The Conjuring (2013) – English
ஹாலிவுட்டில் பேய்ப்படங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட கேடகரிக்கள் இருக்கின்றன.
1. பாழடைந்த வீடு. அதில் ஹீரோ போய் மாட்டிக்கொண்டுவிடுதல். இந்த கேடகரியில்தான் அதிக பேய்ப்படங்கள் இருக்கின்றன (உதாரணம்: The Woman in Black, Mirrors, The Skeleton Key, The Grudge). அங்கே அமானுஷ்ய நடமாட்டம். அதற்குக் காரணம், அந்த வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கும் மரணங்கள். அப்படி இறந்த பேய், தற்காலத்தில் வீட்டில் இருப்பவர்களை துரத்தும். இறுதியில் என்ன நடக்கிறது? (சில சமயம் இதற்கு நேர் ஆப்போஸிட்டாக, குடிவரும் மனிதனைப் பார்த்து பேய்கள் பயப்படும் கதைகளும் உண்டு. உதாரணம் – The Others).
2. பாழடைந்த வீடு. அதனை வாங்கும் தம்பதிகள். இதன்பின் பாயிண்ட் 1ல் மூன்றாவது வரியிலிருந்து படித்துக்கொள்ளவும். (உதாரணம்: Insidious)
3. பாழடைந்த வீடு. அங்கே வரும் இளைஞர்கள்+பெண்கள். இதன்பின் பாயிண்ட் 1ல் மூன்றாவது வரியிலிருந்து படித்துக்கொள்ளவும். (Evil dead, House of Wax).
4. பாழடைந்த வீடெல்லாம் இல்லாமல், அமானுஷ்ய சக்திகள் ஹீரோவையோ ஹீரோயினையோ துரத்துதல் (The Ring).
’பேய்’ என்றாலே ஹாலிவுட்டில் அரத பழைய வீடு ஒன்றை ரெடி செய்துவிடுவார்கள். அதன்பின் பின்னணி இசை கொடுக்கும் பயத்தில் மட்டும்தான் படம் பார்க்கும் ஆடியன்ஸ் பயப்படுவது நடக்கும். திரையில் வரும் பேயெல்லாம், பார்த்தாலே விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் அளவுதான் இருப்பது வழக்கம்.
இருந்தாலும், The Shining போன்ற ஹாரர் படங்கள் எப்போதாவது வெளிவருவது உண்டு. எனக்குத் தெரிந்து, நான் பார்த்த ஹாரர் படங்களில் Shining படத்தை அடித்துக்கொள்ள இதுவரை படம் இல்லை. க்யுப்ரிக்கின் முத்திரை அட்டகாசமாக அப்படத்தில் இருக்கும்.
ஹாரர் படங்களில், பேய்கள் இல்லாமல், சைக்கோ கொலைகாரன் அல்லது இன்னபிற வகையறாக்களுக்கு நான் ரசிகன். அந்த வகையில், Hostel போன்ற படங்கள் பிடிக்கும்.
’கான்ஜுரிங்’ படத்தைப் பொறுத்தவரையில், யூ.எஸ் பாக்ஸ் ஆஃபீஸில் இது வரை 100 மில்லியன் சம்பாதித்துவிட்டது. இணையமெங்கும் நல்ல ரேட்டிங். எனவேதான் நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க முடிவுசெய்தேன்.
படத்தின் ஆரம்பத்தில், ‘வீடு’ என்ற வஸ்து வந்தபோதே சலிப்பு தட்ட ஆரம்பித்தது. அதன்பின் ஆவி ஆராய்ச்சியாளர்கள் இருவரைக் காட்டியபோது, சலிப்பு அதிகமானது. அவர்கள் வீட்டில் ஏராளமான அமானுஷ்ய ஐட்டங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் ஜஸ்ட் ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்திருக்கின்றனர். அங்கே அவர்களின் பெண் ஒளிந்துகொண்டு இவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறாள் (உடனேயே இரண்டாம் பாதியில் அந்தப் பெண்ணுக்கு ஆபத்து வரப்போகிறது என்று புரிகிறது). அதே நேரத்தில் வழக்கப்படி பாழடைந்த வீட்டை வாங்கி ரெனவேட் செய்யும் தம்பதிகளுக்கு அங்கே பல அமானுஷ்ய அனுபவங்கள். எப்படி என்னென்ன அனுபவங்கள் என்று பார்த்தால்:
1. கடிகாரம் நிற்கிறது.
2. சுவற்றில் இருக்கும் ஃபோட்டோக்கள் கழன்று விழுகின்றன
3. அவர்களின் பெண் தூக்கத்தில் நடந்து, ‘டங் டங்’ என்று வார்ட்ரோப்பில் முட்டிக்கொள்கிறாள்
4. அவர்களின் ஒரு பெண்ணுக்கு, அந்த வீட்டில் இருக்கும் ஒரு பேய் சிறுவனோடு பழக்கம் இருக்கிறது
உண்மையை சொல்லுங்கள். இதைப்படிக்கும் நண்பர்கள், இதுவரை இப்படிப்பட்ட மேட்டர்களை எத்தனை படத்தில் பார்த்திருக்கிறீர்கள்? எல்லாமே ஆல்ரெடி சொல்லப்பட்டுவிட்ட விஷயங்கள்தான். புதிதாக இந்தப் படத்தில் எதுவுமே இல்லை.
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்’ நடத்திய ‘பேசும் ஆவிகள்’ புத்தகத்தில், 1997 ரேஞ்சில் ஒரு தொடரை எழுதி வந்தார். இதேதான் அதன் கரு. இங்லீஷ் மொழிபெயர்ப்பான அந்தத் தொடர், உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சி என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் இப்படிப்பட்ட ஒரு வீட்டில் குடிவரும் தம்பதிகளுக்கும் அங்கிருக்கும் ஆவிகளுக்கும் நடக்கும் பிரச்னைகளே அந்தத் தொடரின் முக்கிய கரு. அது, பிற்காலத்தில் ஹாலிவுட்டில் படமாகவும் வெளிவந்தது.
ஒரு படத்தில், படம் பார்க்கும் ஆடியன்ஸை பயமுறுத்தும் காட்சிகள் புதிதாக இருக்கவேண்டும். ஆல்ரெடி காட்டப்பட்ட அதே பழைய காட்சிகளாக இருந்தால், பயத்துக்கு பதில் சிரிப்புதான் வரும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது சிரிப்பாக இருந்தது. ஒரே ஒரு காட்சியில் கூட என்னை சுவாரஸ்யப்படுத்தாத படம் இது. இதில் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் பல படங்களில் பலமுறை பார்த்தாயிற்று. வீட்டைச்சுற்றி கேமராக்கள் வைத்தல், அதில் ஆவி பேசுவதும் நடமாடுவதும் படமாகுதல் போன்றவையும் அப்படித்தான். இதே காட்சிகள், Insidious படத்தில் வந்துவிட்டன. இதில், பேயோட்டும் exorcist பாதிரியார் ஒருவர் எண்ட்ரி ஆகிறார்.
ஆனால், கடைசியில் கதாநாயகனே ஜாலியாக புத்தகத்தை திறந்து, ‘ஆஓகீஏஜ்ஜீக்கூய்ய்’ என்றெல்லாம் உளறிக்கொண்டு பேய் ஓட்டுகிறான். உடனே வழக்கப்படி பேய் ரியாக்ட் செய்கிறது. காற்று அடிக்கிறது. பறவைகள் பறக்கின்றன. ‘மருவாதியா இங்கிருந்து எஸ்கேப் ஆயிரு’ என்கிறான். அது ‘போடா லூசு’ என்கிறது. என்னாங்கடா நடக்குது ?
சரி – பேய் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், கோரமான முகத்தோடு அதே வழக்கமான ‘மைடியர் லிஸா’ பேய். நாற்காலியில் கட்டப்பட்டு, ஜிங் ஜிங் என்று அது குதிக்கும்போது, இது ஏதோ பேய்ப்படங்களை பகடி செய்யப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறதோ (a spoof film like ‘Scary Movie’) என்று எண்ணினேன். துளிகூட பயம் வராமல் சிரிப்பாக வந்தால் அப்படித்தானே தோன்றும்?
இந்தப் படத்தில், பேயின் பின்னணியை கவனித்தால், நான் மேலே கொடுத்திருக்கும் பல பேய்ப்படங்களின் கதையேதான் அது. அதிலும் புதிதாக எதுவும் இல்லை. இதில், இது உண்மைக்கதை என்ற பில்டப் வேறு.
இப்படி இருக்கும்போது இது எப்படி பேய்ப்படமாகும்? தன் வாழ்நாளில் எந்த பேய்ப்படத்தையும் பார்க்காமல், சும்மா லோக்கல் ‘பேய்ப்படங்களைப்’ பார்க்கும் மனிதர்களுக்கு வேண்டுமானால் இது உலக பேய்ப்படமாக இருக்க வாய்ப்புண்டு. மற்றபடி இதெல்லாம் பேய்ப்படம் என்றால், Shining போன்ற படங்களை என்ன சொல்வீர்கள்?
நான் பார்த்த ஹாரர் படங்களில், சமீபத்தில் என்னை கவர்ந்த படம் – The Orphanage. க்ளிக் செய்து படிக்கலாம். அந்த விமர்சனத்தில் நான் எழுதியிருந்த ஒரு வரி – ‘எனக்கு டெம்ப்ளேட் வகையைச் சேர்ந்த பேய்ப்படங்கள் பிடிக்காது. ஒரு பேய்ப்படத்தில் எடுத்த எடுப்பில் பேயைக் காண்பிப்பது, அதன்பின் ஒவ்வொரு பதினைந்தாவது நிமிடத்திலும் அந்தப் பேய் அங்கங்கே வருவது, ஜன்னல்கள் அடித்துக்கொள்வது, விளக்குகள் அணைவது, நாய் ஊளையிடுவது போன்ற காட்சிகள் வந்தவுடன் டிவியை அணைத்துவிடுவேன்’.
The Conjuring படமே இப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் – Saw படத்தை இயக்கிய ஜேம்ஸ் வான். கொடுமையான இயக்குநராக மாறியிருக்கிறார்.
ஹாலிவுட் படங்களை விட, கொரியன் ஹாரர் படங்கள் அட்டகாசமாக இருக்கும். இதோ இது ஒரு உதாரணம் —> The Tale of Two Sisters.
பணம், நேரம் ஆகியவைகளை விரயம் செய்தே தீருவேன் என்ற எண்ணம் இருப்பவர்கள் இப்படத்தை தாராளமாக பார்க்கலாம். Total waste of time and money.
நமக்கும் பேய்படத்துக்கும் காத தூரம்.. உங்கள மாதிரிதான்.. பேய்படங்கள் இல்லாம, சீரியல் கில்லர்ஸ் அல்லது ஹாரர் படங்கள்லாம் பிடிக்கும்.. பேய்ங்கறது ஒரு ஃபேன்டசிங்கறது மனசுல ஆழமா பதிஞ்சுட்டதால அந்த மாதிரி படங்கள் மனசுல ஒட்டறதே இல்ல..!!
உங்கள கோவப்படுத்துற மாதிரி ஒரு மேட்டர் சொல்லட்டா ?!! எனக்கு “ஷைனிங்க்” படமே சுத்தமா பிடிக்கலை.. சுத்தமா பயமே வரலைனா..!! 😛
Hi boss
have seen 1408 Movies ,what abt your review .
beat horror movies list post panna nallarukum……….pls
உங்களால் சிங்கம்-2 வை தனியாகப் பார்க்க முடியுமா?
ji 13B(yavarum nallam) padathai pathriya karuthu ennavaga irukkum?
Bro, from the very first day you told that this movie is not good. I told this to my friends and got mokka, all are telling that this movie is really scary, and no tickets avail in Chennai theaters on week ends for this movie, and everybody who watched this are suggesting others to watch this, as its a really great experience 🙂
Ha ha ha .. Then try seeing it and tell me if you liked it Bro 🙂
On reading your reviews, i can understand that you are not a big fan of horror movies. I understand that you dont like ‘template movies’, but isnt horror movies are a stereotypical genre. you cant ultimately change everything and take a horror movie. that too happens, very rarely – like ‘the shining’ you have mentioned here. I admit that there are scenes that are ‘cliche’ ones, but there are scenes that are really good. example – the doll scenes. That is not a main character but a interesting one. Sometimes i read your reviews and feel you should be unbiased when writing a review.
TWO DAYS BEFOR ONLY I HAD INSIDIOUS MOVIE , ITS SO BORING ONLY FIRST HALF ONLY NICE……CONJURING I S A GOOD THRILLER MOVIE , NO GRAPHICS..AND NO OTHER EXTRA ..ETC….