சென்னை 9th சர்வதேச திரைப்பட விழா – சில குறிப்புகள்

by Karundhel Rajesh December 13, 2011   Tamil cinema

நாளை முதல் ஒன்பது நாட்கள் (14- 22nd Dec 2011) நடக்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 133 வெளிநாட்டுப் படங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, ஒன்பது படங்கள் இந்தியாவின் பிறமொழிகளில் இருந்தும், பனிரண்டு படங்கள் தமிழிலிருந்தும் கலந்துகொள்கின்றன. அவற்றின் அட்டவணை இதோ. நல்ல சினிமா பார்க்கவேண்டும் என்று விரும்பும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். என்னால் இயலாது. இருந்தாலும், நானும் ஒரு திரைப்பட விழாவை என்னளவில் கொண்டாட இருக்கிறேன். ஆகவே, என்னால் முடிந்தவரை இவற்றில் சில நல்ல திரைப்படங்களைப் பற்றி அவசியம் எழுத முயல்கிறேன்.

திரைப்பட அட்டவணை – (க்ளிக் செய்து பெரிதுபடுத்திப் பார்க்கலாம் )

கொரியாவில் இருந்து ஒரே ஒரு படம் தான் இடம்பெறுகிறது (The Front Line). அது என்னைப்பொறுத்தவரை ஒரு பெரிய குறை.

ஃப்ரான்ஸிலிருந்து பதினெட்டு படங்கள் கலந்துகொள்கின்றன.

இவ்விழாவில் திரையிடப்படப்போகும் இரானியப் படங்கள் அனைத்துமே (ஒன்றிரண்டைத் தவிர்த்து) அருமையான படங்கள். தவற விடாதீர்கள்.

678 என்ற எகிப்தியத் திரைப்படம், இந்தியாவில் பெண்கள் தினந்தோறும் சந்திக்கும் பெரும் பிரச்னையான பாலியல் வன்கொடுமையைப் பற்றியது (பேருந்துகளில் கசக்கப்படும் பெண்கள் மற்றும் வன்கலவியால் பாதிக்கப்பட்டவர்கள்). கட்டாயம் இப்படத்தைப் பார்க்கும் நண்பர்கள், நமது இந்தியாவுடன் இப்படத்தைப் பொருத்திப் பார்க்கலாம்.

திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் அதிருஷ்டசாலி நண்பர்களுக்கு வயிற்றெரிச்சலுடன் கூடிய வாழ்த்துகள் ?

பி.கு 1 – திரைப்பட விழாவைப் பற்றிய விபரங்களுக்கு, திரைப்பட விழாவின் வலைத்தளத்தைப் பார்க்கலாம் – இங்கே.

பி.கு 2 – தமிழில் கலந்துகொள்ளும் படங்களில் எனது சாய்ஸ், ஆடுகளமும் அழகர்சாமியின் குதிரையும்.

பி.கு 3 – இத்திரைப்பட விழாவில் இடம்பெறாத இரண்டு பிரதான இந்தியப் படங்கள்: ஆரண்ய காண்டம் மற்றும் Gandu. கூடவே, லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்படமும் இடம்பெறவில்லை. அதைப்பற்றி இப்பதிவை வெளியிட்ட பின், நண்பர் மாமல்லன் கார்த்தி போட்ட பின்னூட்டத்தினால் விரிவாகப் படித்தேன். இறையாண்மைக்கு எதிராக இருந்தது என்று சொல்லி நிராகரிக்கப்பட்ட படம் இது. நமது சென்சார் போர்டின் அயோக்கியத்தனத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. டண்டணக்கா படங்களுக்கெல்லாம் எந்த வெட்டையும் தராமல், நல்ல படங்களை அமுக்குவதே இவர்களது வேலை. அப்படி அமுக்கப்பட்ட படம்தான் செங்கடல். அதன் கதையையும் விரிவாக வாசித்தேன். உண்மையில் நடப்பதைத்தான் அப்படம் சொல்கிறது. அது மக்களைச் சென்றடையவேண்டியதுதான் முறை. அப்படியிருக்க, இப்படத்தை ஒதுக்குவது மாபெரும் தவறே இன்றி வேறில்லை. அவரது பின்னூட்டத்தில் சொல்லியுள்ளபடி, இது கயமைத்தனமேதான். இது வன்மையாக எதிர்க்கப்படவேண்டியது.

வெகு சீக்கிரம் செங்கடலைப் பற்றி இன்னமும் எழுத முயற்சிக்கிறேன்.

  Comments

16 Comments

  1. ஒரு சிறு திருத்தம்.. 22 தேதி வரை நடைபெறுகிரது…

    2 நாள் ஆபிஸ் லீவ் போட்டுட்டு நாலு நாள் சுத்துறதா ப்ளான் இருந்துச்சு பட் அவசரமா ஊருக்கு போகனும் சோ மூணு நாளா குறஞ்சுட்டு :(((…

    கண்டிப்பா பாக்க வேண்டிய என்னோட லிஸ்ட்…
    A Separartion
    Tree of Life
    faust
    Elena

    Reply
  2. அய்யயோ பழைய ஐடிலயே போட்டுடேனே…

    Tree of Life பாக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டதால 678 பாக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.. :(((

    Reply
  3. தெய்வத்திருமகள், முரண் போன்ற காவியங்கள் லிஸ்ட்ல இருக்குறதுதான் இந்த ஃபெஸ்டிவலுக்கே பெருமை. 🙂

    Reply
  4. நண்பா,
    வேலை நெருக்கடி,படம் பார்க்க சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை,இருந்தாலும் முயற்சி செய்கிறேன்,திரைவிழா படங்கள் பற்றி நிச்சயம் எழுதுங்கள்,
    எக்சைல் 180பக்கம் படித்துள்ளேன்,அதில் வரும் கண்ணா என்னும் பாத்திரம் நீங்களா?நண்பா?

    அதில் சாக்ரடீஸ்,பக்கிரிசாமி,குஷால்தாஸ்,கொக்கரக்கோ என நிறைய பாத்திரங்கள்,மிகவும் வித்தியாசமான நாவல்,படித்துவிட்டு நேரம் இருந்தால் எழுதுகிறேன்.

    அந்த நாகூரின் தெருக்கள் பற்றி படித்தது பிடித்தது.மனதில் இருந்து எழுதினால் தான் அப்படி எழுத இயலும்.முக்கியமாக அந்த தெருநாயின் கலவி பற்றிய கவலையை யாரால் இங்கே பட இயலும்,பிச்சாவரம் தீவு கருத்தரங்கு பற்றிய வர்ணணை அருமை நண்பா.படிதுக்கொண்டு இருந்த போதே போன் செய்ய நினைத்தேன்.நண்பா புதிய இல்லத்துக்கு வாழ்த்துக்கள்,எவ்வளவு உழைப்பு உழைத்திருப்பீர்கள்,இனி உழைக்கவேண்டியிருக்கும்,எல்லாவற்றையும் எளிதாய் எதிகொள்ள வாழ்த்துக்கள்!!!

    Reply
  5. திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் பாக்கியவான்கள் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
    அடுத்த வருடம் உலகசினிமா விழாக்களில் ஸ்டால் போட உத்தேசித்துள்ளேன்.கடவுள் கருணை வைக்க வேண்டும்.

    Reply
  6. செங்கடல் என்னும் தமிழ் திரைப்படத்த்தை திரையிடாமல் தவிர்திருக்கும் இந்த CIFF கிழட்டு குமாஸ்தாக்களின் அயோக்கியத்தனத்தை நீஙகள் குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்த்தேன். கோவாவில் இடம் பெற்ற Indian Panaromaவின் அத்தனை படங்களையும் திரையிடும் போது ,செங்கடல் படத்தை கயமைத்தனமாக புறக்கணித்திருப்பது கண்டனதிற்கு உரியது.
    மேலும் GANDU படம் எந்த இந்திய திரைப்பட விழாவிலும் திரையிட முடியாது. ஏனென்றால் அதை இன்னும் சென்சார்ருக்கு அனுப்பவில்லை. தணிக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை

    Reply
  7. @ பேநா மூடி – Tree of Life பார்க்கவேண்டாம். அது எனக்குப் புடிக்கல. படு ஸ்லோ . . எனிவே, உங்கள் விருப்பம் :-). நீங்கள் சொன்ன திருத்தத்தை அமல் படுத்தி விட்டேன் 🙂 . .

    @ செ. சரவணக்குமார் – ஹீ ஹீ . . அவையெல்லாம் ஆசுகரின் கதவையே தட்டப்போகும் காவியங்கள் அல்லவோ 🙂

    @ கீதப்ரியன் – எக்சிலில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. . யாரையும் குறிக்கப்படமாட்டாது 🙂 . . முழுசா படிச்சிட்டு சொல்லுங்க. புது வீட்டுக்கான உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பா . .

    @ உலக சினிமா ரசிகரே – உங்களைக் கூப்புட நெனைச்சேன். அப்புறம் புது வீட்டு வேலையால் முடியல. இன்னிக்கி கட்டாயம் கூப்புட்டுடுறேன்.

    @ Karthi – செங்கடல் பற்றி இன்னும் கொஞ்சம் படிக்கணும். அதன்பின் தான் அதைப்பற்றிக் கருத்து சொல்ல முடியும் நண்பரே. எனக்கு அதுல நடக்குற பிரச்னைகள் பற்றி எதுவும் தெரியாது. நண்பர் மாமல்லன் போட்ட FB ஸ்டேட்டஸ் மட்டுமே படிச்சேன். அதுல அந்தப் படத்தைப் பற்றிய சில விஷயங்கள் தெரிஞ்சுது. கட்டாயம் இன்னிக்கி செங்கடல் பற்றிப் படிச்சிடுறேன்.

    Reply
  8. கருந்தேள்…அந்த மாமல்லன் கார்த்தி என்பவர் அடியேன் தான். நேற்றைய ’உலக காமெடி’ துவக்க விழாவில் செங்கடலுக்காக நாங்கள் போட்ட கோஷத்தில் குரைத்தது ப்தினைந்து நிமிடங்களாவது விழா ஸ்தம்பித்தது. These organizers are cowards they have even changed their rules and regulations so that this film could be out and not to mention the insult given to a opening day international film festival with filmi dance and glamor. what the f..k is this !!

    Reply
  9. @ karthi – நீங்கள் தான் மாமல்லன் கார்த்தியா? இனிமேல் மறக்கமாட்டேன். செங்கடல் பற்றி விபரமாகப் படித்தேன். லீனா மணிமேகலை எடுத்த படத்தை, இறையாண்மைக்கு எதிராக இருக்கிறது என்று தணிக்கையில் நிராகரித்த படம். இதைப்பற்றிய ஷோபா சக்தியின் பதிவையும், இன்னும் சில கட்டுரைகளையும் படித்தேன். படத்தின் கதையைப் படித்தால், ஒரு சீரியசான ஹெர்சாக் படம் போன்ற effect கொடுத்தது. எப்படியாவது படத்தைப் பார்த்துவிடுகிறேன். பிறரது கருத்துகளைச் சொல்ல ஊக்குவதே ஒரு நல்ல அரசின் அடையாளம் இல்லையா? கருத்தே சொல்லாமல் அடக்கி வைக்க முயல்வது blunder. இதனைப் பற்றி இந்தக் கட்டுரையிலும் சேர்த்துவிட்டேன்.

    Reply
  10. நான் செங்கடல் படத்தை சில மாதங்களுக்கு முன்பே பார்த்துவிட்டேன். எனக்கு படம் பற்றி சில விமர்சனங்கள் உண்டு. அது வேறு விடயம். படத்தை அதிகாரப்பூர்வமாக திரையிட்ட பின் அதை பற்றி விவாதிப்பேன். என்னை பொறுத்த வரை செங்கடலின் முக்கியத்துவம் இரண்டு தளங்களில் உண்டு. ஒன்று, மைய்ய நீரோட்ட சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி ஒரு மாற்று வெளியில் சுயாதீன (Independent) முயற்சியாக அசல் தன்மையுடன் வந்திருக்கும் தமிழின் முழு நீளப்படம். இரண்டாவது, தமிழக மீனவர் பிரச்னையை, அவரகளது அன்றாட வாழ்வை அந்த மக்களை கொண்டே பல பாசிச இடர்ப்பாடுகளை தாண்டி, ஒரு மக்கள் பங்களிப்பு சினிமாவாக உருவாக்கி இருப்பது. நீங்கள் ஊகிப்பது போல் அது ஹெர்சாக் வகையறா படம் கிடையாது. செங்கடல் ஒரு முக்கிய அரசியலை துணிச்சலாக முன்னெடுக்கும் படம், அதன் வழியே கலை சார்ந்த சில நுட்பமான சரிவுகளை கொண்ட படம் தான்.
    உங்கள் கட்டுரையில் செங்கடல் பற்றி சேர்த்மைக்கு நன்றி.

    Reply
  11. கட்டாயம் அப்படத்தை நானும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிடுவேன். செங்கடல் பற்றிய விரிவான அவதானிப்புக்கு நன்றி மாமல்லன்.. படம் வெளிவந்தவுடன், இன்னமும் விரிவாக அதனைப் பற்றி எழுதுங்கள். Waiting…

    Reply
  12. சென்னை விழாவில் மூன்று நாட்களில் எட்டு திரைப்படங்களை பார்த்தேன். விரைவில் எழுத ஆசை. Let C .

    Reply
  13. நண்பரே, லீனா மணிமேகலையின் “செங்கடல்” பெங்களூர் Film Festivel-ல் சனிக்கிழமை(17-12-2011) அன்று திரையிடப்பட்டது.

    Reply
  14. என்ன தல இந்த மாதம் முழுவதும் ஆங்கில பட விமர்சனமே இல்லையே….

    Reply

Join the conversation