என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் – 3

by Karundhel Rajesh December 23, 2012   Social issues

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்-2’ என்ற கட்டுரையை எழுதினேன். சென்னையில் ஒரு பள்ளியின் நீச்சல் பயிற்சியில் மாணவன் ஒருவன் பலியான சம்பவம் என் மனதை பாதித்ததால். அதன்பின் பல கொடூரமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் இப்போது வேறு வழியின்றி இந்தத் தலைப்பின்கீழ் மூன்றாவது கட்டுரையை எழுதும் அவலத்தை எண்ணி வருந்திக்கொண்டே இதனை எழுதுகிறேன்.

 

இந்தக் கட்டுரையின் காரணம் – தில்லியில் நடந்த கொடூரம்.

அதற்கு முன்னர் – ஒரு புள்ளி விபரம். கடந்த 2004யிலிருந்து 2011 வரை இந்தியாவில் ரேப் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இதோ (இது – புகார் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை மட்டுமே). விகிபீடியாவிலிருந்து.

2004 – 18233
2005 – 18359
2006 – 19348
2007 – 20737
2008 – 21467
2009 – 21397
2010 – 22172
2011 – 23582

இதுபற்றி நான் சொல்ல நினைப்பது எதுவுமே இல்லை. இந்த எண்களே போதும். என்னதான் புகார் செய்யப்பட்ட எண்ணிக்கை இது என்றாலும் (புகார் செய்யப்படாதது இதுபோல் இன்னும் அதிகமாக இருக்கும் என்றாலும்), எந்த நாட்டிலுமே இது ஒரு குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கை தான். ஒரே ஒரு ரேப் நடந்திருந்தாலும் அது குற்றமே.

இதுபற்றி என் கருத்துகளை இங்கே சொல்ல நினைக்கிறேன்.

அதற்கு முன், சமஸ்கிருதத்தில் ‘பூர்வபக்‌ஷம்’ & ‘ஸ்வபக்‌ஷம்’ என்ற சொற்கள் உண்டு. இது தர்க்க சாஸ்திரம். அதாவது, ஒரு கருத்தை எதிர்க்கவேண்டும் என்றால், மொட்டையான வாதம் புரிவதற்குமுன்னர் அந்தக் கருத்தை முற்றிலும் தெரிந்துகொள்வதே இது. காரணம் எளிது. எந்த விஷயத்தையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்கு முன், அந்த விஷயத்தை ஆதி முதல் அந்தம் வரை தெரிந்துகொண்டுவிட்டால் அதன்பின் அதை எதிர்ப்பது சுலபம். அந்த விஷயத்தைப்பற்றி எத்தனை பேர் ஆதரவாகப் பேசினாலும் அதை உடைத்துவிடலாம். இப்படி ஒரு கருத்துக்கு ஆதரவாகப் பேசுவது பூர்வபக்‌ஷம். அதை தெரிந்துகொண்டு உடைப்பது ஸ்வபக்‌ஷம்.இதைப்பற்றி எழுத நிறைய உண்டு என்றாலும் இது தர்க்க சாஸ்த்ரத்தைப் பற்றிய கட்டுரை இல்லை என்பதால் மேலே செல்லலாம்.

முதலில் பூர்வபக்‌ஷம். அதாவது – எத்தனை கொடிய குற்றம் புரிந்திருந்தாலும் மரண தண்டனை கூடாது என்ற கருத்து.

ஏன்?

இந்தியாவில் மரண தண்டனை கூடாது என்பது பற்றி பல வாதங்கள் உண்டு. இந்த வாதங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

1. மரணதண்டனை காட்டுமிராண்டித்தனமானது.
2. உயிரைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை.
3. மரணதண்டனை என்பது கொடூரமான தண்டனை.
4. மரணதண்டனையினால் அப்பாவிகள் மரணமடையக்கூடும்.
5. மரணதண்டனை பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுவிட்டது.
6. இன்னபிற காரணங்கள் (எதுவாக இருந்தாலும்).

ஓகே. இப்போது எனது ஸ்வபக்‌ஷம்.

மரணதண்டனை காட்டுமிராண்டித்தனமானது என்பதுபற்றி – இது என்னால் ஒப்புக்கொள்ளமுடியாத கருத்து. உலகம் முழுக்க பல நாடுகளின் சட்டங்களில் இருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால், குற்றம் புரிந்தால் தண்டனை என்பது. என்னென்ன குற்றத்துக்கு எந்தெந்த தண்டனை என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். ஆனால் – என் மனதில் இருக்கும் ஒரு விஷயம் என்னவெனில், குற்றத்தின் அளவைப் பொறுத்து தண்டனையின் அளவும் இருக்கவேண்டும் என்பதே. இதற்கு என் மனம் சொல்லும் காரணம் – இந்தியா இன்னமும் வளரவேண்டி இருக்கிறது. இங்கே இன்னமும் பெரும்பாலான மனிதர்கள் (என்னையும் சேர்த்துத்தான்) பிறரது வட்டத்திற்குள் மூக்கை நுழைப்பதை தவறாகவே எண்ணாமல் அது ஏதோ நமது பிறப்புரிமை போல வாழ்ந்துவருகிறார்கள். உதாரணமாக, நம்மில் எத்தனைபேர் நமது வீடுகளில் வசிக்கும்போது பக்கத்து வீட்டுக்காரருக்கு இன்னல் ஏற்படாதவண்ணம் வசிக்கிறோம்? சத்தமாக தொலைக்காட்சியை பார்ப்பது முதல், நமது நாயை பக்கத்துவீட்டின்முன்னர் கழிய வைப்பது, பக்கத்து அபார்ட்மெண்ட் ஓனரின் பார்க்கிங்கில் நமது வண்டியை கொஞ்சம் கோட்டைத்தாண்டி நிறுத்துவது, நமது தளத்தில் நள்ளிரவில் நாற்காலியை டர்ர்ர்ர்ர்ர்ரென்று இழுத்து கீழ்த்தளத்தில் இருப்பவர்களின் தூக்கத்தைக் கலைப்பது, ஒரு சிறிய விஷயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் எதாவது செய்தால் இரட்டிப்பாக பதிலுக்கு வீம்பாக செய்வது – என எக்கச்சக்க விஷயங்களில் உரிமைகளை நமது இஷ்டத்துக்கு மீறிக்கொண்டேதான் இதுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதற்கு ஒருவர் கூட விதிவிலக்கு இல்லை.

இதேபோல் ட்ராஃபிக்கில் எத்தனை சுலபமாக நமக்குக் கோபம் வருகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரே ஒரு ஆள் நமது இடதுபுறத்தில் ஓவர்டேக் செய்தால் எத்தனை கொலைவெறியுடன் அவரது வண்டியைத் துரத்தி அவரை ஓவர்டேக் செய்து திருப்தி அடைந்திருக்கிறோம்? நமது வாழ்க்கையில் நாம் அடைந்த உச்சபட்ச கோபம், எப்போதுமே ட்ராஃபிக்கில் வண்டி ஓட்டும்போது அமைவது ஏன்? ஒரே ஒரு டூவீலர் நமது வண்டியில் மிக மிக லேசாக உரசும்போதுகூட வண்டியை நிறுத்தி அரைமணிநேரம் காட்டுக்கத்தல் கத்தியிருக்கிறோம் அல்லவா? இதனால் யாருக்கு என்ன லாபம்? மிக எளிதாக இந்தப் பிரச்னையை தீர்த்திருக்கலாம் என்றாலும் நமது ஈகோவை திருப்திப்படுத்த எத்தனை முறை இப்படி பொறுமை இழந்திருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள்.

வரிசைகளில் நிற்கும்போது பிறரைப்பற்றி என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா? எந்த வரிசையாக இருந்தாலும் சரி- டக்கென்று முன்னால் சென்று வேலையை முடித்துக்கொள்ளவேண்டும் என்று நமக்கு எப்போதும் தோன்றுவதன் உளவியல் என்ன? திரையரங்குகளில் அமைதியாக எல்லாரும் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது உப்புப்பெறாத விஷயத்தை வலுக்கட்டாயமாக செல்ஃபோனில் சத்தமாகப் பேச நமக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள்? ரயிலில் நள்ளிரவு இரண்டு மணிக்கு நாம் ஏறும்போது, சரியாக நமது ஸீட்டின் எண்ணைப் பார்க்காமல், இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் யாரோ ஒரு மனிதரை உலுக்கி எழுப்பி, ‘உங்க ஸீட் நம்பர் என்ன?’ என்று அதிகாரமாகக் கேட்க நாம் எப்படிப் பழகினோம்? சூப்பர் மார்க்கெட்களிலும் இன்னபிற கடைகளிலும் கௌண்ட்டரில் யாராவது நின்றுகொண்டிருந்தாலும், கையில் பில்லை வைத்துக்கொண்டு அவருக்குப் பக்கத்தில் கௌண்ட்டரின்மீது முழங்கையை ஊன்றி அந்த பில்லை கௌண்ட்டரின் மறுபுறம் அமர்ந்திருக்கும் ஊழியரின் முகத்தில் இடிப்பதுபோல் நீட்டி, ‘நம்ம பில் ஐம்பது ரூபா’ என்று நிமிடத்துக்கு ஒருமுறை உரக்கப் பேசும் உளவியல் என்ன? இதனால் நமக்கு முன்னர் கௌண்ட்டரில் இன்றுகொண்டிருக்கும் மனிதருக்கு நாம் பிரச்னை விளைவிக்கிறோம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே ஏன் இப்படிச் செய்கிறோம்? ஆனால், இப்படி நடந்துகொள்ளும் நாம்தான், நமக்கு முன்னர் யாராவது கௌண்ட்டரின் பக்கம் சென்றால் கூட பொறுமையிழந்து கத்தவும் செய்கிறோம். நமக்கு வந்தால் ரத்தம். பிறருக்கு என்றால் அது எப்போதும் தக்காளி சட்னிதான்.

மிக எளிமையாக சொல்லவேண்டும் என்றால், அடுத்தவர்களைப் பற்றி எப்போதும் கவலையே படாத நபர்களாகவே இந்தியர்களாகிய நாம் இதுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது இந்தியாவின் இயல்பாகவே படுகிறது. ஒரு மாநிலம் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதுதான் நான் அவதானித்தவரையில் இந்தியாவின் இயல்பாக இருக்கிறது. இந்த தடித்தனத்தாலேயே பிற நாடுகளுக்குச் செல்லும்போது அடி வாங்குகிறோம். ஏனெனில் நாம் வேலை நிமித்தம் செல்லும் நாடுகள் அமெரிக்காவாகவோ ஐரோப்பாவாகவோதான் பெரும்பாலும் இருக்கின்றன. அவர்கள் நாகரிகத்திலும் பழகும் முறையிலும் நம்மைவிட பல படிகள் முன்னேறியவர்கள். சக மனிதனைக் கடந்துசெல்லும்போது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நேராகப் பார்த்து நடக்கும் இந்திய இயல்பு இல்லாமல், மிக எளிதாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு செல்லக்கூடியவர்கள்.

நமது பிரச்னைகளைத்தவிர வேறு விஷயங்களில் கவலையே படாமல்தான் இதுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அடுத்தவன் என்ன ஆனாலும் சரி, எனக்கு என் வேலை ஆகவேண்டும் என்பதே நம் motto. மெச்சூரிட்டி என்பது இந்தியர்களாகிய நமக்கு குறைவாகவே இருக்கிறது.

இதன் நீட்சிதான் ’இந்திய கலாச்சாரம்’ என்று நமது பிறவியிலிருந்தே கற்பிக்கப்படும் விஷயம். இந்தியாவின் ஒவ்வொரு ஜாதியும், ஒவ்வொரு மதமும் – ‘நாம்தான் பெரியவர்; நமது ஜாதியோ மதமோதான் சிறந்தது; நமது ஜாதிப்படியும் மதப்படியும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்றேதான் கற்பிக்கிறது. ஒரு உதாரணத்துக்கு, ராமன் என்ற மனிதனால் உளவியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டாலும், ’சீதை என்ற பெண் அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு சிறந்த மனைவியாக விளங்கினாள்’ என்றே ராமாயணம் சொல்கிறது. இப்படி ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு ஜாதியிலும் பல கதைகள் உண்டு. இந்த எல்லாக் கதைகளிலும் பெண் என்பவள் அடக்கி ஆளப்பட்டு ஆணாதிக்க சித்ரவதைகளை அனுபவித்தே வளர்ந்திருக்கிறாள். கண்ணகியின் கதையும் இப்படிப்பட்டதே.

இந்தக் கதைகளை சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்ந்த சராசரி இந்தியர்களாகிய (மெச்சூரிட்டி இல்லாத) நமக்கு, பெண்களைப் பற்றிய மதிப்பீடுகள் எந்த விதத்தில் இருக்கும் என்பதும் மிக எளிதாக விளங்கும் விஷயம்தான். இழுத்துப் போர்த்திக்கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைபட்டு வாழும் பெண் தான் பத்தினி என்பதுதான் அது. அதேபோல், சராசரி இந்தியர்களாகிய நமக்கு, டிஷர்ட், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் உடைகள் அணிந்து சுதந்திரமாக நடமாடும் பெண் என்பவள் சைட் அடிக்கவும், ஆபாசமான கமெண்ட்கள் பேசவும்தானே இன்றுவரை ‘லாயக்காக’ இருக்கிறாள்? நம்மில் எத்தனை பேர் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றபோது ‘ஹிஹி.. நல்ல ஹோம்லியா ஒரு பொண்ணு பாருங்கப்பா..’ என்று மனதில் இருக்கும் அந்த ‘பத்தினி’ பிம்பத்தை பிற பெண்களின்மேல் சுமத்தி இருக்கிறோம்? அதேபோல், எங்காவது வெளியில் செல்லும்போது அல்லது அலுவலகத்தில், இப்படி மாடர்ன் உடையணிந்துவரும் பெண்களைப்பற்றி எப்படியெல்லாம் பேசி இருக்கிறோம்?

இந்தப் ‘பத்தினி’ பிம்பம் இந்திய ஆண்கள் அத்தனை பேரின் மனதிலும் இருக்கிறது.

ஆனால், நம்மில் பலபேர் அட்லீஸ்ட் கல்லூரியில் பேஸிக் டிகிரி ஒன்றைப் படித்துத் தொலைத்திருப்பதால், இந்த எண்ணங்களை மனதில் மட்டும் வைத்துக்கொண்டு, வெளியில் பெரிய உலக அறிவாளி போல பெருந்தன்மையாக நடிக்கும் ஒரு பிம்பத்தை வைத்துக்கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறோம். நமது உண்மையான குணத்தைப்பற்றி அறிய, வீட்டில் இருக்கும் மனைவிகளிடம் கேட்டாலே போதுமானது. நமது ஆணாதிக்க முட்டாள்தனத்தைப்பற்றி பல உண்மைக்கதைகள் அவர்களிடம் இருக்கின்றன. நமது மனைவிகள் அவர்களது ஆண் நண்பர்களிடம் பேசுவதற்கு எந்தத் தடையும் விதிக்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? (’அனுமதி அளிப்பவர்கள்’ என்று சொல்லமாட்டேன். காரணம், நமக்கு திருமண வாழ்வில் எத்தனை உரிமை இருக்கிறதோ அத்தனை உரிமை நமது மனைவிகளுக்கும் இருக்கிறது). நாம் மட்டும் எப்போது வேண்டுமானாலும் நமது பெண் தோழிகளிடம் பேசலாம்; ஆனால் அவர்கள் பேசினால் கொலைதான்.

இதுதான் இந்தியாவில் இரவில் பெண்கள் நடமாடமுடியாததற்குத் தலையாய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதேதான் கற்பழிப்புகளுக்கும் காரணம். ‘இந்த நேரத்தில் ஆண் நண்பர்களுடன் எப்படி ஒரு பெண் நடமாடலாம்? அப்படி நடமாடினால் அவள் ஒரு விலைமாதுதான். ஆகவே அவளிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம்’ என்றுதான் குற்றவாளிகளின் மனம் சிந்திக்கிறது.

சென்றவாரம் தில்லியில் நடைபெற்ற குற்றம் அத்தகையதே.

‘இந்தியக் கலாச்சாரம்’ என்ற முட்டாள்தனமான விஷயம் செய்துவைத்திருக்கும் எண்ணற்ற குற்றங்களில் இது தலையாய ஒன்று. அதேசமயம், குழந்தைகளைக் கூட ரேப் செய்து கொல்லும் சைக்கோ கொடூரங்கள் உள்ளன. எனது கோவையில் ஒன்றரை வருடங்கள் முன்னர் நடந்தது போல.

இப்போது, கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் கவனிக்கத் துவங்கிய மரண தண்டனை விவகாரம் பற்றி. இந்த தில்லி கொடூரத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கலாமா? கொடுக்கவேண்டும் என்றே பல அமைப்புகள் போராடிவருகின்றன. அதைப்பற்றிப் பார்க்குமுன், ஓரிரு வரிகள். இந்த வரிகளை குறிப்பாக இளகிய மனம் படைத்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள.

தில்லியில் ரேப் செய்யப்பட்டபின் அந்தப் பெண்ணின் யோனியில் இரும்புக் கம்பியை இந்தக் கயவர்கள் நுழைத்திருக்கிறார்கள். இதனாலேயே அந்தப் பெண்ணின் குடல் காங்ரின் அபாயத்தால் அகற்றப்பட்டுள்ளது. இணையத்தில் இந்தச் செய்தியைப் படித்தேன். கூடவே, ரேப் செய்தபின் எப்படியெல்லாம் திட்டம் போட்டு அந்தப் பெண்ணை கடாசிவிட்டு வண்டியை க்ளீன் செய்து ஓனரிடம் நல்லவன் போல் மறுநாள் வண்டியை அந்த ட்ரைவர் விட்டிருக்கிறான் என்பதைப் படித்துப்பாருங்கள்.

சரி. இப்படிப்பட்ட குற்றத்தை செய்த கயவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாமா?

அவசியம் வேண்டாம். மரணதண்டனை காட்டுமிராண்டித்தனமானது ஆயிற்றே?

ஆம். அதற்குப்பதில், அந்தக் கயவர்கள் செய்த அதே குற்றத்தை அவர்களுக்கு செய்யலாம். செய்யவேண்டும். துருப்பிடித்த ஒரு இரும்புக்கம்பியை எடுத்து அவர்களது உறுப்பை வெட்டியபின் அந்த இடத்தில் நுழைத்து நான்கைந்து தடவைகள் சுழற்றவேண்டும். அதன்பின்னரும் உயிர் போகாமல் இருந்தால், அவர்களது உடலின் ஒவ்வொரு ஓட்டையிலும் அதே கம்பியை நுழைத்து சுழற்றவேண்டும். இதுவே நான் விரும்பும் தண்டனை. மரணதண்டனை அளித்தல் தவறு. அது ஒழுங்கின்மை. கொலைகாரத்தனமானது. அதுதான் பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுவிட்டதே?

ஒவ்வொரு முறை யாராவது தூக்கில் போடப்படும்போதும் இந்த ’மரணதண்டனை வேண்டாம்’ பிரச்னை பெரிதாக விவாதிக்கப்படுவதைக் காண்கிறேன். இந்தியா போன்ற ஒரு முழுதாக முதிர்ச்சியடையாத நாட்டில் மரணதண்டனை வேண்டாம் என்பது கேலிக்குரிய விஷயம்தான். காரணம் இங்கே அனுதினமும் நடைபெறும் கொடூரங்கள். இத்தனைக்கும், நண்பர் அராத்து சொன்னார் – கடந்த பல வருடங்களில் எத்தனை பேர் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், மொத்தம் மூன்றே பேர்கள்தான். ஆனால், அவர்கள் செய்த குற்றங்கள் எப்படிப்பட்டவை? 1995ல் இருந்து, ஆட்டோ சங்கர், தனஞ்சோய் சாட்டர்ஜி மற்றும் அஜ்மல் கஸப் ஆகிய மூவர் மட்டுமே தூக்கில் இடப்பட்டிருக்கின்றனர்.

எனவே, தேய்ந்த டேப்ரிகார்டர் போல ‘தூக்கு வேண்டாம்’ என்றூ கூக்குரல் இட என்னால் முடியாது. மரணதண்டனை அவசியம் தேவைப்படும் நாடுகளில் இந்தியா ஒன்று. அதிலும் இதுபோன்ற கொடூரங்களுக்கு மரணதண்டனை மட்டுமே கொஞ்சமாவது நியாயம் அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கடைசியாக, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாக்யராஜ் பேசும் வசனம் ஒன்று. இதைவிட இயல்பாக வேறெந்த ஆர்க்யுமெண்ட்டும் நான் கேட்டதில்லை. இதுதான் எனது சார்புநிலை. இந்த க்ளிப்பின் இறுதியை கவனியுங்கள் – 11:06ல் இருந்து.

‘தனக்கு வந்தாதாய்யா தெரியும் எதுவுமே’.

  Comments

28 Comments

  1. Sivaraman

    துருப்பிடித்த ஒரு இரும்புக்கம்பியை எடுத்து அவர்களது உறுப்பை வெட்டியபின் அந்த இடத்தில் நுழைத்து நான்கைந்து தடவைகள் சுழற்றவேண்டும். அதன்பின்னரும் உயிர் போகாமல் இருந்தால், அவர்களது உடலின் ஒவ்வொரு ஓட்டையிலும் அதே கம்பியை நுழைத்து சுழற்றவேண்டும். இதுவே நான் விரும்பும் தண்டனை..Ithu than naan virumbum thandanaiyum….because மரணதண்டனை காட்டுமிராண்டித்தனமானது

    Reply
  2. thiruvenkadam

    மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள். உள்ளே நுழைக்கும் அந்த கம்பியை நன்கு பழுக்க காய்ச்சி உள்ளே நுழைக்க வேண்டும். இதையும் பொதுவில் வைத்து செய்ய வேண்டும் .

    Reply
  3. Rajasekaran Thiyagarajan

    அவர்கள் நாகரிகத்திலும் பழகும் முறையிலும் நம்மைவிட பல படிகள் முன்னேறியவர்கள். சக மனிதனைக் கடந்துசெல்லும்போது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நேராகப் பார்த்து நடக்கும் இந்திய இயல்பு இல்லாமல், மிக எளிதாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு செல்லக்கூடியவர்கள்.- Good .i Like these lines. I appreciate your status on Punishment for this crime.

    Reply
  4. குற்றத்தின் அளவைப் பொறுத்து தண்டனையின் அளவும் இருக்க வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு சரி. மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பேரில் வெற்றுத்தனமாகக் கூச்சல் போட்டு பாதிக்கப் பட்டவனின் உரிமையை மட்டும் மறுக்கும் தவறைச் செய்து ’அவரா…? அவரு மனித உரிமைகள ரொம்ப மதிக்கிற ஆளாச்சே’ என்றெல்லாம் பேர் வாங்க எந்தத் தேவையுமில்லை.

    மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என வரையறுக்கும் ‘மனித’ உரிமை ஆர்வலர்கள் சொல்ல வேண்டும் – மிருகங்களுக்கு இந்தப் பாகுபாடு பொருந்துமா என்பதை!

    பாதிக்கப்பட்டவன் மன்னித்தாலேயன்றி இம்மிருகங்களை (வேண்டுமானால், வலிக்காத அளவுக்கு) அறுத்துப் பலியிட வேண்டும். இல்லை, மரண தண்டனை வேண்டாம் என ஒரு தேசம் முடிவெடுக்குமாயின், நீங்கள் சொன்னது மாதிரி கம்பியை விட்டுக் குடையத் தேவையெல்லாம் இல்லை. ஆணுறுப்பை மாத்திரம் அறுத்துவிட்டு நடமாட விடுவது சிறந்தது.

    டெல்லி சம்பவம் குறித்து, உணர்ச்சிவசப்பட்ட மன நிலையில் எழுதப்பட்ட பதிவுகளையும் மரண தண்டனைக்கு எதிரான மனிதாபிகளின் கள்ள மௌனத்தையும் பார்த்தேன். ஆனால், உங்கள் பதிவு, உணர்ச்சி வசப்படாமலும் அதே சமயம் இதுதான் மனிதாபிமானம் நிரம்பிய ஒன்றாகவும் எனக்குப் படுகிறது.

    ஒரு சினிமா விமர்சனம் என்றால் அரக்கப் பறக்க ஓடிவந்து ‘மீ த ஃப்ர்ஸ்ட்டு’ கமெண்ட் போடும் நண்பர்கள் இப்படியான ஒரு பதிவுக்குக் கமெண்ட் போட லேட்டாவது ஏன் தல?

    Reply
    • Rajesh Da Scorp

      @shajahan Mohamed – இந்த போஸ்ட்ல சொல்லாம விட்டுப்போனது என்னன்னா, இந்த டெல்லி சம்பவம் ஒண்ணுக்கு மட்டும் எழுதப்பட்ட பதிவு இல்ல இது. நாடு பூரா நடக்குற வன்கொடுமைகள் எல்லாத்தையும் பார்த்துட்டு எழுதுனதுதான். அதை ஃபேஸ்புக்ல சொல்லிட்டேன். உங்க கமெண்டில் நீங்க சொல்லிருக்குற எல்லா பாயிண்டுக்கும் உடன்படுகிறேன்.

      Reply
  5. இந்த மாதிரி ஆளுங்களனா கண்டிப்பா சிக்னல் கம்பத்துள்ளதான் தூக்குல போடணும்,என்னா ஒண்ணு கழுத்துல சுருக்கு போடுரத்துக்கு பதில் அந்த இடத்துல சுருக்கு போட்டு தொங்கவிடனும்

    Reply
  6. இது உங்களின் கருத்து மட்டும் அல்ல ராஜேஷ் உங்களின் பதிவுகளை விடாமல் படித்து வரும் எங்களை போன்றவர்களின் ஆதங்கத்தின் வெளிபாடுதான் உங்களின் இந்த பதிவு .எதனை பேருக்கு தைரியம் இருக்கும்னு எனக்கு தெரியல இந்த மாதரி பதிவு எழுதறத்துக்கு ஹேட்ஸ் ஆப் ராஜேஷ் .கடைசியாக ஒன்று எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அதை பார்த்து உன் உள்ளம் குமுறி நீ பொங்கி எழுந்தால் நீஉம் என் தோழனே -சே குவாரா

    Reply
    • Rajesh Da Scorp

      Yes boss. Thank you for the comment

      Reply
  7. நண்பா.
    என் நெஞ்சக்கொதிப்பை உங்கள் வார்த்தைகளில் பார்த்தேன்,மிக அவசியமான பதிவு,இன்று மெட்ரோ கூட்டத்தில்,ப்பேருந்து ட்ராஃபிக்கில் நல்லவனாக இருக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றேன்.அடிக்கடி இது போன்றவற்றையும் எழுதவேண்டும் நண்பா

    Reply
  8. ம ரண தண்டனை அவசியம் என்பதே என் நிலைப்பாடும்.நம்மால் எல்லாம் வெளியே நடிக்க இயலாது நண்பா

    Reply
  9. கற்பு என்ற ஒரு லேபிள் தேசி பெண்களுக்கு மட்டுமே உரியதாம்,அதற்கு ஆங்கிலத்தில் chastity என மொழிபெயர்த்து வக்கனையாக சொல்லத்தெரிகிறது ஆண்களால்,இதற்கு முற்போக்கு,பிற்போக்கு இடது வலது சாரி யாரும் விதிவிலக்கல்ல,எல்லோரும் சந்தர்ப்பம் வாய்க்கும் வரை யோக்கியர் தாம்,அந்த அரக்கரிடம் மாட்டி சீரழிந்த வாழை நாரைப் பார்த்து போர்திக்கிட்டு போயிருந்தா இப்படி ஆயிருக்குமா?என்று பேசுபவரை என்ன சொல்ல?
    சிலர் ஒரு படி மேலே போய் அந்த நேரத்தில் ஒரு பெண் வெளியே வரலாமா?என்கிறார்கள்.அயோடா

    Reply
  10. இந்தியாவில் பெண்களை கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க கேட்கவில்லை,குறைந்த பட்சம் டேசர்,அல்லது பெப்பர் ஸ்ப்ரேயாவது வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி வழங்குவது அவசியம்.பூனைக்கு யார் மணி கட்டுவது?

    Reply
    • Rajesh Da Scorp

      நண்பா.. பெப்பர் ஸ்ப்ரே இப்போது பல நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது. இரவில் அலுவலக டாக்ஸியில் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பாக வரும் செக்யூரிடிகளிடம் அது அவசியம் இருக்கும். அதேபோல், பெண்கள் இரவில் வரக்கூடாது என்பதில் எனக்கும் உங்களுக்கும் மட்டுமல்ல ; மூளை இருக்கும் பலருக்கும் உடன்பாடு இருக்கவே இருக்காது. அதெல்லாம் இந்த கலாசாரம் அது இது என்று பேசும் மக்களுக்கு மட்டுமே உரித்தானது.

      Reply
  11. உலகில் பெண்கள் மீதான வன்முறைக்கு அளவேயில்லை,இது ஒரு எக்ஸ்ட்ரீம் என்றால்,பெண்ணை யாரும் சிதுபோல சிதைக்கக்கூடாது என்று அவளுக்கு FGM என்னும் பெண்ணுறுப்பு சிதைத்து தைத்தல் என்னும் கொடுமை ஆஃப்ரிக்காவிலும் சுமார் 60சத நாடுகளில் இன்றும் நடை பெற்று வருகிறது.ஏனென்றால் கன்னித்தன்மையுடன் இருக்கும் பெண் தான் திருமண சந்தையில் விலைபோவாளாம்,ஆர்கசம் என்பது பெண்ணுக்கு உரித்தானதில்லையாம்.இதை எந்த உலக கொம்பனாலுமே தடுக்க முடியவில்லை,அற்ப சதவிகிதம் குறைக்கத்தான் முடிந்திருக்கிறது.நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப இக்காட்டுமிராண்டித்தனம் class-a,class-b,class-c என குறைகிறது,

    http://en.wikipedia.org/wiki/Female_genital_mutilation

    Reply
  12. இவ்வாறு அந்த beep பசங்களின் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தும் இந்த சமுதாய நாட்டில் பிறந்த நானும் மன உளச்சலுக்கு ஆளாகிறேன் .எனினும் அந்த பசங்களுக்காக என் மனக்கோட்டையில் உதித்தவை.அவர்களுக்கு இன்ப சொர்கத்தை(மரணம்) காட்ட பெண்ணின் (சென்சார்) போன்று முழுவதும் பிளேடு ஆணி மற்றும் தோலை கிழிக்கும் சின்ன சின்ன துண்டுகளால் ஆன ஒரு பொருள் மூலம் அவர்களுடயதை பெண்சில் சீவுவது போன்று அவர்கள் சொர்கத்தை (சாவை) அடையும் வரை செய்து முடிக்க வேண்டும்.இந்த சட்ட நடைமுறை இந்தியா முழுவதும் அமலுக்கு வரவேண்டும்..

    Reply
  13. Roshma

    அப்படியே இன்டர்நெட் மூலம் இளம் பெண்களிடம் காம சேட்டைகள், பாலியல் வக்கிர சேட்டைகள் செய்யும், குப்பி கொடுத்த எழுத்தாளனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதையும் குறிப்பிடவும்!

    Reply
  14. Roshma

    கரும்தேள் ! இந்த படிப்பறிவில்லா காமுகர்களை விட, பாலியல் வக்கிரத்தை மையப்படுத்தி, மூன்று வயதில் கைமுட்டி அடித்ததையும், இன்ன பிற சாதனைகளையும் வெளிப்படுத்தி, தான் ஒரு செக்ஸ் maco என்பதை பெருமையுடன் கூறித்திரியும், சிறு பெண்களிடம் பாலியல் அத்து மீறல் செய்யும் ஒரு கயவளியை மண்டிபோட்டு ஆதரிக்கும் உங்களை போன்றவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

    Reply
  15. Roshma

    அந்த இரும்பு கம்பியை பத்திரப்படுத்தி வையுங்கள் கருந்தேள்! பின்நவினத்துவ காமாந்தர்களுக்கு தேவைபடலாம்!

    Reply
    • Rajesh Da Scorp

      @Roshma – சில பாயிண்ட்கள் சொல்ல நினைக்கிறேன்.

      1. ஒரு எழுத்தாளனின் எழுத்து இப்படித்தான் இருக்கவேண்டும்; இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற வரையறை இதுவரை யாராலும் எழுதப்படவில்லை. அது தேவையும் இல்லை. சாருவின் எழுத்து எத்தகையது என்பதை அவரே பலமுறை சொல்லியும் இருக்கிறார். உங்களுக்கான பதில் என்னவாக இருக்கும் என்றால் – இந்தக் கட்டுரையில் நான் ஆல்ரெடி எழுதிய வரிகள்தான். இந்திய கலாச்சாரம் என்ற போலியான ஒரு விஷயம், மக்களை எப்படி ப்ரெயின்வாஷ் செய்து வைத்திருக்கிறது என்றால், செக்ஸ் பற்றி எழுதுவதோ படம் எடுப்பதோ விவாதிப்பதோ கயவர்கள் செய்யும் வேலை என்று. நீங்கள் சாருவின் எழுத்து பிடிக்கவில்லை என்று நினைத்தால் அதை ஏன் படிக்கிறீர்கள்? செக்ஸ் மட்டுமல்ல – இன்னமும் சமுதாயத்தில் taboo என்று கருதப்படும் அத்தனை விஷயங்கள் பற்றியும் சாருவை விடவும் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்த பல உலக எழுத்தாளர்கள் உளர். அவை இலக்கியங்களாகவே கருதப்படுகின்றன. உங்கள் பார்வைக்கு இதோ இந்த வலைப்பூ – படித்துப் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Transgressive_fiction.

      2. இவற்றில் பட்டியல் இடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் ஒருவரது புத்தகமாவது படித்தால் இந்த genre பற்றி உங்களுக்குத் தெரியும். இந்தியாவில் செக்ஸ் சார்ந்த விஷயங்களை புத்தகமாக எழுதுபவர்கள் மிக மிக கம்மி. எனக்கு ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது இந்தப் போலி கலாச்சார விதிகள் எல்லாம் மனதில் தோன்றாது. உங்களுக்கும் அப்படியே இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால், நான் அடுத்த கருத்து என்று ஒன்று இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் நீங்களோ ‘வெட்டு..குத்து’ என்று கொலைவெறியோடு பின்னூட்டம் இடுகிறீர்கள். அதுதான் வித்தியாசம்.

      3. ஏன் கொலைவெறி என்று சொன்னேன் என்றால், உங்கள் கமெண்டில் இருக்கும் ‘கயவாளி’, ‘மண்டிபோட்டு’ போன்ற வரிகளில் தெறிக்கும் வன்மம்தான். உண்மையை சொல்லவேண்டும் என்றால், என்னை நேரில் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என் மீது கொலைவெறியோடு பாய அத்தனை முகாந்திரங்களும் உங்கள் கமெண்டில் தென்படுகிறது. ஏன் இந்த கோபம்? பொதுவாகவே இது நான் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். அதாவது, சாருவின் நண்பன் என்பதாலேயே என்னை அடியோடு வெறுக்கும் தன்மை. இது ஏன்? நான் என்ன உங்களது சொத்தை ஆட்டையை போட்டேனா? நீங்கள் யார் என்பது கூட எனக்குத் தெரியாது. உங்களுக்கு எனது பரிந்துரை என்னவென்றால், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து ஒதுங்கிவிடலாமே? அதை விடுத்து, ‘இது எல்லாமே தப்பு..ஹா ஹூ’ என்ற கோபம் எதற்கு? நீங்கள் தப்பு என்று நினைக்கும் விஷயம், transgressive fiction என்ற பெயரில் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியவகை. அது தவறு என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றால், அட்லீஸ்ட் அந்த லின்க்கில் இருக்கும் எழுத்தாளர்களின் ஒரே புத்தகத்தையாவது படித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஒரு விஷயம் பற்றி எதுவும் தெரியாமலேயே அதை அடியோடு வெறுப்பது சரியா?

      Reply
  16. Ramesh

    உங்கள் வலைப்பதிவுகளை நீண்ட நாட்களாக வாசித்து வந்தாலும்….இன்று என் முதல் கருத்தை பதிவு செய்கிறேன் …. உங்கள் கட்டுரையும் கருத்தும் அருமை ….பதிவுக்கு நன்றி ….மரணம் கூட சில சமயங்களில் குறைந்தபட்ச தண்டனைதான் இல்லை அதுவும் ஒரு வகை விடுதலைதான் …இது போன்ற கொடிய மிருகங்கள் நாள்தோறும் சித்ரவதை செயப்பட்டு உளவியல் ரீதியாக உருக்குலைந்து மரணம் வேண்டும் என அவர்களே கேட்க வேண்டும்…..

    Reply
  17. mahadevan

    I dont want to comment on ur standing on death penalties…but i was unable the way of punishment you had suggested. what u hav mentioned in ur column is not a capital punishment or penalty it’s called revenge/vendetta…for example if our govt approves ur punishment style but asks u to perform it on those criminals can u proceed doing that gory act??? Even if u r ready to do that, how will u face ur family after performing such an act?? If u cant proceed doing such a thing, how do u expect another human (from govt) to committ such an act?
    As the saying goes “an eye for an eye ends up making the whole world blind” these punishments are not going teach any lesson other than the fact that all humans are blood thirsty animals but the one who does something wrong in the first place s labelled as a “criminal” if the same crime is committed on this so called “criminal” its called “justice”….
    Having said all these i still stand by ur words that those people responsible for this act have to be punished severly other than death..

    Reply
  18. balasubramanain

    good decision

    Reply
  19. balasubramanian

    very good punishment

    Reply
  20. Suresh Natarajan

    டியர் ராஜேஷ்,

    உங்கள் கருத்து கோபத்தில் இருந்து வந்துள்ளதாக தான் தெரிகிறது.

    வெறும் கொடுரமான தண்டனை மற்றவர்களிடம் / அனைவரிடம் பயத்தை ஏற்படுத்திவிடுமா, இதற்கு முக்கிய காரணமென்ன என்பதை சரியாக உங்களால், உங்களின் கோபத்தால் பார்க்க முடியவில்லை என்றே தோன்றுகிறது.

    நமது பண்பாடு, நமது தந்தை, பெண் அடிமைத்தனத்தை முன்னிறுத்தும் படங்கள், புத்தகங்கள் மற்றும் அணைத்து மீடியாக்களும் பெண் என்றல் இப்படித்தான் என்று ஒரு பிம்பத்தை தினமும் திணிக்கும் போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

    நாம் கற்பழிப்பு நாடக இல்லாமளிருக்க வேண்டுமென்றால் அதை ஒவ்வருவரும் பெண்களை மனிதர்களாக மதிக்க கற்றுகொடுப்பதில் இருந்து ஆரம்பித்தால் தான் முடியும்

    கசாப் தூக்கு மேடை செல்வதற்கு அரசியல் காரணங்கள் இருந்ததால் மட்டுமே இவ்வளவு குறைவான !!! நேரம் எடுத்து கொண்டார்கள்.

    கடுமையான் தண்டனைகள் இது போன்றவர்களுக்கு கொடுப்பதுற்குள் அவர்கள் இயற்கையாகவே இறந்து விடுவார்கள் :).

    முதல் வகுப்பிலிருந்து பெண்களை எப்படி நடத்தவேண்டும் என்பதை பாடமாக வைத்தாலன்றி இது மாறது.

    நீங்கள் கூறுவது போல் இது நம் நாட்டில் மட்டும் நடப்பது அல்ல, அணைத்து மேலை நாடுகளிலும், கடினமான சட்டங்கள் இருக்கும் இடங்களிலும், இங்கு அதிகம் அவ்வளவே அதற்கு காரணம் கல்வி அறிவே.

    உங்களின் எழுத்தாற்றலை வைத்து நீங்கள் மேலை நாடுகளில் பெண்களை எப்படி நடத்தவேண்டும் என்பதை எப்பொழுது கற்றுகொடுக்க ஆரம்பிகின்றர்கள் அதில் என்னேவல்லாம் உள்ளன என்று ஒரு தொடர் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும். ( Not a Joke a serious request)

    I have been reading your blog and even though I do not know you personally felt like writing this time, so let me know if I am wrong, No intention to offend you in any way, even I am pained by all the rape incidents ( Not only Delhi) Every day we see in paper and if you give a quick look at wiki even in well developed countries the rape victims do not report it so in India it would be much worse.

    Reply
  21. dany

    U R CORRECT RAJESH…….BUT IT NOT POSSIBLE,WE MUST DO SOMETHING…! BCOS “THE PAPER VEG NOT FOR COOK” PLS MORE WRITE ABOUT THIS,SOME POSSIBLE PANISHMENTS….BCOS WE DO SOMETHING….!

    Reply
  22. Omprakash

    அந்த கயவாளிகளுக்கு எத்தனை கொடூரமான தண்டனையை கொடுத்தாலும் தகும், அதே சமயம் உங்களை என்னையும் போல கொஞ்சம் படித்த வர்கத்தை ரோட்ல போற நாயை கூட அடிக்கறதுக்கு யோசிக்கும் நாகரீகமான வர்க்கத்தை எவ்வளவு வன்முறையா சிந்திக்க வைச்சுட்டாங்க பாருங்க..

    Reply
  23. Roshma

    1. கருந்தேள், மேலே நான் எழுதிய வரிகளில் எங்கே, நான் எழுத்தாளனின் எழுத்தை விமர்சித்துள்ளேன்? இரட்டை நிலையில் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் செயல்பாட்டை தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    2. டிரன்ச்க்ராசிவ் இலக்கியத்தில் சில படித்திருக்கிறேன். ஆனால் பிளட்பர்மில் கிடைக்கும் காமவெறி கதைகளை போன்ற சராசரிக்கும் கீழான எழுத்துக்களை டிரன்ச்க்ராசிவ் என்பது கேதி ஆக்கர் போன்ற எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பான செயல்.

    3. கயவாளி… மண்டிபோட்டு என்பதெல்லாம் வன்மம் தெறிக்கும் வார்த்தைகளா? அப்படிஎன்றால் காம வெறி எழுத்தாளனின் துவேசம் தெறிக்கும் எழுத்துக்களை என்ன வென்று சொல்வீர்கள்?

    உங்களின் சார்புநிலையில் எனக்கு கடும் வேறுபாடுகள் இருந்தாதால் தான் முந்தைய கருத்துக்களை எழுதி இருந்தேன். பாலியல் பயங்கரவாதம் ஆண் குறிகளில் மட்டும் இல்லை. பலரின் மண்டையிலும் உறைந்திருக்கிறது. இதற்கு மேலே சொல்ல விரும்பவில்லை.

    Reply

Join the conversation