மௌனகுரு (2011) – Tamil
விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் தமிழில் பார்த்து சில மாதங்கள் ஆகிவிட்டன. கடைசியாக அப்படிப் பார்த்திருந்த படம், ’யுத்தம் செய்’. இப்போது மௌனகுரு. ஒரு த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களும் அட்டகாசமாகப் பொருந்தி, பார்ப்பவர்களை படத்தில் ஒன்ற வைக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால், போதிய விளம்பரம் இல்லாமல், சில திரையரங்குகளில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதுபோன்ற படங்களைப் பார்த்து, அவசியம் நல்லவிதமான விமர்சனத்தை நண்பர்களிடையே, மக்களிடையே பரப்பவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட படங்கள்தான் தற்போதைய தமிழ்த்திரையுலகுக்கு அவசியம் தேவையான படங்கள்.
ஆரம்பத்தில் இருந்து, இறுதிவரை படம்பார்க்கும் ஆடியன்ஸை ஒருவித பரபரப்பு கொள்ளச் செய்து படத்தில் கவனம் குன்றாமல் வைத்திருப்பது ஒரு கலை. இப்படத்தின் இயக்குநர் சாந்தகுமாருக்கு அது கைகூடி வந்திருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருமே தங்களது கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கின்றனர். குறிப்பாக, Fargo படத்தில் கர்ப்பத்துடன் துப்பறியும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த ஃப்ரான்ஸெஸ் மெக்டோர்மாண்ட் சாயலில் தமிழில் நடித்திருக்கும் உமா ரியாஸ்,வில்லன் ஜான் விஜய்,கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களைச் சொல்லலாம். எனக்கு ஒரு சந்தேகம். படத்தில் அருள்நிதியின் கதாபாத்திரம், அருள்நிதியை ஸ்டடி செய்து எழுதப்பட்டதா அல்லது அந்தக் கதாபாத்திரத்தை அருள்நிதி அப்படி நடித்திருக்கிறாரா? எது எப்படி இருப்பினும், ஒரு ஸீனில் கூட சிரிக்காமல் கடுமையாகவே முகத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கும் அருள்நிதியும் ஸ்கோர் செய்கிறார். இன்னும் ஓரிரண்டு படங்களில் அவரது நடிப்பைப் பார்த்தபின்னர்தான் மேற்கொண்டு கமெண்ட் செய்ய முடியும். அழகிய கதாநாயகியின் ரோலை அழகாகச் செய்திருக்கிறார் இனியா.
படத்தின் மிகச்சிறிய ஸ்பீட்ப்ரேக்கர்களாக அமைந்துள்ளன பாடல்கள். இப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
எப்போது பார்த்தாலும் கலைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஆடியன்ஸை கொலைவெறி கொள்ளவைக்கும் படங்களை விட, மௌனகுருவைப்போன்ற தரமான த்ரில்லர்கள் தமிழுக்குக் கட்டாயம் அவ்வப்போது தேவை. ஆகவே, மௌனகுரு டீமுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதுவரை மௌனகுருவைப் பார்க்கவில்லை என்றால், எப்படியாவது பார்த்துவிடுங்கள் நண்பர்களே.
கடைசியாக, இன்னொரு டவுட். இவ்வளவு நல்ல ஒரு படத்துக்கு ஏன் அவ்வளவு மொக்கையாக ஒரு ட்ரெய்லர்?அந்த ட்ரெய்லரைப் பார்த்தபின்னர்தான் இப்படத்தைப் பார்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.
heroine iniya correct it,is given as oviya
Thank you for the correction ஸோமநாதன். சரி செய்தாயிற்று 🙂
என்ன ஆச்சு. ரொம்ப அற்புதமாக எழுதுவீங்க. இந்த அற்புதமான படத்திற்கு ரொம்பவே அடக்கி வாசிச்சு இருக்கீங்க.
இதுவரை பார்க்கும் ஐடியாவே இருக்கல! பார்த்துவிடுகிறேன் பாஸ்!
ஏற்கனவே நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டதால் சிம்பிளா தந்திருக்கீங்க போல.
// படத்தின் மிகச்சிறிய ஸ்பீட்ப்ரேக்கர்களாக அமைந்துள்ளன பாடல்கள். இப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து. //
உண்மையில் த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் தேவையேயில்லை. படத்தின் வேகத்தை தடை செய்வது இவை தான். நான் நீண்ட நாட்களுக்கு பின் இன்ட்ரஸ்டிங்கா உட்கார்ந்து ரசித்துப் பார்த்த ஒரு தமிழ்ப்படம்.
இன்று தான் முதல்முறை நீங்கள் விமர்சிக்கும் படம் ஒன்றை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என சொல்லமுடிகிறது. ஹி ஹி.
சுருக்கமாக இருந்தாலும்,அருமையான பதிவு தல , எனக்கு என்னமோ அருள்நிதி வரும் காட்சிகளை தவிர படம் மற்ற அனைத்து காட்சிகளும் பிடித்து இருந்தது,நன்றாக வந்து இருக்க வேண்டிய படம்,உமா ரியாஸ் மற்றும் ஜான் விஜய் அருமையான நடிப்பு,
small things to say
1.this film shown big advertisements in both TVs and papers.you may not noticed.because once seen the trailor you start hate this film.
2.trailor is not like other films.its specially made by john vijay(villian of the film)
என்னது காந்தி செத்துட்டாரா?
@ ஜோதிஜி – ரொம்ப லேட்டா எழுதிருக்குறதுனால விரிவா எழுதல. கொஞ்சமாவது எழுதனும்னு நினைச்சேன். அதுனாலதான்…..
@ ஜீ- இப்ப ஓடும் படங்கள்ல இது எவ்வளவோ பரவால்லன்றது என் எண்ணம். தவற விட வேண்டாம்.
@ ஹாலிவுட் ரசிகன் – யெஸ். ஆல்ரெடி நிறைய விமர்சனங்கள் வந்திருச்சு. அதான் 🙂 . . ஹி ஹி
@ டெனிம் – எனக்கும் அந்தக் காட்சிகள் புடிச்சது. அருள்நிதி பத்தி இன்னும் சில படங்கள் வரட்டும். அப்புறம் தெரிஞ்சிக்கலாம்னு தோணுது.
@ scenecreator – ஓ இது மீடியால பரவலா விளம்பரப்படுத்தப்பட்டதா? நான் பெங்களூர்ல இருக்குறதுனால எனக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன். ட்ரெய்லர், நிஜமாவே என்னை அந்த அளவு ஈர்க்கல பாஸ். படத்துக்கும் ட்ரெய்லர்க்கும் சம்மந்தமே இல்லாதமாதிரி ஒரு ஃபீலிங் …I dunno..
@ Ravi – காந்தி மட்டுமில்ல. நேருவும் செத்துட்டாரு 🙂
இந்த சனிக்கிழமை தான் பாத்தேன். எனக்கு புடிச்சது. முக்கியமா க்ரிப்பிங்கா இருந்துச்சு..சில characterization செமயா இருந்திச்சு.
ஜான் விஜய் நடிப்புதான் எனக்கு சுத்தமா புடிக்கல. stereotypic. பாடல்கள்,எதுக்கு வந்துச்சனே தெர்ல. அதேமாதிரி அருள்நிதி…எக்ஸ்பிரசன் என்பது ஒருவித சாப்பிடும் பட்சணம் அது எங்க கெடைக்கும் என்பது மாதிரி ஒரு முகபாவம்…ஆனா, நீங்க சொன்ன மாதிரி நெறைய காட்சிகளில் அதுதான் அட்டகாசமா பொருந்தி போச்சு.
இந்த படம் தியேட்டரில் ஓடாதது பற்றி…போன ஆட்சில என்ன ஆட்டம் போட்டாங்க. எல்லா தியேட்டரையும் புடிச்சிகிட்டு. நல்லா வேணும் இப்ப. இந்த டைரக்டர் ஏன் இவுங்கிட்ட மாட்டுனாருனு தெரியல. பாவம்…
எனக்கு திரைகதை எழுத உதவி செய்ய முடியுமா..??