Caramel (2007) – Arabic

by Karundhel Rajesh October 13, 2010   world cinema

கேரமெல் என்பது…. நாமெல்லோரும் நினைக்கும் அதே கேரமெல் தான். சர்க்கரைப் பாகு. இந்தப் பாகு, சமைப்பதற்கு மட்டுமன்றி, வேறு பல உபயோகங்களையும் கொண்டது. அதில் ஒன்று தான் – இப்படத்தில் வருவது.

பதமான சர்க்கரைப் பாகு, அழகு நிலையங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. நோக்கம்? உடலில் உள்ள முடிகளை நீக்குவது. ‘வேக்ஸிங்’ என்பதைப் பற்றி நாம் படித்திருப்போம். பல ஆங்கிலப் படங்களிலும் பார்த்திருக்கிறோம். ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரம், துண்டைக் கட்டிக்கொண்டு படுத்திருக்க, அதன் உடலில் ஒரு பட்டையை ஒட்டி, பின்னர் சரக்கென்று ஒரு பெண் இழுப்பாள். அந்தக் கதாபாத்திரம், ஓவென்று அலறுவதைக் கண்டு, உடன் வந்திருக்கும் நண்பர்கள் படை விழுந்து விழுந்து சிரிக்கும். நாமும். இந்த வேக்ஸிங் முறை, மிகுந்த வலியை ஏற்படுத்துவதால், அதற்குப் பதில் உபயோகப்படுத்தப்படும் முறையே ’ஷுகரிங்’ எனப்படுவது. பட்டைகளுக்குப் பதில், இந்த சர்க்கரைப் பாகை உடலில் தடவி, அதனை சரக்கென்று இழுத்தால், முடிகள் கையோடு (பாகோடு) வந்துவிடும்.

இந்த ஷுகரிங், வேக்ஸிங் முறையை விட வலியைக் கம்மியாக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. இதனை வைத்தே இப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே, இரானிய, அரேபியப் படங்களைப் பார்க்கும் நண்பர்கள், ஒன்றைக் கவனித்திருக்கலாம். பிற மொழிப்படங்களை விட, இப்படங்களில் மனித உறவுகளின் வலி, கொஞ்சம் அதிகமாகவே காண்பிக்கப்படும். அதுவும், பெண் இயக்குநர்களால் இயக்கப்படும் படங்களில், இது கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், அதிகமான தாக்கத்தைக் கொடுத்தாலும், அது சுவாரஸ்யமாகவும் இருக்கும். மென்சோகத்தைப் பிழி பிழியென்று பிழிந்து, நம்மை சோதனைக்குள்ளாக்க மாட்டார்கள்.

நாடீன் லபாகி என்ற ஒரு பெண் இயக்குநரால், 2007ல் வெளியிடப்பட்ட படமே ‘கேரமெல்’. இது, இவரது முதல் படம். இயக்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் இவர்.

படம், பெய்ரூட்டில் தொடங்குகிறது (பெய்ரூட்டில் ஜானி – பழைய முத்து காமிக்ஸ் நினைவிருக்கிறதா?). ஒரு அழகு நிலையம். அதில் மூன்று பெண்கள் பணிபுரிகின்றனர். நிஸ்ரின், லயால் மற்றும் ரீமா. இவர்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்தக் கேரமெல்.

நிஸ்ரினுக்கு, திருமணம் முடிவாகிவிட்டது. அவளது குடும்பத்தினர், பழமைவாதிகள். மதரீதியான அனைத்து சட்டதிட்டங்களையும் பின்பற்றுபவர்கள். ஆனால் நிஸ்ரின், அவர்களுக்கு நேர் எதிர். வாழ்க்கையை ரசிக்கும் பெண். அவள், சில பழைய உறவுகளால், கன்னித்தன்மை இழந்துவிடுகிறாள். ஆனால், அவளது குடும்பத்தினர், முதலிரவில், படுக்கையில் சிந்தும் ரத்தத்தை மறுநாள் வந்து பார்க்கும் அளவு கம்பளத்தில் வடிகட்டிய பழமைவாதிகள். இது அவளுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது.

ரீமாவோ, ஒரு Tomboy. ஆண்கள் போலவே உடையணிந்துகொண்டு, முடியை வெட்டிக்கொண்டு சுற்றுபவள். அவளுக்கு ஆண்களைப் பிடிப்பதில்லை. அவர்களது அழகு நிலையத்துக்குச் சாமான்களைக் கொண்டுவரும் இளைஞன், ரீமாவால் கவரப்படுகிறான். ஆனால், ரீமாவுக்கு அவன் மேல் ஆசை இல்லை.

லயாலின் பிரச்னை, வேறுவிதமானது. ஒரு திருமணமான ஆளின் காதலியாக அவள் இருக்கிறாள். அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும், விரைந்து சென்று அவனைப் பார்க்கிறாள். பெரும்பாலும், அவர்களது இந்தச் சந்திப்பு, ஆள் அரவமற்ற இடங்களில், காருக்குள்ளேயே இருவரும் உறவு கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அவளது மனதில் இது குறித்துக் கவலைகள் இருப்பினும், அவனுடன் சுற்றுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது.

இந்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி வருவது, ஜமால் என்ற பெண். அவளுக்கு, நடிகையாகவேண்டும் என்பது கனவு. பல வருடங்களாக, நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று, அவற்றில் கலந்துகொள்வதே அவளுக்கு வேலை. சில நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருக்கிறாள். அவளுக்கு, வயது ஏறிக்கொண்டே செல்கிறது. இதை, அவளும் உணர்ந்திருக்கிறாள்.

ரோஸ் என்று ஒரு பாட்டி. ஒரு தையல் கடை வைத்திருக்கிறாள். இவளுக்கு, ஜாஸ்மின் என்று ஒரு தமக்கை. மனநலம் சரியில்லாதவள். இவளைக் கவனித்துக் கொள்வதிலேயே ரோஸின் முழு நேரமும் செல்கிறது.

இந்த ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் நடைபெறும் சில சம்பவங்களை, இப்படத்தின் வாயிலாக நாம் பார்க்கிறோம்.

தனது கட்டுப்பெட்டித்தனமான குடும்பத்தினரை நம்ப வைக்க, நிஸ்ரின் ஒரு மருத்துவரை நாடிச் செல்கிறாள். அவளது யோனியில் சில தையல்களைப் போடுவதன் மூலம், அவளை மறுபடி கன்னியாக மாற்றுவது அவரது வேலை. இதனால், முதல் இரவில் சிட்டுக்குருவியைக் கொன்று, அதன் ரத்தத்தைப் படுக்கையில் தெளிக்காமல், இயல்பாகவே ரத்தம் வெளியேறிவிடும் என்பது அவளது கணக்கு.

லயால், தான் காதலிக்கும் திருமணமான நபரின் பிறந்த நாளை அவனுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்கிறாள். இதனால், நகரின் அனைத்து நல்ல ஹோட்டல்களுக்கும் சென்று ஒரு அறையை போலிப்பெயரில் எடுக்க முயல்கிறாள். நமது நாட்டைப் போலவே, அங்கும், அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து, அடையாள அட்டை இல்லாமல் அறை எடுக்க முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். தனது அடையாள அட்டையைக் கொடுக்க இயலாது, நகரின் மோசமான ஒரு விடுதியில், ஒரு அறையை எடுக்கிறாள் லயால். அந்த அறையைக் காலையிலிருந்து சுத்தம் செய்து, விரிப்புகளை மாற்றி, பூக்களை வைத்து, முடிவில், தானே செய்த ஒரு கேக்கையும் அங்கே வைக்கிறாள். அவனுக்காகக் காத்திருக்கத் துவங்குகிறாள்.

நாள் முழுக்கக் காத்திருந்தும், அவன் வருவதில்லை. மாலையில், ஒரு குறுஞ்செய்தி மட்டுமே அவனிடமிருந்து வருகிறது. மனைவி உடனிருப்பதால், வர இயலவில்லை என்று. மனமுடைந்து போகும் லயால், தனது தோழிகளான நிஸ்ரின், ரீமா மற்றும் ஜமாலை அங்கு அழைக்கிறாள். அவளைத் தேற்றி, ஆறுதல் சொல்கின்றனர் தோழிகள் மூவரும். இதனால், மெல்ல மனம் மாறும் லயால், அவனை மறக்க முடிவு செய்கிறாள்.

ரீமா, அவர்கள் கடைக்கு வரும் ஒரு பெண்ணால் கவரப்படுகிறாள். அந்தப் பெண்ணுக்குமே, ரீமாவைப் பிடித்திருக்கிறது. இருவருக்கும் இடையில் அன்பு துளிர்க்கிறது. ஒருவரை ஒருவர் பிடித்திருப்பதால், அந்தப் பெண் அங்கு அடிக்கடி வரத்தொடங்குகிறாள்.

ஜமால் செல்லும் ஒரு நேர்முகத் தேர்வில், அவளது ஸ்கர்ட்டில் ரத்தம் ஒட்டியிருப்பதை, இன்னொரு பெண் அவளுக்குச் சுட்டிக் காட்டுகிறாள். அனைவருக்கும் மத்தியில் தர்மசங்கடப்படும் ஜமால், அதனை ஜீரணித்துக்கொண்டு, உள்ளே செல்கிறாள்.

ரோஸ் பாட்டியின் கடைக்கு, புதிய சூட் தைக்க வரும் ஒரு தாத்தா, ரோஸினால் கவரப்படுகிறார். அடிக்கடி அவளது கடைக்கு வரத்துவங்கும் தாத்தா, ஒரு நாள், ஒரு குறிப்பிட்ட தேதியில், தன்னை ஒரு தேநீர் விடுதியில் சந்திக்க முடியுமா என்று ஒரு குறிப்பை எழுதி, அவளது கடையில் வைக்கிறார். ரோஸ், இதுவரை வரவே வராத அழகு நிலையத்துக்குச் சென்று, இந்தச் சந்திப்புக்காக, அவளது முடியை வெட்டி, செவ்வண்ணத்தைச் சேர்த்துக்கொள்கிறாள். இந்தச் சந்திப்புக்காக ஒப்பனையும் செய்துகொள்ள ஆரம்பிக்கிறாள்.

அந்தத் தெருவில் இருக்கும் ஒரு போலீஸ்காரருக்கு, மெல்ல மெல்ல லயாலைப் பிடிக்க ஆரம்பிக்கிறது. ஒரு இக்கட்டில் இருந்து நிஸ்ரினை விடுவிக்கும் அவர், எப்பொழுது வேண்டுமானாலும் தங்களது கடைக்கு வந்து இலவசச் சேவையைப் பெறலாம் என்று நிஸ்ரின் அவரிடம் வேண்டுகோள் வைக்கிறாள். தனது இடத்தில் அமர்ந்துகொண்டே, லயாலைத் திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிக்கிறார் போலீஸ்காரர். ஒருநாள், அந்த அழகு நிலையத்துக்கும் சென்றுவிடுகிறார்.

நிஸ்ரினின் திருமணம் வருகிறது. அதில் அனைவரும் ஆடிப்பாடிக் கொண்டாடுகின்றனர். அப்போது, கழிப்பறைக்குச் செல்லும் ஜமால், தனது கைப்பையிலிருந்து, சிகப்பு மையை எடுத்து, தனது ஸ்கர்ட்டில் வேண்டுமென்றே சிந்திக்கொள்கிறாள். அவளுக்கு வயது மிகவும் ஆகிவிட்டதனால், இளமையாக இருப்பதை அனைவரிடமும் நிரூபிக்க வேண்டி, அவள் அடிக்கடி இப்படிச் செய்துகொள்வது அப்போதுதான் நமக்குத் தெரிகிறது. அவள்மேல் பரிதாபம் துளிர்க்கிறது. அதேபோல், திருமணத்தில், போலீஸ்காரர், லயாலை நெருங்கி அவளுடன் ஆடுகிறார். மெல்ல மெல்ல லயாலும் சந்தோஷமாக அவருடன் ஆடுகிறாள்.

திரைப்படத்தின் கடைசிக் காட்சி, உண்மையிலேயே நமது மனதை உருகவைக்கும் ஒரு காட்சி.

அருமையான முறையில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், நமது மனதில் உள்ள பழைய நினைவுகளை மெல்ல மெல்ல அசைத்துப் பார்க்கும் தன்மையுடையது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் அடையும் ஏமாற்றங்கள், நமது வாழ்க்கையில், நாமும் அடைந்தவைதான். இந்த உணர்வு, படத்துடன் நம்மை மேலும் நெருக்கமாக்குகிறது.

இப்படம், பல விருதுகளைக் குவித்திருக்கிறது. இதுவரை வந்த அரேபியப்படங்களில், அதிகமான வசூலை உலகெங்கும் குவித்த படம் இதுதானாம்.

குறைகள் என்று பார்த்தால், முதல் இருபது நிமிடங்கள், வெகு சாதாரணமாகத்தான் செல்கிறது. அதன் பின்னரே, படத்தின் திரைக்கதை நம்மைக் கவர ஆரம்பிக்கிறது.

படத்தின் பல விஷயங்களை நான் இங்கு சொல்லவில்லை. படத்தைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

கேரமெல் படத்தைத் தவறாமல் பாருங்கள். போகிறபோக்கில், சட்டென்று படிக்க நேர்கிற ஒரு அருமையான கவிதையைப் போல், இது நமது மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

Caramel படத்தின் டிரெய்லர் இங்கே.

  Comments

43 Comments

  1. பதிவ..அப்பறம் படிக்கிறேன்…சாரு அவர்கள் சொல்லியிருக்குற ராஜேஷ்…நீங்கதான..கேக்காட்டி தலையே வெடிச்சிரும் போலிருக்கு

    Reply
  2. //சாரு அவர்கள் சொல்லியிருக்குற ராஜேஷ்…நீங்கதான..கேக்காட்டி தலையே வெடிச்சிரும் போலிருக்கு//

    ஹாஹ்ஹா… அது அடியேன் தான் 🙂 ..

    Reply
  3. ணா..கமெண்ட் விண்டோ தனியா pop-up ஆகுற மாதிரி வைக்கக்கூடாதா…என்ன மாதிரி ஸ்லோ-நெட் வெச்சிருக்கவர்களுக்கு மறுபடியும் முழு ப்ளாக்கும் இத்தனை widgetயோட லோட் ஆக லேட் ஆகுது…கொஞ்சம் பாருங்க..

    Reply
  4. //ஹாஹ்ஹா… அது அடியேன் தான்//
    நீங்க மொழிபெயர்த்த விஷயங்கள வாசிக்க முடியுமா..என்ன மாதிரி மொழிபெயர்ப்புனு தெரிஞ்சுக்கலாமா

    Reply
  5. கமெண்ட் விண்டோ பத்தி நீங்க சொல்லிருக்குறது நியாயம்.. அதுக்கு ஏற்பாடு பண்றேன்.. ஷ்யூர்..

    அதேபோல், நம்ம மொழிபெயர்ப்பெல்லாம் ஜுஜுபி மேட்டரு மாமே.. படா காமெடியா இருக்கும்.. 🙂 .. சாருவின் கட்டுரைகளை ஆங்கிலத்துல மொழிபெயர்க்கும் வேலை தான் அது.. 🙂 புதுசா ஒன்யுமில்ல..

    Reply
  6. நண்பா
    படம் தரவிறக்க ஆரம்பித்துவிட்டேன்,நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள்,ஒளிப்பதிவும் அருமையாயிருக்கும் போல.அவசியம் பார்த்துவிடுகிறேன்.

    Reply
  7. //சாருவின் கட்டுரைகளை ஆங்கிலத்துல மொழிபெயர்க்கும் வேலை தான் அது//
    தெகல்கா மாதிரியான தளங்களுக்கா..படிக்கத்தான் கேக்குறேன்.அவரு தமிழே கண்ண கட்டுதே…அதையும் மொழிபெய்ர்த்தீங்கனா..அப்ப உங்களுக்கு தேம்ஸ் நதிக்கரையில தான் வீடுன்னு சொல்லுங்க…

    அடடா….ஒரு மொழி ஆளுமையோட இத்தனை நாள் பலகுனது தெரியாம போச்சே

    Reply
  8. //இப்போ தெரிகிறது நண்பா,அழகிய பெண்ணின் பின்புறம்:))//

    அது ! கரெக்டா புடிச்சீங்க போங்க 🙂

    Reply
  9. //இந்த ஷுகரிங், வேக்ஸிங் முறையை விட வலியைக் கம்மியாக்கும் என்பது பொதுவான நம்பிக்கை// நா ஒன்றும் சொல்லுவதற்கில்லை…

    Reply
  10. இங்கு எதிசலாத்தில் ஒரு புதிய ஆஃபர்=300 திர்காம்/மாதம்.ஒரு படம் 15தே நிமிடத்தில் தரவிறக்கமுடிகிறது,8எம்பிபிஎஸ் கனென்க்‌ஷன்,தரவிறக்கம்=1எம்பிபிஎஸ்,கலக்கறானுங்க

    Reply
  11. //இந்த ஷுகரிங், வேக்ஸிங் முறையை விட வலியைக் கம்மியாக்கும் என்பது பொதுவான நம்பிக்கை// நா ஒன்றும் சொல்லுவதற்கில்லை…

    ஏன் எதாவதுதான் சொல்றது?,காசா பணமா?:))

    Reply
  12. // இதுக்கு எதாவது அவார்டு குடுப்பாய்ங்களா//

    உங்களுக்கு கலைஞர் கருணாநிதி விருது, இல்ல அண்ணா விருது அதுவும் இல்லையா கலைமாமணி ஓகேவா…

    Reply
  13. //ஏன் எதாவதுதான் சொல்றது?,காசா பணமா//

    எனக்கு இன்னம் மீசை,தாடியே மொளைக்கள..
    அதுனால ஒண்ணும் புரியல

    Reply
  14. //கொழந்த said…

    // இதுக்கு எதாவது அவார்டு குடுப்பாய்ங்களா//

    உங்களுக்கு கலைஞர் கருணாநிதி விருது, இல்ல அண்ணா விருது அதுவும் இல்லையா கலைமாமாமணி ஓகேவா…//

    நண்பா கருந்தேள்
    கொழந்த பயங்கரமா டபுள் மீனிங் பேசுறார்,ஆனா கொழ்ந்தயாமா
    இதோ பாருங்க கலைமாமாமணி விருதாம்,அடங்கொன்னியா

    Reply
  15. //நண்பா கருந்தேள்
    கொழந்த பயங்கரமா டபுள் மீனிங் பேசுறார்//

    நீங்க கலை மாமணி வாசிக்க கூடாது..சேர்த்து வாசிக்கணும்..what can i do

    Reply
  16. @ கீதப்ரியன் – ஆஹா… டவுன்லோட்கு இவ்வளவு ஆஃபரா? சூப்பர் ! இங்கயும் இருக்கே நெட்டு… தூ 🙁

    @ கொழந்த – பாப் அப் ட்ரை பண்ணேன்.. ஆனா கொஞ்சம் லே அவுட்ல கை வெக்கணும் போலயே.. சரியா ஃபார்மாட்டிங் வரல.. கோட்ல கை வச்சி மாத்திர்ரேன்.. ரைட்டா?

    எனக்கு விருது எதா இருந்தாலும் சரி.. நமீதாவைக் குடுக்கச்சொல்லுங்க 😉

    @ இராமசாமி கண்ணன் – ஏன் இந்த டெம்ப்ளேட் பின்னூட்டம் 🙂

    Reply
  17. ஆ… இந்த மாமாமணி மேட்டரை நான் கவனிக்கலையே… கொளந்தயைப் பத்தி ரேப் டிராகன்ல எளுதச் சொல்லி கேட்ருக்கேன்..அதுல கொடூரமான ஒரு ரேப்பிஸ்ட் கதாபாத்திரம் காலியா கீது 🙂

    Reply
  18. ரேப்பிஸ்ட் = rappist எமிநேம்,Tupac மாதிரி தான..நான் ரெடி..எனக்கு ஆங்கில rap கஷ்டம்..முயற்சிப்போம்

    Reply
  19. //ரேப்பிஸ்ட் = rappist எமிநேம்,Tupac மாதிரி தான..நான் ரெடி..எனக்கு ஆங்கில rap கஷ்டம்..முயற்சிப்போம்//

    ஹீ ஹீ… இதுக்குப் பேருதான் மொழி வெளையாட்டுங்களாண்ணே? 🙂

    Reply
  20. //இல்லையா கலைமாமணி ஓகேவா//

    ஒழுங்கா பாருங்க சாமிகளா…எனக்கு டபுள் மீனிங்கு அர்த்தம் கூட தெரியாது..

    Reply
  21. அது எப்படி நீங்களும் கார்த்தியும் இப்படி ஒரே அழகியல் படங்களா பார்த்து தள்ளறீங்க…

    Reply
  22. //அது எப்படி நீங்களும் கார்த்தியும் இப்படி ஒரே அழகியல் படங்களா பார்த்து தள்ளறீங்க…//

    அதெல்லாம் தொளில் ரகசியம்.. கேட்கப்படாது 🙂

    Reply
  23. அண்ணன் கருந்தேள் அவர்களே..
    புதுசா ஒரு டுப்பாக்கி நீட்டிக்கிட்டுயிருக்கே…எதுக்கு..இத போன பதிவுலயிருந்து கேட்டுகிட்டு இருக்கேன் (இதுக்கு ஒரே மீனிங் தான்)

    Reply
  24. பீருட்(Beirut) இயக்குனர் பெண்மணி லெபனான் காரரோ?
    டவுன்லோட் பண்ணா சப்டைட்டிலோட இருக்குமா?

    Reply
  25. யாருமே இல்லயா…நானும் கிளம்புறேன்

    Reply
  26. //புதுசா ஒரு டுப்பாக்கி நீட்டிக்கிட்டுயிருக்கே…எதுக்கு..இத போன பதிவுலயிருந்து கேட்டுகிட்டு இருக்கேன் (இதுக்கு ஒரே மீனிங் தான்)//

    சிவசிவா… அபசாரம் 🙂 டுப்பாக்கி நீட்டிக்கினு இருக்குறது, ஒரு ஜாலிக்கி தான் 🙂 அப்பப்ப மாத்துவேன் 🙂 .. யாராவது இந்தக் கொளந்தைய பத்தி பதிவு எளுதுங்கப்பா 🙂

    @ நாஞ்சில் பிரதாப் – சப் டைட்டில் ஃபைல் தனியா டவுன்லோட் பண்ணிக்கங்க.. அதான் நம்ம தரவிறக்கும் சிங்கம் கீதப்ரியன் கீறாரே.. அவரு கிட்ட கேளுங்க தல.. 🙂

    இப்ப போறேன்.. குட் நைட்டு.. நாளை வருவேன் 🙂

    Reply
  27. நண்பரே,

    அருமையான விமர்சனம். அழகு நிலையப் பெண்களே வாலிப அரிமா வருகிறது காரமலை எடுத்து வையுங்கள்.

    Reply
  28. //‘வேக்ஸிங்’ என்பதைப் பற்றி நாம் படித்திருப்போம். பல ஆங்கிலப் படங்களிலும் பார்த்திருக்கிறோம்.//

    ஏன்னையா? உங்கள் பதிவை ஆண்கள் மட்டும் தான் படிப்பார்களா என்ன? பூக்ஸ்ல வரும் சினிமால வரும்னு எழுதிகிட்டு…

    விமர்சனம் நல்லா இருக்கு … Its a joy to read u 🙂

    Reply
  29. nalla pathviu, ithu romba nalla padam,romba nala pakkanumnu try pannuren boss…pls download link-iruntha kodunga…romba help-a irrukum…pls…

    Reply
  30. பெண்களை மையமாக வைத்து வரப்படும் படங்கள் எல்லா சினிமாக்களிலும் குறைவுதான்! ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம்! அறிமுகத்திற்கு நன்றி!

    Reply
  31. விமர்சனம் அருமை. நானும் நேத்து ஒரு படம் பார்த்து ரொம்ப பீல் பண்ணி விமர்சனம்கிற பேர்ல ஏதோ பண்ணிருக்கிறேன் முடிஞ்சா வந்து பார்த்துட்டு திட்டுங்க.
    http://tmaideen.blogspot.com/2010/10/sometimes-in-april.html

    Reply
  32. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html

    Reply
  33. தேளு இந்த படம் ரொம்ப நாள் முன்னாடியே பாத்துட்டேன். நல்லா எழுதியிருக்கீங்க.

    Reply
  34. அட,தமிழ்நாடு எங்கயோ போய்க்கிட்டு இருக்கு.இப்ப போய்,மேக் அப்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க? இனி நோ மேக் அப்…ஒன்லி கிராபிக்ஸ்.. 😉
    வாழ்க ஐஸு,வாழ்க சங்கர்,வாழ்க எந்திரன்!

    Reply

Join the conversation