நந்தலாலாவை முன்னிட்டு…

by Karundhel Rajesh November 30, 2010   Copies

தமிழ்ப்படங்களிலும் சரி, இந்தியாவின் மற்ற மொழிப்படங்களிலும் சரி. ஆங்கில/ உலகப் படங்களைக் காப்பியடிப்பதோ அல்லது தழுவுவதோ தவறே அல்ல என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜனரஞ்சகமான திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாத கலைப்படங்களை இப்படிச் சுடுவது அதிகம். சுட்டுவிட்டு, இந்த இயக்குநர்கள் கொடுக்கும் நேர்காணல்களைக் கேட்டால், ஏதோ இந்தக் கதைகள் இவர்களது மனதினுள்ளேயே பல வருடங்கள் தூங்கிக் கிடந்ததாகவும், அதனைத் தட்டியெழுப்ப இப்பொழுதுதான் நேரம் கிடைத்ததாகவும் பல அறிக்கைகள் பாய்ந்து வரும். இப்படிச் சுடுவது யாரென்று பார்த்தால், சாதாரண மசாலா இயக்குநர்களை விட, அறிவுஜீவிகள் என்று கருதப்படும் இயக்குநர்கள் செய்யும் ‘கில்லாடி வள்ளல்’ வேலையே மிக மிக அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, மணிரத்னத்தைச் சொல்லமுடியும். இதுவரை அவரது பல படங்களில், பல உலகப் படங்களில் உள்ள காட்சிகளையும், சமயத்தில் படத்தையுமே திருடி எடுத்துள்ளது எல்லோருக்கும் தெரியும் (அமோரஸ் பெரோஸ் – ஆய்த எழுத்து ஒரு உதாரணம்). அதேபோல், கமல்ஹாஸன். தமிழ்த் திரையுலகிலேயே மிக அதிகமான காப்பிகளை அடித்துத் தள்ளியவர் இவர் தான் என்று தயங்காமல் கூறலாம்.

இப்படிக் காப்பியடிக்கும் இந்த அறிவுஜீவி இயக்குநர்களைப் பற்றிய சராசரி சினிமா ரசிகனின் நிலைப்பாடு என்ன? மணிரத்னமும் கமலும் அவனது கடவுள்கள். இவர்களைப் பற்றி எதாவது குற்றச்சாட்டை ஆதாரத்துடன் முன்வைத்தால் கூட, அப்படிக் குற்றம் சாட்டுபவர்களின் குடும்பத்தையே தெருவுக்கு இழுக்கும்படியான வசைச்சொற்களையே அவர்கள் கேட்க நேரும். அப்படி ஒரு கடவுள் வழிபாடு இவர்களுக்கு நடக்கிறது.

இப்படிக் கமலையும் மணிரத்னத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு, தங்களது படங்களையும் இப்படி உலகப் படங்களிலிருந்து சுடுபவர்களின் பட்டியல், தமிழ்த் திரையுலகில் அதிகமாகிக்கொண்டே வருவது ஒரு கவலைக்குரிய விஷயம் இல்லையா?

பொதுவாக, ஒரு திரைப்படத்தைத் தழுவி மற்றொரு திரைப்படம் எடுப்பது தவறில்லை என்ற ஒரு கருத்து இங்கே நிலவிவருகிறது. அதாவது, காப்பியடிப்பது தவறு. ஆனால் தழுவுவது தவறில்லை. இதுதான் தமிழ்நாட்டுச் சராசரி திரைப்பட ரசிகனின் வாதம். ஆனால், இது சரியா?

ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஒரு நாவல் இருக்கிறது. அதனை, அப்படியே நம் சொந்த மொழியில் எழுதிவிட்டு, கதைமாந்தர்களின் பெயரையும், ஊர்களின் பெயரையும் மாற்றிவிட்டு, ஒரு சில நிகழ்ச்சிகளைக் கூட்டியோ குறைத்தோ எழுதினால், இது காப்பியா இல்லையா? இல்லை – இது தழுவல். ஆகவே அது காப்பி அல்ல. இப்படித் தழுவுவது சரிதான் என்று யாராவது சொல்வார்களா?

உலகெங்குமே, Plagiarism எனப்படும் காப்பியடித்தல் ஒரு குற்றமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் – தமிழ்நாட்டில் மட்டுமே, அது தவறு அல்ல. குறிப்பாக, திரையுலகில். இன்னமும் குறிப்பாக, அது கமல்ஹாசனோ அல்லது மணிரத்னமோ அல்லது அவர்களைப் போன்ற, அறிவுஜீவிகள் போர்வையில் திரியும் இயக்குநர்கள் செய்தால். அதுவே மசாலா இயக்குநர்கள் செய்தால், உடனே நமது சராசரித் திரைப்பட ரசிகன் பொங்கியெழுந்துவிடுவான் என்பது வேறு விஷயம்.

இதற்குத் திரைப்படங்களில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. Maria Full of Grace என்ற நெஞ்சை உருக்கும் படம் ஒன்று உள்ளது. உலகெங்கும் பல விருதுகளைக் குவித்த படம் இது. ஆனால் நமது கே.வி ஆனந்த், கவலையே படாமல் இதன் முக்கால்வாசிப் படத்தை, ‘அயன்’ என்ற பெயரில் காப்பியடித்து வெளியிட்டார். படமும் நன்றாக ஓடியது. ஆனால் கே.வி ஆனந்த், இந்தக் காப்பியடித்த கதையைப் பற்றி வாயே திறக்கவில்லை. படம் முழுவதும் தனது சொந்தச் சரக்கு மட்டுமே என்றே அத்தனை நேர்காணல்களிலும் கூறிவந்தார் (பின்னே? நன்றி என்று டைட்டில் கார்டில் போட்டால், தனது திருட்டு வெளியே தெரிந்துவிடுமே).

இதைப்போலவே, அமீர், யோகி என்ற மொக்கைப் படத்தை, ட்ஸோட்ஸி என்ற படத்தைப் பார்த்து சுட்டு, அது ஃப்ளாப் ஆகிப்போனதும் நமக்கெல்லாம் தெரியும். அமீருமே, யோகி தனது சொந்தக் கதை என்றே சொல்லிவந்தார்.

சில மாதங்கள் முன், கிம் கி டுக்கின் 3 – Iron என்ற படத்தின் பல காட்சிகளை, தமிழில் திருடி, லாடம் என்ற பெயரில் வெளிவந்ததும் நமக்கு நினைவிருக்கலாம்.

தழுவல் என்றாலும்கூட, மூலப்படத்தின் தழுவல் உரிமை நமது கையில் இருக்க வேண்டும். உரிமை வாங்காமல் தழுவுவது, அப்பட்டமான திருட்டு மட்டுமே. கலைத்திருட்டு. இதனை, ஏற்கெனவே கமலின் திருட்டுகளைப் பற்றிப் போட்ட பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.

இந்த நிலையில், தற்போது நந்தலாலா வெளியாகியுள்ளது. இணையத்தில் நான் படிக்க நேர்ந்த தொண்ணூற்றைந்து சதவிகித விமர்சனங்கள், படம் நன்றாக உள்ளது என்றுதான் சொல்கின்றன. நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. கிகுஜிரோ படத்தை இன்று இரவுதான் பார்க்கப்போகிறேன். அதனைப் பார்த்துவிட்டு, பின் நந்தலாலா பார்ப்பேன். ஆனால், பரவலாக வெளியே உள்ள கருத்துகளைப் பார்க்கையில், நந்தலாலா கிகுஜிரோவைத் தழுவியே எடுக்கப்பட்ட படம் என்று தெரிகிறது. இது சரியா தவறா?

மிஷ்கின், கிகுஜிரோவின் உரிமையை வாங்கி, அதன்பின் நந்தலாலா எடுத்திருந்தால், அது சரி. உரிமைகள் வாங்காமல், கிகுஜிரோவின் உரிமைகளை வைத்திருக்கும் நிறுவனத்துக்கே தெரியாமல், அதன் பல காட்சிகளையும் கதையையும் நந்தலாலாவில் சுட்டிருந்தால், அது கட்டாயம் தவறுதான். அது, திருட்டுக்கு சமம்.

இடையில் இன்னொரு விஷயம். நந்தலாலா ஒருவேளை மூலப்படமான கிகுஜிரோவை விடவும் நன்றாக எடுக்கப்பட்ட ஒரு படமாகக் கூட இருக்கலாம். அதற்கும், நாம் பேசும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு படத்தின் தார்மீக உணர்வுக்கும், அப்படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும் தொடர்புகள் தேவையில்லை. மிஷ்கின், பல வருடங்கள் கஷ்டப்பட்டுத்தான் இப்படத்தை வெளியிட்டுள்ளார் என்றும் நமக்குத் தெரியும்.

இருந்தாலும்……

அப்படிக் கஷ்டப்பட்டு அவர் எடுத்த படம், ஒருவேளை கிகுஜிரோவில் இருந்து தழுவவோ அல்லது காப்பியோ அடிக்கப்பட்டிருக்குமானால், அது தவறு என்றே சொல்லுவேன்.

இதுதான் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடாக இருக்க வேண்டும். திருட்டை எந்தவிதத்திலும் எதிர்க்கும் நிலைப்பாட்டை நாம் எடுப்பதே நல்லதாக இருக்கும். காப்பிரைட், உரிமம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் அதிகமாகப் பரவ வேண்டும். அப்போதுதான், முறையான உரிமை பெறாமல் தழுவுவதோ காப்பியடிப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.

நாளை கிகுஜிரோவைப் பற்றிப் பார்க்கலாம். அதன்பின், நந்தலாலாவையும், நந்தலாலா ஒரு காப்பியா இல்லையா என்றும் அலசலாம்.

  Comments

34 Comments

  1. இதையே தான் நானும் நினைத்தேன்.தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படம் வந்ததை நினைத்து பெருமை கொள்வதா?அல்லது அதுவும் தழுவல் என எண்ணி வேதனைப்படுவதா?என தெரியவில்லை,ஆனால் இசைக்காகவாவது படத்தை நிச்சயம் பார்ப்பேன்,அதன் ஐந்து பாடல்களும்,அபாரமான 25 பிண்ணணி இசைக்கோர்வைகளும் எப்போ பார்க்கப்போற படத்தை எனக்கேட்க வைக்கிறது.திருட்டு என்றால் அது தவறுதான்

    Reply
  2. அய்யாசாமி எங்க தேளுன்னு தேடிப்பார்தேன்.. வந்துட்டீக.. நம்ம நெக்ஸ்ட் மீட் பன்னுவோம்.. எப்படி இருக்கீங்க….

    Reply
  3. நாங்கள் அந்த சப்பான் படம் பார்த்து பல பல வருடம்
    ஆகி விட்டது பத்து வருடம் என நினைகிறேன்
    தமிழில் இது போல படம் வராதா என்றால் வந்து விட்டது
    நந்தலாலா

    நந்தலாலா படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல்தானே இது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    உடனே அதற்கு பதில் சொல்லாத மிஷ்கின், கோபமாக ‘இந்தப் படம் ஒரிஜினல்… இதை காப்பி என்று நிரூபிக்க முடியாது’ என்றெல்லாம் ஆவேசப்பட்டார். இடையில் நீண்ட நாட்கள் படம் வெளியாகாமல் இருந்தது.

    இப்போது படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி போடப்பட்டது. படம் முடிந்த பிறகு வந்த மிஷ்கின், இது தன்னுடைய சொந்தக் கதை என்றும், தனது மூத்த சகோதரர் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பில் எடுத்ததாகவும் கூறினார்.

    படம் குறித்த விமர்சனத்தை பிறகு பார்க்கலாம். ஆனால் இந்தப் படம் குறித்த சில உண்மைகளைப் பார்க்கலாம்.

    நந்தலாலாவில் வரும் சில பாத்திரங்கள் தவிர, கதை, எடுக்கப்பட்ட விதம், காட்சி அமைப்பு முழுக்க முழுக்க ஜப்பானிய படமான கிகுஜிரோவின் தழுவல் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    நந்தலாலா கதைக்குப் போகும் முன், கிகுஜிரோவின் கதை என்னவென்பதைப் பார்த்துவிடுவோம்:

    தகேஷி கிடானோ என்பவர் 1999-ம் ஆண்டு எடுத்த படம்தான் கிகுஜிரோ (Kikujiro). சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட படம். பட விழாக்களில் பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது.

    ஒரு கோடை விடுமுறையில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிப் புறப்படுகிறான். ஒரு புகைப்படமும் முகவரியும் மட்டுமே தாயின் ஆதாரமாகக் கிடைக்கிறது அவனுக்கு. அவனது பயணத்தில் உடன் சேர்ந்து கொள்கிறான் கிகுஜிரோ என்ற திருடன், ஆனால் சிறுவனுக்கு உதவும் நல்ல மனசுக்காரன்.

    அவர்களது நெடுஞ்சாலைப் பயணம் தொடர்கிறது… வழியில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் முதலில் முரண்பட்டு பின்னர் உதவுகிறார்கள். சுமோ சண்டைக்காரர்கள் மாதிரி குண்டாக இருவர் எதிர்ப்படுகிறார்கள். கிகுஜிரோவுக்கும் சிறுவனுக்கும் உதவுகிறார்கள்.

    குறிப்பிட்ட ஊருக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்கொரு பக்கம் தாயின் வீட்டைத் தேடுகிறார்கள். கடைசியில் கிகுஜிரோ அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அவளோ புதிய கணவன், புதிய பெண் குழந்தை என செட்டிலாகிவிட்டிருக்கிறாள். கிகுஜிரோ வந்த விஷயத்தைச் சொன்னதும், தன் மகனைக் கூட்டி வந்து வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே என்று கெஞ்சுகிறாள்.

    அங்கிருந்து கிளம்பும் கிகுஜிரோ, அந்த ஊரில் சிறுவன் தேடும் அம்மா இல்லை என்று பொய் சொல்லிவிட்டுக் கிளம்புகிறான். அப்போது கிகுஜிரோவுக்கு ஒரு ஹோமில் விடப்பட்டுள்ள தனது அம்மா நினைவுக்கு வருகிறாள்.

    கடைசியில் தான் தேடும் அம்மா வரமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்கிறான் சிறுவன். அவனும் கி்குஜிரோவும் அவரவர் வழியில் பிரிகிறார்கள்…

    -இப்போது மிஷ்கின் ‘சுட்டுள்ள’ நந்தலாலாவைப் பாருங்கள்!

    Reply
  4. Nandhalala Appreciated By Magazine –
    World Class Film – The Times Of India

    Ayngaran International is the producers of the
    film Nandhalala which is directed by Mysskin.
    Recently the press had a special show and the
    reports for this film are sounding very positive.
    A Tamil daily Theekadhir has open heartedly
    appreciated the efforts by the producer and
    the director for this film.

    Also Times of India had given a wonderful
    appreciation about the film. These sort of
    positive appreciations is the need of the hour
    for the producers like Ayngaran
    who are willing to produce such projects.

    Long story short :
    30+ mentally unstable adult and 10yr kid share a road
    trip adventure in search of their respective
    mothers. In this adventurous journey they meet
    various characters

    in daily life. Happiness, Sorrow, Search
    and Bonding all comes in.

    trains planes automobiles ,motorcycle diaries influence inspiration
    copy?

    Final thoughts:
    Its pure cinema, you have to experience the
    journey and you will tend to ask questions yourself
    after the movie. Its a big shame that this movie
    was lying in cans for 2 years. Don’t hit
    the theatres with huge expectations, because
    its fairly a simple movie. Also remember to deliver
    a simple movie is the more complex thing.
    If your are avid lover of pure cinema go for
    it and not many people will like it (courtesy:
    eavesdropping @ cinema hall).

    Daring Myshkin is bold enough to convey
    his thoughts through ree(a)l cinema. Auteurship at best.
    Awaiting for ’Yudham Sei’ (his next movie)

    Rating:
    7/10.

    Reply
  5. எல்லாரும் மைக்ரோசாப்ட் பிளாட்போறம் கை கூலி ஆக முடியாது
    உங்கள மாதிரி ஈ அடிச்சான் காபி வாழ்கை வாழ முடியாது
    வானம் பார்த்த பூமியில்
    பசு நேசன் படம் போல
    பசு எருமை மாடு வாங்கி
    தென்னதோப்பு
    அல்லது வயல் வெளி வைத்து பிழைப்பு நடதுங்கையா
    அவன காபி அடிச்சான் எவன் காபி அடிச்சான் என்ற ஈன பொலப்பு
    தேவையா

    Reply
  6. ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது மாதிரி
    ஒரு படத்தில் குறைந்த பட்சம் நூறு படத்தை சுட்டார்கள் எந்திரனில்
    anniyan ,avatar ,irobot,d war ,bicentennial man
    transformers,3 idiots sensational delivery scene
    3 idiots battery power from automobiles
    inspector gadget ,DARYL,spider man,super man,bat man ,iron man

    mother of all copy cat movies is enthiran

    or robot

    இதுக்கு மேல தலை சுற்றுது எங்கிருந்து சுட்டார்கள் என்று கணக்கு சொல்ல

    Reply
  7. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Nandalalas-finally-hitting-the-screens/articleshow/6989000.cms

    http://in.news.yahoo.com/43/20101127/914/ten-nandalala-inspired-but-moving_1.html

    ‘Nandalala’ – Inspired but moving

    Sat, Nov 27 06:03 PM
    Film: Nandalala, Cast: Mysskin, Ashwath Ram, Snigdha and others, Director: Mysskin; Music: Ilaiyaraaja; Rating: ***1/2

    Mysskin’s ‘Nandalala’, which has finally hit the
    screens long after it had been completed, has come
    out as a movie with artistic features without
    losing the popular elements.

    Though the accusations that he has ‘adapted’
    the theme of Japanese film ‘Kikujiro’ are quite
    reasonable, there is no denying the fact that Mysskin
    has proved yet again that he is a good filmmaker.
    He has the talent to transfer the emotions
    on screen across to the audiences –
    which is something unique.

    ‘Nandalala’ is all about two people who are in
    search of their mothers. Destiny puts them together.
    They travel through several places to reach
    their respective destinations.

    The journey by Bhaskar (Mysskin), who is mentally
    disturbed, and Akhilesh (Ashwath Ram), a schoolboy,
    has been told in a gripping manner.

    Their journey turns out to be a revealing
    experience that changes their lives for the better.
    Both walk around without knowing the harshness
    and striking realities of the world around them.

    Battered and bruised by many, they also meet
    some good people who help them a lot. The travel
    reveals the greatness of human life. Many times
    hostile people turn out to be good after
    realising the real position of both of them.

    Their innocence, helplessness and affection
    change others too.

    The scene that shows a physically handicapped
    person moves the audience. Even the climax
    is quite emotional and heartening.

    Cinematographer Mahesh has done a marvellous
    work. The visuals are quite amazing.
    The way he has captured the landscape of
    Tamil Nadu is excellent.

    Ashwath Ram, Mysskin and Snigdha have done
    their parts very well. Their performances
    lift the film to another level.

    Mysskin, who is known for shaping even the
    small characters well, has done it again.
    The characters of the tender coconut seller,
    granny, maid, policeman, lorry driver and
    ice cream seller are pleasant to watch.
    The dialogues are realistic and poignant.

    On the flipside, the fact that Mysskin
    has got inspired from ‘Kikujiro’ does cast a
    shadow on the merits of the filmmaker.

    Though he has deftly adapted the original
    to fit into the Tamil milieu, the repetition
    of the characters like the bald two-member
    biker gang guys, the farmer and the
    lorry driver from Kikujiro seems to be too much to digest.

    Ilaiyaraaja’s music is a huge plus point to the movie.
    His background score adds immense value to it.
    The sequence when Mysskin meets his mother
    and the lullaby that Ilaiyaraaja sings
    in the background would bring tears to
    anybody’s eyes.

    Despite lacking originality, ‘Nandalala’
    works a big way with its stunning visuals,
    music, script and performances.

    Reply
  8. தினமலர் விமர்சனம்

    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய வித்தியாசமும், விறுவிறுப்பும் மிக்க வெற்றிப்படங்களை இயக்கிய மிஷ்கின், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் வித்தியாசமான படம்தான் நந்தலாலா. அவர் இயக்கத்தில் வெளிவந்த மற்ற படங்களைப் போன்று விறுவிறுப்பு இல்லாமல் விருது படங்களைப் போன்று வித்தியாசமான கதையும், காட்சியமைப்புகளும்தான் நந்தலாலா படத்தின் பலமும் பலவீனமும். இப்படம் வெளிவராமல் எத்தனையோ நட்கள் தாமதமானதில் இருந்தே இது எத்தனை நல்ல படம் என புரிந்திருக்கும்.

    பாட்டியின் அரவணைப்பில் வளரும் சிறுவன் ஒருவன் பள்ளி சுற்றுலாவிற்கு போவதாக பாட்டியிடமும், வேலைக்கார அம்மாவிடமும் சொல்லிவிட்டு சுற்றுலாவுக்குப் போகாமல் தன் தாயை தேடி தன் தாய் இருப்பதாக பாட்டி சொல்லி வரும் கிராமத்திற்கு கிளம்புகிறான். அதேநேரம், சின்ன வயதிலேயே தன் தாயால் மனநல காப்பகத்தில் விடப்படும் மனநோயாளியான கதையின் நாயகனும் தன் தாயை ‌தேடி காப்பக காவலாளி ஒருவரை அடித்துப் போட்டு விட்டு அவரது உடையில் தாயை தேடி கிளம்புகிறார். தாயைத் தேடி செல்லும் இந்த இருவரும் எதிர்பாராதவிதமாக ஒன்று சேர, இருவரும் சேர்ந்து தங்களது அம்மாக்களை தேடி கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் நந்தலாலா படத்தின் மொத்த கதையும்!

    இத்துனோன்டு கதையை இயக்குனர் மிஷ்கின் காட்சிப் படுத்தியிருக்கும் விதம்தான் வித்தியாசமோ வித்தியாசம். அதிலும் இவரது கிராமத்து பெயர் தாய்வாசல் என்றும், அந்த சிறுவனின் பெயர் அன்னை வயல் என்றும் சென்டிமெண்ட்டால் பெயர் சூட்டியிருப்பதில் தொடங்கி, பரபரப்பான நெடுஞ்சாலைகளில் நடந்தே வரும் இருவரும் பண்ணும் சேட்டைகள் வரை சகலத்திற்கும் கோட்டை விடாமல் மிக அழகாக ஒரு படத்தை முயற்சித்திருக்கிறார் டைரக்டர் எனும் வகையில் மிஷ்கினுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லத் தோன்றுகிறது.

    கதையின் நாயகராக மிஷ்கின் கலக்கலாக நடித்திருக்கிறார். அதுவும் முட்ட முட்ட முழிக்கும் தனது விழிகளாலேயே தனது மன வியாதியை வெளிப்படுத்தும் இடங்கள் சூப்பர்ப். அதேநேரம் சிறுவனின் தாய் வேறு ஒருவருடன் வாழ்வதை சிறுவனிதம் மறைக்கும் அளவிற்கு விவரம் தெரிந்த மிஷ்கினுக்கு, பேண்ட்டை போட்டுக் கொள்ளத் தெரியாதது, சின்னதம்பி பிரபு மாதிரி நம்ப முடியாமல் இருக்கிறது. அதேமாதிரி அவர் கையில் பிடித்துக் கொண்‌டே திரியும் பேண்ட்டை பாதி படத்திற்கு மேல் ஒரு நாடா மூலம் கட்டி விடும் பள்ளி மாணவி, சைக்கிளில் போய் டிராக்டரில் திரும்பி வரும் காட்சிகள், மிலிட்டரி கெட்-அப்பில் பைக்கில் இரண்டு குண்டு ஆசாமிகள் வரும் காட்சிகளும், டிரக் – லாரி உள்ளிட்டவைகளில் மிஷ்கினும், சிறுவனும் தப்பிக்கும் இடங்களும் வேறு ஏதோ அயல்நாட்டு மொழிப்படங்களில் பார்த்த ஞாபகம். விலைமாதுவாக வரும் ஸ்னிக்தா,னும் அவரை பழங்கால காரில் துரத்தும் கிழவரும், லாரியில் ஹாரனை பிடுங்கி வந்து அதனால் மிஷ்கின் அடிபடும் இடங்களும், இளநீர் காரரிடம் இளநீர் திருடி, பின் அவரது மயக்கம் தாகத்திற்கே இளநீர் தரும் இடங்களும் மிஷ்கினின் இயக்கத்திற்கு சான்று.

    மிஷ்கின் மாதிரியே விலைமாதராக வரும் ஸ்னிக்தா, பள்ளி மாணவி, இளநீர் வியாபாரி, மனநோயாளியாக வரும் ரோஹினி, பள்ளி சிறுவன் என சகலரும் பளிச் என்று நடித்திருக்கிறார்கள்.

    விருதை மட்டுமே குறிவைத்து படம் வேகமே இல்லாமல் பயணிக்கும் விதம் வெறுப்பை ஏற்படுத்தினாலும், ரசனை மிகுந்தவர்களுக்கு லாலா கடை இனிப்பு இந்த நந்தலாலா என்றால் மிகையல்ல..!

    Reply
  9. அடுத்தவர் எழுதி அச்சில் வந்ததை கமா, ஃபுல் ஸ்டாப் மாறாமல் தன் மனைவி பெயரில் பிரசுரித்து இன்பம் கண்ட ஜெயமோகன் இன்று ‘நந்தலாலா’ படத்தை சுய இன்பம் அனுபவித்த திருப்தியுடன் பாராட்டி எழுதியிருக்கிறார்.

    பிரசுரிக்கச் சொல்லி தன் நண்பன் கொடுத்த படைப்பை தன் பெயரில் குறுநாவல் போட்டிக்கு அனுப்பி பரிசும் பெற்ற சாரு நிவேதிதா ‘நந்தலாலா’ படத்தை சிலாகித்து ஆட்டுப் புழுக்கையாக பதிவு எழுதிக் கொண்டே செல்கிறார்.

    ஜப்பானிய இயக்குநர் தாகேஷி கிட்டானோ இயக்கி வெளி வந்த ‘கிகுஜிரோ’ படத்தை ப்ரேமுக்கு ப்ரேம் அப்பட்டமாக காபி அடித்து மிஷ்கின் இயக்கியிருக்கும் படம்தான் ‘நந்தலாலா’.

    படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் தாகேஷி கிட்டானோவுக்கு நன்றி கார்டு போடவில்லை என படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

    நான் இன்னும் ‘நந்தலாலா’ பார்க்கவில்லை. அது ஒரு விஷயமும் இல்லை. ஏனெனில், ‘இது என் வாழ்வில் நான் அனுபவித்த கதை. என் அண்ணன் இப்படித்தான் இருந்தார்…’ என மயிர்க் கூச்செறிய மிஷ்கின் தந்த பேட்டியை வாசித்திருக்கிறேன்.

    ஒரு திருடனை காப்பாற்ற மற்ற திருடர்கள் ஓடோடி வருகிறார்கள்.

    இந்தத் திருடர்கள்தான் இலக்கிய ஜாம்பவான்கள். இந்தத் திருடர்கள்தான் தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டு செல்பவர்கள்.

    ஆனால், பாருங்கள் இந்தத் திருடர்கள்தான் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த ‘இந்திய ஜனநாயக’ ஊழல்கள் குறித்து வாய் கிழிய விமர்சிக்கிறார்கள்.

    வெண்ணெய் இலக்கியம். விளக்கெண்ணெய் தமிழ் சினிமா. காலை நக்கும் அரசியல்…

    நல்லா காட்டறாங்கயா ஃபிலீமு 😉

    Reply
  10. பயணங்கள் வெவ்வேறு வடிவங்கள். ஏதேனும் நிமித்தங்கள் நிச்சயம் எல்லாப் பயணங்களுக்கும் இருக்கும். அப்படியான இருவருடைய பயணத்தின் ஆரம்பப்புள்ளிக்கும் முற்றுக்கும் இடையில் அன்பின் ஈரத்தைக் கொண்டு வரையப்பட்டிருக்கும் கோடு நந்தலாலா.

    கோடு வரைய ஜப்பானிய மை பயன்படுத்தி இருந்தாலும் ஈரம் துளிர்க்கிறது இந்தியக் கண்களிலும்.

    நன்றி இளையராஜா.

    நன்றி மிஷ்கின். உங்கள் கைகளில் திணிக்கக் கூழாங்கற்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

    Reply
  11. என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

    இதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்..! உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது..!

    இத்தனை சிறப்புக்களையும் தாராளமாக நாம் வாரி வழங்கலாம் இந்தப் படத்திற்கு..!

    ஆனாலும் நெருஞ்சி முள்ளாய் இதயத்தைத் துளைக்கிறது ஒரு குறை. படத்தின் கதை தழுவல்தான். நிச்சயமாக கிகுஜிரோ என்ற ஜப்பானியத் திரைப்படத்தின் கதையைத் ஆரத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.. ஆனால் எடுத்தவிதத்தில் உலகத் தரமான இயக்குநர்களின் வரிசையில் தைரியமாக நிற்கிறார் மிஷ்கின்

    அன்னவாசல் என்னும் ஊரில் இருந்து கொண்டு மாதந்தோறும் லெட்டரையும், பணத்தையும் அனுப்பி வைக்கும் தனது அம்மாவைத் தேடிப் புறப்படுகிறான் சிறுவன் ஹரி. சிறிதளவு மனநலம் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு நோயாளி. எல்லாரையும் பார்க்கவும், நேசிக்கவும், சோறு ஊட்டவும் அம்மாவும், அப்பாவும் வரும்போது, தன்னைப் பார்க்க யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்.. ஒரு நாள் மருத்துவமனையைவிட்டு வெளியேறுகிறான்.

    அதே நாள்தான் அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடி அன்னவாசல் நோக்கிப் புறப்படுகிறான். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். முதலில் முரண்படுகிறார்கள். பின்பு இணைகிறார்கள். இருவருக்குமே அவரவர் தாயைச் சந்திக்கும் ஆவல்.. சிறுவனுக்கோ தனது தாயைச் சந்தித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதனாலேயே யாரிடமும் முத்தம் பெறாமல் தவிர்த்து வருகிறான்

    பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள்.. என்று பலவற்றையும் சந்திக்கிறார்கள். அந்தச் சூழலுடன் கதையை நகர்த்தி, இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவை பார்த்தானா? என்பதையும் தயவு செய்து தியேட்டருக்குச் சென்று பாருங்கள்..!

    முதல் ஷொட்டு இயக்குதலுக்கு..! அஞ்சாதே படத்தைப் போல் முதல் ஷாட்டிலேயே துவங்கிவிட்டது மிஷ்கினின் ராஜ்ஜியம். இப்படியெல்லாம் காட்சியமைப்புகள் வைக்க முடியுமா என்று பல துணை இயக்குநர்களையும், இயக்குநர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

    இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..

    எந்தக் காட்சியிலும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமென்பதற்காக கேரக்டர்களை எல்லை மீறி பேச விடவில்லை. தானும் பேசவில்லை. இயக்குதல் ஒரு பக்கம் இருந்தாலும் தானும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் மிஷ்கின்.

    .

    Reply
  12. தனது கருவிழி பிதுங்கி வந்துவிடுவதைப் போல முகத்தைக் குரூரமாக்கிக் காட்டுவதிலும், மென்ட்டலா என்று கேட்டவுடன் அவர் காட்டும் வேகமும், அதே வேகத்தைப் பையனிடம் காட்ட முடியாமல் தவியாய் தவிக்கின்ற தவிப்பும், தனது அம்மாவின் கோலத்தைப் பார்த்து கதறி அழுவதுமாக இயக்குநர் என்பவனே ஒரு நடிகன்தான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகியிருக்கிறார் மிஷ்கின்.

    வெறும் காட்சியமைப்பிலேயே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.. ஹனிமூன் தம்பதிகளை ஓவர்டேக் செய்யும் அலம்பல் பார்ட்டிகளை இடுப்பில் நிற்காத தனது பேண்ட்டை ஒரு கையால் பிடித்தபடியே சமாளிக்கும்விதம் செம கலகலப்பு..!

    போலீஸிடம் இருந்து தப்பிக்க அந்தச் சிறுவன் பேசும் ஆங்கிலச் சொற்பொழிவும், அதற்கு அந்த இன்ஸ்பெக்டரி்ன் முக பாவனையும் சூப்பர்..! இதேபோல் இளநீர் திருடி மாட்டிக் கொண்டு தப்பித்து ஓடுவதும், கடைசியில் இளநீர்க்காரருக்கே இளநீரை வெட்டிக் கொடுப்பதுமாக காட்சிகளை மிஷ்கின் நகர்த்தியிருக்கும்விதம் அருமை..!

    பையனின் அம்மா காலில் விழுந்து அழுத பின்பு அவள் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறிய காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்ந்தது. இத்தனைக்கும் அதில் வசனமே இல்லை. இளையராஜா மட்டும்தான்..! அப்படியிருந்தும் ஆக்கத்தினால் தூண்டப்பட்டுவிட்டோம்..!

    ஜாதிக் கலவரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வழி கேட்டு கடைசியில் அவன் உடல் ஊனமுற்றவன் என்பது தெரிந்தாலும், அவன் காசு கேட்கின்ற கொடுமையை வைத்திருப்பதில் இருந்தே இங்கே காசில்லாமல் எதுவும் நகராது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

    கீழே விழுந்த பின்பே தான் உடல் ஊனமுற்றவன் என்பதை உணர்ந்து அவர் படும் மனக்கஷ்டத்தை அடுத்தடுத்த ஷாட்டுகளில் காட்டியிருப்பது மிக இயல்பு. அதேபோல் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்பு அவனுக்குச் சிகிச்சையளித்த பெண் டாக்டர் நொண்டிக் கொண்டே செல்வதைக் காட்டுகின்றபோதும் மனதை என்னவோ செய்தது..

    ஸ்னிக்தாவைக் காப்பாற்றும் பொருட்டு நடக்கும் சண்டையில் அடி வாங்கி கடைசியில் நட்பு குண்டர்களைப் பார்த்தவுடன் “இப்ப வந்து அடிங்கடா பார்க்கலாம்..” என்பதைப் போல குண்டரின் தோளில் கை வைத்துக் கொண்டு குதிக்கின்ற குதி இருக்கிறதே.. இந்தக் காட்சியில் தனது உடலின் பின்புறத்தை மட்டுமே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.. எந்தக் காட்சிக்கு குளோஸப் அவசியமோ அப்போது மட்டும்தான்..

    ஆட்டோக்காரராக பத்திரிகைக்கார அண்ணன் அருள்எழிலன் நடித்திருக்கிறார். ஆச்சரியம். இவர் எப்படி களத்தில் இறங்கினார் என்று தெரியவில்லை. அண்ணன் தனது பேவரிட் வார்த்தையான “என்னம்மா..” என்பதையும் டயலாக்கில் சேர்த்தே பேசியிருக்கிறார். இப்படியாவது பொழச்சுக்கட்டும்..

    Reply
  13. பையனிடம் மிஷ்கினைக் குறிப்பிட்டு “மென்ட்டலா..?” என்று கேட்டவுடன் மிஷ்கின் ஆக்ரோஷத்துடன் அடிதடியில் இறங்கி அவரை அடித்துவிட்டு பின்பு அதற்காகவும் வருத்தப்பட்டு கதறுகின்ற கதறல்.. அவரது இயலாமையைச் சுட்டிக் காட்டும்விதமாக செய்திருக்கிறார்.. ஆனால் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிகக் கவனமாக இப்படித்தான் கையாண்டிருக்கிறார் மிஷ்கின்..!

    லாரியின் ஹாரனைத் திருடியதால் லாரிக்காரன் மிஷ்கினை போட்டு புரட்டியெடுக்கும்போது மனம் பிறழ்ந்தவன் மிஷ்கின் என்பதை உணர்ந்த நொடியில் லாரி்க்காரன் ஸ்தம்பித்துப் போகும் காட்சி.! ஸ்னிக்தாவின் கதையைக் கேட்டு நால்வரும் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் இருக்கும் காட்சி.. சிறுவனின் அம்மா எங்கே என்று கேட்டவுடன் “வரேன்டி சிறுக்கி முண்டை..” என்று திட்டியபடியே தனது அம்மாவைத் தேடி வெக்கு, வெக்கென்று நடக்கும் காட்சி என்று இந்தப் படத்தில் இன்னும் சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு கேமிரா மூலமும் நம் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

    தனது அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழும் காட்சியும் அந்தப் பாடல் காட்சியுடன் தாயை மனநலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்பும்போது காட்டுகின்ற வெறி.. போகாதே என்பதைப் போல் அப்போது மட்டும் ஆக்ஷனை காட்டும் அம்மா ரோகிணி.. என்று எங்குமே ஓவர் ஆக்ட் இல்லை.. அத்தனையும் ஒருவித சுயகட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டு போயிருக்கிறார்..!

    இறுதிக் காட்சியில் பையனிடம் இதற்கு மேலும் பொய் சொல்ல முடியாமல் அவன் அம்மாவைப் பற்றிச் சொல்ல அவன் பதிலுக்கு “மென்ட்டல்” என்று சொல்லிவிட.. மிஷ்கின் கோபத்தில் துடிக்கும்போது பையன் சொல்கின்ற பதில் அட்டகாசம்..

    “எனக்கும் இப்படித்தான இருந்திருக்கும்.. இதோ இவங்களைச் சொல்லலாம்ல.. இவங்கதான் அம்மான்னு சொல்லிருக்கலாம்ல.. நான் முத்தமாவது கொடுத்திருப்பேன்ல..” என்று சொல்லும்போது அந்தப் பையனை வாரியணைக்க வேண்டும்போல இருந்தது..!

    தாயின் ஒரு முத்தத்திற்காக இத்தனை அல்லல்பட்டு, துன்பத்தில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு வேறென்ன செய்ய முடியும்..

    படம் இறுதிவரையிலும் மெல்லிய சோகத்துடன்தான் இழையாடுகிறது.. இதற்குப் பக்க பலம் இசைஞானி இளையராஜா.. இங்கே ஒரு இசை ராஜ்ஜியத்தையே செய்து காட்டியிருக்கிறார்.

    மிஷ்கினின் அறிமுகக் காட்சியில் துவங்கும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் இறுதிவரையில் அவரும் ஒரு கேரக்டர் என்பதைப் போல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இனி பின்னணி இசையின் உதாரணத்துக்கு இந்தப் படத்தை நிச்சயமாக, தைரியமாகக் குறிப்பிட்டுப் பேசலாம். ராஜா ராஜாதான்..! அடுத்த வருட தேசிய விருது ராஜாவுக்கு நிச்சயம்..!

    டிவியை உடைப்பது.. அருள் எழிலனை அடிப்பது.. அவருடன் சண்டையிடுவது.. ஸ்னிக்தாவுக்காக அந்தக் கிழவனுடன் சண்டையிடும் காட்சி.. அம்மாவைத் தேடி வீடு, வீடாகக் கதவைத் தட்டி கேட்கின்ற காட்சி, மிஷ்கின் தனது அம்மாவைத் தேடிப் போகும் காட்சி.. மிஷ்கின் ஆக்ரோஷப்படும் காட்சிகள்.. என்று அத்தனையிலும் இசைஞானி தனியாகத் தெரிகிறார்.

    பின்னணி இசை என்றாலே ஏதாவது கேரக்டர்கள் தூங்கும்போதுகூட எதையாவது போட்டு நம் காதை நிரப்பி வைத்திருக்கும் இயக்குநர்கள் மத்தியில் இந்தப் படத்தில் தேவையான இடங்களில் மட்டுமே பி்ன்னணி இசை ஒலிக்கிறது. மற்ற இடங்களில் கேமிரா தான் செல்லும் பாதையிலேயே கதையைக் கொண்டு செல்ல.. இசை தேவையில்லாமல்தான் தெரிகிறது..

    இந்தப் பயணத்துக்கான லொகேஷன்களைத் தேடிப் பிடித்து அவற்றை அழகுற காட்டியிருக்கும் பாங்கில் கேமிராமேனுக்கும் ஒரு சபாஷ்..! கலை இயக்குநருக்கும் ஒரு சபாஷ்..

    பரபரப்பான கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட

    Reply
  14. பவானி, சேலம் போன்ற பகுதிகளின் சாலைகளிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அழகான இடங்களை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.. மிக எளிமையான முறையில் சிறுவனின் வீடு இருப்பதையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பார்க்கும்போதும், கண் தெரியாத பாட்டியை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று கொண்டு வந்து விடும் சிறுவனின் கடமையையும் முதலிலேயே காட்டிவிடுவதால் இதென்ன வாழ்க்கை என்று நமக்கே வெறுப்பாகிறது.. இதைத்தான் தனது பலமாக ஆக்கிக் கொண்டு பையனை அழைத்துக் கொண்டு நம்மையும் டூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    வசனங்களும் மிகக் குறைவு.. நான் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பையனின் அம்மாவைக் கண்டுபிடிக்கும் இடத்தில் வசனமில்லாதது பெரும் ஆச்சரியம்.. எதுக்கு டயலாக்கு என்பதோடு இந்தக் காட்சியிலும் அம்மாவின் முதுகுப்புறத்தை மட்டுமே காட்டிவிட்டு நிறுத்தியது மிஷ்கினின் ஸ்டைல்..!

    நிச்சயம் இது போன்ற ஷாட்டுகளையும், காட்சியமைப்புகளையும் பல வெளிநாட்டுத் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.. கிகுஜிரோவில்கூட இப்படியான காட்சிகள் இல்லை.. அதைவிடவும் மேம்பட்ட நிலையில்தான் இது எடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்..!

    மிஷ்கின் இறுதியில் சிறுவனின் தாயைப் பற்றிச் சொல்லும்போது மட்டும்தான் இயல்பான மனநிலையில் பேசுகிறார். அப்படீன்னா அவர் இதுவரையில் பேசியது, நடந்து கொண்டதெல்லாம் என்கிற நமது கேள்விக்கு நம்மையே விடை தேடச் சொல்லியிருக்கிறார். ஏனெனில் அறிமுகக் காட்சியிலேயே “யாரோ டிவியை உடைச்சுட்டாங்க..” என்று மிகச் சாதாரணமாக வார்டனிடம் சொல்லிவிட்டுப் போகும்போதே மிஷ்கினை கவனித்தேன். ஏதோ ஒன்றை அவர் சொல்லாமல் சொல்கிறார் என்று..! இறுதியில் பலூன் விற்கும்போதுதான் தனியாகத் தெரிகிறார்..!

    மனநல மருத்துவமனை கேரக்டர்கள், உடல் ஊனமுற்றவர், ஸ்னிக்தா, குண்டர்கள், தோப்புக்குச் சொந்தக்காரர், மாட்டு வண்டி ஓட்டுபவர், போலீஸ் இன்ஸ்பெக்டர்.. அம்மாவைத் தேடிப் போகும்போது முதலில் கதவைத் திறந்து முகத்தில் அடித்தாற்போல் இல்லை என்று சொல்லி கதவை மூடும் பெண், சிறுவனின் அம்மா, மிஷ்கினின் அண்ணன், டூவிலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும் அந்த குள்ளமான தம்பதிகள்.. பீர் பாட்டில் இளைஞர்கள்.. ஆங்கிலத்தில் சங்கடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள்.. என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே நடித்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான விஷயம்….

    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களில் ரசிகர்களைக் கவருகின்றவிதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான காதல் சப்ஜெக்ட்டையும் தொட்டு அதை வைத்துத்தான் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இது முன் வரிசை டிக்கெட்டுகளையும் கவர்ந்தது..! அதனால்தான் அந்த இரண்டு படங்களும் பி அண்ட் சி சென்டரில்கூட ஓடின.

    Reply
  15. ஆனால் இந்தப் படத்தில் எந்தவித சமரசத்தையும் வைத்துக் கொள்ளாமல் பாடல் காட்சிகளைக்கூட கதையை நகர்த்துமிடத்தில் மட்டுமே வைத்திருந்து தனக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக, மிஷ்கின் சமீபத்தில் சொன்னதுபோல அவருடைய கேரியரில் இதுதான் முதல் படம் என்றே சொல்லலாம்..!

    இப்போதெல்லாம் படத்தின் ரிலீஸுக்கு முன்பே படத்தின் பிரிவியூ போடுவதைத் தவிர்த்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் மிஷ்கின் இந்தப் படத்தை டிவிடி வடிவத்திலேயே தமிழ்நாட்டின் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் பலருக்கும் போட்டுக் காட்டி கேன்வாஸ் செய்துவிட்டார். சாருவும் தன்னால் முடிந்த அளவுக்கு தனது நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்கிறார்..!

    பத்திரிகையாளர்கள், மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்காக இந்த வாரம் திங்கள்கிழமையில் இருந்தே தினம்தோறும் ஷோ நடத்தி காண்பித்துவிட்டார். அத்தனை பேருமே “கண் கலங்கிய நிலையில்தான் வெளியில் வந்தோம்..” என்றார்கள். நானும் அப்படித்தான்..!

    தமிழ்ச் சினிமா தற்போது தாங்க முடியாத வருத்தத்திலும், குழப்பத்திலும்தான் இருக்கிறது. லோ பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் சூழலே இல்லாமல் இருக்கும் நிலையில் இது போன்ற தரமானத் திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது…! நிச்சயம் நாம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்..! பதிவர்கள் அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது..!

    எப்போதும்போல் “தமிழ்ச் சினிமா ஒண்ணுமேயில்லை.. குப்பை. மொக்கை.. இவங்களுக்கு படம் எடுக்கவே தெரியலை.. ஈரான் படத்தைப் பாருங்க.. ஸ்வீடன் படத்தைப் பாருங்க.. செக் படத்தைப் பாருங்க..” என்று சொல்லி புலம்புவதைவிட அவைகள் போன்று தரமான நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தையும் உலகளாவிய அளவுக்குக் கொண்டு போக வேண்டியது நமது கடமை..!

    மிஷ்கினின் தனிப்பட்ட நடத்தையையும், பேச்சையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் அவரது இயக்குதல் திறமை, கதை சொல்லுதலில் இருக்கின்ற திறமையை மட்டும் பார்த்துச் சொல்வதானால் உறுதியாகச் சொல்கிறேன்.. மணிரத்னத்தையும் மிஞ்சியவர் மிஷ்கின்..!

    அதற்கு இந்த ஒரு படமே சாட்சி..!

    டிஸ்கி : நமது சக வலையுலகத் தோழி லிவிங் ஸ்மைல் வித்யா இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..!

    இதையும் படியுங்கள் :

    புதிய இயக்குநர்கள் பாடம் கற்க வேண்டிய படம் – ‘அஞ்சாதே!’

    Reply
  16. ஒரு படம் இவ்வளவு அதிர்வுகளை ஏற்படுத்தமுடியுமா என்று கேட்டால், இந்த படம் ஏற்படுத்தும். இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்காவிடில், அப்படிபட்ட தேசியவிருது, நமக்கு தேவையில்லை. இந்த படம் காபி என்று சொன்னால், “இருந்து விட்டு போகட்டுமே” என்றுதான் சொல்லுவேன். எனக்கு இதுதான் உலகசினிமா..என் பகுதி வாழ்வியலை சொன்ன சினிமா. நாம் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்தும் ஏதோ ஒன்றின் நகல்தானே. அதற்காக நாம் அதை உபயோகிக்காமலா இருக்கிறோம். மிஷ்கின் அந்த படத்தை டப்பிங்க் செய்து “பாருங்கடா என் படத்தை” என்று சொல்லியிருந்தால் கோபப்படலாம். ஆனால் கதாபத்திரங்களை நம்மோடு பயணிக்கவிட்டிருக்கிறாரே..இரண்டரை மணிநேரம் அவர்களோடு ஒன்றிப்போகிறோமே..இதற்கு மேல் என்ன வேண்டும்..காபியாவது…புடலங்காயாவது

    படத்தின் உயிர்நாடியே இளையராஜாதான். பல விமர்சனங்களில் சொல்லியது போல், தியேட்டருக்கு சென்று கண்ணை மூடி உக்கார்ந்து கொள்ளலாம். பிண்ணனி இசையே பல சேதிகள் சொல்லும். எங்கு எங்கு மௌனம், எங்கு எங்கு துள்ளலிசை, எங்கு எங்கு மெலடி என ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். சும்மாவா சொல்கிறார்கள் இசைஞானியென்று

    இந்த படத்தில் மிஸ்கின்ன் உடைத்த தமிழ்சினிமாவின் கிளிஷேக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிபட்ட கேமிரா கோணங்கள் இந்திய திரையுலகத்திற்கே புதுசு எனலாம். அடிக்கடி கால்கள் நடப்பதை கொண்டே காட்சிகளை விவரிக்கும் ஸ்டைலாகட்டும், கேமிராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு பிம்பங்களை நடமாடவிடும் ஸ்டைலாகட்டும், கதாபாத்திரங்களோடு கூடவே ஓடும் கேமிரா கோணங்களாகட்டும், மகேஷ் முத்துசாமி என்பவர் தமிழ்திரை உலகின் தவிர்க்கமுடியாத ஒளிப்பதிவாளராக போகிறார் என்பதற்கு சான்று

    முடிவாக சொன்னால், நந்தலாலா – இதுபோன்று இனிமேல் இந்தியாவில் படம் எடுக்கமுடியாது

    Reply
  17. அய்யய்யோ…… ‘access’ வருது…. எல்லோரும் ஓடுங்க …. 🙂

    ஏங்க access… ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி இதையெல்லாம் எழுதலாமுல்ல… ஏங்க இப்புடி அடுத்த ப்ளாக்ல இருந்து எடுத்ததெல்லாம் இங்க பேஸ்ட் பண்ணி அழிச்சாட்டியம் பண்றீங்க?? உங்க கமெண்டைப் பார்த்தாலே சில நண்பர்களுக்கு விரலெல்லாம் நடுங்குதாம்… 🙂 ப்ளீஸ் தலைவா… புரிஞ்சிக்கங்க.. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கமெண்ட் போடுங்க.. ரைட்டா?

    Reply
  18. @above- ha ha ha

    Reply
  19. கீதப்பிரியன் சொன்னதுதான்! எதை நினைப்பது?

    Reply
  20. thank u
    short and sweet ?

    கதை சொல்ல ஐந்து நிமிடம்
    போதும் ஒரு பாப் ஆல்பம்
    எவ்வள்ளவு பெரிய தத்துவம் இருந்தாலும்
    குறுகிய களத்தில் சொல்ல முடியும்

    பொது உடைமை சமத்துவம் அதற்க்கு மேல
    UTOPIAN
    பொது உடைமை சமத்துவம் அதற்க்கு மேல
    எனக்கு தனியாக ப்ளாக் அவசியம் இல்லை
    பொது உடைமை சமத்துவம் அதற்க்கு மேல
    எனக்கு தனியாக ப்ளாக் அவசியம் இல்லை
    அதனால் நான் மற்றவர்கள் சொல்வதை ஏன் கருத்தை ஒத்து
    போவதால் அதையும் பதிவு செய்கிறேன்
    பின்னூட்டம் வாயிலாக
    மிகவும் மன்னிக்கவும்
    உங்களுக்கு தவறாக தெரிவது எனக்கு
    தவறாக தெரியல
    எல்லோரும் ஒரே மாதிரி இருபதில்லை

    Reply
  21. சரியா சொல்லியிருக்கீங்க கருந்தேள்… பார்த்திட்டு விமர்சனம் எழுதுங்க…பாக்கறேன்..

    Reply
  22. கமலை இழிவு படுத்தி ப்ளாக் போடுறீங்க எங்களை மாதிரி
    கோடான கோடி ரசிகர் மனங்களை புண் படுத்தறீங்க
    மிஸ்கின் படம் கமல் பன்னல அந்த வருத்தம்
    நீங்க இப்போ மிஸ்கின் மசாலா படம் எடுத்து
    கல்லா காட்டியது போல காபி அடிச்சான் காபி அடிச்சான்
    என்று சொல்லவது எந்த விதத்தில் நியாயம்
    நந்தலாலா ரிலீஸ் பண்ண கூட முடியலையே பல வருடங்களாக

    உங்கள் நண்பர்களுக்கு மட்டும் ப்ளாக் போட்டால்
    நான் வர மாட்டேன்

    close to heart films anbe sivam and nandalala
    films with heart

    athaiyum neenga trains planes automobiles mattrum japanese film
    yendru sonnaal

    கமலை இழிவு படுத்தி ப்ளாக் போடுறீங்க எங்களை மாதிரி
    கோடான கோடி ரசிகர் மனங்களை புண் படுத்தறீங்க
    மிஸ்கின் படம் கமல் பன்னல அந்த வருத்தம்
    நீங்க இப்போ மிஸ்கின் மசாலா படம் எடுத்து
    கல்லா காட்டியது போல காபி அடிச்சான் காபி அடிச்சான்
    என்று சொல்லவது எந்த விதத்தில் நியாயம்
    நந்தலாலா ரிலீஸ் பண்ண கூட முடியலையே பல வருடங்களாக
    உங்கள் நண்பர்களுக்கு மட்டும் ப்ளாக் போட்டால்
    நான் வர மாட்டேன்

    உங்களுக்கு இதையமே இல்லை என்று பொருள்
    பல உலக சினிமாக்கள் பல வருடம் பார்த்தும் என்ன பயன்
    பாரதி இன்று இருந்தால்
    பாராட்டி இருப்பான்
    வேற்று மொழி இலக்கியங்கள் தமிழ் மொழியில் வருவது போல
    வேற்று மொழியில் வரும் நல்ல படைப்புகள் தமிழ் மொழியில்
    சினிமாவிலும் வர வேண்டும் என சொல்லி இருப்பான்
    பாரதி

    அது காப்பி அடித்தால் என்ன காபி அடிக்க விட்டால் என்ன
    வாங்கினால் என்ன வாங்கவிட்டால் என்ன
    கிரெடிட் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன

    Reply
  23. ப்ளாக் போடுவது ஒன்னும் பெரிய விசையம் கிடையாது நான் பண்ணி விட்டேன்

    http://kamal-access.blogspot.com/

    மிக்க நன்றி உங்க அறிவுரைக்கு நன்றி
    இப்படி எல்ல அறிவுஜீவிகளும் தனியாக ப்ளாக் ஆரம்பித்து

    i remember ram gopal verma saying to karan johar
    for not attending his film preview saying he is very busy
    in his film

    all are busy in their projects
    so why we need others projects

    if all are having own blogs
    why i need to visit others blog

    Reply
  24. இந்த படம் காபிதான் அது உண்மை.ஆனால் இப்படத்தின் பின்னணி நிச்சயம் இளையராஜாவின் புகழை மேலும் பல படிகள் உயர்த்தியிருக்கிறது என்பதுதான் உண்மை.ஆனால் நீங்கள் அதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது வருத்தமளிக்கிறது.ஒருவேளை ஆஸ்கார் வாங்கியவர்களின் இரைச்சல்களை(எதிர்வாதம் பேசுபவர்கள் எந்திரன் பார்க்கவும்) பற்றி மட்டும்தான் எழுதுவீர்களா?

    Reply
  25. Almost all ilakiya vathigal accepted the making of film as awesome. But I was expecting from you kind of bloggers that If it was copy/inspired stuff, then we must conciously combat it. Bcoz with such case we cannot whole heartedly accept this as world class tamil film. Karundhel – Truly Unbiased

    Reply
  26. நண்பரே,

    நந்தலாலா தாய்ப்பாசத்தை மிகைப்படுத்தி ரசிகனை கண்ணீர் சிந்த வைக்கிறது. சில வேளைகளில் இசை காதில் + வயிற்றில் எட்டி உதைக்கிறது. சில வேளைகளில் அணைக்கிறது. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது, நான் நல்ல இசை ரசிகனும் அல்ல ஆனால் இந்த திரைப்படஇசை குறித்த பாராட்டுக்கள் மிகையானவை. மிகை நடிப்புதான், மிகை உணர்ச்சிதான் நல்ல சினிமா எனில் நந்தலாலாவும் நல்ல சினிமாதான்.

    மழை பெய்யும்போது பாலியல் தொழிலாளி பேசும் வசனங்கள் அபத்த தோரணம். ஆனால் மனதை தொடும் சில சுருக்கமான வார்த்தைகள் படத்தின் அசலான அம்சம்.

    நந்தலாலா நல்ல முயற்சி. ஆனால் அது ஒரு மரத்திலிருந்து வெட்டி எடுத்து நட்ட கிளையில் உருவான முயற்சி. நட்ட மண்ணின் வாசனையையும் காற்றையும் அம்முயற்சி நேர்தியாக கொண்டு வர முயன்றிருந்தாலும் தாய் மரம் நினைவில் நின்று கொண்டேயிருக்கும்.

    இக்கதையை ஆதாரமாக கொண்டது எனும் வரிகள் கலைஞனை கொலை செய்து விடுமா என்ன.

    Reply
  27. @ viki – நான் இன்னும் நந்தலாலா பார்க்கவே இல்லை. பார்த்துவிட்டு, உங்கள் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன். நன்றி.

    @ காதலரே – உங்கள் கருத்தை முழுமையாகப் புரிந்துகொண்டேன்.. வார இறுதியில் படம் பார்ப்பேன். பார்த்துவிட்டு, அதைப்பற்றிய பதிவும் இடுவேன். நன்றி

    Reply
  28. rose is a rose is a rose is a rose… a copy is a copy is a copy is a copy is a copy.

    Reply
  29. not many of us have seen tat japanese film. if its copied, v dont complain; but, if someone copies famous films lik avatar, inception,people will complain. hypocrites. dont encourage plagiarism

    Reply
  30. the cinema we make is a recycle bin
    thats what mahesh bhatt says

    very sad to read rajinikanth films are remade
    again already they r remakes of hindi hits
    and then again remakes billa again billa 2?
    plagirism is way of life whether its official or unofficial
    with copyrights or without copyrights
    with credit or without credit

    we r just recycling old films
    may be moral respect it is not good
    but to cater to more and more multiplex era
    they need more films good or bad
    copy or original

    only solution they should make documentary films
    like beautiful people about animals
    as most them r extinct now
    read more
    http://en.wikipedia.org/wiki/Animals_Are_Beautiful_People
    Animals Are Beautiful People (aka Beautiful People)
    is a 1974 nature documentary about the wildlife in
    Southern Africa. It was filmed in the Namib Desert,
    the Kalahari Desert and the Okavango River and
    Okavango Delta. It was produced for cinema and
    has a length of slightly more than 90 minutes.

    i think editor mohan(jayam ravi and director raja dad)
    made some cuts
    and made it watchable in tamil dubbed version
    as it was flop in english
    and tamil it made money it seems.

    Reply
  31. if they make this beautiful film in imax version
    and show it in imax theaters then it will be too good

    unfortunately where i live chennai r kovai r bangalore no
    imax need to visit prasad imax hyderabad or adlabs mumbai

    Chennai based Sathyam Cinemas is ready to enter other
    cities in the country, Its next target is on Coimbatore.
    As sathyam cinemas already has two famous multiplexes
    including the new one in Express avenue,
    now the company is looking to enter Coimbatore
    in a big way. The Grand Mall which is proposed in Coimbatore
    will have the 10 Screens Sathyam cinemas soon.
    The CEO of sathyam cinemas said that they
    cant find any other cheapest land to have their
    own multiplex building . So the people of Coimbatore
    has to wait until the proposed Grand Mall in Avanashi road
    comesup Wish holds Sathyam cinemas and a Mega IMAX cinema .

    Reply
  32. அகர முதல எழுத்தெல்லாம் காபி அடிச்சான் முதற்றே
    உலகு

    சினிமா உலகில் கூட காபி அடிச்சான் முதற்றே
    உலகு

    நீங்க நான் என்ன செய்ய முடியும்
    சும்மா சொல்ல தான் முடியும் வேறு என்ன
    செய்ய முடியும்

    better to go for imax version so no copy cats
    will be there only companies will fight

    Reply
  33. மிக நாள் கழித்து ப்ளாக் பக்கம் வர வாய்ப்பு கிடைத்தது. நான் இரண்டையும் இன்னும் பார்க்ககவில்லை… பார்த்துட்டு வந்து ஆஜர் ஆகி கொள்கிறேன் கருந்தேள்.

    ஆனாலும், இந்த ஆக்சஸ் தொல்ல தாங்க முடியல… யாராவது கொசு மருந்து இருந்தா அடிச்சு துரத்துங்கப்பா….. 🙂

    Reply
  34. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பெரும்பாலான தமிழ்ப் படங்கள் பிற மொழிப்படங்களிருந்து காப்பி அடிக்கப்பட்டவையே. சில படங்கள் தழுவல் ரகம் சில படங்கள் அப்பட்ட காப்பி. wait until dark என்ற படத்தை காப்பி அடித்து தமிழில் ராஜ் பரத் என்பவர் ஒரு படம் எடுத்தார். இதெல்லாம் சகஜமப்பா. no tension please

    Reply

Join the conversation