ஏழாம் அறிவும் எனது ஆங்கில blogம்!

by Karundhel Rajesh November 1, 2011   Copies

நேற்று மாலை, ஏழாம் அறிவைப் பார்க்க நேரிட்டது, ஒரு துன்பியல் சம்பவம் என்றே கருதுகிறேன். புதுமைப்பித்தன் சொன்னதாக ஒரு சொலவடை உண்டு. ‘உலகின் முதல் குரங்கே, தமிழ்க்குரங்குதான்’ என்பதுதான் அது. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தமும், ஏழாம் அறிவைப் பார்க்கும்போது விளங்கியது.

ஏழாம் அறிவைப் பற்றிய எனது விமர்சனம், ஒரு மாறுதலுக்காக, ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.

ஆங்கில மொழியில்தான் நான் முதன்முதலில் எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த ஆண்டு – 2006. அப்போதிலிருந்து 2010 வரை, ஆங்கிலத்தில் எழுதினேன். அதன்பின்னரே தமிழில் எழுத ஆரம்பித்தேன். காரணம், தமிழ் சரளமாக வந்தாலும், ஆங்கிலத்தில் எழுதினால், பல இடங்களைச் சென்றடையமுடியும் என்பதே காரணம்.

திடீரென்று, இப்பொது, எனது பழைய ஆங்கில வலைப்பூவைப் புதுப்பித்து, அதில் எழுதினால் என்ன என்று தோன்றியது. ஆகவே, பழைய தளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து, அதில், இந்த ஏழாம் அறிவின் ஆங்கில விமர்சனத்தோடு புதிய இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

இனிமேல் இந்த இரண்டு வலைப்பூக்களிலும் எழுதுவதாக எண்ணம்.

நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தபோது, www.truthdive.com என்ற இந்தத் தளத்தில், எனது உலகப்பட விமர்சனங்கள் தொடர்ந்து இடம்பெற்றுவந்தன (அவற்றை இங்கே க்ளிக்கிப் படிக்கலாம்). தமிழில் எழுத ஆரம்பித்தபின், அது நின்றுவிட்டது. ஒருவேளை அந்தத் தள நிர்வாகிகள் விரும்பினால், மறுபடியும் எனது புதிய இன்னிங்ஸை ஆங்கிலத்தில் அங்கேயும் ஆரம்பிக்கத் தயார்.

அதேபோல், IMDB தளத்தில், நான் ஒரு ரெகுலர் விமர்சகர். அதில் நான் எழுதிய விமர்சனங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம். இவையெல்லாமே, மூன்று வருடங்களுக்கு முந்தைய கதை. இனிமேல், அதையும் தொடரலாம் என்று இருக்கிறேன். சில நாட்கள் முன்பு வெகுவாக அடிபட்டதே Indiblogger. இந்தத் தளத்தில், மூன்று வருடங்களுக்கு முன்பே, பல புதிய ஆங்கிலப் பதிவர்களுக்கு blogging பற்றி tips அளிக்கும் வேலையையும் செய்துவந்தேன்.

என்னைப்பொறுத்தவரை, மொழி என்பது after-all ஒரு தகவல் தொடர்பு சாதனம். அப்படி இருக்கையில், மொழிக்காக உணர்ச்சிவசப்படுவது, சாவது, கொல்வது ஆகியனவற்றை நான் வெறுக்கிறேன். இந்த விஷயத்தில் எனது ஆசான், பெரியார். மொழியைப் பற்றி அவர் சொல்லியுள்ள கருத்துகளை நான் முழுக்கமுழுக்க ஆதரிக்கிறேன். ஆகவே,மொழியைத் தூக்கிப்பிடித்து மக்களை உணர்ச்சிவசப்படவைக்கும் ஏழாம் அறிவைப் போன்ற படம் ஒன்றின் விமர்சனம், எனது ஆங்கில தளத்தில் வருவதே பொருத்தம் என்று தோன்றியது.

இதோ எனது புதுப்பிக்கப்பட்ட ஆங்கிலத் தளம் —> http://www.scorpsay.com/.

கருந்தேளில், பர்ஸனலான பதிவுகள் பெரும்பாலும் நான் எழுதியதில்லை. ஆனால், எனது ஆங்கிலத்தளத்தில் பல பர்ஸனல் பதிவுகளை எழுதியிருக்கிறேன். இனிமேலும் எழுதுவேன். எனது ரசனைகள், விருப்பங்கள், அரசியல் நோக்கு ஆகிய விஷயங்களைப் பற்றி இனியும் அங்கே எழுதுவதாக உத்தேசம்.

பிடித்திருந்தால் அதனையும் படியுங்கள் நண்பர்களே. நன்றி.

  Comments

18 Comments

  1. முதன் முதலா உங்கள படிக்க ஆரம்பிச்சதே உங்க ஆங்கில ப்ளாக் தான் மீண்டும் ஆரம்பித்து இருப்பத்ற்க்கு வாழ்த்துக்கள்.. உங்க ஐ.எம்.டி.பி விமர்சனங்களை பார்க்கும் போது இந்த மூணு வருஷத்தில் சினிமா மீதான பார்வை நிறைய மாறி மாறிட்டோன்னு தோணுது…Do You Feel Like That:)

    Reply
  2. இந்த படத்தை இங்கே மீண்டும் அமிர்க்கான் நடிப்பதாக நேற்று செய்தி சேனல்களில் சொன்னார்கள் ….. என்ன கொடுமைடா இது, இனி முருகதாஸ் இந்தியனாக பொறந்ததில் கர்வமா இருக்குன்னு பேட்டி குடுப்பாருன்னு நினைக்குறேன்

    Reply
  3. // Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html //

    i like this :))))))))))))))))

    ஆண்டவா ………….

    // சில நாட்கள் முன்பு வெகுவாக அடிபட்டதே Indiblogger. இந்தத் தளத்தில், மூன்று வருடங்களுக்கு முன்பே, பல புதிய ஆங்கிலப் பதிவர்களுக்கு blogging பற்றி tips அளிக்கும் வேலையையும் செய்துவந்தேன். //

    பாத்துககோங்க மக்களே..

    Reply
  4. //திடீரென்று, இப்பொது, எனது பழைய ஆங்கில வலைப்பூவைப் புதுப்பித்து, அதில் எழுதினால் என்ன என்று தோன்றியது. ஆகவே, பழைய தளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து, அதில், இந்த ஏழாம் அறிவின் ஆங்கில விமர்சனத்தோடு புதிய இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.//

    வாழ்த்துகள் நண்பா.

    Reply
  5. நண்பா,
    உங்கள் ஆங்கில வலைப்பூவை நன்கு அறிவேன்,நீங்கள் ஆங்கில வலைப்பூவிலும் தொடர்ந்து விமரிசனங்கள் எழுதவேண்டும்,ஏழாம் அறிவு விளம்பரம் ஒன்றில் இந்த தீபாவளி போதி தர்மன் தீபாவளி என இருந்தது,நியாயமாக அது பேதிதர்மன் தீபாவளி,வெல்டன் நண்பா

    Reply
  6. dear karundhel
    congrats and all the best for 2nd innings in english blog well done will follow all (including imdb posts)
    anbudan
    sundar g (rasanai)

    Reply
  7. @ αηαη∂ – எஸ். மூணு, நாலு வருஷம் முன்னால இருந்த என்னோட ரசனைக்கும் இப்போதைய ரசனைக்கும் நெறைய வேறுபாடுகள் இருக்கு. அது எனக்கே நல்லாப் புரிஞ்சிருக்கு :-). அப்பல்லாம் காப்பிகளைப் பற்றி சரியான புரிதல் இல்லை. ஆனா இன்னிக்கி அதைப்பத்தி தெளிவா இருக்கேன் 🙂

    @ Denim – இந்தப் படம் இந்தில வரட்டும். அப்ப, போதிதர்மனை எப்புடி portray பண்ணுறாங்கன்னு பார்ப்போம் 😉 . அந்தக் கேஸ்ல, போதி is an indian ன்னு மட்டும்தான் சொல்லுவாங்க. அப்ப இந்தத் தமிழ் உணர்வுல்லாம் மலை ஏறிடும் 🙂

    @ செ. சரவணக்குமார் & கீதப்ரியன் & சுந்தர் ஜி – மிக்க நன்றி நண்பர்களே :-). .

    @ கொழந்த – எல்லாமே உண்மைதான் 🙂

    Reply
  8. கருந்தேள், உங்கள் கருத்தை நான் அப்படியே ஏற்கிறேன். மொழி, இனம், நாடு என்று ஏதாவதொரு உணர்வைக் கிளறிவிட்டு தங்கள் வியாபாரத்தை நடாத்தும் முயற்சியே இது போன்ற திரைப்படங்கள். போதிதர்மனைப் பற்றிப் படம் எடுக்க வேண்டும் என்றால் அதை ஒழுங்காக எடுத்திருக்கலாம். Fantasy எனில் அது fantasy ஆகவிருக்கவேண்டும். Sci-fic எனில் அது sci-fic ஆகவிருக்கவேண்டும். இந்தப் படம் எதுவுமே இல்லை. இரண்டு வருட உழைப்பு, ஆராய்ச்சி என்று சொல்பவர்கள், அந்த உழைப்பின், ஆராய்ச்சியின் விளைவு ஆரோக்கியமானதா, சிறந்ததா என்றெல்லவா சிந்திக்க வேண்டும்? இரண்டு வருடம் முயன்று ஒரு சாக்கடையை உருவாக்கினால், அதைப் பாராட்ட வேண்டுமா? மேலும் நீங்கள் கூறியபடி இதன் இந்தி வடிவத்தில் இந்திய உணர்வைத் தூண்டுவார் பாருங்கள். ஏழாம் அறிவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒரு அபத்தம். அதில் வேறு சீனப் பாடல் என்று build-ups. இதைவிடக் கொடுமை படத்தை பார்த்துவிட்டு நம் நண்பர்கள் facebook இல் போடும் தமிழ் உணர்ச்சி பொங்கும் status கள். இதை விட, வேலாயுதம் என்று வேறு ஒரு அபத்தம் வந்திருக்கிறது.

    இலங்கையிலிருந்து அரவிந்!

    Reply
  9. @ அரவிந் – மிகச்சரியாகச் சொன்னீர்கள். FB ல் நம்மாட்கள் போடும் மொக்கை ‘தமிழன்’ கமெண்ட்டுகள், சத்தியமாகப் பார்க்கச் சகிக்கவில்லை. அண்ணா ஹசாரே அலை அடித்ததே… அப்போது குஞ்சு குளுவானெல்லாம் தேசபக்த வேடம் போட்டனர். இப்போது, தமிழன் வேடம் போடுகின்றனர். அவ்வளவே. இதனால் தம்பிடிக்குக் கூடப் பிரயோஜனம் இல்லை. வேலாயுதமாவது பரவாயில்லை என்று தோன்றுகிறது. அது வழக்கமான விஜய் மசாலா. ஆனால், இந்த ஏழாம் அறிவு இருக்கிறதே.. தமிழனை சொரிந்துகொடுத்து பணம் சம்பாதிக்கும் முயற்சி 🙂

    Reply
  10. Your English is very Stale.It’s like a Tamil medium student writing an english essay.

    Reply
  11. @ vino – I saw the news yesterday and laughed out loud 🙂

    @ Sudharsan – When hv I mentioned tat my english is world class ? :-). . Let it be in whatever way it can be. I never give a damn :-). . The only thing which matters is tat, atleast ppl r able to understand wat I hv written.

    Reply
  12. @சுதர்சன்: ஆங்கிலம் நல்ல தெரிஞ்சவங்க எல்லாருக்கும், படித்ததை, பார்த்ததை, கேட்டதை.. உணர்ந்ததி ரசனையோட நல்லா ப்ளாக் எழுத வரும்ன்னு சொல்ல முடியுமா? stale nu கமெண்ட் போட்டது டூமச்!!

    Reply
  13. @ Rafeek – அதெல்லாம் ஒரு வயித்தெரிச்சல்ல போடுறது. சீரியஸா எடுத்துக்காதீங்க… சுதர்ஸன் தமிழ் வெறியர் போல. அதான் அப்புடி 🙂

    Reply
  14. பாஸ் நீங்க ஏன் காப்பி அடிக்கும் இசைஅமைப்பளர் & இசையை பற்றி பின்னுட்டம் எழுதக்குடாது???

    Reply
  15. //அதெல்லாம் ஒரு வயித்தெரிச்சல்ல போடுறது. சீரியஸா எடுத்துக்காதீங்க… சுதர்ஸன் தமிழ் வெறியர் போல. அதான் அப்புடி ://.
    This is too good to be called a joke my Dude.

    Reply

Join the conversation