திரைக்கதை எழுதுவது ‘இப்படி’
வெகுநாட்களாகவே, இந்த விஷயத்தைப் பற்றிப் பகிரவேண்டும் என்பது எனது ஆசையாகவே இருந்தது. ஆசை என்பதைவிட, ஆர்வம் என்று சொன்னால் சரியாக இருக்கும். திரைக்கதை எழுதுவது என்பது பொதுவாகவே ஒரு கடினமான வேலை. ஆகவே, திரைக்கதை என்றால் என்ன? அதன் உள்ளடக்கங்கள் என்னென்ன? திரைக்கதை வடிவம் என்பது எப்படி இருக்க வேண்டும்? ஆகிய விஷயங்களைப் பற்றி, சில விஷயங்களை எழுதவேண்டும் என்று நினைத்தேன். உடனேயே, ‘நீ என்ன பெரிய பாக்யராஜா? ஓவரா பேசாதடா’ என்றெல்லாம் நினைக்க ஆரம்பிக்காமல், கொஞ்சம் பொறுமையாக மேலே படியுங்கள்.
திரைக்கதைகளைப் பற்றி நான் எழுத நினைத்ததற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. எந்தப் படத்தை நான் பார்க்க ஆரம்பித்தாலும், சில விஷயங்களை அந்தப் படத்தில் தேடுவேன். அந்த விஷயங்கள் இருந்தால் தான் அப்படம் அலுக்காமல் செல்லும். ஒரு படத்தைப் பார்க்க ஆரம்பிக்கும் வெகுசில நிமிடங்களிலேயே அப்படம் அலுக்கிறதா அல்லது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று தெளிவாக இப்போதெல்லாம் தெரிந்துவிடுகிறது. இதற்குக் காரணம், இந்த விஷயங்கள் தான். திரைக்கதை வடிவம் பற்றியும், திரைக்கதைகள் பற்றியுமே எனக்குத் தெரிந்து கடந்த நான்கு வருடங்களாகப் படித்து வருகிறேன். ‘படித்து’ என்றால், பரீட்சைக்குப் படிப்பது போல் அல்ல. அவ்வப்போது திரைக்கதை வித்தகர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தும், அதில் சொல்லப்பட்ட திரைக்கதைகளைப் படித்தும், திரைப்படங்களைப் பார்க்கையில் நான் படித்திருக்கும் விஷயங்கள் அதில் இருக்கிறதா என்று பரிசோதித்தும் வருவதால், தற்போது, திரைக்கதைகள் பற்றிய தெளிவான ஒரு புரிதல் என்னிடம் இருக்கிறது. இந்தப் புரிதலை, அவ்வப்போது சில படங்களைப் பார்த்துப் பரிசோதிப்பது எனது வழக்கம். படங்களைப் பார்க்கையில், பொதுவாகவே எனது புரிதல் சரியாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
ஆகவே, அப்படி நான் முதன்முதலில் படித்துப் பிரமித்த ஒரு அருமையான புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதுவதே நோக்கம். திரைக்கதை எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கும் நண்பர்கள், முதலும் கடைசியுமாக இந்தப் புத்தகத்தைப் படித்தால் போதும். இதை எழுதியவர், ஹாலிவுட்டில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக திரைக்கதைகள் எழுதும் தொழிலில் இருப்பவர். ‘திரைக்கதை வடிவம்’ என்பதே, இவர் கண்டுபிடித்துச் சொன்னபின்தான் வெளியுலகத்துக்கு வந்தது. ஆகவே, இவர் 1979 ல் எழுதிய ‘Screenplay : The Foundations of Screenwriting ‘ என்ற புத்தகத்தில் இவர் சொல்லியிருந்த பல விஷயங்கள், இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மிகப்பிரபல இயக்குனர்களான ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன், மைக்கேல் பே போன்றவர்களே, இந்தப் புத்தகத்தை உபயோகித்து அருமையான பல படங்கள் எடுக்கும் அளவுக்கு இவர் பிரபலம். மட்டுமல்லாமல், மொத்தம் முப்பது மொழிகளுக்கும் மேல் இவரது புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அத்தனை திரைப்படக் கல்லூரிகளிலும் இவரது இந்தப் புத்தகம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் தற்போது திரைக்கதை வகுப்புகள் எடுத்து, பல இயக்குனர்களின் சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்து வைக்கும் திரைக்கதையின் பிதாமகர் இவர்.
Syd Field
சில வருடங்களுக்கு முன், ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்று சுஜாதா ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தை, லேட்டாகத்தான் படித்தேன். அதைப் படித்து, வழக்கப்படி அதிர்ந்துபோனேன். ஏனெனில், சுஜாதா, சரளமாக இந்த ஆங்கிலப் புத்தகத்தின் பல பக்கங்களை, பல அத்தியாயங்களை, என்னமோ தானே யோசித்து எழுதியதுபோல சுட்டிருந்தார். புத்தகத்தின் முன்னுரையில் சிட் ஃபீல்ட் பற்றிய ஒரு மிகச்சிறிய reference வருகிறது. அவ்வளவே. அதன்பின், தமிழ் சினிமாவின் காப்பி சரித்திரத்தைப் பார்க்கையில்தான், இதற்கு சுஜாதா மட்டும் விதிவிலக்கா என்ன? என்று புரிந்தது. சுஜாதா, பல இடங்களில், தனது அனுபவத்தில் இருந்து எழுதியதாக, திரைக்கதை பற்றிய பல விஷயங்களை எழுதியிருப்பார். அவையெல்லாம், இந்த ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து ‘மொழிபெயர்க்கப்பட்டவையே’ (குறிப்பு – இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பது, மணிரத்னம் !!).
இந்தக் கட்டுரைகளை எழுதப்போகும் காரணம் இன்னொன்றும் உண்டு. சுஜாதா எழுதியுள்ள புத்தகத்தில், ஒரிஜினலில் சொல்லப்பட்டுள்ள உதாரணங்கள் வரும்போதெல்லாம், சட்டென்று மணிரத்னம் படங்களில் உள்ள உதாரணங்களைச் சொல்லத் தொடங்கிவிடுவார். அது, மொக்கையாக இருக்கும். மூல நூலில் உள்ள உதாரணங்களை அப்படியப்படியே பேசி விவாதிப்போமே என்பதால்தான் இக்கட்டுரைகள்.
ரைட். முன்னுரை போதும். இந்தப் புத்தகத்தின் நேரடி வரிக்கு வரி மொழிபெயர்ப்பாக இந்தக் கட்டுரைகள் இருக்காது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிட் ஃபீல்ட் விளக்கியுள்ள பல அருமையான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதே நோக்கம். திரைத்துறையில் இருக்கும் பல நண்பர்களால், இந்த ஒரிஜினல் ஆங்கிலப் புத்தகத்தை வாங்க இயலாமல் இருக்கலாம். அல்லது அதில் கையாளப்பட்டுள்ள மொழி புரியாமல் இருக்கலாம். ஆகவே, எளிதாகப் புரியும் வகையில் இப்புத்தகத்தை விவாதிக்கலாம். திரைத்துறையில் இல்லாத நண்பர்களும், இக்கட்டுரைகளைப் படிக்க இயலும். பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கும். இக்கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தபின், அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் , நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில் இருக்கிறதா என்று கவனியுங்கள். இதைக் கவனித்துவந்தாலே போதும். ஒரு நல்ல திரைக்கதையை நாமே எழுத இயலும்.
Okay . Lets discuss the original book .
Chapter 1 : திரைக்கதை என்றால் என்ன?
புத்தகத்தின் இந்த முதல் அத்தியாயத்தில், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் F. Scott Fitzgerald பற்றிய அறிமுகத்தோடு துவங்குகிறார் சிட் ஃபீல்ட். Scott Fitzgerald , பல காவியங்களை எழுதியவர். இன்றளவும் புகழ்பெற்று விளங்கும் பல நாவல்களின் ஆசிரியர். இருந்தாலும், வாழும் காலத்தில், மிக ஏழ்மையில் வருந்தி, அளவுக்கதிகமாகக் குடித்து, பெருமளவு பணத்தைக் கடனாக வாங்கி, ஒரு கொடுமையான வாழ்க்கையில் உழன்றவர். ஆகவே, தனது வறுமையைப் போக்கும் மருந்தாக, திரைப்படங்களில் திரைக்கதை எழுதும் முடிவைத் தேர்ந்தெடுத்தார். 1937 ல், ஹாலிவுட்டில் காலடி எடுத்துவைத்தார். அதிலிருந்து, மிகக்கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். தான் எழுதப்போகும் ஒவ்வொரு திரைக்கதையிலும், முதல் வார்த்தையை எழுதும் முன்னரே, ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிவைத்துக் கொண்டார். இதன்பின்னரே திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தார். ஆனாலும், அவரால், திரைக்கதை என்றால் என்ன என்ற இறுதி முடிவுக்கு வர இயலவில்லை. தேர்ந்த நாவலாசிரியராக இருந்ததால், திரைக்கதைகளையும் அவ்வண்ணமே கையாள எண்ணினார் Fitzgerald . ஹாலிவுட்டில் அவர் இருந்த மூன்று வருடங்களில், ஒரே ஒரு படத்தில் மட்டுமே அவரது பெயரைப் பார்க்க முடியும். ஆனால், அந்தத் திரைக்கதையும் இன்னொருவரால் செம்மைப்படுத்தப்பட்டது. 1941 ல் இறந்துபோகும்வரை, தொடர்ந்து திரைக்கதைகள் எழுதிக்கொண்டே இருந்த ஒரு மனிதர் அவர். பக்கம் பக்கமாக எழுதியும், இறக்கும்வரை அவரால், திரைக்கதை வடிவத்தைப் புரிந்துகொள்ள இயலவே இல்லை என்று எழுதுகிறார் சிட் ஃபீல்ட்.
Scott Fitzgerald பற்றிய அறிமுகம் எதற்கு?
திரைக்கதை வடிவத்தைப் புரிந்துகொள்வதற்காகவே. ஹாலிவுட்டில், இப்போதும்கூட, நாம் சந்திக்கும் மனிதர்களில் நான்குபேர்களில் ஒருவர், திரைக்கதை ஒன்றினை எழுதிக்கொண்டிருப்பார். இதுதான் ஹாலிவுட், மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கம். ஒரே ஒரு திரைக்கதை, திரைப்படமாக்கப்பட்டால் கூட, பெரும் படம் அங்கே கிடைக்கும். ஆகவே, எல்லோருமே திரைக்கதைகளை எழுதியவண்ணமே இருக்கிறார்கள்.
சரி. நாமுமே பல திரைப்படங்களைப் பார்க்கிறோம் அல்லவா? சில வருடங்களுக்கு முன் வரை, எந்தத் தமிழ்ப் படமாக இருந்தாலும், படத்தின் டைட்டில் முடிந்துபோனபின், கதாநாயகன் அறிமுகமாகும்போதோ அல்லது வேறு ஏதாவது காட்சியின்போதோ, ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்று வரிசையாகப் பல வரிகள் போட்டு, ஒரு இயக்குனரின் பெயர் அறிமுகம் செய்யப்படும். இதைப் பார்த்தே வளர்ந்தவர்கள் நாம் ஆதலால், நமது மனதிலும், திரைக்கதை என்பது, கதை, வசனம், இயக்கம் சம்மந்தப்படாத வேறு ஏதோ விஷயம் போலும் என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கும். ஆனால், அது சரியா?
இதற்கு சிட் ஃபீல்ட் பதில் சொல்ல நேர்ந்தால், இப்படி டைட்டில் போடும் இயக்குனர்களின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடுங்கள் என்றே சொல்லியிருப்பார்.
உண்மையில், கதை, வசனம், திரைக்கதை ஆகிய மூன்றும், ஒரே ட்ராக்கில் பயணிப்பவை. கதை இல்லாமல், திரைக்கதை எழுதவே முடியாது. போலவே, வசனம் என்பது, திரைக்கதையில் இல்லாத, தனிப்பட்ட விஷயம் இல்லவே இல்லை. திரைக்கதை என்பதில், வசனங்களும் அடக்கம். வசனம் இல்லாமல், திரைக்கதை எழுதுவது சாத்தியமே இல்லை (வசனங்கள் பக்கம் பக்கமாகப் பேசப்படும் திரைப்படங்களை மனதில் வைத்தே சொல்கிறேன். மற்றபடி, படத்தில் வசனம் இல்லை என்றால், திரைக்கதையிலும் வசனங்கள் தேவையில்லை).
இன்னொரு கேள்வி எழலாம். திரைக்கதை என்பது, ஒரு நாவலா? இதற்குக் காரணம், ஒரு நாவலிலும், வசனங்கள் இடம்பெறுகின்றன. நீண்ட பல வர்ணனைகள் உள்ளன. அல்லது, ஒரு திரைக்கதையை, ஒரு நாடகத்தோடு ஒப்பிட முடியுமா? இரண்டும் ஒரே போன்று தானே உள்ளன? வசனங்கள், சம்பவங்கள் இத்யாதி?
ஒரு திரைக்கதைக்கும், நாவல் அல்லது சிறுகதை அல்லது நாடகம் ஆகியவற்றுக்கும் உள்ள பிரதான வித்தியாசம், ஒரு நாவலில் இடம்பெறும் எந்தச் சம்பவமானாலும் சரி, முக்கியமான கதாபாத்திரத்தின் தோளிலேயே அவை பயணிக்கின்றன. நாவலின் ஹீரோ எதையாவது செய்யத் தலைப்படும்போதுதான் அந்த சம்பவத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். கதாநாயகனது பார்வையில்தான் நமக்குச் சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. எந்தக் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துடன் சிறிதுநேரம் பயணித்துவிட்டு, மறுபடியும் நாம் கதாயகன் அல்லது நாயகியிடமே திரும்பிவிடுகிறோம். அதாவது, ஒரு நாவலின் கதை, பிரதான பாத்திரத்தின் மூளைக்குள் நடக்கிறது. அதேபோல், ஒரு நாடகத்தில், அந்த மேடையில் இடம்பெறும் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலமாகவே கதை நகர்கிறது. அவர்களுடைய சந்தோஷம், துக்கம், காதல் ஆகிய அத்தனை உணர்வுகளும், வசனங்களின் ஊடாகவே பயணிக்கின்றன. ஆதலால், ஒரு நாடகத்தின் கதை, மொழியின் வடிவாகவே இருக்கிறது.
ஆனால், ஒரு திரைப்படம் என்பது, பல காட்சிகளின் வழியாகவே சொல்லப்படுகிறது. ஒரு கடிகாரம் திடீரென ஒலிப்பதைக் காண்கிறோம். தொலைவில், ஒரு பால்கனியில், தன்னந்தனியான மனிதன் ஒருவன் சாலையையே நோக்கிக்கொண்டு நிற்பதைக் காண்கிறோம். இரண்டு மனிதர்கள் பேசியபடியே நடக்கிறார்கள். பின்னணியில் வாகனங்களின் இரைச்சல். யாரோ யாரையோ கூப்பிடும் சத்தம். ஆலையின் சங்கு ஊதும் சத்தம். இப்படி, ஒரு திரைப்படம் என்பது, பல காட்சிகளின் தொகுப்பாக இருக்கிறது.
படங்கள். ஒளிப்படங்கள்.
ஆகவே, திரைக்கதை என்பதை இப்படிச் சொல்கிறார் சிட் ஃபீல்ட் – திரைக்கதை என்பது, காட்சிகள், வசனங்கள் மற்றும் விவரிப்பின் மூலமாகச் சொல்லப்பட்டு, விறுவிறுப்பான ஒரு கட்டமைப்பினுள் வைக்கப்படும் ஒரு கதை.
screenplay is a story told with pictures, in dialogue and description, and placed within the context of dramatic structure.
அது என்னய்யா கட்டமைப்பு? நாம என்னா கட்டிடமா கட்டிக்கிட்டு இருக்கோம்? என்பவர்களுக்கு – வெறுமனே வசனங்களாலும் விவரிப்புகளாலும் நிரப்பப்பட்டுவிட்டால் மட்டுமே அது ஒரு முழுமையான திரைக்கதையாகிவிடாது. அப்படி நிரப்பப்படுவது ஏன்? கதையில் என்ன நடக்கிறது? ஆகிய விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுதல் வேண்டும். திரைக்கதையில் இடம்பெறும் ஒரு சிறிய புள்ளி கூட, அவசியம் இல்லாமல் எழுதப்படல் கூடாது. ஆகவேதான், திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுதல் வேண்டும். இதைத்தான் விறுவிறுப்பான கட்டமைப்பு என்று சிட் ஃபீல்ட் சொல்கிறார்.
ஒரு சிறிய உதாரணமாக சிட் ஃபீல்ட் சொல்வது, செஸ் (நடுவில் ‘க்’கன்னாவெல்லாம் இல்லை) விளையாட்டு. செஸ்ஸில் நான்கு பகுதிகள் உள்ளன.
- காய்கள் – ராஜா, ராணி, சிப்பாய் மற்றும் மந்திரி
- விளையாடும் நபர்கள்
- செஸ் போர்ட் (board)
- விளையாட்டு விதிகள்
இந்த நான்கு பகுதிகள் இல்லையென்றால், செஸ் விளையாட்டு சாத்தியம் இல்லை. இந்த நான்கு விஷயங்களும் முழுமையடைவதே செஸ் விளையாட்டு. அதாவது, இந்த நான்கு பகுதிகளுக்கும் இடையில் இருக்கும் உறவு – அதுவே விளையாட்டைத் தீர்மானிக்கிறது. இதைப்போலவே, கதை என்பது, முழுமையான ஒன்று. இந்தக் கதையை உருவாக்கத் தேவையான பகுதிகள் – கதாபாத்திரங்கள், செய்கைகள், பிரச்னைகள், காட்சிகள், வசனம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியன – இவற்றுக்குள் ஏற்படும் உறவுமுறையே, கதையைத் தீர்மானிக்கிறது.
ஒரு நல்ல கட்டமைப்பு என்பது, ஐஸ்கட்டிக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவைப் போன்றது என்பது சிட் ஃபீல்டின் உதாரணம். ஐஸ்கட்டி தண்ணீரில் கரையும்போது, இரண்டுக்கும் வேறுபாடு என்பதே இல்லாமல் போய்விடுகிறதல்லவா? அதைப்போலவே, இந்தக் கட்டமைப்பே, கதையை சுவாரஸ்யமாக்குகிறது. கட்டமைப்பும் கதையும் ஒன்றில் ஒன்று கரைந்துவிட்டால், நமக்கு நல்லதொரு திரைப்படம் கிடைக்கிறது.
கட்டமைப்பைப் பற்றி நிறைய விவாதித்துவிட்டோம். இந்தக் கட்டமைப்புக்கு ஏதாவது வடிவம் உள்ளதா?
உள்ளது.
ஒரு மேஜையை எடுத்துக்கொண்டால், நான்கு கால்கள் மற்றும் ஒரு சமதளப் பரப்பு. இதுதான் அதன் வடிவம். இந்த வடிவத்தை வைத்துக்கொண்டு, சிறிய மேஜை, பெரிய மேஜை போன்ற எந்த மேஜையை வேண்டுமானாலும் செய்யமுடியும். இதுபோன்ற எந்த மேஜையானாலும், அதன் வடிவம் மாறாது. அது – நான்கு கால்கள் மற்றும் ஒரு சமதளப் பரப்பு. இதைப்போலவே, திரைக்கதைக்கும் ஒரு வடிவம் உண்டு.
அது ?
தொடரும் . . . . .
vada
பட்ட ஜிலேபி !!
interesting
Adicchi kalakkareenga thala 🙂
Inga rendu series.. anga rendu series.. -nnu! I have no idea how u manage!!
Will join with u guys… later.
Very Intresting..
நல்ல பதிவு தொடர்கிறேன்….
மிக சரியான ஒரு தருணத்தில் .. ஆரம்பிச்சிருக்கிங்க.. நடை பிரமாதம். தொடரட்டும் உங்கள் பணி!!
தொடருங்கள் !
திரையுலகின் சுப்புடு வாழ்க !
தமிழ் பதிவுலகின் தவிர்க்க முடியாத சக்தி “கருந்தேள்” !!
crap…
ஒரு ஃப்ளோல… 3-4 பெரிய பாராவா கமெண்ட் தட்டினேன். கூகிள் கடங்காரன் கொண்டு போய்ட்டான்.
திரும்ப அதே போல அடிக்க முடியுமா? 🙁
வேற மாதிரி ட்ரை பண்ணுறேன்.
சனியன்… எழவு.. திரும்பவும் போய்டுச்சிங்க.
நான் நோட் பேடில் அடிச்சிட்டு.. வந்து இங்க கொட்டுறேன்.
காப்பி… காப்பி.. காப்பி!!!!
இந்த விசயத்தில் குருவும் சம்பந்தப்பட்டிருக்கார்ன்னு தெரியும் போது, கொஞ்சம் கஷ்டமாயிருக்கும் வேளையில்… ‘இன்ஷப்சன்’ படம் வந்தப்ப நடந்த சில நிகழ்வுகளும் நினைவுக்கு வந்து கொஞ்சம் அல்பை சந்தோசத்தை கொடுக்குது. 🙂 🙂
சரி.. இந்த கருமத்தை விடுங்க. நீங்க சிரிக்கலைன்னா ஒன்னு சொல்லுறேன். இந்த ஸ்க்ரீன்ப்ளே மேல இருக்கற ஒரு ‘இது’னால.. ஆர்வக் கோளாறில், Final Draft-ல் ஒரு ஸ்க்ரீன் ப்ளே எழுதிப் பார்த்தேன். 🙂 சிரிக்கக் கூடாதுன்னு சொன்னேனில்ல?! 🙂
காப்பி.. காப்பி-ன்னு சொன்னாலும்.. நானும் final draft-ஐ பைரேட்டடாதான் யூஸ் பண்ணினேன். ஆனா எழவு.. அதுல தமிழ்ல அடிக்க முடியாது. ததக்கா பிதக்கான்னு.. is – was போட்டுத்தான் அடிச்சேன். என்னோட பதிவுகள் மாதிரியே.. நானே அடிச்சி.. நானே படிச்ச ‘உலகின் மிக உன்னதமான’ திரைக்கதை அது!! 🙂
===
கேபிள் சங்கரின் ‘சினிமா வியாபாரம்’ புத்தகத்தின் ஹாலிவுட் பகுதிக்காக, தகவல் சேமிக்கும் பொழுது, என்னோடு பேசிய/பேட்டி கொடுத்த ஒரு தியேட்டர் மேனேஜருக்கு இந்த விசயத்தில் பயங்கர நாலெட்ஜ். Syd பத்தி பத்தி கரைச்சி குடிச்சிருந்தார். தியேட்டரில் சினிமா பார்த்து பார்த்து… அவருக்கு இயல்பாவே இந்த மாதிரி விசயங்களில் ஞானம் வந்துடுச்சி போல.
நான் எப்பவும் போல… ‘ஆமாமாமா…. Syd-ஐ அடிச்சிக்க ஆளே கிடையாது’-ன்னு சொல்லிட்டு… அப்புறமா இவரு புக் 2-3-ஐ லைப்ரரில இருந்து எடுத்து.. ரெண்டு மூணு பாரா படிச்சி வச்சிகிட்டேன். நல்லவேளை. அதுக்கப்புறம்… அவரை பார்க்கும் வாய்ப்பு வரலை. 🙂
நாம எழுதறதெல்லாம் ஏட்டுச் சுரக்காய்தான். ஆனா… ‘டெனிம்’ மாதிரியான ப்ரொஃபஷ்னல்கள் FX எழுதலைன்னா…. நீங்கதான் எழுதியாகனும். எதுவும் இல்லாததுக்கு…. this is MUCH better.
இந்த தொடர் முடியும் வரை, உங்க ஆர்வம் குறையாமல் இருக்கனும்னு உஜிலாதேவிகிட்ட வேண்டிக்கிறேன்!!!
(LOTR-ல் முன்னாடியிருந்த ஆர்வம் இப்ப உங்களுக்கு கம்மியாகிடுச்சோ-ன்னு எனக்கு டவுட். இப்படி சொல்லுறதை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்)
========
இப்ப சொல்லுற மேட்டர் சரியான்னு தெரியலை. எஸ்.கே-வின் பதிவுகளை கொஞ்சம் தேடினா.. Final Draft- டவுன்லோட் பண்ணும் லிங்க் கொடுத்திருக்கார்ன்னு நினைக்கிறேன்.
ஆஹா.. காட் இட்!!
இந்த பதிவில்.. இன்னும் நிறைய சாஃப்ட்வேர் பத்தின இன்ரோ கொடுத்திருக்கார். திரைக்கதை எழுதி பழகனும்ன்னு நினைக்கிறவங்களுக்கு… இதில் வரும் எதாவதொரு சாஃப்ட்வேர் உபயோகப்படலாம.
http://manamplus.blogspot.com/2010/09/6-contribute-flash-builder-premiere.html
நான் முன்னாடியே சொல்லியிருக்கேன், ஒரு வாத்தியார் மாதிரி பாடம் நடத்துறீங்கன்னு. இதோ இன்னொரு அழகான பாடம். என்ன அழகா எழுதுறீங்க நண்பா.
வச்சி வச்சிப் படிக்க வேண்டிய பதிவு இது. கிளாஸ் ரைட்டிங்னு சொல்வாய்ங்கள்ல அது இதுதான்.
நீங்க ஒவ்வொரு சீரிஸ் ஆரம்பிக்கும்போதும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். உருப்படியா ஏதோ படிக்கப்போறோம்ங்கற சந்தோஷம். இந்த முறை திரைக்கதை பற்றிய சீரிஸ்ன்னதும் இரட்டிப்பு சந்தோஷம்.
நன்றி நண்பா.
சிட் பீல்டு பற்றி எழுதத்துவங்கி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.
நல்லா வந்துஇருக்கு வாழ்த்துக்கள்…
//ஒரு மேஜையை எடுத்துக்கொண்டால், நான்கு கால்கள் மற்றும் ஒரு சமதளப் பரப்பு. இதுதான் அதன் வடிவம். இந்த வடிவத்தை வைத்துக்கொண்டு, சிறிய மேஜை, பெரிய மேஜை போன்ற எந்த மேஜையை வேண்டுமானாலும் செய்யமுடியும். இதுபோன்ற எந்த மேஜையானாலும், அதன் வடிவம் மாறாது. அது – நான்கு கால்கள் மற்றும் ஒரு சமதளப் பரப்பு. இதைப்போலவே, திரைக்கதைக்கும் ஒரு வடிவம் உண்டு.//
இதுல எனக்கொரு டவுட் ..பின்நவீனத்துவ திரைப்படங்கள் கூட இந்த வடிவத்துக்குள்ள வந்துடுமா ???
//
அது ?
தொடரும் . . . . .
//
போட்டு முடிச்சிருந்தீங்க பாருங்க, ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன். அடிவயத்துக்கும் தொண்டைக்கும் நடுவால ஒரு உருண்டை நான்-ஸ்டாப்பா ரெண்டு நிமிஷம் ஓடுச்சு………
(சந்தோஷம் தான் காரணம், பயமோ பீதியோ கெடையாது)
சுஜாதாவின் பல கதைகள், குறிப்பா – அறிவியல் புனைவு கதைகள் என்று சொல்லப்படும் கதைகளில் பல வேற கதைகளின் சாயல் அதிகம் இருக்கும். இதெல்லாம் சொன்னா உடனே திட்ட ஆரம்பிச்சிருவாங்க.
ஆனா “புத்தகத்தில் இருந்து ‘மொழிபெயர்க்கப்பட்டவையே ” போட்டுட்டு அடைப்பு குறிக்குள்ள “(குறிப்பு – இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பது, மணிரத்னம் !!)” போட்ருக்கீங்க பாருங்க…………
ஒரு டாரண்டினோ பேட்டி ஞாபகம் வருது. ” என்ன ஒரு டைரெக்டர் என்று சொல்லிக் கொள்வதை விட திரைக்கதையாசிரியர் என்று சொல்லி கொள்வதில்தான் ரொம்ப சந்தோசம்”ன்னு சொன்னார். ஏன்னு தெரிய இத்த பாருங்க.
http://www.youtube.com/watch?v=aklyZSo07vk
ஏற்கனவே ஒரு படத்துக்கு(குறும்) ஸ்க்ரீன்ப்ளே எழுதிட்டீங்க.இனி அடுத்து ?
// //ஒரு மேஜையை எடுத்துக்கொண்டால், நான்கு கால்கள் மற்றும் ஒரு சமதளப் பரப்பு. இதுதான் அதன் வடிவம் //
David lynch படங்கள்ல முக்கோண வடிவத்துல எல்லாம் மேஜை வருதே. ஆனா அவருக்கும் ஒரு ஸ்க்ரீன்ப்ளே எழுத ஆறு மாசத்தில் இருந்து பல வருசங்கள் ஆகுது.
ஆக, ஸ்க்ரீன்ப்ளே உத்திகள் தான் மாறுதோ ? எந்தவகையான ஸ்க்ரீன்ப்ளேவாக இருந்தாலும், அடிப்படை ஒண்ணுதானா ?? அடுத்து வர்ற தொடர்கள்ல என் குழப்பம் தீரும்னு நெனைக்கிறேன்.
நல்ல முயற்சி!, நீளம் அதிகம்,கொஞ்சம் ட்ரிம் பண்ணிருக்கலாம்.பொதுவில் கதையின் நீள அகலத்தை ட்ரிம் செய்து அதனை அழகாய் பொதி செய்து தருவதே திரைக்கதைதான்….
நம்ம ஊரில் ஒன் லைனர் என ஆரம்பித்து அதை பத்து வரிகளில் பெருக்கி,ஐம்பதில் இருந்து அறுபத்தி இரண்டு சீன்களாய் பிரிப்பதுதான் திரைக்கதை என மிகத் தீவிரமாய் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுடைய கட்டுரை அதை உடைக்க வேண்டும். 🙂
யோவ் மணியடி மொதலாளி – உங்க ப்ளாக்ல ஏதாவது எழுதுவீங்கல்ல. அப்ப இருக்கு உமக்கு 🙂
@ katz, ஜத்ரூஸ், ஷீ- நிசி, ரஃபீக், உலக சினிமா ரசிகரே – மிக்க நன்றி. இனிமேலும் முடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத முயல்கிறேன். தொடர்ந்து கருத்துக்களை எழுதுங்கள்.
@ மகேஷ் – என்னாது சுப்புடுவா? அதுக்கெல்லாம் ஏதாவது சாதிச்சிருக்கணும் பாஸ். நானெல்லாம் பச்சா பையனாச்சே 🙂 . .
@ செ. சரவணக்குமார் – ரொம்ப நாளாவே இதை எழுதனும்னு நினைச்சேன். இதான் சரியான தருனம்னு தோணிச்சி. அதான் இறங்கிட்டேன். ‘உனக்கு என்னடா தகுதி இருக்கு’ன்னு பல கேள்விகள் வரும்னு நினைச்சேன். பொறுத்திருந்து பார்ப்போம் 🙂
@ மு.சரவணக்குமார் – இனிமேல் நீளம் ட்ரிம் செய்யப்படும். நம்ம ஊர் ஒன லைன் பத்தியும் சீக்கிரமே இதுல வரும் 🙂 .. மிக்க நன்றி. தொடர்ந்து ஃபீட்பேக் குடுங்க.
@ …αηαη∂…. – எந்தத் திரைப்படம இருந்தாலும் சரி… இந்த விதிகளின் கூறுகள் கட்டாயம் இருக்கும்ன்றதுதான் சிட் ஃபீல்டின் ப்யூட்டி. விவரமா சீக்கிரமே பார்க்கப்போறோம்.
பிரபல பதிவரே – 🙂 இன்செப்ஷன் விஷயத்துல, நானும் ஒரு முக்கியமான காரணம். ஏன்னா, அதை அனுப்புனதே நாந்தான். இருந்தாலும், நீங்க சொன்னதை ஒத்துக்குறேன். இந்த காப்பி, எல்லா இடத்துலயும் இருக்குதான் 🙂 . .
உங்க ஸ்க்ரீன்ப்ளே பத்தி – அதான் அங்க அமெரிக்கால எல்லாருமே எழுதுறாங்களே 🙂 . . இருந்தும், ஒரு பிரபல தமிழ்ப் பதிவர் அப்புடி எழுதுனது சாதனைதான். அதை அனுப்புங்க. குலேபகாவலில போட்ரலாம். திரைக்கதையையும் deconstruct செய்வோமே 🙂 . .
LOTR பத்தி… உண்மைதான். எனக்கு ஆர்வம் கொஞ்சம் கொறைஞ்சிபோச்சு. அது, நான் எழுதுரதுலேயே தெரியுதுல்ல? மறுபடி ஒருவாட்டி மூணையும் பார்த்தா ஆர்வம் வந்திரும் :-). இதோ ஆரம்பிக்கிறேன்.
எஸ்.கே லிங்க் கொடுத்ததுக்கு நன்றி. தேவைப்படும் நபர்கள் யூஸ் பண்ணட்டுமே 🙂 . .
@ கொழந்த – டேவிட் லின்ச் படங்கள் மட்டுமில்லை. இன்னும் நிறையப் படங்கள் நான் லீனியரா இருக்கு. ஆனாலும், அதன் அடிப்படை விதிகள் ஒண்ணுதான். அதாவது, ஒரு சமதளப் பரப்பு – நான்கு கால்கள். ஆனா, அது அப்படி இல்லைன்னு சொல்ற அளவுக்கு புத்திசாலித்தனமா எழுதுறதுதான் இவங்க சக்சஸ். விரிவா இதை இனிவரும் எபிசோடுகளில் டிஸ்கஸ் பண்ணுவோம்.
your Post Copied
http://tamilkadalanposts.blogspot.com/2011/08/blog-post_17.html
சுஜாதா மணிரத்னத்தை மேதாவியாக நினைத்தாரோ என்னவோ…திரைக்கதை எழுதும் புத்தகம் சுஜாதா நடை என்றால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது நானும் படித்திருக்கிறேன்.ஆனால் அவர் சுட்டார் என்பது வருத்தமானதுதான்..அருமையான தொடரை தொடங்கிவிட்டீர்கள் நன்றி
நான் நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்ததை, தாங்களின் மூலம் நிறைவேறப்போகிறது.
நல்ல பதிவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
எனக்கு இந்த தொடர் ரொம்ப பிடிச்சிருக்கு!:-)
தல இத தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் .. ரொம்ப நன்றி .. !! என்ன மாறி டுபாகூரக்கு கூட நல்ல புரியுது …
அண்ணா
அந்த புத்தகத்தின் ப்ரீ டவுன்லோட் லிங்க்
http://bienkichdao.files.wordpress.com/2011/06/screenplay-the-foundations-of-screenwriting-revised-updated-syd-field-2005.pdf
// அதில் கையாளப்பட்டுள்ள மொழி புரியாமல் இருக்கலாம். ஆகவே, எளிதாகப் புரியும் வகையில் இப்புத்தகத்தை விவாதிக்கலாம். .//
அதான் உண்மை !!!
தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!
தொடர்ந்து வருவதே என் பணி !
ரைட்டு… சீக்கிரமே ஒரு படம் எடுங்க
நண்பரே,
நல்ல புதிய முயற்சி, இயலுமானவரை தொடர முயற்சிக்கிறேன். இப்படியாக படித்தால்தான் இல்லையேல் காலத்திற்கும் கிடையாது 🙂
மிக நல்ல பதிவு. உங்க ப்ளோக்ல இருந்து நிறைய கத்துகிட்டேன், படிக்கிறேன். கிம்-கி-டுக், அர்டேமிஸ் பௌல், இப்ப திரைக்கதை…
அப்படியே கொஞ்சம் கிம்-கி-டுக் பக்கம் வந்தீங்கன்ன நல்ல இருக்கும். ரொம்ப நாள் அச்சி..
நண்பா,
மிக நல்ல தொடக்கம்,மிகவும் அழகாக வந்துள்ளது,இடையிடையே வரும் நகைச்சுவையும் அருமை.எளிமையான நடை வரி விடாமல் படிக்கச்செய்கிறது.
சுஜாதா இதை உருவியதையும் அதற்கு மணி உரை எழுதியதையும் அறிந்துள்ளேன்.இதைத்தான் யூ கிஸ் மை ஆஸ்,ஐ கிஸ் யுவர்ஸ் என்பார்கள்.
Karundhel,
NY screen writers are recommending “The Screenwriter’s Bible: A Complete Guide to Writing, Formatting, and Selling Your Script” for screen writing. Try this if you get a chance.
Also would like to know your thoughts on what is screen writing and what is script writing. I guess there are differences between this. See if you can cover this in your script writing series..
By the way very good work. I have been looking for good tamil book on film making and writing. but never find one ( i know about that sujatha’s book already :-)).
I have been reading an wonderful book on cinematic story telling. I am 100% sure that you would love that book. i always wanted to translate that in tamil. Let see if we can do something..
davis said:
August 17, 2011 12:55 PM
your Post Copied
http://tamilkadalanposts.blogspot.com/2011/08/blog-post_17.html
—————————-
Everything in the above site is copy paste..
please continue…
Excellent narration.If any pro can comes out with more views and counter arguments the article will expand it’s dimension as most of us are giving backseat for the screen play!Thanks for sharing.
http://amanidiot.blogspot.com/2011/07/blog-post.html
யாரு யாரு யாரு …………….. வந்துட்டம்மில்ல…….
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
http://www.tamil10.com
நன்றி
நண்பர்களே. . இந்தத் தொடருக்கு நீங்கள் அளித்துவரும் வரவேற்புக்கு நன்றி. பல நண்பர்கள், தமிழ்ப்படங்களைப் பற்றி எழுதச் சொல்லியிருப்பதால், அவைகளைப் பற்றியும் அவ்வப்போது உதாரணங்கள் தர முயல்கிறேன்.
இளங்கன்று – ஆரம்பியுங்கள் உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியை !
Hello ,Hollywood bala pathi potta commenta ean remove panninga? 🙂
i’ve read both sujatha and syd field’s book, the thing that irked me most was the fact that sujatha lifted a lot from syd field with out even understanding many concepts. sujatha’s book was pathetic (even by his standards )also he has been a writer in indian films where two half structure is used as opposed to three act proposed by syd field so this confusion is very apparent in his book .
if you want a better understanding of screen writing i suggest u also read JOHN TRUBY’S ANATOMY OF A STORY where he criticizes syd field’s paradigm with his own concept convincingly . this is very good and makes us understand the craft better .
எலேய௅ யாரà¯à®²à¯‡à®¯à®¤à¯…. ஹாலிவà¯à®Ÿà¯ பாலாவை பதà¯à®¤à®¿ எழà¯à®¤à®¿à®©à®¤à¯?
supera irukku bossu my heart wishes
Wonderful things behind in screen play which I don’t knew even I am a musician and so many things discussed about cinema and songs… Great….
good job
Thanks and Cheers Ajeevan
sir i am want to a become a film director how write a script sir pls call me 9566199235
BS low – raoainiltty high! Really good answer!