O Kadhal Kanmani (2015) – Tamil
உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் (ஒரு ஊரில்) இருக்கிறான். அவனுடைய ரசனையில் அவனுக்கு ஏற்றவள் என்று அவன் நினைக்கும் பெண் ஒருத்தி அதே ஊரில் இருக்கிறாள். இருவரும் சந்திக்கின்றனர். காதல். இருவருக்கும் அவரவர்களின் லட்சியங்கள் உள்ளன. இருவருமே மற்றவர்களுக்காக அந்த லட்சியங்களைத் துறக்கத் தயாராக இல்லை.
இங்கே ‘ஒரு ஊரில்’ என்பதை அடைப்புக்குறிகளில் கொடுக்கக் காரணம், அந்த இடத்தில் ‘சென்னை’ என்றோ ‘மும்பை’ என்றோ ‘பனைமரத்துப்பட்டி’ என்றோ ஊரை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். இந்த வரியில் சொல்லப்பட்ட கதை ஏற்கெனவே எங்கோ பார்த்தது போல இருந்தால், அதுவும் ஆச்சரியம் இல்லை. ‘ஆய்த எழுத்து’ படத்தில் சித்தார்த் மற்றும் த்ரிஷாவைப் பார்த்திருந்தால், அதேதான் இதுவும் என்பது புரியும். இரண்டு கதைகளுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், இதில் காதலர்கள் சேர்ந்து கொஞ்சகாலம் வாழ்கிறார்கள் இருந்தும் அதுவும் முழுமையாக சொல்லப்படாமல், தமிழ் சினிமாவின் அரதப் பழைய விஷயமான ’திருமணம் செய்தால்தான் எல்லாமே’ என்பதில்தான் படம் முடிகிறது. என்னதான் நடந்தாலும் திருமணம்தான் மருந்தா? இதுதான் நம்மூரில் ஆரம்ப காலத்தில் இருந்தே எல்லாப் படங்களிலும் காட்டப்பட்டுவரும் மூடநம்பிக்கை. இந்தப் படமும் அதிலேயே சென்று முடிகிறது.
மணி ரத்னத்தின் படங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் சரி – ‘குரு’ வரையில் அவரது பெரும்பாலான படங்களில் வரும் காதல் காட்சிகள் ரசிக்கும்படி சொல்லப்பட்டுவந்தன. ‘ரசிக்கும்படி’ என்றால், படத்தில் வரும் காதலர்கள் மிகச்சில படங்கள் நீங்கலாக உயர் நடுத்தர வர்க்கம் என்பதால், ’பெரும்பாலும் உயர் நடுத்தர வர்க்கத்தினரால் ரசிக்கப்பட்டு வந்தன’ என்று படித்துக்கொள்ளலாம். அவரது படங்களிலும், அவரைப் பின்பற்றிய கௌதமின் படங்களிலும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் காதல்கள்தான் பெரும்பாலும் சொல்லப்படும். இதில் செல்வராகவனையும் வெற்றிமாறனையும் பாராட்டலாம். அவர்களின் காதல்களில் ஏழைகளும் இடம்பெறுவர். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, காதல் கொண்டேன்’ போல. மணி ரத்னம் படத்தைப் பொல்லாதவன் படத்தில் வரும் ஹீரோவின் குடும்பம் போன்ற ஒன்றில் வாழும் சராசரி இளைஞனோ பெண்ணோ பார்த்தால் அவர்களால் அதில் வரும் கதாபாத்திரங்களோடு தங்களைப் பொருத்திக்கொள்ளமுடியாது என்றே தோன்றுகிறது. ஆனால், இது சமூகவியல் பற்றிய கட்டுரை இல்லை என்பதால் தொடர்ந்து பார்க்கலாம்.
’பகல் நிலவு’ படத்தில் வரும் முரளி-ரேவதி தொடர்பான காட்சிகளில் இருந்து எண்பதுகளின் தமிழ்ப்படங்களில் அதுவரை பார்க்கப்படாத கோணத்தில் அமைந்த காதல் இடம்பெற ஆரம்பித்தது. சின்னச்சின்ன குறும்புகள், காதல் ததும்பும் காட்சிகள், அழகான பாடல்கள், மாண்டேஜ்கள் என்று அதுவரை தமிழ்ப்படங்களில் இடம்பெறாத காதல் காட்சிகள் அவை. இதயக் கோயில் தவிர்த்து, மணி ரத்னத்தின் படங்களான பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே), தளபதி, ரோஜா, பாம்பே, தில்ஸே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு போன்ற பெரும்பாலான படங்களின் மையக்கருத்து எதுவாக இருந்தாலும் சரி- அவற்றில் வரும் காதல் காட்சிகள் அழகானவை. ரசிக்கத்தக்கவை. எண்பதுகளில், மணி ரத்னம் குறைந்தபட்சம் இருபது வருடங்கள் முன்னோக்கியே படங்கள் எடுத்தார் என்பது என் கருத்து. ஆனால் இருபது வருடங்கள் கழித்தும், இன்னும் அங்கேயே தங்கிவிட்டார் என்று தோன்றுகிறது. ‘தளபதி’ படத்துக்குப் பின்னர், அதுவரை வந்த மணி ரத்னத்தின் படங்களின் தரத்துக்கு இணையான முழுமையான படம் ஒன்று இன்னும் வரவில்லை (ஏன் இல்லை? ’அலைபாயுதே’ இல்லையா? ‘ரோஜா’ இல்லையா? ‘பம்பாய்’ படத்துக்கு என்ன குறைச்சல்? என்றெல்லாம் திட்டத் துவங்குமுன்னர், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி, தளபதி ஆகிய படங்களின் முழுமையான கமர்ஷியல் சிறப்புகளைப் பற்றிக் கொஞ்சமாவது ஆராய்ந்துவிட்டு வரவும்). தளபதி வரை மணி ரத்னம் ஒரு முழுமையான கமர்ஷியல் கிங். ஆனால் தளபதிக்குப் பின்னர் அவரது படங்கள் முதலிலிருந்து இறுதி வரை இல்லாமல், சில சிதறல்களில் மட்டுமே மணி ரத்னத்தின் முத்திரை பதிக்கப்பட்ட திரைப்பட ஸ்டைலைக் கொண்டிருந்தன (அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ரோஜா, பம்பாய், தில்ஸே, குரு etc). ‘இருவர்’ மட்டும் விதிவிலக்கு. அது அவரது சிறந்த படங்களில் ஒன்று. இன்னும் சிலவோ, முதலிலிருந்து இறுதிவரை முற்றிலும் பார்க்கவே முடியாதபடி கொடூரமாக இருந்தன (ராவணன், ஆய்த எழுத்து).
காரணம், எண்பதுகளில் மணி ரத்னம் மட்டுமே இருந்தார். ஆனால் தொண்ணூறுகளில் அவரைப் பின்பற்றிப் படம் எடுக்கும் கௌதம் போன்ற இயக்குநர்கள் வந்தாயிற்று. ஆனால் மணி ரத்னம் மட்டும் பிடிவாதமாக, ஒரேபோன்றே படங்கள் எடுத்தார். அவரது படங்களின் uniqueness இதனால் அடிபட்டது.
இதுதான் ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.
முதலில் படத்தின் பாஸிடிவ் அம்சங்கள். சந்தேகமே இல்லாமல் பிரகாஷ்ராஜ்+லீலா சாம்ஸன் ஜோடிதான் படத்தின் சிறந்த அம்சம். அவர்களுக்குள் உலவும் உறவும் மகிழ்ச்சியும் புரிதலும் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் அமலா ரசிகர்களான பூர்ணம் விஸ்வநாதன்+சௌகார் ஜானகியை நினைவுபடுத்தின (அந்தப் படத்தைப் பற்றி இதைப் படிக்கும் பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு). இந்த இரண்டு கதாபாத்திரங்களை உருவாக்கியதில் மணி ரத்னத்தின் பழைய சாயல் தெரிகிறது.
படத்தின் அடுத்த பாஸிடிவ்கள், இசையும் ஒளிப்பதிவும். ரஹ்மான் & பி.சி. ஸ்ரீராம் என்பதால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. எனக்கு ஒளிப்பதிவைப் பற்றி எதுவுமே தெரியாது என்றாலும், காட்சிகளின் துல்லியமும் நேர்த்தியும் எவரையும் கவரும். அடுத்ததாக, இடைவேளைக்குப் பிறகான இரண்டாம் பாதி. அது ஏன் என்பதையெல்லாம் இனிமேல் விரிவாகப் பார்க்கலாம்.
‘அலைபாயுதே’, ‘ஆய்த எழுத்து (சித்தார்த் episode)’ போலவே இதிலும் காதல் என்ற அம்சம் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் அழுத்தமும் ஆழமும் எப்படி? நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணைப் பார்த்த இரண்டாவது தருணத்திலேயே மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு, உடனேயே இருவரும் காதலிக்க ஆரம்பிப்பது சாத்தியமா? நிஜத்தில் ஒரு பெண்ணிடம் மொபைல் எண்ணை வாங்குவது அவ்வளவு எளிது என்றால் இன்னேரம் உலகம் முழுதும் அனைவருமே காதலர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும். அதேபோல், நிஜத்தில் ஒரு கேமிங் நிறுவனத்தில் வேலைக்கு வரும் இளைஞன், உடனடியாக பாஸைக் கன்வின்ஸ் செய்யும் அளவு ஒரு கேம் கான்ஸெப்ட்டைச் சொல்லிப் பாராட்டுப் பெறுவது தலைகீழாக நின்று பியர் குடிப்பது போன்றது. பழைய மணி ரத்னம் இப்படிப்பட்ட காட்சிகளை எழுதக்கூடியவர் அல்ல. இதுபோன்ற விஷயங்களை நாம் கவனிப்பதன் காரணம், மணி ரத்னம் இந்தியாவின் சிறந்த இயக்குநர் என்று பலரும் இன்னும் நம்புவதால்தான். இவையே விக்ரமனின் படங்களில் வந்தால் யாரும் கேட்கப்போவது இல்லை (விக்ரமன் மன்னிக்க).
தொண்ணூறுகளின் மணி ரத்னத்தின் கில்லாடித்தனமான பாணி என்னவென்றால், தன்னைச்சுற்றி எப்போதும் தங்கள் துறையில் சிறந்த crewவை வைத்துக்கொள்வது. ஒளிப்பதிவை பி.சி. ஸ்ரீராமும், இசையை ரஹ்மானும், எடிட்டிங்கை ஸ்ரீகர் ப்ரசாத்தும் செய்வது அப்படித்தான். இதனால் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், நடனம், ப்ரொடக்ஷன் டிஸைன் போன்றவை அட்டகாசமாக இருப்பதில் ஆச்சரியமே இல்லை. இவைகளைத்தாண்டி, கதை என்பது எத்தனை அழுத்தமாக உள்ளது என்பதுதான் கேள்வி. ‘ஓ காதல் கண்மணி’யில் கதை என்பது இடைவேளைக்குப் பல நிமிடங்கள் கழித்து, பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் மனைவி தொலைந்துபோகும் காட்சியில்தான் துவங்குகிறது. அப்போது துவங்கும் கதை, அதன்பின் அரை மணி நேரத்தில் படத்தோடு முடிந்துவிடுகிறது. பல தமிழ்ப்படங்கள் தற்போது அப்படித்தான் இருக்கின்றன என்பதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். ஆனால் அவைகளில்கூட, படத்தின் பாதியிலாவது ஏதாவது நடக்கும். கொஞ்சமாவது ஆடியன்ஸைக் கவரும் காட்சிகள் இருக்கும். அப்படி இருந்தே தீரவேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை என்றால் அது பெரும்பாலும் ஒரு ஆர்ட் ஃபில்மாக இருக்கும் சாத்தியமே அதிகம். கமர்ஷியல் படம் ஒன்றை எந்தவிதமான சுவாரஸ்யமான கதையம்சங்களும் இல்லாமல் ஒண்ணரை மணி நேரம் நகர்த்துவது மணி ரத்னத்தால் மட்டுமே முடியக்கூடிய விஷயம் போல. யோசித்துப் பாருங்கள். இதுவே ஒரு புதிய இயக்குநர் இதே படத்தை அப்படியே சீன் பை சீனாக எடுத்திருந்தால், இப்போது படத்தைக் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுபவர்கள் கழுவிக்கழுவி ஊற்றியிருப்பார்கள்தானே?. அப்படியென்றால் மணி ரத்னத்துக்கு மட்டும் ஏன் இந்த சலுகை? அவர் ’மணி சார்’ என்பதாலா? பிரதான கதாபாத்திரங்களாகக் காட்டப்படும் இருவருக்கும் இடையே எந்தவிதமான முரண்களும் அழுத்தமாக (conflict & Drama) நடக்காமல் கிட்டத்தட்ட ஒரு முழுப்படமும் ஓடுகிறது என்றால், அது எப்படி சுவாரஸ்யமாக இருக்கமுடியும்? It’s such a basic point.
சரி. கதையை விட்டுவிட்டு, காட்சிகளாவது எப்படி இருக்கின்றன என்பதைக் கவனித்தால், புதிதாக இந்தப் படத்தில் எதுவுமே இல்லை. எல்லாமே ஏற்கெனவே ஆய்த எழுத்திலும், அலைபாயுதேவிலும், பம்பாய் போன்ற மணி ரத்னத்தின் பிற படங்களிலும் பார்த்தவைதான். ஒரே போன்ற காட்சிகளை இன்னும் எத்தனைதான் கவனிப்பது? அலைபாயுதேவில் மனைவி தொலைவது, அவர்களின் சுவாரஸ்யமான ஃப்ளேஷ்பேக், இருவருக்கும் இடையே வரும் ஈகோ மோதல்கள் என்பவை படத்தை சுவாரஸ்யம் ஆக்கின. அதில் வரும் அர்விந்த்ஸ்வாமி-குஷ்பு கதை சற்றேனும் ஆடியன்ஸை திடுக்கிட வைத்தது. அதன் க்ளைமேக்ஸ் உணர்வுபூர்வமாக இருந்தது. மௌன ராகத்தில் வரும் காதல், படம் முழுதும் கதாநாயகியின் மனதில் தங்கி, அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையே பெரிய மனத்தடையை ஏற்படுத்தியது. கீதாஞ்சலியின் காதல் இழப்பை நோக்கியே இருவரையும் கொண்டுசென்றது. தில்ஸேவும் அப்படியே. ஆனால் இதில் என்னதான் நடக்கிறது என்று யோசித்தால் ஒன்றுமே இல்லை என்பது புரிகிறதுதானே? கொஞ்சம்கூடப் புதிதாக எதுவுமே இல்லாத காதல் காட்சிகளை இன்னும் எத்தனைமுறைதான் பார்ப்பது? கிட்டத்தட்ட அலைபாயுதே கதையையே லேசாக மாற்றியிருக்கிறார் மணி ரத்னம் என்றுதான் தோன்றியது. அதில் வரும் அர்விந்த்ஸ்வாமி-குஷ்பு போல இதிலும் நடுத்தர வயதைச் சேர்ந்த இரண்டு தம்பதிகள். அவர்களால் இவர்கள் காதலில் சில மாற்றங்கள் என்பது இரண்டிலும் பொதுவானவை.
படத்தின் சுவாரஸ்யமான தருணங்கள், பிரகாஷ்ராஜுக்கும் அவரது மனைவியாக நடிக்கும் லீலா சாம்ஸனுக்கும் இடையேதான் உள்ளன. அவர்கள்தான் இப்படத்தின் உண்மையான ஹீரோ-ஹீரோயின்கள். துல்கர் சல்மான் – நித்யா (மேனன் என்பது அவர் படித்து வாங்கிய பட்டம் இல்லை என்பதால் அவர் நித்யா மட்டுமே) ஜோடிகளுக்கு இடையே வரும் அத்தனை காட்சிகளும் ஏற்கெனவே பலமுறை பல படங்களில் பார்த்தவை. பிரகாஷ்ராஜின் எபிஸோட் அருமையாக எடுக்கப்பட்டிருப்பதால், படத்தில் ஏற்கெனவே சொல்லியபடி இடைவேளைக்குப் பிறகுதான் கொஞ்சமாவது சுவாரஸ்யம் ஏற்பட்டது. ஆனால் அதுவும் விரைவில் முடிந்துவிட்டது. துல்கர் சல்மான் & நித்யா கதாபாத்திரங்களுக்கு இடையே பல காட்சிகள் உள்ளனவே? பின்னர் ஏன் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்கிறாய் என்று நண்பர்கள் கேட்கலாம். இதைத் தெளிவாக சொல்ல முயல்கிறேன். இருவரும் படத்தில் ஒரே வீட்டில் கொஞ்ச காலம் தங்குகிறார்கள். அதை லிவிங் டுகெதர் என்று அவர்களே சொல்கிறார்கள். முன்பின் தெரியாத ஒரு நபரோடு ஒரே வீட்டில் தங்குவது எத்தனை கஷ்டமோ, அதைவிடக் கஷ்டம் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் தங்குவது. அதில் ஏராளமான சிக்கல்கள் நேரும். எப்போது பாத்ரூமை உபயோகிப்பது என்பதில் இருந்து, ரூம் ஃப்ரெஷ்னர், பர்ஃப்யூமின் வாசனை, அறையில் எந்தப் பொருள் எங்கே இருப்பது என்பதுல் இருந்து, தூங்கும்போது விளக்கை அணைப்பது, பாட்டு கேட்பது, ஒவ்வொருவரின் ப்ரைவஸி பிரச்னைகள் என்பதிலெல்லாம் கொலையே செய்யும் அளவு பிரச்னைகள் வரும். இதில் என்னவென்றால் லிவிங் டுகெதர் என்பதை விளக்கவே இல்லை. நாலு பாடல்கள், சில வசனங்கள் இருந்தாலே இப்படிப்பட்ட லிவிங் டுகெதர் பற்றி விளக்கலாம் என்பது அவசியம் அலுப்பான விஷயமே. அது படம் முழுதும் உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் பழைய மணி ரத்னம் புகுந்து விளையாடியிருப்பார்.
படத்தின் அடுத்த பிரச்னை – வசனம். பல இடங்களில் மிகமிக செயற்கையான, ‘ராவணன்’ பிராண்ட் வசனங்கள். மணி ரத்னத்தின் படங்களில் செயற்கையான வசனம் இடைபெறுவது இது முதன்முறை அல்ல. ஒருவேளை அவற்றை சுஹாஸினி எழுதியிருக்கலாம். அப்படி இல்லாமல் அவை மணி ரத்னத்தால் எழுதப்பட்டிருந்தால், இன்னும் கொடுமை. இப்படிப்பட்ட வசனங்கள் தொண்ணூறுகளில் எடுபட்டிருக்கலாம். இப்போதெல்லாம் செயற்கையான புத்திசாலித்தனம் நிறைந்த இப்படிப்பட்ட வசனங்கள் எடுபடாது (மீண்டும், இது மட்டும் ஒரு புதிய இயக்குநரால் எழுதப்பட்டு எடுக்கப்பட்டிருந்தால் அவர் எப்படிக் கழுவி ஊற்றப்பட்டிருப்பார் என்பது எனக்குத் தெரியும்).
வரிசையான flopகளால், இப்படிப்பட்ட ஒரு படம் எடுக்க மணி ரத்னம் தூண்டப்பட்டிருக்கலாம். எப்படியும் அவர் படம் வந்தாலே அதைத் தலைமேல் தூக்கிவைத்து ஆட ஒரு பெரிய ஆடியன்ஸ் கூட்டம் உள்ளது. Fanaticகாக இல்லாமல், உள்ளது உள்ளபடி இந்தப் படத்தைப் பார்த்தால், ஒளிப்பதிவு, இசை போன்ற technical அம்சங்களைத் தவிர, கதையில் உள்ள ஒரே பாராட்டத்தக்க அம்சம் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்ஸன் கதைதான் என்பது எளிதில் புரிந்துவிடும். அது விரிவாக இல்லாமல் ஊறுகாயாக அளிக்கப்பட்டிருப்பதுதான் படத்தின் பலவீனம்.
பி.கு
1. ’காதலித்திருந்தால்தான் இந்தப் படம் பிடிக்கும்’ என்ற ஒரு மூடநம்பிக்கை பொதுவில் உலவுகிறது. Seven படத்தைப் பார்க்கவேண்டும் என்றால் சைக்கோத்தனமாகக் கொலைகள் செய்திருக்கவேண்டுமா? கொடுமை.
2. ’இந்தப் படம் இளைஞர்களுக்கானது’ என்பது இன்னொரு மூடநம்பிக்கை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் போதும்.. கதையே தேவையில்லை.. கடவுள் மணி சார் rocks. மணி ரத்னம் என்ற பெயர் இருந்தாலே உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டுவேன்’ என்றெல்லாம் நினைக்கும் எவருக்குமே இந்தப் படம் போதுமானதே.
3. கட்டுரையைப் படித்துவிட்டு ரத்தம் கொதித்து என்னைத் திட்டத் துவங்குமுன்னர், மணி ரத்னத்தின் எல்லாப் படங்களையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்பதை யோசித்துப் பார்க்கவும். அப்படிப் பார்த்திருந்தால் நீங்களாகவே இந்தக் கட்டுரையில் உள்ள பாயிண்ட்களை யோசித்திருப்பீர்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
“வரிசையான flopகளால், இப்படிப்பட்ட ஒரு படம் எடுக்க மணி ரத்னம் தூண்டப்பட்டிருக்கலாம். ”
This is the fact.
அதே சமயம், இது ஒரு மிகச்சிறந்த கலைப்படைப்பாக இல்லாவிடினும், முதல் பாதியில் திரையை நிறைத்து பொங்கி வழியும் இளமை படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பரவச உணர்வை உண்டாக்குவதாக நான் நினைக்கிறேன். ஒரு ‘மணிரத்னம்’ படமாக இதைக் கொண்டாடுவது போலவே, அவரது பழைய படங்களுடன் ஒப்பிட்டு விமரிசனம் செய்வதும் சரியாக இருக்குமா என எனக்குத் தெரியவில்லை. காலவோட்டத்தில் வீரியம் குறைவது தமிழ் திரைப் படைப்பாளிகளுக்கு நிகழும் துரதிர்ஷ்டம் என்பதுடன் , காலம் மாறுகையில் ஆட வேண்டிய ஆட்டமும் மாறித்தானே ஆக வேண்டும்.
லிவிங் டுகெதரில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள், திருமணம் என்பது பற்றிய தீர்க்கமான பார்வை என்பதெல்லாம் இந்தப் படத்தின் இயக்குனரின் போகஸ் ஏரியா வுக்குள் வருவதில்லை. அவரது கவனம் முழுவதும் ,அழகும் இளமைத்துடிப்பும் நிறைந்த ஒரு உறவின் சில பக்கங்களை அது தரும் உணர்வெழுச்சிகளுக்காக மிகைப்படுத்திக் காட்டி சராசரி பார்வையாளனை திருப்திப் படுத்துவதாகவே இருக்க முடியும் என்பது என் கணிப்பு.அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
பல நாடகங்கள் பல முறை பல நடிகர்களால் சீர் படுத்தப்பட்டு நடிக்கப்படும் போது அது தரும் உணர்வுகளுக்காக பலமுறை பார்த்து ரசிக்கப்பட்டது. தட்டையான சராசரி கிளர்ச்சியூட்டும் படைப்புகள் இதே போல் திரும்ப செய்யப்பட்டு சலிப்பூட்டுவதாக அமைந்து விடுவதற்கு உதாரணம் விக்ரமனின் படங்கள். (என்னையும் மன்னியுங்கள்) ஆயுத எழுத்தின் காதல் காட்சிகள், ஓகே கண்மணியின் காதல் காட்சிகளை பெருமளவு ஒத்திருந்தாலும் சலிப்பூட்டுவதாக அமைய வில்லை என்றும் – இன்றைய கால கட்டத்துக்கான புத்துணர்ச்சி இதில் நிறையவே இருப்பதாகவும் நான் நினைக்கிறேன். என்னுடன் படம் பார்த்த பலருக்கும் பலப்பல கொந்தளிப்புகளை படம் உருவாக்கியது. “நான் உன் கண்மணியா..?” என்று நித்யா கேட்கும் இடத்தில் அழுதே விட்டதாக ஒருவர் (வயது 19) கூறினார். இதெல்லாம் எனக்குப் புரியவில்லை . ஆனால் எல்லாக் குறைகளுடனும், படம் பார்ப்பதற்கு ‘அழகாக’ இருப்பதாகவே நினைக்கிறேன்.
செல்வா.. படம் எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்றால், பல இடங்களில் காட்சிகள்தான் இருந்தன. கதை என்பது எனக்குப் படத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காட்சிகளை வைத்தே படம் பிடிக்கும் என்று என்னால் சொல்ல இயலாது. அலைபாயுதேவில் நல்ல கதை இருந்தது. ஆனால் ராவணன் & கடல் படங்களில் கதை இல்லை. இருந்திருந்தாலும் மிகவும் லேசான கதைதான்.
ஆனால், சில இளைஞர்களுக்குப் படம் பிடித்துள்ளது. காரணம் கேட்டால், பாடல்கள்+சில காட்சிகளில் இவர்கள் கழித்த நிமிடங்களைப் படம் நினைவுபடுத்துவதே காரணம். மணி ரத்னம் டார்கெட் செய்துள்ளது அவர்களைத்தான். உங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.
ஆனால், மணி ரத்னத்தின் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னால், இது ஒரு மணி ரத்னம் படம் என்று சொல்ல இயலாது 🙂 .. இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.
நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை… ஆனால் விமர்சனகள் படிக்கும்போது, பிரகாஷ்ராஜ் ஜோடியைப் பற்றி அனைவரும் குறிப்பிடும்போது, ஏனோ புதுப்புது அர்த்தங்கள்- பூர்ணம் விஸ்வநாதன் சவுக்கார் ஜானகி ஜோடி என் மனதில் நிழலாடினார்கள்…! என்ன ஆச்சர்யம், நீங்களும் அதையே குறிப்பிட்டிருக்கிறீர்கள்…! விவரம் தெரிந்தவர்க்கள் எல்லோரும் உங்களின் இந்த்கப் படத்தைப் பற்றியப் பார்வையை ஆமோதிப்பார்கள்.
எனக்குப் பிடித்த வரிகள் //(மேனன் என்பது அவர் படித்து வாங்கிய பட்டம் இல்லை என்பதால் அவர் நித்யா மட்டுமே)// சாட்டையடி…!
Cheers boss. Glad that you too remembered Poornam couple 🙂
Hi Rajesh
Very honest and nice review about this movie.
Thank you Daran
Arumayana review thala…
Cheers boss
very nice review 🙂 and unbiased indeed.
“வரிசையான flopகளால், இப்படிப்பட்ட ஒரு படம் எடுக்க மணி ரத்னம் தூண்டப்பட்டிருக்கலாம்.”
Yes Ram. I felt so after seeing the film. there is no life in it.
Mouse pidikka therinjavar neeenga…. epadi review eluthalam…
Haa haa.. ROFL
As you said if //எப்படியும் அவர் படம் வந்தாலே அதைத் தலைமேல் தூக்கிவைத்து ஆட ஒரு பெரிய ஆடியன்ஸ் கூட்டம் உள்ளது//, then why Kadal haven’t become a hit? Agreed with just few points (+ve about bavani-ganapathi portion), rest of your points seems to be insane. You would have already fixed in mind that “enna eavana parthalum mani rocks!! rocksnu!!! soalran appadi ennatha keeltchutaranu papoammnu, poierupeenga”. In a GD if all speaks positvie about a topic and if one person speaks negative, he will be attarcked by the crowd. Guess u trying the same way :P, but anyways All the best for ur future writeups. For me its a feel good movie.
Actually, I went to this film with an unbiased mindset. I write all my reviews with an neutral POV. To me, I felt that the film was lacking life altogether. There was nothing in this film for me to enjoy it. I also felt that the film is a vaccuum. Meaning to say, it was not close to my heart. Other than that, I can assure you that I didn’t go in with this mentality – “enna eavana parthalum mani rocks!! rocksnu!!! soalran appadi ennatha keeltchutaranu papoammnu, poierupeenga”. And I am most certainly not that person who will be attracted towards the negative feel, in a crowd 🙂
Hi Karundhel.
I read your articles and I would admit that some of your works are really good and informative. But i differ with your OK Kanmani review here.
“இங்கே ‘ஒரு ஊரில்’ என்பதை அடைப்புக்குறிகளில் கொடுக்கக் காரணம், அந்த இடத்தில் ‘சென்னை’ என்றோ ‘மும்பை’ என்றோ ‘பனைமரத்துப்பட்டி’ என்றோ ஊரை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.” – You cannot generalize the places here. In Chennai it is still questioned or considered a disgrace if a guy and girl stay together without marriage. In Bangalore, guys can visit the rooms where the girl stays without being questioned by house owners. The social conditioning differs from place to place. There is a screen writing tool implied here. Choose a place where the social conditioning will not question living together but keep a conflict by introducing a traditional couple. Aadhi can easily get out of Ganapathy house and stay with Taara. But he did not. They don’t shy away that they are doing something terrible. They are commitment phobic. Their comfort level does not scream for privacy.
“என்னதான் நடந்தாலும் திருமணம்தான் மருந்தா? இதுதான் நம்மூரில் ஆரம்ப காலத்தில் இருந்தே எல்லாப் படங்களிலும் காட்டப்பட்டுவரும் மூடநம்பிக்கை. ”
I partially agree that marriage is not a solution to every problem in a movie. But here things are different. The boy is ambitious and so the girl in their respective career choices. They need each other but their aspirations differ. Their career choices take them to different places. Obviously there is no living together in long distant relationships. I would like to quote the ideologies of C S Lewis.
He says like this. “Being in love is a good thing, but it is not the best thing. There are many things below it, but there are also many things above it. You cannot make it the basis of a whole life. It is a noble feeling, but it is still a feeling. Now no feeling can be relied on to last in its full intensity, or even to last at all. Knowledge can last, principles can last, habits can last; but feelings come and go“
With marriage as the driving engine they can have this love for each other even at those moments when they do not like each other; as you love yourself even when you do not like yourself. It moved them to a commitment and their relationships gets an identity.
“படத்தில் வரும் காதலர்கள் மிகச்சில படங்கள் நீங்கலாக உயர் நடுத்தர வர்க்கம் என்பதால், ’பெரும்பாலும் உயர் நடுத்தர வர்க்கத்தினரால் ரசிக்கப்பட்டு வந்தன’ என்று படித்துக்கொள்ளலாம். அவரது படங்களிலும், அவரைப் பின்பற்றிய கௌதமின் படங்களிலும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் காதல்கள்தான் பெரும்பாலும் சொல்லப்படும். இதில் செல்வராகவனையும் வெற்றிமாறனையும் பாராட்டலாம். அவர்களின் காதல்களில் ஏழைகளும் இடம்பெறுவர். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, காதல் கொண்டேன்’ போல ”
As per you a poor man’s love is noble than upper middle class love or a writer should always try to write using the lower class people canvas. It is like saying Dostoevsky is greater than Tolstoy
“நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணைப் பார்த்த இரண்டாவது தருணத்திலேயே மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு, உடனேயே இருவரும் காதலிக்க ஆரம்பிப்பது சாத்தியமா? நிஜத்தில் ஒரு பெண்ணிடம் மொபைல் எண்ணை வாங்குவது அவ்வளவு எளிது என்றால் இன்னேரம் உலகம் முழுதும் அனைவருமே காதலர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்.”
In the second sight Taara and Aadhi meet in a wedding but now have trusted mutual friend. Adrenaline rush can happen for both to invoke this action. Just because a women shares her contact at second sight does not mean she is fool or bad. One can enjoy a cinematic license here. Why no one raised a question when the couple stop train in Mouna Raagam climax. If everyone thinks that their loved one should not go away and they can stop the train to express their deepest love then as per youus statements “No trains should move more than 1 KM from the railway stations”
“அதேபோல், நிஜத்தில் ஒரு கேமிங் நிறுவனத்தில் வேலைக்கு வரும் இளைஞன், உடனடியாக பாஸைக் கன்வின்ஸ் செய்யும் அளவு ஒரு கேம் கான்ஸெப்ட்டைச் சொல்லிப் பாராட்டுப் பெறுவது தலைகீழாக நின்று பியர் குடிப்பது போன்றது. பழைய மணி ரத்னம் இப்படிப்பட்ட காட்சிகளை எழுதக்கூடியவர் அல்ல”
I completely agree with you on this. The office secene looked plastic when compared to his earlier movies.
“கமர்ஷியல் படம் ஒன்றை எந்தவிதமான சுவாரஸ்யமான கதையம்சங்களும் இல்லாமல் ஒண்ணரை மணி நேரம் நகர்த்துவது மணி ரத்னத்தால் மட்டுமே முடியக்கூடிய விஷயம் போல”
It is a common pattern in all Tamil films. The story actually starts post interval. But still people are convinced and they make commercial success with this structure. I have a parallel analogy here. Our people like this kind of drama where the first half is spent on establishing the characters, few mins before pre-interval introduce the problem and second half deals with how the character faces the problem and solve it. Is it really mandatory to introduce the inciting incident in Act 1 ? Cricket sport is a great drama for Indian people. Cricket sport involves establishing one team’s action in first half. The target is set during interval and the second half is given for the opponent team to fight whereas American favourite sport (football or baseball or tennis) have equal chances to score points or goals for both teams. Don’t you think Indians are trained to this structure of drama as they celebrate cricket sport more than everything? You might debate not any more and that’s why 20-20 gets more attention. But we still did not change the game rules.
“பிரதான கதாபாத்திரங்களாகக் காட்டப்படும் இருவருக்கும் இடையே எந்தவிதமான முரண்களும் அழுத்தமாக (conflict & Drama) நடக்காமல் கிட்டத்தட்ட ஒரு முழுப்படமும் ஓடுகிறது என்றால், அது எப்படி சுவாரஸ்யமாக இருக்கமுடியும்? It’s such a basic point.”
You have to understand one more basic point. This story revolves with “internal conflicts” of characters and not “external conflicts”. (Refer here for more : http://wp.me/p1SWNM-hf ). There is nothing at stake here externally. It is all happening internal to the character. I agree that this is not the best structure but Mani Ratnam has taken this as a challenge and created this story completely with internal conflicts. (Before Sunrise, Before Sunset.. types) and yet he made it appealing to commercial audience. They celebrate it. What you say is like a food should have definite amount of sugar, definite amount of bitterness, definite amount of spice. If a food is prepared with anything less, or without spice it is labelled as not so tasty food. But I see the majority audience enjoying this taste.
There are no cheap screen writing tool involved here like lead character meeting with accident, father passing away etc etc. Even Bhavani aunty is not used as cheap tool. She does not go missing at the climax, increase the dramatic tension to peak. The audience were revealed that she went missing in the middle of the story, the same happens again with some heightened intensity. No lorry hits Bhavani aunty, she is not in hospitals, she is still the same. Nor the lead pairs travel to different places. Their problem is the anxieties and fears they have in their mind before they separate. The whole story runs with internal conflict with less or no space to external conflicts. No one is a serious threat to the lead pair except their choices (Choices, read here as commitment phobic for Dulqueer, Nithya has a negative feeling about marriage because of her parents, and the materialistic arrangements for marriage, she is not really acommitment phobic, she is a “paradox”. This gets clear when she talks with Prakash Raj sitting on the veranda and also when she asks Dulquer to come to Paris when he tells her to come with him to U.S.)
“முன்பின் தெரியாத ஒரு நபரோடு ஒரே வீட்டில் தங்குவது எத்தனை கஷ்டமோ, அதைவிடக் கஷ்டம் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் தங்குவது. அதில் ஏராளமான சிக்கல்கள் நேரும். எப்போது பாத்ரூமை உபயோகிப்பது என்பதில் இருந்து, ரூம் ஃப்ரெஷ்னர், பர்ஃப்யூமின் வாசனை, அறையில் எந்தப் பொருள் எங்கே இருப்பது என்பதுல் இருந்து, தூங்கும்போது விளக்கை அணைப்பது, பாட்டு கேட்பது, ஒவ்வொருவரின் ப்ரைவஸி பிரச்னைகள் என்பதிலெல்லாம் கொலையே செய்யும் அளவு பிரச்னைகள் வரும். ”
They don’t have privacy issues here. If so they would have not stayed at Ganapthy house in first place.
படத்தின் அடுத்த பிரச்னை – வசனம்.
I have felt both the couple dialogues very real or at least acceptable. Dialogue should be heightened or condensed so that it is not boring. Not all our conversations in real life gives an impact.
“இந்தப் படம் இளைஞர்களுக்கானது’ என்பது இன்னொரு மூடநம்பிக்கை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் போதும்.. கதையே தேவையில்லை.. கடவுள் மணி சார் rocks. மணி ரத்னம் என்ற பெயர் இருந்தாலே உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டுவேன்’ என்றெல்லாம் நினைக்கும் எவருக்குமே இந்தப் படம் போதுமானதே.”
Just because we are ardent fans of Mani Ratnam does not mean that we support him blindly. We have read Syd Field, Aristiotle’s Poetics. We watch Whilplash and Boyhood and we know the importance of screenplay structure. This film is not his great film. But it is not a bad film. It deals with a style of creating a screenplay with internal conflicts. Just because you don’t agree with a film it does not mean you should take a rude tone and label it bad and consider people who celebrate it as biased.
Very well thought out counter points, I couldn’t have written better..
Hi Praveen,
Fantastic reply.
Intha Karundhel sir-ku ithe velaya pocchu. Kora sollanumnu ethayaavadhu solluvaaru. Manasukkula periya “Roger Ebert”-nu nenappu ivarku.
Review ezhutha sonna comedy pannuvaaru. Ivaru ezhuthara review-a ellam padichuttu sirichuttu poriya vendiyathaan.
You have taken such long time and written review to review. Quite interesting to read both anyway
Hi Praveen,
here are my views to your comment.
1. about the location the story happens – I felt it’s irrelevant. The basic point Mani ratnam wants to convey is that they are commitment phobic – alright. But, to me, the portrayal showed no emotions or life. It was so plastic. That’s because there was no ‘real’ story which would keep me intrigued. For ex, mouna ragam, alaipayuthe, the love portion in kannathil muthamittal and bombay and guru – they all had life. But ravanan and kadal – again plastic. That’s my POV. So the location doesn’t matter. It’s the story which matters, which would have made even a story at பனைமரத்துப்பட்டி to be interesting.
2. about the point of CS Lewis you quoted and that paragraph – to me, I didn’t get answer to one primary question here. What made these two to strike a chord? Why are they attracted to each other? What makes them think that they are inseperables? Was there any strong point which can define these? No. Again, if you remember Mani’s previous films which I quoted, they all had a strong story for the female. All of Mani ratnam’s heroines are bold and courageous, with a strong story which connects them to the hero. But here, I felt things are rushed. I couldn’t feel a connection between these two. My POV is that, in such a case, there is no need for marriage, and they can easily part ways since there is no real emotional connectivity. Also, the hero appears too desperate at the end, and he clings on to her in a very articifial way.
3. //As per you a poor man’s love is noble than upper middle class love or a writer should always try to write using the lower class people canvas. It is like saying Dostoevsky is greater than Tolstoy // – absolutely wrong. I wanted to tell that Mani ratnam had never showed the middle class love which is more relistic to many of the audience. He had failed in it. Ex – thiruda thiruda, tajmahal (screenplay) etc.. All his famous love stories are portrayed with the upper middle class characters.
4. // Is it really mandatory to introduce the inciting incident in Act 1 ?// – I’m not talking about formulas here. I am talking about something interesting for the audience to be shown. I felt that the movie is a drag. I had given enough reasons above. All we need is a story which can intrigue us. A story which connects to our minds. I didn’t feel that connection in this film. It’s as simple as that.
5. //This story revolves with “internal conflicts” of characters and not “external conflicts// – when I mentioned “பிரதான கதாபாத்திரங்களாகக் காட்டப்படும் இருவருக்கும் இடையே எந்தவிதமான முரண்களும் அழுத்தமாக (conflict & Drama) நடக்காமல் கிட்டத்தட்ட ஒரு முழுப்படமும் ஓடுகிறது என்றால், அது எப்படி சுவாரஸ்யமாக இருக்கமுடியும்? It’s such a basic point”, do you think I was trying to say that the story lacked car chases, big stunts etc?? I knew it’s an internal conflict. After all , this is a ‘so called’ love story, and it can happen through internal conflicts mainly. But nothing was interesting as even an internal conflict here, to me. Everything was rushing through, and there was no real emotional connectivity. Under such a situation, when everything in a film is such an artificial drag, how can I appreciate it??
Also, I can understand the film interested you (or you are trying very hard to vouch for an empty mani ratnam. your conscience knows the truth). I read all your arguments. You have taken so much of your time to present them. But my brother, to me it’s a very basic point. If the film doesn’t connect emotionally with me, I hate it. It’s as simple as that. And the points about the anxieties of the couple, their fears etc.. doesn’t hold good when the story premise itself is so weak to me.
6. //They don’t have privacy issues here. If so they would have not stayed at Ganapthy house in first place.// – Oh is it? so you mean to say that they didn’t have even a single privacy issue? I mean, that’s possible only if they both are dead my friend. For everyone in this world, one way or the other, however close they are with the other person, there exists at least a million privacy issues. If you do not trust me, I would request your personal opinion and experiences. But I am not concentrating on that. What I am saying here is that the plastic scenes throughout the film didn’t do justice to a missing element called ‘story’. I mean, as I have told, the earlier Mani ratnam who created mouna ragam was a adept. He would have just blasted his way across in such a plot earlier.
7. //Just because you don’t agree with a film it does not mean you should take a rude tone and label it bad and consider people who celebrate it as biased.// – In the same way, just because you like the film, it doesn’t mean it should be celebrated across. right? In my opinion, this is an artificial film, and I had given enough reasons here. I do understand that you are his fan. Nothing wrong. I am not a fan to anyone, since I am a critic, and I approach any film objectively. If it interests me, I write about it. If it doesn’t, I write about it. That’s all I do here. Also, this point – இந்தப் படம் இளைஞர்களுக்கானது’ என்பது இன்னொரு மூடநம்பிக்கை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் போதும்.. கதையே தேவையில்லை.. கடவுள் மணி சார் rocks. மணி ரத்னம் என்ற பெயர் இருந்தாலே உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டுவேன்’ என்றெல்லாம் நினைக்கும் எவருக்குமே இந்தப் படம் போதுமானதே” – is a valid one, since I had encountered handful of people who liked the movie just coz it’s by “mani sir”. I am not lying here. It’s just that people have various icons to worship, and if someone tries to present a honest view according to him/her, people doesn’t understand. To them, it’s just their god, and blaspheme is a sin.
Having said that, I respect every opinion. Thanks for writing in detail your view. Cheers and a blast.
And Praveen…
//Mani Ratnam has taken this as a challenge and created this story completely with internal conflicts. (Before Sunrise, Before Sunset.. types)/ – I will kill you if you compare them to this one. I am not joking 🙂 🙂
எனக்கும் இதில் உடன்பாடு உண்டு லிவிங் டுகெதர் என்றால் ஒரே ரூமில் இருப்பது மட்டும்தானா நிறைய சங்கதி இருக்கிறது அடுத்த தலைமுறை சில சங்கடங்களை அனுபவிக்க இருக்கிறது ஒரு வேளை குழந்தை பிறந்தால் அப்பா யார் அதற்க்கு யார் பொறுப்பு அது போல் லிவிங் டுகெதர் முடிந்து இன்னொரு ஜோடியாக சேரும்போது ஏற்படும் பாதிப்பு என நிறைய இருக்கிறது மௌனராகம் வசனம் பாலகுமாரன் எழுதி இருப்பார் இப்பொழுது நிறைய பேர் பேசுவதில்லை எல்லாம் வாட்ஸ் அப் மயம் அதே போல் ஒரு மனம் ஒத்த தம்பதி என்பது இன்னும் எதிர்பார்க்க வேண்டிய விஷயம் நிறைய உள்ளது
Yes boss. the intricate things have not been presented in detail in this film. மிகவும் செயற்கையான படம் இது.
லூசியா / எனக்குள் ஒருவன் பற்றி எழுதலையே?
எனக்குள் ஒருவன் இன்னும் பார்க்கல. லூஸீயாவே போதும் எனக்கு 🙂
கருந்தேள்,
நீளமாக எழுதப்பட்ட கட்டுரை வழக்கம் போலவே. மணிரத்னம் எடுக்கும் படங்கள் எப்பொழுதுமே கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டே வந்திருக்கின்றன. ரோஜா, பாம்பே, உயிரே, இருவர்,அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால்,ராவண், கடல் என்ற தொடர்ந்த இந்த எதிர்மறை விமர்சனங்கள் இப்போது காதல் கண்மணிக்கு வந்திருப்பதில் வியப்பில்லை. பதிவைப் படித்ததும் நிறைய எழுத நினைத்தேன். அதற்குள் செல்வா, கிரிட்டிக், பிரவீன் போன்றவர்கள் நான் சொல்லவந்ததில் ஏறக்குறைய எல்லாவற்றையும் எழுதிவிட்டார்கள்.
அது என்ன? மேல்தட்டுவர்க்கம் செய்யும் காதல் போலியானது என்றும் அடி மட்ட மக்களின் காதல் சிறப்பானது என்றொரு எம் ஜி ஆர் காலத்து சிந்தனை? பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன் என்ற சினிமாத்தனமான விசித்திர விதியைத் தவிர இதில் எந்த அளவுக்கும் உண்மையில்லை. வெற்றிமாறன், செல்வராகவன் போன்றவர்களைப் பாராட்டுங்கள் தவறில்லை. அதற்காக மணி அவர்களைப் போல படம் எடுக்கவில்லை என்பதை எவ்வாறு ஒரு குறையாக சொல்ல முடியும் என்று புரியவில்லை. மணி ரத்னத்தின் பாணி அவர்களுக்கு வருமா என்று ஏன் உங்களயே நீங்கள் கேட்டுக்கொள்ளவில்லை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை. பாரதிராஜாவினால் ஒரு நகரம் சார்ந்த கதையை துல்லியமாக கொடுக்க முடியாது என்பதால் அவரை ஒரேடியாக ஒதுக்கிவிட முடியுமா? அவரவர் பாணி அவரவருக்கு.
லிவிங் டுகெதர் பற்றி மணிரத்னம் வியாக்கியானம் செய்வதற்காக இந்தப் படத்தை எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். மணிரத்னம் எப்போதும் ஒரு முழுமையான தீர்வை தனது படங்களில் முன் வைப்பதில்லை. அது அவரது வேலையுமல்ல. ஒரு கதை அதன் நீட்சி அதன் முடிவு அவ்வளவே. அதைத்தாண்டிய கேள்விகள் படம் முடியும் போதே காலாவதி ஆகிவிடுகின்றன. அப்படிப் பார்த்தால் அலைகள் ஓய்வதில்லை படம் சொன்ன செய்தியை நம்மால் மனதார வரவேற்க முடியுமா? அதில் இருக்கும் விடையில்லாத கேள்விகள் பற்றி யாரும் பேசுவது கிடையாது. ஆனால் மணிரத்னம் என்றால் நீ என்ன பெரியா இவனா என்ற நக்கல் நம்மிடம் உண்டு.
தொடர்ந்து வந்த தோல்விகளினால் தன் நிலையை உறுதி செய்துகொள்ளத் தேவையான ஒரு அவசர மருந்தாக மணி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது கண்கூடு. ஆனால் அதையும் தனது பாணியிலேயே சகித்துக்கொள்ள கூடிய வகையில் செய்திருக்கிறார். படம் பார்க்கும் டீன்ஸ் இதை கொண்டாடுகிறார்கள். மணியின் இலக்கு அவர்களே. அவர்களை அவர் திருப்தி செய்துவிட்டார் என்பது தெளிவு. கலாச்சார அதிர்ச்சியை தாங்காத இதயங்கள் சற்று தள்ளி நின்று கொள்வது உத்தமம்.
வசனங்கள் செயற்கை என்று சிலரைப் போல நீங்களும் சொல்கிறீர்கள். எனது பார்வையில் இந்தப் படத்தின் வசனங்கள் வெகு இயல்பாக இருந்தன. பவானி ஆண்ட்டி ஆதியை பஸ் சை விட்டு விரட்டும் அடுத்த காட்சியில் வீட்டுக்கு வரும் ஆதி கணபதியிடம், “கணபதி சார், யூ ஆர் ரியலி கிரேட் ” என்று சொல்வது, “ரெண்டு பெரும் ஒரே ரூம்லயா?” என்ற தாராவின் கேள்விக்கு “இல்லை.” என்று சொல்லிவிட்டு பின்னர்,”ஒரே ரூம்தான் இருந்துச்சு” என்று ஆதி சொல்வது, மிக சீரியஸாக தாரா “உன் மனசை தொட்டு சொல்” என்றதும் “இப்ப ஒரு பிரட் ஆம்லட் சாப்பிட்டா எப்படி இருக்கும்?” என்று ஆதி கேட்பதும் வெகு யதார்த்தம். யோசித்துப் பார்த்தால் வாழ்கையில் நாம் இதுபோன்று சிறிய சிறிய வார்த்தைகள்தான் பேசுகிறோம். பல சமயங்களில் அதுவே போதும் என்று தோன்றுகிறது. மணி அதைத் தாண்டி செல்லவில்லை. தளபதியின் காவல் நிலைய காட்சி ஒன்றில் மிக பிரபலமான “ஏன்?” என்ற ரஜினியின் கேள்விக்கு அடியாள் ஒருவன்,” தேவா” என்று சொல்லும் அதே சுருக். மணி மாறவில்லை. மாறவும் வேண்டாம்.
Mani Rathnam has proved he can still deliver the punches. Period.
Well said Kaarigan..
காரிகன்… எனக்கு உண்மையில் மணி ரத்னம் மேல் எந்தவிதமான கோபமும் இல்லை. ஒரு திரைப்படமாக இதைப் பார்க்கச்சென்றேன். I felt that Ok kanmani is a very artificial film, and so I have written about it.
//அது என்ன? மேல்தட்டுவர்க்கம் செய்யும் காதல் போலியானது என்றும் அடி மட்ட மக்களின் காதல் சிறப்பானது என்றொரு எம் ஜி ஆர் காலத்து சிந்தனை? பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன் என்ற சினிமாத்தனமான விசித்திர விதியைத் தவிர இதில் எந்த அளவுக்கும் உண்மையில்லை// – எனக்கு இப்படிப்பட்ட சிந்தனை எல்லாம் இல்லவே இல்லை. நான் அப்படிப்பட்டவனும் இல்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் எதைக் காட்டுகிறோம் – எதைக் காட்ட மறுக்கிறோம் என்பதில் ஒரு குறிப்பிட்ட அரசியல் உண்டு தானே? திருடா திருடா போன்ற படங்களில் மணியால் நடுத்தர வர்க்கக் காதலையெல்லாம் காட்டவே முடியவில்லை என்பதை எழுதினேன். அது உண்மைதானே? மணி ரத்னம் ஒரு குறிப்பிட்ட வகையிலேயேதான் படம் எடுப்பார். அதை எழுதினால் தவறா? ஒரு இயக்குநரைப் பற்றி எழுதுகையில் அவசியம் சமகால இயக்குநர்களைப் பற்றியும் பார்ப்பதுதான் நல்லது. அப்போதுதான் யாரிடம் என்ன இருக்கிறது/இல்லை என்பதை இன்னும் நன்றாக விளக்க முடியும். என்னைப்பொறுத்தவரை மணியால் கூடுவிட்டுக் கூடு பாய முடியாது. ஆனால் வெற்றிமாறனால் முடிகிறது. வெற்றிமாறன் நினைத்தால் அவசியம் மணி ரத்னம் படம் ஒன்றைக் கொடுக்க இயலும். ஆனால் மணியால் மணி படம் ஒன்றைத்தான் எடுக்கமுடியும் என்பது என் கருத்து. அதை என் வலைத்தளத்தில் எழுதாமல் நான் எங்குபோய் எழுதுவது?
//ஆனால் மணிரத்னம் என்றால் நீ என்ன பெரியா இவனா என்ற நக்கல் நம்மிடம் உண்டு. // – இது என்னிடம் இல்லை. நான் எல்லாப் படங்களையுமே ஆப்ஜெக்டிவாகவே அணுகுபவன். எனக்குத் திரைப்படங்களில் விருப்பு வெறுப்புகள் இல்லை. படம் பார்த்தபின் மனதில் தோன்றும் கருத்துகளை எந்த வடிகட்டியும் இல்லாமல் எழுதுவதே என குணம்.
// படம் பார்க்கும் டீன்ஸ் இதை கொண்டாடுகிறார்கள். மணியின் இலக்கு அவர்களே. அவர்களை அவர் திருப்தி செய்துவிட்டார் என்பது தெளிவு. கலாச்சார அதிர்ச்சியை தாங்காத இதயங்கள் சற்று தள்ளி நின்று கொள்வது உத்தமம்.// – டீன்ஸ் என்று யாரைச் சொல்கிறீர்கள் காரிகன்? பாடல்கள் மட்டும் போதும்… சில காட்சிகள் மட்டும் போதும் என்பவர்களையா? இந்தப் படமெல்லாம் கலாச்சார அதிர்ச்சியை எனக்கு அளிக்கும் என்று நீங்கள் நம்பினால் என்னைப்பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்றேதான் சொல்வேன். மணியின் இலக்கு டீன்ஸ்தான் என்றால், பிறரைப் படம் பார்க்காதீர்கள் என்று அவர் சொல்லலாமே? திரைப்படம் என்பது மக்கள் முன் வைக்கப்படும் படைப்பு என்பது உண்மை என்றால், விமர்சனங்களும் வந்துதான் தீரும். விமர்சனங்களைத் தாங்காத மெல்லிய இதயமுள்ள நபர்கள்/பயந்தாங்கொள்ளிகள் திரும்பி நின்றுகொள்வது உத்தமம் என்று நானும் சொல்லலாம்தானே?
வசனங்கள் – செயற்கை என்று நான் ஏன் சொன்னேன் என்றால், பல இடங்களில் ‘என் ஆசை கொத்தமல்லியே/கத்திரிக்காயே’ என்பதுபோல் அதே மணி ரத்ன/சுஹாஸினி ட்ரேட்மார்க் ராவண வசனங்கள் என்பதால்தான். இன்னொரு முறை படம் பார்த்தால் வரிக்கு வரி என்னால் அவைகளைச் சொல்லிக்காட்ட முடியும். மிகமிகச் செயற்கையாக இருந்தன. தாங்கவே முடியாமல்தான் அப்படி எழுதினேன்.
//தளபதியின் காவல் நிலைய காட்சி ஒன்றில் மிக பிரபலமான “ஏன்?” என்ற ரஜினியின் கேள்விக்கு அடியாள் ஒருவன்,” தேவா” என்று சொல்லும் அதே சுருக். மணி மாறவில்லை. மாறவும் வேண்டாம்.// – அந்த மணிதான் எனக்கு வேண்டும். நடுவே எங்கோ வழிதவறி காணாமல் போய்விட்டார். தேசியம், நாடு, கலவரம், குண்டுவெடிப்பு என்றெல்லாம். மௌன ராகத்திலிருந்து தளபதி வரையான படங்களை எடுத்த கமர்ஷியல் மணிரத்னம்தான் இப்போதைய தேவை என்பது என் கருத்து.
//Mani Rathnam has proved he can still deliver the punches. Period.// – To me, he has not proved so. IMO, this is an artificial film which he had taken just to make sure that he rakes in some moolah.
Cheers karigan.
neenga eludhirukkura indha review la ore nalla vishayam menon padichu vanguna pattam ilaingradhu mattum than apdi enna maniratnam mela ungaluku gandu nu teriala nenga sonna madhri mani rocks nu solla oru kootam irukkalam but kadal, raavanan kulam yarum mani rocks nu sollalaye apo enga ponanga andha kootamlam adha konjam thedi soldreengala apram last onnu solirundheengale mani ratnathoda ella padamum patha nan soldradha kandipa purinjikuvanganu nan ela padathayum pathurukken but nenga sonna madhiri enaku edhum thonalayo edhukku valiya vandhu thinikkureenga be a reviewer not a critic
பாஸ். உங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் எழுதணும்னு நினைச்சீங்கன்னா, அதுக்கு நான் ஆள் இல்ல. எனக்குத் தோணுறதைத்தான் நான் எழுத முடியும். அவ்ளவுதான்.
(மேனன் என்பது அவர் படித்து வாங்கிய பட்டம் இல்லை என்பதால் அவர் நித்யா மட்டுமே) — super.
I do see your points Rajesh. But I agree with Praveen and Kaarigan.
They have already covered elaborately.
I absolutely enjoyed the movie. Mani might have used upper middle class as the stage to set the story; but he did clearly convey what he intended to. I’m a middle-aged/middle-class average Joe and it didn’t bother me a bit to watch a story set on an upper class stage.
I took it as a glimpse of my kids lives in the near future.
We do watch foreign movies that are set at culturally different platforms. We applaud those if good and try to learn a thing or two.
Why throw tantrums to see a slice of our own?!
And I second Selva.
//We do watch foreign movies that are set at culturally different platforms. We applaud those if good and try to learn a thing or two.
Why throw tantrums to see a slice of our own?!// – That’s because this is a half baked film to me ATY. Frankly saying, I felt that this a very artificial film, and love in real life doesn’t happen so. I would have let it go if this directed by vikraman & co. But out of all, if Mani ratnam gives such an average film, I cannot leave it 🙂 ..
And, I have replied to Praveen and Karigan in detail too.
Appo “Samson” endha college la padichu vaanginadhu?? Nithya maadhiri verum Leela podhume?
‘Menon’ is a caste name. Is samson a caste name?
Very well written review, I have always been reading ur posts and as always, you have rightly pointed out the terrible issues in the movie. Even being one among “those” blind Mani sir fans (and I still believe he s one of the best in this country), I certainly agree with you on the below points
– Firstly as u said, this is no where near a good Maniratnam movie.. Not even in the likes of Guru or Aiytha ezhuthu
– No (good) story to hold the movie for even an hour and Very ordinary (repeatable old ) scenes makes it boring and difficult to concentrate (Good mani sir movies which I remember won’t let to turn sideways even for a moment)
– Very poor acting from the hero, he gives the same expression in several scenes without any variation (which I didn’t see you mention). When will Mani sir stop casting these big actors sons/daughters
– Very poor dialogues in several scenes (like the lady asks him, will u call me as kanmani) which drops an already average scene to the Rock bottom.
lost the interest in the movie the moment they exchanged the phone numbers on day one? Very Good comment on that by you 🙂
Few positives that worked in favour,
– we didnt have any descent romantic movie lately
– IPL season, no big movies hitting screens
– Few fresh scenes like depicting scenes with the game at the start and excellent camera angles during their trip
– Few Mani sir sparkles found across the movie with few sharp dialogues. Example hospital scene was a good one.
But It’s hard to digest people calling Mani sir is back,,, i wonder if these people have really seen any Maniratnam movie ?
And how the hell do they call this as Alaiypyuthe 2?
Mokka review.. Idhala nadandha orae nalla vishayam.. point nu paatha, Praveen website poi, avaroda reviews, stories, etc.. Padikradhudha.. Review pandradhuku awarda kuduthanga unaku? Ennama koovura..
Mokka review.. Idhala nadantha orae nalla vishayam.. Praveen website poi edhavadhu padikradhu dha.. Review pandradhuku award ah kuduthanga unaku? Ennama koovura
Ivar enna review pannunalum thooki vechu aaduradhuku oru kootam iruku.. Adha ipdilam pandraru