சிம்புவின் வாலு படமும் அமிதாப் பச்சனும்
நேற்று தொலைக்காட்சியில் சிம்புவின் ‘வாலு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். அதன் இறுதியில் ஒலித்த இசையைக் கேட்டதும் ஜெர்க் ஆனேன். காரணம், அமிதாப் பச்சன் நடித்த ‘காலியா’ (Kaalia) – தமிழில் ‘கூலிக்காரன்’ என்று விஜயகாந்த் நடித்து வெளியான படம் – இப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலான ‘Jahan Teri Ye Nazar Hai’ என்ற டக்கரான கிஷோர் குமார் பாடலின் இசை, வாலு படத்தின் தீம் இசையாக வருகிறது. கொஞ்சம் கூட மாற்றமே இல்லாத அதே ஜெராக்ஸ் இசை.
வாலு ட்ரெய்லர் இங்கே.
இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும் இசையை கவனியுங்கள்.
இதோ அமிதாப்பின் பாடல்.
இந்தப் பாடலின் 1:03 நிமிடத்தில் இந்த இசை ஆரம்பிக்கிறது. கேட்டுப்பாருங்கள். படத்தின் இசையமைப்பாளர் யார் என்று பார்த்தேன். தமன் என்று போட்டிருந்தது. தமனுக்கு எனது வாழ்த்துகள். படம் துவங்கப்போகும் முதல் நாளிலேயே ஹிந்தி இசையைச் சுட்டு தமிழ் மக்கள் கேட்டு இன்புறுவதற்கு வழங்கியுள்ளார். படத்தின் பாடல்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்.
அறுந்த வாலில் பட்டாசை தீபாவளியன்று கொளுத்தி போட்டு விடுவர் மக்கள். அது கிடக்கட்டும். அமிதாப் பாடல் சிம்ப்ளி சூப்பர்ப். செம மாஸ் ஹீரோ நம்ம பச்சன்!!
கொடுமை கொடுமை 😀
ஆரம்பத்திலேயே குட்டு வச்சாச்சா … படம் வந்ததும் என்னென்ன நடக்கப்போகுதோ. ஆண்டவா …
niraiya ethirpaththu vanthen, posukkunnu mudissudingale..
காப்பியடித்தலை சுடச்சுட பிடிப்பதால் …
‘காப்பியர்களை செருவென்ற பாண்டியன்’ என இன்று முதல் அன்போடு அழைக்கப்படுவாய்.
?
பாஸ் அப்படியே அந்த மிஷன் இம்பாஸிபிள் போஸ்டரையும் MI2 வில் புறாவின் பின்னணியில் வரும் நாயகன் காட்சியையும் சுட்டு ட்ரைலர் செய்த ஒலக்கை சாரி ஒலக நாயகன் பற்றியும் எழுதுங்கோ
@ சிவகுமார் – மாஸ் ஹீரோவேதான் :-).. பச்சனை மிஞ்ச ஆளில்லைல்ல 🙂
@ ரஃபீக் – ஆமா ஆமா 🙂
@ ஹாலிவுட்ரசிகன் – படம் வந்ததும் அது எதுலருந்து எடுத்ததுன்னு தெரிஞ்சிரப்போவுது 🙂
@ வல்லத்தான் – கவலையே படாதீங்க… இதோ அடுத்த கட்டுரையெல்லாம் போட்டாச்சி… அதுல நீங்க எதிர்பார்த்தது இருக்கும் என்று நம்புகிறேன்
@ உலக சினிமா ரசிகரே – ‘காப்பியர்களை செருவென்ற பாண்டியன்’ என்ற பட்டத்தால் யாம் அகமகிழ்ந்தோம் 🙂
@ கொழந்த- !!
@viki – அந்தப் படம் வரட்டும். பார்த்துட்டு, காப்பியா இருந்தா புடிச்சி அடிப்போம். கண்டிப்பா !
என்ன பண்ண சொல்ற,
பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்றீங்க
என்ன பண்ண சொல்ற,
பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்றீங்க