நடுநிசி நாய்கள் (2011) – அடிங்க !

by Karundhel Rajesh February 20, 2011   Tamil cinema

தமிழ்ப்படங்களில், ஸ்பூஃப் என்ற வகையில் வெளிவரும் படங்கள் மிகக்குறைவு. அந்த வகையில், சென்ற வருடம் வெளிவந்த ‘தமிழ்ப்படம்’, ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி எனலாம். தமிழ்ப்படம், இதுவரை வந்த அத்தனை தமிழ்ப்படங்களையும் பகடி செய்தது. ஆங்கிலத்தில், ஒரு குறிப்பிட்ட வகைப் படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு (உதா – த்ரில்லர் வகை), அதனைப் பகடி செய்து சில படங்களை வரிசையாக வெளியிடுவது வழக்கம். ஸ்கேரி மூவி (scary movie) படங்கள், நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். . தமிழில் அப்படி ஒரு படம் இல்லையே என்று நீண்ட நாட்களாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கவலையைப் போக்குவதற்கென்றே கௌதம் எடுத்திருக்கும் படமே, ‘நடுநிசி நாய்கள்’.ஆங்கிலத்தில், அறுபதுகளில், ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ (Psycho) படம் வெளிவந்து, ஒரு பய அலையைக் கிளப்பியதல்லவா? அந்தப் படத்தைத் தமிழில் ஸ்பூஃப் செய்து எடுக்கப்பட்ட படமே இது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்து சிரித்து வயிறு புண்ணானது தான் மிச்சம். காமெடிப்படங்கள் எடுப்பதில் கௌதமின் திறமையை இந்தப் படம் எடுத்துச் சொல்கிறது.

கௌதமுக்கு திடும் என ஒரு கனவு வந்தது. பல நாட்களுக்கு முன்னர் அவருக்கு வந்த அந்தக் கனவில், தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர் அவர் தான் என்று தமிழின் ஆதி இயக்குநர் கடவுளான தனிரத்னம், தனது நான்கு கைகளுடன் வந்து, அவர்தம் காதில் சொல்லிச்சென்றார். இந்தக் கனவு அளித்த மயிர்க்கூச்செரிப்பில், அர்த்தராத்திரியில் எழுந்து உட்கார்ந்த கௌதம், அப்போது தனது தெருவில் ஊளையிட்ட இரண்டு நாய்களின் சத்தத்தைக் கேட்டு பயந்துபோய் விட்டதாக, அப்போது தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு மனிதர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவசர கதியில் மூன்று ஏமாந்த நபர்களைப் பிடித்த கௌதம், அவர்களிடம், தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே இதுவரை எவரும் கண்டும் கேட்டும் உணர்ந்தும் முகர்ந்தும் நக்கியும் பார்த்திராத ஒரு கதையைத் தனது மனதில் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறி, அவர்களைத் தயாரிப்பாளர்கள் ஆக்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஆங்கில ‘சைக்கோ’ திரைப்படத்தை, டேப்தேயும் வரை ஓட விட்ட அவர், அந்தப் படத்தின் கதாநாயகன் சிரிப்பது போலவே, தொடர்ந்து முக்கால் மணி நேரத்துக்கு ஊளையும் அழுகையும் இளிப்பும் கலந்த ஒரு சிரிப்பை வெளிப்படுத்தி, தனது உதவியாளர்களை அரண்டுபோக வைத்ததாக அவரது வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதன்பின், ஒரு திரைக்கதையையும் எழுதிய அவர், படத்தின் பிரதான சைக்கோ வேடத்தில், தானே நடிப்பதாக முரண்டு பிடித்து, அதன்பின், அந்தக் கோலத்தில் அவர் நிற்கும் சில புகைப்படங்களைப் பார்த்ததும், பயந்து, அம்முயற்சியைக் கைவிட்டதாகவும் அவர்களே கூறினர்.

உடனே, தனது உதவி இயக்குநர் ஒருவரையும் நடிக்க வைத்து, படத்தைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து, தமிழ்ப்பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்தியையும் கசிய விட்டார். ’கௌதம் அடுத்து எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு படத்தில் பாடல்களே இல்லை; இசையும் இல்லை – ஏன், வசனமே இல்லை; அவரது அடுத்த படத்தில் கேமெராவும் இருக்காது.. வெறும் ஒலிகள் மட்டும்தான்’ என்ற ரீதியில் அமைந்த ஸ்கூப் செய்தியான அந்தக் குறிப்பு, தமிழ்த்திரைப்பட ரசிகர்களின் காதினில் வந்து பாயும் தேனாக மாறிப்போனது.

இதற்குப்பின், படம் முடிந்து, இப்போது ரிலீசும் ஆகி விட்டது.

படம் எப்படி இருக்கிறது?

ஆரம்பக் காட்சி முதல், இறுதிக் காட்சி வரை, படு திராபையாக அமைந்துபோன மொக்கைப் படங்கள், தமிழ் ரசிகர்களாகிய நமக்குப் புதிது அல்ல. ஆனால், இந்தப் படம், நமது பொறுமையின் எல்லைகளைப் படு மோசமான வகையில் சோதிக்கிறது. ஆங்கில ‘சைக்கோ’ படத்தின் ஆகமோசமான காப்பி இதுவாகத்தான் இருக்க முடியும். ஒரே ஒரு காட்சி கூட சுவாரஸ்யமாக இல்லை. தமிழ்ப்படங்களை அடுத்த தளத்துக்கு நகர்த்திச் செல்கிறோம் என்று கௌதம் ஒருவேளை யோசித்திருக்கலாம். அப்படி ஒரு வேளை ஒரு எண்ணம் அவரது மனதில் இருந்திருக்குமாயின், தமிழ் ரசிகர்களை இவரது மொக்கையிலிருந்து ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை, சைக்கோவாக நடித்திருக்கும் நபரின் ஊளைகள் நம்மை எரிச்சலடைய வைக்கின்றன. ஒரே போன்ற ஸ்டீரியோ டைப் நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கும் மேற்படி நபர், க்ளைமேக்ஸில், அந்நியன் விக்ரமின் நடிப்பையொத்த ஒரு monologue வேறு செய்திருக்கிறார். கொடுமையடா சாமி !
ஒரு நிமிடம் கூட சுவாரஸ்யமாக அமைந்திராத இப்படத்தை எப்படி தைரியமாக வெளியிட்டிருக்கின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படத்தின் tagline, ஒரு ஸ்பெஷல் காமெடி. ‘பலவீனமானவர்களுக்கு அல்ல’ என்ற அந்த டேக்லைன், எங்களை விழுந்துவிழுந்து சிரிக்கவைத்தது எனலாம். ஒருவேளை கௌதம் இதுவரை ஆங்கிலத்தில் வெளியான த்ரில்லர்களைப் பார்த்ததே இல்லையோ என்ற கேள்வி மனதில் எழுகிறது. கௌதம், Red Dragon என்ற படத்தையாவது ஒரே ஒரு முறை பார்க்க வேண்டுகிறேன். ஒரு த்ரில்லர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். போலவே, ஒரு த்ரில்லர் எப்படி எடுக்கப்படக் கூடாது என்பதற்கு, நடுநிசி நாய்கள், ஒரு சிறந்த உதாரணம். வேறொன்றுமில்லை. தமிழ் ரசிகர்களாகிய நாம், ஒரு படம் எப்படி எடுக்கப்பட்டிருந்தாலும், அதை ஓட வைத்துவிடுவோம் என்ற அசாத்திய குருட்டு நம்பிக்கையில் இப்படம் எடுக்கப்பட்டுவிட்டது போலும்.

அதேபோல், படத்தின் ஆரம்பத்தில், அந்தச் சிறுவன் எப்படி சைக்கோவாக ஆகிறான் என்பதற்கு கௌதம் காட்டும் உதாரணங்கள், படு முட்டாள்தனமாக இருக்கின்றன. அவை, படத்தோடு ஒட்டுவதேயில்லை. மிக செயற்கையான காட்சிகள் அவை.
படத்தில் நல்ல அம்சம் என்று எதையும் சொல்ல இயலவில்லை. பாடல்கள் இல்லாததை வேண்டுமானால் சொல்லலாம். அய்யகோ! பாடல்கள் வேறு இருந்திருந்தால், பாதியிலேயே ஜூட் விட்டிருப்போம். நல்லவேளை.

கௌதமுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த படத்தில், அட்லீஸ்ட், நீங்கள் காப்பியடிக்கப்போகும் ஆங்கிலப் படத்தின் காட்சிகளை அப்படியப்படியே வைத்துவிடுங்கள். அப்போது, அட்லீஸ்ட் ஒரு ஆங்கில டப்பிங் படத்தைப் பார்த்த எஃபக்டாவது கிடைக்கும். அதை விட்டுவிட்டு, ஆங்கிலப் படத்தைத் தமிழ்ப்படுத்தி, நடுநிசி நாய்கள் போன்ற ஒரு படுமொக்கைப் படத்தை வெளியிட்டு, எங்களின் மனதை ஏன் நோகடிக்கிறீர்கள்? இரண்டரை மணி நேரம் டோட்டல் வேஸ்ட் ஆகிப்போனதுதான் மிச்சம்.

ஒருவேளை, மிஷ்கின், நந்தலாலா படம், தனது சொந்தக் கதை என்று சொல்லியதுபோல், இது கௌதமின் சொந்தக் கதையாக இருக்குமோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. வருங்காலத்தில், சைக்கோ படத்தைக் காப்பியடிக்கவில்லை என்று அவர் அளிக்கப்போகும் பேட்டிகளில், இது அவரது சொந்தக் கதை என்று அவர் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன் (???!!!)

மொத்தத்தில், நடுநிசி நாய்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இப்படிச் சொல்லலாம்.

நடுநிசி நாய்கள் = தற்குறி நாய்கள் !

  Comments

55 Comments

  1. Most worst movie of the year and dont know why Gowtham chose this sort of boring movie to fool around

    Reply
  2. என் அறிவுக்கு எட்டிய வரையில் சுந்தரராமசாமி தன் படைப்புகளை ஒரிஜினலாக உருவாக்கித் தர முயன்றவர். அவரிடம் பயின்ற எங்களையும் அப்படியே செய்ய வழிகாட்டியவர். அவருடைய கவிதை/ கவிதைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு ‘நடுநிசி நாய்கள்’. அதனைத் தத்தெடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இப்படிச் சீரழிப்பார் என்று நான் எதிர்பார்க்வே இல்லை. அப்படி, சு.ரா. மேல் இவருக்கு என்ன வாய்க்கால் வரப்புத் தகராறோ அதுவும் தெரியவில்லை!

    ஒரு தோற்றத்தை உருவாக்கி, ஏமாற்றி, காசுபார்த்துவிட்டார் கௌதம். தன்னிலும் வயது முதிர்ந்தவர்களோடு கூடும் தன் அகவிழைவைத் திரைவிளம்பரப் படுத்தியும் அரிப்பைத் தீர்த்துக்கொண்டார். (அரிப்பு அடங்கியிருக்கும் என்று நம்பி) இனி உருப்படியான படங்களைத் தருவார் என்றும் எதிர்பார்ப்போமாக! ஒரு நோயாளி இரக்கப்படவேண்டியவர் அல்லவா?

    Reply
  3. அட செம நெத்தியடி கருந்தேள்.இந்த டுபாக்கூர் ஹிட்ச்காகை போட்டு தாக்கி விட்டீர்கள்.சைகோ படத்தை 1998 இல் ரீமேக் செய்கிறேன் என்று கொலை செய்தனர்.(ஒரு காட்சி பார்த்ததோடு அந்த பைலையே டெலீட் செய்து விட்டேன் கடுப்பில் மட்டமான ரீமேக்.)ஹிட்ச்காக்கை எவனும் நெருங்க முடியாது.
    வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகா-ஒலக நாயகன் விமலஹாசன் ஒரு வார்த்தையில் உரையாடி கொண்டிருப்பார்(ஏன்? விவாகரத்து?…மண்ணாங்கட்டி! blah blah என்று) அப்போது ஜோதிகா சொல்வார் “என்ன நாம மணிரத்னம் படம் மாதிரி பேசிகிட்டு இருக்கோம்? அதாவது கௌதம் மேனன் தன்னையே மணிரத்னமாக பார்தததின் பயங்கர விளைவு இது!மணிரத்னம் கார்பரேட் கைக்கூலி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது!ராவணன் என்ற ப்ளேடு போட்டதில் இன்னமும் எனக்கு கழுத்து எரியிது!அடங்கப்பா!இதுல அவருக்கு இவுரு சிஷ்யனாம்.என்ன கொடுமை சார்.!
    கௌதம் படத்துல ஏதாவது ஒரு படம் சொந்தமா எடுதிருக்கானா?காக்க காக்க படத்த ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தானுங்க சில அறிவிலிங்க.மொதல்ல அவனுங்கள The untouchables & Se7en படத்த பாக்க சொல்லணும்.ரெண்டுதியும் கொழப்பி அடிச்சி என்கவுண்டர்தான் சிறந்த தீர்வுன்னு மகா மட்டமான ஒரு சிந்தனைய அந்த படத்துல சொல்லியிருப்பான் கௌதம்.
    முக்கால்வாசி படம் ஆங்கில வசனம்(என்னய்யா இது?இதுக்கு நான் ஆங்கில படத்தையே சப் டைட்டிலோடு பாத்துகினு இருக்கேனே .அப்புரமேதுக்கு இவன் படத்த பாக்கணும்?)
    அப்புறம் இந்த சமீரா ரெட்டி ஹிந்தி படங்களில் அய்ட்டம் கேள் ஆக (மும்தாஜ் போல) இருந்தவளை கூட்டியாந்து இந்த கௌதம் குடுக்குற இம்சை இருக்கே!யப்பா.
    இப்படிப்பட்ட கொடச்சல்கல ஒப்பிடும்போது நிச்சயம் அந்த பணிரத்னதின் சிஷ்யன்தான் இவன்.ரெண்டு பெரும் ப்ளேடு போடுவதில் மேதைகள்.இதுல சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துகினு போறேன் ஒலக தரம்னு(ஆங்கில வசனம் இருந்தா ஒலக தரமா?யாருய்யா சொன்னா?)இவன் படத்தையெல்லாம் எவன் பார்பான்.மக்களை எச்சரித்தமைக்கு நன்றியோ நன்றி.
    அப்புறம் இந்த பலவீனமானவர்களுக்கல்ல என்ற துணை தலைப்பு இவன் படத்தை தயாரித்த தயாரிக்க போகும் நபர்களுக்கான எச்சரிக்கை!!!ஹீ ஹீ .அதை கண்டுகாதீங்க!!!

    Reply
  4. காக்க காக்க படத்தில் வரும் காட்சிகள்,வசனங்கள் 24 ஆங்கில டிவி நாடகத்தில் வருகின்றன. சூர்யா,ஜோதிகா காதல் வசனங்கள் உட்பட……..

    Reply
  5. //நடுநிசி நாய்கள் = தற்குறி நாய்கள் //

    என்ன கொடுமை இது? தமிழ் படங்களோட தலை எழுத்தையே மாற்றப்போகிற இயக்குனரின் படத்தை பற்றி இப்படியா சொல்வது? அப்போ இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தாவும், வீராவும் மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்து போய் Natural Born Killers படத்தில் வருவது போல அட்டகாசம் செய்யும்போது அதற்க்கு என்னவென்று சொல்வீர்கள்?

    தமிழ் சினிமாவை உய்விக்க வந்த நாயகனை பற்றி இப்படி சொன்னதற்கு கண்டித்து உடனடியாக இந்த பதிவிலிருந்து வெளிநடப்பு செய்வதோடில்லாமல் கருந்தேளை கண்டித்து காலிபிளவர் பஜ்ஜி சாப்பிடும் போராட்டத்தையும் ஆரம்பிக்கிறேன்.

    கிங் விஸ்வா
    இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் – இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

    Reply
  6. // ஆங்கிலப் படத்தின் காட்சிகளை அப்படியப்படியே வைத்துவிடுங்கள். அப்போது, அட்லீஸ்ட் ஒரு ஆங்கில டப்பிங் படத்தைப் பார்த்த எஃபக்டாவது கிடைக்கும்//

    ஹஹஹஹ ஊஊஊஊஊஊஊஊஊ.::)))

    என்னத்தல தமிழ்சினிமாவுல ஒரு புரட்சி நடத்தமுயன்றவரைப்போய் இப்படி போட்டுத்தாக்கிட்டீங்க… இனி எப்படி உலக சினிமாவை தமிழீல் எதிர்பாப்பது… :))

    Reply
  7. செம்ம அடி கொடுத்திருக்கீங்க நண்பா. இப்படி மகா மட்டமான சினிமாவ எடுத்து வச்சிட்டு ஹாலிவுட் ரேஞ்சுன்னு பில்டப் கொடுக்குறாய்ங்களே.. அதான் கடுப்பா இருக்கு.

    Reply
  8. நண்பரே,

    ரெட் ட்ராகன் நாவலை நீங்கள் படிக்க வேண்டும் 🙂 அதன் பின்னாக நீங்கள் அத்திரைப்படம் குறித்து எழுதினால் அது இதை விட காரமாக இருக்கும் :)) பதிவின் பல இடங்களில் சிரிப்பதை தவிர்க்க இயலவில்லை, அவ்வளவு மோசமாகவா இருக்கிறது 🙂

    Reply
  9. yeanna than sir solla vareinga? yanaku oru vesayam pureyal nennga kimto kik pathi peasurathalayo .ulaga cinima pakurathalayao ipadi aitenganu nenikeran . tamila ithu pol sela than matrathai uruvakmum ……………………………………

    yanaku padam bore adichuthu but nalla illanu solla matean ,,,,

    Reply
  10. @ கருந்தேள் : நீங்க எல்லாம் படம் பார்த்து ரசிக்கவா போறீங்க? இல்லாவிட்டால் இந்த சீன் எந்த படத்தில சுட்டது, இது எதில இருந்து காப்பி அடிச்சது எண்டு கண்டு பிடிக்கவா போறீங்க? பிறகு எப்படி ஒரு படத்தை ரசிக்க முடியும்?
    கருந்தேள் நீங்கள் ஏன் தமிழ் படங்களுக்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டுகிறிர்களோ தெரியவில்லை.சாதாரண மாசலா படங்களுக்கு இப்படியான எதிர்ப்பை காட்டினாலும் பரவாய் இல்லை. ஆனால் தமிழில் இப்படி புது முயற்சிகள்(பாடல்கள் இல்லாமல், 90 நிமிடத்தில்) எடுக்கும் இயக்குனர்களை ஏன் மடடமாக விமர்சிக்கிறிர்கள்?

    // காக்க காக்க படத்தில் வரும் காட்சிகள்,வசனங்கள் 24 ஆங்கில டிவி நாடகத்தில் வருகின்றன. சூர்யா,ஜோதிகா காதல் வசனங்கள் உட்பட……//

    @ Lucky Limat லக்கி லிமட்: நல்ல வேளை…சூர்யா போட்ட ஷர்ட், குடிச்ச சிகரெட், ஜோதிகா போட்டு இருந்த செயின் ஜீவன் பேசின செல்போன் எல்லாம் ஆங்கில படத்தில வந்தது தான் என்று சொல்லாம விட்டிங்களே. ஹா ஹா ஹா

    Reply
  11. இந்த லூசுதேவமேனன் பாரதிராஜாவின் மூத்திரத்தை குடிச்சாகூட சிகப்பு ரோஜாக்கள் போல எடுக்கமுடியாது,படம் பார்த்த என் நண்பர்கள் அனைவருக்கும் செம கொலவெறி,ஆனால் இவன் தான் சினிமாவையே கண்டுபுடிச்சா மேறி பேசுவான் டுபுக்கு.

    Reply
    • Muthuram

      Padam nallaa irundhuchunu solla mudiyaathu, but indha raavu raavura alavukku mOsamnum solla MudiYAdhu

      Reply
  12. சாமி என்று ஒரு இயக்குனர் இருக்கார்.இது போல செக்ஸ் வியாதி,மாமனார் மருமகள் சப்ஜெக்ட்கள் அயராது எடுப்பார்,அவர் கூட நல்லாவே படம் எடுப்பார்.

    Reply
  13. நண்பா.
    20 வருடங்கள் முன்னர் அதிசய மனிதன்,நாளைய மனிதன் என படங்கள் வந்தன,அதெல்லாம் கூட எவ்வளவோ தேவலை.இவ்வளவு டெக்னாலஜியை ,இத்தனை உதவி இயக்குனர்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படம் கொடுத்திருக்கான்.

    Reply
  14. எங்கேயிருந்தான் இந்த ஹீரோப்பயல்கள் புற்றீசல் போல வாரானுங்களோ,கொல்லிக்கட்டையாலயே அடிக்கோனும்.வக்காலி

    Reply
  15. படத்துல முக்கியமான விஷயமான அவன் ஏன் அப்படி ஆனான் அப்டிங்கிறதுக்கு வலுவான காரணங்கள் இல்ல… அதுக்கான காட்சியமைப்புகளும் இல்ல… அப்புறம் எங்க படம் விளங்கும்..

    இயல்பா எடுக்குறாங்கனா அவ்ளோ பொண்ணுங்க காணாம போன பிறகு கூட ஒரு கேஸ் கூட காவல் நிலையத்துல இல்லாம இருக்கு… என்னமோ போடா மாதவா.. இவங்க அடுத்த தளத்துக்கு தமிழ் சினிமாவா உயர்த்தினா மாறி தான்…

    Reply
  16. //தமிழ் ரசிகர்களாகிய நாம், ஒரு படம் எப்படி எடுக்கப்பட்டிருந்தாலும், அதை ஓட வைத்துவிடுவோம் என்ற அசாத்திய குருட்டு நம்பிக்கையில் இப்படம் எடுக்கப்பட்டுவிட்டது போலும்//.

    !!! மிகச்சரியான சவுக்கடி!

    Reply
  17. உங்கள் கருத்துக்கு அப்படியே உடன் படுகிறேன். நான் முதல் ஷோ சத்யம் தியேட்டரில் இந்த படத்தை பார்தேன். பாதி படத்திலேயே அனைவரையும் புலம்ப வைத்துவிட்டார் கெளதம் மேனன்….. முடியல …!!!!

    Reply
  18. //|கீதப்ப்ரியன்|Geethappriyan| said: February 20, 2011 7:58 PM
    எங்கேயிருந்தான் இந்த ஹீரோப்பயல்கள் புற்றீசல் போல வாரானுங்களோ,கொல்லிக்கட்டையாலயே அடிக்கோனும்.வக்காலி///

    !!! சூப்பர் அப்பு(ஆப்பு)

    Reply
  19. படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அந்த படத்தின் டைரக்டரை பக்கத்துல வைத்துக்கொள்ளும் பழக்கம் வந்தால் நன்றாக இருக்கும்,கொய்யால செத்து இருப்பான் அவ்வளவு சத்தம் தியடோர்ல், நம்மள என்னான்னு நினைக்கரானுகனு தெரியல,அந்த படத்தைப் பற்றி விவாதிக்க கூட அதற்க்கு தகுதி கிடையாது,இனி ஒரு இரண்டு வருடத்திற்கு நான் தமிழ் படங்கள் பார்க்க போவது கிடையாது என்று முடிவு செய்துள்ளேன்.

    Reply
  20. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
    உங்கள் விமர்சனம் என்றாலே ஒரு வெட்டு, ரெண்டு குத்து என்றாகி விட்டது.
    அதுவும் முதல் முறையாக கௌதம் படத்தை போட்டு தாக்கி உள்ளீர்கள். vtvக்கு எப்படி எழுதி இருந்திங்கனு நியாபகம் இருக்கு.
    ஒருவர் இரண்டு வருடங்களுக்கு தமிழ் படங்களே பார்க்க போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். நல்ல படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.. (அதுக்காக இந்த படத்தை மோசமான படம்னு சொல்லலை)

    Reply
  21. நண்பரே காரைக்குடி பாண்டியன் தியேட்டரில் முதல் காட்சி பார்த்தேன்.சத்யம் தியேட்டரை குளோனிங் செய்திருக்கிறார்கள்.படம் பார்க்கும்போது எனக்கு வந்த கோபத்தில் நான் சொன்ன வார்த்தைகளை நண்பர் கீதப்பிரியன் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.
    ”பாரதிராஜாவின் மூத்திரத்தை குடிச்சாகூட சிகப்பு ரோஜாக்கள் போல எடுக்கமுடியாது”,

    Reply
  22. சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்த போதும் இப்படித்தான் ப்ளாக்கில்லாமல் நிறைய பேர் அதிலிருந்து எடுத்தார்கள் இதிலிருந்து எடுத்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது பாரதிராஜாவுக்கு வயசாகிவிட்டதால் அவர் கிளாசிக் ஆகிவிட்டார்.. ரைட்டு

    Reply
  23. யுத்தம் செய் விமர்சனம் எதிர்பார்த்து வந்த எனக்கு ஒரு சர்ப்ரைஸ்.என்னடா மணி,கமல காச்சுன நீங்க கௌதம விட்டுடீங்கலேன்னு பாத்தேன்.சூப்பர் பாஸ்.தமிழ் சினிமாவுல இவன் அடிக்கிற கூத்து தாங்க முடியல.எடுத்தான் ஒரு படம் காக்க காக்கன்னு யப்பா முடியல,உலக ரேஞ்சுக்கு படம் எடுத்து இருக்காராம்.இவன் படம் தமிழ் சினிமாவிலேயே பெஸ்ட்டு படமாம்.இவன் இப்படின்னா இன்னொருத்தன் முருகதாஸ்.memento வ சுட்டு கஜினின்னு படம் எடுத்துட்டு mementoவ விட நல்லா படம் எடுத்து இருக்கேன்னுனு அறிக்கை விட்டான்.இத எல்லாம் எங்க போய் சொல்லி முட்டிக்கிறது.

    Reply
  24. என்னண்ணே தமிழ் சினிமாவோட தூணையே சாய்ச்சுப்புட்டீங்க? அய்யய்யோ இனி தமிழ் சினிமா என்னாகுமோ தெரியலியே….. பயமா இருக்குண்ணே….. இதுக்குத்தான் நான் படமே பாக்கறதில்ல…..!

    Reply
  25. தலைவரே.. படு சொம்பேறியான என்னையே ஒரு பதிவு எழுதும் அளவிற்கு இப்படம் கோபப்படுத்தியது. Here it goes: http://xsez.wordpress.com/

    Reply
  26. அட்ரா அட்ரா இந்த அரமன்டையன் பஞ்சுமுட்டாய் தலையன் கௌதம மொதல்ல அடிங்கடா.இந்த கொசுதொல்ல தாங்கலடா நாராயணா.இவன் படத்துல வர்ற பிச்சைகாரன் கூட “give me one rupee” ன்னு இங்க்லீசுலதான் பிச்ச கேப்பான்.இவன் பெரிய தொரையாம்.அப்போ இந்த அர மண்டையன் இங்கிலாந்துல போய் படம் எடுக்கட்டும்.இவன் போன்ற சீனு தாங்கலடா சாமி.அந்த பணிரத்னம் தொல்ல போறாதுன்னு இவன் வேற.

    Reply
  27. உங்க விமர்சனம் கூட செம காமெடி கருமம்…அடிங்க செருப்பால…

    Reply
  28. எனக்கு ஒரு சந்தேகம்.. நீ எதாவது ஒரு தமிழ் படத்தை நல்லா இருக்குனு சொல்லிருகீயா..
    ஒரு ரெண்டற மணி நேரம் படத்துக்கு எவ்ளோ … நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா??
    உடன்னே புடிக்கலேன படிகத்தே சொல்லறியா ??? உனக்கு படம் புடிகல்ல்லேனு கமெண்ட் அடிக்க உரிமை இருக்கும் பொது உன்ன கமெண்ட் பண்ண எல்லாருக்கும் உரிமை இருக்கு….
    கொஞ்சம் முடுங்கோ…..

    Reply
  29. இந்தப் படத்தோட trailer பார்தப்பயே எனக்கு தோணிச்சு.படம் இதே மாதிரி இருந்தா அவ்ளோதான்னு. என் நண்பன் ஒருத்தன் படம் பார்த்துட்டு வந்து ஒரு பத்து நிமிஷம் இந்த படத்தை பத்தி கேவலமா திட்டினப்ப தான் படம் எவ்ளோ மொக்கைனு எனக்கு confirm ஆச்சு.

    //படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை, சைக்கோவாக நடித்திருக்கும் நபரின் ஊளைகள் நம்மை எரிச்சலடைய வைக்கின்றன.//

    ஆரம்பிசுட்டானுகளா? நம்மாளுக எல்லாத்துக்கும் மாதிரி இதுக்கும் ஒரு template வச்சுருக்காணுக.அதில இது இல்லாம,ஊஹும்…

    //இவன் படம் தமிழ் சினிமாவிலேயே பெஸ்ட்டு படமாம்.இவன் இப்படின்னா இன்னொருத்தன் முருகதாஸ்.memento வ சுட்டு கஜினின்னு படம் எடுத்துட்டு mementoவ விட நல்லா படம் எடுத்து இருக்கேன்னுனு அறிக்கை விட்டான்.இத எல்லாம் எங்க போய் சொல்லி முட்டிக்கிறது.//

    ஹாஹா…சரியா சொன்னீங்க.

    Reply
  30. நான் என்னும் பார்க்கவில்லை. சாரு இப்படத்தை ஆகா ஒகோ என்று புகழ்ந்திருந்தார். அதை பார்த்து படம் பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால் உங்கள் விமர்சனம் பார்த்த பின் படம் பார்ப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன்.

    Reply
  31. ரொம்ப எதிர்ப்பார்த்த ஒன்னு இப்படி காலி ஆயிடுத்து….

    Reply
  32. தலைவா அடிச்சு காலி பண்ணிட்டே போ.இப்பிடி ஒரு ஆளு வேணும் இந்த மாதிரி அறிவாளி? பயபுள்ளைக்கு.படுத்துரானுகளே

    Reply
  33. @ ராம்ஜி யாஹூ – தந்தை மகன் இன்ஸெஸ்ட் பற்றி நான் எழுதியிருக்கிறேனே.. அந்தக் காரணங்கள் எல்லாமே முட்டாள்தனமாக உள்ளன என்று..

    @ MGC – காரணம் சிம்பிள். சில பேருக்கு, சில படங்கள் எடுத்ததுமே, தமிழின் தலைசிறந்த இயக்குநர் தான்தான் என்ற ஒரு மமதை உருவாகிவிடுவதே காரணம்…

    @ ராஜசுந்தர்ராஜன் – நண்பரே.. உங்கள் ஆதங்கமும் கோபமும் நன்றாகப் புரிகிறது.. கௌதம், சந்தேகமேயில்லாமல் நோயாளி தான்.. காப்பி பற்றி… இது தமிழில் நடந்துகொண்டு தானே உள்ளது? சனிரத்னம் உட்பட, காப்பியடிக்காதவர்கள் யார் இருக்கின்றனர்? எல்லாமே ஒரே குட்டை தான்.. இனி உருப்படியான படங்கள்? எனக்கு இனி கௌதமின் திறமை பற்றி டவுட்டு தான்…பொறுத்திருந்து பார்ப்போம்..

    @ viki – உங்கள் பின்னூட்டம், நீங்கள் நேரில் நின்று பேசுவதுபோலவே இருந்தது 🙂 .. உங்கள் அத்தனை கருத்துகளையும் ஆமோதிக்கிறேன்.. குறிப்பாக கௌதமின் புரிதல் பற்றி..

    @ லக்கி – காக்க காக்க & 24 பத்தின கருத்துகள் புதுசா இருக்கு.. 24 சீரீஸ், இனி ரெண்ட் பண்ணி பாக்குறேன்…

    @ விஸ்வா – என்னாது ரெண்டாவது பாகமா? செத்தோம் போங்க 🙁 .. அட்லீஸ்ட், ஸ்பீஷீஸ் 2 மாதிரி கொஞ்சம் கில்மாவா எடுத்தா கூட பரவாயில்ல.. 😉 .. கௌதம் மட்டும் இதோட ரெண்டாவது பாகம் எடுத்தாருன்னா, அவரோட திரையுலக வாழ்வின் அஸ்தமனத்துக்கு அது காரணமா இருக்கும். கட்டாயம்..

    @ நாஞ்சில் – என்னாது தமிழில் உலக சினிமாவா? நீங்களும் நானும் ஒரு படம் எடுத்தா தான் அது நடக்கும் 🙂 .. இவனுங்க எல்லாம் காப்பியடிச்சே பேரு வாங்கப் பாக்குற காமெடி பீஸுங்க 🙂

    @ செ. சரவணக்குமார் – இந்த பில்டப்பு இவனுங்களுக்குப் புதுசு இல்லையே… எப்பவும் இப்புடித்தானே பண்ணுறாய்ங்க.. இத நம்பி நாமளும் ஒவ்வொரு தடவையும் படம் பார்த்து கடுப்பு ஆவறது தான் செம கடுப்பா இருக்கு 🙁

    @ காதலரே – ஹானிபல் சீரீஸ் நாவல்களை (ரைசிங் தவிர்த்து), படிக்கப்போகிறேன். விரைவில். அப்போது வேண்டுமானால் ஒரு பதிவு போட முயல்கிறேன். அப்புறம்,

    //அவ்வளவு மோசமாகவா இருக்கிறது//

    நான் எழுதியது ஒரு துளி தான். உங்களுக்கு மிகப் பிடித்த ஃப்ரெஞ்சு கெட்ட வார்த்தை எதாவது இருக்குமாயின், அதனை நூறு தடவை இங்கே காப்பி பேஸ்ட் செய்தீர்கள் என்றால், அப்போதுதான் இந்தப் படத்தைப் பற்றிய எனது கடுப்பு தீரும். அவ்வளவு கேவலமான படம் இது 🙂

    @ லிவிங்ஸ்டன் பாபா – நான் சொல்லவர்ரது இதுதான். தமிழ்ல இதுபோல ஒரு சில படங்கள்தான் மாற்றத்தை உருவாக்கும்னு சொல்லிருக்கீங்க தானே? இதுபோன்ற மொக்கைப் படங்கள் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. இதை அடிப்படையா வெச்சி இன்னும் ஆயிரம் புண்ணாக்குப் படங்கள் உருவாவதைத்தான் இது செய்யும். இதெல்லாம் ஒரு படமே இல்லை. படு மொக்கை.

    @ ஆகாஷ் – //நீங்க எல்லாம் படம் பார்த்து ரசிக்கவா போறீங்க? இல்லாவிட்டால் இந்த சீன் எந்த படத்தில சுட்டது, இது எதில இருந்து காப்பி அடிச்சது எண்டு கண்டு பிடிக்கவா போறீங்க? பிறகு எப்படி ஒரு படத்தை ரசிக்க முடியும்?
    கருந்தேள் நீங்கள் ஏன் தமிழ் படங்களுக்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டுகிறிர்களோ தெரியவில்லை.சாதாரண மாசலா படங்களுக்கு இப்படியான எதிர்ப்பை காட்டினாலும் பரவாய் இல்லை. ஆனால் தமிழில் இப்படி புது முயற்சிகள்(பாடல்கள் இல்லாமல், 90 நிமிடத்தில்) எடுக்கும் இயக்குனர்களை ஏன் மடடமாக விமர்சிக்கிறிர்கள்?//

    நான் இந்தப் படத்தை கெட்டவார்த்தைல விமர்சனம் பண்ணலாம்னு இருந்தேன். அப்புறம், சபை நாகரிகம் கருதி, விட்டுட்டேன் 🙂 . பாடல்கள் இல்லாமல், 90 நிமிடத்தில் ஒரு படம் வந்திருப்பதால் மட்டுமே இது ஒரு க்ளாஸிக் ஆகிவிடாது. ஒரு ஆள், இதுவரைக்கும் பொய்யே சொன்னதில்ல. ஆனால், அவன் ஒரு பத்து கொலை பண்ணிருக்கான். அப்போ, அவன் ஒரு நல்லவன். அவனை எ

    Reply
  34. @ மதுரை சரவணன் – நன்றி

    @ கனகு – இந்தப் படம், தமிழ்ப்படத்தை அடுத்த தளத்துக்கு உயர்த்துதுன்னு சொல்றவனுங்க எல்லாம், இதே மாதிரி சைக்கோப்பயல்களா இருப்பானுங்கன்னு எனக்குத் தோணுது. என்ன சொல்றீங்க?

    @ சிவகுமார் – வந்த கடுப்புல, இதே மாதிரி சைக்கோவா மாறி, கௌதம் வூட்டுக்கு போயிருப்பேன் 🙂 .. எல்லாம் நம்ம நேரம் 🙁

    @ கௌதமன் – அடடா… உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 🙁 .. வேற என்ன சொல்றது 🙁

    @ டெனிம் – //படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அந்த படத்தின் டைரக்டரை பக்கத்துல வைத்துக்கொள்ளும் பழக்கம் வந்தால் நன்றாக இருக்கும்,//

    ஆஹா… என்ன ஒரு ஐடியா !இதை நான் வரவேற்கிறேன் 🙂 …

    //இனி ஒரு இரண்டு வருடத்திற்கு நான் தமிழ் படங்கள் பார்க்க போவது கிடையாது என்று முடிவு செய்துள்ளேன்.//

    இதே ஐடியா எனக்கும் வந்தது. ஆனால், அப்புடி பார்க்காம இருந்தா, நம்ம நண்பர்களை எச்சரிக்க முடியாதே 🙂 .. ஸோ, இனியும் நான் பார்ப்பேன். இதே மாதிரி மொக்கையா இருந்தா, கண்டபடி கிழிப்பேன் 🙂

    @ வினோத் கௌதம் – VTV எனக்குப் புடிச்சது. அதான் அதைப் பாராட்டினேன். ஆனா இது ஒரு கொடுமை .. இதை உணர்ந்துதான் பார்க்க முடியும் 🙂 .. நல்ல படங்கள் கட்டாயம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்த மாதிரி குப்பைகள், அந்தப் படங்களோட ரீச்சையும் மரியாதையையும் கெடுக்கின்றன. அதான் கடுப்பா இருக்கு

    @ இப்போ ராம்சாமி – அந்தப் பதிவைப் பார்த்தேன். அந்த நண்பர், அனேகமா ட்ரெய்லரை மட்டும் பார்த்துப் பதிவு போட்ருக்காருன்னு நினைக்கிறேன். இல்லேன்னா, செம மப்புல படம் பார்த்துருப்பாரு. இந்த மொக்கைக்கு இப்புடி ஒரு பதிவு எழுதின அந்தத் தெய்வத்தோட கால்கள் கிடைக்குமா? 🙂

    @ உலக சினிமா ரசிகரே – அடடா.. முதல் ஷோ பலியா நீங்க? கொடுமை … இந்த மாதிரி மொக்கைகளை எடுத்தா இனி இவனுங்களுக்கு ஃபைன் போடணும்… பத்தாது.. இவனுங்களை ban பண்ணிரணும்னு தோணுது. என்ன சொல்றீங்க?

    @ கேபிள்- //சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்த போதும் இப்படித்தான் ப்ளாக்கில்லாமல் நிறைய பேர் அதிலிருந்து எடுத்தார்கள் இதிலிருந்து எடுத்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது பாரதிராஜாவுக்கு வயசாகிவிட்டதால் அவர் கிளாசிக் ஆகிவிட்டார்.. ரைட்டு//

    அது வேறொண்ணுமில்லை. ஒரு ஆகமொக்கையான கொடுமை ரிலீசாகும்போது, ஆல்ரெடி அந்த மாதிரி ஏற்கெனவே இருக்கும் படம் எவ்வளவோ பரவால்லன்னு நாம சொல்றொமில்லையா? அதான் இது. ஆனா என்னோட பர்சனல் கருத்து என்னன்னா, எனக்கு பாரதிராஜாவை ரொம்பப் புடிக்கும். அவரோட பாடல்கள் டிவிடி கலெக்‌ஷனை அப்பப்போ போட்டுப்பார்ப்பேன். காட்சிகள் வெக்குறதுல அவரை அடிச்சிக்க ஆளே இல்லை. என்னோட முதல் மரியாதை பதிவைப் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

    Reply
  35. @ வி.வினோத் – யுத்தம் செய் நான் இன்னும் பார்க்கல நண்பா. இந்த வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். முருகதாஸ் பத்தின உங்க கருத்து செம ஜாலியா இருந்தது 🙂 எல்லாம் தமிழ் ரசிகர்களாகிய நம்ம தலைவிதி 🙁

    @ பன்னிக்குட்டி ராம்சாமி – படமே பார்ப்பதில்லை என்ற உங்க முடிவை நான் ஆதரிக்கிறேன் 🙂

    @ பென் – உங்க பதிவைப் பார்த்தேன். உங்க கருத்தே தான் என்னோட கருத்தும். நான் கலாசாரக் காவலன் இல்லை. ஆனா, திரைக்கதை இவ்வளவு சொதப்பலா இருப்பதாலும், உக்காரவே முடியாமல் படு மொக்கையாக இருப்பதாலுமே தான் நான் இதை எதிர்க்கிறேன்..

    @ இப்போ ராம்சாமி – ஃப்ரீயா உடுங்க.. சாந்தம் அடையுங்கள் 🙂

    @ Suchi – //எனக்கு ஒரு சந்தேகம்.. நீ எதாவது ஒரு தமிழ் படத்தை நல்லா இருக்குனு சொல்லிருகீயா..
    ஒரு ரெண்டற மணி நேரம் படத்துக்கு எவ்ளோ … நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா??//

    இந்தத் தளத்துல, நல்ல தமிழ்ப்படங்கள் பத்தியும் எழுதிருக்கேன். அதைப்போய் பாருடா வெண்ணை.. 🙂 .. நான் அவ்வளவு பெர்ர்ர்ரிய அப்பாடக்கர் தாண்டா 🙂 .. என்னை கமெண்ட் பண்ண எல்லாருக்கும் உரிமை இருக்குதான். அதே மாதிரி, அந்தக் கமெண்டை கெட்ட வார்த்தை சொல்லித் திட்டவும் எனக்கு அதே உரிமை இருக்குடா 🙂

    @ இலுமி – //ஆரம்பிசுட்டானுகளா? நம்மாளுக எல்லாத்துக்கும் மாதிரி இதுக்கும் ஒரு template வச்சுருக்காணுக.அதில இது இல்லாம,ஊஹும்…//

    அய்யய்யோ.. சந்தேகமில்லாம இது டெம்ப்ளேட் தான். கௌதமை சைக்கோ வேசத்துல கற்பனை பண்ணிப் பார்த்தேன்.. ரெண்டு நாளைக்கு சாப்பாடே அவாய்ட் பண்ணிரலாம். அவ்வளவு கோரம். அதுக்கு அசிஸ்டெண்ட் நடிச்சது எவ்வளவோ பரவாயில்லை 🙂 .. எல்லாம் திரியுறானுங்க

    @ செந்தில்குமரன் – நண்பா… சாருவின் உயிர்மை கட்டுரை பாருங்கள்.. அவரு இதைப் புகழவில்லை. காறித் துப்பிருப்பாரு.. இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள். பார்த்துத்தான் நாங்கள்லாம் நொந்த குமாரன் ஆயிட்டோம்

    @ விஸ்வா – நான் இன்னும் அதே நிலையில் தான் இருக்கிறேன். அதான் லேட் ரிப்ளை 🙂

    @ anbou – யெஸ். நானும் இதை எதிர்பார்த்துத் தொலைச்சேன் 🙁 .. இனி ஒரு படத்தையும் எதிர்பார்க்கவே போவதில்லை

    @ saji – அய்யய்யோ அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க? இந்த மாதிரி படம் வந்தால், செருப்படி தான் இனிமே. நோ டவுட்டு 🙂

    Reply
  36. // பாடல்கள் இல்லாமல், 90 நிமிடத்தில் ஒரு படம் வந்திருப்பதால் மட்டுமே இது ஒரு க்ளாஸிக் ஆகிவிடாது //

    அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    // நல்ல படம் வரட்டும். ஆதரிக்கிறேன். ரைட்டா? //

    நீங்கள் வேற்று மொழி சினிமாக்களை ரொம்பவே புகழ்ந்தும் தமிழ் சினிமாவை தரம் தாழ்த்தியும் எழுதி வருகின்றீர்கள் போல தென்படுகின்றது. உண்மையில் தமிழ் திரைப்படங்கள் நல்ல தரத்துடன் வருவது மிக குறைவு என்றாலும் நல்ல படங்கள் வருவதே இல்லை என்று சொல்ல்வது தவறு. அங்காடித்தெரு ,ஆடுகளம் படங்கள் எல்லாம் அதற்கு உதாரணம்.நீங்கள் அங்காடித்தெரு திரைப்படம் பற்றியோ சமீபத்தில் வெளியான ஆடுகளம் பற்றியோ உங்களது கருத்துக்களை கூறவில்லையே?

    Reply
  37. The problem is, these thugs get the money back using marketing. that is the reason focus is not given to the quality of the product . Some people responded in this post that this movie is compared with english flicks only. Let me add. I recently watched ‘Dhobi Ghat’. the cost to make that movie was only 6 crores and it has no songs, runs for only 90 minutes. Please watch and respond the performance of the artists and the storyline. I wish there are movies like that in Tamil

    Reply
  38. ///எனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா புடிச்சது. அதுவரை, கௌதமோட படங்களை ரசிச்சிருக்கேன்.//

    இதுக்கு முந்தின இவன் படம் நல்லாவா இருந்திச்சு.இவன் படத்தின் பெரிய மைனசே திரைக்கதை தான்.போர் அடிக்கிற மாதிரி இருக்கும்.சரி நடிகர்களின் நடிப்பாவது உருப்படியா இருக்கும்னு பாத்தா அதுவும் இல்ல.ஒரே மாதிரியான நடிப்பு.ஹீரோயின்கள் எல்லாரும் விட்டு விட்டு பேசிக்கிட்டு உர்ருன்னு இருப்பாளுக.ஒளிப்பதிவும் அவ்வளவுன்னு சொல்லும்படியா இருக்காது.பாட்டு மட்டும் சூப்பர் ஹிட்.எல்லா படத்தையும் ஒரே மாதிரி எடுக்குறது சலிப்பா இருக்கு.அப்புறம் சாருவின் உயிர்மை லிங்கை தர முடுயுமா?

    Reply
  39. இவன் படத்துல வர்ற பிச்சைகாரன் கூட “give me one rupee” ன்னு இங்க்லீசுலதான் பிச்ச கேப்பான்.இவன் பெரிய தொரையாம்.அப்போ இந்த அர மண்டையன் இங்கிலாந்துல போய் படம் எடுக்கட்டும்.இவன் போன்ற சீனு தாங்கலடா சாமி.////
    .
    .
    ஹீ ஹீ ஹீ நெத்தியடி ராமசாமி சாரே!!!
    *********************
    ஒரே மாதிரியான நடிப்பு.ஹீரோயின்கள் எல்லாரும் விட்டு விட்டு பேசிக்கிட்டு உர்ருன்னு இருப்பாளுக.ஒளிப்பதிவும் அவ்வளவுன்னு சொல்லும்படியா இருக்காது////
    .
    .
    இதெல்லாம் பாத்தா மக்கள் கௌதம் மேல எவ்வளவு காண்டா இருக்காங்கன்னு வெளங்குது.
    இந்த மிலிடரி தலையன் படம் எடுக்கலைன்னு யார் அழுதா?
    இவன் கண்ணா பாத்தா எப்பவும் ஹால்ப் ஊத்திகினு வந்தவன் மாறி பாதி சொரிகிகிட்டு இருக்கும்.அந்த மப்புல படம் எடுத்தா இப்படிதான் ஆகும்.மக்களே ஒங்க நல்லதுக்குதான் சொல்றேன்.தயவு செஞ்சி இந்த பட தேட்டர் பக்கம் கூட போய்ட வேணாம்.படம் பாத்த பெண்கள் எல்லாம் பாதியிலேயே எழுந்து போட்டாங்க.பெண்களே எச்சரிக்கை.அம்புட்டுதேன்.

    Reply
  40. கருந்தேள்.. .இப்பத்தான்.. படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். செம காமெடியா இருக்கும் போலயிருக்கே?! 🙂 🙂


    விமர்சனம் படிச்சிட்டு.. தமிழ் படம் பார்த்து..பார்த்து வெறுத்துப்போய்.. இனிமே தமிழ்படமே பார்க்கறதில்லைன்னு முடிவு பண்ணின பின்னாடி, இப்பத்தான் ஆடுகளம் பார்த்தேன். அதுவும் ரொம்ப யோசிச்சிதான்.

    ரொம்ப வருஷத்துக்கப்புறம் எனக்கு பிடிச்ச தமிழ் படம்னு சொல்லலாம்.

    காவலனும் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன். எங்க படத்தை பார்த்தா திரும்பவும்.. தமிழ்படமே பார்க்காம போய்டுவேனோன்னு பயமா இருக்கு. எனி.. ரெகமெண்டேஷன்?? 🙂

    Reply
  41. neenga vimarsanamnu yeluthuratha paartha siriputhaan varuthu , unga bloga adikadi naan paarthuttu sila nalla padangala paarkuran aana unga kita vara vara oru pothaampothuvaana karuthai naan yethirkiran , yethukeduthaalum aangila padathai copy adikiraanga copy adikiraaanganu orey varila sollidringa , innaiku ulla anaithu technologyum foreignla irunthu thaan vandhathu , kadhaya thirudunadha solreenga athai thirudi kooda pala padam odala , oru padathai vimarsikum podhu unga sondha viruppu veruppa kaatreenga , yentha padatha vimarsichaalum , ithula ivalavu kurai irrukku , ivalavu scene nalla irukkunu solalaam , tamil cinema directorsku mattum aangila mogam illa , podthuvaavey naamma yellarumey foreignersa paarthu paarthu namma nagareegatha maathikitttu irukom athula ithu oru velipaadeythaan aangila padangala paarthu muyarchi seiraanga makkaluku pudichaa paarpaanga ,ungalkitaa nalla rasanai irukkey thavira athukaaga neenga onnum periya arivu jeevi kidayaathu ,

    oru creator copy adichaalum avar athai screenla yeppadi kondu vanthirukaaru , yevalavu kastapaduraaru yenbathai unara vendum , cinemaavula kathai sari illa , athu illa solra namalaala yellarum thiruttu vcdya thavirthu padangalai paarka mudiyuma! avunga risk yeduthu poduraanga
    ipozhuthu intha ulagathil kalapadamaana porul matumey kidaikum yenbathai unarnthu vaazhungal

    ungal rasanaikey athiga mukiyathuvam kodungal ungalukku pidikathathai thavirthudungal athai miga mosamaaga kindal adipathu ungal velayayai neengal mathikaathathatharku samam

    Reply
  42. சாரு முதலில் Trailer பார்த்து புகழ்ந்து எழுதியிருந்தார். ஆனால் தற்போது படம் பார்த்து விட்டு காரி துப்பி எழுதியிருக்கிறார்.

    Reply
  43. @ Akash – //நீங்கள் வேற்று மொழி சினிமாக்களை ரொம்பவே புகழ்ந்தும் தமிழ் சினிமாவை தரம் தாழ்த்தியும் எழுதி வருகின்றீர்கள் போல தென்படுகின்றது. உண்மையில் தமிழ் திரைப்படங்கள் நல்ல தரத்துடன் வருவது மிக குறைவு என்றாலும் நல்ல படங்கள் வருவதே இல்லை என்று சொல்ல்வது தவறு. அங்காடித்தெரு ,ஆடுகளம் படங்கள் எல்லாம் அதற்கு உதாரணம்.நீங்கள் அங்காடித்தெரு திரைப்படம் பற்றியோ சமீபத்தில் வெளியான ஆடுகளம் பற்றியோ உங்களது கருத்துக்களை கூறவில்லையே?//

    இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அங்காடித்தெரு படத்தை மிகமிகத் தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது. அதேபோல், இன்னமும் நான் ஆடுகளம் பார்க்கவேயில்லை 🙂 .. அங்காடித்தெரு நல்ல படம். உண்மை. நல்ல படங்கள் அரிதாக வருகின்றன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். எனது தளத்திலேயே எனக்குப் பிடித்த தமிழ்ப்படங்களையும் பற்றி எழுதி வருகிறேன். முதல் மரியாதை ஒரு உதாரணம். இனிமேலும், எனக்குப் பிடித்த தமிழ்ப்படங்களை கட்டாயம் இங்கே எழுதுவேன். நன்றி

    Nytreya – உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எந்த சால்ஜாப்பு அடித்தாலும், நடுநிசி நாய்கள் படத்தை எற்றுக்கொள்ளவே முடியாத அளவு கொடூர மொக்கை அது.

    @ v.vinoth – சாரு, உயிர்மைல எழுதுனது வர்ர மாசம் தான் வரும். அதுக்குள்ள, அவரே அவரோட சைட்ல நாய்கள் பத்தி எழுதிருக்காரே.. படிச்சிப் பாருங்க..

    மத்தபடி, எனக்கு பெர்சனலா கௌதமின் படங்கள் புடிச்சது. இதுவரை. எஸ்பெஷலி, ப.கிளி மு.சரம் (அவரே அது டீரெயில்டோட காப்பின்னு டைட்டில்லயே உண்மைய சொல்லிருந்தாலும்).

    @ The Joker – 🙂 //மக்களே ஒங்க நல்லதுக்குதான் சொல்றேன்.தயவு செஞ்சி இந்த பட தேட்டர் பக்கம் கூட போய்ட வேணாம்.படம் பாத்த பெண்கள் எல்லாம் பாதியிலேயே எழுந்து போட்டாங்க.பெண்களே எச்சரிக்கை.அம்புட்டுதேன்.//

    இத நான் பார்க்கும் முன்னாலேயே சொல்லிருந்தா, எனக்கு அமௌண்ட் மிச்சமாயிருக்குமே 🙂

    @ சுண்டெலி – அய்யோ காவலனா? செத்தீங்க… எங்கள் அண்ணன் பசுநேசன் நடிச்ச ‘மேதை’ திரைப்படம் சீக்கிரம் வந்துரும். அதைப் பார்க்க உங்களுக்கு ரெகமெண்டேஷன் செய்கிறேன் 🙂

    உங்க கருத்தை படிச்சா, எங்கியோ ஆலிவுட்டுல இருந்து எழுதுற மாதிரி கீதே? நீங்க ‘அவரா’? 🙂

    @ cicero – உங்களின் கடைசி லைன் எனக்கு ரொம்பப் புடிச்சது 🙂 .. பின்னுங்க

    @ Winprabhu – உங்களோட இந்த வாதத்துக்கு இதுவரை என்னோட தளத்துல கிட்டத்தட்ட நூறு தடவை பதில் சொல்லிருப்பேன். ஒரு டிஸ்க்ளைமரே பெர்மனெண்ட்டா மேலே போட்ரலாமான்னு யோசிக்கிறேன் 🙂

    ஓகே. சுருக்கமா சொல்லிடுறேன். எனக்குன்னு சொந்த விருப்பு வெறுப்பு இல்லை. ஒரு படத்தைப் பார்க்கும்போது, அது சுவாரஸ்யமா இருக்கா இல்லையான்னுதான் மொதல்ல பார்ப்பேன். காப்பியா இருந்தா, மூலப்படத்தின் காட்சிகள் ஆல்ரெடி பார்த்திருந்தா, அது, இந்த காப்பிப் படத்தைப் பார்க்கும்போது டோட்டல் சொதப்பலாத்தான் இருக்கு. காப்பியடிச்சி, அது ஒரிஜினல் படத்தை விட நல்லா இருந்ததை, என் வாழ்க்கையிலேயே இதுவரை நந்தலாலா படத்தில் மட்டும்தான் உணர்ந்திருக்கிறேன். அதை எழுதியும் இருக்கிறேன்.

    என்னோட வாதம், காப்பியடிக்குறது தப்புன்றது. காப்பிரைட் அப்புடின்னு ஒரு மேட்டர் இருக்குறதே இந்த காப்பியடிக்கிறவனுங்களுக்குத் தெரியுறதில்லை. மத்தபடி, டெக்னாலஜி லொட்டு லொசுக்குன்ற உங்க கருத்து ஒரு ஜோக். காப்பிரைட்ன்னா என்னன்னு மொதல்ல விவரமா படிச்சிட்டு வாங்க. பேசலாம்.

    And, அது என்னங்க? திரை விமர்சனம் எழுதுறவனெல்லாம் திருட்டு விசிடில தான் பார்ப்பானா? நான் பிக்ஃப்ளிக்ஸ்ல மெம்பர். I rent all my movies thru them – which are original DVDs, by the way. உங்க பொத்தாம்பொதுவான கருத்தை மொதல்ல மாத்திகிட்டு, அப்புறம் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணல

    Reply
  44. @ கருந்தேள்: ஆடுகளத்தையும் பாருங்க. உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

    Reply
  45. வித்தியாசமாக தமிழில் இப்படி ஒரு படம் என்று சொல்லிக் கொள்ளலாமே? அதென்ன எல்லாத் தமிழ் படங்களையும் குறை கூற வேண்டுமென ஏதாவது சபதம் எடுத்துக் கொண்டுள்ளீர்களா? நடுநிசி நாய்கலை ஸ்பூஃப் என்று சொல்வது கொஞ்சம் ஓவர்…

    Reply
  46. கருந்தேள், சமீபத்தில் பார்த்த தமிழ் படங்கள் பல நம் மூளையை கிண்டல் செய்வது போல இருந்தாலும், அதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல, இப்படி மொக்கை காவியத்தை பார்த்து இல்லை. இந்த நாய்கள் படத்திற்கு கிடைக்க வேண்டிய சரியான விமர்சனம். கௌதம் இனி இப்படி ஒரு முயற்சியை எடுக்காமல் இருந்தால் சரி, இல்லையேல் இவரையும் ஒதுக்கபட்டவர்கள் பட்டியலில் சேர்த்து விடலாம்.

    பார்ப்பதற்கு இன்னும் எவ்வளவோ நல்ல படங்கள் காத்திருக்கையில், இதை தேர்ந்தெடுத்த என் புத்தியை ஜோட்டாவால் தான் அடிக்கனும்.

    Reply
  47. intha padathukku ellam vimarsanam eluthi time waste panna thevai illa….

    Reply

Join the conversation