பெண்ணியம்? கிலோ என்ன விலை ?
ஒரு அருமையான உலகப்பட விமர்சனம் எழுதவேண்டிய நேரத்தில், அதற்குச் சற்றும் சம்மந்தமில்லாத வேறு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், இதுவும் முக்கியம்தான். நேற்று விஜய் டிவியில் நீயா நானா பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு, ‘பெண்ணியவாதிகள் Vs குடும்பத்தலைவிகள்’ என்பது. இந்த இருசாராரின் பக்க வாதங்களையும் (சேர்த்துப் படித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்) கவனித்தோம். அதில் எழுந்த கடுப்பில்தான் இந்தப் பதிவு.
பெண்ணியவாதிகள் தரப்பில், முழுமையும் பெண்கள்தான். முதலில், குடும்பத்தலைவிகளிடம், பெண்ணியவாதிகளைப் பற்றிய கருத்து கேட்கப்பட்டது. இதற்குக் குடும்பத்தலைவிகளிடம் இருந்து வந்த பதில்கள் இவைதாம்:
- பெண்ணியவாதிகள், இறுக்கமான உடைகளை வேண்டுமென்றே அணிந்துகொண்டு அலைவார்கள்
- பெண்ணியவாதிகள் குடிப்பார்கள்.
- சமூகத்தின் கவனம் தன்மேல் திரும்பவேண்டும் என்று எண்ணிக்கொண்டு கண்ட செயல்களைச் செய்வார்கள்
- பண்பாட்டைச் சீரழிப்பார்கள்
- குடும்பப்பெண்களாக இருக்கமாட்டார்கள்
- வீட்டுக்கு அடங்காமல், பிடாரிகளாக இருப்பார்கள்.
இதுபோன்ற கருத்துக்களே ‘குடும்பத்தலைவிகளிடம்’ இருந்து வந்தன. இதையடுத்து, பெண்ணியவாதிகளின் பக்கம், அவர்களது தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கச் சொல்லிக் கேட்கப்பட்டது. இதற்குப் பெண்ணீயவாதிகளிடம் இருந்து வந்த பதில்களாவன:
- சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியிருப்பதால், அதனை ஒழிக்கவே பெண்ணியவாதிகளின் அவசியம் தேவைப்படுகிறது
- பெண்ணுக்கு உரிய சுதந்திரம், நமது நாட்டில் மறுக்கப்படுகிறது. அதனை வெளிக்கொணர, பெண்ணியவாதிகள் தேவை
- எத்தனையோ பெண்கள், பலவகையிலும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அதனை ஒழிக்க, பெண்ணியவாதிகளின் இருப்பு முக்கியம்.
இதனையடுத்து, மேலே குடும்பத்தலைவிகள் சொல்லிய குற்றச்சாட்டுகளுக்குப் பெண்ணியவாதிகளின் தரப்பில் பதில்கள் என்ன என்று கேட்கப்பட, விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. குடும்பத்தலைவிகளின் பக்கம், அப்படியே சொர்ணாக்காவை நினைவுபடுத்தும் தோரணையில் ஒரு அம்மணி அமர்ந்திருந்தார். அவர் ஆரம்பித்தார்.
‘பொண்ணுங்கன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும். தெர்தா? இப்புடியெல்லாம் திரியக்கூடாது. தெர்தா? இப்புடியெல்லாம் இருந்தா கல்லாணமே நடக்காது. தெர்தா? பொண்ணுங்கன்னா அமைதியாத்தான் இருக்கணும். தெர்தா? என்ன நடந்தாலும் தாங்கிக்கணும். தெர்தா?’
அந்த அம்மணி பேசிய வாக்கியத்தில், நாலைந்து ‘தெர்தா’க்கள் இருந்தன. விட்டால் பாய்ந்து வந்து பெண்ணியவாதிகளின் கூந்தலைப் பிடித்து தரதரவென்று தட்டாமாலை சுற்றிவிடுவார் போல இருந்தது. அரும்பாடுபட்டு அந்த அம்மணியை அடக்கிய கோபி, அந்தக் குடும்பத்தலைவிகள் கும்பலில் இருந்த வேறு சிலரிடம் மைக்கைக் கொடுத்தார்.
வேரு ஒரு அம்மணி ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். ’Actually… இந்தப் பெண்ணியவாதிகளின் அவசியமே நமக்குத் தேவையில்லைங்க.. பெண்களெல்லாம் இந்தக் காலத்துல எந்தப் பிரச்னையும் இல்லாம, நல்லாத்தான் இருக்காங்க. வாழ்க்கையைப் புரிஞ்சி நடந்துக்குறாங்க. நாங்கெல்லாம் ரொம்பவே சுதந்திரமாத்தான் இருக்கோம். எங்களுக்கு யாராலயும் எந்தப் பிரச்னையும் இல்லையே. அதுனால இவங்க நமக்குத் தேவையில்லைன்னு நான் சொல்றேன்.’
வேறு ஒரு அம்மணி சொன்னதுதான் டாப். ‘பொண்ணுங்கன்னா இழுத்து மூடிக்கிட்டுதான் ட்ரஸ் பண்ணணும். ஸ்லீவ்லெஸ்ஸே கூட ஆபாசம் தான். டிஷர்ட் ஜீன்ஸெல்லாம் போடவே கூடாது. ஸாரி தான் கட்டணும். (பெரிய மனது செய்து) சுடிதார் போடலாம். அவ்வளவுதான். இதுதான் பொண்ணுக்கு அழகு’.
உடனேயே மைக்கைப் பாய்ந்து பிடுங்கிய (நிஜமாகவே பிடுங்கினார்) வேறு ஒரு நாரீமணி, ‘இப்ப எங்களையெல்லாம் பாருங்க. புருஷன் அடிச்சாக்கூட, பொறுமையா, அடக்க ஒடுக்கமா அதையெல்லாம் தாங்கிக்கறோம். எதுக்கு? குடும்பம் நல்லா இருக்கணும்ங்கற ஒரே காரணத்துக்குத்தான். என்ன நடந்தாலும் எங்களோட பொறுமையைப் பார்த்து எல்லாரும் மெச்சிக்குவாங்க. இதுதான் பெண்மையின் இலக்கணம்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இதன்பின் மறுபடி பெண்ணியவாதிகளின் பக்கம் மைக் கொடுக்கப்பட, வெளுத்து வாங்கிவிட்டனர் பெண்ணியவாதிகள்.
’செக்குமாடு கழுத்தில் கயிறைக் கட்டிவிட்டால், அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும். அப்படி சுற்றும்போதே, நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன்; எனக்கு விடுதலையே தேவையில்லை என்றுதான் அறிக்கை விடும். அதற்காக அது சுதந்திரமாகத்தான் இருக்கிறது என்று அர்த்தமா?’ என்று கேட்டார் ஓவியா என்ற பெண். அதேபோல், அவர், மேலும், ‘இங்க இருக்குற குடும்பத்தலைவிகளெல்லாம் அவங்களைப்பத்தி மட்டும்தான் பேசுறாங்க. இவங்களோட புருஷங்க இவங்களை ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி மாதிரி வளர்த்துக்கிட்டு வராங்க. தன்னோட வீட்டைவிட்டு வெளியே என்ன நடக்குதுன்னே இவங்களுக்குத் தெரியலை. அப்படியிருக்கும்போது, ‘சுதந்திரம் சுதந்திரம்’னு அறிக்கைவிட்டுக்கிட்டு தான் இருப்பாங்க. முதல்ல இவங்களுக்கு வெளியுலகத்தைப் பத்தித் தெரியணும்’ என்று ஒரே போடாகப் போட்டார்.
மற்றொரு இளைஞி, குடித்துவிட்டு சில கணவர்கள் தங்களது மனைவிகளை அடிப்பது பற்றிப் பேசினார். அப்போது அவர் கேட்ட கேள்வியானது: ‘குடிக்குறது தப்பா சரியா?’ என்பது. இவரே, குடும்பத்தலைவிகள், பெண்ணியவாதிகளைப் பற்றிச் சொல்லும்போது எடுத்து வீசிய, ‘பெண்ணியவாதிகள் குடித்துவிட்டு ஆடுபவர்கள்’ என்ற குற்றச்சாட்டைப் பற்றியும் கேட்டார்.
உடனே வீறுகொண்டு எழுந்த நமது சொர்ணாக்கா, அரட்டை அரங்கத்தில் குட்டியூண்டு குஞ்சு குளுவான்களெல்லாம் மைக் கிடைத்தவுடன் கண்டபடி அறிக்கைகள் விட்டுக்கொண்டே அலறுமே – அதே தொனியில் வீறிட ஆரம்பித்தார்.
’பொம்பிளைங்க குடிக்குறது தப்புதான். தெர்தா? என்ன நீயி புரியாம பேசிக்கினே போற? தெர்தா?’
அதற்கு அந்த இளைஞி, பொறுமையாக, ‘பொம்பளைங்க குடிக்குறது தப்புன்னா, ஆம்பிளைங்க குடிக்குறது ரைட்டா? குடிக்குறதே தப்புன்னு வேணா சொல்லுங்க. அதைவிட்டுட்டு, பொண்ணுங்க குடிக்குறது தப்புன்னு குற்றம் சுமத்தாதீங்க’ என்று சொல்ல, சொர்ணாக்காவுக்கு சாமி வந்துவிட்டது. ஆடிக்கொண்டே, ‘ஓ அப்புடியா? அப்ப நான் வேணா குவார்ட்டர் பீரு வாங்கித்தாரேன். குடிச்சிட்டு ஆடிக்கினே ஊர் ஊராப் போயி சுத்து.. தெர்தா? வர்ரியா இப்ப?’ என்று அலற ஆரம்பித்தார். அவரது கை, தலை, வாய் ஆகிய உறுப்புகள் துடித்த துடிப்பு இருக்கிறதே… கட்டாயம் துள்ளிவந்து அந்தப் பெண்ணை அடித்தே விடுவார் என்று எண்ண ஆரம்பித்தோம்.
இதைத்தொடர்ந்து வரதட்சிணைக் கொடுமை பற்றிய பேச்சு எழுந்தது. மேலே நாம் கண்ட ஆங்கில நாரீமணி, மைக்கைப் பிடுங்கினார். ‘நான் என்னோட அனுபவத்துல சொல்றேன். இப்பல்லாம் யாருமே வரதட்சிணை வாங்குறதில்ல (அடப்பாவி). வரதட்சிணைக் கொடுமையெல்லாம் பொய்’ என்று ஒரு உலகமகா அண்டப்புளுகைத் தயங்காமல் வீசினார். கோபிக்கு சிரிப்பு வந்துவிட்டது. விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே பெண்ணியவாதிகளின் கருத்தைக் கேட்டார். வரதட்சிணைக் கொடுமைகள் பற்றிய தகவல்களை அவர்கள் புட்டுப் புட்டு வைக்க, ஆங்கில நாரீமணி பேசாமல் அமர்ந்துவிட்டார்.
முடிவில், பெண்ணியவாதிகளின் அவசியத்தைப் பற்றியும், அவர்களது விடாமுயற்சிகளையும் பற்றிக் கோபி பேச, விவாதம் முடிவுக்கு வந்தது.
இப்போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடும்பத்தலைவிகளைப் பார்த்தபோது சில விஷயங்கள் தெளிவாகப் புலப்பட்டன. 1. இந்த மனைவிமார்கள் எல்லாமே தமிழ் மெகா சீரியல்கள் அதிகமாகப் பார்க்கின்றனர் (ஏனெனில், இவர்கள் பேசிய பல வசனங்கள், அவற்றை ஒத்திருந்தன). 2. இந்தப் பெண்மணிகளெல்லாமே , செலவழிப்பதற்கு அபரிமிதமான பணம் கணவர்களிடமிருந்து கிடைக்கிறது (பொட்டில் அடித்தாற்போல், பாமரேனியன் நாய்க்குட்டி என்று ஓவியா சொன்னது மிகப்பொருத்தம்). 3. தங்கள் வீடுகளுக்கு வெளியே சமுதாயத்தின் கொடுமையால் வாடும் பிற பெண்களைப் பற்றி இவர்களுக்கெல்லாம் எள்ளளவும் கவலையே இல்லை (கொடுமையுறும் பெண்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது, ஒரு வெள்ளைத்தோல் அம்மணி, ‘அவங்களோட வளர்ப்பு சரியில்லை. அதான் அப்புடியெல்லாம் கஷ்டப்படுறாங்க’ என்று அலட்சியமாக ஒரு அறிக்கை விட்டதைப் பார்க்க முடிந்தது).
நமது நாட்டில், இந்த வருடம் வன்கலவி செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கையெல்லாம் இந்த தத்திகளுக்குத் தெரியுமா? வரதட்சிணைக் கொடுமையால் துன்புறும் – சமயத்தில் இறந்தே போய்விடும் – பெண்களைப் பற்றி இவர்களுக்குத் தெரியுமா? நமது நாட்டில் அசிங்கமான முறையில் ஆண்களால் கையாளப்படும் பாவப்பட்ட பெண்களைப் பற்றி ஒரு மயிரும் தெரியாமல், ‘இதெல்லாம் வளர்ப்பு சரியில்லாதுனால வந்த வினை’ என்று போகிற போக்கில் உளற இவர்களால் எப்படி முடிகிறது? ’அவாளின்’ வளர்ப்புதான் அதற்குக் காரணமா?
அடிமைத்தனத்தின் உச்சத்தில் வைத்து வளர்க்கப்படும் இந்த தத்திகளுக்கெல்லாம் பிற பெண்களைப் பற்றிய கவலைகள் எப்படி இருக்க முடியும்? இந்த மாதிரி முட்டாள்கள் இருக்கும்வரை, நமது சமூகத்துக்குப் பெரியார் போன்றவர்களின் தேவை அவசியமாகவே தேவைப்படுகிறது. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தின் பல பிரதிகளை இவர்களுக்கெல்லாம் விநியோகிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு, பெரியார் உயிரோடு இருந்து, அவரைப் பிரதம விருந்தினராக மட்டும் அழைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். தனது கைத்தடியாலேயே இவர்களையெல்லாம் துரத்தித்துரத்தி அடி பின்னியிருப்பார் பெரியார்.
ஒரு ஆணுக்கு உரிய அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கும் தரப்பட வேண்டும். அதுதான் உண்மையான சமத்துவம். பெண்ணை அடிமைப்படுத்தும் சமூகமுறை அழித்தொழிக்கப்படவேண்டும் என்பது நிதர்சன உண்மை. பண்டைய காலத்தைப் போன்ற அடிமை முறை இப்பொழுது இல்லையென்றாலும், இப்பொழுதும் பெண்கள் பாதுகாப்பில்லாமல்தான் நடமாட வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாமல், வேலை செய்யும் இடங்களில் தான் எத்தனை அவமானங்கள்; பாலியல் தொந்திரவுகள்? பேருந்தில் செல்கையிலேயே இதெல்லாம் சகஜமாக நடக்கிறதே? காரில் உலாவரும் நாரீமணிகளுக்கு இது எப்படித் தெரியும்?
இதுதான் எனது கருத்து. உங்களது கருத்துக்களையும் எழுதுங்கள். நாளை ஒரு அருமையான உலகப்படத்துடன் சந்திக்கிறேன்.
பி. கு:- இந்த நிகழ்ச்சியில், பெண்ணியவாதிகள் தரப்பில் இருந்து இன்னொருவரும் வாதிட்டார். அவர் பெயர்: கவிஞர் சல்மா.
//’அவாளின்’ வளர்ப்புதான் //
ஹஹஹ…. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்….
இந்த நிகழ்ச்சியை பற்றிய உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்…
பல குடும்பத்தலைவிகளின் கவலையே மெகாசிரியல் பற்றித்தான். மற்றவர்களைப்பற்றி என்னகவலை… ஒரு பெண்ணியவாதி சொன்னதுபோல் அவர்கள் செக்குமாடுகளைப்போலத்தான் இருக்கிறார்கள்.
கவிஞர் சல்மா சிறப்புவிருந்தினரா?
அவருக்கு உருப்பாடாத கலாச்சார காவலாளிகள் கறுப்புக்கொடி காட்டலையா?
பெண்கள் மட்டும் தான் கொடுமை படுத்த படுகிறார்கள் என்பது முற்றிலும் பொய்… இது சற்றும் ஒத்துக்கொள்ள பட முடியாத உண்மை. ஆண்கள் மற்றும் பெண்கள் அவரவர் செயல்பாட்டில் உயர்ந்தவர்… ஆண்களுக்கு நிகர் ஆண்களே அதேபோல் பெண்களுக்கு நிகர் பெண்களே…
தங்களின் விருப்பப்படிதான், அடுத்தவர்கள் இருக்க இருக்கவேண்டும் என்று எல்லோரும் விருப்பப்படுகிறார்கள். அப்படி இல்லாவிட்டால், அவர்களை மாற்ற, திட்டவாவது முயலுகிறார்கள். இது இரு தரப்புக்குமே பொருந்தும்.
@ நாஞ்சில் – 🙂 கலாச்சார காவலாளிகள் தான் ‘குடும்பத்தலைவிகள்’ன்ற பேர்ல ஆப்போஸிட்ல உக்காந்துகினு இருந்தாங்களே.. அவரை அடிக்காததுதான் மிச்சம் 🙂
@ முத்து – //பெண்கள் மட்டும் தான் கொடுமை படுத்த படுகிறார்கள் என்பது முற்றிலும் பொய்… இது சற்றும் ஒத்துக்கொள்ள பட முடியாத உண்மை//
என்ன கொடுமை இது ! நீங்க அனேகமா ஐரோப்பிய நாடுகள் பத்தி பேசுறீங்கன்னு நினைக்கிறேன்.. இந்தியாவுல நிலைமையே வேறு தலைவா
@ சு.மோகன் – //தங்களின் விருப்பப்படிதான், அடுத்தவர்கள் இருக்க இருக்கவேண்டும் என்று எல்லோரும் விருப்பப்படுகிறார்கள். அப்படி இல்லாவிட்டால், அவர்களை மாற்ற, திட்டவாவது முயலுகிறார்கள். இது இரு தரப்புக்குமே பொருந்தும்//
கட்டாயம் பொருந்தாது. இந்தக் குடும்பத்தமைவிகள் வாதத்தையே எடுத்துக்கங்க. எவ்வளவு முட்டாள்தனமா அவங்க பெண்ணியவாதிகளை எதிர்க்கிறாங்கன்னு பாருங்க. ஆனா பெண்ணியவாதிகளின் வாதம் ரொம்ப சிம்பிள்: அவங்க போராடுறது, இந்தக் குடும்பத்தலைவிகளுக்கும் சேர்த்துத்தான்.
முட்டாள்தனமா எதிர்க்கிறது வேற. . எதிர்த்தரப்பைப் புரிஞ்சிகிட்டு, அவங்களோட வாதத்தைப் பரிசீலிச்சிட்டு, அப்ப அது தப்புன்னா எதிர்க்கிறது வேற இல்லையா..
பெண்ணியம் குறித்து வாய்கிழிய பேசும் பெண்ணியவாதிகள் மற்றும் அறிவுஜீவிகள் இஸ்லாத்தில் இருக்கும் பென்னடிமைதனமான ஷரத்துகள் குறித்து வாய் திறப்பதில்லை(அது சரி இந்தியாவுலதான் நாத்திகன்னு சொல்லிட்டு நோம்பு காஞ்சி குடிக்கலாம்.கிருத்துமஸ் கொண்டாடலாம்.ஆனா தீபாவளிக்கு வாழ்த்து சொல்லகூடாது.போங்கடா வெண்ணைங்களா .)பர்கா போடுவது மற்றும் ஒரு ஆண் நான்கு திருமணம் செய்து கொள்ளலாம் அப்படி செய்து கொண்டுவிட்டு முதல் பொண்டாட்டியிடம் செல்போன் மூலம் தலாக்(ஆமா இதுல மட்டும் நவீன வளர்ச்சிய ஏத்துகிங்க.,ஆனா பெண் விஷயத்தில் பல்லாயிரம் ஆண்டுக்கு முன் போட்ட கோஷாவையே இன்னும் போட்டு பெண்களா அடிமைபடுத்துங்க .தலாக் சொல்லிட்டு அந்த பொண்ண தெருவுல வுட்டுடலாம் 1987 இல் ஷாஹ் பானு விவகாரத்தை பாருங்கள்.முஸ்லீமுக்கு ஜால்ரா அடிக்க ராஜீவ் காந்தி எடுத்த மணான்கட்டி நடவடிக்கையால் இன்றும் பல பெண்களின் வாழ்கை சீரழிக்கபடுகிறது.
ஆனால் நான் பெண்ணியவாதி ,நாதிக்கன்னு சொல்லிக்கிட்டு குரான் படிப்பானுங்க நோம்பு கஞ்சிம்குடிப்பானுங்க .
போங்கடா லூசுங்களா.பெண்கள சுதந்தரமா உடுங்கடா ஆணாதிக்க நாய்களா.
@ இப்போ ராம்சாமி – //இந்தியாவுலதான் நாத்திகன்னு சொல்லிட்டு நோம்பு காஞ்சி குடிக்கலாம்.கிருத்துமஸ் கொண்டாடலாம்.ஆனா தீபாவளிக்கு வாழ்த்து சொல்லகூடாது.போங்கடா வெண்ணைங்களா//
இதை முழுமையா நான் ஆதரிக்கிறேன். மட்டுமில்லாம, என்னோட கருத்து என்னன்னா, எந்த மதமா இருந்தாலும் சரி.. அடிமைப்படுத்துதல் தப்புதான். இஸ்லாத் ஆனாலும் சரி, இந்து மதமானாலும் சரி.
அதேபோல், இந்த அரசியல்வாதிங்க நோம்புக்கஞ்சி குடிக்குறது, தமிழகத்தின் மிகப்பெரிய தமாஷ்களில் ஒன்று. அதுலவும் குறிப்பா நம்ம கலிஞ்சர்.. 🙂
இதுக்கு ஒரே வழி தான் பாஸ்…
எல்லோருக்கும் தரமான கல்வியறிவு கிடைச்சா போதும்..
சுயமாக சிந்திக்க கூடிய திறன் நல்ல கல்வியால தான் வரும்…
உலக அறிவும், நல்ல கவனிப்பும் இருக்கணும்..
இந்த மாதிரி conversations எல்லாம் அரை வேக்காட்டுத் தனமா தான் இருக்கும்..
இன்னும் கூட நாம சக அன்பர்களுக்கான மரியாதையையும், அன்பையும் தரவில்லை என்பது தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்கு தெரிய வருவது..
நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன். சிலர் நல்ல கருத்துக்கள் பேசினாலும் சிலர் பிடிவாதமாகவே பேசினார்கள்!
எதேச்சயாக அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். ஒரு அடிப்படை புள்ளியியல் விபரம் கூட தெரியாமல் அமர்ந்திருக்கும் குடும்பப் பெண்களைப் பார்க்கையில் எனக்கு சிரிப்பு மட்டுமே மிஞ்சியது. பெண்ணியம் என்பது என்ன? பெண்கள் பெண்களாகவே இருப்பது… ஒரு சிம்பில் விடை.. ஆனால் அதற்கு அவர்கள் உரிமை கொண்டாடுவதைத் தடுக்க பெண்களே இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சோகமான உண்மை?
பெண்ணியம் என்ற பெயரில் நான் ஒரு ஓவியம் வரைந்தேன். அதில் முகமற்ற பெண்ணின் ஓவியம் இருக்கும். பெண்ணியம் என்பது எந்த அடையாளமுமில்லாத பெண் எனும் மனித இனத்துக்கே உண்டான உரிமை குறித்தது என்பது அந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் உண்மை. நடைமுறை வாழ்க்கையில் எல்லா பெண்களும் போர்வையோடு அலைகிறார்கள் என்பது வருந்தத்தக்கது!!
நல்ல கட்டுரைக்கு சல்யூட்!!
இப்போ ராம்சாமி அடவாடியா பேசுனாலும்…..கரீட்டாதாம்பா பேசுறாரு………..அப்படியே ஆமோதிக்கிறேன்….:))
பதிவு நன்று … அது ஒரு மேலோட்டமான விவாதம் …கூர்மையாய் விவாதிக்கும் சூழலுக்கு இன்னும் நாம் வெகுதூரம் செல்ல வேண்டும் …
ம்ம்ம் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பாவிகளில் நானும் இருக்கேன். அந்த நிகழ்ச்சி ஒரு முழு முட்டாள்தனத்தின் தொகுப்பு. கலந்து கொண்டவர்களின் பாதிப்பேர் ஃபில்லர்ச் எனப்படும் நிகழ்ச்சியை நிறைக்க வந்தவர்கள்.. பெண்ணீயம் பக்கம் பேச 4 பேர் மட்டுமே இருந்ததால், இந்தப்பக்கம் இருந்து 4 பேரை அங்கு அமரவைத்தனர். அப்படியும் இருக்கைகள் நிரம்பாததால் வேடிக்கை பார்க்க வந்த அப்பிராணிகளையும் அமரவைத்தனர். அப்படியும் இரு பக்கமும் இருக்கை நிறையவில்லை, நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களில் இருந்த பெண்கள், அதற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், அங்கு மெஸ்ஸில் வேலை செய்பவர்கள் கொண்டு நிரப்பப்பட்டது…மற்றபடி அங்கு ஆரம்பம்முதலே ஒரு குழாயடி சண்டை நடந்தது, கோபியும் டைரக்டரின் டாக்பேக் தவிர வேறு எதும் அறிவார்த்தமாக நிகழ்ச்சியை கொண்டு போகவில்லை, அதிகபட்சம் 30 நிமிடத்துக்குமேல் அந்த கூத்தை பார்க்கவும் முடியவில்லை. கிளம்பிவந்தாச்சு…..
நல்ல விவாதம் தொடரட்டும்
@senthilkumarblog – கரெக்ட். ஆனா, தரமான கல்வியறிவு மட்டுமில்லாம, நல்ல புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வர வேண்டும். நீங்கள் சொன்னபடி, உலக அறிவு அப்பதான் வரும். ஆனால், இப்பவும் பல பேர், சக மனிதர்களுக்கு மதிப்புத் தருவதேயில்லை என்பது நிஜம். அதுதான் கொஞ்சம் வலிக்கும் விஷயம்.. நன்றி நண்பா
@ எஸ்.கே – ஆமாம். சிலர், பிடிவாதமாத்தான் பேசினாங்க.. என்ன கொடுமை அது… நன்றி
@ ஆதவா – //பெண்ணியம் என்ற பெயரில் நான் ஒரு ஓவியம் வரைந்தேன். அதில் முகமற்ற பெண்ணின் ஓவியம் இருக்கும். பெண்ணியம் என்பது எந்த அடையாளமுமில்லாத பெண் எனும் மனித இனத்துக்கே உண்டான உரிமை குறித்தது என்பது அந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் உண்மை. நடைமுறை வாழ்க்கையில் எல்லா பெண்களும் போர்வையோடு அலைகிறார்கள் என்பது வருந்தத்தக்கது!!//
இது மிகவும் உண்மை. முழுக்க ஆமோதிக்கிறேன். அப்படியே, நீங்கள் வரைந்த ஓவியங்கள் பற்றி எங்காவது போடலாமே. ஒருக்கால் ஏற்கெனவே போட்டிருந்தீர்கள் என்றால், கட்டாயம் பார்த்துவிடுகிறேன்..மிக்க நன்றி
@ நாஞ்சில் – ஹாஹ்ஹா 🙂
@ Shivam – ஹும்ம்ம்… அதுவும் சரிதான். இன்னமும் இங்கே அந்தக் கலாச்சாரச் சூழல் வரவில்லைதான். திறந்த மனதோடு விவாதிக்கும் நிலை வர இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ 🙁
@ விஜி – அடடா.. உங்கள் பின்ன்னூட்டத்தின் மூலம், அங்கே என்ன நடந்தது என்பதை முழுதாகப் புரிந்துகொண்டோம். என்னங்க இது.. ஆளே இல்லாமத்தான் அந்த நிகழ்ச்சி ஓடிக்கினு இருக்கா? கொடுமை.. இதுல, மாத்தி மாத்தி எல்லாரையும் உக்கார வெச்சா எப்புடி வெளங்கும்? உண்மையைச் சொன்னதுக்கு மிக்க நன்றி விஜி..
@ கண்ணன் – 🙂 தொடர்ந்தால் நல்லதுதான் 🙂 .. பார்ப்போம்
http://tamil.techsatish.net/file/neeya-11/comment-page-1/
யாரேனும் பார்க்க விரும்பினால்..
ஒன்று மட்டும் புரிந்தது.. குடும்பத் தலைவிகளாக அமர்ந்திருந்தவர்கள் பெண்ணியம் தேவைப்படாதவர்கள்.. they are either co-dominant in their family or dominant.. இல்லையா, சார்ந்து வாழ விரும்பும் பெண்கள்.. தங்களைப் போலவே எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் என்ற தவறான எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.. மேலும், பெண்ணியவாதிகள் பற்றிய தவறான அபிப்பிராயமும் அவர்களுக்கு இருக்கிறது..
நீங்கள் எதிர் தரப்பை கொஞ்சம் மிகைப்படுத்தியே சொல்லியிருக்கிறீர்கள்.. நீங்கள் சொன்ன அந்த ஆங்கில நாரிமணி எனக்கென்னமோ தெளிவாகத் தான் பேசினார் போல இருந்தது – சில நேரங்களில் எதிர் தரப்புடன் ஒத்தும் போனார்.. இன்னும் சிலரும் அவ்வாறே.. ஆனால் அந்த ஆரஞ்சு புடவை பெண்மணி (இந்த இடுகையில் சொர்ணாக்கா), அதிகாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்..
பெண்ணியவாதிகள் – தெளிவாகப் பேசினார்கள்.. தம் கருத்துகளை அழகாக முன் வைத்தார்கள்..
இன்னும் விட்டுப்போனவை, உண்மையில் அந்த நிகழ்ச்சியின் தலைப்பாக சொல்லப்பட்டது குடும்பத்தில் பெண்ணீயம் தேவையா இல்லையா என்பதே..ஆனால் வருவதாக சொன்ன பெண்ணீயவாதிகள் யாரும் வரவில்லை, ஆகவே இருப்பதை கொண்டு நிரப்பவேண்டிய அவசியம் அவர்களுக்கு…மேலும் ஒரு டிவி டாக் ஷோ என்பது எப்படி ஒரு ஜனரஞ்சக வியாபார நிகழ்வாக மட்டுமே எடுக்கப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். நான் அங்கு சென்றிருந்த போது இரு நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு நடந்தது. இரண்டுமே இதே போலவே சொல்ல வந்த கருத்துக்களுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லாமல்… இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த உடன் இட்ட இடுகை… டிவி டாக் ஷோ அனுபவக்கொடுமை மற்றும் குடும்பத்தில் பெண்ணியம் தேவையா
இந்த நிகழ்ச்சியை விட நம் பதிவர்களிடம் டாபிக் கொடுத்தா நல்லாவே விவாதிப்பார்கள்.
ஓவியத்தை வேறு ஒரு தளத்தில் கொடுத்திருந்தேன். எனது தளத்தில் இல்லை
கீழ்காணும் இணைப்பு தெரியப்படுத்தும் என்று நினைக்கிறேன்.
http://3.bp.blogspot.com/_x__vwisw_WY/TRGLbHczCDI/AAAAAAAAAy0/2qTSK70BE20/s400/pen.jpg
Hello one min …..
சகோதரர் இப்போ ராமாசாமி அவர்களே,
உதராணத்திற்க்கு இரு சகோதரிகளில் ஒருவர் புர்கா அணிந்தும் மற்றொருவர் மினி பாவாடையும்,குறைந்த அளவு மேல் சட்டையும் அணிந்து தெருவில் செல்வாதாக கொள்வோம். யாரை ஆண்கள் கேலி பேசுவார்கள் அல்லது யாரின் மீது ஆண்களின் காம பார்வை விழும்? சதந்திரம் என்ற பெயரில் அரைகுறை ஆடை அணிந்து விளம்பரங்களிலும்,சினிமாக்களிலும் தங்கள் உடல் அழகை காண்பித்து பணம் சேர்க்கும் பெண்களின் செயல் சிறந்ததா? அல்லது தன் கணவர் மட்டுமே காண வேண்டிய உடல் அழகை மற்ற ஆடவர்கள் காணாத வண்ணம் ஒழுக்கமாக புர்க்கா அணிந்து செல்லும் பெண்களின் செயல் சிறந்ததா?
நீங்கள் ஒரு நடுநிலமையான நேர்மையான மனிதராக இருந்து இதற்க்கு பதில் சொல்லுங்கள்
@ எல் போர்ட்.. பீ சீரியஸ் – அந்த நிகழ்ச்சியோட காணொளியைக் கொடுத்ததுக்கு நன்றி நண்பா..
அப்புடியே, நான் மிகையா சொல்லல. அந்த ஆங்கிலப்பெண்மணி, ஆரம்பத்துல மறுத்தார். ஆனா அந்த வரதட்சிணைப் பிரச்னை முடிஞ்சதும், ஒத்துக்க ஆரம்பிச்சார். இருந்தாலும், அவங்க பேசின கருத்துக்கள் வேணும்னே விதண்டாவாதம் பண்ணினமாதிரியே தான் இருந்தது. அதைத்தான் சொன்னேன்.
உங்க கருத்துகளுக்கு நன்றி நண்பா.. (அப்புறம், என்னங்க பேடு இது? நல்லாத்தான் இருக்கு) .. 🙂
@ விஜி – உங்க பதிவுகள் ரெண்டையுமே பார்த்தேன். அதுல பின்னூட்டமும் போட்ருக்கேன்.. என்னுடைய நண்பர் ஒருத்தருக்கும் இதே நிலை ஏற்பட்டது..
//இந்த நிகழ்ச்சியை விட நம் பதிவர்களிடம் டாபிக் கொடுத்தா நல்லாவே விவாதிப்பார்கள்//
ரொம்ப சரி 🙂
@ ஆதவா – உங்க ஓவியத்தைப் பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது.. பிரமாதமா வரைஞ்சிருக்கீங்க.. மனமார்ந்த வாழ்த்துகள்
@ zulfi – வாங்க.. எதுவேணாலும் சொல்லலாம் 🙂 .. எங்க போயிட்டீங்க.. திரும்பி வாங்க 🙂
@ zulfi – இப்போ ராம்சாமி கட்டாயம் உங்க கேள்விக்கு பதில் சொல்வார்ன்னு நினைக்கிறேன்
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
இஸ்லாத்தை பற்றி மாற்று மத சகோதரர்களின் கவனத்திற்க்கு.
ஒரு முறை இறைத்தூதர் முகம்மது(ஸல்) அவர்களிடம் அவருடைய நண்பர் ஒருவர் வினவினார்,முகம்மது(ஸல்) அவர்களே, நான் இவ்வுலகத்தில் யாருக்கு அதிகமாக கடமைப்பட்டு இருக்கிறேன் என்று அதற்க்கு முகம்மது(ஸல்) அவர்கள் உனது தாயுக்கு என்று சொன்னார்கள், மீண்டும் நண்பர் முகம்மது(ஸல்) அவர்களிடம் கேட்டார் அடுத்து யாருக்கு என்று அதற்க்கு முகம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள் உனது தாயுக்கு என்று,அடுத்து யாருக்கு என்று நண்பர் வினவ அதற்க்கும் முகம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள் உனது தாயுக்கு என்று,மீண்டும் ஒருமுறை அந்த நண்பர் வினவ அதற்க்கு முகம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள் உனது தந்தைக்கு என்று.
முதல் முன்று இடங்களை(தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கல பரிசுகளை) பெண்களுக்கு வழங்கி பெண்களை கெளரவபடுத்தியது இஸ்லாமே.
ஆணகள் பெண்களுக்கு மஹர்(வரதட்சனை)என்னும் தொகையை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது இஸ்லாம். அதை முஸ்லிம்கள் பின்பற்றவில்லை என்றால் அது முஸ்லிம்களின் குற்றமா? இஸ்லாத்தின் குற்றமா? யார் இறைவனின் வேதத்தையும், முகம்மது(ஸல்) அவ்ர்களின் வாழ்கை முறையயும் முழுமையாக பின்பற்றி நடக்கிறானோ அவனே உண்மையான முஸ்லிம். அப்துல்லா என்று பெயர் வைத்து கொண்டு பெண்களிடம் வரதட்சணை வாங்குபவன் உண்மையான முஸ்லிம் அல்ல.
1400 ஆண்டுகளுக்கு முன்பே, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் முடித்து கொள்ளலாம் என்ற உரிமை பெண்களுக்கு வழங்கியது இஸ்லாமே.
இறைவனின் இறுதி தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள், உன் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று இதற்க்கு அர்த்தம் தாயை வணங்குவதுதல்ல பதிலாக தாயுக்கு பணிவிடை செய்து அவர்களை ச்சீ என்றும் சொல்லிவிடாமல் உபசரித்து அதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்பதே.
1400 ஆண்டுகளுக்கு முன்பே, சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளது என்று சொன்னது இஸ்லாமே.
1400 ஆண்டுகளுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்தால் அதை மண்ணில் புதைத்து கொல்லும் வழக்கம் இருந்த அரேபியாவில் அது பெரும் பாவம் என்று அறவே ஒழித்தது இஸ்லாமே.இப்படி பலவகைகளிலும் பெண்களை கெளரவபடுத்திய இஸ்லாம் பெண்ணடிமைத்தனமானதா? உண்மையானவர்கள்,நேர்மையானவர்கள் நடுநிலமையானவர்கள் சிந்திக்க வேண்டும்.
இஸ்லாம் பெண்ணடிமைத்தனமானது என்றால், இன்று அமெரிக்காவில் ஆண்களை விட பெண்களே இஸ்லாத்திற்க்கு வருகிறார்கள் அது ஏன்?
மாற்று மத சசோதரர்களே உண்மையாகவே,நேர்மையாகவே இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் குரானின் தமிழ் மொழி பெயர்ப்பை வாங்கி படியுங்கள் பிறகு விமர்சனம் செய்யுங்கள்.இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு அஞ்சும் முஸ்லிம் விரோத ஊடகத்தின் தகவல் அடிப்படையில் இஸ்லாத்தை விமர்சனம் செய்ய வேண்டாம்.
குறிப்பு:
இறைவன் நாடினால் மீண்டும் ஒன்பது நாட்களுக்கு பிறகு வருகிறன். மஸ்கட்டில் வேலை செய்யும் எனக்கும் ஒன்பது நாட்கள் விடுமுறை. விட்டில் கணினி இல்லை.
@கருந்தேள் கண்1000,
தெரியாத்தனமா பாதி நிகழ்ச்சியை பார்த்து தொலைத்து விட்டேன். அந்த நிகழ்ச்சிக்கேற்ற சரியான சரியான தலைப்பு இந்த பதிவிற்கு… அதில் இரு தரப்பினருக்குமே பொருந்தும் தலைப்பு. நல்ல விமர்சனம்.
@விஜி,
இனி நீயா நானா நிகழ்ச்சியை பார்க்கப்போவதே இல்லை. அதன் உண்மைத்தன்மையை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். பார்க்கும்போதே எனக்கும் அதே டவுட் இருந்தது.
@இப்போ ராமசாமி @ நாஞ்சில் பிரதாப்-களுக்காக:
இஸ்லாத்தில் ஆண்களை விட பெண்களுக்கே நிறைய சலுகைகள்… சலுகைகள் எப்படி அடிமைத்தனம் ஆகும்?
இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..!
http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post.html
மற்ற பெண்களுக்கு அவர்கள் விரும்பும் உடையை உடுத்த உரிமை இருப்பது போலவே முஸ்லிம் பெண்களுக்கும் அவர்கள் விரும்பும் ஹிஜாப் ஆடையை அணிய உரிமை இல்லை என்பது பெண்ணடிமைத்தனம் இல்லையா?
இஸ்லாமிய ஹிஜாபும் பெண்ணுரிமையே..!
http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post_12.html
ஒரு வகையில் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட நான்கு தாரமணம் என்பது முதல் மனைவியின் பெண்ணுரிமையை பறிப்பது போன்று தோன்றினாலும், அது நிச்சயம் விதவை மற்றும் விவாகரத்தான பெண்களின் பெண்ணுரிமையே.
இஸ்லாமிய சிலதாரமணம்
http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post_17.html
இந்த உயரிய லட்சியத்தை புரியாமல் சுகம் அனுபவிக்க இந்த அனுமதியை தவறாக பயன் படுத்தும் ஆண்களையும் சாடி இருக்கிறேன்.
இஸ்லாமிய சிலதாரமணம் – The misuse.
http://pinnoottavaathi.blogspot.com/2010/12/misuse.html
இதுபோன்ற இடுகைகளை எழுத காரணமாகி என்னை ஊக்கப்படுத்திய நாஞ்சில் பிரதாப்-புக்களுக்கு நன்றி.
hey first of all thanks to zulfi and mohammed aashiq for there clear thoughts about burka and Islams views about it .but still 1 doubt for me
– whatever a woman wears t shirt ,jeans or burka men will be men and they ll look at them I am not supporting them but I am just saying the fact .Then I have 1 muslim friend she doesnt like to wear burka ,then I asked her then why are you still wearing it ? she told me just for the sake of there parents -is this not against woman freedom .its just a question from me and also sorry if it hurts your any religious thoughts
🙂
நண்பர் முஹமது ஆசிக், அருமையான கட்டுரைகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
சகோதரர் முஹமது ஆசிக், அருமையான கட்டுரைகள்.
This comment has been removed by the author.
தலைவரே வணக்கம்!!
இந்த பதிவை வாசிக்க தொடங்கிய பின்னர் நான் அந்த நீயா நானாவை youtubeல் பார்த்தேன்… உங்கள் கருது நியாயமானது…
எனக்கு தோன்றியவை இங்கே!!
பெண்களை கொடுமை படுத்துவது ஒரு ஆணாக மட்டுமே இருக்க முடியாது அது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்… பெண்களை அடக்கியாள்வது ஆண்கள்தான் என்பதை என்னால் ஏற்க முடியாது. சமுதாயத்தில் அவரவர்களுகென்று கடமைகள் உண்டு, அவரவர் வேலையை ஒழுங்காக செய்தாலே ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் என்று எண்ணுகிறேன்.
பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் வரவேற்கத்தக்கது ஆனால் நான் ஒரு பெண்ணாக இருந்துகுண்டு வேலைக்கு செல்கிறேன் என்ற எண்ணம் இருக்கும் வரை ஒரு பிரிவினை இருக்கத்தான் செய்யும்.
பல குடும்பங்களில் பெண்கள் கொடுமைபடுத்த படுகிறார்கள் அதே சமயத்தில் பல குடும்பங்களில் பெண்கள் பஜாரித்தனமாக நடந்துகொண்டு அப்பாவி ஆண்களை சித்தரவதை செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
பொதுவாக பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், மதிக்கத்தக்கவர்கள், போற்றத்தக்கவர்கள். ஆண்கள் அவர்களை பாதுகாப்பவர்கல்தான். நகை பெட்டகத்தை விட தங்க நகைகுத்தான் மதிப்பு அதிகம், இருப்பினும் நகை பெட்டகதினுள் இருப்பதுதான் பாதுகாப்பானது.
அனால் ஹிட்லர் போல் பெண்களை வெறும் ஏந்திரமாக என்னும் மிருகங்கள் (ஆண்கள்) தண்டிக்கப்பட வேண்டும்.
இங்கு நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது “மனிதவிமானம்” மட்டுமே. ஒவ்வொரு மனிதனும் மற்ற உயர்களுக்கு மரியாதை கொடுத்து வாழ்ந்தால் உலகம் நிச்சயமாக முன்னேற்ற பாதையில் செல்லும்.
எழுத்து பிழை இருந்தால் சகிதுகொள்ளவும். நான் கூறியவற்றில் ஏதும் மாற்று கருது இருந்தால் தெருவிக்கவும்.
நன்றி!!!
டே சொறியார் வெண்ணை . .உன்னோட இந்த பின்னூட்டம் ப்ளஸ் நீ போட்ட இன்னும் சில பின்னூட்டங்களை எல்லாம் சேர்த்து சைபர் போலீஸ்க்கு இப்பதான் மெயில் பண்ணேன் 🙂 . . அங்க பேசவும் பேசியாச்சி . .:-) வருவாங்க உன்ன லாடம் கட்ட.. சீக்கிரமே. . . 🙂 .. அப்ப தெரியும்டி 🙂 .. ஆனா நான் இன்னும் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தேன் உன்கிட்ட . 🙂 . . நீ டவுசர் கிழிய அடிவாங்குறதை நினைச்சி பார்க்குறேன் 🙂 . . அந்த நேரத்துல நேர்ல வந்து உன்னாண்ட பேசுறேன்டா சோமாறி 🙂 ஹாஹ்ஹா
சபாஷ், சொறியானுக்கு வச்சாச்சு பெறிய ஆப்பு 🙂
வணக்கம்!!
நான் ரொம்ப ஏதிர் பார்த்த படம் ஆரண்ய காண்டம், அதற்கு உங்க விமர்சனம் எப்படின்னு படிச்சி முடிச்ச வுடனே, அடடே நாம ஒரு கமெண்ட் போட்டோமே அதுக்கு ஏதாவது பின்னூட்டம் வந்திருக்குதான்னு பார்த்தேன்.
எனக்கு புரியல இந்த பின்னூட்டம் என்னோட கம்மெண்டுகாணு…
அப்படி நா நெனச்சது உண்மைதான்னா, நீங்க என் detailsa சைபர்கு அனுபுனத பத்தி நா கவலைபடல. நான் இதுவரை உங்க ப்ளாக் ல 2 (Vinnai Thandi Varuvaya & this) கமெண்ட் தான் போஸ்ட் பண்ணி இருக்கேன். என்ன பத்தி மேலும் தகவல் வேணும்னா சொல்லுங்க address, phone number எல்லாம் அனுபிவைகிறேன் சைபர்கு அதையும் கூட சேத்து அனுபிவைங்க. என் மனசுல பட்டத இங்க நா போஸ்ட் பண்ணேன் அதுலயும் மனிதாவிமானம் பத்திதான் சொல்லிருந்தேன்.
“யாருக்கும் ஜால்ரா அடிக்கிற பழக்கம் எனக்கு கிடையாது”
நா சொல்ல நினைத்தது உங்களுக்கு இன்னும் புரியலனா இந்த வீடியோ வ (http://www.youtube.com/watch?v=Gpfvkeo0KBc&feature=player_detailpage) ஒரு முறை பாருங்க.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், மற்ற உயிர்கு மதிப்பு கொடுத்து நடந்தா உலகம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
For you: If someone post any nonsense comments please ignore them and do not reply them but don’t forget to take action, don’t degrade your respect.
நன்றி!!!
அன்புள்ள தீபானந்த்,
மேலே உள்ளது உங்களுக்கான ரிப்ளை அல்லவே அல்ல. சொறியார் என்ற பெயரில் ஒருவன் வந்து உளறியிருந்தான். அதைத்தான் சைபர் போலீசுக்கு அனுப்பினேன். மனிதாபிமானத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன். உங்களுக்குப் பின்னூட்டம் இடத்து தவறுதான். எப்படியோ மிஸ்ஸாகி விட்டது. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நன்றி
nan kuda solluven varatharchanai kodumai yellam nan partha varai illa. athulam husband and wife kulla vara sandainalla kodukura poi pukar. pen ennoru vittil poi valla pokiral atharku parents kodukum usable things and innum pala. penkale ennaku ethu tthu vendum endru kettu vanki selkirarkal.
அப்படியே வீட்டில் அடிவாங்கும் ஆண்களை பற்றி கொஞ்சம் கருத்து சொல்லுங்க