Batman: Arkham City (2011) – PS3 Game Review

by Karundhel Rajesh October 28, 2011   Game Reviews

Batman: Arkham Asylum (click to read) என்ற, சென்ற வருடம் வந்த முதல் பகுதியில், ஆர்க்ஹாம் அஸைலத்துக்குள் மாட்டிக்கொண்ட பேட்மேன், இந்த இரண்டாம் பகுதியில், கோதம் நகரிலுள் புகுந்துவிட்ட கிரிமினல்களை அடி துவம்சம் செய்வது எப்படி என்பதுதான் இந்த game.

உலகெங்கிலும் இந்த விளையாட்டு அக்டோபர் மாதம் 21 ம் தேதி வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அன்றே, இதன் Playstation 3 copyயை வாங்கிவிட்டேன். காரணம், அன்றுதான் ப்ளேஸ்டேஷன் 3 யையும் வாங்கினேன். PS3 வாங்கியவுடன், அன்றுதான் இந்த கேமும் வந்திருப்பதைக் கடைக்காரர் சொல்ல, அதன்பின் என்ன? குஷிதான்.

Bruce Wayne, போலீசாரால் சிறைப்பிடிக்கப்படுவதில் தொடங்குகிறது இந்த விளையாட்டு. காரணம், கோதம் நகரின் பயங்கர வில்லன்களில் ஒருவரான டாக்டர் ஹ்யூகோ ஸ்ட்ரேஞ்ச். கோதம் நகரின் கிரிமினல் பின்னணி உள்ள அத்தனை மக்களும், நகரின் ஒரு பகுதியில் சிறைவைக்கப்படுகிறார்கள். நகரின் பிற பகுதிகளில் இருந்து பெரிய மதில்சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் பகுதி. நகரின் மேயர் ஷார்ப் என்பவர்தான் இதன் சூத்ரதாரி. இதனை எதிர்ப்பதால், ப்ரூஸ் வேய்னும் சிறைப்பிடிக்கப்படுகிறார். கடத்தப்படும் ப்ரூஸ், தன்னைப் பிடித்திருப்பது ஹ்யூகோ ஸ்ட்ரேஞ்ச் என்பதை அறிந்துகொள்ள, கட்டுண்டு கிடக்கும் ப்ரூஸின் முன்னர், தனது திட்டத்தை அறிவிக்கிறார் ஸ்ட்ரேஞ்ச். அன்றைய இரவில், Protocol 10 என்ற அவசர நிலையைப் பிரகடனம் செய்து, நகரைத் தன வசப்படுத்துவதே அவரது திட்டம். ஆனால், Protocol 10 என்பது என்னவென்று சொல்ல மறுத்துவிடுகிறார் ஸ்ட்ரேஞ்ச்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிக்கிறார் ப்ரூஸ். தனது பணியாளர் ஆல்பர்ட்டின் உதவியோடு, பேட்மேன் உடை அவருக்கு வானில் இருந்து வந்துசேர்கிறது. கேமின் முதல் பத்து நிமிடங்களிலேயே, பேட்மேன் தயார் !

இதன்பின், நகரின் தேர்ந்த குற்றவாளிகளில் ஒருவனான டூ ஃபேஸ் (Harvey Dent என்ற பெயரில் The Dark Knight படத்தின் கதாபாத்திரத்தைப் பற்றித் தெரியுமல்லவா?), Catwoman என்ற பெயரில் வலம்வரும் செலீனா கேய்ல் என்ற பெண்ணைக் கடத்திவிடுகிறான். காரணம்? அவனது திட்டங்களுக்கு அவள் இடையூறாக இருந்ததுதான். அவள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை, பேட்மேன் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார். அவளைக் காப்பாற்றுகிறார்.

அங்கே, செலீனாவை யாரோ சுடுகிறார்கள். அது, ஜோக்கர்! ஜோக்கரைத் துரத்துகிறார் பேட்மேன். பல சண்டைகளுக்குப் பின்னர், ஜோக்கரை நெருங்கும் வேளையில், பேட்மேனை அடித்துவீழ்த்தி, அவரது உடலில், தனது ரத்தத்தை செலுத்திவிடுகிறான் ஜோக்கர். அவனது ரத்தத்தில் இருக்கும் ஒருவித தோல் குறைபாட்டினால், அவனது உடலில் சதை உரிந்துகொண்டே வருகிறது. ஆகவே, பேட்மேன் தப்பிக்கவேண்டும் என்றால், இந்த வியாதியின் மருந்தை, Mr. Freeze என்ற மற்றொரு வில்லனிடம் இருந்து பெறவேண்டும் என்று சொல்கிறான் ஜோக்கர் (இந்த Freeze கதாபாத்திரத்தில், தொண்ணூறுகளில் வந்த ‘Batman & Robin‘ திரைப்படத்தில், அர்னால்ட் ஷ்வார்ட்செநிக்கர் நடித்தது நினைவிருக்கிறதா?).

ஆனால், இங்குதான் ஒரு ட்விஸ்ட். Mr.Freeze, பெங்குவினால் சிறைபிடித்துவைக்கப்பட்டிருக்கிறார். காரணம்? கோதம் நகரின் தலைசிறந்த குற்றவியல் சக்கரவர்த்தியாக, தான்மட்டுமே இருக்கவேண்டும் என்ற பெங்குவினின் ஆணவம். ஆகவே, Freeze இல்லையெனில் ஜோக்கர் இறந்துவிடுவான் என்பதால்தான் அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்.

ஆகவே, பெங்குவினை வீழ்த்தவேண்டும். Freeze சிறைமீட்கப்படவேண்டும். மருந்து தனது உடலில் செலுத்தப்படவேண்டும் ஆகிய காரணங்களுக்காக, ஆர்க்ஹாம் அஸைலத்தின் கட்டவிழ்க்கப்பட்ட கொடூரக் கிரிமினல்களை எப்படி பேட்மேன் துவம்சம் செய்கிறார் என்பதே பாதிக்கதை. இதன்பின், Protocol 10 என்னவானது? விளையாடித் தெரிந்துகொள்ளுங்கள்.

Game Controls

முந்தைய பாகத்தைப் போலவே, இந்தப் பாகத்திலும் அதே கண்ட்ரோல்கள். ஆனால், இதில், பேட்மேனின் agility ஏராளமாக இம்ப்ரவைஸ் செய்யப்பட்டிருப்பது இதன் ப்ளஸ் பாயின்ட். காட்சிகளும் துல்லியப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இதனைப் ப்ளேஸ்டேஷனில் இரவில் இருட்டில் அமர்ந்து ஹோம் தியேட்டரில் ஆடும் அந்த உணர்வு இருக்கிறதே. அடடா !

இந்த விளையாட்டில்,பல sub plots இருக்கின்றன. அங்கங்கே இருக்கும் சில இடங்களை நெருங்கினால், அந்த sub plots activate செய்யப்பட்டு, அது ஒரு தனி கேமாக விரிகிறது. உதாரணத்துக்கு, Victor Zsasz என்ற சைக்கோ கொலைகாரன். முதல் பாகத்தில் கொஞ்ச நேரமே வரும் இவன், இப்பாகத்தில் பிரதான வில்லன்களில் ஒருவன். ஒவ்வொரு முறையும் பேட்மேனிடம் தொலைபேசும் இவனது இடத்தை, குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்காவிட்டால், பணயமாக வைத்திருக்கும் பெண்ணைக் கொன்றுவிடுவான். இது, ஒரு sub plot. இதைப்போல் பல plot கள் உள்ளன.

பேட்மேன் கதைகளில் வரும் அத்தனை வில்லன்களையும் ஒருங்கே காணவேண்டுமென்றால், அதற்குச் சரியான வழி, இந்த கேம் விளையாடுவதே.

அதேபோல், இதில் தனி எபிஸோட் ஒன்றில், Catwomanஆகவும் நாம் விளையாட முடியும். பேட்மேனுக்கு அவள் எப்படி உதவுகிறாள் என்பது தனிக்கதை.

மொத்தத்தில், கேம் பிரியர்களுக்கான அதிரடி தீபாவளிப் பரிசு இது. தவற விட்டுவிடாதீர்கள்.

பி.கு – 1. Playstation 3  வெர்ஷனின் விலை, 2500/- எனக்கு, 2200 க்கு கிடைத்தது. PC Version தாமதமாகத்தான் வெளியாகிறது.

2. 3-D யிலும் இந்த கேம் விளையாடமுடியும். உங்களிடம் 3D TV இருந்தால்.

இதோ Batman: Arkham City Trailer.

  Comments

7 Comments

  1. அஹம் அஹம்… என்னன்னு சொல்றது….. நீங்க விளையாட்டு பத்தி சொல்லி சொல்லியே என்ன உசுப்பெத்துரிங்க……..

    ஒரு முறை வாங்கின லேப்டாப் ல பிரின்ஸ் ஒப் பெர்சியா டூ துரோன்… விளையாடினேன். விளையாடி முடிய முன்னாடியே லேப்டாப் புட்டுக்கிச்சு.. அது விளையாட முடியலையே என்ட ஈகம் எனக்கு இன்னும்……நீங்க என்னன்னா பிச்சு உதருரிங்க 🙁

    Reply
  2. தொர என்னென்னமோ சொல்லுது……………Tetris ஆடியிருக்கீங்களா ???? எனக்கு தெரிஞ்ச பெரிய கேம் அதான்………………

    ஏன் உங்கள மாதிரி இணைய ஆட்கள் ஒண்ணு கூடி – கேம் குழுமம் ஒன்றை உருவாக்க கூடாது ?????????????????

    Reply
  3. //ஏன் உங்கள மாதிரி இணைய ஆட்கள் ஒண்ணு கூடி – கேம் குழுமம் ஒன்றை உருவாக்க கூடாது ?????????????????//
    நான் இதை பெரிதும் வரவேற்கிறேன்!

    Reply
  4. “கும்பல் கும்பலாக வரும் எதிரிகளை பேட்மேன் புடைக்கும் காட்சி. அட்டகாசம்.” – இது என்ன அநீதி? Batman செய்தால் அட்டகாசம், தமிழ் படத்தில் அண்ணன் விஜய் செய்தால் கிண்டலும் கேலியும்!! கருந்தேள் – உங்களை எல்லாம் கேட்கறதுக்கு ஆளே இல்லாம போயிடுச்சா?!!

    couldn’t resist!! 🙂

    Reply
  5. உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

    http://www.tamil10.com/

    ஒட்டுப்பட்டை பெற

    நன்றி

    Reply
  6. @ சண்முகம் – ஆமாம். நீருதான் மொதல் 🙂

    @ hajasreen – கவலைப்படாதீங்க. சீக்கிரமே புது லேப்டாப் வாங்கி இதையெல்லாம் வெளையாடுங்க. பட்டையைக் கிளப்பும் 🙂

    @ கொழந்த & எஸ்.கே – தமிழ் bloggers மத்தில ஒரு நண்டு மனப்பான்மை இருக்கு. யாராவது மேல போனா, அவங்களைப் புடிச்சி கீழ இழுக்குறது. அதுனால, இந்த குழுமம்லாம் உருப்படாது. வேணும்னா ஆங்கில குழுமம் எதுலயாவது சேர வேண்டியதுதான் 🙂

    @ சின்னா – ஹாஹ்ஹாஹ்ஹா :-). really liked ur comment bro :-). ROFL 🙂

    @ தமிழினி- நன்றி. உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்

    Reply

Join the conversation