தமிழ் சினிமா காப்பிகள்–மீடியா வாய்ஸ் பத்திரிகையில் எங்கள் குரல்
சிறிது நாட்களுக்கு முன்னர், Assassin’s Creed கேமில் இருந்து சீன்கள் உருவப்பட்டு, விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்தில் வைக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பின்னர், ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர், தன் பெயர் புஷ்பா கனகதுரை என்றும், நடிகர் சரத்குமார் தொடங்கியிருக்கும் ‘மீடியா வாய்ஸ்’ பத்திரிக்கையில், தமிழ் சினிமாவில் காப்பிகள் குறித்து ஒரு கட்டுரை தயாராகிக்கொண்டிருப்பதாகவும், அதைப்பற்றிச் சில விஷயங்கள் பேச வேண்டும் என்றும் சொன்னார். அதன்பின், இந்தக் காப்பிகள் குறித்து விரிவாகப் பேசினோம்.
கனகதுரை சொன்னபடி, கட்டுரை சென்ற வாரம் வெளியாகியுள்ளது.
இங்கே ஒரு விஷயம். தமிழ்ப் பத்திரிகையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிக்கொண்டிருப்பது, ஆனந்த விகடன். இரண்டு வாரம் முன்னதாக, தெய்வத்திருமகள் பட விமர்சனம் அதில் வந்தது. விகடன் எழுதியிருந்த வரிகளை அப்படியே இங்கே தருகிறேன்.
”’I AM SAM’ என்ற ஹாலிவுட் சினிமாவின் தாக்கத்தில் ‘தெய்வத் திருமகள்’ சிருஷ்டித்து இருக்கிறார் இயக்குநர் விஜய். ஒரிஜினலுக்கான அங்கீகாரம் தராததற்காக ஒரு குட்டு. அதே சமயம், அந்த இன்ஸ்பிரேஷனை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழுக்கு ஏற்ற உணர்வுகளைப் பொதித்து, மனதில் மெல்லிய பக்கங்களைப் புரட்டும் அழகியல் சினிமா படைத்ததற்கு ஒரு பொக்கே!”
இப்படி எழுதி, படத்துக்குத் தாராளமாக ஐம்பது மதிப்பெண்கள் கொடுத்திருந்தது விகடன்.
ஆனால், I am Sam படத்தில் இருந்து தொண்ணூறு சதவிகிதம் அப்படியே காப்பியடித்து எடுத்திருந்த தெய்வத்திருமகள் படத்துக்கு ஐம்பது மதிப்பெண்கள் கொடுத்த அதே விகடன், தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க படைப்பான ஆரண்ய காண்டம் படத்துக்குக் கொடுத்திருந்தது, வெறும் நாற்பத்து ஐந்து மதிப்பெண்களே. விஜய்யின் சுறா படத்துக்கும் , விகடன் கிட்டத்தட்ட நாற்பதோ அல்லது அதைப்போன்ற மதிப்பெண்களே கொடுத்திருந்ததாக நினைவு.
என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே?
தமிழ் சினிமாவில் ஈயடிச்சாங்காப்பிகள் அடிப்பது, முன்பு எப்போதைக்கும் இல்லாத அளவு இப்போது அதிகரித்துவிட்டது. படங்களைத் திருடுவது என்பது போய், இப்போது கேவலம் போஸ்டர்களைக் கூட அப்படியப்படியே காப்பியடிக்கும் கலாச்சாரம் ஆரம்பித்துவிட்டது. விஜய் நடிக்கும் யோஹான் படத்தின் போஸ்டர்கள், Largo Winch படத்தின் போஸ்டரின் அப்பட்ட திருட்டு என்பது, இணைய அறிமுகம் உள்ள நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதே போல், ஜீவா நடிக்கும் ‘வந்தான் வென்றான்’ படத்தின் போஸ்டர்கள், I hate Luv stories படத்தின் போஸ்டர்கள் மற்றும் Going the distance படத்தின் போஸ்டர்களில் இருந்து அப்பட்ட காப்பி அடித்ததும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அதேபோல், தற்போது விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் ‘கரிகாலன்’ படத்தின் போஸ்டர், இங்கே காணலாம். இன்று தினத்தந்தியில் வந்துள்ளது. அதைப் பார்த்தவுடன், பக்கத்தில் இருக்கும் போஸ்டர் உங்களுக்கு நினைவு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
போஸ்டர்கள் மட்டுமல்ல. பாடல்கள், இசை ஆகிய அனைத்துமே இப்போது ஹாலிவுட்டிலிருந்து கண்டபடி ‘இறக்குமதி’ செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நேரத்தில், இதையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய பொறுப்புடைய விகடன் போன்ற பத்திரிகைகள், என்ன செய்துகொண்டிருக்கின்றன? இப்படிப்பட்ட காப்பிப் படம் எடுப்பவர்களின் பேட்டிகளை வெளியிட்டு, காப்பிகளைப் பற்றிய ஒரு செய்தி கூட மக்களுக்குத் தெரியப்படுத்தாமல், இப்படிப்பட்ட சினிமாக்களுக்கு அதிக மார்க் போட்டு ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன விகடன் போன்ற பத்திரிகைகள்.
இந்த நேரத்தில்தான், சரத்குமாரின் ‘மீடியா வாய்ஸ்’ பத்திரிக்கை, இந்தக் காப்பி முயற்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தக் கட்டுரையில், தற்கால தமிழ் சினிமாவின் இந்தக் காப்பி நோக்கத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் புஷ்பா கனகதுரை.
அதில், ஹாலிவுட் பாலா தெய்வத்திருமகள் காப்பியைப் பற்றி ந்யூலைன் சினிமா நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பிய தகவலும், நான், வேலாயுதம் படத்தைப் பற்றி Assassin’s Creed கேம் தயாரிப்பாளர்களான யூபிஸாஃப்டுக்கு மின்னஞ்சல் அனுப்பிய தகவலும் வந்திருக்கிறது. மீடியாவில் முதன்முறையாக வெளிவந்துள்ள இந்த விஷயம், நமது நோக்கிற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.
அந்தக் கட்டுரை, கீழே. ஃபோட்டோக்களைக் க்ளிக்கிப் பெரிதாக்கி, கட்டுரையைப் படிக்கலாம். கட்டுரையின் பெயர், ‘ஒரு டம்ளர் காப்பி அல்ல; ஒரு அண்டா காப்பி அடிக்கும் சில தமிழ் சினிமாக்கள்’.
விஜய்யின் யோஹான் – லார்கோ வின்ச், ஜீவாவின் வந்தான் வென்றான் போஸ்டர் திருட்டு – ஜீ.வி. ப்ரகாஷ் அடித்த காப்பி (தெய்வத்திருமகள் பாடல்) ஆகிய காப்பிகள் பற்றிய தகவல்கள், முழுமையாக இந்தக் கட்டுரையில் வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், இதற்கு முந்தைய காப்பிப் படங்கள் பற்றிய முழுப்பட்டியலும் இதில் இருக்கிறது (இந்தப் பட்டியலை அனுப்பியது, அடியேன்).
இதை ஒரு ஆரம்பமாகத்தான் நினைக்கிறேன். நான் மட்டுமல்ல. என்னுடன் ஒரு பெரிய படையே இருக்கிறது. தமிழ் சினிமாவை நேசிக்கும் படை. நாங்கள் நேசிக்கும் தமிழ் சினிமா, இப்படிக் காப்பியடித்துப் படம் எடுக்கும் சில இயக்குநர்களால், கெட்ட பெயர் சம்பாதித்துக் கொண்டிருப்பது, எங்களுக்குப் பிடிக்காததன் விளைவுதான் எங்களின் மின்னஞ்சல் முயற்சி. இப்போது, மீடியா வாய்ஸ் பத்திரிகை இதனை வெளியிட்டு எங்களுக்குப் புத்துணர்வு ஊட்டியிருப்பதால், எங்களின் இந்த முயற்சி, தொடரும். இன்னும் பெரிய அளவில்.
இந்த இடத்தில், எனக்கு மிகப்பிடித்தமான Shawshank Redemption படத்தில் ஒரு காட்சி.
படத்தின் நாயகன் Andy, தான் இருக்கும் ஜெயிலில், நூலகத்தைப் புதுப்பிக்கக்கோரி, அமெரிக்க அரசுக்கு வாரம் ஒரு கடிதம் எழுதுகிறான். ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல. மொத்தம் ஐந்து வருடங்கள். ஐந்து வருடங்களாக, வாரம் ஒரு கடிதம் ! ஆனால், அந்தக் கடிதங்களுக்கு எந்தப் பயனும் இருப்பதில்லை. ஐந்து வருட முடிவில், Andyயின் கடித யுத்தம் பொறுக்காமல், அமெரிக்க அரசு, சிறிது பணம் அனுப்புகிறது – இனிமேல் கடிதம் எழுதவேண்டாம் என்ற கோரிக்கையோடு. ஆனால், அமெரிக்க அரசு, தனது கடிதத்துக்குப் பதில் அனுப்பியவுடன், வாரம் இரண்டு கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறான் Andy. நூலகத்தை மேலும் பெரியதாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு !
தமிழ் சினிமா – அந்த நூலகம். நாங்கள் – Andy. உரிய ரைட்ஸ் பெறாமல் காப்பியடிக்கும் படத் தயாரிப்பாளர்கள், Shawshank பட வில்லன் ஸாமுவேல் நார்ட்டன். ஹாலிவுட் மற்றும் உலகப் பட நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் எங்கள் முயற்சி, இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். புத்துணர்வோடு.
நாங்கள்தான் மின்னஞ்சல் அனுப்பவேண்டும் என்றில்லை. இதைப் படிக்கும் யார் வேண்டுமானாலும், எதாவது தமிழ்ப்படம், உரிய உரிமம் பெறாமல் காப்பியடிக்கப்பட்டது என்று தெரிந்தால், சம்மந்தப்பட்ட ஒரிஜினல் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். பட நிறுவனத்தின் வலைத்தளத்தில், உங்களுக்குத் தேவையான மின்னஞ்சல்கள் கிடைக்கும். அப்படி அனுப்ப முடியாவிடில், எனக்குத் தெரியப்படுத்தவும். நான் மின்னஞ்சல் செய்கிறேன்.
தமிழ் சினிமாவில், ஆரண்ய காண்டம் போன்ற அருமையான முயற்சிகள் மேலும் தொடர்ந்து, காப்பியடிக்கும் கீழ்த்தரமான முயற்சிகள் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் – நண்பர்களாகிய நாங்கள்.
‘ஒரு டம்ளர் காப்பி அல்ல; ஒரு அண்டா காப்பி அடிக்கும் சில தமிழ் சினிமாக்கள்’ – மீடியா வாய்ஸ் கட்டுரை
பி.கு – மீடியா வாய்ஸ் பத்திரிகையை வாங்கி, கஷ்டப்பட்டு அதனை ஸ்கேன் செய்து அனுப்பிய நண்பர் கொழந்தை (எ) சரவணகணேஷுக்கு எனது நன்றிகள்.
Vada
Boss Recently i saw movie named Lucky number slevin and that movie was utterly copied in Laadam. Aana intha prabhu solomon ennavo ivaru yosichu padam edutha maathiri scene poduvaru !!
அடித்து தூள் கிளப்புங்கள் கருந்தேள். ஆனந்த விகடன் தனது போக்கை மாற்றியே தீர வேண்டும். பதிவுலக ஜாம்பவான்கள் சிலரும் காப்பி அடிப்பதை மனசாட்சியே இல்லாமல் சப்போர்ட் செய்கிறார்கள். ஹாலிவுட் கம்பனிக்கு இமெயில் அனுப்பியதையும் கிண்டல் செய்தவர்கள் உண்டு. மீடியா வாய்ஸ் மூலம் உங்கள் வாய்ஸ் உரக்க ஒலித்திருக்கிறது. வாழ்த்துகள்!!
அம்பல படுத்துவோம். அடுத்த கட்டுரைக்கு நானும் சில தகவல்களை கொடுத்தேன். நன்றி.
கடையில…புக்கு விக்குது…அத வாங்கி அனுப்புனத..என்னவோ…மெட்ராசுக்கே போயி வாங்குன ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்க……………மக்களே நம்பாதீங்க…
வாழ்த்துகள் கருந்தேள். பல நாள் ஆதங்கத்தை சரியான விதத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கீங்க.
தரமான, நேர்மையான தமிழ் சினிமா வரவேண்டும். பார்ப்போம்.
தல எனக்கும் ரொம்ப நாளா இருந்த ஆதங்கம் இது.. எல்லா விஷயத்துலயும் உடனே ரியாக்ட் பண்ணுற இந்த விகடன் காரங்க, இந்த காப்பி விஷயத்துல மட்டும் ஏன் அடக்கி வாசிக்குராங்கன்னு தெரில… ஆனா ஒன்னு தல, காப்பி அடிச்சியே பெரிய டைரக்டர் அது இதுன்னு பேரு வாங்குற இந்த கவுதம் மாறி ஆளுங்களுக்கு, மொக்கையா எடுத்தாலும் உண்மையா எடுக்குற டி ஆர், பேரரசு போன்றவர்கள் எவ்வளவோ மேலு…
/Murali Krishnan said:
//காப்பி அடிச்சியே பெரிய டைரக்டர் அது இதுன்னு பேரு வாங்குற இந்த கவுதம் மாறி ஆளுங்களுக்கு, மொக்கையா எடுத்தாலும் உண்மையா எடுக்குற டி ஆர், பேரரசு போன்றவர்கள் எவ்வளவோ மேலு//
வழிமொழிகிறேன்! சீக்கிரம் ஒருதலைக்காதலை ரிலீஸ் பண்ணுங்க டி.ஆர். சார்!!
முரளி ஆனந்த விகடன் என்னைக்குயா சரியான நேரத்துல ரீயாக்ட் பண்ணிருக்காங்க?
அடடா… பட்டைய கிளப்புறீங்க…சூப்பர்
I Hope 7 amm arivuu plot is stolen from our favorite game assasins creed plot that is going to the past wjth the help of DNA ,Genes etc
என்னங்க இது… படை கிடைன்னு எல்லாம் சொல்லி பயமுறுத்துறீங்க? 🙂
hi here is the link for all prabhu solomon fans of mynaa
http://www.youtube.com/watch?v=h1h82bqloNE
// மீடியா வாய்ஸ் பத்திரிகையை வாங்கி, கஷ்டப்பட்டு அதனை ஸ்கேன் செய்து அனுப்பிய நண்பர் கொழந்தை (எ) சரவணகணேஷுக்கு எனது நன்றிகள்.//
கஷ்டப்பட்டாரா? புவர் பேபி..! 🙁 🙁
நீங்க வேணும்னா பாருங்களேன்.
சும்மா.. பொங்க ஆரம்பிச்சிடுவானுங்க. நியாயத்தை… எங்கெங்கெங்க இருந்தெல்லாமோ உருவ ஆரம்பிப்பானுங்க.
விஜய் மேல இனிமே ஒரு பெரிய மரியாதை வந்துடுச்சி. அவரோட போட்டோவை பார்த்துட்டுத்தான்.. இனிமே.. பல் விளக்குவேன்… பாத்ரூம் போவேன் -ன்னு எல்லாம் ஆரம்பிப்பானுங்க.
ஆமாங்க.. நாங்களும் இது பத்தி கவலை படுபவர்கள்தான்… இது சம்பந்தமான எமது சில பதிவுகள்
தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை
தற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்!!
தெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு
எங்க கண்ணனுக்கு எதாவது தென்பட்டால் உங்களுக்கு தெரியபடுத்துகிறோம்..
This comment has been removed by the author.
கரிகாலன் போஸ்டர் இப்போதான் பார்க்கிறேன்,அதுவும் காபியா ? படத்தின் இயக்குனர் ஒரு visual effect artist,படத்தில் CG க்கு முக்கியத்துவம் இருக்கும்னு கூறி இருந்தார்,ஆனால் காபி யாராக இருந்தாலும் எதிர்ப்போம்
ஹிந்தி சினிமாவிலும் இதே நிலைமைதான் ரெண்டு நாள் முன் மர்டர் 2 பார்த்துவிட்டு எங்கயோ பார்த்த மாதிரி இருகேன்னு பார்த்தா
The Chaser அப்படியே அப்பட்டமான காபி
/Murali Krishnan said:
//காப்பி அடிச்சியே பெரிய டைரக்டர் அது இதுன்னு பேரு வாங்குற இந்த கவுதம் மாறி ஆளுங்களுக்கு, மொக்கையா எடுத்தாலும் உண்மையா எடுக்குற டி ஆர், பேரரசு போன்றவர்கள் எவ்வளவோ மேலு//
அண்ணே நீங்க பொதுபடையா கவுதம தாக்குறது போருத்தமில்லன்னு படுது. அவரு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தோட எண்டு கிரெடிட்ல அந்த நாவல குறிப்பிட்டு இருக்காரு. கஜினி பத்தியும் இந்த கட்டுரையில குறிப்பிட்டு இருக்கு, அது மெமெண்டோ தலுவளுன்னு முருகதாஸே பகிரங்கம ஒத்துகிட்டாரு. கறுப்பாடுகள தாக்குறபோது இந்த மாதிரி நேர்மைய கடை பிடிக்கரவங்களையும் கொஞ்சம் நாம பாராட்ட தவற கூடாது. கவுதம் மேனன் ஒரு படம் எடுக்கறதுக்கு முதல் வெளியிடும் first look போஸ்டர்ஸ் எப்பவுமே இன்னொன்ற தளுவியதாதான் இருக்கும், உதாரணமா விண்ணைத்தாண்டி வருவாயா பட first look போஸ்டர்ஸ் மின்சாரக்கனவு வெண்ணிலவே பாடலில் வரும் ஒரு காட்சி போன்றிருந்ததை மறந்துட்டோமா? அது படத்தோட ஜோனர் பற்றி சொல்றதுக்கு அவர் செய்யும் ஒரு strategy. (ஆனா பகிரங்க விளக்கமளிப்பது அவருக்கு நல்லது). திருட்டை எதிர்க்கணும், ஆனா ஒரு படத்துலையோ அல்லது நாவல்லையோ இன்ஸ்பயர் ஆகி அத தளுவுறவங்க நேர்மையா அத ஒத்துக்கும் போது அதையும் நாம பாராட்ட மறக்ககூடாது. ஆனாலும் எல்லாத்தையும் சுட்டுட்டு பல்துலக்கினேன், படுத்தேன், வாழ்ந்தேன்னு சொல்றவங்கள கண்டிப்பா விட்டு வக்க கூடாது.
@நல்லதம்பி(தல-தளபதி சலூன்)
பாஸ் நீங்க யோகன் போஸ்டர கொஞ்சம் உத்து பாருங்க ,ஒரிஜினல்ல இருக்கிற சட்ட மடிப்பு ,சட்ட மேல இருக்கிற லைட்டிங் கூட அப்படியே இருக்கு ,வெறும் தலைய மட்டும் கட் பண்ணி ஒட்டி இருக்கானுங்க,இவனுங்களுக்கு கிரியேட்டர்ங்கற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது,
அசத்தல் கட்டுரை. கலக்கீட்டிங்க
இதை நான் சொன்னதுக்குதான் அடிக்காத கொறையா சிலர் கொலை வெறி கொண்டு அலைகின்றனர்!!மங்காத்தா oceans series காப்பி என்று சொன்னால் அடின்கொய்யால என்று வருகின்றனர்.இம்புட்டு கொலை வெறி கொண்ட சமூகத்தில் வாழ்வதே சாதனைதான் போல!!இருந்தாலும் உங்களின் பணி பாராட்டத்தக்கது!Largo winch -வேலாயுதம் complaint பண்ணியாச்சு!இனி ஒவ்வொரு கதை அல்லது கற்பனை திருட்டுக்கும் அந்த ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனத்தில் புகார் செய்யப்படும்!நன்றி.
வாழ்த்துகள் ராஜேஷ்.
வெறும் நாற்பத்து மூன்று மதிப்பெண்களே. விஜய்யின் சுறா படத்துக்கும் ////.
.
.
ஹெய்யி….எல்லாரும் கைதட்டுங்க…கருந்தேள் சுறா படம் பத்தி எழுதிட்டாறு!!
****
தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க படைப்பான ஆரண்ய காண்டம் படத்துக்குக் கொடுத்திருந்தது,////.
.
.
மறுபடியும் ஆரண்ய காண்டமா?ஆள உடுங்க!!
****
ஆரண்ய காண்டம் மற்றும் சுறா பட பெட்டிகளை அல் கொய்தா களவாண்டு போய்விட்டதாக தகவல்.எந்நேரமும் அதை கொண்டு இந்தியாவை தாக்க முற்படலாமென துண்டு பீடி துளுக்கானம் தெரிவிக்கிறார்!!
@நல்லத்தம்பி
//கஜினி பத்தியும் இந்த கட்டுரையில குறிப்பிட்டு இருக்கு, அது மெமெண்டோ தலுவளுன்னு முருகதாஸே பகிரங்கம ஒத்துகிட்டாரு.//
முருகதாஸ் ஒத்துக்கிட்டாந்தான்.ஆனா அதுக்கப்புறம் அவன் என்ன சொல்லியிருக்கான்.
memento ஒரு மொக்கை படம்னும் இவன் எடுத்த கஜினி ஒலக மகா சூப்பர் படம்னும் இவன் ஏதோ stanly kubrik சிஷ்யன் மாதிரி பேசுனான்.
இந்த லட்சணத்துல ஆமீர்காண் கஜினிக்கு ஒத்து ஊதுறாரு.
இவனுங்க memento படத்த பாத்திருக்கவே மாட்டானுங்களா?
இத பாக்கும் போது ஆரண்ய காண்டத்துல வர்ற வசனம் தான் ஞாபகம் வருது.
”நீ நெஜமாவே முட்டாளா இல்ல முட்டாள் மாதிரி நடிக்கிறியா?”
அப்புறம் கௌதம் மேனன பத்தி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சினிமாவுல இவன் பன்ற அட்டகாசம் தாங்க முடியாது.
ஹாலிவுட் படங்கல காப்பி அடிச்சு தனக்கு எல்லாம் தெரியும்கிற புத்திசாலி ரேஞ்ச்க்கு பேசுவான்.
யாராவது ஒருத்தர் இவன் படங்கள நல்லா இருக்குன்னு சொன்னா போதும் மேதாவி மாதிரி பேசுவான்;பத்திரிகைகளுக்கு பரபரப்பா பேட்டி குடுப்பான்;
தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்ச்சிம்பான்.
அந்த வகயில முருகதாஸ்,மணிரத்னம்,கௌதம விட பேரரசு டி.ஆர் எவ்வளவோ மேல்.
சாரு சொன்ன மாதிரி தமிழின் ஆகச்சிறந்த படைப்பான ஆரண்ய காண்டம் படத்த எடுத்த குமாரராஜா இப்படியெல்லாம் பன்னல.
கௌதம் மாதிரி அரவேக்காடுங்க தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்.
dear karundhel
welldone i am also a big fan of cinema esp world cinema we the film lovers cannot digest these kind of plagiarism whereas the layman viewers are appreciating it as it is a commercial entertainment medium supporting the livelihood of cast crew and technicians. whatever it may be wrong is always wrong in your comments karthik said (prabhu solomon mynaa ) kaiyapudi song copied.
http://www.youtube.com/watch?v=h1h82bqloNE nice find and myna itself a copied version of korean movie DOG BITE DOG (2006) the director cleverly change the field (kathaikalam) to kurangani ( one of my fav trek spots ) to suit the taste of tamil audience which these people call as “inspiration’ (seruppala adikkanum scene by scene copy adithuvittu ooty avalanche choc factory and maatrinal athu inspirationaam rascal) also the bus sequence is similar picturisation of jurassic park series
evano oruvan (marathi dombivili fast) both copied from
joel schumacher’s 1993 film FALLING DOWN (michael douglas and robert duvall) support pannum kootam marappathu ethuvendral thiramaigal irunthum vaippu kidaikkamal pogum kalaignargalin ethirkalam intha mathiri cut copy paste fraudugalal pazhagirathu enbathai. ivargal perum pughazhum panamum sambathithuvidugirargal anal mattravargalin ethikalam???????? cine ma commercial medium enbathal oru vetri pothum ellorum avaraiyey fix panna try pannuvar thirmai irunthum mattravargalal melay vara mudiyamal povatharkku intha pannadaigal thaan kaaranam. nandri i support your action against these plagiarism. if i come across any copied version i will inform you as i am not that much tech savvy people like you guys. thanks sundar g
i like your vimarsanam,, that way of explain,, continue,,
ennama kalakuringa terror,,,,
அப்புறம் கௌதம் மேனன பத்தி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சினிமாவுல இவன் பன்ற அட்டகாசம் தாங்க முடியாது.
ஹாலிவுட் படங்கல காப்பி அடிச்சு தனக்கு எல்லாம் தெரியும்கிற புத்திசாலி ரேஞ்ச்க்கு பேசுவான்.///
.
.
அண்ணா கைய குடுங்க!!அவனோட இம்ச தாங்கல!!இவன் படத்த பாக்குறதுக்கு நான் இங்க்லீஷ் படமே பாத்துடுவேன்.டயலாக் எப்படியும் இன்க்லீசுலதான் இருக்க போகுது!!இவனின் எல்லா படமும் சரியான காப்பி.
நல்ல விமர்சனம்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
@ v.vinoth
//அப்புறம் கௌதம் மேனன பத்தி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சினிமாவுல இவன் பன்ற அட்டகாசம் தாங்க முடியாது.
ஹாலிவுட் படங்கல காப்பி அடிச்சு தனக்கு எல்லாம் தெரியும்கிற புத்திசாலி ரேஞ்ச்க்கு பேசுவான்.
யாராவது ஒருத்தர் இவன் படங்கள நல்லா இருக்குன்னு சொன்னா போதும் மேதாவி மாதிரி பேசுவான்;பத்திரிகைகளுக்கு பரபரப்பா பேட்டி குடுப்பான்;
தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்ச்சிம்பான்.
அந்த வகயில முருகதாஸ்,மணிரத்னம்,கௌதம விட பேரரசு டி.ஆர் எவ்வளவோ மேல்.//
பேரரசு, டி ஆர் பேட்டியெல்லாம் நீங்க பாத்ததில்லையா, கொஞ்சம் யூடுபுங்க தலைவா..
கவுதமும் முருகதாசும் குறைந்தபட்ச நேர்மைய கடைபிடிச்சிருக்காங்கங்கங்குறது மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கு கவுதமையோ அல்லது அவரோட படங்களையோ பிடிக்கலங்குரதுக்காக எண்டு கிரெடிட்ல அவரு போட்ட கமெண்ட் போடலன்னு ஆகிடாது. கஜினி பத்தி சொல்றப்போ மெமெண்டோ ஒரு மொக்கபடமுன்னு சொன்னாரான்னு தெரியல, சொல்லியிருந்தா அது நிச்சயமா கண்டிக்கப்பட வேண்டியது. கவுதம் முருகதாஸ் சிறந்த படைப்பாளிகள்னு நான் சொல்லல, அவங்க எத எங்கிருந்து எடுத்தம்னு சொன்னாங்கன்னுதான் சொல்றன். நாம யாருமே எதுலயும் இன்ஸ்பயர் ஆகலன்னு எந்த படைப்பாளியாலையும் சொல்லிக்க முடியாது, நாம ஒரு கட்டுர எழுதனும்னா பத்து கட்டுரையாவது படிச்சிருக்கணும், அப்பிடி எழுதுறப்போ நாம படிச்ச எதோ ஒரு கட்டுரையின் தாக்கம் நம்ம எழுத்துலயும் (அது மொழினடயிலையோ இல்ல கண்டன்ட்லையோ) நிச்சயமா இருக்கும். அதுக்கு reference அப்பிடின்னு போட்டு அந்த கட்டுரையோட பேர போட்டுக்கறதுதான் மொற, plagerism பத்தி தெரிஞ்சவங்களுக்கு இது நல்லாவே தெரியும். சமிபத்துல கூட எதோ ஒரு படத்துல (எந்த இயக்குனர்ன்னு ஞாபகம் இல்ல, ஒரு வேள குமாரவேலாகூட இருக்கலாம்) filmiographyன்னு ஒன்னு போட்டாதா ஞாபகம் (அவரு எந்த எந்த படத்த reffer பண்ணினாருன்னு சொல்றதுக்கு, இது ஒரு ஆரோக்கியமான விஷயம்). கவுதம், முருகதாஸ் plagerise பண்ணலன்னு மட்டும்தான் நான் சொன்னது. inspire ஆகலன்னு சொல்லல. நமக்கு தமிழ்ல எல்லாமே காப்பி (?) தானேன்னு inspire ஆகுறதையும் plagerize பண்றதையும் ஒரே கண்ணோட்டத்துல பாக்க கூடதுங்குரதுதான் என்னோட கமென்ட். இதுக்கும் மேல ஒங்களுக்கு கவுதமையோ இல்ல முருகதசையோ பிடிக்கலங்குரதுக்காக தனி மனித தாக்குதல்ல ஈடுபடவேணாம்னு கேட்டுக்கறன்.
@டெனிம்
//பாஸ் நீங்க யோகன் போஸ்டர கொஞ்சம் உத்து பாருங்க ,ஒரிஜினல்ல இருக்கிற சட்ட மடிப்பு ,சட்ட மேல இருக்கிற லைட்டிங் கூட அப்படியே இருக்கு ,வெறும் தலைய மட்டும் கட் பண்ணி ஒட்டி இருக்கானுங்க,இவனுங்களுக்கு கிரியேட்டர்ங்கற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது,//
தலைவா நாங்கதான் முதல் ஆளுங்களான்னு தெரியல ஆனா இத கண்டிச்சு ஜூலை முப்பதே நாம ஒரு போஸ்ட் போட்டிருக்கம். கொஞ்சம் படிச்சிட்டு ஒங்க கருத்த அங்க தெரிவிங்க, நன்றி பாஸ்
http://realsanthanamfanz.blogspot.com/2011/07/blog-post_30.html
நண்பரே,
ஒரு முறை சினிமா செய்திகளை ஆனந்தவிகடனிற்கு தர மாட்டோம் என சினிதுறை அறிவிக்க ஆனந்தவிகடன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது எனக்கு நினைவில் இருக்கிறது. எனவே அவர்கள் எங்கு இதைப்பற்றி எழுதப் போகிறார்களும், குட்டிவிட்டு பொக்கே தந்து தெய்வத்திருமகள் எங்கள் இதயப்பெருமகள் என்று போற்றி நிறைய்ய்ய புள்ளிகள் தருவார்கள். வருங்காலத்தில் இவ்வகையான ஜால்ரா வாரப்பத்திரிகைகளிற்கும் முறையற்ற வகையில் படைப்புக்கள் கையாளப்படுவது குறித்து நீங்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கலாம். அவர்களின் எதிர்வினைகள் என்னவென்று உங்கள் தளம்வழி பகிர்ந்து அவர்களின் நடுநிலைமையை பலரிற்கும் அறியச் செய்யலாம். மேலும் எதற்கெடுத்தாலும் சுறாவை உதாரணம் காட்டுவது ஐ லவ் சுறா சங்க அங்கத்தவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்பதை மாத்திரம் கூறிக் கொள்கிறேன். தங்கள் முயற்சி மதுரைக்கு வைத்த தீ போல பரவட்டும்.
கவுதமும் முருகதாசும் குறைந்தபட்ச நேர்மைய கடைபிடிச்சிருக்காங்கங்கங்குறது மறுக்க முடியாத உண்மை///
.
.
அவுங்க நேர்மை புல்லரிக்க வைக்குது!ஒரு மலையாள தெலுங்கு படத்தை தமிழில் ரைட்ஸ் வான்கிதானே எடுக்கின்றனர்?அதே போல காசு கொடுத்து ரைட்ஸ் வாங்கி மற்ற நாட்டு சினிமாவை எடுங்க(அதுக்கான தேவை இல்லவே இல்லை)நம் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளே பல ஆயிரம் இருக்கு.அதை எடுக்கலாம்!!சும்மா உள்ளூர் ரசிகனுக்கு ஒலக சினிமா காட்டுரோம்னு சொல்லி காப்பியடிப்பதேல்லாம் ஏற்றுகொள்ள இயலாது!(கமல் சொல்வது இந்த சப்பை கட்டு)
ஹஹஹ போஸ்டரையாவது விட்டுத்தொலைங்கடா… டேய்… :))
வெளிநாட்டு சினிமா கம்பெனிகள் எவனாச்சும் கேஸ் போடுவானாங்களான்னு எதிர்பார்த்திட்டு இருக்கேன்…. வெயிட்டிங்கி 🙂
சூப்பர்.. தொடருங்க 🙂
///////
நல்ல விமர்சனம்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
////////
அடியே ப்ரியா/கண்ணன்.. உனக்கு என்னிக்காவது கவித எழுதி சங்கூத வைக்கிறேனா இல்லியான்னு பாருடி.
அப்படி பார்த்தா டி.ஆர், பேரரசு, வில்பர்sargunaraj போன்ற மிகச்சிலர் மட்டும்தான் சொந்த கற்பனையில் படம்(!) எடுக்கிறார்கள்….
ஆனா இந்த உலகம் அவுங்க படைப்பை(!) எங்க சினிமான்னு ஒத்துக்குது?
like button எங்கப்பா போச்சு?
ஆரண்ய காண்டம் படமும் ஒரு ஸ்பானிஷ் படத்தின் அட்ட காப்பின்னு உத அண்ணன் சொன்னதில் இருந்து அதை தேடிக்கிட்டு இருக்கேன். சிக்கும் போது நாம எல்லாம் தலையை தொங்க போட வேண்டியிருக்கும். 🙁 🙁
/////////
நல்ல விமர்சனம்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
////////
அடியே ப்ரியா/கண்ணன்.. உனக்கு என்னிக்காவது கவித எழுதி சங்கூத வைக்கிறேனா இல்லியான்னு பாருடி./////
ஸ்வேதா வரிசையில் பிரியா… அண்ணே எனக்கென்னமோ உங்க கவிதைக்க்காகவே இவளுங்க லாம் இப்படி பண்றங்கலோன்னு தோணுது….
நண்பா,
கண்ணு பட்டுவிடப்போகிறது,மிகுந்த மகிழ்ச்சியான துவக்கம் இது,இனி எந்த திருட்டு தாயோளியாவது எந்த படத்தையாவது திருடட்டும்,வக்காலி,நடுத்தெருவில்வைத்து தோலை உரிப்போம்,இதுக்கு ஒத்து ஊதவே பல இழி பிறப்புக்கள் வெக்கமில்லாமல் ஊடகங்களில் உலவிவருகின்றன,விட்டால் வெக்கம் கெட்ட திருட்டுப்பயல் விஜய ,ஜிவி பிரகாஷை உக்கார வச்சி உருவுவானுங்க.தூத்தேரி.அடுத்தவன் படைப்பை இப்படி அவனுக்கு தெரியாமல் சொந்தம் கொண்டாடுறதுக்கு பொண்டாட்டியை கூட்டி கொடுப்பதுக்கு சமம்.
வாழ்த்துக்கள்…………..நன்றி……..
இதே போல, கூச்சமே இல்லாம திருட்டு படம் எடுத்துட்டு அதை திருட்டு வீசிடியில பாக்காதீங்கன்னு கூவும் படைப்பாளிகள் மேல எதாவது கேஸ் போடனும் பாஸ். அலும்பு தாங்கல.
இவனுங்க அதை inspriration னு சொல்றதுதான் வயித்தெரிச்சலா இருக்கு…
//ஆரண்ய காண்டம் படமும் ஒரு ஸ்பானிஷ் படத்தின் அட்ட காப்பின்னு உத அண்ணன் சொன்னதில் இருந்து அதை தேடிக்கிட்டு இருக்கேன். சிக்கும் போது நாம எல்லாம் தலையை தொங்க போட வேண்டியிருக்கும்//
ஆரண்ய காண்டம் படத்த பாத்தபோது எந்த உலகசினிமாவையும் ஞாபகப்படுத்தலன்னு நா சொல்லல சாரு சொல்லியிருக்காரு.
மிஷ்டர் நல்லதம்பி
முருகதாஸ் காப்பி அடிச்சதை கூட மன்னிச்சிரலாம்.காப்பி அடிச்சு ஒழுங்கா படத்த எடுத்தானா அதுவும் இல்லயே.அவனும் பேரரசு,டி.ஆர்,ஹரி ரேஞ்சுக்கே எடுத்து வச்சிருக்கானே.
கௌதம்,கமல் இவய்ங்க எல்லாம் தாந்தான் மேதாவி மற்றவங்க முட்டாள் மாதிரி பேசுறது என்க்கு கொஞ்சம் கூட புடிக்கல.
மணிரத்னம் ,கௌதம்,கமல் மூனு பேரோட ஆரம்பகால படங்கள் மசாலாத்தனமாவே இருக்கும்.ஆனா என்னக்கி இவங்க உலக சினிமாவ பாத்தாங்களோ அப்பலருந்து காப்பி,அதிமேதாவித்தனம் எல்லாமே ஆரம்பிச்சுருச்சு.
இத ஒன்னும் பண்ண முடியாது.
v.vinoth said:
//மிஷ்டர் நல்லதம்பி
முருகதாஸ் காப்பி அடிச்சதை கூட மன்னிச்சிரலாம்.காப்பி அடிச்சு ஒழுங்கா படத்த எடுத்தானா அதுவும் இல்லயே.அவனும் பேரரசு,டி.ஆர்,ஹரி ரேஞ்சுக்கே எடுத்து வச்சிருக்கானே.
கௌதம்,கமல் இவய்ங்க எல்லாம் தாந்தான் மேதாவி மற்றவங்க முட்டாள் மாதிரி பேசுறது என்க்கு கொஞ்சம் கூட புடிக்கல.
மணிரத்னம் ,கௌதம்,கமல் மூனு பேரோட ஆரம்பகால படங்கள் மசாலாத்தனமாவே இருக்கும்.ஆனா என்னக்கி இவங்க உலக சினிமாவ பாத்தாங்களோ அப்பலருந்து காப்பி,அதிமேதாவித்தனம் எல்லாமே ஆரம்பிச்சுருச்சு.
இத ஒன்னும் பண்ண முடியாது.//
இது copyrights violation அண்ட் plagerism சம்பந்தமான ஒரு பதிவுங்குரதாலதான் அப்பிடி சொன்னது, ஏன்னா ரெண்டுமே ரொம்ப சென்சிடிவான விஷயம். (அடிக்கடி ஆராச்சி கட்டுரை எழுத வேண்டியிருக்கிரதாலையும் கொஞ்சம் காபி ரைட்ஸ் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கதாலையும் சொன்னது). நாம பேசுறது சினிமாவுக்கு மட்டும் சொந்தமான விஷயம் இல்ல, உலகின் பெரிய தலைவலிகள்ல ஒன்னு. எடுத்தோம் கவிழதோம்னு முடிக்க முடியாது. இது இலக்கியவட்டம், சினிமா, விஞ்சனம், தொளின்னுட்பம் தொடங்கி கழிவறை வடிவமைப்பு வரை தொடரும் ஒரு பிரச்சினை. கவுதம், முருகதாசும் ; மணி, கமலும் ஒரே தரத்துல வச்சி விமர்சிக்கதக்கவர்கள் அல்ல, இது பற்றிய ஒரு பதிவு “தற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்!!” என்ற தலைப்பில் (http://realsanthanamfanz.blogspot.com/2011/08/blog-post_848.html) பதியப்பட்டுள்ளது , படிச்சிட்டு பின்னூட்டத்த அங்க தரும்படி கேட்டுக்கறோம்.
மிக்க மகிழ்ச்சி அற்புதமான கட்டுரை இதைதான் எதிர்பார்த்தோம்
Check out this movie for Radhamohan ‘s Payanam ..
http://en.wikipedia.org/wiki/Passenger_57
////ஆரண்ய காண்டம் படமும் ஒரு ஸ்பானிஷ் படத்தின் அட்ட காப்பின்னு உத அண்ணன் சொன்னதில் இருந்து அதை தேடிக்கிட்டு இருக்கேன். சிக்கும் போது நாம எல்லாம் தலையை தொங்க போட வேண்டியிருக்கும்/////
.
.
அதெல்லாம் ஒரு பிரச்சனையா?அடுத்து ஒரு கிஷ்கிந்தா காண்டம் வராமலையா போய்டும்?அப்போ அதை உலக சினிமான்னு தலையில் தூக்கி வச்சிக்கிட்டு ஆடலாம்!!வரலாறு காணாத பாதுகாப்பு என்பது போல ஒவ்வொரு முறை ஒரு தமிழ் சினிமா வரும்போதும் இது வரை கண்டிராத உலக சினிமான்னு பட்டம் குடுக்குரதுதானே நம்ம வழக்கம்!!
ஆரண்ய காண்டம் படத்த பாத்தபோது எந்த உலகசினிமாவையும் ஞாபகப்படுத்தலன்னு நா சொல்லல சாரு சொல்லியிருக்காரு.///
.
.
சாரு தான் எல்லா ஸ்பானிய திரைப்படங்களையும் பார்த்துட்டேன்னு எப்பவுமே சொன்னதில்லையே!!ஒரு வேல அவுரு பாக்காத படத்த உல்டா பண்ணிட்டான்களோ!!(இங்கு வைகை என்று ஒரு தமிழ் யாருக்கும் தெரியாம படம் வந்தது போல!!அங்க அது மொக்க படமா இருந்து ஈ கூட தியேட்டர் பக்கம் வந்திருக்காது.வசதியா அதை பிரதி எடுத்திருக்கலாம்!!
This comment has been removed by the author.
Check out this link http://cinimimic.com/list.php
வெங்கட் பிரபு- “மங்காத்தா” வந்தா இன்னும் தெரியும்…” விளையாடு மங்காத்தா…..” ஒரிஜினல் verson இந்த லிங்க்ல கேளுங்க
http://www.youtube.com/watch?v=FYxvPOK6_xg&ob=av3e
Check out this link http://cinimimic.com/list.php///
.
.
சூப்பர் லிங்க் நண்பா என் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்துவிட்டேன்.குர்ப்பாக வெற்றி விழா 1989 இல வந்தது.பலர் அதை பாத்து Bourne series எடுத்ததா பெனாத்துவர்.ஆனால் அது 1988 இல வந்த Bourne identity இன் காப்பி!!
inda paper news la nnga not panni parunga athula sarath kumar e 25 miovies act panni irukaru jakubai and pachai kili muthucharam enna soll aithuku. avaruke nadichathuku apparam than triyum copy nu?
nanba aan athula romba overa poturukanga that virkam apapdiye copied penn sam nu i wont accept that . pen samm kevalama naichuruntharu virkam than nalla nadichuruntharu i accpt only th movie is copy not acting
nanba aan athula romba overa poturukanga that virkam apapdiye copied penn sam nu i wont accept that . pen samm kevalama naichuruntharu virkam than nalla nadichuruntharu i accpt only th movie is copy not acting///
.
.
மொதல்ல என்ன பாஷை பேசுறேன்னு சொல்லிட்டா தன்யனாவேன்!!
**********************************
ஆமா இதுல கருந்தேள் மற்றும் கோலிவுட் சாரி ஹாலிவுட் பாலா பத்தி மட்டும் மாஞ்சு மாஞ்சு எழுதியுள்ளனரே!!இதுவே சந்தேகத்தை கிளப்புது!!யார் கட்டுரையை எழுதுனதுன்னு!!சாரு இது பற்றி எவ்வளவோ எழுதியுள்ளாரே.அவரை எழுத சொல்லியிருக்கலாமே அல்லது அவரின் கருத்தை போட்டிருக்கலாமே!!அதை விட்டுட்டு கருந்தேளின் கருத்தை போட்ட மாயமென்ன?நீங்களும் சாருவின் ரசிகர்தானே?அந்த வகையில் அவரை பேச சொல்லியிஎருக்கலாம்மே?ஏன் பப்ளிசிட்டிக்காக நீங்களே பெசிட்டேங்களக்கும்?ஐயோ ஐயோ!!
@ Naran – நெனைச்சேன். என்னடா இந்த மாதிரி இன்னும் யாருமே கெளம்பலையேன்னு 🙂 . . என்னாது யாரு எழுதுனதுன்னு டவுட்டா? பப்ளிசிடிக்காக பேசிட்டமா? அதுசரி 🙂 . . நீங்க எப்புடி இருக்கீங்களோ அப்புடித்தானே அடுத்தவனையும் நினைக்கத் தோணும் 🙂 . . அந்த ஆர்டிக்கிளைப் படிக்கவே படிக்காம ஏன் வயிறு எரியிரீங்க? ஹாலிவுட் கம்பனிக்கு மெயில் அனுப்புனவனைத்தான் கேட்டு ஆர்டிக்கில் எழுதுவாங்க. அதான் எங்க ரெண்டு பேரைப் பத்தி எழுதிருக்காங்க. இதுகூட புரிஞ்சிக்காம ஏன் இந்த வயித்தெரிச்சல்? 🙂 . . ஹாஹ்ஹா . செம்ம காமெடி 🙂
// இவர்கள் இருவருமே சினிமாவின் ஆத்மார்த்த ரசிகர்கள். நல்ல படங்கள் குறித்து இணையத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள். ராஜேஷ் பெங்களூருவிலும் ஹாலிவுட் பாலா அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். ராஜேஷ், கருந்தேள் என்ற பெயரில் ஒரு பிளாக்கை ஆரம்பித்து தான் பார்த்த, தன்னை பாதித்த சினிமாக்கள் குறித்து எழுதி வருகிறார்.
இந்தத் தகவல்களை விட இவர்கள் செய்திருக்கும் வேலைதான் மிகவும் சுவாரசியமானது. ஐம் சாம் படத்தை காப்பி அடித்து தமிழ்நாட்டில் இப்படியொரு படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான நியூலைன் சினிமாவுக்கு ஒரு மெயிலைத் தட்டியிருக்கிறார் ஹாலிவுட் பாலா. அதே நேரத்தில், விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்வேலாயுதம் படத்தின் போஸ்டர் டிசைன்களும் அதன் டிரைலரும் ச்ண்ண்ச்ண்ண்டிண’ண் ஞிணூஞுஞுஞீ என்கிற கேமில் இருந்து அப்பட்டமாகத் திருடப்பட்டிருக்கிறது என அந்த கேம்ஸை உருவாக்கிய அப்சாஃப்ட் நிறுவனத்துக்கு மெயில் தட்டியிருக்கிறார் கருந்தேள்.
முன்னரே பேசி வைத்துக்கொள்ளாமல் தற்செயலாக ஒரே நேரத்தில் இருவரும் இந்த மெயில்களை அனுப்பியிருப்பதுதான் ஆச்சர்யம்.
கருந்தேளைப் போனில் பிடித்து, தமிழ் சினிமாவின் மேல் அப்படியென்ன உங்களுக்குக் கோபம் என்றோம் //
// கருந்தேளைப் போனில் பிடித்து, தமிழ் சினிமாவின் மேல் அப்படியென்ன உங்களுக்குக் கோபம் என்றோம் //
அதான் தெளிவா சொல்லியிருக்குள்ள….ஒழுங்கா படிக்காம ஏன் அவசரப்பட்டு வார்த்தைய வுட்டுகிட்டு………அட போங்கய்யா………….. என்னமோ பண்ணுங்க
விடுங்க கொழந்த!!! எப்பவுமே இப்படி சிலர் இருந்தாதானே ஒரு சுவாரசியம் இருக்கும் 😉
This comment has been removed by the author.
அப்படினா மக்கள் இனிமே orginal ஸ்கிரிப்ட் ஆ பார்கவே முடியாதா லஞ்சம் கொடுகுரதே தப்புன்னு புரியாத நம்மாளுங்களுக்கு இதையும் positive எடுத்துக்குவாங்க ! இதுக்கு ஒரே வழி எல்லா ஆங்கில படத்தையும் தமிழ்ல டப் பண்றதுதான் வழி ! அப்பத்தான் அந்த இயகுனர்களுகான பெயர் போகும் ! கண்டிப்பா next generation ல இந்த பிரச்னை இருக்காது எல்லோருக்கும் இன்டர்நெட் பயன் படுதுபவ்ர்க்லாக இருப்பாங்க அவங்களுக்கு எல்ல விஷயங்களும் கை நுநீல இருக்கும் இந்த போலிகளை தர இயலாது மிஸ்டர் கருந்தேள் . நீங்க ஈமெயில் அட்ரஸ் புப்ளிஷ் பண்ணுங்க சாப்ட்வேர் வச்சாவது மெயில் பண்ணுவோம் ! திருடுனா இனிமே அசிங்க படனும்
எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.
To Admin :
i’m a hollywood freak . i watch lot of hollywood movies. so i know maximum copy cats works by tamil cinema. i need to say the copy cats works to u.
patch adams – vassol raja
brewsters millioners – arunachalam
very bad things – pancha thanthiram
what abt bob ? – thennali
sunflower – roja
amores perros – ayutha yaluthu
the untouchables – kaka kaka
15 minutes and the bone collector – vetaiyadu vilaiyadu
varaman 1000-forest gump
500 days of summer – vinnai thandi varuvaiyaa
derlaied – pachi killi muthusaram
border town – nadunasi nayygal
ghajini – memento
yogi – tsotsi
vegam – the cellular
planes,trains and automobiles – anbea sivam
Perranmai movie copied from a Russian movie ..that was a black & white..i saw that russian movie in “Makkal TV”…
in this article they said that vamanam film copied from following film. it’s wrong. it’s full and fully copied from enemy of the state movie. will smmith’s movie.
தொடர்ந்து இம்மாதிரி கட்டுரைகளை வெளியிடுங்கள் திருந்தும் வரை விடக்கூடாது.
“Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies”- shawshank redemption
நண்பா நீங்க நல்ல வாட்ச் பண்ணினா ஒரு விஷயம் கண்டு பிடிக்கலாம்
.
விகடன் கொஞ்சநாளாவே எல்லா படத்துக்கும் 40க்கு மேல தான் மார்க் போடுறாங்க ( காசு வாங்கிட்டு போடுறாங்கன்னு நெனைக்கிறேன்
.
வெரி பேட் பெல்லோவ்ஸ்
Let ur journey flourish to every nok and corner
see this thalaivaa……adutha kamal nu usuppethi usupethi nalla pillai surya va yum avara polavae copy cat films la nadikka vittutanunga……..pls see the link
http://www.tamilkey.com/maatraan-is-it-a-copy.html
Little Manhattan-vinnai thandi varuvaiyaa
மீடியா வாய்ஸ் பத்திரிகை காப்பி லிஸ்ட்-ல ஆச்சரியமா சரத்குமார் ஹீரோவா நடிச்ச படங்களும் வந்திருக்கு. அந்த புஷ்பா கனகதுரை இன்னமும் அந்த பத்திரிக்கைலதான் இருக்குறாரா?
This comment has been removed by the author.
நல்ல முயற்சி, கண்டிப்பா இது நடந்தாதான் உண்மையான திறமைசாலிகளை சினிமா கண்டுக்கும், இல்லனா இவனுங்க உலக மகா புத்திசாலினு சீன் போட்டுகிட்டே இருப்பானுங்க
என்னையும் இந்த ஆட்டத்துக்கு செதுக்கோகளேன்
ஏதோ என்னால முடிஞ்சது…
சரோஜா – Judgment Night
அகம் புறம் – American Gangster
UNGALUDAIYA PANI MENMELUM SIRAKKATTUM VAAZHTHTHUKKAL NANDRI
VANAKKAM
SURENDRAN
SURENDRANATH1973@GMAIL.COM