Avengers – 5 – The Film
முன்குறிப்பு – இந்தக் கட்டுரையை நிதானமாகப் படிக்கும்படி நண்பர்களைக் கெட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் இதில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை நன்கு புரிந்துகொள்ளமுடியும்.
‘The Avengers‘ காமிக்ஸ் சம்மந்தப்பட்ட அத்தனை பிரதான விபரங்களையும் பார்த்தாகிவிட்டது என்று நினைக்கிறேன். இனிமேல், இந்தக் கட்டுரையில், இந்தத் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம். அடுத்த கட்டுரை, இப்படத்தின் விமர்சனம். அத்தோடு இந்த சீரீஸ் நிறைவுறுகிறது (கருந்தேளில் முதன்முதலில் நிறைவடைந்த சீரீஸ் என்ற பெருமையும் இதற்கு உண்டு(???!!??). அடுத்து வெகுவிரைவில் நிறைவுறப்போவது LOTR).
அவெஞ்சர்ஸ் கதையைத் திரைப்படமாக எடுப்பதில் இருந்த பிரதான சிக்கல் என்னவென்றால், இக்கதையில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்ததே. ஒவ்வொரு சூப்பர்ஹீரோவின் கதையையும் படத்தில் காண்பிக்கவே நான்கைந்து மணி நேரம் ஆகிவிடும். இதில் அவெஞ்சர்ஸ் கதையை எப்படி திரையில் காண்பிப்பது? ஆகவே, மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தார், ஒரு யோசனையை செயல்படுத்திப்பார்க்க முடிவுசெய்தனர். ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒவ்வொரு திரைப்படம் எடுத்து வெளியிட்டால் என்ன?
இந்த யோசனையின் பேரில் முதன்முதலில் வெளிவந்த அவெஞ்சர்ஸ் படம், ’Iron Man‘. 2008 மேயில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியடைந்த படம் இது. இப்படத்தின் கூடவே எடுக்கப்பட்டு, இப்படம் வந்த அடுத்த மாதம் வெளியிடப்பட்ட படம், ‘The Incredible Hulk‘. ஹல்க் திரைப்படத்தை வெளியிடும் முன்னர் மார்வெல் நிறுவனத்தாருக்கு இருந்த சிக்கல் என்னவெனில், ஏற்கெனவே 2003ல், ’Hulk‘ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்தப் படம் சுமாராக ஓடியிருந்தது வேறு கதை. இருந்தாலும், இந்த ஒரிஜினல் படம், அவெஞ்சர்ஸ் கதையில் சம்மந்தப்படுத்திப் பார்க்கக்கூடிய ஹல்க்கின் ஆளுமைக்கு சரியான வெளிப்பாடாக இருக்கவில்லை என்றே மார்வெல் நிறுவனத்தார் கருதினர். எப்படியும் ஒரிஜினல் படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் வெளிவரவேண்டும் என்றும் ஏற்கெனவே மார்வெல் முடிவு செய்திருந்தது. ஆகவே, அவெஞ்சர்ஸ் படம் வெளிவருவதற்காக, அதற்கு முன்னர் ஹல்க்குக்கு ஒரு சரியான ட்ரெய்லராக, 2008ல் வெளியான Incredible Hulk இருந்தது.
இதன்பின்னர், 2010ல் Iron Man 2 வெளியானது. அதுவுமே மெகா வெற்றி அடைந்தது.
அவெஞ்சர் சீரிஸில் அடுத்த படமாக வந்தது, ‘Thor‘. மே 2011ல் வெளியிடப்பட்ட இப்படம், அவெஞ்சர்களில் ஒருவனான ‘தோர்’ என்ற கடவுளைப் பற்றிய கதையாக இருந்தது. பாக்ஸ் ஆஃபீசில் பெருவெற்றியடைந்த 2011ன் பதினைந்தாவது படமாக இருந்தது இப்படம்.
இதன்பின்னர், ஜூலை 2011ல் ‘Captain America: The First Avenger‘ என்ற அடுத்த அவெஞ்சர் படம் ரிலீஸ் ஆனது. அமெரிக்காவில் சுமாராக வசூல் அனாலும், உலகெங்கும் இப்படம் குவித்த பட்ஜெட்: 368 மில்லியன்கள் (பட பட்ஜெட் 140 மில்லியன்).
இப்படியாக, அவெஞ்சர்ஸ் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் ஒரு படம் என்ற மார்வெல் கனவு பலித்தது.
சரி. இதெல்லாம் ஒகே. ஆனால், மக்களுக்கு இந்த அவெஞ்சர்ஸ் படத்தைப் பற்றிய பில்டப்பை எப்படி ஏற்றுவது? ஒரே வழி என்னவெனில், இந்த ஒவ்வொரு படத்திலும், மற்ற படங்களைப் பற்றிய மிகச்சிறிய க்ளூவை எதாவது ஒரு ஷாட்டில் வைத்துவிடுவது. இதை மக்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம் என்று நினைத்தனர் மார்வெல் நிர்வாகத்தினர்.
இதன்படி, இனிமேல் வரிசையாக சூப்பர் ஹீரோ படங்கள் வரப்போகின்றன என்பதற்கு ஒரு க்ளூவாக, Iron Man படத்தின் முதல் பாகத்தின் பாதியில், ஒரு காட்சியின் பின்னணியில், மொத்தம் மூன்றே செகண்டுகளுக்கு கேப்டன் அமெரிக்காவின் கேடயம் காட்டப்பட்டது.
கீழேயுள்ள சிறிய வீடியோவில், கேடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள மற்ற விஷயங்களையும் கவனியுங்கள். Iron Man வெளிவந்த காலத்தில் இந்த ரகசியத்தைக் கண்டுபிடித்த மிகச்சில ரசிக வெறியர்களில் இவரும் ஒருவர் என்பது புரியும்.
அதேபோல், இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் பெரும்பாலானவர்கள் செட்டில் இல்லாத சமயத்தில், ரகசியமாக ஸாமுவேல் ஜாக்ஸன் வழவழைக்கப்பட்டு, இப்படத்தின் டைட்டில்களுக்குப் பின்னர் நிக் ஃப்யூரி டோனி ஸ்டார்க்கை சந்தித்துப் பேசும் மிகச்சிறிய காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்புக்குழுவினருக்கே தெரியாத இந்த ரகசியம், படம் வந்தபின்னர்தான் அவர்களுக்கும் ரசிகர்களுக்கும் புரிந்தது. அந்தக் காட்சி மறுபடியும் உங்களுக்காக இங்கே. இந்தப் படம் வெளிவந்ததும், எப்படியும் எல்லா அவெஞ்சர்களையும் பற்றிய படங்கள் வரப்போகிறது என்று ரசிகர்களுக்கு ஒரு ஹேஷ்யமாக அமைந்த காட்சி இது.
இந்தக் காட்சியில், டோனி ஸ்டார்க்கை சந்திக்கும் நிக் ஃப்யூரி, உலகில் இருக்கும் ஒருசில சூப்பர்ஹீரோக்களில் ஸ்டார்க்கும் ஒருவன் என்று சொல்லி, அவெஞ்சர்கள் என்ற ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப்போவதாகவும் சொல்கிறார். எப்படியும் பின்னால் ஒரு நாள் Avengers என்ற படம் வரப்போகிறது என்பதற்கு ஒரு அத்தாட்சியாக இந்தக் காட்சி அமைந்தது. ரசிகர்கள் குஷியடைந்தனர்.
இதன்பின், உடனேயே வெளியான ‘The Incredible Hulk‘ படத்திலும் ஒரு க்ளூ வைக்கப்பட்டது.
படத்தின் இறுதியில், டைட்டில்களுக்குப் பின்னர், டோனி ஸ்டார்க், ஜெனரல் ராஸுடன் பேசுவது போன்ற ஒரு காட்சி உண்டு. அதில், ஒரு டீமை உருவாக்கிக்கொண்டிருப்பதாக ஸ்டார்க் சொல்லும் வசனம் பிரசித்தியானது. இதன்மூலம், அவெஞ்சர்ஸ் படத்துக்கான அடுத்த க்ளூவும் கிடைத்ததால், ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
கூடவே, இப்படம் டிவிடியில் வெளியானபோது, படத்தின் தொடக்கத்தில், ஒரு முப்பது நொடிக் காட்சி இடம்பெற்றது. அதில், பனியில் உறைந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா காட்டப்பட்டார். இதோ கீழேயுள்ள வீடியோவில் அதைக் காணலாம். Incredible Hulk படத்தைத் திரையரங்கில் பார்த்திருக்கும் நண்பர்கள், இந்தத் துவக்கக்காட்சியைக் கண்டிருக்க முடியாது. இது டிவிடி எக்ஸ்க்ளூஸிவ். தற்கொலை செய்துகொள்ள ஆர்க்டிக் செல்லும் ப்ரூஸ் பேன்னரின் (ஹல்க்) அறிமுகத்தோடு, அவன் ஹல்க்காக மாறும் காட்சி, அதன்பின் அவனது கோபத்தால் ஒரு பெரிய பனிப்பாறை சிதறுவது என்ற காட்சியோடு இந்த ஓபனிங் ஸீக்வென்ஸ் முடியும். இப்போது, இரண்டாம் வீடியோவை நோக்குங்கள். தனது சிவப்பு உடையோடு, பனியினுள் புதைந்திருக்கும் கேப்டன் அமெரிக்காவின் உடல், ஹல்க்கின் அதிரடியால் வெளிப்படுவதைக் காணலாம். இது, ஹல்க் பட இயக்குநர் லூயிஸ் லெடெரியராலேயே உறுதிப்படுத்தப்பட்ட காட்சி.
இதன்பின் வெளிவந்தது Iron Man 2. இம்முறை, க்ளூக்களை அதிகமாகவே அள்ளித்தெளித்திருந்தனர். ஒரு உதாரணமாக, இரண்டாம் பாகத்தில் நிக் ஃப்யூரியும் டோனி ஸ்டார்க்கும் S.H.I.E.L.D. அலுவலகத்தில் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில், பின்னணியில் வீடியோக்கள் சில ஓடிக்கொண்டிருக்கும். அதில் ஒன்றுதான், கல்வர் பல்கலைக்கழகத்தில் நடந்த பெரும் அழிவு. ஹல்க் படம் பார்த்தவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி நன்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கல்வர் பல்கலைக்கழகத்தில்தான் ப்ரூஸ் பேன்னர் என்ற விஞ்ஞானி ஹல்க்காக மாறிய நிகழ்ச்சி நடந்தது. பேன்னர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மறுபடி வரும்போதுதான் ஜெனரல் ராஸின் படைகளால் தாக்கப்படுவார். இந்தத் தாக்குதல்தான் Iron Man 2 படத்தில் ஃப்யூரியும் ஸ்டார்க்கும் பேசும் காட்சியின் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல், அதே காட்சியில், இன்னொரு திரையில், ஒரு பெரிய பாலைவனத்தின் நடுவில் பெரிய பள்ளம் ஒன்றும் காட்டப்பட்டிருக்கும். Thor படத்தில், தோரின் சுத்தியல் பூமியில் விழும் நிகழ்வு நினைவிருக்கிறதா? பூமியில் விழுந்த சுத்தியல், இப்பாலைவனத்தில் ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காட்சி, ஐயர்ன் மேனில் ட்ரெய்லராகக் காண்பிக்கப்பட்டது. அதேபோல், ஐயர்ன் மேன் முதல் பாகத்தில் நாம் இரண்டு நொடிகளே பார்த்த கேப்டன் அமெரிக்காவின் கேடயம், இந்த இரண்டாவது பாகத்திலும் தெளிவாகவே காட்டப்பட்டது.
இதோ இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்தால், Iron Man மற்றும் Iron Man 2 ஆகிய படங்களில் மொத்தமாக ஒளிந்துள்ள அத்தனை க்ளூக்களையும் பார்க்கலாம்.
மேலே உள்ள வீடியோக்களில், Easter Egg என்றால், ரகசியம் என்று பொருள். அதேபோல், member of ten rings என்பது, Iron Man காமிக்ஸில் வரும் வில்லன் கும்பல்.
இதற்கடுத்து வெளிவந்தது, Thor. அதிலும் மிகச்சில க்ளூக்கள் இருந்தன. ஆனால் அதிலிருந்த க்ளூக்கள், இதுவரை வந்திருந்த தோர் காமிக்ஸ்களைப் பற்றியனவாகவே இருந்தன. இருந்தாலும், அந்தக் க்ளூக்களையும் பார்ப்போம் என்று நினைப்பவர்கள், இந்த வீடியோவைப் பார்க்கலாம்.
இதன்பின்னர் கடைசியாக வெளிவந்த Captain America திரைப்படத்தில், வழக்கப்படி கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் சம்மந்தப்பட்ட க்ளூக்கள் இருந்தன. அவற்றையும் கீழே பார்க்கலாம்.
இந்த எல்லா வீடியோக்களின் பொதுவான அம்சமும், இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீயின் சில நொடி கேமியோக்கள்தான். இந்த அத்தனை படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அதனையும் இந்த வீடியோக்களில் பார்க்கலாம்.
சரி. இதுவரை நான்கே கதாநாயகர்களைத்தானே பார்த்திருக்கிறோம் (Iron Man, Hulk, Thor & Captain America). ஆனால் அவெஞ்சர்ஸ் படத்தில் மொத்தம் ஆறு நாயகர்கள் என்று விளம்பரப்படுத்தப்படுகிறதே? அது என்ன சங்கதி என்று வினவுபவர்களுக்கு, தோர் படத்தில் Hawkeye என்ற நாயகன் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டான் என்று சொல்லலாம். தோரை வேட்டையாட வில் அம்பு கொண்டு அலையும் மனிதன் ஒருவனை நினைவிருக்கிறதா? மேலே தோர் வீடியோவிலும் அவன் வருவான். அதேபோல், ஆறாவது ஹீரோ, ஒரு பெண். Iron Man படத்தில், டோனி ஸ்டார்க்கின் அஸிஸ்டெண்டாக இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் ஸ்கார்லெட் ஜோஹான்ஸன், ‘நடாஷா ரோமனாஃப் (அல்லது) கறுப்பு விதவை (Black Widow) என்ற ஹீரோ(யின்) வேடத்தில் நடித்திருக்கிறார்.
பெர்ஸனலாக, இந்த அவெஞ்சர்ஸ் படத்தில் எனக்குப் பிடித்த நடிகை ஒருவர் இம்முறை நடித்திருக்கிறார். Cobie Smulders என்ற அந்த நடிகை, தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர். நிக் ஃப்யூரியின் அஸிஸ்டெண்ட்டான Maria Hill என்ற வேடத்தில் நடித்திருக்கும் இவர், How I met your Mother தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமானவர். எனக்கு மிகப்பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று.
இத்தனை சிறப்புக்களோடு வெளிவர இருக்கும் The Avengers படத்தின் மையக்கருவானது, வில்லனை ஒழிப்பதில் இல்லை. மாறாக, இந்த ஒவ்வொரு ஹீரோவுமே, பயங்கரமான ஈகோ உடையவர்கள் என்று இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்ததை நினைவுகொள்ளுங்கள். ஒருபக்கம் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனான டோனி ஸ்டார்க். இவனுக்கு, உலகைக் காக்கும் சூப்பர்ஹீரோ Iron Man தான்தான் என்று ஒரு ஈகோ உண்டு. மட்டுமல்லாமல், எவரது பேச்சையும் இதுவரை ஸ்டார்க் கேட்டதே இல்லை. தான் செய்வதே சரி என்ற கோட்பாடு உடையவன். இந்த ரோலுக்கு ராபர்ட் டௌனி ஜூனியரை விடப் பொருத்தமானவர் யார்?
அதேபோல், அடுத்து ஹல்க். இது ஒரு மிருகம். கோபம் வந்தால் பெரிய ராட்சதனாக மாறி, எதிரில் இருப்பதையெல்லாம் அடித்து உடைப்பவன். அத்தகைய கோபத்தில் யார் பேச்சைக் கேட்கப்போகிறான்?
அடுத்து தோர். இவன் மனிதனே அல்ல. ஒரு கடவுள். கடவுளாக இருக்கும் ஒரு நபர், யார் பேச்சைக் கேட்பான்? இவனும் ஹல்க் போல ஒரு மகா கோபக்காரன். போதாக்குறைக்கு, உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதமான ஒரு சுத்தியலை வேறு எப்போதுமே வைத்துக்கொண்டு அலைபவன்.
கேப்டன் அமெரிக்கா மட்டுமே கொஞ்சம் சாதுவான நபர்.
இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக்கொண்டு ஓடும் எருமைகளின் மேய்ப்பர், நிக் ஃப்யூரி. எப்படி இவர்களை மேய்க்கப்போகிறார் என்பதே படத்தின் பிரதான அம்சம். இவர்கள் ஒவ்வொருவரும், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் முதலில் முரண்டு பிடித்து, பின்னர் நட்பாகி உதவிக்கொள்வது திரைக்கதையில் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது என்று படித்தேன். ஆகையால், அதனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.
வெள்ளியன்று இப்படத்தைப் பார்க்கிறேன். ஆகவே, இந்த சீரீஸை இத்துடன் முடித்துக்கொள்வோம் நண்பர்களே. இதுவரை இந்த சீரீஸைப் பொறுமையுடன் படித்துவந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வெள்ளியன்றே படத்தின் விமர்சனம் வெளிவந்துவிடும்.
இதோ The Avengers படத்தின் முழுநீள trailer.
பி.கு
- The Incredible Hulk படத்தில் ஹல்க்காக நடித்த எட்வர்ட் நார்ட்டன், இப்படத்தில் இல்லை. அதற்குப் பதில், மார்க் ரஃபேலோ (Mark Ruffalo) ஹல்க்காகியிருக்கிறார்.
- அவெஞ்சர்கள் ஏதேனும் ஆபத்தின்போது ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வது ‘Avengers Assemble!‘ என்ற கோஷத்தின் மூலமாகவே.
- The Avengers படம், இதுவரை வெளியாகியுள்ள அத்தனை விமரிசனங்களிலும் அதிகபட்ச நட்சத்திரங்கள் வாங்கி, இது ஒரு அட்டகாசமான படம் என்று நிரூபித்துள்ளது.
- நண்பர்கள், இப்படத்தை எனக்கு முன்னர் பார்க்க நேர்ந்தால், ஃபேஸ்புக்கில் படம் எப்படி என்று தெரியப்படுத்த மறவாதீர்கள்.
- படத்தைத் தமிழில் பார்த்தால், தமிழ் காமிக்ஸ் படித்த டக்கரான உணர்வு கிடைக்கும்.
- The Avengers படத்தின் பட்ஜெட் – 220 மில்லியன் டாலர்கள். அதாவது, இதுவரை வெளிவந்துள்ள மிக அதிக பட்ஜெட் படங்களில், இதற்கு எட்டாவது இடம் (1. Pirates of the Caribbean: At World’s end – $300m, 2. Tangled – $260m & 3. Spider Man 3 – $258m).
முற்றும். சுபம்.
very nice aritical..thank you
எல்லாரும்.. ஜோரா ஒரு தடவை.. எழுந்து நின்னு கைதட்டுங்க.
தலை வணங்குகிறேன்.
டெடிகேஷன் = ராஜேஷ்.
இவ்வளவு அருமையா எல்லா விஷயங்களையும் சொன்னதுக்கு நன்றி தல.. அவெஞ்சர்ஸ் பத்தி நிறையவே தெரிஞ்சிகிட்டேன் 🙂
படம் பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்றேன் 🙂
பாஸ் உண்மையிலையே உங்க டெடிகேஷன் ஆச்சர்யபடவைக்குது..,
ஆபிஸ் வேலை , ராஸலீலா மொழிபெயர்ப்பு இத்தனைக்கும் நடுவுல இவ்வளவு மேட்டர்களோட தொடர் பதிவு…
க்ரேட் பாஸ்..,
கதை புரியாதவர்கள் கூட உங்களுடைய இந்த சீரியஸ் படித்தால் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்..Avengers பார்பதற்கு முன் உங்களுடைய ப்ளாக் படிக்கசொல்லி என் நண்பர்களுக்கு பரிந்துரைத்து உள்ளேன்.
உங்கள் ப்ளாக்கில் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி
இந்த தொடரில் ஏற்கனவே ரெண்டு பதிவை படிக்கலனு நினைக்கிறேன்..இந்த கட்டுரையும் பாதிதான் வாசித்தேன் பாஸ்..மன்னிச்சுருங்க..அடுத்த கட்டுரையோட சேர்த்து மொத்தமா வாசிச்சுறேன்..உண்மையில், நல்ல ஆய்வாளர் நீங்க..சினிமாவை பற்றிய நல்ல உலகம் தங்களது பிளாக்.நன்றி.
அருமையான பதிவு ..மிக்க நன்றி
விடà¯à®Ÿà®¾à®²à¯ வீடியோ பà¯à®³à®¾à®•à¯ ஆரமà¯à®ªà®¿à®¤à¯à®¤à¯ விடà¯à®µà¯€à®°à¯à®•à®³à¯ போல௠இரà¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯‡! 🙂 நலà¯à®² தொடரà¯, மாரà¯à®µà¯†à®²à®¿à®©à¯ பாணியில௠ஒவà¯à®µà¯Šà®°à¯ ஹீரோவà¯à®•à¯à®•à¯à®®à¯ (almost..) ஒர௠பதிவ௠போடà¯à®Ÿà®¤à¯ நலà¯à®² à®à®Ÿà®¿à®¯à®¾!
செமயா சொல்லியிருக்கீங்க பாஸ். முதல் முதலில் உங்க ப்ளாக்குல “முற்றும். சுபம்.” என்ற சொற்களைப் பார்க்கிறேன். கன்க்ராட்ஸ். :)))
உங்கள் தேடல், உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இதுவரை நானும் கொஞ்சம் விடயங்களை மார்வல் படங்களில் நோட் பண்ணி வந்திருந்தாலும் ஏகப்பட்ட விடயங்களை மிஸ் செய்தது இப்போது தான் தெரியவருகிறது. நன்றி.
கிரேட் ராஜேஷ். நிறைய புதிய விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி. நாளைக்கு காலையில படத்த பார்த்துட்டு விரிவா ஒரு கடுதாசி எழுதுறேன்.
//பழைய புக்ஸ், புது தகவல்கள்! டெக்ஸ், காரிகன், ரிப்கிர்பி @ bladepedia.com said://
அடப்பாவிகளா……..
Tharumaaru intro ponga :-)Semaya pep yethi vittuteenga…Udambu murukkeri irukken..nalaikku paaththe aaganum 🙂
அருமையான பதிவு ..மிக்க நன்றி
Thambi , review innum varala….
தல , ஆனா எங்க ஊருல சொதப்பிட்டானுங்க . எங்க ஊர்ல மட்டும் 4:3 format , ஆடியோ கன்றாவி , ஒன்னுமே புரியல . இதுல 10 நிமிசம் படத்துல ஆடியோவ போடல . நீங்க கொஞ்சம் வெளாவாரியா விமர்சனத்த போடுங்க :)))
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 🙂