மயக்கம் என்ன . . . .
இன்று மாலை ’மயக்கம் என்ன’ பார்க்க நேர்ந்தது. படம் பார்க்கும்போது, ஒரே விஷயம் தோன்றிக்கொண்டே இருந்தது. அது, இதுவரை செல்வராகவனின் படங்களைப் பார்க்கையில் தோன்றிய அதே விஷயம் தான். ரொமான்ஸ் என்பதுதான் செல்வராகவனின் genre. அதில் மனிதர் பட்டையைக் கிளப்புகிறார். காதல் சம்மந்தப்பட்ட மெல்லிய உணர்வுகள், அவருக்குத் தெளிவாகப் புரிந்திருக்கின்றன. அந்த உணர்வுகளை வைத்து அவர் எழுதும் காட்சிகள், மிகத் துல்லியமாக இருக்கின்றன.
படத்தில், கார்த்திக்குக்கும் யாமினிக்கும் இடையே ஒளிந்திருக்கும் காதலை இருவருமே வெளிப்படுத்த மறுப்பதும், அது இருவரையும் மீறிக்கொண்டு வெளிவருவதையும் மிக அழகாகவே காட்டியிருக்கிறார். ’அழகு’ என்பது சரியல்ல. ‘Raw’ என்பதே சரி. இப்படித்தான் காதல் வெளிப்படும். காதல் எழுகையில் அது யாருக்கு இடையே, எந்தச் சந்தர்ப்பத்தில் என்பதையெல்லாம் பார்ப்பதேயில்லை. மிக இயற்கையாக, டக்கென்று ஒரு மலர் வெடித்து மலர்வதைப்போல், அடுத்த அடியை நாம் நடக்கையில் எடுத்து வைப்பதைப்போல், கண் இமைப்பதைப்போல். . . அந்த உணர்வை அருமையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் அதன்பின் நிகழும் நிகழ்வுகள்… முதல் பாதி முடியும் வரை.
’அடிடா அவள’ பாடலுக்கு முன்பும் பின்பும் வரும் காட்சிகள், இப்படத்திலேயே எனக்கு மிகப்பிடித்த காட்சிகள்.
இரண்டாம் பாதி, தமிழ்ப்படங்களின் வழக்கமான க்ளிஷேக்களால் நிரம்பியிருக்கிறது. அவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துவிடமுடியும். அவை அலுப்பாகவும் இருந்தன.
இப்படத்தின் முதல் பாதிக்காகவே – காதலைப்பற்றிய செல்வராகவனின் புரிதலுக்காகவே – இப்படத்தை விரும்பினேன்.
இன்னொரு விஷயம் – பப்ளிஷ் செய்தபின் நினைவு வந்ததால், ட்ராஃப்ட்டுக்கு revert செய்துவிட்டு அதனை இங்கே எழுதுகிறேன். சில நாட்களுக்கு முன்னர் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில், ‘சினிமா 360’ என்ற நிகழ்ச்சியில், செல்வராகவனையும் தனுஷையும் ஒருவர் பேட்டி கண்டார். பேட்டி முழுதும் ‘மயக்கம் என்ன’ படத்தைப் பற்றியே இருந்தது. அதில், ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அவர் கேட்ட கேள்விகள் அத்தனையுமே படு போர் ரகம். செல்வராகவன் போன்ற ஒரு ஆளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘அது எப்புடி இப்படி ஒரு படம் எடுக்கத் தோன்றியது?’, ‘படத்துல நீங்கள் எடுத்ததுலயே சிறந்த காட்சி எது?’, படத்துல பாட்டெளுதின அனுபவம் எப்படி இருந்தது?’, ‘பாடின அனுபவம் பத்தி சொல்லுங்க’ என்றெல்லாம் கேட்டு செல்வராகவனைப் படுத்தியெடுத்ததைப் பார்க்க நேர்ந்தது. செல்வராகவனும் ஓரிரு வார்த்தைகளில் பதிலைச் சொல்லி முடிக்க, உடனேயே அடுத்த boring கேள்வி. ‘என்னய்யா இது?’ என்று அவரும் எண்ணியிருப்பார் என்றே தோன்றியது. படத்தைப் பார்த்துவிட்டுக் கேள்விகள் கேட்பதில் புகுந்து விளையாட வேண்டாமா? இப்படியா அசுவாரஸ்யமாகக் கேள்விகள் கேட்பது? யாராவது அந்த நண்பருக்கு இதனைப் புரிய வைத்தால், இனியாவது அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்புண்டு என்று தோன்றியது.
பொதுவாகவே தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் சினிமா பேட்டிகள் இப்படித்தான் இருக்கின்றன. பேட்டிக்கு வருகை தரும் பிரபலத்தின் ஸ்டார் attraction இவர்களை பாதித்துவிடுகிறது போலும். அங்கே கேள்வி கேட்கும் நபர்தான் கதாநாயகன் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. கரண் தாப்பரைப்போல் அடித்து விளையாடும் மனநிலை இவர்களுக்கு வரவேண்டும். கொஞ்சமாவது நல்ல கேள்விகள் – பட இயக்குநரது உள்ளே ஒளிந்திருக்கும் பதில்களை வெளியே கொணரும் நிகழ்ச்சிகள் – இனியாவது வருமா? கேள்விகள் கேட்பவர்கள், நல்ல திரைப்படங்களின் ரசிகர்களாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். Analyze செய்யும் திறமை அவர்களுக்கு இருக்கவேண்டும். அல்லது, இப்போது இப்படி திராபைக் கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு, அந்தச் சேனல் நிர்வாகம், உரிய பயிற்சி அளிக்கவேண்டும். நல்ல உலகப்படங்களை அவர்களுக்குப் போட்டுக்காட்டலாம். திரைப்படம் சம்மந்தப்பட்ட புத்தகங்களை (வண்ணத்திரை ரகப் புத்தகங்கள் அல்ல) அவர்களுக்குப் படிக்கக் கொடுக்கலாம். சிறந்த கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அவர்களுக்குப் போட்டுக்காட்டலாம். இன்னும் creativeஆக என்னென்னமோ செய்யலாம். அப்போதுதான் அந்த நிகழ்ச்சிகள் ஓரளவாவது சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
வட…
இசை, ஒளிப்பதிவு, plagiarism இது எத பத்தியும் சொல்லலையே தல…முக்கியமா ஒளிப்பதிவு…
@ முரளி – அதையெல்லாம் பல விமர்சனத்துல சொல்லிட்டாங்களே… நமக்கு என்ன தேவை இந்தப் படத்துல? அருமையான romance இருக்கு. அது போதும்னு தோணிச்சி 🙂
சுத்த ப்ளேடு இதெல்லாம் ஒரு படம்…கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//
இரண்டாம் பாதி, தமிழ்ப்படங்களின் வழக்கமான க்ளிஷேக்களால் நிரம்பியிருக்கிறது. அவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துவிடமுடியும். அவை அலுப்பாகவும் இருந்தன. /
எனக்கு அப்படி தோன்றவில்லை , தேள், இரண்டாம் பாதியில் தான் அந்த பெண் நடித்தே இருப்பாள்,அதுவும் காரில் நண்பனுக்கு அறிவுரை சொல்லும் காட்சியும் (நான் உன்முன்னாடி அழுததுதான் தப்பு ,ஆம்பிள்ளைங்க வீக்னெஸ் ) , ரத்தத்தை துடைக்கும் காட்சியும் என்னை ரொம்ப பாதித்தது ,தனுஸ் மாடியில் இருந்து குதிப்பதற்கு வேண்டுமானால் காரணம் அவ்வளவு வெயிட்டாக இல்லை எனலாம், பெரிய போட்டோ கிராபர்னா நீளமான முடி வைத்திருப்பது இவைகளை செல்வராகவன் தவிர்த்து இருக்கலாம், இரண்டாம் பாதியில் அவள் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் டயலாக், BGM எதுவும் இருக்காது , அந்த இடத்தில் எதுவுமே தேவையில்லை ,அவள் அவனிடம் பேச எதுவுமே கிடையாது , இதை விட ஒரு அருமையான காட்சியை அந்த படத்தில் வேறெந்த காட்சியுடனும் ஒப்பிடமுடியாது , படம் பார்க்கும் போது அனைவரும் இரண்டாம் பாதியில் நெளிந்தனர் எனபது உண்மைதான் ஆனால் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல் படம் ரொம்ப பிடித்து இருந்தது ,(படம் நல்ல இருக்குன்னு வெளிய சொல்லவே பயமா இருக்கு )
உங்கள் விமர்சனத்துக்கு தான் actually waiting ,நான் உங்களுக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன்
@ டெனிம் – செகண்ட் ஹாஃப் பத்தி உங்க கருத்தை அப்புடியே ஒத்துக்குறேன். இருந்தாலும், அதன் க்ளிஷே சீன்கள், எனக்கு அலுப்பாக இருந்திச்சு. அதுனால, என்னதான் ரிச்சா நல்லாப் பண்ணிருந்தாலும், அந்த க்ளிஷே கடுப்புல இருந்துட்டேன். இருந்தாலும், அதையும் மீறி, ஃபர்ஸ்ட் ஹாஃபை வெறித்தனமாக லைக்குகிறேன் :). .
அந்த BGM இல்லாத ஸீன்கள், ரத்த ஸீன், அப்புறம் ரிச்சாவுக்கும் தனுஷுக்குமான சில காட்சிகள் பார்க்கும்போது, எதுனா உலகப்படம் பார்க்குறோமோன்னு நினைச்சேன்.. ஆனா அந்த நெனப்பு கொஞ்ச நேரம்தான் :-). . ஹீ ஹீ
எனக்கு உலகப்படம்னு தான் தோணுது
அவளை ஆரம்பத்தில் dating , அப்படி இப்படி ன்னு காட்டி இருந்தாலும் ,இரண்டாம் பாதியில் ,கணவன் பைத்தியம் ,தன்னை தினமும் அடிக்கிறான் ,நிர்வாணமாகி புகைப்படம் எடுக்கிறான் ,இந்த நிலைமையில் எந்த பெண்ணும் அவனை விட்டு விலகவே நினைப்பாள்,ஆனால் நண்பனிடம் “உண்பொன்னாட்டிய நி தேடிக்க ,அடுத்தவன் பொண்ணாட்டி மேல ஆசப் படாதனு ” . உண்மைல அவளை இரும்பு மனிசியாகத்தான் காட்டி இருப்பாரு
இந்த ஏழாம் அறிவு பார்த்தனால் ஏற்ப்பட்ட கேர் ,இந்த படத்துனால கொறஞ்சுது , ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம் பார்த்த திருப்தி இருந்துச்சு
உங்ககிட்ட கொஞ்சம் அதிகமா எதிர் பார்த்தேன் ,இரண்டாம் பாதி அவ்வளவு அமைதியா இருக்குமே ,இதை சென்னைல பார்த்திருந்தா என்ன ஆகிருக்கும்,
முரளி ரொம்ப புடிச்சு இருந்துச்சு ஆனா வெளிய சொல்ல பயமா இருக்குன்னு சாட் சொன்னாரு ,
//புதிய தலைமுறை’ தொலைக்காட்சி//
அப்படின்னு ஒன்னு இருக்கா ?
//அதையெல்லாம் பல விமர்சனத்துல சொல்லிட்டாங்களே… நமக்கு என்ன தேவை இந்தப் படத்துல? அருமையான romance இருக்கு. அது போதும்னு தோணிச்சி :-)//
இப்படித்தான் பல பேர் நினைச்சு விட்டுறாங்க விடாதீங்க கருந்தேள் லெட்டர் போடுங்க..:))
NALLA VIMARSANAM.. TV PETTI IPPADITHAAN IRUKKINRANA.. ENNA MAYAKKAMO IPPADI POKIRATHU TV NERKANALKAL.. VAALTHTHUKKAL
///அதையெல்லாம் பல விமர்சனத்துல சொல்லிட்டாங்களே.////
என்ன இது…. பலரும் நீங்களும் ஒண்ணா…. நீங்க எழுதுன பிறகு தான் மத்த விமர்சனத்தையே படிக்கணும் ன்னு வெயிட் பண்ணற எங்கள மாறி உங்க தீவிர வாசகர்கள் என்ன செய்வார்கள்…
very good review… i love this film…. my review at http://feelthesmile.blogspot.com/2011/11/blog-post.html
///முரளி ரொம்ப புடிச்சு இருந்துச்சு ஆனா வெளிய சொல்ல பயமா இருக்குன்னு சாட் சொன்னாரு ,///
ஆமா மோகன் எனக்கு படம் ரொம்பவே புடிச்சுருந்துச்சு… ஒரு உணர்வு இருந்துச்சு படத்துல…. இந்த கலாச்சார காவலர்கள் லாம் தியேட்டர் பக்கமே வந்துராதிங்க… ஓடிடுங்க… அதுலயும் ஒரு பிரபல பதிவர எழுதுன விமர்சனத்த பாத்தேன்.. கடுப்பா ஆகிடுச்சு… மயக்கம் என்ன – சைக்கோக்களுக்கு மட்டும் போட்டு இருந்தார்… சரி இதுக்கு முன்னாடி இந்த ஆளு என்ன தான் சினிமா விமர்சனத்த கிளிச்சுருக்காருன்னு பாக்கலாம் பாத்தேன்…. வம்சம் படத்துக்கு அவரு எழுதுன விமர்சனத்த பாத்தேன்… “கலைஞரின் வம்சம் ஆயிற்றே? அம்சம்தான்!”… தலை தெறிக்க ஓடி வந்துட்டேன்… 🙂 🙂 🙂
இரண்டாம் பாதி செல்வராகவன் முழு போதையில் எடுத்திருப்பாரோ என எண்ண வைத்தது.
ஆம்பளை வீக்னெஸ் என சால்ஜாப்பு சொல்வது செல்வா தன்னை நியாயப்படுத்தி கொள்வது போல இருந்தது. எப்படி இருப்பினும் JUST TAKE IT EASY REACTION ஒத்து கொள்ள முடியாமல் இருந்தது.Its nothing but utter male chauvenistic attitude.
To Denim – அது எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது . குடித்து விட்டு செய்யும் அட்டூழியங்கள் எப்படி நியாயபடுத்திக் கொள்கீறிர்கள். If everything is justifiable for the sake of achievements, i just want to ask u , ultimately what that achievements means !!!!!
// கொஞ்சமாவது நல்ல கேள்விகள் – பட இயக்குநரது உள்ளே ஒளிந்திருக்கும் பதில்களை வெளியே கொணரும் நிகழ்ச்சிகள் – இனியாவது வருமா? கேள்விகள் கேட்பவர்கள், நல்ல திரைப்படங்களின் ரசிகர்களாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். Analyze செய்யும் திறமை அவர்களுக்கு இருக்கவேண்டும். அல்லது, இப்போது இப்படி திராபைக் கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு, அந்தச் சேனல் நிர்வாகம், உரிய பயிற்சி அளிக்கவேண்டும்.//
பெரும்பாலும் பேட்டி எடுப்பவர்கள் ஏதோ கடவுளைக் கண்ட பக்தன் போலவே கேள்விகள் கேட்பது கடுப்பை கிளப்புகிறது..
ராஜேஷ், கரன் தாப்பரை விடுங்க. அதெல்லாம் நம்ம ஊர்ல இப்போதைக்கு சாத்தியம் இல்லை. CNN IBN சேனலில் ராஜீவ் மசந்த் சொல்லும் மைக்ரோ விமர்சனம்தான் என் மோஸ்ட் பேவரிட் சினிமா ப்ரோக்ராம். NDTV ஹிந்து சேனலில் விமர்சனம் சொல்லும் அனுராதா ஆனந்தை சில நாட்களுக்கு முன்பு தியேட்டரில் பார்த்தேன். கொஞ்ச நேரம் உரையாடினேன். ‘எதற்கு தமிழ் படங்கள் பற்றிய நேர்மையான விமர்சனங்கள் இங்குள்ள டிவிக்களில் வருவதில்லை’ எனக்கேட்டேன். ‘அதற்கான வாய்ப்பு தமிழ் நாட்டில் இல்லை என்றும், பல நிர்பந்தங்கள் இருப்பதாகவும்’ கூறினார். இப்போதைக்கு ராஜ் டிவியில் வரும் ரோகினி பாக்ஸ் ஆபிஸ் நிகழ்ச்சி எனக்கு பிடித்துள்ளது. சுகாசினி ஜெயா டிவியில் நடத்தும் ஹாசினி பேசும் படம் என்றால் எனக்கு அலர்ஜி.
//
ஆமா மோகன் எனக்கு படம் ரொம்பவே புடிச்சுருந்துச்சு… ஒரு உணர்வு இருந்துச்சு படத்துல…. இந்த கலாச்சார காவலர்கள் லாம் தியேட்டர் பக்கமே வந்துராதிங்க… ஓடிடுங்க… அதுலயும் ஒரு பிரபல பதிவர எழுதுன விமர்சனத்த பாத்தேன்.. கடுப்பா ஆகிடுச்சு… மயக்கம் என்ன – சைக்கோக்களுக்கு மட்டும் போட்டு இருந்தார்… சரி இதுக்கு முன்னாடி இந்த ஆளு என்ன தான் சினிமா விமர்சனத்த கிளிச்சுருக்காருன்னு பாக்கலாம் பாத்தேன்…. வம்சம் படத்துக்கு அவரு எழுதுன விமர்சனத்த பாத்தேன்… “கலைஞரின் வம்சம் ஆயிற்றே? அம்சம்தான்!”… தலை தெறிக்க ஓடி வந்துட்டேன்… 🙂 🙂 :)/
இங்கு கமெண்ட் போட்டிருப்பவர்களில் ஒருவரின் விமர்சனத்தை பார்த்தேன் ,//இதற்கு நடுநிசி நாய்களே தேவலாம்.
இந்த படத்த பாக்குறதுக்கு வேலாயுதத்த இன்னொரு தடவ பார்த்துட்டு போயிடலாம்.கலாச்சார சீரழிவு.//
இப்படி விமர்சனம் பண்ணுற ஆளுங்கள வச்சுக்கிட்டு ,என்ன பண்ணுறது,எல்லாரும் மேலோட்டமா விமர்சனம் பண்ணுறமாதிரி இருக்கு ?,தேளிடம் எதிர் பார்த்தேன் அவரும் கவுதுட்டாறு
ஆம்பளை வீக்னெஸ் என சால்ஜாப்பு சொல்வது செல்வா தன்னை நியாயப்படுத்தி கொள்வது போல இருந்தது. எப்படி இருப்பினும் JUST TAKE IT EASY REACTION ஒத்து கொள்ள முடியாமல் இருந்தது.Its nothing but utter male chauvenistic attitude.
To Denim – அது எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது . குடித்து விட்டு செய்யும் அட்டூழியங்கள் எப்படி நியாயபடுத்திக் கொள்கீறிர்கள்//
கண்டிப்பாக உங்கள மாதிரி கலாக்காசார காவலர்களுக்கான படம் கிடையாது ,உங்களுக்கு முரளி சொன்ன பதில் தான் ,
@ டெனிம் – /தேளிடம் எதிர் பார்த்தேன் அவரும் கவுதுட்டாறு// – அடப்பாவி. நான் படம் நல்லா இருக்குன்னு தானே சொன்னேன் 🙂 . . டீட்டெயிலா எழுத விருப்பம் இல்லாம இருந்தது. காரணம் – சோம்பேறித்தனம் தான். வேற ஒன்யும் இல்ல 🙂
@ கருணாகரன் – விடுங்க தலைவா.. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்கி இல்லையா. ..
@ !சிவகுமார் ! – ரோகினி பாக்ஸ் ஆஃபீஸ் இன்னும் பார்க்க ஆரம்பிக்கல. ஹாசினி பேசும் படம் பத்தி நம்ம கீதப்ரியன் வண்ட வண்டையா சொல்வாரு 🙂 . . ஒரு நல்ல விமர்சன நிகழ்ச்சிக்கான வாய்ப்புகள் இங்க குறைவுதான். ஏன்னா, சினிமா நட்சத்திரங்கள், கடவுள்கள் மாதிரி இங்க கருதப்படுராங்க. கமலை வெச்சிக்கினு, முஸ்லிம்களை ஏன் வெறுக்குரீங்கன்னு யாராவது வெளிப்படையா அவராண்ட கேள்வி கேட்க முடியுமா? கண்டிப்பா முடியாது. உங்கள் பதிலுக்கு நன்றி
மெண்டல் ராகவன் படமா?ஆள உடுங்க!ஏன் அவன் படத்தில் குறைந்தது ஒரு மேண்டலாவது இருக்காங்க?ஒன்னியும் வெளங்கல!அப்புறம் கொசு தனுசுக்கு வந்த வாழ்வு!அவன் என்ன மொக்க படம் நடித்தாலும் ஆகா இதுதான் ஒலக சினிமான்னு தூக்கி வச்சி பில்டப்!எல்லாம் பி ஆர் ஹைப்!
தனுசின் டவுசர் அவுத்த ஞாநி!ஆடுகளம் படத்தில் தாயை மதிக்கத தற்குறி!ஆனா அதுதான் ஒலக சினிமா!ஒண்ணா நம்பர் பொறுக்கியா இருக்கணும்!மூஞ்சிய க்ளோசப்பில் பாத்தா வாந்தி வருது!அவனெல்லாம் ஹீரோ!
இதையும் படிக்கவும்!
http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post_30.html
ஆஹா இதுதான் உலக சினிமா!இனி எவன் வந்தாலும் இதை வைத்து போரட்டியில் அடிங்க@ஒன்றரை கண்ணன் செல்வா ராகவனின் வாந்திகளுள் மற்றொன்று!
***************************************************
கமலை வெச்சிக்கினு, முஸ்லிம்களை ஏன் வெறுக்குரீங்கன்னு யாராவது வெளிப்படையா அவராண்ட கேள்வி கேட்க முடியுமா? ஒன்றரை கண்ணன் வாழ்க மெண்டல் எலும்பு கூடு தனுசு வாழ்க!
.
.
இஸ்லாமே கர்பனை !அப்புறம் என்ன கேள்வி?இதை படி!
http://senkodi.wordpress.com/2010/12/13/senkodi-islam/
@ viki
//மெண்டல் ராகவன் படமா?ஆள உடுங்க!ஏன் அவன் படத்தில் குறைந்தது ஒரு மேண்டலாவது இருக்காங்க?ஒன்னியும் வெளங்கல!அப்புறம் கொசு தனுசுக்கு வந்த வாழ்வு!அவன் என்ன மொக்க படம் நடித்தாலும் ஆகா இதுதான் ஒலக சினிமான்னு தூக்கி வச்சி பில்டப்!எல்லாம் பி ஆர் ஹைப்!
தனுசின் டவுசர் அவுத்த ஞாநி!ஆடுகளம் படத்தில் தாயை மதிக்கத தற்குறி!ஆனா அதுதான் ஒலக சினிமா!ஒண்ணா நம்பர் பொறுக்கியா இருக்கணும்!மூஞ்சிய க்ளோசப்பில் பாத்தா வாந்தி வருது!அவனெல்லாம் ஹீரோ!//
உங்களுக்கு புடிக்கலைனா எதுக்கு விமர்சனம் பண்றீங்க.. முடிஞ்சா ஒரு ஒலக படம் ஒன்னு எடுங்க..இல்லாட்டி…….
செல்வராகவன (படங்களும்) எனக்கு சுத்தமா புடிக்காது………ஏராளமான க்ளீஷேக்கள்….வேற டைரக்டர் செஞ்சா திட்டுவாங்க….ஆனா, இவர ஒண்ணும் சொல்ல மாட்டாங்க…மணிரத்னத்துக்கு ஆன மாதிரி….நெறைய காட்சிகள் வலுவுல திணிச்ச மாதிரி இருக்கும், ஷாக் வேல்யுக்காக…..
படத்த இன்னும் பாக்கல.பாக்குற மாதிரியும் இல்ல….அதனால்
எனக்கு சொல்ல வேறேதுவும் இல்லை….
A Beautiful mind – காதல் கொண்டேன் ஆரம்பிச்சு இருந்து இன்னுமா அதே படத்துல உருவுராறு………ஆயிரத்தில் ஒருவன் மட்டும் சற்றே வித்தியாசமாக நாலஞ்சு படத்துல இருந்து உருவிட்டாரு……
//டப்பாவி. நான் படம் நல்லா இருக்குன்னு தானே சொன்னேன் 🙂 . . டீட்டெயிலா எழுத விருப்பம் இல்லாம இருந்தது. காரணம் – சோம்பேறித்தனம் தான். வேற ஒன்யும் இல்ல :-)//
தல நீங்க படம் நல்லா இல்லைன்னு சொன்னீங்கனு சொல்லல ….. கொஞ்சம் விளக்கமா எழுதி இருக்கலாம்னு சொன்னேன் அம்புட்டுதான்
செல்வராகவன (படங்களும்) எனக்கு சுத்தமா புடிக்காது…//
உங்களுக்கு எந்த தமிழ் படம் தான் புடிச்சு இருக்கு
‘செல்வராகவனின் காதல்’ இந்த ஒரு விஷயத்துக்காக அவரின் படங்களைப் பார்க்கலாம்!
அதுவும் நீங்க வேற சொல்லிட்டீங்க இல்ல? பார்க்கணும்!
@கொழந்த
கைய குடுங்க!நீங்க நம்ம சைடு!
*
செல்வாவின் “படைப்பு” திறன்:
கிளாடியேட்டர் 300 அபோகலிப்டோ போன்ற படங்களின் மிக்ஸ் தான் ஆயிரத்தில் ஒருவன்!
*
காதல் கொண்டேன் குணா பட உல்டா!
*
துள்ளுவதோ இளமை எல்லா சகிலா படங்களின் கலவை!
*
புதுபேட்டை city of god
உங்களுக்கு புடிக்கலைனா எதுக்கு விமர்சனம் பண்றீங்க.. முடிஞ்சா ஒரு ஒலக படம் ஒன்னு எடுங்க..இல்லாட்டி……///
.
.
புடிக்கலைன்னா விமர்சனம் பண்ண கூடாதுன்னா கமல் பட விமர்சனமே வராதே!ஒலக படம் ஏற்கெனவே பல மொழிகளில் இருக்கு!தமிழில் ஒலக படம்னு சொல்லி ஏனய்யா கொல்றீங்க?செல்வா ராகவன் படத்தில் மறை கழண்ட கதா பாத்திரம் இல்லைன்னு சொல்றீங்களா?ஞாநி எழுதிய கட்டுரையை படிங்க!சமூக சீர்கேடு ஏற்படுத்துவதில் தனுஸ் மற்றும் பிற விசிலடிச்சான் குஞ்சுகளின் படங்கள் பற்றி சொல்லியுள்ளார்!சிந்தியுங்க!(இது பற்றி எனது ப்ளாகில் நக்கல் விவாதம் உள்ளது.சோ நோ மோர கமண்ட்ஸ்)
தங்களின் “கமலஹாசன் நிகழ மறுத்த அற்புதமா?” என்ற பதிவை வாசித்த நம்பிக்கையில் இப்பதிவையும் வாசித்தது என் தவறுதான்.
Good review
இப்படி ஒரு விமர்சனத்தை உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கலை
yella thappayum kandupidikira ningal, mayakkam eenna padathai mattum vittu vaikanum………….sollunga kannayiram avargale………..
பாக்யராஜ் சிரோட சினிமா பத்தி பேசலாம் நிகழ்ச்சில நல்ல கேள்வியா கேட்டார் சார்
ஒரு ரசிகனா இருந்து நல்ல கேள்வி கேட்டார்
It is a mixture of Kaadhal Kondein, 7G Rainbow Colony and Yaaradi Nee Mohini. It is a movie made in haste. The movie would have been better had it been made for just one and half an hour. Because the movie had to be made for two hours, there were scenes which were unnecessarily long and some unwanted scenes. Selva’s creativity is waning. Richa almost reflected the Sonia Agarwal of Kaadhal Kondein. Even her mannerisms, look, dressing pattern and even hairstyle reflected Sonia Agarwal of Kaadhal Kondein.
ada pongappa ungalukku vera velai illaiya cinema thavira vera ethaiyavuthu vimarsanam pannungappa