The Mist (2007) – English

by Karundhel Rajesh February 14, 2011   English films

ஒரு சிச்சுவேஷன். ஏதோ ஒரு படத்துக்கு, ஒருநாள் செல்கிறோம். திரையரங்கின் உள்ளே, படம் படு சுவாரஸ்யமாகச் செல்கிறது. நேரம் போவதே தெரியவில்லை. மூன்று மணி நேரம் கழித்து, வெளியே வருகிறோம். ஒரு பேரதிர்ச்சி நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. வெளியே, ஒரு ஈ கூட நமது கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் பிணங்கள். உலகமே தலைகீழாக மாறி இருக்கிறது. அந்தத் திரையரங்கில் இருப்பவர்கள் மட்டுமே உயிர் பிழைத்த எஞ்சிய மக்கள். நமது நிலை எப்படி இருக்கும்? நமது குடும்பம் என்ன ஆனதோ என்ற கவலை ஒருபுறம்; என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்று தெரியாத நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதே தெரியாத குழப்பம் ஒருபுறம்; நமது உயிரைப் பற்றிய கவலை ஒருபுறம். இப்படிப் பல்வேறு அதிர்ச்சிகள் நம்மைச் சூழத் தொடங்கிவிடும் அல்லவா? இதில் இருந்து எப்படித் தப்பப்போகிறோம்?

இதைப்போன்ற ஒரு சூழ்நிலையே, The Mist.

Stephen King பற்றித் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த The Shining படத்தின் கதை, இவருடைய நாவலே. இது மட்டும் அல்ல; இவரது பல்வேறு படைப்புகள், திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. Shawshank Redemptioனும் இவருடைய குறுநாவல் தான்.

Frank Darabont பற்றித் தெரியும் அல்லவா? ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் படத்தின் இயக்குநர். ஸ்டீவன் கிங்கின் மாபெரும் விசிறி. கலாரசனை வாய்ந்த இயக்குநர். ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் மற்றும் The Green Mile ஆகிய ஸ்டீவன் கிங்கின் படைப்புகளை ஏற்கெனவே அருமையான திரைப்படங்களாக நமக்கு அளித்தவர். இந்தப் படத்துக்கும் இவரே இயக்குநர்.

படத்தின் ஹீரோ டேவிட், ஹாலிவுட் திரைப்படங்களின் போஸ்டர்களை டிஸைன் செய்பவர். ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், நதியோரமாய், தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருபவர். ஒரு நாள் இரவு, பலத்த மழையுடன் கூடிய புயலால், இவரது அறையின் ஜன்னலை உடைத்துக்கொண்டு ஒரு மரம் விழுந்துவிடுகிறது. மட்டுமல்லாமல், இவரது படகு வீடும், மற்றொரு மரம் விழுந்ததனால், சிதறுண்டு போய் விடுகிறது. அவரது கிராமமே, தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டதனால், வெளியுலகிடமிருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறது. சிதைந்துபோன படகு வீட்டைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் டேவிட்டிடம் ஓடி வரும் அவரது சிறுவயது மகன் பில்லி, எதையோ பரபரப்புடன் டேவிட்டுக்குக் காண்பிக்கிறான். மிகத்தொலைவில், மலையுச்சியிலிருந்து நதியின் மீது விழுந்து, வேகமாகப் பரவி வரும் அது….. என்ன?

பக்கத்து வீட்டில் வாழும் முரட்டு வக்கீல் ப்ரெண்ட்டோடு, நகரத்துக்குப் பயணிக்கிறார் டேவிட். அவர் வரைந்துகொண்டிருந்த ஒரு போஸ்டர், மரம் விழுந்தமையால் நாசமாகி விட, அதனை, ஸ்டுடியோவுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம், இவரது ஜன்னலைச் சரி செய்ய சாமான்கள் வாங்குவது.

நகரத்தின் சூப்பர் மார்க்கெட்டில், மின்சாரம் இல்லை. அங்கிருக்கும் பலருக்கும் டேவிட்டைத் தெரிந்திருக்கிறது. ஹாலிவுட்டோடு அவர் சம்மந்தப்பட்டிருப்பது ஒரு முக்கியக் காரணம். சாமான்கள் வாங்கும் டேவிட், அங்கிருக்கும் நபர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், சூப்பர் மார்க்கெட்டுக்குள் பதைபதைப்புடன் வேகமாக நுழைகிறார் மில்லர் என்ற மனிதர். உடலெங்கும் ரத்தக்கறையுடன். திக்கித் திணறித் தனக்கு நேர்ந்ததைச் சொல்லும் மில்லர், வெளியே படுவேகமாகப் பரவிவரும் பனிப்புகைக்குள்ளிருந்து எதுவோ தன்னைத் தாக்கியதாகச் சொல்கிறார். உடனே, சூப்பர் மார்க்கெட்டின் கதவுகள் சாத்தப்படுகின்றன.

சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே இருக்கும் மக்கள், வெளியே என்ன நடக்கிறது என்றே தெரியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். மில்லர் சூறியது பொய் என்று ஒரு கும்பல் வாதிட்டுக்கொண்டிருக்கிறது. அப்போது, தனது மகனுக்கு ஒரு போர்வையைத் தேடி, ஸ்டோர் ரூமுக்குள் செல்லும் டேவிட், ஸ்டோர் ரூமின் ஷட்டரின் மீது, வெளியே இருந்து எதுவோ ஒன்று மோதுவதைக் காண்கிறார். அந்தத் தாக்கத்தைத் தாங்க முடியாமல், அந்த ஷட்டர் பலத்த சத்தத்தை எழுப்புகிறது. உஷராகும் டேவிட், வெளியே வந்து இதனைச் சொல்கிறார். டேவிட்டை நம்பாத கடையின் சிப்பந்திகள், ஸ்டோர் ரூமுக்குள் வந்து, ஜெனரேட்டரை இயக்க முற்படுகிறார்கள். அதனைச் சரி செய்யவேண்டும் என்றால், ஷட்டரைத் திறந்து, வெளியே இருக்கும் விசையை இயக்க வேண்டும். டேவிட் சொல்வதைக் கேட்காமல், ஷட்டரைத் திறக்கிறார்கள் சிப்பந்திகள். வெளியே, ஷட்டரின் விளிம்பு வரை, பனிப்புகை. ஆனால், ஷட்டருக்குள் அது வருவதில்லை. இதைக் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே……….

தடால் !

ஸ்டோர் ரூமில் என்ன நடந்தது? பனிப்புகையின் முக்கியத்துவம் என்ன? சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே இருந்த மக்கள் என்ன ஆனார்கள்? திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

வழக்கமான ஹாரர் / த்ரில்லர் படங்களின் அத்தனை அம்சங்களும் இதிலும் உண்டு. ஆனால், படம் அலுக்காமல் செல்வதற்கு முக்கியக் காரணம், ஃப்ரான்ங் டேரபாண்ட். இப்படம் மட்டும் வேறு யாராவது மசாலா இயக்குநர் கையில் சிக்கியிருந்தால், படத்தைக் கொத்துபரோட்டா போட்டிருப்பார்கள். டேரபாண்ட் இயக்கியதால், படம் பிழைத்துக்கொண்டது. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது.

படத்தின் த்ரில் மற்றும் சஸ்பென்ஸ், டேரபாண்ட்டால் அருமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டிவிடி, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். நேற்றுதான் இப்படத்தைப் பார்க்கத் தோன்றியது. பார்த்தது நல்லதாகப் போயிற்று.

படத்தின் முக்கிய அம்சம், படத்தின் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வசனத்தின் வாயிலாக வெளிப்படுகிறது. எந்த சட்டதிட்டங்களும் இல்லாமல், ஒரு அறையில் அடைக்கப்பட்ட மக்கள், தங்களின் சுயநலத்துக்காக எவ்வளவு தூரம் செல்வார்கள்?

படத்தின் டிவிடியில், மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் உண்டு. படத்தின் கதாநாயகன், ஹாலிவுட் படங்களுக்குப் போஸ்டர் டிஸைன் செய்பவன். எனவே, படத்தின் முதல் காட்சியே, அவன்,ஒரு போஸ்டரை வரைந்துகொண்டிருப்பதாகத்தான் ஆரம்பிக்கிறது. இதற்கு இன்ஸ்பிரேஷன் . .

Drew Struzan.

ட்ரூ ஸ்ட்ரூஸன், ஹாலிவுட்டின் போஸ்டர் வரலாற்றின் ஜாம்பவான். இவரது கை படாத திரைப்படமே இல்லை எனலாம். ஸ்டார் வார்ஸ், இண்டியானா ஜோன்ஸ், ஹாரி பாட்டர், பேக் டு த ஃப்யூச்சர், ஹெல்பாய், ஃபர்ஸ்ட் ப்ளட், ப்ளேட் ரன்னர் ஆகிய படங்கள், சில உதாரணங்கள். இவரது போஸ்டர்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். சினிமா போஸ்டர்கள் வாயிலாக (நான் மட்டுமல்ல. திரைப்பட ரசிகர்கள் பரும்). ஆனால், அவை இவருடைய கைவண்ணம் என்பதை, இந்த டிவிடியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். உடனே, நாஸ்டால்ஜியா போட்டுத் தாக்கி விட்டது.

இதோ ட்ரூ ஸ்ட்ரூஸனின் சில படைப்புகள். அவரது கைவண்ணத்தை, அவரது தளத்தில் இங்கே காணுங்கள்.

The Mist படத்தின் டிரய்லரை இங்கே காணலாம்.

  Comments

19 Comments

  1. இப்படம் மட்டும் வேறு யாராவது மசாலா இயக்குநர் கையில் சிக்கியிருந்தால், படத்தைக் கொத்துபரோட்டா போட்டிருப்பார்கள். டேரபாண்ட் இயக்கியதால், படம் பிழைத்துக்கொண்டது. SEMA BOSSSSSS

    Reply
  2. enna thala yuththam sei pakkaliyaa?

    Reply
  3. நண்பா
    இந்தப்படம் நான் இன்னும் பார்க்கவில்லை,ஆனால் ஹார்ட் டிஸ்கில் இருக்கிறது,உடனே பார்க்க ஆவலெழும் விமர்சனம் நண்பா.ஃப்ரான்க் டாரபாண்ட் மனம்கவர்ந்த இயக்குனர்.

    Reply
  4. நல்லவேளையாக படத்தின் கிளைமேக்ஸ் பற்றி எதுவும் சொல்லவில்லை. அந்த கிளைமேக்ஸ் பல நாட்கள் என்னை அலைகழித்தது.

    நம்முடைய முடிவெடுக்கும் திறனும், சிந்தனையும் எப்படி எல்லாம் நம்மை சிந்திக்க வைக்கும், சோதனையான நேரங்களில் அந்த சிந்தனை எப்படி மாறிவிடும் என்பதற்கு இந்த கிளைமேக்ஸ் ஒரு சிறப்பான முன்னுதாரணம்.

    கிங் விஸ்வா
    சிக் பில் & குழுவினர் – தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

    Reply
  5. //படத்தின் முக்கிய அம்சம், படத்தின் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வசனத்தின் வாயிலாக வெளிப்படுகிறது. எந்த சட்டதிட்டங்களும் இல்லாமல், ஒரு அறையில் அடைக்கப்பட்ட மக்கள், தங்களின் சுயநலத்துக்காக எவ்வளவு தூரம் செல்வார்கள்?//

    அந்த கிழவியை இப்போது நினைத்தாலும் கடுப்பாகிறது. உண்மையில் சூழ்நிலை மனிதர்களை எப்படி எல்லாம் ஈவு இறக்கம் இல்லாமல் மாற்றி விடுகிறது என்பதற்கு அந்த செகண்ட் ஹாப் ஒரு சிறந்த உதாரணம்.

    கிங் விஸ்வா

    சிக் பில் & குழுவினர் – தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

    Reply
  6. எல்லோ, உங்க பதிவு சைட் பாரில் அப்டேட் ஆகமாட்டேங்குது. என்னன்னு பாருங்க. இல்லாட்டி நாங்கதானே முதலில் வந்து இருப்ப்போம்.

    கிங் விஸ்வா
    சிக் பில் & குழுவினர் – தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

    Reply
  7. அட்டகாசமான விமர்சனம் தேள் 🙂 🙂 இந்த படத்தை உடனே பார்க்க வேண்டுமென தொன்றினாலும்.. இப்போது தான் டாலர் ட்ரைலாஜி பார்க்க ஆரம்பித்துள்ளேன்… முடித்தவுடன் தான் பார்க்க வேண்டும் 🙂

    ட்ரூ ஸ்ட்ருசென் பற்றிய தகவலுக்கு நன்றி.. அவரது தளத்துக்கு சென்று பாந்த்தேன்… அருமையான ஓவியங்கள் 🙂 🙂

    Reply
  8. எனக்கு ஏனோ இந்த படம் சுத்தமாக பிடிக்க வில்லை பாஸ் ..

    Reply
  9. //இப்படம் மட்டும் வேறு யாராவது மசாலா இயக்குநர் கையில் சிக்கியிருந்தால், படத்தைக் கொத்துபரோட்டா போட்டிருப்பார்கள்//

    நம்ம பேரரசு கைல கிடைச்சிருந்தா இதைவிட பெட்டரா பண்ணிருந்திருப்பாரு..:))

    டிவிடி கடையில் இந்தப்படம் கண்ணில் படுவதுண்டு. இதுவரை பார்க்கவில்லை. வாங்கிடறேன்.

    Reply
  10. Beyond anything, I liked the Climax of this movie – like “Inception”. It sparked a lot of debate among my friends who are movie lovers. One of the Best Horror flick in my collection.

    Reply
  11. This is one of the famous stories of Stephen king that(as usual) went to become a movie.Due to my habit of reading the book first and then watching the movie,and as I don’t have the book yet,I haven’t watched the movie.

    Regarding Shining,I have read the novel but yet to watch the movie.But as far as I heard,the movie and novel has few similarities except for the plot.

    Reply
  12. இந்த பதில், சாரு புழிஞ்சதா என்ற பெயரில் சுய அடையாளத்தை காட்ட பயந்து, பதுங்கிப் பதுங்கி பம்மும் பயலுக்கு.. டே தம்பி, உன்ன மாதிரி அடையாளமே இல்லாத முட்டாப்பய மவனுங்களுக்கு பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணனும்னு எனக்கு அவசியமில்ல. எனக்கு வேற வேலை இருக்கு. ரைட்டா… பெர்ரிய அறிவாளித்தனமா இவுரு உண்மைய சொல்லிட்டாரு . . போடா ங்கொய்யாலே 🙂

    Reply
  13. anna i am new of your site but reading last 2 months continously.i have seen this movie in night and i could say that the film gave me the fear to watch..i love thriller movies any time…….

    Reply
  14. அருமையான‌ எழுத்து ராஜேஷ். ஒரு திரைப்படத்தை எழுதும்போது என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ அவற்றை நேர்மையான அலசலில் முன்வைக்கிறீர்கள். உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி நண்பா.

    Reply
  15. @ padma hari nandan – அதுதான் உண்மை பாஸ் 🙂 .. அப்புறம், மிரர் பட விமர்சனம், கொஞ்ச நாள் கழிச்சி போடுறேன்.. பேய்ப்படங்களைப் பத்தி பார்க்கும்போது.. அனால், பெர்சனலா சொல்லப்போனா, என்னை மிரர்ஸ் அந்த அலவு ஈர்க்கலை நண்பா… 🙁

    @ வ்.வினொத் – யுத்தம் செய் இன்னும் பார்க்கல பாஸ்.. நான் இப்ப கோவைல இருக்கறேன்.. இங்க, இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல யுத்தம் செய் பார்த்துடணும்னு தீர்மானமா இருக்கேன்.. அனேகமா இந்த வீக்கெண்டுக்குள்ள பார்த்துருவேன்னு நினைக்கிறேன்..

    @ கீதப்ரியன் – நண்பா… மிஸ் பண்ணக்கூடாத படம் இது. டேரபாண்ட்டை நம்பினோர் கைவிடப்படார் . . 🙂

    @ விஸ்வா – இந்தக் கிளைமேக்ஸைப் பத்தி ஒண்ணும் சொல்ல விரும்பல. நண்பர்களே பார்த்துத் தெரிஞ்சிக்கட்டும்னு விட்டுட்டேன் 🙂 .. அதைப்பத்திக் கொஞ்ச நேரம் நான் யோசிச்சது உண்மைதான்… படம் முடிஞ்சதுக்கப்புறம்..

    அதேபோல், அந்த லேடி.. கொய்யாலே அது மட்டும் என் கைல கிடைச்சது… நான் ஹேனிபலா மாறிடுவேன் 🙂

    என்னாது சைடு பார்ல அப்டேட் ஆகமாட்டேன்னுதா? இதோ ஆரம்பிச்சிருவோம் பிரியாணி போராட்டம் 🙂

    @ கனகு – ட்ரூ தளத்துக்குப் போயி அவரோட படைப்புகளைப் பார்த்த உங்க தளரா நெஞ்சத்தைப் பாராட்டுறேன்.. எனக்கும் ரொம்பப் புடிசது 🙂

    @ ரோமியோ – விடுங்க பாஸு… ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்கி 🙂

    @ நாஞ்சில் – என்னாது பேரரசா? அய்யகோ.. அவருக்கு ஒரு ஆசுகர் வாய்ப்பு மிஸ்ஸு 🙁 . . அப்புறம், நானே ரொம்ப நாள் யோசிச்சிதான் இதை வாங்குனேன் 🙂 .. ஸோ, நிம்பளும் வாங்குறான்.. படத்தைப் பாக்குறான்… இதர் ஆ வோ . . 🙂

    @ Rajesh.v – சூப்பர் ! உங்களுக்கும் இது புடிச்சதைப் பத்தி சந்தோஷம்… இந்தக் க்ளைமேக்ஸ், பல விவாதங்களைக் கிளப்பக் கூடியதுதான்… நன்றி பாஸ்..

    @ இலுமி – அப்ப சரி.. படிச்சிபுட்டு செப்புங்க.. வழக்கப்படி நாவல் தான் பெஸ்ட்டுன்னு சொல்லப்போறீங்க . . அடிச்சி பட்டைய கிளப்புங்க 🙂

    @ anbou – அட எனக்கும் சில இடங்கள் பயமா இருந்திச்சி.. காரணம், இதோட க்ரிப்பிங் இசையும் இயக்கமும் தான்.. U luv thriller films? gr8.. same pinch dude 🙂 .. welcome to the club..

    @ செ. சரவணக்குமார் – நண்பா.. உங்க வாழ்த்துக்கு நன்றி.. பாருங்க.. பின்னூட்ட பதிலே இப்பதான் போட முடிஞ்சது.. உங்க சைட்டு பக்கம் வர முடியல. கோசிக்காதீங்க.. உங்க சைட்டு மட்டுமில்ல. நண்பர்களோட சைட்டு பக்கமே போக முடியாத சூழல்.. இன்னும் ரெண்டே வாரத்துல மீ த பேக்.. அதுவரை, யாரும் என்னைத் திட்டாதீங்க 🙂

    Reply
  16. இந்த படம் வந்த புதுசுல நான் பார்த்தேன். ரொம்ப நல்ல படம். படத்தோட கிளைமாக்ஸ் தான் இன்னும் இந்த படத்த மறக்காம இருக்க வைக்குது.

    Reply
  17. கிளைமேக்ஸ் அந்த 10 நொடி முன்னும் பின்னும் கலங்கடிச்சுருச்சு…

    Reply

Join the conversation