Avatar (2009) – English
திரைக்கதை – ஒரு படத்தின் உயிர்நாடி. அத்தகைய திரைக்கதை அமைப்பதில், பல ஜாம்பவான்கள் உண்டு. அவர்களது படங்கள் ஆரம்பித்தவுடன் நம்மை சர்ரென்று உள்ளிழுத்துவிடும். அந்த சுவாரசியம், கடைசிவரை தொடரும். வெற்றிகரமான திரைக்கதையமைப்பில், ‘Suspension of Disbelief ‘ என்ற அம்சம் மிகவும் முக்கியமானது. படத்தில் என்னதான் நம்பமுடியாத காட்சிகள் வந்தாலும், அவை, பார்க்கும் ஆடியன்ஸினால் நம்பப்படவேண்டும். படம் பார்ப்பவர்கள், படத்துடன் ஒன்றி, படத்தில் என்ன நடந்தாலும் அவற்றை நம்பவேண்டும். இது மட்டும் நடந்தால், அப்படம் வெற்றிபெற்றுவிடும்.
இந்த ‘Suspension of Disbelief ‘இல் ஜித்தர்கள் பலர் உண்டு. ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகாஸ், பீட்டர் ஜாக்ஸன், நோலன் சகோதரர்கள், ரிட்லி ஸ்காட் (ஓரளவு) போன்றவர்களை அதில் முக்கியமானவர்களாகச் சொல்லலாம். இந்த லிஸ்டில் இன்னொரு முக்கியமான பெயரும் உண்டு. அந்த இயக்குநர், இதுவரை எடுத்த அத்தனை படங்களையும், கில்லாடித்தனமான திரைக்கதை அமைப்பில் உதாரணங்களாகச் சொல்லலாம். ஒரு நிமிடம் கூட போரே அடிக்காமல், சீட்டு நுனியில் நம்மை அமரவைக்கும் வித்தை தெரிந்தவர். அவரது அத்தனை படங்களிலும், பிரஷரின் எல்லைக்கே போகும் ஒருவர் அல்லது ஒரு கும்பல், எப்படி அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறது என்பதை, படு விறுவிறுப்பாகச் சொல்லியிருப்பார் (மனசாட்சி – டேய் வெட்டி மவுனே.. சும்மா தெரிஞ்ச மேட்டரையே சொல்லிகினு இருக்காத. . கேமரூன் பத்தி எங்க எல்லாருக்கும் தெரியும்.. படத்தப் பத்தி சொல்லுடா.. அடிங்..)
இதோ வந்தாச்சு. ஜேம்ஸ் கேமரூன். இவரது திரைக்கதையமைப்பு, உலகெங்கிலும் சிலாகிக்கப்படும் ஒரு விஷயம். பிரபலமான திரைக்கதை குரு ‘சிட் ஃபீல்ட்’, அவர் எழுதிய ‘Four Screenplays’ புத்தகத்தில், இவரது ‘டெர்மினேட்டர் 2’ படத்தின் திரைக்கதையை எடுத்துக்கொண்டு, அலசித் தள்ளியிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு இயக்குநர், 12 வருடங்களாகப் படமே எடுக்காமல் இருந்து, இப்பொழுது ஒரு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் என்றால்.. பிரிவியூ ஷோவிற்கு தபதபவென்று ஓடிவிட்டேன் !! 3-டி யில் படத்தைப் பார்த்துவிட்டு, இதோ விமரிசனத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந்தக்கதையை ஒரு ஸ்டாம்புக்குப் பின்னால் எழுதிவிடலாம். படத்தில், ஒரு தக்கிணியூண்டு மெஸேஜும் உள்ளது. மொத்தத்தில், நாம் இங்கு பூமியில் செய்துகொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்பை, வேறு ஒரு கிரகத்தில் செய்தால் என்ன ஆகும்? இது தான் கதை.
‘ஆல்ஃபா செண்டாரி’ என்பது, நமது பூமிக்குப் பக்கத்தில் உள்ள (வெறும் 4.37 ஒளி வருடங்களுக்கு அப்பால் !!??) ஒரு – உண்மையில் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்த- ஒரு அமைப்பு. இந்த அமைப்பைச் சுற்றி வரும் ஒரு (கற்பனைக்) கோள் தான் ‘பாலிஃபிமஸ்’. இந்தப் பாலிஃபிமஸைச் சுற்றி வரும் ஒரு ஸாடலைட்டின் பெயர் ‘பேண்டோரா’. இந்தப் பேண்டோரா தான் இந்தப்படத்தின் கதைக்களம். அது ஒரு அழகான, இயற்கை வளம் மிகுந்த ஒரு இடம். இந்த இடத்தில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ‘நாவி’ என்ற இனத்தினர். எப்படி நம்முடைய ராமாயணத்தில் வானரங்களோ, அதுபோல், பேண்டோராவில் இந்த நாவிகள்.
நம்ம மனிதர்கள், பேண்டோராவில் உள்ள கனிமங்களுக்காக, அதனை ஆக்கிரமிக்க முடிவு செய்கின்றனர். அங்குள்ள ‘நாவி’ என்ற மக்களுடன் பழகி, அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக, மனிதர்களின் ஜீனையும் நாவிக்களின் ஜீனையும் கலந்து, ‘அவதார்’ என்ற ஒரு உயிரினத்தை உருவாக்குகிறார்கள். பகலில் நாவியாகவும், இரவில், அங்கு தூங்கியவுடன் இங்கே தனது தூக்கத்திலிருந்து எழுந்து, நிஜ உலக மனிதனாகவும் இருக்கலாம்.
இப்படி ஒரு நாவியாக மாறுவதற்கு, மூன்று வருடங்களாகக் கடும் பயிற்சியும் செலவும் செய்து தயார்படுத்திய ஒருவன் இறந்துபோய்விடுவதனால், அவனது ஜீன்கள் பெருமளவில் உள்ள அவனது சகோதரனை அவனுக்குப் பதில் அனுப்ப முடிவு செய்கின்றனர். அந்த சகோதரன் தான் முன்னாள் ராணுவ அதிகாரியான ‘ஜாக் ஸல்லி’. அவருக்கோ, இடுப்புக்குக் கீழ் எந்த உணர்ச்சியும் இல்லை.
அந்த மிஷனின் பொறுப்பாளர், டாக்டர் கிரேஸ் அகஸ்டைன் (சிகோர்னி வீவர்). அவருக்கு, ஒரு முடமான, ஒருவிதத்திலும் எந்த விஷயமும் அறியாத ஜாக்கை அனுப்புவதில் இஷ்டமில்லை. இருந்தாலும், நிறையப் பணமும் காலமும் செலவழிந்து விட்டதால், ஜாக்கை வேறு வழியின்றி சேர்த்துக்கொள்கிறார். அவரும், இன்னும் சிலரும், இந்த அவதார் என்ற உருவத்தில் அந்த கிரகத்துக்குச் சென்று இறங்குகிறார்கள். அங்கு, ஒரு மிருகம் தாக்குவதால், ஜாக் வழிதவறி, நாவிக்களிடம் மாட்டிக்கொண்டு விடுகிறார். நாவிக்களின் அரசரின் மகள், ஜாக் மேல் பரிவு கொண்டு, அரசரின் உத்தரவின் பேரில் ஜாக்குக்கு அனைத்தையும் பயிற்றுவிக்கிறாள். பின் என்ன, இருவருக்கும் காதல். ஜாக்கிடம், அவரை அனுப்பும்போது, அந்த மக்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவர்களை அந்த இடத்தை விட்டுத் துரத்தும் பணி ஒப்படைக்கப்படுகிறது (அவர்கள் இருக்குமிடம் தான் கனிம வளம் மிகுந்து இருக்கும் பகுதி). ஆனால், ஜாக் பேண்டோராவில் தனது மிஷனைத் தொடங்கும்போது, அவர்களின் அன்பினைப் புரிந்துகொள்கிறார். பேண்டோராவில் உள்ள அத்தனை செடிகொடிகளும், இந்த நாவிக்களும், ஒரு நெட்வொர்க்கினால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வாலின் நுனியில் உள்ள மயிர்க்கற்றைகளைக் கொண்டு, இந்த நெட்வொர்க்கில் இணைத்துக்கொள்ளலாம். இத்தகைய ஒரு இனத்தை அழிக்க விரும்பும் சுயநலமிக்க மனிதர்கள் ஒரு புறம், இந்த அன்பான இனம் மறுபுறம். தாக்குதல் ஆரம்பிக்கிறது. கடைசியில், ஜாக் என்ன செய்தார்; நாவிக்கள் பிழைத்தார்களா என்று, 3-டி திரையில் காணவும்.
நீங்கள் ‘Planet of the Apes’ பார்த்திருந்தீர்கள் என்றால், இக்கதையை உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை. அதே கதை. மட்டுமல்லாமல், மற்ற அனைத்து சைன்ஸ் fiction படங்களிலும், கேமரூனின் முந்தைய படங்களிலும் (குறிப்பாக : ஏலியன்ஸ்) வந்த அதே பிரம்மாண்டமான மெஷின்கள் (ஏலியன்ஸ் படத்தின் கிளைமாக்சில், திடீரென்று சிகோர்னீ வீவர், திடும், திடும் என்று ஒரு ரோபோ போன்ற கருவியை இயக்கியபடி வருவாரே.. அந்தக்கருவியும் இப்படத்தில் உண்டு). கதையில் பல ‘கிளிஷே’க்கள்.. செண்டிகள்.. மொத்தத்தில், கதையில் ஒரு புதுமையும் இல்லை. இருப்பினும், படத்தின் ரெண்டேமுக்கால் மணிநேரமும், போரே அடிக்காமல், விறுவிறுப்பாகச் செல்வதற்கு ஒரே காரணம், கேமரூனின் திரைக்கதை.
இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், ஒரு அற்புதம். முக்கால்வாசிப் படத்தில், மாந்தர்கள் அனைவரும் சி. ஜியினால் உருவாக்கப்பட்டவர்கள் (லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் – கோல்லும் போல்). அது அத்தனையும் தத்ரூபமாக, அழகாக இருக்கிறது. குறிப்பாக, அந்தக் கதாநாயகி (Zoe Saldana), முற்றிலும் சி. ஜி தான். ஆனாலும், அவ்வளவு அழகு. அவளின் ஒவ்வொரு முகபாவமும், அவ்வளவு துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. (அதான் இந்த போஸ்ட்ல எல்லா படமும் அவளோடதுதான்.. ஹி ஹி). அதேபோல், படத்துக்கு, 3-டி ஒரு added attraction. படம் முழுக்க, உறுத்தாத 3-டி. பேண்டோராவை காண்பிக்கும் ஒவ்வொரு காட்சியும் அருமை. அதன் செடிகொடிகள், மிருகங்கள், மிதக்கும் மலைகள் என அனைத்தும் பட்டையைக் கிளப்புகிறது.
படத்தின் இன்னொரு சிறப்பம்சம், இசை. டைட்டானிக் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர். ஒரு அழகான, இதமான, உள்ளத்தைக் கவ்வும் மெல்லிய ஃபோல்க்லோர் இசையைப் படம் முழுக்க அட்டகாசமாகப் போட்டிருக்கிறார். அதுவும், முக்கியமான காட்சிகளில் வரும் அந்த வயலின் கோரஸ், பிரமாதம்.
இப்படத்தின் நெகட்டிவ் பாயிண்டுகள் என்னென்ன என்று யோசித்தால், நாவிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது, அவர்களின் உடலமைப்பும் மனிதர்கள் போலவே இருப்பது, ஹீரோ நாவியும் ஹீரோயின் நாவியும் கச்சிதமாக உதட்டில் முத்தமிட்டுக்கொள்வது, நாவிகளின் பஞ்சாயத்து, அத்தனை நாவிக்களும் மாரியாத்தா கோவிலில் உட்கார்ந்து சாமியாடுவது போல் கடவுளை வேண்டிக்கொள்வது… இப்படிப் பல விஷயங்களைச் சொல்லலாம். ஆனாலும், இந்தக் கிளிஷேக்களை ஒட்டுமொத்தமாக மறக்கச் செய்து, படத்தில் நம்மை ஒன்றச்செய்வதே கேமரூனின் வெற்றி. இப்படத்தை வேறு எந்த இயக்குநர் எடுத்திருந்தாலும், படம் கண்டிப்பாக ஃப்ளாப். கேமரூனின் திறமையினால், சூப்பராக ஓடப்போகிறது.
ஒரு கமெண்ட் சொல்லவேண்டும் என்றால் – அவதார்: பழைய மொந்தையில் பழைய கள். ஆனால், மேக்கிங்கும் டேஸ்ட்டும் பிரமாதம்.
அட.. நீங்களும் பார்த்தாச்சா..??
ஏப்பா.. நாங்களும் சென்னையில் தான் இருக்கோம். கூப்பிட்டா வர மாட்டேனா..??
வணக்கம் சூர்யா – நானு இப்போ பெங்களூர் வந்தாச்சு. . 🙂 அதன் இங்க பிரிவியு போட்டதும் ஓடிட்டேன் . .சென்னையில் இருந்தா, உங்கள கூப்புடாம போவோமா? 🙂
ஆரம்ப விளக்கம் அருமை கருந்தேள். நான் evening show Serene ல தான் பாத்தேன். நீங்க..?
நன்றி ராஜேஷ். கேபிள் சொல்லாம பார்த்து பதிவும் போட்டு விட்டார்.
@ GV – நானு பெங்களூர்ல fame லிடோ ல பார்த்தேன் 🙂
@ சூர்யா – பாருங்க இந்த கேபிள . . உடுங்க அவர சீக்கிரமே அடுத்த ‘பார்ட்டில’ மீட் பண்ணி, மெரட்டிரலாம். . .
ம். படத்தை பற்றிய விபரங்கள் பதிவு.
http://mynandavanam.blogspot.com/search/label/avatar
நீங்க பெங்களூரா, நான் சென்னைல இருக்கீங்கன்னு நெனச்சேன். catch u tmro, gud night. நாளைக்கு வேட்டைக்காரன் பாக்கணும்.
எவ்ளோ அடிச்சாலும் இவன் தாங்குவான்னுதானே… இப்படி எல்லோரும்… இந்தப் படத்தை பிரிச்சி மேயறீங்க???! 🙁 🙁 🙁
இனிமே நான் என்னைத்தை எழுதறது? 🙁 🙁 🙁
===
எப்பவும் கதைய எழுதிட்டு.. எடிட்டிங் (அப்படின்னா என்னாங்க) சூப்பர், ஒளிப்பதிவு கலக்கல்னு எழுதிடுவேன். இப்ப அதுக்கும்.. எல்லாரும் சேர்ந்து ஆப்பு வச்சிட்டீங்களே!
====
இங்கு படம் வெளியாக இன்னும் 8 மணிநேரம் இருக்கு. படம் முடிய 11 மணி நேரம். பதிவெழுத 12-13 மணி நேரம்.
அதுக்குள்ள இன்னும் எத்தனை பேர்… தூள் கிளப்பப் போறாங்களோ?
தமிழிஷில் நீங்க பதிவை இணைப்பது
படங்கள்->சினிமா-வில்! அவங்க படம்-ன்னு சொல்வது புகைப் படங்களை.
எனக்குத் தெரிஞ்சி.. சினிமா பத்தி எழுதற எல்லா மேட்டரும்… செய்திகள்->சினிமால தான் மக்கள் இணைக்கிறாங்க.
நன்றி கருந்தேள்…
பாலா நீங்க எழுறுதக்கு ஒன்னும் இருகாது போலிற்கு…
இதுலயும் ஜாக்கா? செண்டி?
அவனுங்க சவுத் அமெரிக்கா க்கு ஆக்கிரமிக்க போனப்ப அங்க இருந்த பழங்குடிகள் இருந்த மாதிரி நவிக்களின் அமைப்பை describe பண்ணியிருக்காங்க போல!
தேளு கலக்கிட்டீங்க..பாலா பரவால்ல நீங்களும் ஒருதடவை எழுதுங்க..
சூப்பராயிருக்குது விமர்சனம் ..படம்பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தினை அதிகரிக்கவைத்திருக்கின்றது..காதல்காடச்சிகள் பிரதானமாக இருக்கும் என்று சொன்னார்கள்..அதைப்பற்றி பெரிதாக நீங்கள் ஒன்னும் சொல்லவில்லையே…
@ சூர்யா – நன்றி. வழக்கப்படி, கலக்கல் !
@ அறிவு GV – என்ன கொடுமை சாரே இது ? அவதார் பார்த்தவுடனே வேட்டைக்காரனா? அவ்வ்வ்வவ்வ்வ்வ் ..
@ பாலா – என்னால ஆர்வத்த கட்டுப்படுத்த முடியாம தான், பிரிவியுக்கு ஓடிட்டேன். . என்னதான் நாங்கெல்லாம் எழுதினாலும், எங்க தனிப்பெரும் தானைத்தலைவர் நீங்க தானே. . அப்புறம் என்ன. . உங்க விமரிசனம் மாதிரி வருமா தல.. 🙂
அப்பறம், அந்த தமிழிஷ் மேட்டர்.. ரொம்ப நன்றி. . இந்த விஷயத்துல எல்லாம் நானு கொஞ்சம் மந்தம். . இனிமே கரெக்டா இணைச்சிடுறேன் . .
@ kabi – என்ன.. சிண்டு முடியப் பாக்குறீங்களா 🙂 பிச்சி புடுவேன் 🙂 . . பாலா ஒரு மல.. நானெல்லாம் ஒரு மட்ட. . .:)
@ பப்பு – இதுல கண்டபடி செண்டி.. செண்டி மழை பொழிகிறதுன்னு பாடவேண்டியதுதான். . அதையெல்லாம் மீறி, ஒரு இண்டரஸ்ட் வருதுன்னா, கேமரூன் தான் காரணம்.. அப்பறம், அதேதான்! அந்த ஆதிவாசிகள வெச்சி தான் மேக்அப். எனக்கு, கொஞ்சம் அபோகலிப்டோ நினைவு வந்துச்சு .
@ rajeepan – காதல் காட்சிகள், வழக்கப்படி ரொம்ப கிளிஷேட் ஆ இருக்கு.. புதுசா கதைல ஒண்ணுமில்ல.. ஆனா அந்த கதாநாயகி அழகோ அழகு (ஆரம்பிச்சிட்டான்யா) . . 🙂
Super post kk.
நேற்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது. அதில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நம்முடைய ஆல் டைம் பேவரிட் காமெடியர் (ஒரு மரியாதை தான்) கவுண்டமணியும் அடக்கம். அந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனம்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வேட்டைக்காரன் – கவுண்டமணி சிறப்பு விமர்சனம்
@ வெடிகுண்டு – 🙂 பாவங்க விஜய் . .எவ்ளோவ் அடிச்சாலும் தாங்குவாரு போல . . . 🙂
தலைவா
உங்க பதிவு பாத்துட்டு படம் பாத்தேன்
இப்போ அத… பாத்துட்டு ஒரு புது பதிவு போட்டு இருக்கேன்
கொஞ்சம் உங்க கமெண்ட்ஸ் போடுங்க
நல்லா விமர்சனம்…,
Nice review. Will watch the movie and comment
ஹாய் ராஜேஷ், போன வாரம் சாரு கச்சேரில பார்த்தது. பத்திரமா ஊருக்கு போய் சேர்ந்திங்களா. விமர்சனத்திருக்கு நன்றி. நாளைக்கு தான் படம் பார்க்க போறேன். Catch u later. Have fun & take care – Murali
@ ஸ்ரீநி – பார்த்தாச்சு.. பின்னூட்டமும் போட்டாச்சு 🙂
@ பேநா மூடி – நன்றி 🙂
@ சாந்தமூர்த்தி – பார்த்துபுட்டு சொல்லுங்கோ . . . 🙂
@ முரளி – நல்லா இருக்கீங்களா? உங்க மெயில் ஐடிய rajesh.scorpi @ gmail .com கு தட்டி உடுங்க .. நானு மெயில் அனுப்புறேன் . .படம் பார்த்துட்டுசொல்லுங்க…
Romba nalla padhivu 🙂
I saw the movie too and liked the 3D effects.
@ On my way – உங்களுக்குப் படம் பிடித்ததில் மகிழ்ச்சி. . . . கருத்துக்கு நன்றி 🙂
நண்பரே,
நேற்றைய தினம் இப்படத்தைப் பார்த்தேன், மனம் திருப்தியடையவில்லை. சுடச் சுட விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.
@ காதலரே – இப்படம், பல அபத்தங்களைக் கொண்டிருக்கும் ஒரு படம். கதை என்று நினைத்துப்போனால் ஏமாற்றமே மிஞ்சும். எனக்குமே அப்படித்தான் இருந்தது. ஆனால், அதன் தொழில்நுட்ப நுணுக்கங்கள் என்னைக் கவர்ந்தன. விடுங்கள். . மசாலாப் படங்கள் இப்படித்தான். உங்கள் பாராட்டுக்குநன்றி . .
avatar padathukum namma prabhu nadicha viatnam colonykum kathai ottrumai irukku parthingala?
அட வெட்டிப்பயபுள்ள . . . பின்னிட்டீங்க போங்க . .அட ஆமாம். . ஒத்துமை இருக்கே . . ஏங்க .. இந்த அளவுக்கா இந்தப்படத்த பார்த்தீங்க. . அவ்வவ்வ்வ்வ் . . .
nadri nandri!!!!!!!!!!!!
hee hee hee
paravailla nammala mathiri full padathaye sudama kathaiya than sutirukanga!!!!!!1st half la jack oru mirukathukita matikum pothu thil iruntha vaa bayam irukulla po pinnadi appdimpan,thanaku pinnala ulla periya mirukatha parthu than athu payanthurukkunu theriyamale!athe in the padathula koundamanikita sandai podurura autokarana parthu prabhu saptham poduvar,bayam irukkulla podanu thanaku pinnala ulla raavuthara parthuthan avan baypadarannu theriyamale!!!!tithu eppdi irukku heee hee hee!!!!!!
அண்ணா . . எங்கியோ போயிட்டீங்கண்ணா . . உங்க காலு எங்க. . அதா ஒரு போட்டோ புடிச்சி நம்ம ப்ளாக்ல போட்டுரலாங்ணா . . . . 🙂
thank you thank you!!!!!!!!!!!!!!
விமர்சனம் அருமை.மேலும் Inglorious Basterds பாருங்கள் ..பத்து வருடங்கள் கடினமாக உழைத்து எடுத்திருக்கிறார் Qunetin Tarantino (இங்கு மூன்று வருடம் எடுத்து விட்டு பந்தா விடும் இயக்குனர்கள் கவனிக்க .
எனது மிகவும் பிடித்த இயக்குனர் Qunetin Tarantino பட்டையை கிளப்பியிருக்கிறார்.Christopher Waltz இன் நடிப்பு பலருக்கும் ஒரு அகராதி போல.மேலும்
Mélanie Laurent இன் நடிப்பும் கூட.பாருங்கள்.சொல்ல வேண்டும் என தோன்றியது.
இங்க்லோரியஸ் பார்த்தாச்சு விக்கி . .எனக்கு புடிச்சது . . குறிப்பாக, வால்ட்ஸ் . . முதல் மேஜர் படம்னு சொல்ல முடியுமா என்ன . . பட்டைய கிளப்பின படம் அது . . அதுக்கு நானு ஆங்கிலத்துல எழுதின விமர்சனம் இதோ . . http://giriraajan.blogspot.com/2009/10/inglourious-basterds-once-upon-time-in.html.
பார்த்திருப்பீர்கள் என நினைத்தேன்.இன்று Changeling பார்த்தேன்.மகனை தொலைத்த தாயின் கண்ணீர் மனதை என்னவோ செய்து விட்டது.Gia படத்திற்கு பிறகு மிகவும் ஆழமான கதாபாத்திரம் Angelina Jolie க்கு .அருமையாக செய்திருக்கிறார்.பல இடங்களில் கண்ணீர் விட வைத்து விட்டார்.ஆனால் இந்த படம் ஒரு ஆஸ்கார் கூட வாங்கவில்லை (ஜோலிக்கு நிச்சியம் கொடுத்திருக்க வேண்டும்).ஆனால் ஆழமான உணர்வுகள் இல்லாத slumdog போன்ற படங்கள் எட்டு ஆஸ்கார் வாங்கும் போது நகைக்கவே தோன்றுகிறது.(ருத்ரன் அவர்கள் கூட இதையே சொல்லியிருந்தார்).அதென்னவோ பெண்களின் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் மனதை உலுக்கி விடுகிறது(ஹிந்தியில் பாஷன் படத்திற்கு பிரியங்காவும் கங்கனாவும் இரண்டு தேசிய விருதுகள் வாங்க அதுவே காரணம்..அவ்வாறு பல படங்கள் சொல்லலாம்.நன்றி.
@ விக்கி – ஆமாம். . பெண்களின் மனம் ஒரு அதிநுட்பம் வாய்ந்த மெல்லிய இடம் அல்லவா . .அந்த உணர்வுகள் பாதிக்கப்படும் போதோ அல்லது தட்டிஎழுப்பப்படும்போதோ, விளைவுகள் எதிர்பாராதவையாகவே பெரும்பாலும் இருக்கும் . .இந்த சைட்டின் தலைப்புக்கு மேல் நான் கொடுத்துள்ள 4 months, 3 weeks and 2 days படத்தின் விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள் . . நன்றி . .
இப்போதான் இந்தப் படத்தைப்பார்த்துட்டு வந்தேன். என் வழக்கம்போல் (படம் பார்த்த பின்பே விமரிசனம் படிப்பேன்) வலையில் தேடுனதில் உங்க விமரிசனம் கிடைச்சது.
பறவைகள் வில்லனுடன் சண்டை ராமாயண ஜடாயுவை நினைவுபடுத்துது.
இந்த ஸ்பெஷல் சமாச்சாரங்கள் எல்லாம் எங்கூரு வேடா NZ செஞ்சதாக்கும்!
@ துளசி கோபால் – ஜடாயு? எங்கியோ போயிட்டீங்க . .வேடா NZ – அங்க நிக்குறோம் நாம !! 🙂
Jurassic Park பார்க்கும் பொது இருந்த (அந்த சின்ன வயசல) அந்த fantasy adventure ஆர்வம் இப்ப இல்ல. இருந்தாலும் படம் நல்ல இருந்தது. நான் இந்த படம் நிறைய hype இறங்கினதுக்கு அப்பறமா பார்த்தேன், இதுவும் காரணமா இருக்கலாம். மெய்யாலுமே “நெய்திரி” graphic designing பிரமாதம்பா. எனக்கும் பிடிச்சிருந்தது. sam warthington க்கு அடுத்தடுத்து பெரிய ப்ராஜெக்ட். இப்ப தான் terminator salvation (இதுவும் james cameron முந்தைய படைப்போட பகுதிதான்) அவதார்றும் James cameron படந்தான்.