Being John Malkovich (1999) – English
ஹாலிவுட்டின் திரைக்கதை வடிவத்தில், ‘சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலீஃப்’ (Suspension of Disbelief) என்ற ஒரு விஷயம், மிகப் பிரபலம். படத்தில் என்ன காட்டினாலும், அதனை நாம் வாயைப் பிளந்துகொண்டு பார்க்க வைப்பதே இது. நமது மூளை, படத்தில் காண்பிக்கப்படும் விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிடாமல், அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்ளும் வகையில், திரைக்கதையைப் புத்திசாலித்தனமாக அமைப்பது இவ்வகை. அந்த வகையில், பல ஹிட்கள் உள்ளன. ‘பேக் டு த ஃப்யூச்சர்’, ‘ஜுராஸிக் பார்க்’, ‘காட்ஸில்லா’, ஈ.டி’ போன்ற எண்ணற்ற உதாரணங்களைத் தரமுடியும். லேட்டஸ்ட்டாக, 2012.
இந்த வகையில் எழுதப்பட்ட ஒரு படமே இந்த ‘பீயிங் ஜான் மால்கோவிச்’. 1999ல் வெளிவந்து, உலக ஹிட் ஆகிய படம். இப்படிக்கூட ஒரு படத்தை எழுத முடியுமா என்று பலரையும் வாய் பிளக்க வைத்த ஒரு படம். மிகச் சாதாரண விஷுவல்களைக் காட்டியே மக்களைப் படத்தோடு ஒன்ற வைத்த ஒரு படம் இது.
படம், ஒரு பொம்மலாட்டத்தில் துவங்குகிறது. அமெரிக்காவில், இது பப்பெட் ஷோ. க்ரெய்க் ஷ்வார்ட்ஸ் என்பவன் (ஜான் க்யூஸாக்), ஒரு பப்பெட் ஷோ கலைஞன். மிக அருமையாக, நளினமாக இந்த பப்பெட் ஷோக்களை நடத்தும் திறமை அவனுக்கு இருக்கிறது. ஆனாலும், அதனால் பணம் எதுவும் அவனால் சம்பாதிக்க இயலவில்லை. அவனது மனைவியான ‘லாட்டே’ (கேமரூன் டியஸ்), ஒரு சிம்பன்ஸியையும், ராட்சத பல்லி ஒன்றையும் (இகுவானா), ஒரு கிளியையும் வளர்த்து வருபவள். கணவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பவள்.
பப்பெட் ஷோக்களை விட்டுவிட்டு, ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து, நாளிதழ்களில் வேலை தேட ஆரம்பிக்கிறான் க்ரெய்க். ஒரு விளம்பரத்தைக் கண்டு, அந்த இடத்துக்குச் செல்கிறான். அந்த ஆஃபீஸ், ஏழரையாவது தளத்தில் இருப்பதாக இருக்கும் விளம்பரம் அவனைக் குழப்புகிறது.
ஏழாவது தளத்தில் இருந்து லிஃப்ட் மேலேறுகையில், அதனை நிறுத்தினால், அது ஏழாவதற்கும் எட்டாவது தளத்துக்கும் இடையில் நின்று விடும். அங்கு இடையில் இருக்கும் ஒரு தளமே இந்த ஏழரையாவது தளம் என்று தெரிந்து கொள்கிறான். அங்கு, கூரை மிகத் தாழ்வாக இருப்பதால், குனிந்தே நடக்கவேண்டி இருக்கிறது. அங்கிருக்கும் லெஸ்டர் கார்ப் என்ற அலுவலகத்தில், டாக்டர் லெஸ்டர் என்ற மனிதர், இவனைத் தேர்வு செய்கிறார். அவரது பேச்சு விந்தையாக இருந்தாலும், ஃபைல்களை ஒழுங்குபடுத்தும் ஒரு வேலையில் க்ரெய்க் சேர்கிறான்.
அங்கு ஒருநாள், மேக்ஸீன் என்ற பெண்ணை அவன் சந்திக்கிறான். அவளின்பால் ஈர்க்கப்படுகிறான். அவளோ, க்ரெய்க்கைப் புழுவைப்போல் பார்க்கிறாள்.
ஒருநாள், கீழே விழும் ஒரு ஃபைலை எடுக்க முயல்கையில், ஒரு சுரங்க அறையைக் கண்டுபிடிக்கிறான் க்ரெய்க். அந்த அறையினுள் மெல்லத் தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கிறான். திடீரென்று கதவு மூடிக்கொள்ள, வேகமாக உள்ளே சறுக்கிச் செல்லும் பாதையில், பயத்துடன் க்ரெய்க் பயணிக்கிறான்.
அந்த வழி முடியுமிடத்தில், ஒரு திறப்பு இருக்கிறது. அதனுள் பார்க்கையில், அது, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் மால்கோவிச்சின் கண்கள் என்பதை அறிகிறான். அவரது தலைக்குள் தான் இருப்பதை உணர்கிறான் க்ரெய்க். அவரது கண்கள் மூலம் ,உலகைப் பார்க்கிறான்.
பதினைந்து நிமிடங்கள் இப்படி மால்கோவிச் பார்ப்பதை எல்லாம் தானும் பார்த்து, திடீரென எங்கோ உறிஞ்சப்பட்டு, ஒரு ஒதுக்குப்புறமான சாக்கடையில் வந்து விழுகிறான். அடுத்த நொடியிலேயே இந்த ஆச்சரியத்தை க்ரெய்க் புரிந்து கொள்கிறான்.
மறுநாள், மேக்ஸீனிடம் இந்த விஷயத்தை க்ரெய்க் சொல்ல, அவள் ஒரு புதிய திட்டத்தை வகுக்கிறாள். மால்கோவிச்சின் மண்டைக்குள் செல்லும் அந்த வழியை வைத்துப் பணம் சம்பாதிப்பதே அவளின் திட்டம். நாளிதழ்களில் ஒரு பூடகமான விளம்பரத்தைக் கொடுத்து, அதன் மூலம் வருபவர்களிடம் 200 டாலர்கள் வசூல் செய்யத் தொடங்குகிறார்கள் இருவரும். பதினைந்து நிமிடங்கள் மட்டுமே உள்ளே இருக்க முடியும்.
இவ்விஷயத்தைத் தனது மனைவியான லாட்டேவிடம் க்ரெய்க் சொல்ல, அவளுக்கு அந்தச் சுரங்கத்துக்குள் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை வலுக்கிறது. அவ்வாறு சென்று பார்த்ததும், தனது வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதல் அவளுக்கு வருகிறது. ஆணாக மாற வேண்டும் என்ற விருப்பம் அவளது இதயத்தைத் துளைக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மேக்ஸீன் மால்கோவிச்சைச் சந்திக்கிறாள். அந்தச் சமயத்தில் மால்கோவிச்சினுள் இருப்பது லாட்டே. மால்கோவிச்சும் மேக்ஸீனும் உறவு கொள்ள, மால்கோவிச்சினுள் இருப்பது லாட்டே என்று மேக்ஸீனுக்குத் தெரிகிறது. மேக்ஸீனும் லாட்டேவும் காதலில் விழுகிறார்கள். ஆகவே, மால்கோவிச்சை அடிக்கடி சந்தித்து உறவு கொள்கிறாள் மேக்ஸீன். அந்தச் சமயங்களிலெல்லாம், லாட்டே மால்கோவிச்சின் மண்டைக்குள் சென்றுவிடுகிறாள். இந்த வகையான உறவு லாட்டேவுக்கும் மேகஸீனுக்கும் பிடித்திருக்கிறது.
அதேசமயம், இந்த உறவைக் கண்டுபிடிக்கும் க்ரெய்க், ஒருநாள், லாட்டேவைக் கட்டிப்போட்டுவிட்டு, மால்கோவிச்சின் மண்டைக்குள் தான் புகுந்துகொள்கிறான். அப்பொழுது, மால்கோவிச்சைத் தன்னால் கட்டுப்படுத்த முடிகிறது என்று தெரிந்துகொள்கிறான். மால்கோவிச்சை முழுமையாக, ஒரு பொம்மலாட்ட பொம்மையைப் போல் கட்டுப்படுத்தி, அவருக்குள் நிரந்தரமாகத் தங்கிக்கொள்கிறான் க்ரெய்க். இதன்மூலம், மேக்ஸீனையும் தனது பக்கத்தில் வைத்துக்கொள்கிறான். அதாவது, வெளிப்புறத்தில் மால்கோவிச்சும் மேக்ஸீனும் திருமணம் செய்து வாழ, உள்ளே, க்ரெய்க் தான் மால்கோவிச்சைக் கட்டுப்படுத்துவதால், அவனும் மேக்ஸீனுமே உண்மையில் சேர்ந்து வாழ்கிறார்கள்.
இந்த நேரத்தில், அடைத்து வைக்கப்பட்டிருக்கும் லாட்டே தப்பிக்கிறாள். தனது கணவன் மால்கோவிச்சின் உடலுக்குள் நிரந்தரமாகத் தங்கிவிட்டதை அறிந்து, அதனைத் தடுக்க, க்ரெய்க்கின் முதலாளியான டாக்டர் லெஸ்டரைத் தேடி ஓடுகிறாள். லெஸ்டரின் வீட்டில் ஒரு அறையில், மால்கோவிச்சின் குழந்தைப்பருவம் முதல் தற்போதைய வயது வரை பல புகைப்படங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட, அது மால்கோவிச்சின் ம்யூசியம் என்றே சொல்லலாம். இதனை ஏற்கெனவே பார்த்திருப்பதால், லெஸ்டரின் வீட்டுக்குச் செல்கிறாள் லாட்டே.
அங்கு, லெஸ்டரின் மூலமாக, அவளுக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரியவருகிறது !
அந்த உண்மை என்ன? லெஸ்டரின் வீட்டில் இருக்கும் அந்த மர்ம ம்யூசியத்தின் காரணம் என்ன? மால்கோவிச்சினுள் இருக்கும் க்ரெய்க் என்ன ஆனான்? படத்தைப் பாருங்கள்.
படு விறுவிறுப்பாகவும், படம் முழுவதும் சஸ்பென்ஸாகவும் செல்லக்கூடிய படங்களில் , இப்படம் ஒரு முக்கியமான படமாகும். கிட்டத்தட்ட ‘த ப்ரஸ்டீஜ்’, ‘ஃபைட் க்ளப்’ போன்ற படங்கள் அளிக்கக்கூடிய ஒரு எஃபக்ட்டை அளிக்கிறது இப்படம். ஒரு நிமிடம் கூட தொய்வடையாத வேகம், இப்படத்தின் ஸ்பெஷாலிட்டி. படம் முடிகையில், அத்தனை முடிச்சுகளும் அவிழ்வது இப்படத்தின் விசேஷம். கடைசிக்காட்சி வரை உன்னிப்பாகப் பார்த்தால் மட்டுமே அனைத்துப் புதிர்களும் விளங்கும்.
வழக்கப்படி, இப்படத்தைப் பற்றியும் பல காட்சிகளை நான் சொல்லவில்லை. நான் சொல்லாத முக்கியக் காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன. அதேபோல், இப்படத்தைப்பற்றி வேறு தகவல்கள் எதுவும் கொடுக்க இயலாது. அப்படிக் கொடுத்தால், படத்தின் சஸ்பென்ஸ் போய் விடும். எனவே, படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்கள் அல்லது பின்னூட்டமிடுங்கள். இதைப்பற்றி விரிவாகப் பேசலாம்.
பீயிங் ஜான் மால்கோவிச் படத்தின் ட்ரெய்லர் இங்கே.
ஹா ஹா ஹா,
வந்துட்டோம்ல, மீ த பர்ஸ்ட்.
இந்த படத்தை நான் மொதல்ல பார்த்தது ஸ்டார் முவீஸ்ல தான். பயங்கரமாக பில்ட் அப் கொடுத்து விளம்பரம் பண்ணி வெயிட் பண்ணி பாக்க வச்சாங்க. இருந்தாலும் வொர்த் தான் என்பதை படம்பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன்.
அடப்பாவி . . விஸ்வா . . நீரு தான் ஆளவந்தான் . . ஒத்துக்கறேன் . . வுளுந்து கும்புடறேன் . . 🙂
இந்த படத்தை தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பில் தமிழில் எடுத்தால், “கனவுகளின் காதலனாக நான்” எப்புடி?
Jokes Apart, இது போல முயற்சிகளை எல்லாம் தமிழில் எடுக்க ஐடியா இருந்தால் யார் அந்த பிரபலம், காதலரை தவிர?
This comment has been removed by the author.
கருந்தேள் அண்ணே,
கூர்ந்து பாருங்க, காதலரும் தான் கூட களத்தில் இருக்கிறார். ஆனால் அவருடைய கமென்ட் பெரியதாக இருபதால் நான் மொதல்ல வந்துட்டேன். (என்று நினைக்கிறேன்)
🙂 ஆஹா . . ஒரு குழந்தை எப்படி காதலனாக முடியும் . . 🙂 (அங்க போட்டோம்ல பிட்டு . . நச்சுன்னு நங்கூரம் போல) . .
இந்தப் படத்தைத் தமிழில் எடுப்பது இயலாத காரியம் என்றே எனக்குப் படுகிறது. . எந்தப் பிரபலம், தான் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதைப் படத்தில் காட்ட விரும்புவார்?
அப்படியே சில காட்சிகளை நீக்கிவிட்டு தமிழில் எடுத்தால், இப்படத்துக்குப் பொருத்தம் பிரகாஷ் ராஜ் தான் என்று நினைக்கிறேன் ..
இல்லேன்னா விஜய டி ஆர்?? 🙂
ஆமாம் காதலரும் களத்தில் இருப்பதைப் பார்த்தேன் . . 🙂 ஆனா நீங்க அவரப் புடிச்சி ஓட்டிப்புட்டீங்க . . இதுக்கு அவரே பதில் சொல்வார் 🙂
கருந்தேள்,
என்னமோ தெரியல, இந்த ஹிந்தி நடிகர் பரேஷ் ராவல் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரையும் எல்லா ரோலுக்கும் பிட் செய்ய முடிகிறது.
BTW, காதலரை எப்புடி ஓட்ட முடியும்?
அவர் ஒரு சுறா, அவர் தான் அசல்.
நான் ஒரு நெத்திலி, நான் போலி.
//இந்தப் படத்தைத் தமிழில் எடுப்பது இயலாத காரியம் என்றே எனக்குப் படுகிறது. . எந்தப் பிரபலம், தான் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதைப் படத்தில் காட்ட விரும்புவார்?//
நம்ம ஆளுங்க இந்த டெக்னிக் எல்லாம் தெரிஞ்சவங்க. ரொம்ப நாள் முன்னாடி நாங்க கொரிய ஓல்ட் பாய் படத்த இந்தியாவில் எடுக்கவே முடியாது என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய (ஒரு காலத்தில்) பேவரிட் இயக்குனர் சஞ்சய் குப்தா அதையும் செஞ்சு காட்டிட்டார். ஆனால், முடிவு?
ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் காலி.
ஹீஹ்ஹி . . . இதோ வர்ராரு காதலரு .. சுறா வேகத்துல. . 🙂
பிரகாஷ் ராஜ் அண்ட் பரேஷ் ராவல் – கரெகிட்டு தான் . . அதா இருந்தாலும் அவங்கள ஃபிட் பெய்ய முடியுதே . .
நீங்க ஸிந்தா படம் தானே சொல்றீங்க . . அத நான் இன்னும் பாக்கல.. ஆனா கேள்விப்பட்டேன் . . ஹிந்தில சரி . .ஆனா தமிழ்ல இத எடுக்குறது கஷ்டம்னு தோணுது .. ஆனா நம்மாளுங்க கில்லாடிங்க . . எதுவும் நடக்கும் . . 🙂
முதல்.. 2 பாராதான் படிச்சேன். அப்படியே நிறுத்திட்டு, நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தால், இன்ஸ்டண்ட் வாட்ச் ஆப்ஷன்ல படம் இருக்கு.
நைட் பார்த்துட்டு… மீதியை படிக்கிறேன்.
இந்த விஸ்வா.. எங்க பார்த்தாலும், ‘மீ த ஃபர்ஸ்ட்’ஆ இருக்காரு.
போய் வேலையை பாருங்க விச்சு. அதுக்குதான் நாங்க இருக்கோமில்ல? 🙂
எங்கேயிருந்து புடிக்கிறீங்க இந்த மாதிரி படமெல்லாம்.கலக்கல் விமர்சனம். சூப்பர், மால்கோவிச் ஸாரி கருந்தேள்.
//ஹாலிவுட் பாலா said…//
அப்பு,இன்னும் ப்ளாக் ல இருக்கிங்களா?இல்ல சும்மா கேட்டேன்.
சரி கருந்தேள் அவர்களே.பாத்துடலாம்…. 🙂
//ஆனால் என்னுடைய (ஒரு காலத்தில்) பேவரிட் இயக்குனர் சஞ்சய் குப்தா அதையும் செஞ்சு காட்டிட்டார்.//
சஞ்சய் குப்தா ஒரு பாலிவுட் பேரரசு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
தோடா,
//சஞ்சய் குப்தா ஒரு பாலிவுட் பேரரசு!//
இந்த, இந்த கமெண்டுக்கு தான் இந்த பின்னூட்டமே போட்டேன்.
//கண்டிப்பாக பார்க்க வேண்டும் அறிமுகதிற்க்கு நண்றி.
//ஒரு சிறிய விஷயம் . .
உங்களை பற்றி தெரியாதா… இதை பெரிது படுத்த வேண்டாம்..இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கொஞ்ச நாளில் மறைந்துவிடும். எழுத்தை தொடருங்கள்…
//சஞ்சய் குப்தா ஒரு பாலிவுட் பேரரசு!//
என்ன கொடுமை சார் இது ?
இன்னமும் பார்க்கல… பாத்திட்டு வர்றேன் 😀
////சஞ்சய் குப்தா ஒரு பாலிவுட் பேரரசு!//
என்ன கொடுமை சார் இது ?//
ஐயா,
நீங்க யார், எவர் என்பது தெரியாது. இருந்தாலும் பயங்கரவாதிக்கு எதிராக பேசியதால் நீவிர் வாழ்க.
அடப்பாவிகளா . . தூங்கி எழுந்து பார்த்தா, இங்க ஒரு மெகா பாலிடிக்ஸே ஓடிக்கினு இருக்கி . . . பாவம் கமெண்டு போட வந்த Mahee யயும் உள்ளார இசுத்து உட்டுட்டீங்களா . . 🙂
என்ன கொடும சார் இது? 🙂 அப்ப பயங்கரவாதிக்கு நடக்குற அநியாயத்த தட்டிக் கேக்க இந்த உலகத்துல யாருமே இல்லையா ?????????
@ பாலா – விஸ்வா ஈஸ் பேக் இன் ஃபார்ம் . .!! அவுரு சுற்றுப்பயணத்த முடிச்சிட்டாருன்னு நினைக்குறேன் . . 🙂 அதான் மனுஷன் துள்ளி வெளாடுறாரு . .
@ மயிலு – இந்தப்படம் ரொம்ப நாளா என்னோட ஃபேவரைட் .. இப்பதான் எழுத முடிஞ்சது . . 🙂
@ இல்யூமினாட்டி – ரைட்டு !
@ பயங்கரவாதி – அது என்னமோ ரைட்டு தாங்க . . என்னோட கருத்தும் அது தான் :- )
@ அஷ்வின் – கண்டிப்பா பாஸ் . .நன்றி . .:-)
@ Mahee – பார்த்துட்டு வாங்க . . இங்க பாருங்க உங்க பேர்ல ஒரு மெகா பாலிடிக்ஸ் ஆரம்பிச்சாச்சி . . ஹீ ஹீ
///நீங்க யார், எவர் என்பது தெரியாது. இருந்தாலும் பயங்கரவாதிக்கு எதிராக பேசியதால் நீவிர் வாழ்க///
நன்றி வாத்யாரே..:)
நீங்க கவலைய விடுங்க தேளு …நம்ம புதுசா கட்சி தொடங்கிறம்… பயங்கரவாதிக்கு எதிரா உலகம் முழுவது சூறாவளி பிரச்சாரம் செய்யிறம்…
இவனுகளுக்கு நம்ம யாருன்னு காட்டுரம்(என்டா punchdialog எல்லாம் பேசுறன்னு மேர்ச்சலாயிடதிங்க … இப்பவிட்டா நாளைக்கு வேற எவனாவது முந்திடுவாணுக ) ஹிஹிஹி
நண்பரே,
நேற்றிரவே பதிவைப் படிக்க விரும்பினாலும் சிட்டு வேட்டை, மற்றும் வேலை! தந்த அயர்ச்சியில் உறங்கி விட்டேன். இப்போதுதான் படித்து முடித்தேன்.
திரையில் வெளியான காலத்திலேயே பார்த்தேன். இதன் திரைக்கதை பெரிய ஒரு விடயமாக அப்போது பேசப்பட்டது. உங்கள் கலக்கலான நடை படத்தை மீண்டும் பார்க்க தூண்டி விட்டது.
வாங்க விஸ்வா, விரதம் இருக்க நீங்கள் தயார் என்றால் வாருங்கள் :))
சுறா படத்தில் கூட சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலிஃபை அருமையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். சுறா உலக சினிமாவா அல்லது உள்ளூர் சினிமாவா அல்லது சர்வதேசக் குளோபல் சினிமாவென ஒரு முடிவிற்கு வருவது சிரமமாகவிருக்கிறது. நண்பர் கருந்தேள் சுறா படத்தைப் பார்க்காமல் அது குறித்து அவதூறு கூறுவது மனத்தை வருத்துகிறது. நீயுசிலாந்து தெருவில் பாடல் ஒன்றிற்கு விஜய் செய்யும் வித்தைகளை ஒலிம்பிக்கில் செய்தால் சீனாக்கார லின், ஜிங், சூங் போன்றவர்களிற்கு தகரத்தில்தான் விருது வழங்க வேண்டியிருக்கும். அவரின் திறமை அவரிற்கே தெரியவில்லை.
இந்தப் படத்தை தமிழில் சினிமாவாக எடுத்தால் பாக்யராஜ் சிறப்பாக செய்வார்.
நல்லதொரு பதிவு நண்பரே.
//இந்தப் படத்தை தமிழில் சினிமாவாக எடுத்தால் பாக்யராஜ் சிறப்பாக செய்வார்//
பழைய நினைவுகளில் எப்படி சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். வெகு சமீபத்தில் அவரை வைத்து ஒரு விளம்பரப்படம் எடுத்தார்கள். அந்த சமயத்தில் நான் பாக்கியராஜை பார்த்து நொந்து விட்டேன். குரலில் ஆரம்பித்து, பாடி லாங்குவேஜ் வரை அனைத்திலும் ஒரு முதிர்வு தென்படுகிறது. ஆகையால் அவர் சரிப்பட்டு வருவாரா என்பது தெரியாது.
நீங்கள் உங்கள் காலத்து பாக்கியராஜைப்பற்றி சொல்கிறீர்கள். நாங்கள் எங்கள் காலத்து பாக்கியராஜைப்பற்றி சொல்கிறோம் 🙂 {இப்படி எல்லாம் ஏதாவது சொன்னாத்தான் நாங்க யூத் ஆக தொடர முடியும்.}
காதலரே,
//வாங்க விஸ்வா, விரதம் இருக்க நீங்கள் தயார் என்றால் வாருங்கள் //
விரதம் முடிந்தவுடன் விருந்து உண்டு என்றால், தயார்.
//நேற்றிரவே பதிவைப் படிக்க விரும்பினாலும் சிட்டு வேட்டை, மற்றும் வேலை//
இரண்டுமே ஒன்றுதானே? அப்படியில்லையோ? வேறு வேறோ?
//சுறா உலக சினிமாவா அல்லது உள்ளூர் சினிமாவா அல்லது சர்வதேசக் குளோபல் சினிமாவென ஒரு முடிவிற்கு வருவது சிரமமாகவிருக்கிறது. //
அண்டவெளி பதிவர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு இனிமேல் இந்த பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், போன்றவர்களின் படத்தை எல்லாம் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
அந்த அளவிற்கு படம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். ஆகையால் சுறாவை ஒலக சினிமா என்று கூறலாமே?
விஸ்வா,
கருத்துக்களில் ஃபுல் ஃபார்மில் மிளிர்கிறீர்கள். உங்கள், எங்கள் காலத்து பாக்யராஜ் என்று நீங்கள் வழங்கியிருக்கும் கருத்து அருமை. இருந்தாலும் உங்கள் வயதை நீங்கள் கூட்டிச் சொல்ல நான் அனுமதிக்க முடியாது :))
விருந்துக்காகத்தானே விரதமே, சிக்க மாட்டேன் என்கிறதே நண்பரே.
சிட்டு வேட்டை, வேலை எல்லாம் ஒன்றில்லை வேலை ஹாபி, சிட்டு வேட்டை கடமை 🙂
அண்டவெளிப் பதிவரிற்கு இருக்கும் ஞானம் சுறா படத்தைப் பார்த்த அனைவரிற்கும் கிட்ட குத்தானந்தாவை வேண்டுகிறேன்.
// சிட்டு வேட்டை = கடமை//
அடிக்கடி கடமையில் மூழ்கி விடுகிறீர்கள் என்று உங்களை பலரும் சொன்னபோது நான் என்னமோ என்று நினைத்தேன்.
சிட்டு வேட்டையா???
இன்னாபா இது.. ஒரே வில்லங்கமா பேசறாங்க?? இங்க மாட்ரேஷனே கிடையாதா? 😉 😉
காதலரே… நான் தனியா.. உங்க ஊருக்கு வந்தா.. என்னையும் வேட்டையில் சேர்த்துக்கறீங்களா??
ஹாலிவுட் பாலா,
உங்கள் அபிமான நாயகன் ஜோஸஃப் ச்சேண்ட்ரா நடித்த வெளியாகியுள்ள THE SHARK திரைக்காவியம் உலகையே அதகளப்படுத்திக் கொண்டிருக்கையில் நீங்கள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கலாமா?
அந்த திரைக்காவியத்திலுள்ள டெக்னிகல் டீட்டெயில்களை உலகுக்கு எடுத்து சொல்ல உங்களை விட்டால் வேறு யார் உள்ளனர்?
தலைவர்,
அ.கொ.தீ.க.
//நான் தனியா.. உங்க ஊருக்கு வந்தா.. என்னையும் வேட்டையில் சேர்த்துக்கறீங்களா??//
பாலா அண்ணே,
நீங்க சீடர்கள் கியூவில் 13, 816வது ஆளாக இருக்கிறீர்கள். வெயிட் பண்ணுங்க.
காதலர் தான் ஒப்ன்னிங் பேட்ஸ்மென் ஆம்.
//உங்கள் அபிமான நாயகன் ஜோஸஃப் ச்சேண்ட்ரா நடித்த வெளியாகியுள்ள THE SHARK திரைக்காவியம் உலகையே அதகளப்படுத்திக் கொண்டிருக்கையில் நீங்கள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கலாமா? //
கொய்யால,
நான் கூட அப்படி ஏதாவது ஒரு படம் இருக்குமோ என்று நினைக்க ஆரம்பித்த வேளையில்தான் அது நம்ம குளோபல் சினிமா என்று புரிந்தது.
வாங்கோன்னா பாலா, தாங்கோன்னா தி ஷார்க் உய்யலாலா.
நண்பர் ஹாலிவூட் பாலா,
தாராளமாக வாருங்கள், சிட்டுக்களிற்கா பஞ்சம். எனக்கு அகப்படுவது உங்களிடம் மாட்டிக்கொள்ளலாம் அல்லது நீங்கள் சுட்டதை நான் ரோஸ்ட் பண்ணலாம் 🙂
அதுதானே என் ஷார்க் த லெஜண்ட் திரைக்காவியத்தின் தொழில்நுட்ப ரகசியங்கள் குறித்து நீங்கள் எழுதவில்லை. இது ஷார்க் சர்வதேசக் குளோபல் மூவி ரசிகர்களின் மனதை வேதனைப்படுத்துகிறது. உதாரணமாக உச்சக்கட்டக் காட்சியில், கப்பலில் ஷார்க் ஏறி, நிறைய வயர்களை அறுத்து அணுகுண்டை செயலிழக்க வைக்கும் நுட்பம் குறித்து விளக்கினால் ஷார்க் எப்படிப்பட்ட ஒரு அணு விஞ்ஞானி என்று பலரும் அறிந்து கொள்ளலாம்.
விஸ்வா, அபாயமான பகுதிகளில் நானே சென்று அவற்றை எதிர்கொள்வதுதானே தர்மம். சீஷ்யப் பிள்ளைகளின் நலனில் எனக்கு அக்கறை உண்டு. ஆசிரமத்தில் சீஷ்யர்களின் தொகை அதிகரிப்பது மனதிற்கு நிறைவே. ஆனால் நண்பர் கருந்தேள் இந்தக் கருத்துக்களை எல்லாம் படித்து விட்டு, பதிவைப் பற்றிக் கூறாது இப்படிக் கும்மியடிக்கிறார்களே என்று ஷார்க் த லெஜண்ட் படத்தைப் பார்த்தாலும் அதில் ஆச்சர்யமில்லை.
சிட்டு= வேட்டை= கடமை
சுறா ஒரு முறை பார்த்தால் ஆனந்தம், பல முறை பார்த்தால் பேரானந்தம்.
//சுறா ஒரு முறை பார்த்தால் ஆனந்தம், பல முறை பார்த்தால் பேரானந்தம்.//
நித்தியமும் ஆனந்தம் – நித்யானந்தம்.
//சீஷ்யப் பிள்ளைகளின் நலனில் எனக்கு அக்கறை உண்டு. ஆசிரமத்தில் சீஷ்யர்களின் தொகை அதிகரிப்பது மனதிற்கு நிறைவே//
இதையே தான் நானும் செய்கிறேன். மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டேன்கிறார்கள்.
//விஸ்வா, அபாயமான பகுதிகளில் நானே சென்று அவற்றை எதிர்கொள்வதுதானே தர்ம//
அதுதான் சொல்லிவிட்டேனே, நீங்கள் தான் ஓபனிங் பேட்ஸ் மென் என்று? பின்னே என்ன? அடித்து ஆடுங்கள் குருவே.
என்னுடைய படத்தை பற்றியா பேசுகிறீர்கள்?
சூப்பரான விமர்சனம்.. கலக்கறீங்க கருந்தேள்..
ஆஹா . . நம்ம நித்யா கூட இங்க வந்து கமெண்டு போட்டுட்டாரே . . . . ஜெயில்ல கூட நம்ம சைட்ட படிக்குறாய்ங்களா . . 🙂
பயங்கரவாதியின் கமெண்டைப் பார்த்து, நானுமே அது ஒரு உலக சினிமா என்று நினைத்துக்கொண்டுவிட்டேன் . . 🙂
ஷார்க் த லெஜண்ட் படத்தைப் பார்க்கலாமா என்று எனக்கு ஒரு எண்ணம் இருந்தது என்னவோ உண்மை தான் 🙂 . . ஆனால், இப்போது அதனை மாற்றிக் கொண்டு விட்டேன் . . நமது பாலா இப்படத்தைப் பார்த்துவிட்டு, அதனைப் பற்றி எழுதுவார் என்ர நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. அதுவும், அந்த ‘சிங்’ வேடத்தில் விஜய் வரும் காட்சிகள், கண்ணுக்கு விருந்தாக அமைகின்றன என்று கேள்விப்பட்டேன் . . 🙂
குத்தானந்தா கமெண்டு டாப்பு . . !!
செம கும்மியாயிருக்கே?
சாமிஜியெல்லாம் விஜயமா?
நடத்துங்கோ.
இந்த படம் பார்த்திருக்கேன்.
செம ஸ்க்ரீன்பிளே.
காதில் பூசுத்துறான்னு தெரிந்தும் நம்மை இண்ட்ரஸ்டிங்கா கட்டிப்போட்டுவிடும்.அதுவும் மால்கோவிச்,அந்த க்யூசக்,அப்புறம் அந்த மாக்ஸின் எல்லோரும் பின்னியிருப்பாங்க,வித்தியாசமான கான்செப்ட்.முடிவு தான் கொஞ்சம் கடுப்பாருந்தது.
ஆமா,பிளாட்பாரத்தில் பொம்மலாட்டம் காட்டுகையில் ஒரு சிறுமி அதை வேடிக்கை பார்க்க அவள் அப்பன் ஏன் குயூசக்கை அடிக்கிறான்?
அவ்வளவு ஆதர்ச தம்பதி இந்த மால்கோவிச் போர்டலால் பிரிவது நம்ப முடியல
ரொம்ப நல்ல விமர்சனம் நண்பா
கார்த்திகேயன் – அந்த சிறுமியோட அப்பன் ஏன் க்யூஸாக்க அடிக்குறான்னா, க்யூஸாக் பப்பெட் ஷோ காட்டிட்டு இருக்கும்போது, அந்த ஆண் பொம்மையும் பெண் பொம்மையும் சுவருக்கு ரெண்டு பக்கமும் இருந்து ஒருத்தர ஒருத்தர் நினைச்சி, அவங்களோட அசைவுகளிலேயே கலவி கொள்ளும்படி காட்டுவாரு . . அதப் பார்த்து தான் அவர அவன் அடிப்பான் 🙂 . . நன்றி நண்பா . .
அதேபோல, தம்பதிகள் ரெண்டு பேருக்குமே உறவு கொஞ்சம் ’Sour’ ஆனமாதிரித்தான் ஆரம்பத்துல காட்டுவாங்க . . ரெண்டுபேரும் மெக்கானிக்கலா தங்கள் வேலைகள செஞ்சிக்குறத காட்டிருவாங்க . . அப்பதான் இந்தப் போர்ட்டல் அறிமுகம் . . அந்தப் பெண்ணும். . அதுதான் அவங்க விரிசலுக்கு காரணமாயிரும். . அந்தப் பெண்கள் ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிருவாங்க . . க்யூஸாக்கின் காதல் வீணாயிரும் 🙂
முதுகலை படிப்பில், கட்டிடக்கலையில் பின் நவீனத்துவம் என்ற பாடத்திற்காக இந்த படம் பார்த்தோம். வருடங்கள் ஓடிவிட்டதால் நிறைய நியாபகம் இல்லை, திரும்பிப் பார்க்கவேண்டும். பார்த்துவிட்டு படித்தால் தான் “கிக்”.
இந்த படத்திற்கும் கட்டிடக்கலைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், Bladerunner, Metropolis, Brazil, Koyaanisqatsi, The Truman Show போன்ற படங்களுன் இதையும் பார்த்தோம்.
இது நல்லா இருக்கே . . .கட்டிடக்கலைக்காக படங்கள் . . வாரே வாஹ் . .கேட்பதற்கே நன்றாக இருக்கிறது . .:-)
நண்பா,
மீண்டும் அதை பார்த்தேன்,அடேங்கப்பா,படத்தை மிகவும் துல்லியமாக கவனித்துள்ளீர்கள்.இன்னோரு முறை பார்க்கும் பட்டியலில் வைத்துவிட்டேன்.எலிஜாவை படுக்கையில் கூட படுக்கும் போது க்யூசக்கின் ஃபீலின்க்ஸை பார்த்தேன்.சரியாக sour என கணித்துள்ளீர்கள்.
=====
இதில் முதல் காட்சியில் வரும் பொம்மலாட்டத்தை,பின்னிறுதியில் மால்கோவிச் ஆடி அதகளம் செய்ததை மீண்டும் பார்த்தேன்.இதே மால்கோவிச்சை பர்ன் ஆஃப்டர் ரீடிங்கிலும் பியோஉல்ஃபிலும் பார்த்து ரசித்திருக்கிறேன்.ஈடு செய்யமுடியா நடிகர்.
க்யூசக்கின் கைவிரல்கள் அவர் கண்கள் செம ரகளை.இவர் படங்களௌம் தேடி பார்க்கனும்.
நல்ல படம் ரஜெஷ் !!நன்றி , நான் உன் பதிவுக்கு விசிறி ஆகிவிட்டேன் !!
உங்களுக்கு இந்த படம் பார்க்கும் பொது இருந்த அனுபவம் எனக்கில்லை. எனக்கென்னமோ இது கிட்டத்தட்ட ஒரு பாண்டஸி படம் மாதிரி இருந்தது. (யோவ்! இது பாண்டஸி படந்தான்யன்னு சொல்றது எனக்கு கேட்குது). அதாவது இந்த suspense feel வரல.