தெய்வத்திருமகள்: காப்பிரைட் வழக்கு
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். தமிழில் சில மாதங்கள் முன் வெளிவந்த தெய்வத்திருமகள் திரைப்படம், I am Sam படத்தின் காப்பி என்பது அனைவருக்குமே தெரியும். அந்தப் படம் வெளிவந்தவுடன் ஹாலிவுட் பாலா, I am Sam படத்தின் தயாரிப்பாளர்களான New Line Cinemas நிறுவனத்தினருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என்பதும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது இந்த செய்தியைப் பற்றிய அப்டேட் வந்திருக்கிறது.
எனது நண்பர் ஒருவருக்கு (ஹாலிவுட் பாலா அல்ல) அமெரிக்காவில் சில நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் நேரடியாக ந்யூலைன் நிறுவனத்தின் லீகல் அட்வைஸர்கள் குழுவில் இருக்கும் ஒரு சிலரை அந்த நண்பர் அணுகியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. என்னவெனில், தெய்வத்திருமகள் படத்தைத் தயாரித்த UTV நிறுவனத்தினரை ந்யூலைன் ஸ்டுடியோஸ் நேரடியாகவே தொடர்பு கொண்டு, இந்தக் காப்பியைப் பற்றிய பிரச்னையைக் கிளப்பியிருப்பதாகவும், யூடிவி நிறுவனம் உடனேயே ஒரு தொகையை நஷ்ட ஈடாக அளித்து இந்தப் பிரச்னையை சரிக்கட்டியதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவல், ந்யூலைன் நிறுவனத்தினரின் லீகல் அட்வைஸர் டீமில் இருந்தே எனது நண்பருக்கு வந்திருக்கிறது. மின்னஞ்சலில் அல்ல. நேரடியாக அவர்களிடம் தொலைபேசியில் எனது நண்பர் பேசியபோது அவர்களே தெரிவித்த தகவல் இது.
இப்போது ஒரு சந்தேகம் எழக்கூடும். இந்தத் தகவல் பொய்யா உண்மையா? ஏன் வேண்டுமென்றே நான் இப்படி ஒரு தகவலை இட்டுக்கட்டி எனது ப்லாக்கில் எழுதியிருக்கக்கூடாது? இதற்கு ஆதாரம் என்ன?
எந்தத் தகவலையும் இட்டுக்கட்டி இதுவரை நான் நமது வலைப்பூவில் எழுதியதில்லை. எனது நண்பர் ந்யூலைன் லீகல் அட்வைஸர்களிடம் அவரது நண்பர்களை வைத்துப் பேசிய செய்தியே இது. இதற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஆதாரமும் இல்லைதான். இதுவும் உண்மையே. அவர் என்னிடம் சொல்லிய தகவல் மட்டுமே ஆதாரம். அவர் பொய் சொல்லக்கூடிய நிலையில் இல்லை.
ஆனால், 2011 ஜூலையிலேயே இந்த நஷ்ட ஈட்டுச் செய்தி ஒரு வலைப்பூவில் வந்திருக்கிறது. அந்த வலைப்பூ எழுதிய நண்பர் யார் என்றே எனக்கு இன்றுவரை தெரியாது. மிக சமீபத்தில்தான் எனது நண்பர் இந்த வலைப்பூவை எனக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.
அந்த வலைப்பூ செய்தி இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.
தெய்வத்திருமகள் மறைக்கப்பட்ட வழக்கு !!
ஒருவேளை இந்தச் செய்தி உண்மை எனில், இது நமது காப்பியடித்தே ஒப்பேற்றும் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பாடம் எனலாம். இனியாவது ஒரிஜினலாக சிந்தித்துப் படம் எடுக்க இது ஒரு ஆரம்பம் என்றும் சொல்லலாம். ஆகவே இது நல்ல விஷயம் தானே? மிக விரைவில் எனது நண்பரிடம் மேலும் பல தகவல்கள் சேகரித்து எழுத முயற்சிக்கிறேன்.
பி.கு –
1. காப்பிகளைப் பற்றி மின்னஞ்சல் அனுப்புவதில் இப்படியும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவைப் படித்தால், தெய்வத்திருமகள் போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருக்கும்போதே நஷ்ட ஈட்டுக்காக அவர்களை ந்யூலைன் நிறுவனத்தினர் அணுகியதாக இருக்கிறது. ஆகவே நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களால் பயன் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்த முயற்சி இனியும் சந்தோஷமாக தொடர இந்த செய்தி வழிவகுத்திருக்கிறது என்பேன். விரைவில் இதுபற்றிய புதிய தகவல்களுடன் வருகிறேன்.
2. காப்பிகளைப் பற்றிய மின்னஞ்சல் முயற்சிகளை கிண்டல் அடித்த சிலரை எனக்குத் தெரியும்.ஒருவேளை இந்தச் செய்தி உண்மையாக நிரூபிக்கப்பட்டால் (அதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன்) அவர்களின் முகம் போகும் போக்கைப் பற்றி யோசித்தால் சிரிப்பே மிஞ்சுகிறது.
டவுசர அவுக்குரப்ப அவிங்க மூஞ்சி போற போக்க பார்க்க மிக ஆவாலாக இருக்கேன்,
பிரியாணியும் குஷ்க்காவும் ஒண்ணு சாப்டுற வாய்தான் வேறன்னு வியாக்கானாம் பேசுன பயல்வ வாய்னா என்னா பண்ணுதுன்னு பார்க்கலாம்….,
மிக அருமை நண்பரே…
காப்பி படங்களை பற்றி பெரும்பாலும் உங்கள் வலைப்பதிவில் இருந்து தான் தெரிந்து கொண்டேன்,
காப்பி அடிக்கிறதை விட இவனுங்க விடுற சீன் இருக்கே…அப்பா தாங்கவே முடியாது…
http://dohatalkies.blogspot.com/2012/08/a-beautiful-mind.html
அட ஏன் தல இதுக்கே இப்படின்னா , நம்மாளு வேர்ல்ட் ஹீரோகிட்ட எவனாச்சும் காப்பிரைட் வழக்கு ஆரம்பிச்சான்னா ?? எத்தன பேரு கியூ கட்டி நிப்பானுங்கன்னு நெனச்சு பாக்குறப்பவே கண்ண கட்டிங்…..
அதுக்கு அப்புறமும் அவராட்டி அம்புட்டு அலப்பற கொடுக்க முடியுமா ?? “இந்த மேக்கப் 10 நிமிசம் தான் இருக்கும் , 2 மணி நேரம் போடனும்னு”
அதே மாதிரி நீங்க ஒரு பதிவுல அயன் Maria Full of Graceன்னு சொல்லிருப்பீங்க . ஆனா அந்த படத்துல இன்னொரு படமும் காப்பி அடிச்சு வச்சுருப்பாங்க . Catch Me If You Can பாத்தீங்கன்னா அந்த படத்துல கடைசில டிகாப்ரியோ பேங்க் ஃப்ராடு பண்ணிட்டு அங்கிட்டே ஃபைனான்ஸ் கிரைம்ல ஆபீசர் ஆகிடுவாரு . இதுலையும் சூர்யா அதே தான் பண்ணுவாரு . ஸ்மக்லிங் பண்ணிட்டு அதுலையே கடைசில ஆப்பீசர் ஆகிடுவாரு . அய்யகோ……
காப்பி கலாச்சாரம் ஒழியவே ஒழியாது போல….
KAAPPIYADITHTHADHU MAATHTHIRAMALLAAMAL EDHO IVARGAL PERIYA MEDHAVIGALAI POL CHINNATHIRAIGAL SITHARIPPADHU MAKKALAI MUTTAALAKKUM SEYAL THANGALUDAIYA PANI MENMELUM SIRAKKA EN MANAMAARNDHA VAAZHTHTHUKKAL KAAPPIYADIPPAVARGALIN MUGATHTHIRAI KIZHIKKAPADAVENDUM
NANDRI
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு…
இதே போன்று ஒரு செய்தி ஆள வந்தானுக்கு வந்ததே…
அச்செய்தியையும் நீங்கள் பதிவு போட்டு கொண்டாடி இருக்கலாமே…
டொரண்டினோவே போன் போட்டு உங்களிடம் சொன்னால் கூட…
“நான் உன்னை நம்ப மாட்டேன்.நீ ஒபாமாவிடம் லெட்டர் வாங்கிக்கொண்டு…கொழந்தையிடம் பயிற்சி பெற்று … ‘வீடியோ பதிவில்’விளக்கு” என்பீர்கள்…
ஏனென்றால் உங்களுக்கு கமல் அவ்வளவு ‘பிடிக்கும்’
‘கில் பில்’ வீடீயோ பதிவு பற்றி…நான் மூச்சு விட மாட்டேன்.
ஏனென்றால்… ‘எனது ஒரு கண்ணில் சுண்ணாம்பு…ஒரு கண்ணில் வெண்ணெய்’.
ஒரு வகையில் இப்பதிவு எனக்கு ‘குரூர’ மகிழ்ச்சியை தருகிறது.
காரணம்…நடிகை பிரியா மணி.
“எடுத்துக்கோ… எடுத்துக்கோ…
அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ…”
இந்த விளம்பரத்தை எடுத்தவன்..விஜய்.
நேரில் விளக்கமாக சொல்கிறேன்.
என்ன இருந்தாலும், தாய் நாட்டை காட்டிக் கொடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
karundhel,super boss.copy adichitu ivanugu pesurathu sagika mudiyathu.ungal copy payanam thodaratum.mattran alos a copy of “struck on you ninakiraien.
அருமையான முயற்சி நண்பரே… இத பாத்தாவது மற்றவர்கள் திருந்துவார்களா??????
செம இனியாவது கத தேடி டிவிடி கடைக்கு போகாம லைப்ரரிக்கு போவாங்களா
இப்படி திருடி எடுக்குறதுக்கு ரீமேக்ன்னு சொல்லி – காசு குடுத்தே வாங்கி எடுத்துரலாமே…….கௌரவமாவாச்சும் இருக்கும்
// அட ஏன் தல இதுக்கே இப்படின்னா , நம்மாளு வேர்ல்ட் ஹீரோகிட்ட எவனாச்சும் காப்பிரைட் வழக்கு ஆரம்பிச்சான்னா ?? எத்தன பேரு கியூ கட்டி நிப்பானுங்கன்னு நெனச்சு பாக்குறப்பவே கண்ண கட்டிங் //
நா சொல்லலாம்ன்னு இருந்தேன்…….நெனச்சு பாக்கவே பயங்கரமா இருக்கு
This comment has been removed by the author.
காப்பி அடிச்சா தப்பே இல்லன்னு டைரக்டர்கள் மட்டும் இல்ல, நம்ம மக்களே நம்ப ஆரம்பிச்சுட்டாங்க.. படம் நல்லா இருக்கே காப்பி யா இருந்த என்னனு கேக்கறாங்க.. இந்த மன நிலையை மாத்தவே முடியாது..உங்கள மாதிரி ஆட்கள் மூலமா இது தொடராம செய்ய முடியும்..ஹாட்ஸ் ஆப்..
இவ்வாறு உலக சினிமாக்கள் தமிழ் சமூகத்தின் கடாய்க்கோடி ரசிகனுக்கு எளிதாய் கிடைப்பது பொறுக்காத ஏகாதிபத்திய மனோபாவம் ஆகும் இது, இந்த கதைகள் எல்லாமே மகாபாரதம் ராமாயணம் என தமிழ்க் கதைகளில் இருந்து துரையம்மா திருடிப் போனதுதான்
அண்ணே அப்புடியே இந்த “மாற்றான்” குழுவுக்கும் ஒரு மெயில் பண்ணி விடுங்கோவன், அது தாண்ணே “ஸ்ரக் ஒன் யூ” குழுவுக்கு! உங்களுக்கு புண்ணியமா போகும்!
karundhel vanakkam ennaku muthu-lion comic collection chennaila engae kidaikum endru sonnal nalla irukum.konjam seekiramga sollungal.
karundhel vanakkam ennaku muthu-lion comic collection chennaila engae kidaikum endru sonnal nalla irukum.konjam seekiramga sollungal.
இவனுங்க இப்படி கதையை சுட்ட கதை இணையத்தினை உபயோகிக்கும் நபர்களுக்கு தெரியும் ஆனால் தமிழக பாமர மக்கள் பலர் இவன் சுட்ட கதையை இவனது கதை திறமை என்று பாராட்டும் போது ……கடவுளே..கொலைக்குப் பின் அடுத்தவரின் கலையை திருடுவதே மன்னிக்க முடியாத குற்றமாகும்…
You write this much, but why did the Japan film festival guys give award to this film?
நண்பர்களே.. இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. என்நண்பர் பாஸ்கரன் இப்படியெல்லாம் பின்னூட்டம் இடுவார் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இனிமேல் இப்படி வந்தால் அடி பிரித்துவிடுவேன்
மிகவும் நல்ல விஷயம்.
ஜிம்பாப்வே… ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்த பட விழால விருது வாங்கியிருக்குன்னு கொடுமையான செய்தியா வந்துச்சு, காப்பி அடிச்சுருந்தா, அந்த நாட்டுக்காரங்க சும்மா விருது குடுத்துருப்பாங்களான்னு வேற கேட்டாங்க.. 🙂
தேளு, ஆணியே புடுங்க வேண்டாம்.கொஞ்ச நாளைக்கு Comment moderation வெச்சிருங்க..நன்றி.
தாண்டவம் பப்படத்தை பயந்து கொண்டே எடுத்து கொண்டிருக்கிறார்களாம்!
Rajesh always ROCKS!
இங்கிருந்த வில்லங்க கமெண்ட்களை தூக்கிவிட்டேன். இனிமேலும் யாராவது விளையாடினால் நான் வேறு மாதிரி பேச வேண்டியிருக்கும். இது என் எச்சரிக்கை
அப்படியே “Soul Kitchen” படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நம்ம “கலகலப்பு” பத்தி ஒரு மெயில் தட்டிவிடுங்கண்ணே..!
So what i can say All Tamil directors know English & world languages.its our great proud of Tamil FANS.
Enjoy
Keep Rocking
நண்பா,
படிக்க நல்ல விஷயம் கொடுத்தீர்கள்,அந்த விஜையும் பேரரசு சுந்தர்சீ போல நடிக்க ஆசைகொண்டு விரைவில் இயக்கத்தை விட்டுப் போகட்டும் என சபிக்கிறேன்.
முகமூடி எந்த படத்தின் தழுவல் எனத் தெரிந்ததா?
மாற்றான் அது குறுகலான ஏரோப்ளேன் கழிவறையில் இயக்குனருக்கு கனநேரத்தில் புதிதாய் உதித்த யோசனை என படித்தேன்.
மேலே உள்ள இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான் மிகவும் ரசித்தேன்.
இது ஒரு நல்ல முயற்சி. உள்ளுர் தமிழர்களை ஏமாற்ற முயலும் இயக்குனர்களுக்கு ஒரு பாடமாக இது அமையட்டும்.
நம்ம பிரபல இசை விமர்சகர் ஷாஜிசொன்னது போல, தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி!
ஒரு மோசமான போலி.. புடிங்க சார் அந்த விஜய்ய.. புடிச்சி அவன உள்ள போடுங்க சார்… விஜய் மட்டுமில்ல.. அந்த தனஞ்செயன் பண்ணுற அலுப்புக்கும்
ஒரு அளவே இல்லல..
vijay ponravargalukku copy adikka vetkam varavillaiyae, yaen?