Once Upon a Time in the West (1968) – English

by Karundhel Rajesh February 7, 2011   English films

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய வருடங்கள். அமெரிக்காவெங்கும் தங்க வேட்டை மோகம் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நேரம். Bounty Hunters என்ற புதிய வகைத் தொழில், படுவேகமாகப் பிரசித்தியடைந்துகொண்டிருந்த காலம். நவஹோ பிராந்தியங்களான அரிஸோனா மற்றும் மாண்டெனாவில், ஒரு மதிய வேளையில், டெக்ஸ் வில்லரும் அவரது நண்பர் கிட் கார்ஸனும், பீன்ஸும் காப்பியும் அருந்தியவாறே, நவஹோக்களை அவமானப்படுத்திய வெள்ளையர்களைத் தேடித்திரிந்துகொண்டிருக்கும் நேரம். இன்னொரு பக்கம், கேப்டன் டைகர் என்று அழைக்கப்படும் ப்ளூபெர்ரி, தங்கப்புதையலைத் தேடித் தனது நண்பர்களுடன் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் சூழல். நத்திங் கல்ச் நகரத்தில், சிறையிலிருந்து தப்பிவிட்ட டால்டன் சகோதரர்களைத் தேடி, லக்கி லூக் ஜாலி ஜம்பரோடு பாலைவனத்தில் அலைந்து கொண்டிருக்கும் காலகட்டம்.

மேலே சொல்லப்பட்ட நாயகர்களின் பெயரைப் படித்ததும், ஒரு வித சந்தோஷம் உருவாகிறதல்லவா? அதே போன்றதொரு சந்தோஷத்தைக் கொடுக்கும் இயக்குநர் ஒருவர் இருக்கிறார் (இருந்தார்). அவரது பெயர் . . .

செர்ஜியோ லியோனி.

தனது அதிரடி ஆக்‌ஷன் வெஸ்டர்ன் படங்களின் மூலம், திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்ட ஒரு அருமையான இயக்குநர். இவரது டாலர் ட்ரையாலஜி படங்கள் (A Fist full of Dollars, For a few dollars more & Good bad and the ugly), ரசிகர்களின் மனதை விட்டு நீங்கவே போவதில்லை. நாம் இந்தப் படங்களை இப்போது பார்க்கப்போவதில்லை. இப்படங்களையடுத்து, இவர் இயக்கிய ஒரு படத்தைப் பற்றியே பார்க்கப்போகிறோம்.

படத்தின் பெயர், Once upon a time in the west. படத்தின் பெயரே, பல நினைவுகளை உள்ளே கிளப்பிவிடுவது போல இருக்கிறதல்லவா?

டாலர் ட்ரையாலஜி படங்களைப் பலர் பார்த்திருக்கக்கூடும். அவற்றைப் பார்த்தாலே, செர்ஜியோ லியோனியின் படமாக்கும் திறமை பளிச்சென்று புரியும். படு டைட் க்ளோஸப் காட்சிகள். இவற்றோடு இண்டர்கட் செய்யப்படும் லாங் ஷாட் காட்சிகள். பாலைவனம். அவற்றின் நடுவே ஒரு பழைய நகரம். அந்த நகரத்தில் இருக்கும் ஷெரீப்பின் ஆஃபீஸ். கையில் வின்செஸ்டர் துப்பாக்கியோடும், வாயில் சுருட்டைக் கடித்துச் சுவைத்தவாறும், பல நாட்கள் முள்ளு தாடியோடும், குளித்தேயிராத நாறும் உடலோடும் நடமாடிக்கொண்டிருக்கும் பல கௌபாய்கள் . அவர்களுக்கு நடுவே ஒரு அழகி. குதிரையில் ரயிலைத் துரத்தும் காலிப்பயல்கள் ஆகிய இத்தனை அம்சங்களும் அவரது படங்களில் தவறாது இடம்பெறும். ஆனால், இது எதுவுமே, அளவுக்கதிகமாக இருக்காது. அதேசமயம், உறுதியான கதை ஒன்றும் இருக்கும். அட்டகாசமான பின்னணி இசை(Courtesy: என்னியோ மாரிகோன்)யோடு நம்மை அசர வைக்கும் படங்கள் இவருடையன.

சரி. இப்போது, Once upon a time in the west படத்தைப் பார்க்கலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி. கொடும் வெயிலில், ஃப்ளாக்ஸ்டோன் நகரத்தின் ரயில்வே ஸ்டேஷன். மிகச்சிறிய மரக்கட்டிடம். மிக வயதான ஸ்டேஷன் மாஸ்டர். மெதுவாக, அந்த ஸ்டேஷனை நோக்கி மூன்று கௌபாய்கள் நடந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அணிந்துள்ள நீண்ட அங்கி, அவர்களது நடையை மேலும் பயமூட்டிக் காட்டுகிறது.

ஸ்டேஷனின் வெளியே நிற்கும் அவர்களின் தலைவன் போன்றவனிடம், அந்த அப்பாவி ஸ்டேஷன் மாஸ்டர், அவர்கள் மூவருக்கும், மூன்று டிக்கட்டுகளுக்கு, மொத்தம் ஐந்து டாலர்களும், ஐம்பது செண்ட்டும் ஆகும் என்று சொல்கிறார். அதனைக் கேட்டு, தலைவனின் முள்தாடி சூழ்ந்த முகத்தில், புன்னகை போன்ற ஏதோ ஒன்று நிகழ்கிறது. ஸ்டேஷன் மாஸ்டரைப் பிடித்து, ஒரு அறையில் தள்ளிப் பூட்டுகிறான் அவன். மெதுவே வெளியே வருகிறான்.அவனுடன் வந்த இருவர், அந்த நீண்ட ப்ளாட்ஃபாரத்தில், ஆளுக்கு ஒரு மூலையை நோக்கி நகர்கின்றனர். வெயில் வலுக்கிறது. அவர்கள், யாருக்கோ காத்திருக்கத் துவங்குகின்றனர்.

தொலைதூரத்தில், ரயிலின் இஞ்சின் சத்தம் கேட்கிறது. அதுவரை ஒரு ஈயோடு விளையாடிக்கொண்டிருக்கும் தலைவன், சட்டென்று விறைத்து அமர்கிறான். ப்ளாட்ஃபாரத்தின் இரு மூலைகளில் நிற்கும் இருவரையும் நோக்கி, முன்னே செல்லுங்கள் என்ற ரீதியில் தலையசைக்கிறான்.

ரயில், நமது கண்களில் தென்படுகிறது. படு அழுக்கான வண்டி. மிகச்சில பெட்டிகளே கோர்த்திருக்கிறது. நிறையப் புகையை வெளியிட்டுக்கொண்டே, சத்தத்துடன் ஸ்டேஷனில் நிற்கிறது. அந்த இருவரும், ரயிலின் இரண்டு மூலைகளிலும் நின்றுகொண்டிருக்கின்றனர். யாரும் இறங்கவில்லை. சற்றுநேரத்தில், ரயில் கிளம்புகிறது.முகத்தில் ஒரு திருப்திப் புன்னகையுடன், தலைவனும் மற்ற இருவரும் திரும்பி நடக்கத்துவங்குகின்றனர். ரயில், இவர்கள் நடக்கும் இடத்தைத் தாண்டுகிறது.

மிக மெதுவான ஒரு மௌத் ஆர்கன் இசை, காற்றில் நிரம்புகிறது. திடுக்கிட்டுத் திரும்பும் மூவரின் பார்வையில், ரயிலின் கடைசிப் பெட்டி தாண்டி மறைய, இவர்களுக்கு எதிர்ப்பக்கம், ரயிலின் பின்னால் ந்ன்றுகொண்டிருக்கும் ஒரு மனிதனின் உருவம், மறையும் பெட்டியைத் தொடர்ந்து, இந்த மூவரின் கண்ணுக்கும் தெரிகிறது. மரத்துப் போன முகத்துடன், கழுத்தில் தொங்கும் மௌத் ஆர்கனை அவன்தான் இசைத்துக் கொண்டிருக்கிறான். அந்த இசை, மிக நீண்ட ஒரு மரண ஓலம் போன்றதொரு தொனியில் அமைந்திருக்கிறது.

”ஃப்ராங்க் வரவில்லையா” என்று அந்த மனிதன் கேட்கிறான்.

“இல்லை. அவருக்குப் பதில்தான் நாங்கள்” என்று தலைவன் சொல்கிறான்.

“குதிரைகள் கம்மியாக இருக்கின்றனவே” என்று தலைவனைப் பார்த்து, அந்த மனிதன் கேட்கிறான். அங்கு மொத்தம் மூன்று குதிரைகளே இருக்கின்றன.

”ஆமாம். ஒரு குதிரை கம்மி” என்று தலைவன், அவனையே கூர்ந்து பார்த்துக்கொண்டே பதிலளிக்கிறான்.

“இல்லை. இரண்டு குதிரைகள் அதிகமாக இருக்கின்றன” என்று அந்த மனிதன் பதிலளிக்கிறான்.

அடுத்தநொடி, மூவரும் தங்களது துப்பாக்கிகளை அவசரமாக உருவ . . .

டுமீல்… டுமீல்… டுமீல் . . .

மெதுவே அந்த மனிதன் நடக்கத் துவங்குகிறான். குதிரைகளை நோக்கி. ஒரு குதிரையில் ஏறி, நகரத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறான்.

படு அட்டகாசமான ஒரு ஆரம்பத்துடன் தொடங்கும் இப்படம், இறுதிவரை நம்மை ஏமாற்றுவதில்லை. யார் அந்த மர்ம மனிதன்? அவன் ஏன் ஃப்ளாக்ஸ்டோன் நகரத்துக்கு வந்தான்? அவன் கொன்ற அந்த மூவர் யார்? அவனது வருகைக்குப் பின் ஃப்ளாக்ஸ்டோனில் என்ன நடக்கிறது? அவன் கேட்ட ஃப்ராங்க் என்ற மனிதன் யார்?

படத்தில், இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் உண்டு. அந்த மர்ம மனிதனாக நடித்திருப்பவர், சார்லஸ் ப்ரான்ஸன் (Charles Bronson). நான் சிகப்பு மனிதனின் ஆங்கில ஒரிஜினலான Death Wish படத்தில் பட்டையைக் கிளப்பியவர். இப்படத்திலும், இரும்பு முகத்தோடு, எதற்கும் கலங்காத ஒரு அதிரடி கௌபாயாக வருகிறார். அவ்வப்போது ஓரிரு வரிகளில் பேசுவதோடு இவரது வசனங்கள் முடிந்துவிட்டாலும், மனிதர் நமது மனதைக் கவர்கிறார்.

படத்தில் இவரைத் தவிர பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் உண்டு. செயான் என்ற கொள்ளையனின் பாத்திரம், அவற்றில் ஒன்று. அதேபோல், ஃப்ராங்க்காக நடித்துள்ள ஹென்ரி ஃபோண்டா. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை, படம் ஒருவித அமைதியுடனும், மெதுவான நடையிலும் சென்றாலும், ஒரு நொடி கூடப் போரடிக்காமல் இருப்பது செர்ஜியோ லியோனியின் மேதமைக்குச் சான்று. இப்படத்தின் கதையை, லியோனியும், பெர்னார்டோ பெர்டலூச்சியும் (த லாஸ்ட் எம்பரர் புகழ்), டாரியோ அர்ஜெண்டோ என்ற மற்றொரு வருங்கால இயக்குநரும் சேர்ந்து வடிவமைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட அந்தக் காலகட்டத்தின் மிகப்பிரபலமான கௌபாய் படங்கள் அனைத்தையும் பல முறை பார்த்து, இந்தக் கதையை வடிவமைத்திருப்பது, துணுக்குச் செய்தி. அதேபோல், டாலர் ட்ரையாலஜிக்களை எடுத்துமுடித்த அனுபவம் செர்ஜியோ லியோனிக்கு இருந்ததால், மிகத்தேர்ந்த ஒரு கௌபாய் வெஸ்டர்னாக இப்படம் பரிமளிக்கிறது. இப்படத்தில் சார்லஸ் ப்ரான்ஸனின் கதாபாத்திரத்தில், டெக்ஸ் வில்லர் அல்லது கிட்கார்ஸன் அல்லது கேப்டன் டைகரை மிக எளிதாகப் பொருத்திப் பார்க்க இயலும்.

காமிக்ஸ் ரசிகர்கள், கௌபாய் பின்னணியில், ரயில்பாதை வடிவமைக்கும் கதைகளைப் படித்திருக்கக்கூடும். இப்படத்திலும், அதைப்போன்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. படத்தின் கதைக்கு, இந்த ரயில்பாதை, முதுகெலும்பாக அமைகிறது. அதேபோல், பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ள நகர் இதில் உண்டு.

படத்தின் இசை, என்னியோ மாரிகோன். சொல்ல வேண்டுமா? இதோ – படத்தின் தீம் இசை. இங்கே கேளுங்கள்.

மேலே நான் விவரித்த படத்தின் தொடக்கக் காட்சிகளை, இங்கே காணலாம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த இப்படத்தை, நேற்று மறுபடியும் பார்த்தது, பல நினைவுகளை எழுப்பியது. R.I.P Sergeo Leone !

Once Upon a Time in the West படத்தின் டிரய்லர் இங்கே காணலாம்.

பி.கு – ஷோலே படத்தின் பல காட்சிகள் இதிலிருந்து உருவப்பட்டுள்ளதை, படம் பார்த்தால் புரிந்துகொள்ளமுடியும்.

  Comments

28 Comments

  1. வாவ்.. கவ்பாய் படம்?? … ரயிலடி, வறண்ட பாலைவனம், அழுக்கு ஆட்கள், சூப்பர்… நிச்சயம் பார்க்க வேண்டும்.. கேப்டன் டைகர் a.k.a ப்ளூபெர்ரி படங்கள் ஏதாவது இருந்தால் பெயர் சொல்லவும்..

    ச ச சா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பெங்களூர் நண்பர் நீங்கள் தானே??. ராகேஷ் என்று பெயர் தவறாக அச்சிடப்பட்டிருந்தது…

    Reply
  2. அடி தூள்.

    அந்த எக்ஸ்டென்டாட் ஓபனிங் சீனை பார்த்து விட்டு அடிமையான கவ் பாய் வெஸ்டர்ன் பட வெறியர்களின் சங்க தலைவர்.

    Chennai Branch.

    Reply
  3. என்னுடைய ஆல் டைம் பேவரிட் படங்களாகிய ஷாஷன்க் ரேடம்ஷன், டேட் போயட்ஸ் சொசைடி போலவே இந்த படமும் அமெரிக்காவில் முதல் முறையாக ரிலீஸ் ஆகும்போது ஹிட் ஆகவில்லை.

    Reply
  4. //நவஹோ பிராந்தியங்களான அரிஸோனா மற்றும் மாண்டெனாவில், ஒரு மதிய வேளையில், டெக்ஸ் வில்லரும் அவரது நண்பர் கிட் கார்ஸனும், பீன்ஸும் காப்பியும் அருந்தியவாறே,//

    ரைட்டு, ஆனால் கிட் கார்சனுக்கு பிடித்தது வறுத்த உருளைக்கிழங்கு.

    Reply
  5. //படத்தின் இசை, என்னியோ மாரிகோன். சொல்ல வேண்டுமா? இதோ – படத்தின் தீம் இசை. இங்கேகேளுங்கள்.//

    நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகனாகத்தான் இருந்தேன் – அதாவது எனக்கு டிமிட்ரி டியோம்கின் அறிமுகம் ஆகும் வரை.

    இன்னுமொரு மேட்டர் சொல்கிறேன் – என்னியோ மாரிகொன் இசையமைத்த பிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ் படத்தின் இசை உங்களுக்கு பிடிக்குமா? அந்த இசையானது நம்ம டிமிட்ரி டியோம்கின் இசையமைத்த எல் டிகேலோ பாடலின் மருவுதான்.

    Reply
  6. அது சரி, டிவிடி கவரில் கலெக்டர்ஸ் எடிஷன் என்றுள்ளதே? அதில் டைரக்டர்ஸ் கட் / மேகிங் ஆப் / ஸ்பெஷல் சீன்ஸ் என்று ஏதாவது உள்ளதா?

    ஏனென்றால் இது போல பலவற்றை மாங்கு மாங்கென்று கலெக்ட் செய்து வருபவன் நான் (அதான் உங்களுக்கே தெரியுமே). என்னிடம் உள்ள டிவிடியில் இது போல எதுவுமே இல்லை.

    Reply
  7. நண்பர் கேப்டன் டைகருக்கு,

    //கேப்டன் டைகர் a.k.a ப்ளூபெர்ரி படங்கள் ஏதாவது இருந்தால் பெயர் சொல்லவும்..//

    என்ன கொடுமை இது? அந்த பெயரை வைத்துக்கொண்டு இப்படி கேட்கலாமா?

    இந்தாருங்கள்: இதுவரை வந்த ஒரே ஒரு ப்ளூபெர்ரி படத்தின் லிங்க்: – தமிழ் காமிக்ஸ் உலகம்

    கிங் விஸ்வா
    தமிழ் காமிக்ஸ் உலகம் – சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்

    Reply
  8. நண்பரே,

    செர்ஜியோ லியோனியின் பாணி அசத்தலானது என்பதில் மறு கருத்து இல்லை. ஹென்ரி ஃபோன்டாவின் நடிப்பும் கிளாசாக இருக்கும். சார்ல்ஸ் ப்ரவுன்சனின் மவுத் ஆர்கன் இசை இன்றும் காதில் கேட்கிறது.

    Reply
  9. நண்பா
    பதிவு அட்டகாசம்
    ஆட்டத்துக்கு நண்பர் விஸ்வாவும் வந்துவிட்டாரா?அதகளம் தான்

    =====
    சம்பந்தமில்லாத ஒன்று

    கணக்கு வராத பிள்ளைகளுக்கு இப்படி புதிய முறையில் கணக்குபாடம் கற்பிக்கலாம், நம்மில் பலருக்கு அரசியல்வாதிகளின் குறைந்தபட்ச மதிப்பே தெரிவதில்லை. அதை நினைவு கொள்ள இதோ புதிய சூத்திரம்.

    மத்திய மாநில அரசின் புதிய வாய்ப்பாடு:-

    1 லட்சம் = 1 வட்டம்
    1 கோடி = 1 மாவட்டம்
    100கோடி= 1 மந்திரி
    500 கோடி = 1 கோடா
    1,000 கோடி = 1 ராடியா
    10000 கோடி = 1கல்மாடி
    100,000 கோடி = 1ராஜா

    10 கல்மாடி+ 10 ராஜா = 1 ஷரத் பவார்
    10 ஷரத்பவார் = 1 சோனியா

    Reply
  10. நான் செர்ஜியோ லியோனியின் பரம் இரசிகன் நண்பா,அந்த ஆர்.டி பர்மன் ஹிந்தியில் அமைத்த இசைக்கோர்வைகள் இவரது படத்திலிருந்து தான் உருவப்பட்டிருக்கும்,என்னியோ மாரிக்கான் ஒரு இசை ஜாம்பவான் வேறென்ன சொல்ல?க்ளிண்ட் ஈச்ட் வுட் என்றாலே பிண்ணணியில் கோரஸும்,குதிரை கணைப்பதும்,துப்பாக்கி சத்தமும் தான் இவரது பிண்ணணி இசைமூலம் ஒளிக்கிறது.தவிர மிஷன்,பேட்டில் ஆஃப் அல்கியர்ஸ் எல்லாம் இவரின் மாஸ்டர் பீஸ்.

    Reply
  11. இந்தப் படம்,”The Good,The Bad and The Ugly”க்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த படம்.அசத்தலான ஒன் லைனர் ஆரம்பத்தில் இருந்து,அண்டர் ப்ளே ஹீரோ,அசத்தலான இசை,கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டே செல்லும் டென்ஷன் என்று இந்த படம் இப்போதும் என் மனதில் நிற்கிறது.குறிப்பாக அந்த மௌத் ஆர்கன் இசை.கொஞ்சம் மெதுவான,கரகரப்பான,முரட்டுத்தனமும்,சஸ்பென்ஸும் கலந்த இசை.A hard edged,suspense filled,rugged sort of a music that fits the protagonist aptly.

    Reply
  12. அட்டகாசமான பதிவுங்க.. 🙂 நான் வெஸ்ட்ர்ன் படங்களை இதுவரை பார்க்கவில்லை… பார்க்க ஆரம்பிக்கணும்… 🙂

    Reply
  13. எல்லாரும் என்னென்னமோ பேரெல்லாம் சொல்லி பேசறீங்களே? ஒன்னுமே புரியலை.

    இவரு ராமராஜன் மாறி படம் நடிப்பாரா?

    Reply
  14. //வெளங்காத தமிழ் அனானி has left a new comment on the post “Once Upon a Time in the West (1968) – English”:

    எல்லாரும் என்னென்னமோ பேரெல்லாம் சொல்லி பேசறீங்களே? ஒன்னுமே புரியலை.

    இவரு ராமராஜன் மாறி படம் நடிப்பாரா? //

    கண்டிப்பாக. உங்களுக்கு மேட்டரே தெரியாதா? இது நம்ம ஊரு ரெயிலுக்காரன் என்ற ராமராஜன் படத்தை தழுவியே ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது.

    மர்ம மனிதனாக நடித்திருப்பவர், சார்லஸ் ப்ரான்ஸன் = தமிழில் நம்ம ராமராஜன்

    செயான் என்ற கொள்ளையனின் பாத்திரம், ஜேசன் ராபர்ட்ஸ் = தமிழில் வினு சக்கரவர்த்தி

    ஃப்ராங்க்காக நடித்துள்ள ஹென்ரி ஃபோண்டா = தமிழில் நாசர்.

    ஹீரோயின் = தமிழில் ரேகா (கடலோரக்கவிதில் ரேகா).

    Reply
  15. கௌபாய் படங்களே ஒருவித சுவாரசியத்தை நமக்களிக்கும்! கதையும் சம்பவங்களும் நன்றாக உள்ளன பார்க்க முயற்சிக்கிறேன்!

    Reply
  16. romba nallaruku da…very good..seekeram duck you sucker paathe na reviews eludhu..i’m not getting that dvd here!

    Reply
  17. @ captaintiger – ரைட்டு… விஷ்வா உங்களுக்குப் பதில் குடுத்துட்டாரு 🙂

    ச.ச.சா புத்தகத்தில் இருக்கும் நபர் நானே. அது தவறாக ராகேஷ் அன்று அச்சிடப்படவில்லை. வேண்டுமென்றே தான் 🙂 ..

    @ நாஞ்சில் மனோ – இவ்வளோ சிறிய கமெண்டா.. 🙂 பின்னுங்க 🙂

    @ விஸ்வா – அதே மாதிரி இங்க பெங்களூருல நான் ஒரு சங்கம் ஆரம்பிச்சி பல காலமா நடத்திக்கினு வாரேன் தெரியுமுல்ல 🙂 . . கிட் கார்ஸனுக்குப் பிடித்த உருளையை நினைவூட்டியதற்கு நன்றி 🙂 ..

    எனக்கு ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ் புடிக்கும். என்னாது டிமிட்ரி டியோம்கினா? கிளிஞ்சது போங்க.. அவரும் காப்பியா? அப்ப இனிமே எனக்குப் புடிச்ச மீசிக்கி டைரக்டரு, வேதா.. 🙂

    டைரக்டர்ஸ் கட் எனக்குக் கிடைக்கவில்லை. நான் பிக்ஃப்ளிக்ஸில் இருந்து ரெண்ட் செய்த ஒரிஜினல் டிவிடி, நார்மல் எடிஷன் தான். ஆனால் பல பிரபல இயக்குநர்களின் டிஸ்கஷன், கமெண்ட்ரியாக படம் நெடுகவும் வந்தது..

    @ காதலரே – எனக்குத் தெரியும். உங்களுக்கும் இது பிடிக்கும் என்று. பிடிக்காவிட்டால் தான் ஆச்சசரியம் 🙂 நன்றி

    @ கீதப்ரியன் – நண்பா.. உங்க வாய்ப்பாடு சூப்பர் 🙂 .. பார்த்து… ஷார்ஜால இருந்து உங்களை எக்ஸ்ட்ரடைட் பண்ணிடப்போறாய்ங்க 🙂

    ஆர். டி பர்மன் பத்தி.. ஆமாம்.. பிரபல காபிகேட் அவரு 🙂 .. முடிய் போச்சுன்னு காப்பியடிப்பாரு 🙂 .. பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ் எனக்கும் பிடிச்சது.. இசையும் படமும்..

    @ இலுமி – //A hard edged,suspense filled,rugged sort of a music that fits the protagonist aptly.// யெஸ்ஸு… இந்தப் படம் முழுதுமே, இசையும் சரி, இயக்கமும் சரி.,.. சூப்பரா அண்டர்ப்ளே பண்ணிருக்காங்க.. அதுவே இதன் சுவாரஸ்யத்தை அதிகமாக்குது..நன்றி

    @ கனகு – என்னாது இன்னும் வெஸ்டர்ன் படங்களைப் பார்க்கலையா? அடப்பாவி கனகு.. ஆரம்பியும் 🙂

    @ வெளங்காத தமிழ் அனானி – எங்கள் தங்கம் இராமராசனை விளங்காத ஆங்கிலப் பயலுவளொடு கம்பேர் செய்த உங்கள் மேல் நான் ஏன் மானநஷ்ட வழக்கு போடக்கூடாது என்று அயிம்பது வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு பின்னூட்டம் போடவும்.. இதோ விஸ்வாவின் பின்னூட்டம் வந்துவிட்டது 🙂

    @ விஸ்வா – இந்த வெளங்காத தமிழ் அனானியின் ஊரு, ஜாக்ஸன்வில். அவரு உண்மைப் பேரு, பாலான்னு முடியும்… உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன் 🙂

    @ எஸ்.கே – கட்டாயம் பாருங்க… கட்டாயமா உங்களுக்குப் புடிக்கும். நன்றி

    Reply
  18. @ பாலு – டக் யூ சக்கர், பிக்ஃப்ளிக்ஸ்ல தேடிப்பாக்குறேன். கிடைச்சா எழுதுவேன் 🙂

    Reply
  19. வெஸ்ட்டர்ன் மூவி எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்தப்படம் மிகவும் தனித்துவம்.சிறுவயதில் என்னுடைய வெஸ்டர்ன் வாத்தியார் கர்ணன்.

    Reply
  20. ஆரம்பிக்கிறேன் பாஸ் 🙂 நான் பார்த்த ஒரே படம் ‘தி வைல்ட் பன்ச்’. அட்டகாசமாக இருந்தது.. நீங்க பாத்துருப்பீங்க-னு நினைக்கிறேன்.. 🙂

    Reply
  21. //kanagu has left a new comment on the post “Once Upon a Time in the West (1968) – English”:

    ஆரம்பிக்கிறேன் பாஸ் 🙂 நான் பார்த்த ஒரே படம் ‘தி வைல்ட் பன்ச்’. அட்டகாசமாக இருந்தது.. நீங்க பாத்துருப்பீங்க-னு நினைக்கிறேன்.. :)//

    சாம் பெக்கின்பா’வின் மாஸ்டர் பீஸ் அது. பலரும் திரும்பி யாருப்பா இந்த டைரக்டர் என்று வியக்க வைத்த படம்.

    ஆனால் என்னை பொறுத்த வரையில் சாம் பெக்கின்பா’வின் படங்களில் சிறந்தது எது என்றால் தி வைல்ட் பஞ்ச் படம் எடுத்தவுடன் இம்மிடியட்டாக இயக்கிய “தி பேலட் ஒப் கேபிள் ஹோக்” தான். அது ஒரு செம படம். வெஸ்டர்ன் படம், ஆனா வெஸ்டர்ன் இல்லை.

    கிங் விஸ்வா
    தமிழ் காமிக்ஸ் உலகம் – சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்

    Reply
  22. boss romba Nalla irukku……..appadiyea ennudaiya fav movie Mirrors pathi konjam Eluthunga

    Reply
  23. இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஹென்றி ஃபோண்டாவின் நடிப்பு. அற்புதமான வில்லன் இவர்.

    Reply
  24. இது போல இன்னொரு நல்ல கவ்பாய் படம் “High Noon”.

    Reply
  25. Sergio Leone! Karundhel..i became a big fan of Leone after watchin ‘the good,the bad& the ugly’ and the ‘magnificient 7’ and this movie cements his place as one of the greatest directors of all time.

    Wonderful review as always and currently i’m watching Sergio Leone’s final movie and arguably his finest too’ ONCE UPON A TIME IN AMERICA’..(Atha pathiyum oru asathalaana review eluthunga!)

    Sholay seems to have been copied..oops..inspired(?!) from this movie and the maginificient 7.

    ‘the good,the bad and the ugly”s theme music-a apadiyae uruvi namma thenisai thendral Deva ‘Baadsha’ padathil payan’paduthi’ irupaaru..vaalga plagiarism!

    Reply
  26. /*ஆனால் என்னை பொறுத்த வரையில் சாம் பெக்கின்பா’வின் படங்களில் சிறந்தது எது என்றால் தி வைல்ட் பஞ்ச் படம் எடுத்தவுடன் இம்மிடியட்டாக இயக்கிய “தி பேலட் ஒப் கேபிள் ஹோக்” தான். அது ஒரு செம படம். வெஸ்டர்ன் படம், ஆனா வெஸ்டர்ன் இல்லை.
    */

    நீங்க சொல்றீங்க… கண்டிப்பா பாக்குறேன்… இப்ப தான் டோரெண்ட் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்…:)

    Reply
  27. topclass movie….
    watched it more than 10times….

    Stunned after seeing Henry fonda in a negative role….

    Sergio leone’s rocking direction…..

    one of my alltime best…..

    good writing Karundel….
    keep on writing…

    Reply

Join the conversation