Black Swan (2010) – English

by Karundhel Rajesh March 11, 2011   English films

மசாலாப் படங்களாகவே தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஹாலிவுட்டிலும், உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாகப் படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்கள் உள்ளனர். பெர்னார்டோ பெர்ட்டலூச்சி, டிம் பர்ட்டன், ஸ்பீல்பெர்க், கேமரூன், கோயன் சகோதரர்கள், ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா, ஜொனாதன் டெம், ப்ரயன் டி பா(ல்)மா, ரோமன் பொலான்ஸ்கி, ஃப்ராங்க் டேரபாண்ட், ஈஸ்ட்வுட் ஆகிய இயக்குநர்களின் வரிசையில், தற்காலத்தின் தவிர்க்க இயலாத இயக்குநர், டேரன் அரனாவ்ஸ்கி. இவரது படங்கள், வாழ்வில் நாம் சந்திக்கும் வெற்றிடங்களையும் வெறுமையையும் பற்றி விரிவாக அலசும் தன்மையுடையன. இதுவரை மொத்தமே ஐந்தே படங்கள் எடுத்திருக்கும் அரனாவ்ஸ்கி, தனது ஒவ்வொரு படத்தையும் முந்தைய படத்திலிருந்து முற்றிலும் வேறாக எடுத்திருக்கும் திறமையுடையவர். இவரது புதிய படமான ‘த ப்ளாக் ஸ்வான்’, டிசம்பர் மாதத்தில் வெளியாகி, பல விருதுகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்டு ஒரே மாதத்தில், இதுவரை, அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளில் தேர்வாகி, அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறது இப்படம். உலகெங்கும் உள்ள விமர்சகர்கள், இப்படத்தைப் பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

பாலே எனப்படும் நடன வகையைக் குறித்து இதுவரை ஆங்கிலத்தில் பல படங்கள் வந்துள்ளன. ஷிர்லி மெக்லேன் நடித்த ‘த டர்னிங் பாயிண்ட்’ (1977), ஒரு சிறுவனின் மனதில் நிகழும் போராட்டங்களை விவரிக்கும் ‘பில்லி எலியட்’ (2000) ஆகியவை, அவற்றில் முக்கியமான படங்கள். பாலே நடனத்தைச் சில முறை பார்க்க முடிந்தபோதெல்லாம், நடனமாடும் அந்தக் கால்களின் திண்மையைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நுனி விரலில் தனது ஒட்டுமொத்த எடையையும் சமாளித்து, சுழன்று சுழன்று ஆடும் பாலே, நடன வகைகளில் மிகக் கடினமான வகையைச் சேர்ந்தது என்று தயங்காமல் சொல்ல முடியும்.

படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இன்னொரு விஷயத்தையும் பார்த்துவிட வேண்டும். அப்பொழுதுதான், படத்தின் முக்கிய அம்சம் ஒன்றைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும்.

Pyotr Ilyich Tchaikovsky என்ற, ரஷ்யாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இசையமைப்பாளரிடமிருந்து அந்த விஷயம் ஆரம்பிக்கிறது. Swan Lake என்ற ஒரு இசைக்கோர்ப்பை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில் (1875ல்) அவர் எழுதினார் (இவருக்கு முன்னமேயே அந்த இசைக்கோர்ப்பு இருந்திருக்கிறது என்ற ஒரு பாடபேதமும் உலவிவருகிறது). அதுவரை, பாலே நடனங்களின் இசைக்கோர்ப்புகளை, அதற்கென்றே இருந்துவந்த இசைக்கோர்ப்பாளர்களே எழுதிவந்தனர். ஸ்வான் லேக் பாலேவில்தான், முதன்முறையாக, ஒரு ஸிம்ஃபனி இசையமைப்பாளரான Tchaikovskyயிடம் இந்த இசைக்கோர்ப்பு எழுதி வாங்கப்பட்டது. சரி. அப்படி என்ன கதையை இந்த ஸ்வான் லேக் பாலே முன்வைக்கிறது?

ஓடெட் என்பவள், ஒரு இளவரசி. வான் ரோத்பெர்ட் என்பவன் ஒரு மந்திரவாதி. இந்த இளவரசியைக் கடத்திவிடும் மந்திரவாதி, அவளை ஒரு அன்னப்பறவையாக மாறுமாறு சபித்துவிடுகிறான். பகலில் அன்னமாகவும் இரவில் இளவரசியாகவும் வாழ்ந்துவருகிறாள் ஓடெட்.

ஸிய்க்ஃப்ரைட் என்பவன் ஒரு இளவரசன். ஓர் நாள், தனது வருங்கால மனைவியைத் தேர்ந்தெடுக்கச்சொல்லித் தனது தந்தை வற்புறுத்தியதால், இதுவரை யாரையும் காதலிக்காத இந்த இளவரசன், கோபமுற்று அரண்மனையை விட்டு வெளியே வந்து, காட்டுக்குள் செல்கிறான். அங்கே இந்த அழகிய அன்னப்பறவையைப் பார்க்கிறான். அதை நெருங்கி, அது பெண்ணாக மாறும் அதிசயத்தைக் கண்ணுற்று, அதனிடம் பேசி, உண்மையை அறிந்துகொள்கிறான். அதேநேரத்தில் அங்கே வரும் மந்திரவாதியைக் கொல்ல முயலும் ஸிய்க்ஃப்ரைடிடம் பேசும் ஓடெட், மந்திரவாதி இறந்துவிட்டால், சாபத்தை முறிக்க இயலாது என்று சொல்லி அவனைத் தடுத்துவிடுகிறாள். ஓடெட் மீது காதல் வயப்படும் இளவரசன், அரண்மனைக்குத் திரும்புகிறான்.

அரண்மனையில், தனது தந்தையிடம் தனது காதலைத் தெரியப்படுத்தும் இளவரசன், அங்கே ஓடெட் போன்ற மாறுவேடத்தில் வரும் மந்திரவாதியின் பெண்ணை (இவள் கறுப்பு உடை அணிந்திருப்பாள்), உண்மையான ஓடெட் என்று நினைத்து, தந்தையிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறான். அதன்பின் காட்டுக்குத் திரும்பிச் செல்லும் இளவரசன், அங்கே உண்மையான, வெள்ளுடை தரித்து அமர்ந்திருக்கும் ஓடெடைப் பார்த்து, தனது தவறை உணர்ந்து ஓடெட்டிடம் மன்னிப்புக் கேட்கிறான். ஓடெட்டும் அவனை மன்னித்து விடுகிறாள். இதன்பின், தன் மீது உள்ள சாபம் தீர வழியேயில்லை என்று உணரும் ஓடெட், ஒரு மலையில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதோடு இந்தப் பாலே முடிகிறது (இது, ஒரு முடிவு. இன்னும் வேறுபட்ட பல முடிவுகள் இந்தக் கதைக்கு உள்ளன).

தனது வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் அடையாமல், நடனத்தை மட்டுமே பெரிதாக நினைத்து வாழ்ந்து வரும் ஒரு பெண், நினா சாயர்ஸ் என்பவள். ந்யூ யார்க்கில், பாலே நடனம் பயின்று வரும் பெண். அவள் சார்ந்த குழு, இந்த ஸ்வான் லேக் பாலேவைப் புதிதாக அரங்கேற்ற முடிவு செய்கிறது. இக்குழுவின் உரிமையாளர், தாமஸ் லெராய். ஒரு புதிய பெண்ணை, கதாநாயகியாகத் தேர்வு செய்யப்போவதாக அவர் அறிவிக்கிறார். இதற்கு முன் அந்த வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்த ‘பெத்’ என்ற நடிகையை இம்முறை அவர் தேர்வு செய்யவில்லை. இளவரசி ஓடெட்டாக மட்டுமல்லாமல், மந்திரவாதியின் பெண்ணாகிய ஒடீலாகவும் இம்முறை அந்தக் கதாநாயகி நடிக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். அப்படி அந்தத் தேர்வில் பங்கேற்பவர்களையும் அவரே தேர்ந்தெடுக்கவும் செய்கிறார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் நினாவும் ஒரு பெண்.

தேர்வில், பல பெண்களும் ஆடுவதைப் பரிசீலிக்கிறார் லெராய். இளவரசி ஓடெட்டின் வேடத்துக்கு (வெள்ளை அன்னம்), நினா பரிபூரணமாகப் பொருந்தியிருப்பதாகவும் நினாவிடமே சொல்கிறார். ஆனால், இதைக்கேட்டு நினா மகிழமுடியாததாக, மந்திரவாதியின் பெண்ணான ஒடீலின் வேடத்துக்கு (கறுப்பு அன்னம்) உரிய வேகமும் கிளர்ச்சியும் நினாவிடம் இல்லை என்பதையும் அவளிடம் சொல்கிறார். இதைக்கேட்டு மனமுடைந்து போகிறாள் நினா. அந்த நேரத்தில் நினாவை முத்தமிடும் லெராயின் உதட்டில் அழுந்தக் கடித்துவிடுகிறாள் நினா. மறுதினம். ஸ்வான் லேக் பாலேவின் கதாநாயகியின் பெயர், அறிவிக்கப்படுகிறது. அது, நினா. இதனைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். அதே நேரத்தில், நினாவின் முதுகில் ஒரு சிறிய காயம் ஏற்படுகிறது. இதனைக் கண்ட அவளது தாய், நினா சொறிந்துகொண்டு அதனைப் பெரிதுபடுத்திவிடுவாள் என்பதால், அவளது நகங்களை ஒட்ட நறுக்கிவிடுகிறாள்.

இதன்பின், கதாநாயகி வேடத்துக்குப் பயிற்சி ஆரம்பிக்கிறது. வெள்ளை அன்னத்தின் வேடத்துக்கு உரிய நடனத்தை, நினா அற்புதமாக வெளிப்படுத்துகிறாள். இருந்தாலும், கறுப்பு அன்னத்தின் கிளர்ச்சிகரமான நடனத்தையும் அவளது உணர்ச்சிகரமான மாறுதல்களையும் இன்னமும் நினா வெளிப்படுத்த ஆரம்பிக்கவில்லை என்று அழுத்தமாக லெராய் முன்வைக்கிறார். நினா எவ்வளவு முயன்றாலும், அந்த நிலையை அவளால் எட்ட முடிவதில்லை. இது அவளுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. அந்த வருத்தம், அழுகையாக வெடிக்கிறது.

இந்த நிலையில், லிலி என்ற ஒரு பெண், நினாவுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். பொதுவாகவே, இதுபோன்ற பெரிய நடன நிகழ்ச்சிகளில், கதாநாயகியைப் போலவே, மற்றொரு பெண்ணும் அத்தனை பயிற்சிகளையும் மேற்கொள்வது வழக்கம். ஒருவேளை கதாநாயகிக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அந்த இடத்தை, இந்தப் பெண்ணை வைத்து நிரப்புவது வாடிக்கை. நினாவிற்கு லிலி அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை வகிக்கிறாள். எனவே, நினா கலந்துகொள்ளும் அத்தனை பயிற்சிகளிலும் லிலியும் கலந்துகொள்கிறாள். இது, நினாவின் மனதைப் பாதிக்கிறது. தனது வேடத்தைத் தன்னிடம் இருந்து பறித்துக்கொள்வதற்காக லிலி சதி செய்கிறாள் என்று நினா எண்ண ஆரம்பிக்கிறாள். அதே நேரத்தில், அவளது முதுகில் இருக்கும் காயமும் சற்றே பெரிதாகிறது. அதில் இருந்து ரத்தம் வழிகிறது.

ஒரு நாள், லிலியிடம் மனம் விட்டுப் பேசும் நினா, தன்னால் கறுப்பு அன்னத்தின் வேடத்தைச் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று தோன்றுவதாகவும், தனக்குள் அதனைப் பற்றி இருக்கும் பயமே இதற்குக் காரணமாக அமைந்துவிடுமோ என்று அச்சமாக இருப்பதாகவும் சொல்ல, இதனை லிலி, லெராயிடம் சொல்லிவிடுகிறாள். லெராய், நினாவை அழைத்துப் பேசி, தைரியம் ஊட்டி அனுப்புகிறார். லிலி இப்படிச் செய்ததைச் சற்றும் விரும்பாத நினா, அவளைத் திட்டிவிடுகிறாள். அன்று இரவு, நினாவின் வீட்டுக்கு வரும் லிலி, அவளிடம் மன்னிப்புக் கேட்க, அவளுடனே இரவைக் கழிக்க விரும்பி, ஒரு க்ளப்புக்குச் செல்கிறாள் நினா. அங்கே, லிலி அளிக்கும் போதை மருந்து கலந்த பானத்தை அருந்தி, தன்னை மறந்து ஆடுகிறாள். அங்கிருந்து திரும்ப வருகையில், லிலியையும் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, அவளோடு உறவு கொள்கிறாள். மறுநாள் காலையில் தனியாக விழித்தெழும் நினா, நடன ஒத்திகைக்கு விரைய, அங்கே லிலி இவளது பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சினம் கொள்கிறாள். அப்போதுதான் தெரிகிறது, முந்தைய இரவில் நினா அவளது வீட்டுக்குத் தனியாகச் சென்றது. அவளுடன் லிலி வரவே இல்லை.

இன்னும் நடன நிகழ்ச்சிக்கு ஒரே நாள் தான் இருக்கிறது. இந்த நிலையில், நினாவின் தோளில் உள்ள காயம், இன்னமும் பெரியதாக ஆகிறது. கண்ணாடியில் நினா பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவளது பிம்பம், அந்தக் காயத்தைச் சொறிந்துகொள்வது நினாவுக்குத் தெரிகிறது. அதேபோல், அவளது தாயின் அறையில் உள்ள ஓவியங்கள் எல்லாமே அவளோடு பேசுகின்றன. அதே நேரத்தில், அவளது காயத்தில் இருந்து கறுப்பான சிறிய சிறகுகள் வெளிவர ஆரம்பிக்கின்றன. அவளது கால் உடைந்து, அன்னத்தின் காலாக மாறுகிறது. இதையெல்லாம் கவனிக்கும் நினா, பயத்தில் நினைவிழக்கிறாள். ஒரு நாள் கழிகிறது.

சரியாக நடன நிகழ்ச்சிக்கு சிறிது நேரம் முன்னால் கண் விழிக்கும் நினா, தனது தாயை மீறிக்கொண்டு, அரங்கத்துக்கு ஓடுகிறாள். அங்கே, லிலி, எல்லா ஒப்பனைகளும் முடிந்த நிலையில் இருப்பதைக் காண்கிறாள். அவசர அவசரமாக அத்தனை ஒப்பனைகளையும் செய்துகொண்டு வெளியே வரும் நினா, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் வெள்ளை அன்னமாக நடனமாட ஆரம்பிக்கிறாள். ஒரு குறிப்பிட்ட காட்சியில், சற்றே பிசகிவிடும் நினா, கீழே விழுந்துவிட, சமாளித்துக்கொண்டு அந்தக் காட்சியை முடிக்கிறாள்.

மறுபடி கறுப்பு அன்னமாக ஒப்பனை செய்துகொள்ள வரும் நினா, ஒப்பனை அறையில், கறுப்பு அன்னமாக உடையணிந்து கொண்டு இருக்கும் லிலியைப் பார்க்கிறாள். நினா கீழே விழுந்ததால், இனி கறுப்பு அன்னமாக நடனமாடப் போவது தான் தான் என்று சொல்லும் லிலியின் மீது கோபத்துடன் பாய்ந்து, அங்கே இருக்கும் ஒரு கண்ணாடித் துண்டால் அவளது வயிற்றில் குத்தி, அவளைக் கொன்றுவிடுகிறாள். லிலியின் உடலை அங்கேயே மறைத்தும் விடுகிறாள். அடுத்த நொடியே, அவளது கண்கள் சிவக்கின்றன. அவளது கைகள், மெல்ல மெல்ல கறுப்பு அன்னத்தின் இறக்கைகளாக மாறுகின்றன. அவளது உடலெங்கும் கறுப்பு வண்ணச் சிறகுகள் பரவ ஆரம்பிக்கின்றன. கறுப்பு அன்னமாகவே முழுவதாக அவள் மாறிவிட்டதை அவள் உணர்கிறாள். அப்படியே வெளியே வந்து, பிரமாதமாக ஆடி, பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுகிறாள்.

இதன்பின், மறுபடி வெள்ளை அன்னமாக உடைமாற்றிக்கொள்ள வரும் நினா, அங்கே இருக்கும் லிலியின் உடலைத் தேட, அங்கே எதுவுமே இருப்பதில்லை. அந் நேரம் கதவு தட்டப்பட, வெளியே நிற்பது லிலி ! இவளது நடனத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டுச் செல்கிறாள். மிகுந்த குழப்பத்தில் ஆழும் நினா, தனது வயிற்றை எதேச்சையாகப் பார்க்க, அவளது வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது. அந்தக் காயத்தினுள், உடைந்துபோன ஒரு கண்ணாடித்துண்டு.

வெளியே வரும் நினா, நடனத்தின் இறுதியில், வெள்ளை அன்னம் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியை மிகவும் தத்ரூபமாக நடிக்கிறாள். மலையிலிருந்து குதிக்கும் நினா, கீழே ஒரு மெத்தையில் விழுகிறாள். அத்தோடு நடனம் முடிகிறது. அத்தனை பார்வையாளர்களும் மெய்மறந்துபோய்விட்டிருக்கிறார்கள். ஒரே இரவில், நினா மிகப்பெரிய நட்சத்திரமாக ஆகிவிட்டிருக்கிறாள். சந்தோஷத்துடன் அங்கே ஓடி வரும் லெராய், அவளது வயிற்றில் இருக்கும் காயத்தைப் பார்த்துப் பதற, நினாவோ, ‘என்னால், நான் மிகத் தத்ரூபமாக நடித்ததை உணர முடிந்தது’ என்று சொல்லிக்கொண்டே மயக்கமுறுகிறாள். இத்துடன் படம் முடிகிறது.

இந்தப் படம் ஒரு உருக்கமான படமாக இருப்பதற்குக் காரணம், இயக்குநர் அரனாவ்ஸ்கியின் நினாவைக் குறித்த சித்தரிப்பு. படத்துவக்கத்திலிருந்தே, நினா ஒரு மென்சோகம் நிரம்பிய கதாபாத்திரமாகவே இருக்கிறாள். தனது வாழ்வில் சந்தோஷம் அளிக்கக்கூடிய எதையுமே அவள் சந்தித்திருக்கவில்லை. தனது பாலே நடனத்தைத் தவிர, வாழ்வில் நிம்மதியளிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அவள் அனுபவித்து அறிந்தவளில்லை. படத்தில் ஒரு காட்சி வருகிறது. அந்தக் காட்சியில், லெராய், மனம்விட்டு நினாவிடம் பேசுகிறார். கதாநாயகியின் வேடம் கிடைத்தபின், கறுப்பு அன்னத்தின் நடனத்தை நினாவினால் ஆடமுடியாமல் போனதைப் பற்றி, மேலும் பயிற்சி மேற்கொண்டால் அது சரியாகிவிடும் என்றும், அதனைத் தவிர்த்து, நடனத்துக்கு வெளியே , தனது வாழ்வின் சந்தோஷத்திற்காக அவள் இதுவரை செய்திருப்பது என்ன என்று அவளிடம் வினவும் லெராய், அவளை வெளியே சென்று, உலகை அனுபவிக்கச் சொல்கிறார். லெராயின் கேள்விகள், நினாவை முதலில் வெட்கப்பட வைக்கின்றன. அதன்பின், அக்கேள்விகளினூடே இழையும் சினேகத்தை – தனது நடனம் நன்றாக வரவேண்டும் என்ற லெராயின் அக்கறையை – நினா புரிந்து கொள்கிறாள். இதுவரை நினாவுக்கு ஏதேனும் காதல் அனுபவம் இருந்திருக்கிறதா? தற்போது யாரையாவது காதலித்துக்கொண்டிருக்கிறாளா? ஒன்றுமே இல்லையென்றால், அவள், வீட்டில் அமர்ந்து, மைதுனமாவது செய்தால், சிறிதாவது சந்தோஷம் கிடைக்கும் என்றும், அது அவளது மனதுக்கு நன்மை தரும் என்றும் சொல்லிச் செல்கிறார் லெராய். நினாவும், அதன்பின் ஓரிரு முறைகள் சுயமைதுனம் செய்து பார்க்கிறாள். அது அவளுக்கு அளவுக்கு மீறிய சந்தோஷத்தைத் தருகிறது. அதே சமயம், அவளது மனதில் ஒளிந்துள்ள இருள்மையையும் அது வெளிக்கொணர்கிறது.

இப்படத்தின் இன்னொரு அம்சம், நினாவின் மனதில் ஏற்படும் பிறழ்வுகளை, படத்தின் பல காட்சிகளின் வாயிலாக, பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்தும் உத்தி. படத்தின் ஆரம்பம் முதல், நினா, தனக்கு விசித்திரமான நிகழ்வுகள் நடப்பதாகவே நம்பி வருகிறாள். அவளது முதுகில் ஏற்பட்ட காயம், அவளால் உருவானதுதான். ஆனால், அது தானாக வளர்வதாக அவள் நம்புகிறாள். மேலும், அந்தக் காயத்தை அவளே சொறிந்துகொண்டு பெரிதாக்குவது அவளுக்குத் தெரிவதில்லை. கண்ணாடியில் அது தெரியும்போதும், கண்ணாடியில் தெரியும் பிம்பமே அவ்வாறு செய்வதாக அவளுக்குத் தோன்றுகிறது. அதேபோல், லிலியைப் பற்றியும், அவள் தன்னை ஏமாற்றி, தனது பாத்திரத்தைத் தன்னிடம் இருந்து திருடப்பார்ப்பதாகவே நினா எண்ணிவருகிறாள். படத்தின் இறுதியில், லிலியைக் கொன்றே விட்டதாக அவள் எண்ணிக்கொண்டு, அதனால் நிம்மதியும் அடைந்து, இதன் வாயிலாகவே கறுப்பு அன்னத்தின் நடனத்தை மிகச்சிறப்பான முறையில் ஆடவும் செய்கிறாள். மொத்தத்தில், நினாவின் மனதில் எப்பொழுதெல்லாம் இருள் பரவுகிறதோ – எப்பொழுதெல்லாம் அவளது மனதில் ஒளிந்துள்ள அவளது கோரமான முகம் வெளிவருகிறதோ – அப்பொழுதெல்லாம் அவள் தன்னையே மறக்கிறாள். இந்த நிலைதான் கறுப்பு அன்னத்தின் நடனத்துக்குத் தேவை என்று லெராய் ஆரம்பத்திலேயே நினாவிடம் சொல்லியிருக்கிறார். அந்த நிலை, மெதுமெதுவே நினாவுக்குக் கைகூடுகிறது. ஆனால், எத்தகையதொரு விலையில்?

இந்தப் படத்தை எடுக்க நேர்ந்த விதத்தைப் பற்றி அரனாவ்ஸ்கி சொல்லியிருக்கிறார். புகழ்பெற்ற இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கி எடுத்த ‘த டெனெண்ட்’ என்ற ஒரு படம் உள்ளது. இப்படத்தில், முற்றிலும் அமைதியான, யாரிடமும் பேசத் தயங்கும் ஒரு இளைஞன், பாரிஸில் ஒரு வீட்டுக்குக் குடிவருவான். அந்த வீட்டில் இதற்கு முன் இருந்த பெண், மாடியில் இருந்து குதித்து இறந்திருப்பாள். மெல்ல மெல்ல அவளது சாயல் தன் மீது படருவதாக அந்த இளைஞன் எண்ணத் துவங்குவான். அதேபோல், தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேரும் தன்னைக் கொலை செய்யப்போவதாகவே எண்ணி, சந்தேகத்திலேயே வாழ்வான். இந்தச் சந்தேகம் முற்றிப் போய், இறந்த பெண்ணைப் போலவே உடையணிந்து கொண்டு, அதேபோல் மாடியிலிருந்து இறுதியில் குதித்தே விடுவான். போலான்ஸ்கியே கதாநாயகனாக நடித்த படம் இது. இந்தப் படம், ‘ப்ளாக் ஸ்வான்’ படத்துக்கு ஒரு பெரிய தாக்கமாக அமைந்தது என்று கூறியிருக்கிறார். அதேபோல், தாஸ்தாவஸ்கியின் நாவலான ‘த டபிள்’ என்ற புத்தகமும்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர், நாட்லீ போர்ட்மென். மிகச்சிறிய வயதில், மிகப் பெரிய ஒரு கதாபாத்திரத்தில் அனயாசமாக நடித்துப் பெரும் புகழை ஈட்டியிருக்கிறார். ஒரு தேர்ந்த பாலே நடனக்கலைஞராக நடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. பாலே ஆடுவதற்கு, உடலை ஒரு சிறகைப்போல் மெலிதாக வைத்திருக்க வேண்டும். அதேபோல், ஆட்டத்தின் அத்தனை நெளிவு சுளிவையும் சிறப்பாக வெளிப்படுத்தல் வேண்டும். இந்தியப்படங்களில் வருவது போல், அந்தப்பக்கம் இரண்டு முறை, இந்தப்பக்கம் இரண்டு முறை என்றெல்லாம் கையைக் காலை ஆட்டிவிட்டால் போதாது. பாலே பற்றித் தெரிந்துகொள்வதற்காகவே, நாட்லீ போர்ட்மெனும், மிலா கூனிஸ் என்ற மற்றொரு நடிகையும் ஆறு மாதங்கள் பாலே பயின்று, அதன்பின் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த நடிப்பின் உழைப்பு, மிக அருமையாகப் படத்தில் பிரதிபலிக்கிறது. படத்தின் சில காட்சிகளில், லிலியாக நடிக்கும் மிலா கூனிஸும் நாட்லீ போர்ட்மென் அளவுக்கு நடனம் ஆடியிருப்பார். ஆனால் மிகச்சில துணுக்குகள் மட்டுமே அந்த நடனம் வரும். படத்துக்குத் தேவை, நாட்லீயின் நடனம் மட்டுமே என்பதால், மிலா கூனிஸின் நடனம் பெரும்பாலும் படத்தில் வராது. இருந்தாலும், இவருமே ஆறுமாதங்கள் பாலே கற்றிருக்கிறார் என்றால், அரனாவ்ஸ்கியின் தொழில் நேர்த்தி நன்றாக விளங்குகிறது.

அதேபோல், இப்படத்தின் இன்னொரு மிக்கிய கதாபாத்திரமாக, வினோனா ரைடர் நடித்திருக்கிறார். சில பேருக்கு எவ்வளவு வருடங்கள் கடந்தாலும் வயதே ஏறாது. அவர்களைப் பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் வினோனா ரைடர். பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தாலும், இப்போதுதான் நடிக்க வந்த ஒரு பெண்ணைப்போல் தோன்றுவது அவரது சிறப்பம்சம். இப்படத்தில், மிகக் குறைந்த நேரமே வந்தாலும், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான ’பெத்’ என்ற, முன்னாள் ஸ்வான் லேக் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நினா கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டவுடன், அடுத்தநாள், பெத் ஒரு கார் விபத்தில் மாட்டிக்கொண்டதாக ஒரு செய்தி வருகிறது. அவள் வேண்டுமென்றே காரின் முன் சென்று விழுந்திருப்பாள் என்று லெராய் நினாவிடம் கூறுகிறார். பெத், நினாவிடம் பேசும் சில நிமிடங்கள், மிக முக்கியமானவை.

அரனாவ்ஸ்கியின் முழுத்திறமையும் வெளிப்பட்டிருக்கும் இப்படம், உலகின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக ஏற்கெனவே இடம்பெற்றுவிட்டது என்பதை, இப்படத்துக்கான வரவேற்பு உறுதி செய்கிறது. உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக அரனாவ்ஸ்கி மாறிவிட்டதையும் இப்படம் நமக்கு நிரூபிக்கிறது. இவரது படமான ’ரெகீம் ஃபார் எ ட்ரீம்’ என்ற படம்தான் இவரது சிறந்த படமாக இதுவரை இருந்துவந்தது. இப்போது இப்படம் அதையும் மிஞ்சிவிட்டது. இவரது முதல் படமான ‘Pi’ என்ற படத்தையும் தவறாது பாருங்கள்.

  Comments

34 Comments

  1. நண்பரே,

    மிகவும் அதிர வைத்த படமிது. மெலிதான ஒரு வேதனை உணர்வோடேயே திரையரங்கை விட்டு வெளியேறினேன். அரொனொவ்ஸ்கியின் சிறந்த படங்களில் முதன்மையானதாக இதை நீங்கள் கூறியிருப்பதுடன் நான் உடன்படுகிறேன்.

    Reply
  2. மசாலாப் படங்களாகவே தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஹாலிவுட்டிலும், உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாகப் படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்கள் உள்ளனர். பெர்னார்டோ பெர்ட்டலூச்சி, டிம் பர்ட்டன், ஸ்பீல்பெர்க், கேமரூன், கோயன் சகோதரர்கள், ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா, ஜொனாதன் டெம், ப்ரயன் டி பா(ல்)மா, ரோமன் பொலான்ஸ்கி, ஃப்ராங்க் டேரபாண்ட், ஈஸ்ட்வுட் ஆகிய இயக்குநர்களின்////
    .
    .
    என்ன மிக மிக மிக முக்கியமான ஆளான ஸ்டான்லி குப்ரிக்க உட்டுடீங்க!!! அவருடைய ஈடுபாடு பெர்பெக்க்ஷனில் பத்து விழுக்காடு கூடு வேறு எவனும் தந்ததில்லை.!AI படத்தை ஸ்டான்லி குப்ரிக்கி எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைத்து பார்த்தேன்.ஸ்பீல்பெர்க் வழக்கமான அமெரிக்க இயக்குனர்.war of the worlds என்ற படத்தில் உலகத்தை தாக்கும் தீய சக்திகள் பற்றிய கதை என அமெரிக்காவை மட்டும் அதுவும் டாம் கிரூசை மட்டும் காட்டியது எனக்கு எரிச்சலூட்டியது.அவரின் ஒரே உருப்படியான படம் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்.ஆனால் அதே Holocaust கதையை குப்ரிக் Aryan papers என்ற தலைப்பில் எடுக்க இருந்தார்(வழக்கம் போல ஐந்து ஆண்டுகள் கடுமையான உழைப்பில் ஸ்க்ரிப்டை தயார் செய்து வைத்திருந்த நிலையில் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் வந்து கெடுத்தது 🙁 ).ஆனால் இந்த படம் வந்ததால் தன் ப்ராஜண்டை கைவிட்டார்.அவருக்கு நிகர் எவனுமில்லை.
    .
    நடாலி போர்ட்மன் எனது அபிமான நடிகைகளில் ஒருவர்.பன்மொழி திறமை(வழக்கமான அமெரிக்கர்கள் போல ஆங்கிலம் மட்டும் தெரிந்த நடிகையல்ல.)இவரது Goya’s Ghosts நடிப்பில் வேறு பரிமாணத்தை இரட்டை வேடங்களில் காட்டியிருப்பார்.ப்ளாக் ஸ்வான் டவ்ன்லோட் பண்ணி பார்த்துட்டு படம் பத்தி சொல்லுறேன்.நன்றி .

    Reply
  3. நண்பா,
    இந்த படத்தை பார்க்கவில்லை,நீங்கள் இத்தனை சிறப்பாக எழுதிய பின்னர் பார்க்காமல் இருப்பேனா?விரைந்து பார்த்துவிடுகிறேன்.என்ன நண்பா இன்னும் ஓயாத் வேலையா?

    Reply
  4. என்ன நண்பரே…தேர்தலில் கூட்டணி போட அலைந்தீர்களா???ஆளையே காணோம்.ஆனால் வந்த வேகத்தில் ஒரே சிக்ஸர்தான்.நீங்கள் குறிப்பிட்ட டெனண்ட் பார்த்திருக்கிறேன்.நிஜ சைக்கோ படம்.
    இனிதான் பிளாக்ஸ்வான் பார்க்கணும்.

    Reply
  5. Raaj,

    yeah, Nina loses herself to transform herself into perfect black swan. Itz a wonderful portrayal of the events.

    Her purposeful scratching in scapular region, intended to grow the wings of black swan unfolds only later for our surprising shock. All her hallucinations in a way are plotted nicely.

    I felt liking losing myself at the end of the movie, happy that u too were very much impressed with this movie.

    Reply
  6. மிக அற்புதமான படம். படத்தை போலவே உங்கள் பதிவும் அற்புதம்.
    Natallie Portman நடிப்பு மெய் சிலிர்க்க வைத்தது.

    Reply
  7. @ காதலரே – இப்படத்தைப் பார்க்கையில், மனதில் எழுந்த ஒரு சிறிய அலவிலான ஒரு உணர்வை, என்னவென்று சொல்ல இயலவில்லை. எங்கள் இருவருக்குமே படம் மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு முறையும் பார்க்கப்போகிறோம். விரைவில். நன்றி.

    @ விகி – அய்யய்யோ… நம்ம தல குப்ரிக் பேரு உட்டுப்போச்சே.. என்ன கொடுமை . . சரி பரவால்ல உடுங்க.. சீக்கிரமே குப்ரிக்குக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட் டெடிகேட் பண்ணிருவோம்.. war of the worlds எனக்கு சுத்தமா புடிக்காத படங்கள்ல ஒண்ணு.

    @ கீதப்ரியன் – நண்பா.. புதிய ஆஃபீஸில், இண்டெர்நெட் இல்லை. ப்ளாக் செய்யப்பட்டு விட்டது. எனவே, கிடைத்த நேரத்தில், cafe வந்து எழுதுகிறேன். அதனால் தான் தாமதம். லேப்டாப் இல்லாமல் ஒன்றும் முடியாது போல இருக்கிறது.வாங்கிவிடலாம் விரைவில்.

    @ உலக சினிமா ரசிகரே – டெனண்ட்டுமே, என்னைப் பல நிமிடங்கள் யோசனையில் ஆழ்த்திய படம்தான். நீங்கள் அதைப் பார்க்காமல் இருந்தால்தானே ஆச்சரியம் 🙂 .. புதிய வேலையில் சற்றுக் கெடுபிடிகள் அதிகம். அதனால்தான் தாமதம்.. 🙂

    @ சண்முககுமார் – திரட்டிரலாம் பாஸ்

    @ மின்மினி – இந்தப் படத்தைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகாவிட்டால்தான் ஆச்சரியம் என்று தோன்றுகிறது. இதைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும் இல்லையா? நன்றி

    @ ஜான் – மிக்க நன்றி. போர்ட்மென் நடிப்பு அபாரம். அவருக்கு ஆஸ்கர் கிடைத்தது, மிகச்சரியான பரிசு. நன்றி

    @ லக்கி – அட உடு நைனா.. போன பதிவு ஒரு மசாலாண்ட்டு, இந்த வாட்டி கொஞ்சம் சீரியஸா போட்டேன். சீக்கிரமே இன்னொரு மசாலா ரெடி பண்ணிருவோம்ல 🙂

    Reply
  8. வெங்காயம் இல்லை சுண்டக்க இல்லை மணியம்ம இல்லை தல சுத்துது-ஈ கொசு ராமசாமி

    Reply
  9. வெங்காயம் இல்லை சுண்டக்க இல்லை மணியம்ம இல்லை தல சுத்துது-ஈ கொசு ராமசாமி//
    .
    .

    அட்ரா அட்ரா ஆட்டமே இப்பதான் சூடு புடிக்குது!!!

    Reply
  10. மசாலாப் படங்களாகவே தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஹாலிவுட்டிலும்,//
    ஹாலிவுட் என்பதே உலகமார்க்கெட்டை குறி வைத்துதானே…இல்லைனா நம்ம மலையாள தரத்தில் குடும்ப படம் எடுத்தால் ஹாலிவுட் எதற்கு..இருப்பினும் மனதை உருக்கும் சில படங்களும் பெரிய வசூலை குவித்துவிடும்…இந்த படம் வசூலில் எப்படி ?

    Reply
  11. விமர்சனத்தை அணுபவிச்சி எழுதி இருக்கீங்க 🙂 ரெகீம் ஃபார் எ ட்ரீம் தான் அவரோட சிறந்த படம்.. உண்மையிலேயே மனதை கனமாக்கிய படம்.. அத இந்த படம் மிஞ்சிடுச்சி-னு சொல்றீங்க..

    நான் இன்னும் பாக்கல… நாளைக்கு பாத்துட்டு வர்றேன் 🙂

    Reply
  12. அவரோட சிறந்தப் படம்… எங்க ஊரு பாட்டுக்காரந்தான்….!!

    Reply
  13. நண்பரே உங்கள் இக்கட்டான சூழல் புரியாமல் பின்னூட்டத்தில் கிண்டலடித்திருந்தேன்.மன்னிக்கவும்.

    Reply
  14. வழக்கம் போலவே ‘A Class’ விமர்சனம். என்னை அதிரவைத்த படங்களில் இதுவும் ஒன்று. நாட்லீ போர்ட்மெனின் அபார நடிப்பிற்கு ஆஸ்கார் ஒரு சிறிய பரிசு தான்.

    @ஆர்.கே.சதீஷ்குமார் : இப்படம் வசூல்ரீதியாகவும் வெற்றிப்படமே.. இதுவரையில் $100 மில்லியன் வரை கல்லாக்கட்டியிருக்கிறது (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Black_Swan_(film))

    Reply
  15. ஹாலிவூட்னாலே பிரம்மாண்டம்தான்.பின்ன நாலு சொவதுக்குள்ள சகீலா குளிக்கிற சீனா எடுக்க சொல்ற?

    Reply
  16. my comnt is not abt this article its abt this website… just 4 fun guys.. site urimayaalara kaayapaduthura enda nokamilla but kayaputhirkan polathan iruku..
    vimarsanam seiyurathu urimai athula avaroda karuthu, aathikam thavirka mudiyathathu. ana avarodathu nadunilamayanathunu avare peela adikira ivarapola aakalra vimarsanangaluku cmt adikiratha vituthu poi nalla padatha nengalave thedi paakalam.. munnodiya tharam vaintha cinema aakal select panni film festivalsla award vaanguna padangalla start pannalam..avangada vimarsanangala padikalam ungada nanbarhaloda kalanthuraiyaadalaam.. anehamana film lovers apidithan theduranga..ivarum atha pathuthu avarra karuthuhala niyayapaduthi vilakam tharer.. ennai poruthavarai ithahaya vimarsanatha vasithu vitu padam partha athu velaye ila.intha vahayana tharamata vimarsanangalai vasipavarhal venumenda kuranjathu padam patha pirahu vaasinga..
    2website- ella manisanum thanaku therinjatha vachu periyaal ahathan try panraan.. ungadathu aarokiyamaana kalanthurayadal illa padam pakira aakala pilaya thisaithirupurathuthan ungada site seiyuthu enrathu varuthame..alavukathiham padam pakirathe sila thenguhala etpaduthunaalum, ipidiyana vimarsanangala pathu pala per ithaye nambi kedurathu pathipukuriyathu.. konjamavathu yosinga nanbarhale.. satharana nadeluhalin vimarsanangaloda poti pota nenga periya site..mathapadi nenga vera velaya paakalam cos ungadathula onnume puthusilla..

    Reply
  17. @ நோ நேம் .. நீங்க சொல்லிருக்குறது ஒரு எழுத்து கூட புரியல. தமிழில் எழுதவும். இல்லேன்னா அட்லீஸ்ட் இங்கிலிஷ்லயாவது எழுதவும். நோ தங்கிலீஷ் ப்ளீஸ்

    @ சொறியார் – ஏன்டா டேய் வெண்ணை.. போயி பொழப்ப பாருடா . . வந்துட்டானுங்க 😉

    Reply
  18. சிறப்பான படத்திற்கு சிறப்பான விமர்சனம்!!
    அகநிலையின் புறவெளிப்பாட்டினை மிகத் தெளிவாகக் கூறியிருப்பார்கள். சிலசமயங்களில் தாமஸ் கெட்டவர்போலத் தோன்றும். லிலியும் கிட்டத்தட்ட அப்படித்தான்….
    ஆனால் உங்கள் விமர்சனத்தில் கிளைமாக்ஸ் வரைக்கும் கொடுத்திருப்பது கொஞ்சம் நெருடுகிறது. ப்லாக் ஸ்வானின் இறுதிக்காட்சிகள் ரொம்பவும் திரில்லிங்கான, சஸ்பென்ஸின் உச்சம் நிறைந்த காட்சிகள். அதனை வெளிப்படுத்தியிருக்கவேண்டாம்!!

    உங்கள் இயக்குனர் பட்டியலில் குவாண்டின் டாரண்டினோவை எதிர்பார்த்தேன்!!

    Reply
  19. இந்த படத்தை டவுன்லோட் செய்து விட்டு பார்க்காமலேயே இருந்தேன். இந்த விமர்சனத்தை படித்த உடன் படத்தை பார்க்க தூண்டுகிறது. அருமையான விமர்சனம்.

    Reply
  20. ஏ ஆர் ரகுமான் வூட்ல சும்மா குந்திகினு இருக்காராமே?நாலாவது புள்ளைக்கு முயற்சி பண்ணுறாரா?ஹீ ஹீ

    Reply
  21. enda peyar michael.. itha therinju enna kilika porenga..
    en hostela net vasathi illa.. net cafela tamil fonta kaanalla..enaku englishum theriyathu.. (& ungada tn policea pathi sollatha tamilpadama inum athaye namburengale vetu address anupava?? ..aiyo naanga interpolke thanni katuravanga..ana epa mudiyumo apa katayam atha tamila adikiran. ungada vimarsanatha polave enda cmt um velayilla ..avasaramilla)

    Reply
  22. டேய் மைக்கெல் சனியனே… எதாவது ஒரு எழவ புரியறாப்புல அடிடா பேமானி.

    Reply
  23. என்னா தல வாரம் ஒரு பதிவுன்னு போட்டுக்கிட்டு இருக்கீங்க.அட்லீஸ்ட் ஒரு மூனு பதிவாவது வேனும்.

    shutter island பாக்கபோரேன்.

    Reply
  24. டே சொறிப்பயலே 🙂 .. நானு சைபர் போலீஸ் பத்தி போட்ட கமெண்டை நீ பாக்கலன்னு நினைக்குறேன் 🙂 .. உன்னோடதையும் இன்னும் ரெண்டு நாதாரிகளோடதையும்தாண்டா அங்க குடுத்துருக்கேன் 🙂 .. உன் கமெண்டெல்லாம் அங்க ட்ராக் ஆயிட்டுருக்கு. மவனே உனக்கு களிதாண்டி 🙂

    Reply
  25. மேலே போட்டுள்ள கமெண்ட், சொறியான் என்று, ஒரிஜினல் பெயர் சொல்ல பயந்து பம்பி ஒண்ணுக்குப் போகும் பயலுக்கு 🙂

    Reply
  26. This comment has been removed by the author.

    Reply
  27. Mr.Thelu,

    I visit your blog frequently. I agree with most of the review comments you give for international and tamil movies and Of course that what is called ‘Opinion differs’.

    I suggest you to watch ‘The Next Three Days’ acted by Russell crowe and Elizabeth. It is actually a remake of French film Pour Elle and comment here.
    I will try to let you know with my recommendations.
    Thanks,
    Kottee

    Reply
  28. Great acting by natalie…
    and
    great movie too…

    Reply

Join the conversation