when the chief looks in to pages of secret agents and says he is deceased, this one is dead, that one is left…we have one guy left. Lol
this one reminds me some of the roger moore’s outings as bond. his films had the similar fun and masala. octopussy, man with golden gun type…thanks for the wonderful post.
என்னத்த சொல்ல?
நல்ல பதிவு, நன்றி அய்யம்பாளயத்தாரே.
இந்த குமுதம் தொடர்கதை என்னிடமும் உள்ளது. இந்த தொடர் வந்த நேரத்தில் தான் ஜெயராஜின் அப்புசாமியும் கலர் டிவியும் என்றொரு சித்திர தொடர் வெளிவந்தது.
இந்த படத்தையெல்லாம் பற்றி எதுவுமே சொல்ல முடியாது. அப்போதெல்லாம் நாங்க டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் என்று இருந்த காலம். முழுக்க முழுக்க ஹிந்தி, தெலுகு படங்களே எமக்கு தெரிந்தவை. நாயகன் படத்த கூட தெலுகுவில் தான் “நாயகுடு” என்று பார்த்தேன்.
//பாட்டு முடிந்தவுடன், காட்சி ஒரு புறாவைக் காண்பிக்கிறது. அத்துடன் காட்சி ஃப்ரீஸ் செய்யப்படுகிறது. அப்போது, வயலின்களின் கூட்டணி பின்னியெடுக்கிறது. எழுத்துக்கள், அந்தப் புறாவின் பின்னணியில் மிளிர்கின்றன.//
அந்த பின்னணி இசையில் ராசா விளையாடி இருப்பார். http://www.youtube.com/watch?v=KWK7szRdbrE
//அதற்கு சத்யராஜ், ‘அட.. நமக்கும் அதே ஊர்தானுங்ண்ணா’ என்று கூற, சந்தோஷமாகும் கவுண்டர்., கோவையில் எந்த இடம் என்று கேட்க, ‘பாப்பநாய்க்கன் பாளையம்’ என்று கோவை பாஷையில் சத்யராஜ் சொல்வார். இக்காட்சியைக் கவனித்துப் பார்த்தீர்களென்றால், இந்த இருவரின் கெமிஸ்ட்ரியையும் அறியலாம். //
கடைசியில் கட்டை அவுத்து விடச் சொல்லி கவுண்டர் சொல்லுவார் அதற்க்கு சத்யராஜ் “டேய் அவுத்துஉடுங்கடா டேய்” என்று ஜப்பானிய அடியாட்களிடம் சொல்வார். அப்போ கவுண்டர் அவருக்கே உண்டான கொங்கு தமிழில் ” நோவ் இங்கிலீஷ்ல சொல்லுங் நா” என்பார். அவர்களின் நக்கல்களை திரும்ப திரும்ப பாத்துட்டே இருக்கலாம்.
அண்ணாத்தைங்களா ! விக்ரம் படம் எனக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த படம் you tube ல இருக்குது. 🙂
என்ஜாய்!!
http://www.youtube.com/watch?v=k_ke90ekUeY&feature=related
கருந்தேள், காமிக்ஸ் வாசித்து வளர்ந்த நமக்கு விக்ரம் படம் பிடிக்காமால் போனால் தான் ஆச்சர்யபட வேண்டும்… வெளிநாட்டு பயணம், சீக்ரெட் ஏஜென்ட் சாகஸம், எலிக்கோவில் மர்மம், கடத்தல் கும்பல், என்று ரசிக்க தக்க அம்சங்கள் அனைத்தும் இருந்தது. இப்போது பார்க்கும் போது சில ஹம்பக் பேன்டசி காட்சிகளையும் ரசித்தோமா என்று ஆச்சர்யம் வந்தாலும், அந்த சமயத்தில் இது கட்டாயம் ஒரு ட்ரென்ட் செட்டர் தான்.
இலுமி கொடுத்த லிங்கை பார்த்தேன்… அந்த ஆடுபுலி ஆட்டம் ஆடி கொண்டே கோர்டில் ஆஜர் ஆகும் குற்றசக்கரவர்த்திகள் அறிமுகம் அபாரம்… பதிவில் நோஸ்டால்ஜி பின்னுகிறது.
இப்போ எடுக்க வேண்டிய படத்த இருபது வருஷம் முன்னாடியே எடுத்தது தப்பு. அந்த எலிக் கோவில், அப்புறம் கமலை டிம்பிள் காப்பாற்றும் காட்சிகள் சூப்பர்.
சூப்பர் படம், ஆனா வந்த சமயத்தில படம் ப்ளாப் தானே?
ஆனாலும் இந்தபடம் ஃப்லாப் தானே நண்பா,
இதனால் கமல் தன் சொந்தவீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டுக்கு குடிபோனார் என்றும் படித்தேன்,படம் வந்த சமயத்தில் திருட்டு வீடியோ கேசட்டுகள் அதிகம் புழங்கியதாயும் ,எம்ஜியாரிடம் தனிமையில் சந்தித்த்து கோரிக்கை வைத்ததாயும் படித்த நினைவுகள்,
நோஸ்டால்ஜியாக்கள் சுகமானது,
விக்ரம்…….க்ருக்ருக்,விக்ரம்…….க்ருக்ருக்
அப்போதைக்கு பெரிய முயற்சி இப்படம்
அப்படின்னா, இங்க நான் மட்டுந்தான் இந்த படத்தை பாக்காம இருக்கேனா??? நாவல் படிச்சு இருக்கேன்… ஆ, நிறமற்ற வானவில், வசந்தகால குற்றங்கள் எல்லாம் படிச்சப்பறம், விக்ரம் படிச்சதுல கொஞ்சம் கடிப்பாதான் ஆயிடுச்சு…
My favourite movie
// அந்தப் படத்தில் இருந்து தான் இந்த இருவரின் அட்டகாசமான கூட்டணி உருவானது என்று நினைக்கிறேன். //
அதுல நடிகன் தான் டாப்பு
நண்பரே,
விக்ரம் பாடல்கள் வெளியாகிய காலம். அதிலும் அந்த தீம் பாடல் இருக்கிறதே. விக்ரம்..விக்ரம்..என்று ஆரம்பித்து பின் ரோபோக்களின் குரலில் விக்ரம், விக்ரம் என நீளுமே அடடா என்ன ஒரு பாடல் அது. அது சில நாட்களிற்கு தேசிய கீதமாக இருந்தது[ பொறுப்பது புழுக்களின் இனமே போன்ற புரட்சி வரிகள் வேறு :)]
ஆனால் படம் அவ்வளவு வெற்றி பெறவில்லை என்பதுதான் வருத்தம். ரஜினியின் மாவீரன் படத்தை இயக்கிய இயக்குனர்தான் இப்படத்தையும் இயக்கினாரா என்பது தெரியவில்லை.
சத்யராஜ், பின்னி எடுப்பார், அவர் நக்கலும், நளினமும் அடிக்க ஆளில்லை. உண்மையாகவே கமலைவிட அட்டகாசமாக செய்திருப்பார். கமலிற்கு உதவியாக கூட கனத்த கண்களுடன் 🙂 ஒரு பெண் வருவாரே. அவர்கூட நன்றாகவே இருப்பார்.
சிறப்பான பகிர்வு.
சிறப்பான பகிர்வுக்கு
நன்றி கருந்தேள்
தேளாரே,
நானும் கம்யூனிடியில் ஐக்கியமாயிடுறேன்
Unka community la sentha, “community certificate” kedakkuma?
படத்தில் சுஜாதாவின் வசனங்கள் அபாரம். உதாரணம் “எந்த விலைமகள் மகன் ராக்கெட்டை திருடிட்டு போனான்?”
தமிழின் முதல் ராப் (RAP) பாடல் ‘வனிதாமணி… ?
விக்ரம் லிசியிடம் ஆண் ,பெண் இன சண்டையின் போது படத்தில் விக்ரம் “நான் வெயில் காலமென்றால் சட்டையை கழட்டி போட்டுட்டு ஹாயாக இருப்பேன், உன்னால் முடியுமா?” என்று கேட்டு அவளை அடக்குவார். அதே சண்டையை குமுதத்தில் எழுதும்போது சுஜாதா என்னை அதிர வைத்தார்! ‘மனுஷன் என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கிறார்!’ என்று சிரித்து தலையில் அடித்துக்கொண்டேன்!
அடப்பாவி அனானி. . . இந்தக் கும்மிய டோட்டலா ஜாதிப்பிரச்னையாக்கப் பாக்குறீங்களா ???? 😉 ஹீ ஹீ
இந்தப் பதிவில் பின்னூட்டம் போட்டிருக்கும் நண்பர்களே… அத்தனை பேருக்கும் மிக்க நன்றி… ஒவ்வொருவருக்கும் தனியாக பதில் சொல்ல முடியவில்லை… வேலை காரணமாக.. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்… நாளை பதிலளிக்க முயல்கிறேன்… மறுபடியும் அனைவருக்கும் நன்றி
104Regards for all your efforts that you have put in this. Very interesting inamfortion. “He who despairs over an event is a coward, but he who holds hope for the human condition is a fool.” by Albert Camus.
விக்ரம் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? படத்தில் பல விஷயங்கள் தமிழ் பட உலகிற்கு புதுசு.
சரி, இந்த matter எனக்கு புரியல –
>> ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில் வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை << இன்னா matter இது மாமு? பழைய பதிவில ஏதாவது miss பண்ணிட்டேனா?
Thanks for your helpful article. Other thing is that mesothelioma is generally due to the inhalation of dust from meesiholtoma, which is a very toxic material. It truly is commonly witnessed among laborers in the structure industry who have long experience of asbestos. It can be caused by moving into asbestos protected buildings for some time of time, Genetic makeup plays a crucial role, and some individuals are more vulnerable for the risk than others.
@ முரளி – அது ஒண்ணுமுல்ல மாமு.. அது கமலோட அரசியல்.. அவரோட படங்களான ஹேராம், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் மாதிரி படங்கள்ல முஸ்லிம் வெறுப்பை உமிழ்ந்திருப்பார்.. இதைப்பத்தி நாம வேற இடத்துல விரிவாப் பேசுவோம்.. 😉
நல்ல பதிவு. விக்ரம் கதைல ஒரு வசனம் வரும் ” பொம்பளைங்க நெனச்சா என்னவேணாலும் செய்யமுடியும்னு ஹீரோயின்
சொல்லுவாங்க , அதுக்கு ஹீரோ சொல்லுவாரு அப்போ செவுத்துல ஒன்னுக்கு அடிப்பியா” அப்டின்னு கேப்பாரு. (படத்துல கமல் வேறமாதிரி கேப்பாரு.) சுஜாதா சார் மாதிரியெல்லாம் எழுதறதுக்கு இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும்.
சரவணன்,
குருமபலூர்.
enakkum indha padam romba pidikkum… innum nalla nyabagam irukku… indha padatha DD-la correct-ah chennai la puyal thaakuna anikku pottu irundhdanga 🙂
appave ipdi oru padam vandhu irukku… ipa indha maathiri padam varathe illa 🙁
// மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில் வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை.//
Hi Boss ,
What you said above cent percent true. Just have a look at his close circle and you know how fanatic he is about his caste. But many people will go to any lengths to refute this.
Even this movie Vikram itself is an example of what you said.
This post is cool and it gives me nostalgia… Please go on..
Harris
தாறுமாறான படங்க இது! உங்களை மாதிரியே ஆனால் எனக்கு இன்னும் இந்தப்படத்தின் CD கிடைக்கவில்லை.
நம்புனா நம்புங்க விக்ரம் படத்தோட பாடல்கள் இன்று கூட என் iPod ல் இருக்குது. எந்த காட்சி என்று கூற முடியாமல் அனைத்து காட்சிகளும் அசத்தலோ அசத்தல். படத்துக்கு மிகபெரிய பலம் நீங்க கூறியது போல சத்யராஜ் தான்.
அவர் இடத்தில் வேறு எவரையும் நினைத்துக்கூட பார்க்க முடியலை.. பாஷாவில் எப்படி ரகுவரனை யாரும் நிரப்ப முடியாதோ அதே போல விக்ரமில் சத்யராஜ்.
எலிக்கோவில் அரண்மனை ஏஞ்சோடி அனைவரும் கரி சாப்பிடும் இடம்.. சுற்றுலா வந்த என்னை இந்தக்குண்டன் அந்தப்புரத்துக்கு தூக்கிட்டு போய் பந்தாடிட்டான் என்று கூறும் மனோரமா..கமலின் தொழில்நுட்பம் என்று பார்த்து ரசிக்க ஏகப்பட்ட விஷயங்கள்
ஆனால் இது ப்ளாக் பஸ்டர் அல்ல இந்தப்படம் பிளாப் ஆகி விட்டது. இப்ப வந்து இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கும். கமல் பிரச்சனையே படத்தை கொஞ்சம் (ரொம்ப) அட்வான்சாக எடுத்து விடுவார்.
நானும் இந்தப்படத்தை பற்றி எழுதணும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். நேரம் தான் அமையவில்லை.
போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன்
Dear Friend.
Just in case if you haven’t watched “Finding Forrester” please try watch hope you may like it.
Regards,
Sriram
உங்களுடைய பதிவு என் தந்தையுடன் அதே திரை அரங்கில் நான் பார்த்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. அன்று மதிய உணவிற்கு வீட்டிலிருந்து பிரியாணி கொண்டு சென்று “cliffhanger” படம் பார்த்தது மாறாக முடியாத நினைவு (அந்த திரை வசனம் அடங்கிய கரும் பலகையும்).
இந்தப் படத்தில் சுஜாதா அவர்கள் வைத்த “அக்னிபுத்ரா” என்ற பெயர்தான் பின்னாளில் ஒரு ஏவுகணைக்கு வைத்தார்கள். நம் தலைவர் சுஜாதா ஒரு தீர்க்கதரிசி.!
//
இப்படத்தில் என்னால் மறக்க முடியாத அம்சம், சத்யராஜ் – சத்யராஜ் – சத்யராஜ்!!!
அவர் இல்லாவிடில், இப்படமே இல்லை. அத்தகைய ஒரு வேடம் அவருக்கு. ஒரு உதாரணமாக, ஸலாமியாவின் தலைமைப்பூசாரி மொட்டையிடம் அவர் பேசும் ஒரு காட்சி. அரசரின் மனைவி மனோரமா சத்யராஜைக் கண்டு எகிற, அதற்கு சத்யராஜ் பேசும் வசனம் நக்கலின் உச்சம் – ‘டேய் மொட்ட . . இந்தக் கோட்டைப் புடி . . இவள ரேப் பண்ணிர்றேன்’ .
அதற்கு மொட்டை, ‘அண்ணே . . அதுக்கெல்லாம் இப்ப டைம் இல்லண்ணே . வாங்க நீங்க’.
இதுதான் சுஜாதா. இதுதான் சத்யராஜ்.
//
sujatha great athupola sathiyaraj chansayilla ….
“அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்”
Hey Ram, Anbe Sivam, Virumandi, Dasavatharam, Unnai Pol Oruvan are all good movies only. When was the last time you liked a Kamal movie? Plus Kamal is not someone who calls himself as Ulaganayagan. He doesn’t need it either. It is just a title given out of respect by KS Ravikumar. If you had the patience enough to notice in the titles, only in KSR movies he is addressed as “Ulaganayagan”.
//
ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில் வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை.
//
Reading your other reviews, I thought you were a rational blogger. Did he mentioned all Muslims should die? He insisted on police giving terrorists what they deserve. For your information, he also kills a hindu guy who supports the terrorists. Everyone knows how good a rationalist Kamal sir is. I guess you are writing just to show your linguistic skills.
லொங்கு லொங்கு என்று ஒரு பக்கத்திற்கு விக்ரம் பற்றி எனது நினைவுகளை எழுதி Post Comment பட்டனைத் தட்டினால் Blogger ஏதோ error காட்டி எல்லாத்தையும் காலிபண்ணிவிட்டது :-((((((
எனிவே பதிவுக்கு நன்றி.
சூப்பர்.. எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும். நானும் ரொம்ப நாளாக தேடி தேடி இந்த படத்தின் DVD-யை கடைசியில், காந்திபுரத்தில் வாங்கினேன். ஆனால் வீடியோ தரம் அவ்வளவு நன்றாக இல்லை.
Excellent articles…