Assassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் !

by Karundhel Rajesh August 30, 2010   Game Reviews

ஏற்கெனவே இந்தத் தளத்தில், டூம்ப் ரெய்டர்: அண்டர்வேர்ல்ட் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அந்த வரிசையில், இதோ அடுத்த கம்ப்யூட்டர் கேம்.

சென்ற பதிவில் சொல்லியிருந்தது போல், சரித்திரத்தில் எனக்கு சற்று ஆர்வம் உண்டு. அதனால், சரித்திர சம்பவங்கள் இடம்பெறும் கேம்களை அதிகமாக விளையாடுவேன். அண்டர்வேர்ல்ட் முடித்துவிட்டு ஆடத்துவங்கியது, ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா: த டூ த்ரோன்ஸ். சக்கையான கேம். முடித்துவிட்டு, ப்ரின்ஸின் மற்றைய கேம்களை எடுத்தால், அத்தனையும் ஒரே போல் இருந்ததால், அதனை டிலீட் செய்து விட்டு, இப்போது வாங்கியிருக்கும் கேம் தான் இந்த ‘அஸாஸின்’ஸ் க்ரீட்’.

புனிதப் போர்கள் நடந்த காலகட்டம். ஆண்டு 1191. இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் மற்றும் லெபனானின் சில பகுதிகள்.

புனிதப் போர் என்றால் என்ன? போரே அழிவுதான். இதில் புனிதப் போர் எங்கிருந்து வந்தது?

இக்கேள்விக்கு விடை கண்டால், அதுதான் இந்த கேம் நடக்கும் காலகட்டத்தின் முக்கியத்துவத்தையும், இன்னும் சில கேம்கள் (Age of Empires) மற்றும் சில படங்கள் (Kingdom of Heaven) ஆகியவற்றின் கதைக்களன்களையும் நமக்குத் தெளிவுபடுத்தும்.

பதினோராம் நூற்றாண்டு. மேலே சொல்லப்பட்ட இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் மற்றும் லெபனானின் சில பகுதிகள், மொத்தமாக, அக்காலத்தில் புனித பூமி என்று அழைக்கப்பட்டு வந்தன. புனித பூமி என்பது ஏனெனில், அக்காலத்திய முக்கிய மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவம், ஜூதாயிஸம் மற்றும் பஹாய் மதம் ஆகிய அனைத்து மதங்களுக்கும் அந்த இடத்தில் பங்கிருந்ததேயாகும். இந்த ஒவ்வொரு மதத்துக்குமே அந்த இடம் சொந்தம் என்று சொல்லப்படும்படியான கதைகள் மற்றும் நிகழ்ச்சிகள், அந்த இடத்தில் நடந்திருந்தன. அந்த மதங்களின் புனித நூல்களுமே இந்த இடங்களைச் சொந்தம் கொண்டாடின.

கிறிஸ்துவர்கள் நிரம்பியிருந்த ஐரோப்பா, மற்ற மதங்கள் – குறிப்பாக இஸ்லாம் – நிரம்பியிருந்த இந்தப் புனித பூமியின் மேல் நடத்திய தாக்குதல்களே, புனிதப் போர்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிறிஸ்துவத்தை இந்த பூமியில் நிலைநாட்ட ஐரோப்பா செய்த முயற்சிகளின் பலனே இந்தப் போர்கள்.

கி.பி 1095ல் இருந்து, கி.பி 1291 வரை, மொத்தம் ஒன்பது போர்கள் நிகழ்த்தப்பட்டன. இந்தப் போர்களில் பெரும்பாலானவைகளுக்கு, போப்புகளின் பேராதரவும் ஆசிகளும் வேறு இருந்தது.

வரிசையாக நிகழ்ந்த இந்த யுத்தங்கள், கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தின் இறுதியில் சொல்வது போல், அந்த பூமியில் அமைதி என்பதே இல்லாமல் செய்தன. மதங்களுக்கு இடையே நிகழ்ந்த அந்த யுத்தங்களில், மனிதர்கள் மாண்டனர்.

இப்படி இருக்க, அஸாஸின்’ஸ் க்ரீட் நடைபெறும் காலம்: மூன்றாவது புனிதப் போர். இப்போரைப் பற்றிப் பார்க்குமுன், கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தைப் பார்த்துவிடுவது உத்தமம். ஸலாஹத்தின் (ஸலாதீன்) என்ற பேரரசன், முஸ்லிம்களின் தரப்பில் போரிட, முதலாம் ரிச்சர்ட் (Richard the Lionheart) என்னும் மற்றொரு மாவீரன், கிறிஸ்தவர்களின் தரப்பில் போரிட்டான்.

ஸலாதீன், ஜெரூஸலம் நகரைக் கைப்பற்றிய காலம். அவனது பிடியில் இருந்து ஜெரூஸலத்தை விடுவித்து, தங்களது பிடியில் சிக்க வைக்க நடந்த போரே மூன்றாம் புனித யுத்தத்தின் பெரும் பகுதி. இந்த ஸலாதீன் ஜெரூஸலத்தைக் கைப்பற்றிய நிகழ்வே, கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கிங்டம் ஆஃப் ஹெவன், இரண்டாம் புனிதப்போர் நடைபெறும் சூழலை நமக்குச் சொல்கிறது. அப்படத்தின் முடிவில், கதாநாயகன் பாலியன், தோல்வியுற்றுத் திரும்பும் வேளையில், அவனை வழியில் ஒரு பெரும் படை சந்திக்கும். அந்தப் படையின் தலைவன், தனது பெயர் ரிச்சர்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்வான். அவனே Richard the Lion Heart. அதுதான், மூன்றாம் புனிதப்போரின் துவக்கம்.

இந்த மூன்றாம் புனிதப் போர் உச்சத்தில் இருக்கும் காலம். அல்தாய்ர் என்பவன், ஒரு தேர்ந்த கொலைகாரன். புனித பூமியைச் சேர்ந்தவன். அவன், அல் முவாலிம் என்ற மனிதரின் கீழ் இருக்கிறான். கேம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களில், தங்களது கூட்டத்தின் மூன்று முக்கிய விதிமுறைகளை அவன் மீறிவிடுவதால் (1. அப்பாவி மக்களைக் கொல்லாதே 2. உனது அடையாளம் வெளிப்பட்டால், ஒளிந்துகொள் 3. உனது கூட்டத்தினரைக் காட்டிக்கொடுக்காதே), அவனை எச்சரித்து, தண்டிக்கும் அல் முவாலிம், அவனுக்கு ஒரு முக்கிய வேலையைக் கொடுக்கிறார். புனித பூமியில் இருக்கும் ஒன்பது துரோகிகளை இனம் கண்டு, அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதே அந்த வேலை. இவர்களைக் கொல்வது மூலம், ஐரோப்பியப் படைகளுக்கு உதவுவதே அல் முவாலிம்மின் நோக்கம்.

இந்த வேலைகளைச் செய்து முடிக்கும் அல்தாய்ர், ஒரு திடுக்கிடும் விஷயத்தைக் கண்டுபிடிக்கிறான். அவனது முன்னே, உலகையே கட்டுப்படுத்தும் ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது. அதனைப் பல பகுதிகளாகப் பிரிக்கும் அல்தாய்ர், அவற்றை அழித்தானா இல்லையா?

இந்தக் கதை முழுவதும், அல்தாய்ரின் வம்சாவழியைச் சேர்ந்த டெஸ்மாண்ட் மைல்ஸ் என்னும் மனிதனின் நினைவுகளில் நடக்கிறது. 2012ஐச் சேர்ந்த அவனைச் சிறைபிடிக்கும் ஒரு விஞ்ஞானி, அவனது நினைவுகளின் DNAக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பழைய காலத்தில் நடந்த நிகழ்வுகளை எடுத்துப் பார்க்கிறார்.

இதன் காரணம்: அந்த சக்தியை ஒளித்து வைத்துள்ள இடத்தைக் கண்டுபிடிப்பது. முடிவில் என்ன ஆனது? விஞ்ஞானி ஜெயித்தாரா? விடை, கேமை முழுவதும் விளையாடிப் பார்த்தால் தெரியும்.

கேமின் கண்ட்ரோல்கள் மிகச்சுலபம். அல்தாய்ரைக் கட்டுப்படுத்துவதே நமது வேலை. அவனிடம் மூன்று வகையான பிரதான ஆயுதங்கள் உள்ளன. குறுவாள், மெல்லிய – கையிலேயே ஒளித்து வைக்கக்கூடிய கத்தி மற்றும் போர்வாள். இவற்றை, சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.

நாம் கொலை செய்யப்போகும் நபரை, நகரத்தின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டு, கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின், அவனை நிழலைப் போன்று பின்தொடர்ந்து, சரியான சந்தர்ப்பத்தில்….

சதக் !

அதேபோல், நகரத்தை எக்ஸ்ப்ளோர் செய்யும் விதம், அட்டகாசம் ! நகரத்தில், பல வகையான மாந்தர்கள். அதில் ஒற்றர்களும் உண்டு. அவர்கள், நமக்குப் பல வகைகளில் செய்திகள் சொல்வார்கள். அவர்களைச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். போலவே, அப்பாவி மக்களை, கொடுங்கோல் காவலாளிகளிடமிருந்து அவ்வப்போது காக்கவும் வேண்டும்.

இன்னொரு படுசுவாரஸ்யமான விஷயம் – இதில் நகரங்களின் மிக உயரமான கட்டிடங்களின் மேல் ஏறி, கழுகின் பார்வையில் மொத்த நகரத்தையும் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போதே, நமது இலக்கு எங்கிருக்கிறது என்பதனையும் GPRS உதவியோடு கண்டுபிடிக்க முடியும். கட்டிடத்திலிருந்து இறங்கத் தேவையில்லை. பறவை போல் குதித்து, கட்டிடத்தின் முன் உள்ள வைக்கோல் போரினுள் விழலாம். இந்த கண்ட்ரோல், படு சூப்பர் !! மேலேஏஏஏஏ இருந்து விழுவது மிகவும் நன்றாக இருக்கிறது.

நல்ல இசை. டால்பி டிஜிட்டல். இடையிடையே ஸலாதீனைப் பற்றிய செய்திகள் வேறு நகர மாந்தர்கள் மூலமாக நமக்குக் கிடைக்கும். ஒரு நகரத்திலிருந்து மறு நகரத்துக்குப் போக, ஆங்காங்கே குதிரைகள் உண்டு. காவலாளிகள் பார்வையில் பட்டுவிடாமல், சாதாரண பாமரன் போல் நடந்து, உட்புக வேண்டும். அவர்கள் கண்களில் பட்டுவிட்டால், ஓட்டமாக ஓடி, ஒளிந்து கொள்ள வேண்டும் (Thief கேம் போல்).

மொத்தத்தில், படு அட்டகாசமான கேம் இது. ஆனால், நகரினுள் தொலைந்து போய்விட்டால், அம்பேல் ! சுற்றிச்சுற்றி வரவேண்டியது தான். இதைத் தவிர, கேம் சூப்பர் .

கேம் பிரியர்கள் ஆடிப்பாருங்கள். விலை ரூ. 299 /- மட்டுமே. டாரண்ட்டிலும் உள்ளது.

இதோ – Assasin’s Creed கேமின் ட்ரெய்லர் இங்கே பார்க்கலாம்

பி.கு – இந்த கேமில் ஹீரோவான அல்தாய்ரின் கெட்டப்பை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்துத்தான், விஜய் நடித்துவரும் படத்தின் போஸ்டர் உள்ளது (இயக்குநர், ராஜா !). (கருமம்டா சாமி ! இப்ப கேமையும் சுட ஆரம்பிச்சிட்டீங்களா !)

  Comments

43 Comments

  1. நம்மளுக்கும் கேமுக்கும் ஒன்னும் சம்பந்தம் கிடையாது.. ஆனா படிச்சுட்டேன்னு சொல்றதுக்குத்தான் இந்த பின்னூட்டம் அன்பரே 🙂

    Reply
  2. பி.கு – இந்த கேமில் ஹீரோவான அல்தாய்ரின் கெட்டப்பை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்துத்தான், விஜய் நடித்துவரும் படத்தின் போஸ்டர் உள்ளது (இயக்குநர், ராஜா !). (கருமம்டா சாமி ! இப்ப கேமையும் சுட ஆரம்பிச்சிட்டீங்களா !)


    தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளை கிண்டல் செய்த பலிபாவம் உம்மை வந்தடய போகிற்தய்யா … பார்த்து 🙂

    Reply
  3. ரொம்ப வருசம் முன்னாடி விளையாண்டது. அப்ப இருந்த க்ராஃபிக் கார்டுக்கு நாக்கு தள்ளிடுச்சி. செம கடுப்பாகி அன் இன்ஸ்டால் பண்ணினதுதான். அப்புறம் ஏரியா பக்கமே போகலை. கம்ப்யூட்டரில் விளையாடுறதும் இல்லை.

    இப்ப PS3/Wii மட்டும்தான். என்னோட சமீபத்திய ஃபேவரிட் GOD OF WAR 3. அல்டிமேட்டா இருக்கும்.

    நீங்க எழுதியிருக்கறது பார்த்தா முதல் பாகம்னு நினைக்கிறேன். எந்த பாகம்னு சொல்லலாமே?

    Reply
  4. நண்பா
    நான் கேம்ஸ் ஆடுவதில்லை,ஆனால் இதில் வரும் அனிமேஷன்களுக்கு பரம விசிறி,இதில் சீனர்கள் மிக வல்லவர்கள்,நல்ல விரிவான பதிவு.

    இந்த படத்தின் போஸ்டரை நம்ம ஆட்கள் காலம் காலமாக திருடி வருகிறார்கள்,ஆமாம் யாரு இந்த எச்சை?எம்.ராஜா?இனிஷியல் வேற?
    எப்புடியும் இதுவும் ஒரு வேட்டக்காரன்,ரகமே,
    செம கடுப்பாருக்குங்க போஸ்டர் விவகாரம்,ப்ளேகாரிசத்துக்கு பேர் போனது இந்தியா,மணிரத்தநம் ராவணன்,மற்றுமொரு திருட்டு ரோஷமானிலிருந்து.
    அன்பே சிவம்,ப்ளேன்ஸ் ட்ரெயின்ஸ் ல் இருந்து.இன்னும் கவனமா பார்ப்போம்,முகத்திரை கிழிப்போம்,இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கட்டும் வேணாம்னு சொல்லலை,இப்பிடி முகமுடியிலிருந்து கோமனம் வரை காப்பி அடிக்கனுமா?முடியல

    Reply
  5. கருந்தேள் எந்த பாகம்னு சொன்னா தரவிறக்கம் பண்ணிரலாம்,
    அப்புறம் HALF LIFE2 விளையாண்டுரிக்கிங்களா செம அட்வேன்ஜெர்ரா இருக்கும்,

    Reply
  6. இந்த படத்தின் போஸ்டரை நம்ம ஆட்கள் காலம் காலமாக திருடி வருகிறார்கள்,ஆமாம் யாரு இந்த எச்சை?எம்.ராஜா?இனிஷியல் வேற?
    எப்புடியும் இதுவும் ஒரு வேட்டக்காரன்,ரகமே,
    செம கடுப்பாருக்குங்க போஸ்டர் விவகாரம்,ப்ளேகாரிசத்துக்கு பேர் போனது இந்தியா,மணிரத்தநம் ராவணன்,மற்றுமொரு திருட்டு ரோஷமானிலிருந்து.
    அன்பே சிவம்,ப்ளேன்ஸ் ட்ரெயின்ஸ் ல் இருந்து.இன்னும் கவனமா பார்ப்போம்,முகத்திரை கிழிப்போம்,இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கட்டும் வேணாம்னு சொல்லலை,இப்பிடி முகமுடியிலிருந்து கோமனம் வரை காப்பி அடிக்கனுமா?முடியல


    ஒய் டென்ஷன்.. நோ டென்ஷன்…

    Reply
  7. எனக்கு பிடிச்சது GTAதாங்க. அதோட எல்லா வெர்சனும் பிடிக்கும். assassins creed அனிமேஷன் ரொம்ப நல்லாயிருக்கும். ஏதாவது கேம் டவுன்லோட் லிங்க் யாருக்காவது வேணும்னா சொல்லுங்க!

    Reply
  8. அசத்தல் ட்ரெய்லர்!! வேலாயுதம் vs அசாசின்ஸ் போஸ்டர் அருமை.. Ubisoft கிராபிக்ஸ் EAஐயும் தாண்டிப் போகுது!!

    Reply
  9. @ இராமசாமி – உங்கள் பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றிகள் துன்பரே 😉

    //தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளை கிண்டல் செய்த பலிபாவம் உம்மை வந்தடய போகிற்தய்யா … பார்த்து :)//

    ஹாஹ்ஹா… அது உண்மைதான் 😉 ராஜா என்பவர், ஆஸ்கர் வரை செல்லப்போகும் திறன், அவரது சிங்கிள் போஸ்டரிலேயே தெரிகிறதே 😉

    @ புதிய மனிதரே – வாருங்கள்! பூமிக்கு வந்து விட்டீர்களா ? 🙂 நன்றி

    @ பாலா – இது முதல் பாகமே தான்… இரண்டாம் பாகம், இன்னும் கொஞ்ச நாள்ல தொடரும் 😉

    PS2 வா? ஹூம்ம்… 🙁 அத இனிதான் வாங்கணும்… வாங்குறேன் வாங்குறேன்

    @ கார்த்திகேயன் – //இந்த படத்தின் போஸ்டரை நம்ம ஆட்கள் காலம் காலமாக திருடி வருகிறார்கள்,ஆமாம் யாரு இந்த எச்சை?எம்.ராஜா?இனிஷியல் வேற?
    எப்புடியும் இதுவும் ஒரு வேட்டக்காரன்,ரகமே,செம கடுப்பாருக்குங்க போஸ்டர் விவகாரம்,ப்ளேகாரிசத்துக்கு பேர் போனது இந்தியா,மணிரத்தநம் ராவணன்,மற்றுமொரு திருட்டு ரோஷமானிலிருந்து. அன்பே சிவம்,ப்ளேன்ஸ் ட்ரெயின்ஸ் ல் இருந்து.இன்னும் கவனமா பார்ப்போம்,முகத்திரை கிழிப்போம்,இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கட்டும் வேணாம்னு சொல்லலை,இப்பிடி முகமுடியிலிருந்து கோமனம் வரை காப்பி அடிக்கனுமா?முடியல//

    நண்பா.. உங்க கோபம் புரியுது… கவலையே படாதீங்க.. இந்தக் காப்பிகளை முடிஞ்ச வரை கிழிப்போம் 😉 சீக்கிரமே காப்பியடிச்ச லிஸ்ட், விரிவா போடப்போறேன்.. முழுமையா… பதிவு வந்துக்கினே இருக்கு ! 😉

    @ Keanu – இது முதல் பாகமே தான் .. ஹாஃப் லைஃப் ரொம்ப நாள் முன்னால ஆடுனது.. ஃப்ரெண்ரு குடுத்ததுனால.. அதுவும் எனக்கு புடிக்கும்..

    @ எஸ்.கே – GTA ல இண்ட்ரஸ்ட் இல்லைங்க.. ஆனா நீங்க சொன்னதுனால ஆடுவேன்.. கேம் டௌன்லோட் லின்க் பத்தி தனியா மெயில் போடுறேன் 😉

    @ JZ – இதோட ட்ரய்லர் பார்த்து மிரண்டு போயிட்டேன் நானும் ! ubisoft இப்போ எவ்வளவோ பரவாயில்லை நண்பா.. EA எனக்கு அவ்வளவா புடிக்கல.. அதோட கிரிக்கெட் விளையாடி நொந்து போன கும்பல்ல நானும் ஒருத்தன் ;-).. நன்றி

    Reply
  10. ணா..நீங்க உசுப்பேத்தி விட்டதில Kingdom of Heaven தவிர வேற படமோ டாக்மெண்டரியோ அகப்படுமான்னு தேடியதுல பிபிசியின் இந்த படம் கிடைத்தது. என் சிஸ்டத்தில ஒரு பாகம் பார்க்குறதுக்கே ஒரு மாமாங்கம் ஆயிருச்சு. இது வேற இருபது பாகம். இந்தப்படத்தின் ரிவியூஸ் தேடுனதுல எல்லாம் நல்லாதான் சொல்லியிருக்காங்க. யாராவது பார்த்து எப்படின்னு சொல்லுங்க (செங்கிஸ்கான் பத்தியும் ஒரு டாக் லிங்க் இருக்கு)
    http://www.youtube.com/watch?v=ERKDI-exAoE&feature=related

    Reply
  11. இந்தப் கேமை விளையாடணும்னு எனக்கும் பல நாள் ஆசை.ஆனா என் லேப்டாப் சப்போர்ட் பண்ணாது. 🙁
    பார்க்கலாம்.

    Reply
  12. தமிழ் நாட்டின் நாளைய முதல்வரை (DR.Vijay) கிண்டல் செய்ததால் இந்த பதிவில் இருந்து வெளி நடப்பு செய்து,

    வாந்தி வரும் வரை சிக்கன் பிரியாணி சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்

    விஜய் ரசிகர்களே வாந்தி எடுக்க ஒன்று கூடுங்கள்

    Reply
  13. @ கொழந்த – லிங்கை நைட்டு பார்ப்பேன். ஆஃபீஸ்ல இருக்கும்போது என்னோட ப்ளாக்கையே நான் பார்ப்பதில்லை. ஏன்னா நான் கடமை தவறாத கண்ணியமிக்க ஆள் இல்லையா ? 😉 ஹீ ஹீ (அடிச்சான் பாரு ஒரு மெகா டகால்ட்டி)..

    @ இலுமி – கவலைப்படாதீங்க.. உங்க நம்பர் கட்டாயம் வரும் .. உங்களுக்கும் காலம் வரும் 😉

    @ சரவணக்குமார் – உவ்வே !! உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே !! இதோ என் பங்குக்கு என்னோட வாந்திகள்.. ஒண்ணு தெரியுமா.. ஐ லவ் காவல்காரன் ஆயுள் மெம்பர் ஃபேன் க்ளப் ஆரம்பிச்சதே நான் தான்..;-) ஹீ ஹீ

    Reply
  14. Ubisoft-ன் கேம்கள் அனைத்துமே அனிமேஷனில் நன்றாக செய்திருப்பார்கள். wheelman, farcry, price of persia போன்றவற்றில் அனிமேஷன் மிக நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சில புகழ்பெற்ற கேரக்டர்களை கேமாக ஆக்குவார்கள். அவதார் கேம் கூட அவர்கள் வெளியிட்டதுதான். தங்கள் ஃபேவரைட்டான XIIIஐ கூட கேமாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

    Reply
  15. சின்ன வயசில இருந்தே வீடியோ கேம்ஸ் எங்க வீட்டுல தடை செய்யப்பட்ட ஒன்று! வீட்டுக்கு தெரியாமா நண்பர்கள் வீட்டில் விளையாடுவதோடு சரி….நான் பெரியவன் ஆனதும் எப்படியாவது ஒரு நல்ல கேம் வாங்கி விளையாடனும், என் லட்ச்சியங்களில் இதையும் சேத்துக்குறேன்….

    அட்லீஸ்ட் வரப்போற மாமனார் கிட்ட சீதனமா ஒரு லேட்டஸ்ட் PS வாங்கணும்! 🙂

    Reply
  16. Oops…I forgot to say

    Advance Happy Birthday Wishes, Wishing you many more happy returns of the day(tomorrow)!

    Kindly let us know the b’day party venue and timing 🙂

    Reply
  17. தல…சொல்லவேயில்ல!!!(நன்றி Phantom Mohan)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    (எத்தனாவதுன்னு கேட்க மாட்டேன். 34 to 36க்குள் ஒரு எண் என்று தெரியும்)

    Reply
  18. @ எஸ்.கே – ஆமாங்க தல.. XIII வாங்கி வெளையாடணும்.. பார்ப்போம்.. உங்க தகவல்களுக்கு எனது நன்றிகள்..

    Phantom Mohan – ஆஹா.. இதல்லவோ லட்சியம்! இந்த லட்சியத்த நிறைவேத்தத்தான் ஊர்ல இருந்து கருவாட்டுக்கூடைய தூக்கிக்கினு வந்தீங்களா? 😉 சும்மா சோக்குக்கு… இந்த ஐடியா எனக்குத் தோணாம போச்சே.. 🙁

    உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி மோகன்.. எப்ப வேணாலும் சந்திக்கலாம்.. பெங்களூர் வந்தா சொல்லுங்க 😉

    @ கொழந்த – அடப்பாவி ! முடிவே பண்ணிட்டீங்களா? எனக்கு இப்பத்தான்யா 31 ஆரம்பம் 😉 (அய்யய்யோ வயச தெரியாம சொல்லிட்டனே.. இப்ப என்ன பண்றது)

    Reply
  19. அன்பு நிலைபெற !
    ஆசை நிறைவேற !
    இனபம் நிறைந்தாட !
    ஈடில்லா இந்நாளில் !
    உள்ளத்தில் குழந்தையாய் !
    ஊக்கத்தில் குமரியாய் !
    எண்ணத்தில் இனிமையாய் !
    ஏற்றத்தில் பெருமையாய்
    ஓர் நூறாண்டு !
    ஔவை வழி கண்டு !
    நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !

    i think this is enough.ok get some bottles and snacks i am in Bangalore

    Reply
  20. சரவணக்குமார்.. உங்கள் கவிதைக்கு மிக்க நன்றி.. 😉 பின்னியெடுத்துட்டீங்க.. பயிறுமுத்துவெல்லாம் உங்க கிட்ட பிச்சை வாங்களும் போலயே.. 😉

    அப்புறம், பாட்டில்ன்னா என்ன? பெப்ஸி, கோக் தானே? ஏன்னா அதைத்தவிர எனக்கு வேற ஒன்யும் தெரியாது… 😉

    இன்னொண்ணு… நாளைக்கி கிருஷ்ணர் பொறந்த நாளு.. அப்புடியே என்னுடைய பொறந்த நாளும் கூட.. எப்புடி எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துமை!! பின்னிட்டோம்ல !! 😉 ஹீ ஹீ

    Reply
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    இந்த நாளும் இனிவரும் நாட்களும் இனிமையான வாழ்வு அமைய வாழ்த்துக்கள்!

    Reply
  22. நண்பரே,

    மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். நான் பதிவைப் படிப்பதோடு சரி 🙂

    Reply
  23. போஸ்டரைக் கூடவா காப்பியடிப்பாங்க..? ஒரு அளவு இல்லையாப்பா..! என்ன கொடுமை சரவணா இது..?

    கருந்தேள் ஸார்..! கொஞ்சம் போன் பண்றீங்களா..? பேசணும்..! 9840998725

    Reply
  24. தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :):) அப்புறம் இந்த டிவிடி எங்க வாங்கிநீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்…வ்லாசம், வ்லாசம் நான் ரொம்ப நாளா தேடுறேன் இங்க பெங்களூர்ல

    Reply
  25. This comment has been removed by the author.

    Reply
  26. This comment has been removed by the author.

    Reply
  27. சரவணக்குமார் said …

    ///////////////////////////////////////////////

    தல இவர் தமிழ் வாய்ப்பாடு தப்பா சொல்றாரு…இப்போ பாருங்க

    அன்பு நிலைபெற !
    ஆசை நிறைவேற !
    இனபம் நிறைந்தாட !
    ஈடில்லா இந்நாளில் !
    உள்ளத்தில் குழந்தையாய் !

    ஊக்கத்தில் குமரியாய் !
    (என்னது குமரியா??? ஹலோ எங்கிருந்து சுட்டீங்க 🙂 குமரனாய்!!!)

    எண்ணத்தில் இனிமையாய் !
    ஏற்றத்தில் பெருமையாய்

    ஐத்தலக்கடி கும்மாவாய் ! (இங்க “ஐ” மிஸ்ஸிங்….சோ)

    ஒன்ஸ் மோர் ஐத்தலக்கடி கும்மாவாய் ! ( “ஒ” மிஸ்ஸிங்)

    ஓர் நூறாண்டு !
    (அதென்னையா கருமம் காசா பணமா, மனசுல இருந்து வாழ்த்துவோம்….ஓராயிரம் நூறாண்டு)

    ஔவை வழி கண்டு !

    ஃ தே ஃ தே ஃ தே ஃ தே அதுக்கு மீனிங் ஃ தே ஃ தே ( இங்க “ஃ ” மிஸ்ஸிங்….சோ நான் பில் பண்றேன்… )

    நீ வாழ ! நான் வாழத்துகிறேன் ! (நானும் வாழ்த்துகிறேன்!)

    Reply
  28. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அப்புறம் வயச தப்பாச் சொல்லிட்டீங்களே கருந்தேள், 42ன்னு நீங்க யார்கிட்டயோ சொன்னதை நான் பார்க்கவேயில்லை.

    Reply
  29. // நாளைக்கி கிருஷ்ணர் பொறந்த நாளு.. அப்புடியே என்னுடைய பொறந்த நாளும் கூட.. எப்புடி எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துமை!! பின்னிட்டோம்ல !! 😉 ஹீ ஹீ //

    மென் மேலும் பல்லாண்டு வாழ்ந்து பலப் பல பதிவுகள் போட்டு கலக்குங்கள் ( கிம் டு கிக் ) ஹி ஹி ஹி 🙂

    அன்னார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

    .

    Reply
  30. This comment has been removed by the author.

    Reply
  31. நண்பரே,

    அருமையான விமர்சனம். ஆனா எனக்கு பிடிச்சது உலகப்போரினை மையமாக வைத்து வெளிவரும் medal of honor series, call of duty series, officers, world in conflict. ஆனா இதுலயும் அமெரிக்க படைகளே ஹீரோ போல காட்டியிருப்பார்கள். பரவாயில்லை.. homeland என்ற கேம் வர இருக்கிறது. வடகொரியா அமெரிக்காவை ஆக்ரமிப்பதை போன்ற கதையாம். நாம் வடகொரிய ராணுவவீரராக களமிறங்க வேண்டும்.

    Reply

Join the conversation