The Hobbit: Desolation of Smaug (2013): 3D – English

by Karundhel Rajesh December 14, 2013   English films

’The Hobbit’ படத்தின் முதல் பாகத்தைப்பற்றிய எனது விமர்சனத்தை முதல் வார்த்தையின் மேல் சிரமம் பார்க்காமல் க்ளிக் செய்து  ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் இந்தப் படத்தின் பின்னணி நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. ‘அதெல்லாம் படிக்க முடியாது’ என்று நினைப்பவர் என்றால், தொடர்ந்து படிக்க.

பீட்டர் ஜாக்ஸனின் ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ படங்களை இதுவரை பார்க்காத நபராக இருந்தால் கூட, அவற்றைக் கேள்விப்பட்டிருப்பதை மறுக்கவே இயலாது. சென்ற ஆண்டு (2012) ஜூன் 4ம் தேதி, நான், ஹாலிவுட் பாலா & கொழந்த மூவரும் சேர்ந்து ‘War of the Ring’ என்ற இலவச மின்புத்தகத்தை வெளியிட்டதை நண்பர்கள் மறந்திருக்க இயலாது. அந்த மின்புத்தகத்தில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பல இருக்கின்றன (என்று நினைக்கிறேன்). அதையும் மேலே க்ளிக் செய்து தரவிறக்கிப் படிக்கலாம். அந்தப் புத்தகத்திலேயே ‘ஹாபிட்’ பற்றிய ஒரு பெரிய அத்தியாயமும் இருக்கிறது. இந்த ஸீரீஸ் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு இப்படங்களைப் பற்றிப் படித்தால் (அல்லது) பார்த்தால் இன்னும் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என்பதால் அப்படிச் சொன்னேன்.

[divider]

ரைட்.

2012ல் வெளியான ‘Hobbit: An Unexpected Journey’ படத்தின் சுருக்கம் – மிடில் எர்த் என்ற கற்பனை உலகில் மாமன்னர் த்ரார் என்பவர் ஸ்தாபித்த எரெபோர் (Erebor) என்ற சாம்ராஜ்யத்தை குஷியாகவும் கும்மாளத்துடனும் ஆண்டுகொண்டு வந்த ’ட்வார்ஃப்ஸ்’ (Dwarfs) என்ற, உருவில் சிறிய முரட்டுத்தனமான மக்களுக்கு, ஒரு பிகப்பெரிய ட்ராகன் மூலமாக சோதனை வருகிறது. அந்த ட்ராகனின் பெயர் – ஸ்மாக் (Smaug). இந்த ட்வார்ஃப்களை அடித்துத் துரத்தி, பலரையும் தனது நெருப்பு மூச்சினால் எரித்து, அவர்கள் குவித்துவைத்திருந்த எக்கச்சக்கமான செல்வத்தை அபகரித்துக்கொண்டு அந்த சாம்ராஜ்யத்தை கபளீகரம் செய்கிறது ஸ்மாக்.

தப்பி ஓடிய இளவரசன் தோரின் (Thorin Oakenshield) – இவன், த்ராரின் பேரனும் கூட – தன்னுடன் பனிரண்டு ட்வார்ஃப்களை சேர்த்துக்கொண்டு, இழந்த சாம்ராஜ்யத்தை மீட்க, காண்டால்ஃப் என்ற நாரத மந்திரவாதியின் உதவியை நாடுகிறான். காண்டால்ஃபும் சம்மதிக்கிறார். ஆனால், ‘பில்போ’ (Bilbo) என்ற ஹாபிட் ஒருவனையும் இந்தப் பயணத்தில் சேர்த்துக்கொள்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் – அவனால் எந்தப் பூட்டையும் திறக்க இயலும்’ என்பதே.

இந்தக் குழுவினர் பல்வேறு சாகஸங்களை மேற்கொண்டு, எரெபோர் பிரதேசத்தை நெருங்குவதோடு முதல் பாகம் முடிந்தது.

முதல் பாகத்தில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் இல்லாத சில கதாபாத்திரங்கள் அறிமுகமாயினர். காண்டால்ஃபின் இஸ்தாரி என்ற இனத்தைச் சேர்ந்த ‘ரடகாஸ்ட்’ (Radagast) என்ற மந்திரவாதி, இந்தப் புதியவர்களில் ஒருவர். படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றான தோரினின் பரம வைரியான ‘அஸாக்’ (அஷோக் அல்ல. Azog என்று சொல்லவேண்டும்) என்ற பூதம் ஆகியவர்கள் முதல் பாகத்தில் குறிப்பிடத்தகுந்த புதிய அறிமுகங்கள். கூடவே, வில்லன் ஸ்மாக் என்ற ட்ராகனையும் சேர்த்துக்கொள்ளலாம் (ஆனால் முதல் பாகத்தில் இந்த ட்ராகன் சரியாகக் காண்பிக்கப்படவே இல்லை).

[divider]

Desolation of Smaug – என்ற வாக்கியத்துக்கு, ’பாழ்நிலை’ என்று அர்த்தம். இன்னும் எளிமையாக சொல்லப்போனால், ’வாழ்வதற்கே தகுதியில்லாத’ என்று அர்த்தம். ஸ்மாக் என்ற ட்ராகன் செய்த அழிவுகள்தான் Desolation of Smaug, என்று இந்த டைட்டில் அறிவிக்கப்பட்டபோது நான் புரிந்துகொண்டேன். ஆனால், இதைப்பற்றி டோல்கீன் என்ன சொல்கிறார்? Desolation என்பது கொஞ்சம் அரிய வார்த்தை என்பதால், நான் காசு கொடுத்து வாங்கிய ‘Hobbit’ மின்புத்தகத்தின் பிரதியில் இந்த வார்த்தை இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். யெஸ். இருந்தது. டோல்கீன் இந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார். ஒன்பதாம் அத்தியாயமான ‘On the Doorstep’ என்ற அத்தியாயத்தில், இந்தப் புத்தகத்தின் முதல் Desolation வார்த்தை வருகிறது. எரெபோரை நமது குழுவினர் நெருங்குகையில், இந்த வார்த்தையை டோல்கீன் போட்டிருக்கிறார்.

[quote]They knew that they were drawing near to the end of their journey, and that it might be a very horrible end. The land about them grew bleak and barren, though once, as Thorin told them, it had been green and fair. There was little grass, and before long there was neither bush nor tree, and only broken and blackened stumps to speak of ones long vanished. They were come to the Desolation of the Dragon, and they were come at the waning of the year.[/quote]

டோல்கீனும், ட்ராகனால் உண்டாக்கப்பட்ட அழிவைப்பற்றிச் சொல்வதற்கே இந்த வார்த்தையை முதன்முதலில் உபயோகிக்கிறார். இதன்பின்னர் இன்னும் நான்கு இடங்களில் அந்த வார்த்தை வருகிறது. மொத்தம் வரும் ஐந்து தடவைகளிலுமே ட்ராகனால் ஏற்பட்ட அழிவைத்தான் டோல்கீன் சொல்கிறார்.

ஆனால், இந்தத் திரைப்படத்தில் அப்படிப்பட்ட எந்த விஷயங்களும் காண்பிக்கப்படவில்லை. பாழ்நிலங்கள், எரிந்த மரங்கள், பசுமையே இல்லாத பகுதிகள் போன்றவையெல்லாம் லார்ட் ஆஃப் த ரிங்ஸில்தான் காட்டப்பட்டன. எனவே அவற்றைப்போலவே மறுபடியும் எதற்காகக் காண்பிக்கவேண்டும் என்று பீட்டர் ஜாக்ஸன் நினைத்திருக்கலாம். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்தபின்னர்தான், Desolation என்ற வார்த்தையை பீட்டர் ஜாக்ஸன் கில்லாடித்தனமாக டைட்டிலில் உபயோகித்திருப்பதை உணர்ந்தேன். Desolation என்ற வார்த்தையை ‘அழிவு’ என்ற பதத்திலேயே உபயோகித்திருந்தாலும், பீட்டர் ஜாக்ஸன் உணர்த்த விரும்புவதை, இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் காண்க.

[divider]

முதல் பாகத்தில் நடந்த சம்பவங்களுக்கெல்லாம் 12 மாதங்கள் முன்னர் நடந்த ஒரு ஃப்ளாஷ்பேக்கிலிருந்து இந்தப்படம் துவங்குகிறது. ‘ஃபெலோஷிப் ஆஃப் த ரிங்’ படத்தில் ஆரம்பத்தில் வந்த Bree என்ற ஊர் நினைவிருக்கிறதா? அந்த ஊரின் Prancing Pony என்ற மதுபான விடுதி? அரகார்னை முதன்முதலில் ஹாபிட்கள் சந்தித்த இடம். அதே இடத்தில், காண்டால்ஃபை முதன்முதலில் தோரின் சந்திக்கும் காட்சிதான் அது. இந்தக் காட்சியில், இழந்த அவனது நாட்டை மீட்கச்செல்லுமாறு காண்டால்ஃப் அவனிடம் சொல்கிறார். அதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாஅகவும் வாக்களிக்கிறார்.

இதன்பின் நிகழ்காலத்துக்கு வருகிறது கதை. எரெபோர் மலைக்கு செல்லும் வழியில், ’பியார்ன்’ (Beorn) என்ற பலம்வாய்ந்த பிரம்மாண்ட மனிதன் ஒருவனை தோரினின் குழுவினர் சந்திக்கிறார்கள். அவன், இரவில் கொடூரமான கரடியாக மாறும் திறமை கொண்டவன். நமது குழுவை வரவேற்று உணவளித்து, எரெபோரை நோக்கிச் செல்ல வழியும் காட்டுகிறான் இந்த பிரம்மாண்ட பியார்ன். இத்துடன் இந்தப் படத்தில் இவனது பங்களிப்பு முடிகிறது (ஆனால், அடுத்த பாகத்தில் முக்கியமான ஒரு இடத்தில் வரப்போகிறது பியார்ன் கரடி).

இதன்பின் பியார்ன் காட்டிய வழியில், அவனது குதிரைகளில் பயணப்படும் குழுவினர், ‘மிர்க்வுட்’ (Mirk Wood) என்று அழைக்கப்படும் அபாயகரமான காட்டுப்பகுதிக்கு வருகின்றனர்.  இந்த இடத்தில், வழக்கப்படி காண்டால்ஃப் இவர்களைப் பிரிகிறார். இந்தக் காட்டுக்குள் சென்றால், கொடூரமான ராட்சத சிலந்திகள் இவர்களைத் தாக்குகின்றன (’Return of the King’ படத்தில் வரும் ’ஷெலோப்’ (Shelob) என்ற பிரம்மாண்ட சிலந்தி நினைவு வருகிறதா?). அப்போது முதல் பாகத்தில் கோல்லுமிடம் இருந்து பறித்த மோதிரத்தின் உதவியுடன், சிலந்திகளுடன் வீரமாக பில்போ சண்டையிடுகிறான். அந்த நேரத்தில் அங்கு வந்து எல்லோரையும் காக்கிறார்கள் இரண்டு வீரர்கள். அவர்கள்தான், லார்ட் ஆஃப் த ரிங்ஸின் அதிரடி நாயகன் லெகோலாஸ் மற்றும் ’டாரியல்’ (டரியல் அல்ல. Tauriel – இவள், ஹாபிட் நாவலில் இல்லாத ஒரு கற்பனைப் பாத்திரம். இந்தப் படத்தில் பெண்களே இல்லாமல் இருந்ததால் பீட்டர் ஜாக்ஸன் உருவாக்கி உலவவிட்ட எல்ஃப்). இவளுக்கு, பதிமூன்று ட்வார்ஃப்களில் ஒருவனான ’கிலி’ (Kili) என்பவனைப் பிடித்துப் போகிறது (இங்கே ஒரு பெட்டிச்செய்தி – ஹாபிட் நாவலில் லெகோலாஸ் கிடையாது. லெகோலாஸ் இந்தப் படத்தில் வருவது பீட்டர் ஜாக்ஸனின் வேலைதான். படத்தின் விறுவிறுப்பையும் ஸ்டார் வேல்யூவையும் அதிகரிக்க ஜாக்ஸன் செய்த கைங்கர்யம் இது).

Hobbit-Smaug-Tauriel632

லெகோலாஸ், டாரியல் மற்றும் பிற எல்ஃப்கள், நமது குழுவினரை சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து பில்போவின் உதவியுடன் தப்பிக்கின்றனர். அவர்களை, முதல் பாகத்தில் பார்த்த அஸாக் என்ற பூதம், துரத்துகிறது (டோல்கீன் மன்னிக்க. உண்மையில் இவைகள் Orcs என்று அழைக்கப்படும் வகையைச் சேர்ந்தவை). லெகோலாஸின் தந்தையான, மிர்க்வுட்டின் மன்னர் த்ராண்டுய்லுக்கு, முதல் பாகத்தில் ஸாரோன் உயிர்பெற்றுவிட்டது தெரிகிறது. இதனால் தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். அப்போதுதான், தப்பித்துவிட்ட குழுவினரை துரத்திச் செல்லும் பூதங்களைக் கொல்ல டாரியல் சென்றிருப்பது அவருக்குத் தெரிகிறது. உடனே லெகோலாஸும் அவளது பின்னால் செல்கிறான்.

குழுவினரைப் பிரிந்த காண்டால்ஃப், ஸாரோன் உருவெடுக்க ஆரம்பித்திருக்கும் ‘டோல் குல்டூர்’ (Dol Guldur) கோட்டைக்குச் சென்று, அவனிடம் மாட்டிக்கொள்கிறார். காண்டால்ஃபை சிறைப்படுத்துகிறான் ஸாரோன்.

இதற்குப் பிறகு, ‘பார்ட்’ (Bard) என்ற படகுக்காரனின் உதவியுடன் (எனக்குப் பிடித்த Immortals படத்தில் க்ரேக்கக் கடவுளான ‘ஸ்யூஸ்’ (Zeus) வேடத்திலும், Three Musketeers படத்தில் அராமிஸாகவும் நடித்ததாலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போன நடிகரான லூக் இவான்ஸ்) அங்கிருந்து தப்பித்து, அவனது நகரத்துக்கு செல்கின்றனர் நமது குழுவினர். இந்த பார்ட் கதாபாத்திரமும், ஹாபிட்டில் சிறிய பாத்திரம்தான். படத்தில் நன்றாக டெவலப் செய்யப்பட்டிருக்கிறது.

பின்னர் அந்த நகரத்திலிருந்து, ஒருவழியாக எரெபோர் அடைகின்றனர். அங்கே, கதையின் வில்லனான ட்ராகன் ஸ்மாக், முதன்முறையாக வெள்ளித்திரையில் முகத்தை (மட்டுமல்லாமல் முழு உடலையுமே) காட்டுகிறது.

இதன்பின் ட்ராகனுக்கு என்ன ஆனது? இழந்த நாட்டை மீட்க, ட்ராகனின் குகைக்குள்ளேயே சென்ற நமது குழுவினரின் கதி என்ன? ஸாரோனிடம் சிறைப்பட்ட காண்டால்ஃப் என்ன ஆனார்? டாரியலும் லெகோலாஸும் என்ன ஆனார்கள்?

எல்லாவற்றுக்கும் விடை, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த பாகத்துக்காக ஒரு வருடம் காத்திருப்பதே.

[divider]

மேலே ஆங்காங்கே அடைப்புக்குறிகளுக்குள் சொன்னதைவைத்தே, இந்த இரண்டாவது பாகம், ஒரிஜினல் நாவலை விட்டுவிட்டு லேசாக அங்குமிங்கும் அலைபாய்வதை நீங்கள் கண்டுபிடித்திருந்தால், பாராட்டுகள். முதல் பாகம், நாவலை பெருமளவுக்கு பின் தொடர்ந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில், லெகோலாஸ், டாரியல், பார்ட் ஆகிய நாவலில் இல்லாத கதாபாத்திரங்கள் மூலம் நாவலுக்கு நேர் எதிர்த்திசையில் செல்கிறார் பீட்டர் ஜாக்ஸன். பின்னே? மொத்தமே 200 பக்கங்கள் இருக்கும் ஒரு புத்தகத்தை, கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஓடும் மூன்று பாகங்களாக மாற்றினால் வேறு எப்படி இருக்கும்?

ஆனால், ஆச்சரியகரமாக, இந்தப்படம் முதல் பாகத்தை விடவும் வேகமாக இருக்கிறது. நாவலைப் படிக்காமல் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும். படத்தில், பார்டின் நகரத்துக்கு இந்தக் குழுவினர் வரும் காட்சிகள் மட்டும் சற்றே மெதுவாக சென்றன.

இந்தப் படத்திலும், முதல் பாகத்தைப்போலவே, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை நினைவுபடுத்தும் வசனங்கள் இருக்கின்றன. படத்தில் லெகோலாஸ், நமது குழுவினரை சிறைப்படுத்தும்போது அவர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்வான். அப்போது, குழுவில் இருக்கும் ’க்லோய்ன்’ (Gloin) என்ற ட்வார்ஃபின் பாக்கெட்டிலிருந்து இரண்டு புகைப்படங்களை எடுப்பான். அதில் ஒன்று அவரது மனைவியின் படம். இன்னொன்றில் இருக்கும் அசிங்கமான சிறுவனின் முகம் யாருடையது என்று கேட்பான் லெகோலாஸ். அதற்கு, அது தனது மகன் என்றும், அவனது பெயர் கிம்லி என்றும் க்லோய்ன் சொல்வார். இதன்பிறகு வெகு காலம் பின்னால் வரப்போகும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில், அந்த அசிங்கமான முகமுடைய கிம்லி என்ற ட்வார்ஃப்தான் லெகோலாஸின் உற்ற நண்பனாக விளங்கப்போகிறான். இதெல்லாம் கச்சிதமாக நாஸ்டால்ஜியாவை உருவாக்குகின்றன (இங்கே இன்னொரு பெட்டிச்செய்தி. லெகோலாஸுக்கு நூற்றுக்கணக்கில் வயது இருக்கும். லார்ட் ஆஃப் த ரிங்ஸில், 87 வயதான அரகார்னையும், 140 வயதான கிம்லியையுமே, ‘குழந்தைகளே’ என்று அழைப்பான் லெகோலாஸ். இதில் வேடிக்கை என்னவெனில், அரகார்னுக்கேகூட மிக மெதுவாகத்தான் வயதாகும். லார்ட் ஆஃப் த ரிங்ஸில் இதற்கென்றே ஒரு வசனமும் உண்டு. கிழவரான தியோடன் மன்னர், தனது உறவுக்காரப்பெண் இயோவெனிடம், ‘என்னைவிட மூத்தவனாக்கும் இந்த அரகார்ன்’ என்று சொல்வார்).

அதேபோல், லார்ட் ஆஃப் த ரிங்ஸில் வரும் அத்தனை பகுதிகளும், இன்னும் செழிப்பாக இந்தப் படத்தில் வருகின்றன.

இதுபோல் இன்னும் எக்கச்சக்கமான விஷயங்கள் இந்தப் படத்தைப் பற்றி எழுதுவதற்கு இருக்கின்றன. ஆனால், எனக்குத் தூக்கம் வருவதால் இந்தக் கட்டுரையை இத்துடன் முடிக்கிறேன் (அப்பாடா)

முதல் பாகத்தைவிட விறுவிறுப்பு மிகுந்த படம் இது. அவசியம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம். குழந்தைகளுக்குப் பிடிக்கும். நான், 48 FPSஸில் கருடா மாலின் ஐநாக்ஸில் பார்த்தேன். 48 Frame Rate per second என்பதையும் முதல் பாகத்தைப் பற்றிய கட்டுரையில் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

பி.கு – படத்தில், ட்ராகன் ஸ்மாக்காக நடித்து, குரல் கொடுத்திருப்பவர் – நமது ‘Sherlock’ புகழ் பெனடிக்ட் கம்பர்பேட்ச். படத்தின் ஹீரோ பில்போவாக நடித்திருப்பதோ, அதே ஷெர்லக் தொடரின் ’டாக்டர் வாட்ஸன் ’ மார்ட்டின் ஃப்ரீமேன். ஷெர்லக் தொடரின் மூன்றாவது season ஜனவரியில் வரப்போகும் இந்த நேரத்தில், டாக்டர் வாட்ஸனுக்கு ஷெர்லக் ஹோம்ஸ் வில்லனாக நடித்திருப்பது அருமையான விஷயம் இல்லையா? ?

  Comments

19 Comments

  1. An Unexpected Journey யை சத்யம் தியேட்டரில்( 48 HFR) பார்த்தபோது ரிச்சான ஆங்கில சீரியல் பார்த்த உணர்வு ஏற்பட்டது. கதையும் மெதுவாக நகர்ந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் ஜனரஞ்சக காட்சிகளை புகுத்தி திருப்தி அடையச்செய்தார் தல PJ.

    Desolation of Smaug ப்ரிமியரை( 24 Frames/Second) சில நாட்களுக்கு முன்பு பார்த்த ஹாலிவுட் விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர். 48 HFR இல் வெளியானால் அந்த அளவு சுவாரஸ்யம் இருக்குமா இருக்குமா என்பதும் அவர்களின் பலத்த சந்தேகம். நீங்கள் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்? இன்று மாலை சத்யம்(24F/S) தியேட்டரில் பார்க்க உள்ளேன்.

    LOTR சீரிஸின் அதி தீவிர ரசிகனாக இருந்தபோதும் அது குறித்த சம்பவப்பின்னணி, கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களை அள்ளித்தந்தது உங்கள் War of the Ring மின் நூல்தான். இன்று படத்திற்கு செல்லும் முன்பும் தேவையான முன்னோட்டத்தை இப்பதிவு தந்திருக்கிறது. நன்றி ராஜேஷ்.

    Reply
    • Rajesh Da Scorp

      ஆமா சிவா… முதல் பாகத்தை விட ரெண்டாம் பாகம் வேகமாவே போச்சு. 48FPR, அவசியம் அட்டகாசமாதான் இருந்தது. குறிப்பா, ஷாட்கள் வழுக்கிகிட்டு போறதை கண்கூடா பார்த்தேன். ஆனா என்ன பிரச்னைன்னா, ஒண்ணு ரெண்டு மினியேச்சர் செட்களை அது காட்டிக்கொடுத்திருச்சு 🙂 …. இருந்தாலும்கூட இது அருமைதான்.

      உங்க வாழ்த்துக்கு எங்களின் மனமார்ந்த நன்றி 🙂

      Reply
  2. தல நேற்று மட்டும் மூன்றுமுறை உங்க பிலாகை பார்த்துவிட்டேன் ஆர்வமிகுதியால்
    ். விமர்சனம் அருமை வழகம்போல்.
    டோல்கினின் சில்மரிலியன் கதையை பற்றி கொஞ்சம் விளக்கவும்.

    Reply
    • Rajesh Da Scorp

      அவசியமா அதை எழுதணும். முடியுதான்னு பார்க்கிறேன் பாஸ்

      Reply
  3. Abarajithan

    ‘மிர்க்வுட்’ (Mirk Wood) என்று அழைக்கப்படும் அபாயகரமான காட்டுப்பகுதிக்கு வருகின்றனர் (இந்த இடத்தில்தான் The Two Towers படத்தில், காட்டுக்குள் தப்பிக்கும் ஃப்ரோடோவும் ஸாமும், வெள்ளுடை அணிந்த காண்டால்ஃபை சந்திக்கின்றனர்).

    Two Towers இல் Gandalf ஐ சந்திப்பது அரகார்ன்-இன் கூட்டணி அல்லவா? அதுவும் Fangorn காட்டில் அல்லவா? LOTR கதையில் மிர்க்வூட் பக்கமாக Fellowship காரர்கள் போகவில்லையே? நான் கடைசியாக படம் பார்த்து பல மாதங்களாகிறது. சொன்னது தவறாக இருந்தால் தயவுசெய்து திருத்துங்கள்.

    Reply
    • Rajesh Da Scorp

      ஆக்சுவலா, முதல்ல ஃப்ரோடோவும் ஸாமும்தான் காண்டால்ஃபை சந்திப்பாங்க.. ஆனா அதுல அவங்க ஆச்சரியமா பார்ப்பதோட கட் அயிரும். அதுக்குப்பிறகு கொஞ்ச நேரம் கழிச்சி அரகார்னும் லெகோலாஸும் கிம்லியும் காண்டால்ஃபை வெள்ளுடை வேந்தரா தரிசிப்பாங்க. ஆனா, அது மிர்க்வுட் இல்ல. ஃபேங்கார்ன் ஃபாரஸ்ட்தான். எழுதும்போது சத்தியமா இது நிரடிச்சி. ஆனா விட்டுட்டேன். நல்லவேளை நினைவுபடுத்தினீங்க அபராஜிதன். மிக்க நன்றி 🙂

      Reply
      • Abarajithan

        ok sir. நன்றி…

        Reply
      • Aravinth

        அது ஃப்ரோடோவும் ஸாமும் மா அல்லது பிப்பினும் மெரியுமா.?

        Reply
  4. rr

    In this film quality of picture not good compare than LOTR. this film looks like a shade…
    But this film background score and editing elevated the film.i don’t think so there is bore in single scene if you watch interestingly.

    Good movie of the year after Gravity…

    Reply
    • Rajesh Da Scorp

      I think the shade may be because of the 3D effect. But anyhow I didn’t feel the shade when I saw. Would it be because of the Theater?

      Reply
  5. saravanan

    Good one rajesh, I watched this in Sathyam(santham) on Saturday it shows Jackson’s ability to bring legolas for action blocks. Also he has introduced tauriel who was not in the book and spun a Love story between kili and her for people like me who has little patience in reading books , the information was new and I wondered how Jackson has tweaked the story to make it more interesting. i was wondering what will be in the 3rd part. bcos the 2nd part was almost 2 1/2 hrs at the end of the movie, the smaug has gone to destroy the Dale city. but i thoroughly enjoyed the movie… what was the funny part is, i watched Thor last week only and waited for the credits to role for seeing the end of credits scenes , similarly i was also looking for any kind of connection shown at the end of the credits….. all the support staff of theatre looked at me like a creature ! but it was revelation that so many of them have worked hard for movies i saw lot of indian names in the list thanks to sathyam to run the credit fully… other theatres used to stop them

    Reply
    • Rajesh Da Scorp

      You are very right in wondering about the third film Saravanan. But there is going to be a big battle called ‘Battle of the Five armies’ in that film. Also, we will see something about Smaug too. To add to it, there are the big appendices which Tolkien wrote at the end of the LOTR, which Jackson said he will make use of in the third part. So altogether, it’s going to be a real spectacle indeed 🙂

      It’s good to hear that Satyam runs the full movie till the end credits. It’s actually the best thing, to sit throught and pay our respect towards the artists who worked in the film, thereby giving us the pleasure inside the darkness for three hours.

      Reply
  6. Saravanan

    also it was a pleasant surprise to see the subtitles in the movie , which will be helpful for hearing impaired people like me hope other theatres too follow it

    Reply
  7. warcry

    i just finished the book “war of rings”. a wonderful job rajesh! thankyou for a book like this.please keep writing

    Reply
    • Rajesh Da Scorp

      Dear Warcry,

      Thanks a lot for the comments towards our team.

      Reply
  8. //ஷெர்லக் தொடரின் மூன்றாவது season ஜனவரியில் வரப்போகும் இந்த நேரத்தில், டாக்டர் வாட்ஸனுக்கு ஷெர்லக் ஹோம்ஸ் வில்லனாக நடித்திருப்பது அருமையான விஷயம் இல்லையா? :-)//

    இதுக்காகவே ஷெர்லோக் ஜெயிக்கனுமே… 😉

    Reply
    • ஆஹா… இது ரொம்ப ஓவராக்கீதே 🙂

      Reply
  9. sarvaan ace

    this review is not enough rajesh. it will look better as spoiler comparing novel with movie. eg. gandalf meeting beorn and introducing one by one into his home. i thought that part will be boring but peter jacksons excellent shortcut to that part was good intha vishayathai neengha ithula include pannirukalam. அப்புறம் gandlaf sauron கிட்ட மாட்டிக்கிறது பத்தி கதைல எதுவும் இல்ல ஆனா cinemavula இருக்கு. peter jackson ஒரு மசாலா டைரெக்டர் மாதிரி dwarves dragon கூட சண்டை போடற காட்சில chicken ஃப்ரை வாசம் அடிக்காது உங்களுக்கு 😉

    Reply
  10. Accust Here

    LOTR and HOBBIT புத்தகங்கள் தமிழில் உள்ளதா

    Reply

Join the conversation