Artemis Fowl (2007) – The Graphic Novel
- இதுவரை உலகில் வாழ்ந்து மறைந்தவர்களில், வுல்ஃப் கேங் அமேதியுஸ் மோட்ஸார்ட்டுக்கே மூளையின் வீச்சு அதிகம். அதாவது, அவர் ஒரு ஜீனியஸ்.
- தற்சமயம் உலகில் வாழ்ந்துவரும் மனிதர்களில், மோட்ஸார்ட்டுக்கு இணை என்று சொல்லும்படியான மூளை, ஒரே ஒரு மனிதனுக்கே உள்ளது. அதாவது, அவனும் ஒரு ஜீனியஸ்.
- அந்த மனிதன், ஒரு கிரிமினல்.
இப்படியொரு ஒன்லைன் நமக்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை வைத்து, எப்படியெல்லாம் சிந்திக்க முடியும்?
ஐரிஷ் நாவலாசிரியர் இயோய்ன் கோல்ஃபர் (Eoin Colfer) என்பவரின் மண்டையில் உதித்த இந்தக் கருவின் காரணமாக, இதுவரை ஏழு நாவல்களை எழுதித் தள்ளிவிட்டார். அந்த ஏழுமே பெஸ்ட் செல்லர்கள். மேலே சொல்லப்பட்டுள்ள மனிதன் தான் இந்தக் கதைகளின் கதாநாயகன். ஆனால், அவனே இக்கதைகளின் வில்லனும் கூட.
அவனது பெயர்: ஆர்டெமிஸ் ஃபௌல்.
சுருக்கமாக, உலகின் மிகப்பெரிய குற்ற சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த ஆர்டெமிஸ் ஃபௌல் என்பவர், ரஷ்யாவிலும் தனது சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க விரும்பி, ஒரு கடல் பயணம் மேற்கொள்வதில் நமது கதை தொடங்குகிறது. ரஷ்ய மாஃபியா, இவரது வருகையினால் கடுப்பாகி, ஒரு ஏவுகணை மூலம் இவரது கப்பலைத் தகர்க்க, ஆர்டெமிஸ் ஃபௌல் என்னவானார் என்பதே மர்மமாக விளங்குகிறது. இந்த நிலையில், தனது தந்தையின் சாம்ராஜ்யம் அழிவதைத் தடுக்க, தலைமைப் பொறுப்பை ஏற்கிறான் ஆர்டெமிஸ் ஃபௌல் ஜூனியர். இவன்தான் நாம் மேலே குறிப்பிட்ட ஜீனியஸ்.
ஆர்டெமிஸ் ஃபௌலின் வயது: பனிரண்டு.
இப்படிப்பட்டதொரு prologue முடிந்து, இந்த சீரீஸின் முதல் நாவல் தொடங்குகிறது. இந்த நாவல், ஒரு கிராஃபிக் நாவலாகவும் வந்துள்ளது. பொதுவாக, என் முன் ஒரு நாவலும், அதன் காமிக்ஸ் வடிவமும் வைக்கப்பட்டால், காமிக்ஸையே படிக்க விரும்புவேன். ஒரு திரைப்படத்தின் ஸ்டோரி போர்டைப்போல, இந்தக் காமிக்ஸும், கதையின் போக்கைப் பல ஆங்கிள்களில் நமக்கு வெளிப்படுத்தும் என்பதே காரணம். நாவலைப் படித்தால் அது ஒருவித கற்பனையை ஏற்படுத்தும். ஆனால், காமிக்ஸ் ஏற்படுத்தும் முற்றிலும் வேறான கற்பனை, எனக்குப் பிடிக்கும். கதையில், அச்சயமயத்தில் நிகழும் ஆங்கிளைக் கூட காமிக்ஸில் நாம் காணமுடியும். இது, அந்தக் குறிப்பிட்ட காட்சியைப் பற்றிய அருமையான ஒரு புரிதலை எனக்கு ஏற்படுத்தும் என்பதால், காமிக்ஸாக மாற்றப்பட்டுள்ள நாவலையே விரும்புவேன் (ஆனால், அதே சமயத்தில், அது ஒரு தரமான காமிக்ஸ் படைப்பாக இருக்க வேண்டும். மாடஸ்டியை ‘மாடஸ்தி’ என்று மாற்றி, ஜிகினா வேலை செய்ததைப்போல் இருக்கக்கூடாது).
ஆர்டெமிஸ் ஃபௌல் நாவல் வரிசையின் முதல் நாவலான ‘ஆர்டெமிஸ் ஃபௌல்’, 2007 ம் வருடம், கிராஃபிக் நாவலாக மாற்றப்பட்டது. நூற்றிருபத்தெட்டு பக்கங்களில், மிகத்தரமான பதிப்பாக வெளிவந்துள்ளது. இதுதான் இன்றைய கட்டுரையின் கரு. இக்கதை, ஆர்டெமிஸ் ஃபௌல் ஜூனியரின் முதல் குற்றவியல் சம்பவத்தை நமக்குச் சொல்கிறது. அதற்கு முன், இக்கதையின் பிரதான பாத்திரங்களைப் பார்த்து விடலாம்.
ஆர்டெமிஸ் ஃபௌல்: இவன்தான் இக்கதையின் கதாநாயகன். பன்னிரண்டு வயது சிறுவன். ஆனால், உலகிலேயே சிறந்த மூளை வீச்சைக் கொண்டவன். ஜீனியஸ். எதுவாக இருந்தாலும் டக்கென்று புரிந்துகொள்ளும் இவனது இயல்பே, இனிவரப்போகும் பல இடர்களிலிருந்து இவனைக் காக்கப்போகிறது. ஆனால், இவனது மனம், இருண்டதொரு குற்றவியல் குகையாக இருக்கிறது (இவனைப் பற்றிப் படிக்கையில், நமது ‘ஸ்பைடரைப்’ பற்றிய சிந்தனையும் என் மனதில் ஓடியது. அவனுமே இப்படி இருந்தவன் தானே? ).
பட்லர் : ஆர்டெமிஸ் ஃபௌலின் வலதுகரம். விசுவாசமிக்க பணியாள் / அடியாள். பல நூற்றாண்டு காலமாக, பட்லரின் குடும்பம், ஆர்டெமிஸ் ஃபௌல் குடும்பத்தாருக்கு விசுவாசமாக இருந்துவருகிறது. ஆர்டெமிஸ் ஃபௌல் என்ன சொன்னாலும் செய்யும் அளவு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவன் பட்லர். (இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிப் படிக்கையில், மர்ம மனிதன் மார்ட்டினும், அவரது அடியாளும் நினைவு வந்தனர்).
ஏஞ்சலின் ஃபௌல்: ஆர்டெமிஸ் ஃபௌல் ஜூனியரின் தாய். ஏஞ்சலீனின் கணவர் ஆர்டெமிஸ் ஃபௌல் சீனியர் தொலைந்துபோனபின், மனநிலை பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே காலத்தைக் கழித்து வருபவர்.
ஜூலியட் பட்லர் : பட்லரின் தங்கை. ஆர்டெமிஸை விடவும் நான்கு வயது பெரியவள். பட்லர் பாசம் வைத்திருக்கும் ஒரே ஜீவன். ஆர்டெமிஸ் ஃபௌலின் வீட்டில் வாழ்ந்துவருபவள்.
இந்த உலகில், மனிதர்களாகிய நம்மைத் தவிரவும், வேறு பல ஜீவராசிகளும் வாழ்ந்து வருகின்றன. இவர்களில், மனிதனைவிட ஆற்றலிலும் மூளையிலும் பலம் வாய்ந்த தேவதைகளும் அடக்கம். இந்த தேவதைகள், ‘Fairies’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தத் தேவதைகளின் வேதமாகக் கருதப்படும் புத்தகம் ஒன்று உண்டு. அந்தப் புத்தகத்தில், இந்த தேவதைகளின் செயல்பாடுகள் முழுக்கவும் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. அப்புத்தகத்தில் இருக்கும் விதிகளுக்கு உட்பட்டவர்கள் இந்தத் தேவதைகள். அந்த விதிகளைத் தாண்டி, இவர்களால் எதுவும் செய்ய இயலாது. அந்தப் புத்தகத்தின் பெயர், ‘The Book of the People ‘. தனது தந்தை இல்லாத இந்த நேரத்தில், அவரது குற்ற சாம்ராஜ்யத்தைப் பெருக்கப் பணம் தேவை என்பதை உணரும் ஆர்டெமிஸ், இந்தத் தேவதைகளில் ஒன்றைக் கடத்திவந்து, பணயமாகத் தேவதைகள் பாதுகாத்துவரும் தங்கக் கட்டிகளைப் பெறத் திட்டமிடுகிறான். ஆனால், அதற்கு முதலில் இந்தப் புத்தகத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின்தான் தேவதைகளில் ஒன்றைக் கடத்த முடியும். ஆகவே, பல மாத முயற்சிகளுக்குப் பிறகு, அப்புத்தகம், ஹோசிமின் சிடியில், மிக வயதான ஒரு தேவதையிடம் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்டெமிஸ், பட்லரோடு அங்கே பயணமாவதே முதல் அத்தியாயம்.
அங்கே சென்று அப்புத்தகத்தைக் கைப்பற்றும் ஃபௌல், அதன்பின், ஹாலி ஷார்ட் என்ற பெண் தேவதையைப் பிடித்துவிடுகிறான். அதன்பின், அந்த தேவதைகளின் குழுமம், இதனை உணர்ந்து, ஹாலியைக் காப்பாற்ற முயல, அவர்களது ஒவ்வொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்கும் ஆர்டெமிஸின் சாதுர்யமே மீதிக்கதை. சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு cat & mouse game . ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்போது ஆர்டெமிஸ் யோசிக்கும் விதம், என்னைக் கவர்ந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் போலவே சிந்திக்கிறான் ஆர்டெமிஸ். தேர்ந்த சதுரங்க வீரனைப் போல் எதிராளியின் ஒவ்வொரு காய்நகர்த்தலுக்கும் பதிலடி கொப்பதில் கைதேர்ந்தவன் அவன் என்று கதையில் சித்தரிக்கப்படுகிறது.
இந்தக் கதையில், மேலே சொல்லப்பட்ட கதாபாத்திரங்களைத் தவிர, வேறு சில சுவாரஸ்யமான பாத்திரங்களும் உண்டு. ஹாலியின் தலைவராக, கமாண்டர் ஜூலியஸ் ரூட். அதேபோல், மல்ச் டிக்கம்ஸ் என்ற பெயரில் ஒரு காமெடி கதாபாத்திரமும் உண்டு.
இந்த கிராஃபிக் நாவல், சுவாரஸ்யமாகவே சென்றது. படங்கள், மிக அருமையானதொரு முறையில் வரையப்பட்டிருக்கின்றன. சட் சட்டென்ற திருப்பங்கள், அவற்றை இந்தக் காமிக்ஸில் கொண்டு சென்றிருக்கும் விதம் ஆகியவை, எனக்குப் பிடித்தது. இருநூறே ரூபாய் விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
அதனை வாங்க இங்கே கிளிக்கவும்.
காமிக்ஸைப் படிக்க இஷ்டமில்லாத நண்பர்கள், இந்த நாவல் வரிசையையும் படிக்கலாம். இதுவரை ஏழு நாவல்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு காமிக்ஸ்கள்தான் வந்திருக்கின்றன.
வந்தோம்ல பஸ்ட்
nice….
இது கலர் காமிக்ஸா…இல்ல கறுப்பு வெள்ளையா…?
This comment has been removed by the author.
IDHA ENAKKU APPIDYE COURIER PANNIRU..SERIYA?
podhuvaave nan cbr format la padikren.. no buying yet. unga punniyathila niraya comic padikren.. XIII, Blueberry… inum supply panunga… BTW, recently read ‘Largo Winch’ – XIII author Jean Van Damme. was good. try it
Great.. Pappu is still alive
தேளு,சும்மா டாப் கியர் போட்டு துக்குங்க……:)
Just now I finshed both ones. Thanks for the good suggestion. Have you tried Witch Blade series? Try them.
@ லக்கி – அவ்வ்வ்வவ் 🙂
@ தேவைகளற்றவனின் அடிமை – உங்க பேரே நல்லா இருக்கே 🙂
@ யோஜிம்போ – இது கட்டாயம் லயன் காமிக்ஸ் இல்லை. ஆகவே கலர்தான் 🙂
@ ஜெமினிதாசன்- ஹாஹ்ஹா 🙂
@ பாலு – போடா வெண்ணை. மொதல்ல என்னோட டிவிடிஎல்லாம் எடுத்து வெய்யி. அப்புறம் பார்க்கலாம் 🙂
@ பப்பு – பரவாயில்லையே.. காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க. இன்னும் நெறைய காமிக்ஸ் இருக்கு. ஒண்ணொண்ணா அவைகள் பத்தி சொல்றேன். லார்கோ வின்ச் படிச்சாச்சு …. எனக்குப் புடிக்கும் 🙂 .. கீழ பாருங்க.. பாலா ஏதோ கமென்ட் போட்ருக்காரு 🙂
@ எனக்குப் பிடித்தது – ஹாஹ்ஹா 🙂 .. தூக்கிரலாம் பாஸ் 🙂
@ Sugu – Witch Blade ? இன்னும் இல்லை. உடனடியா புடிக்கிறேன். மிக்க நன்றி