Avengers – 3 – The Avengers

by Karundhel Rajesh April 22, 2012   English films

சென்ற கட்டுரையில் நாம் பார்த்த மூன்று மான்ஸ்டர்கள்தான் அறுபதுகளில் அமெரிக்க காமிக்ஸ் உலகின் மிக விரும்பப்பட்ட கதாபாத்திரங்களில் சிலர். இந்த மூவரையும் உருவாக்கிய பிரம்மா ஸ்டான் லீ, ஒரு பிரம்மாண்டமான ஹீரோக்கள் குழுமத்தை உருவாக நினைத்தார். அப்படி ஏற்கெனவே DC காமிக்ஸின் ஜஸ்டிஸ் லீக்குக்குப் போட்டியாக அவர் உருவாக்கியிருந்த Fantastic Four, பலத்த வெற்றியடைந்திருந்தது. ஆனால், ஃபண்டாஸ்டிக் ஃபோர் கதையின் நாயகர்கள், பிரம்மாண்ட ஹீரோக்கள் அல்லர். ஒரு வெற்றிகரமான ஹீரோ என்றால், அவனுக்கென்று சில குணாதிசயங்கள் உண்டு. அப்படி சில குணாம்சங்களோடு அதன்பின் அவர் உருவாக்கிய மூன்று கதாபாத்திரங்களை ஒருங்கிணைத்து, ஒரு அதிரடி குழுமம் அமைப்பது ஸ்டான் லீயின் யோசனை. அதனால், ஜஸ்டிஸ் லீக்கில் இருக்கும் இரண்டு பிரம்மாண்ட ஹீரோக்களைக் (Batman & Superman) கொஞ்சமாவது ஈடுகட்டும் வகையில் ஒன்றிரண்டு நபர்கள் வேண்டும் என்று அவர் நினைத்தபோது, கிட்டத்தட்ட பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் உருவான காலகட்டத்திலேயே உருவான மற்றொரு கதாபாத்திரத்தின் நினைவு ஸ்டான் லீக்கு வந்தது. அந்தக் கதாபாத்திரத்தோடுதான் ஸ்டான் லீயின் காமிக்ஸ் வாழ்க்கை தொடங்கியிருந்தது.

ஆம். 1941 மே மாதத்தில், தனது பதினெட்டரையாவது வயதில், அந்தக் காமிக்ஸில், ஃபில்லராக ஒரு மிகச்சிறிய கதையின் மூலம்தான் அறிமுகமாகியிருந்தார் ஸ்டான் லீ என்பது இந்தத் தொடரின் முதல் பகுதியைப் படித்த நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

September 1963. இந்த மூன்று மெகா ஹீரோக்கள் ஒன்றுசேர்ந்து மிரட்டிய முதல் கதை வெளிவந்தது. இந்த மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்து, Ant-Man என்று இன்னொரு ஹீரோவும், The Wasp என்ற ஒரு ஹீரோயினும் அக்கதையில் இடம்பெற்றிருப்பார்கள். இந்த இருவருமே ஸ்டான் லீயின் உருவாக்கங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

இந்தக் கும்பலின் பெயர் – The Avengers. கதையின் வில்லன் – தோரின் சகோதரன் லோகி.

இந்தக் கதை பலத்த வரவேற்பு பெற்றது. இக்கதையோடு ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. இதன்பின் தொடர்ச்சியாக இந்த சீரீஸ் வெளிவரவும் ஆரம்பித்தது.
இந்த சீரீஸின் இரண்டாவது காமிக்ஸில், இந்தக் கும்பலிலிருந்து ஹல்க் வெளியேறிவிடுகிறான். அவனது நிலையில்லாத ஆளுமை, பிற ஹீரோக்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவனாகவே நினைத்ததே காரணம். அப்படி வெளியேறிய ஹல்க்கைத் தேடி, மற்ற கதாநாயகர்கள் பயணம் மேற்கொள்ளும்போது, தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஹீரோதான் இந்த கும்பலின் நான்காவது மற்றும் தலையாய ஹீரோ. அவர் கண்டுபிடிக்கப்பட்டதும் சீரீஸின் நான்காவது காமிக்ஸில்தான்.

உண்மையில், இந்த ஹீரோக்களுக்கெல்லாம் சீனியர் அவர். இந்த ஹீரோ உருவான ஆண்டு – 1941 மார்ச். ஒரு கடுமையான தேசபக்த ஹீரோ வேண்டும் என்று ஜோ சைமன் என்ற பிரபல காமிக்ஸ் எழுத்தாளர் நினைத்தபோது – அந்த ஆண்டையும் மனதில் வையுங்கள். இரண்டாம் உலகப்போரின் உச்சம் – உருவான கதாநாயகனே நமது புதிய ஹீரோ. மனிதர்களின் உச்சபட்ச தாங்கும் திறனும் செயல்புரியும் திறமையும் ஒருங்கே உடையவனாக இந்த ஹீரோ உருவாக்கப்பட்டான். இவனது ஆயுதம் – மிகவும் சக்திவாய்ந்த கேடயம். கைகலப்பில் தோற்கடிக்கமுடியாத திறன் படைத்தவன். இன்றுவரை, IGN காமிக்ஸ் ஹீரோக்கள் பட்டியலில், ஆல்டைம் நம்பர் ஆறு. அமெரிக்காவின் டாப் ஹீரோக்களில் ஒருவன். இத்தனை திறன்கள் இருந்தும், உலகப்போர் முடிந்து, நாற்பதுகளின் இறுதியில் மெல்ல மெல்ல மக்களால் மறக்கப்பட்டு மறைந்துபோய் விட்டான் இவன்.

ஆகவே, மறுபடியும் ஸ்டான் லீயின் மூளை குறுக்கில் வேலை செய்த பலன், ஹல்க்கைத் தேடிச் சென்ற ஹீரோக்கள், இந்த ஹீரோவைக் கண்டுபிடித்ததாக ஒரு கதையை அமைப்பதில் முடிந்தது. அது டக்கராக வேலை செய்தது. தனியாக இருந்தபோது மக்களால் விரும்பப்படாத ஹீரோ, கும்பலில் சேர்ந்தவுடன் மறுபடி மக்களால் விரும்பப்பட்டான்.

இங்கே ஒரு பெர்ஸனல் கருத்து: நான் படித்த வரையில், எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரே ஹீரோ இந்த ஹீரோதான். அடுத்த இடம்: சூப்பர்மேன்.
இப்படித்தான் அவெஞ்சர்ஸ் காமிக்ஸின் வரலாறு ஆரம்பித்தது. அந்தப் பழைய ஹீரோ – யெஸ். கேப்டன் அமெரிக்கா.

1942ல், ஸ்டீவ் ரோஜர்ஸ் என்ற காமிக்ஸ் புத்தக எழுத்தாளர், அமெரிக்க ராணுவத்தில் சேர முயற்சிப்பதிலிருந்து கேப்டன் அமெரிக்காவின் கதை துவங்குகிறது. ஆள் மிகவும் ஒல்லியாகவும் வீக்காகவும் இருப்பதால், ராணுவத்திலிருந்து ரிஜக்ட் செய்யப்படுகிறார். அப்போது, ஜெனரல் செஸ்டர் பில்லிப்ஸினால், ஒரு குறிப்பிட்ட பரிசோதனைக்காக ரோஜர்ஸ் செலக்ட் செய்யப்படுகிறான். மருத்துவர் ஆப்ரஹாம் எர்ஸ்கீனின் கண்டுபிடிப்பான ஒரு மருந்து, இவனது உடலில் செலுத்தப்படுகிறது. இதனால், மனிதர்களிலேயே மிகச்சக்திவாய்ந்தவனாக மாறிப்போகிறான் ரோஜர்ஸ். ஆனால், மருத்துவர் ஆப்ரஹாம் எர்ஸ்கீன் கொல்லப்பட்டுவிடுவதால், இந்த மருந்தின் ஃபார்முலா யாருக்கும் தெரியாமல் அழிந்துவிடுகிறது. எனவே, அமெரிக்க அரசாங்கமே ரோஜர்ஸுக்கு ‘கேப்டன் அமெரிக்கா’ என்ற பெயரை அளித்து, கேடயம், ஹீரோ உடை அகியவற்றையும் அளிக்கிறது. அதே சமயம், ரோஜர்ஸ், அமெரிக்க ராணுவத்தின் சோனி சிப்பாயாகவும் வேடமிடுகிறான்.

இதுதான் கேப்டன் அமெரிக்காவின் கதை. உலகப்போரின் முடிவில், வட அட்லாண்டிக்கில் ரோஜர்ஸ் பயணித்த விமானம் வெடித்து, கடலில் ரோஜர்ஸ் வீசப்பட்டு, அதன்பின் தொலைந்துபோய்விட்டதாக ஒரு காமிக்ஸ் கதை இருக்கிறது. இக்கதைதான் கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளப்பட்டது.

சென்ற ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில், மேலே சொன்ன கதை பெரும்பாலும் அப்படியே சொல்லப்பட்டிருக்கும். கூடவே, கேப்டன் அமெரிக்கா, 70 ஆண்டுகள் கழித்து மீண்டும் துயில் எழுவதாக அதன் க்ளைமேக்ஸ் முடிந்திருக்கும்.

இப்படி ஆரம்பித்த அவெஞ்சர்ஸ் வரலாறு, பழைய ஹீரோக்கள் விலகி, பல புதிய ஹீரோக்கள் அறிமுகம், மறுபடியும் பழையவர்களில் சிலர் திரும்பி வந்தது, சிலரின் கௌரவ வேடம் என்றெல்லாம் போய், ’புதிய அவெஞ்சர்கள்’, ‘பலம்வாய்ந்த அவெஞ்சர்கள்’, ‘இருண்ட அவெஞ்சர்கள்’ என்பதுபோல பல அவதாரங்கள் எடுத்துள்ளது.

இந்த அவெஞ்சர்களின் பொதுவான நோக்கம் என்னவெனில், எந்த ஒரு தனிப்பட்ட ஹீரோவினாலும் முறியடிக்கமுடியாத சக்தியை அனைவரும் சேர்ந்து எதிர்ப்பதுதான். இவர்களை ஒன்றுசேர்க்கும் கோஷம் – ’Avengers Assemble!’ என்பதே.

இத்தனை வெற்றிகரமான ஒரு காமிக்ஸ் சீரீஸை ஹாலிவுட் விட்டுவிடுமா? அவெஞ்சர்ஸ் காமிக்ஸை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள், எப்போதோ துவங்கிவிட்டன. இனிவரும் கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது, இதோ இன்னும் ஐந்து நாட்களில் வெளிவர இருக்கும் திரைப்படம் பற்றி. ஹாலிவுட் இதுவரை கண்டிராத பிரம்மாண்டத்தோடு வெளிவர இருக்கும் இப்படம் பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் – விரைவில்.. வெகு விரைவில் !

தொடரும் . . .

  Comments

10 Comments

  1. I love spider Man a lot ( next is bat man ), the reason is he is different from other super heroes , he is just a teenager who is longing for the love of his next door gal , I heard avengers got a rating of 9.1 super waiting 4 the movie

    Reply
  2. பாஸ் எனக்கும் சூப்பர்மேன் பிடிக்காது. ஆனால் Smallville series பாத்திருக்கீங்களா…. சூப்பர்மேன் சூப்பர்மேனாக உருவவெடுக்கும் வரை உள்ள கதை. சூப்பர்மேன் சிறுவயதில் இருந்து சூப்பர்மேனாக ஆகும் வரை. சூப்பர்மேன் உடையை போடும் போது series நிறைவு பெற்றுவிடும். சக்திகளை வைத்து கொண்டு சாதாரண மனிதனாக வாழ ஆசைப்படும் clark பாத்திரம்.

    மொத்தம் 10 seasons ….கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் அதில் வரும் வில்லன் lex luthorகாவே பார்த்தேன். கண்டிப்பாக இந்த வில்லனை பார்த்து நீங்க நல்லவரா கெட்டவரா என கேக்கலாம்

    Reply
  3. @ karthik – உண்மைதான். ஸ்பைடர்மேன், உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமான ஹீரோ. இளைஞன். ஜாலியான நபர். கூடவே கொஞ்சம் introvert கூட. இந்த அம்சம்தான் இப்போது வர இருக்கும் ‘Amazing Spider Man ‘ படத்தின் மைய இழை. கட்டாயம் அப்படம் கலக்கப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    @ லக்கி – வசக்கப்படி, Smallville கொஞ்சமே கொஞ்சம் பார்த்ததோட சரி. அதைப்பத்தி ஆனா தெரியும். எப்படியும் சீக்கிரம் முழுமையா பார்க்க முயற்சி பண்ணுறேன். sure .

    Reply
  4. DID U LIKE CAPT.AMERICA FILM?

    Reply
  5. as u told..i also hate capt.america until..i saw that film..adhu oru masala padam thaan..but it was released at the right time b4 the avengers team..all the gadgets including his shield will be designed by howard stark..tony’s dad:)..chance kediakium podhu try watching it

    Reply
  6. // I didn’t 🙂 //

    தல.. எந்த அர்த்தத்தில் சொன்னீங்கன்னு தெரியலை. பார்த்துப் பிடிக்கலைன்னா ஓகே. இன்னும் பார்க்கலைன்னா… கண்டிப்பா பாருங்க. U wont’ regret.

    Reply
  7. நான் ஸ்பைடர்மேன் காமிக்ஸ் படிச்சதில்லை… எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹீரோ பேட்மேன்தான். (ஒன்லி கார்டூன் மற்றும் நோலனின் படங்கள்) பேட்மேனின் டெக்னாலஜி பிடிக்கும். சூப்பர்மேன் படங்கள் கொஞ்சமும் பிடிக்காது… (லாஜிக் துளியும் கிடையாது… சாட்டிலைட்ல கயிறு கட்டினமாதிரி பறப்பாரு)

    Reply
  8. Capt America……படமா வந்துருச்சா………..”எனக்கே” தெரியாதே……….

    Reply

Join the conversation