Cowboys & Aliens (2011) – English

by Karundhel Rajesh July 30, 2011   English films

’மரணத்தின் நிறம் பச்சை’ என்று ஒரு டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் உண்டு. அதன் ஆங்கிலப் பெயர், ‘The Green Death’. அதன் கதை? பத்தொன்பதாம் நூற்றாண்டு அரிஸோனாவில் கௌபாய்களுக்கு மத்தியில் திடீரென்று வேற்றுக்கிரக மனிதர்கள் பிரவேசிப்பதைப் பற்றியது. எனது பள்ளிநாட்களில் லயன் காமிக்ஸில் படித்திருக்கிறேன். கௌபாய்களைக் கொன்று, அவர்களது உடையை மாட்டிக்கொண்டு, நதியோரத்தில் ஒரு பாறையின் மீது ஒரு வேற்றுக்கிரக ஜந்து அமர்ந்திருக்கும். அதனை, பின்னாலிருந்து ஒருவன் தொடும்போது, ஜிலீரென்று மிகவும் குளிராக உணர்வான். செதில் செதிலாக அந்த ஜந்துக்களின் தோல் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட ‘Alien’களை டெக்ஸ் வில்லர் & Co எப்படி எதிர்கொள்கிறது என்பதே கதை. அதே கதையை இப்போது படித்தால் கட்டாயம் போர் தான் அடிக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படிப்பட்ட ஒரு கதையைப் படமாகவேறு எடுத்துத் தற்காலத்தில் வெளியிட்டால்? அதிலும், இதில் டெக்ஸ் வில்லர், அம்னீஷியா வந்த XIIIயாக மாறி எஃபக்ட் உடுகிறார் வேறு.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சென்ற ஆண்டில் வெளியானதில் இருந்து இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதுதான் காரணம். அதனால்தான் இன்று காலையில் திரையரங்குக்குச் சென்றேன். அதேபோல், படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் நன்றாகவே சென்றது. கௌபாய்கள், துப்பாக்கிகள், தெருச்சண்டைகள் இப்படி. அதன்பின்?

டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ்களில் வருவதுபோலவே . . . . அரிஸோனாவில் ஒரு பகல்பொழுது. மண்ணும் கல்லும் வெயிலும் நிறைந்திருக்கும் நேரம். மயக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான் ஜேக் லோனாகன். அவனது கையில் ஒரு மர்மமான இரும்பு வளையம். எழுந்தவுடன் அதனைப் பார்க்கும் ஜேக், அந்த வளையத்தை உடைக்க முயல்கிறான். ஆனால் அவனால் அது முடிவதில்லை. வயிற்றின் வலதுபுறத்தில் ஒரு ஆழமான வெட்டுக்காயம். அப்போது அங்குவரும் கௌபாய்கள் கும்பல் ஒன்று, அவனை அடையாளம் கண்டுகொண்டு, நகரத்துக்கு அவனை இழுத்துச் செல்ல முயல, அவர்களை அதிரடியாகக் கொன்றுவிட்டு, பக்கத்தில் இருக்கும் நகரமான ‘அப்ஸல்யூஷன்’ (Absolution) என்ற இடத்துக்குள் நுழைகிறான்.

ஒரு முரட்டு கௌபாய், ஒரு அமைதியான ஊரில் நுழைந்தால் என்ன நடக்கும்? அந்த நகரத்தில் ஒரு ரவுடி இருக்கவேண்டும். அவன், மக்களை பயமுறுத்தி வைத்திருக்க வேண்டும். அப்போது அங்கு எண்ட்ரி கொடுக்கும் கௌபாய், அவனை, எந்த விவரமும் அறியாமல் இருக்கும் நேரத்தில்கூட, அடித்து வீழ்த்த வேண்டும். இந்த நிகழ்ச்சிகள், அட்சரம் பிசகாமல் அதே வரிசையில் நடக்கின்றன. நமது ஜேக், வங்கிக் கொள்ளையில் தேடப்படும் அதிமுக்கியக் குற்றவாளியாக வேறு இருப்பதால், அவனை உள்ளே வைக்கிறார் ஷெரீப். இதன்பின் என்ன? ஆங். அதேதான். நகரில் ரவுடித்தனம் செய்து திரிந்த அந்த மனிதன், நகரின் பிரபல புள்ளியான கர்னல் டோலர்ஹைடின் மகன். எவனோ ஒரு அந்நியன் தனது மகனை வீழ்த்திய விஷயம் கேள்விப்பட்டு கடுப்பின் எல்லைக்கே செல்லும் கர்னல், மகனை விடுவிப்பதற்காக தனது அடிவருடிகளோடு ஷெரீப்பின் ஆஃபீஸுக்கு வருகை புரிகிறார்.

சரி.. இதுவரை வெறும் கௌபாய்கள் மட்டும்தானே வந்திருக்கிறார்கள்? படத்தின் டைட்டிலில் இருக்கும் ஏலியன்கள் எங்கே? என்று இதற்குள் கவலைப்பட ஆரம்பித்துவிடும் ரசிகரா நீங்கள்? இல்லை, ஒருவேளை ஏலியன்கள் என்று சொன்னது, தள்ளாத வயதிலும் இண்டியானா ஜோன்ஸைப்போன்ற மேக்கப்போடு குதிரையில் வரும் ஹேரிஸன் ஃபோர்டைக் குறிக்கிறதோ என்று சந்தேகப்படும் சாகஸ ரசிகரா நீங்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தரும்பொருட்டு, டமாலென்று ஒரு குண்டு, இந்தக் கும்பலின் இடையே விழுகிறது. அடிவானத்தின் அடியாழத்தில், பளபளவென்று பல வண்ணங்களில் விளக்குகள் பளிச்சிடுகின்றன. ‘அய் வந்துட்டானுங்கடா ஏலியன் மவராசன்கள்’ என்று குதூகலம் அடையமுடியாதவண்ணம், ஆல்ரெடி ஆயிரம் படங்களில் வந்த அதேபோன்ற ஒரு சண்டைக்காட்சி. இதில், விபரீத உணர்வைக் கூட்டி, திகிலைப் பெருக்கவேண்டும் என்று திரைக்கதையாளர்கள் கண்டபடி ஆசைப்பட்டதன்பொருட்டு, மேலேயிருந்து கொக்கிகளை வீசி, அப்படியப்படியே மனிதர்களையும் இழுத்துக்கொள்கிறார்கள் இந்த புதிய ஏலியன்கள்.

ஆனால், கரெக்டாக, கர்னல் டோலர்ஹைடையும், கதாநாயகன் ஜேக்கையும் மட்டும் விட்டுவிட்டு, மற்றபடி பெரும்பான்மையான மக்களை இவ்வண்ணம் கவர்ந்துசென்றுவிடுகின்றனர். அதேபோல், ஆல்ரெடி பல படங்களில் பார்த்த அதே விஷயம் – ஒரே ஒரு ஏலியன் மட்டும் இளிச்சவாய் ஏலியனாக இருப்பதால், ஜேக்கின் கையில் இருக்கும் இரும்பு உபகரணத்தில் இருந்து பாயும் வெளிச்சத்தினால் பாதிக்கப்பட்டு, பொதேலென்று விழுந்துவிடுகிறது.

இதற்குப்பின்னர், ஜேக் மற்றும் டாலர்ஹைட் ஆகியவர்கள் வீறுகொண்டு எழுந்ததால், ஊரில் மிச்சம் இருக்கும் குஞ்சு குளுவான்கள் அடங்கிய ஒரு சொத்தைப் படை, ஒன்றுசேருகிறது. இந்த ஏலியன்களில், காயம்பட்டு விழுந்த இளிச்சவாய் ஏலியன் விட்டுச்சென்ற காலடித்தடத்தைப் பின்பற்றி (அதன் ரத்தம் பச்சைக் கலரில் இருக்கிறது – மரணத்தின் நிறம் பச்சை?), அதன்பின்னால் செல்லும் இந்தக் குழுவுடன், திடீர் தரிசனம் தரும் ஏலியனார் மயிரு கூச்செரியும் விதத்தில் ஒரு சண்டையும் (???!!!) போடுகிறார்.

இந்த இன்பிட்வீன் கேப்பில், ஒரு அழகியின் பிரவேசம். ’மே கோன் ஹூ?’ என்று மண்டை குழம்பித் திரிந்துகொண்டிருக்கும் ஜேக்கையே கண்டபடி பின்தொடரும் இந்த அழகி யார்? (கருமம்டா சாமி. இந்த மொக்கைல இது ஒரு மினி மொக்கை).

கௌபாய் காமிக்ஸ்களில் பரிச்சயம் உடைய ரசிகராக இருந்தால், இந்த நேரத்துக்குள், அந்தக் காமிக்ஸ்களின் இன்றியமையாத இன்னொரு அம்சம் காணோமே என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பித்திருப்பார். எல்லாக் கௌபாய் காமிக்ஸ்களிலும் தவறாது இடம்பெறும் அவர்கள்- செவ்விந்தியர்கள் ! இந்தப் படத்திலும், ஒரு செவ்விந்திய கும்பல் வருகிறது. ‘ஜெய் மந்திர ஜூம்மா’ ரேஞ்சில் ஒரு நடனம், அவர்கள் கொடுக்கும் ரகசிய பானத்தை, ஏதோ ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்யும் ஓபாமா அருந்தும் ரேஞ்சில், கதாநாயகன் அருந்துவது, அதன்பின் அவனுக்குப் பழைய நினைவுகள் வந்துவிடுவது, அவனது மனைவியை இதே ஏலியன்கள் கொன்றது, அவர்களிடம் இருந்து வயிற்றில் வெட்டு வாங்கிக்கொண்டு கதாநாயகன் தப்பித்தது (தப்பிக்கும்போது எதேச்சையாக (டேய் டேய் வாணாண்டா… இது உங்களுக்கே அடுக்காது) அவர்களது ஆயுதம் இவனது கையில் மாட்டிக்கொள்வது, அந்த ஆயுதமே ஒரு பயங்கர பவர்ஃபுல் வெடிகுண்டாக மாறுவது, அந்த ஆயுதத்தை என்ன செய்தாலும் கழற்ற முடியாத ஈரோ, கதாநாயகி சொல்லும் எளிய வழியைப் பின்பற்றிக் கழற்றுவது – அதாவது, அந்த ஆயுதத்தைக் கழற்ற வேண்டுமானால், மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் இருக்க வேண்டுமாம் – எனவே, படீலென்று ஒரு கிஸ் அடித்தால், மனம் வெறுமையாகி, ஆயுதம் கழன்றுவிடுமாம் – அது என்ன ஜட்டியா? கிஸ் அடித்தவுடன் கழன்று விழுந்துவிடுவதற்கு? ஆகிய இன்னபிற ஹாலிவுட்டிலிருந்தே ஒழிக்கப்பட்டுவிட்ட க்ளிஷேக்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, பார்ப்பவர்களை உடனடியாக ஏர்வாடிக்கு அனுப்புவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள படம்தான் இது.

இந்தக் கதாநாயகி யார் என்று பார்த்தால், ஆல்ரெடி இந்த ஏலியன்களால் அழிக்கப்பட்டுவிட்ட ஒரு கிரகத்தின் சர்வைவராம். ஆகவே அவர்களைப் பின்தொடர்ந்து வந்து, பூமியின் மாந்தர்களுக்கு டிப்ஸ்கள் தருகிறாராம். ஹெஹே.. யாருகிட்ட? நாங்கள்லாம் மணிரத்னம் படத்தைப் பார்த்தே வளர்ந்தவங்க மாமு. எங்களை இதுமாதிரி மொக்கை செண்டிமெண்ட் போட்டெல்லாம் கவுக்க முடியாது தெர்யும்ல. இது பற்றாது என்று, செவ்விந்தியர்கள் முன்னிலையில் வித்தவுட்டாக ஒரு சீன் வேறு (ஆனால் அதில் ஒன்றும் தெரிவதில்லை என்பது வேறு விஷயம்). க்ளைமாக்ஸில், எதிரிகளின் பிரம்மாண்ட விண்கலத்துக்குள் ஏறி, மனித வெடிகுண்டாகவேறு மாறி, பார்வையாளர்களின் ஏகோபித்த எள்ளி நகையாடலுக்கும் ஆளாகிறார்.

படத்தில் ஆகமொத்தம் என்னதான் சொல்லவருகிறார்கள் என்பது எவருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த ஏலியன்களாவது பார்க்கப் பயங்கர எஃபக்டைக் கொடுக்கின்றனவா என்றால், அடியோடு இல்லை. நன்கு வளர்ந்த கடாமாடுகள் இரண்டு கால்களில் நடந்துவந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றன. எனவே, அவைகளைப் பார்த்தாலும் சிரிப்புதான் வருகிறது.

படத்தின் ஒரே நல்ல அம்சம் – இசை. அதுவும்கூட, ஆரம்ப மற்றும் முடிவு டைட்டில்களின்போது மட்டுமே.

டானியல் க்ரெய்க், ஹாரிஸன் ஃபோர்ட் போன்ற நடிகர்களை வைத்து, வருடக்கணக்கில் கேலிசெய்து சிரிக்கும் வகையில் இயக்குநர் ஜான் ஃபாவ்ரூ (அயர்ன் மேன் படங்களின் இயக்குநர்) இந்தப் படத்தை எடுத்துத் தொலைத்திருக்கிறார். டானியல் க்ரெய்க், பெர்ர்ரிய இரும்புக்கை கோயாவி… ச்சீ.. மாயாவி ரேஞ்சில் வந்து அலட்டுகிறார். எனவே, இந்தப் படத்தைப் பார்க்கவே பார்க்காதீர்கள். மீறிப் பார்த்தால், அந்தக் கடுப்பு, பல நாட்களுக்கு உங்களைத் துரத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கடைசியாக இதுபோன்ற ஒரு மொக்கைத்தனமான தற்குறி ஆங்கிலப்படம் பார்த்தது, சென்னையில் Watchmen பார்த்தபோதுதான். இப்போது என்ன தோன்றுகிறது என்றால், வாட்ச்மென் எவ்வளவோ பரவாயில்லை. இதுதான் மொக்கையின் உச்சம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த அரைபிளேடின் டிரெய்லர் இது.

இனிமே இப்புடி எடுங்கடா … அங்க வந்து வெட்டுவேன்

  Comments

27 Comments

  1. இன்னைக்கு அல்லார் பதிவிலும் நாந்தான் first……

    இதுவந்து நெசமான நாந்தான்…..

    Reply
  2. பதிவ வேற படிக்கனும்ல இருங்க…

    ஆனா…// கடைசியாக இதுபோன்ற ஒரு மொக்கைத்தனமான தற்குறி ஆங்கிலப்படம் பார்த்தது, சென்னையில் Watchmen //

    அதுகூட Drive Angry – Expendables விட்டுப்போச்சு (எனக்கு)……..

    Reply
  3. // செவ்விந்தியர்கள் முன்னிலையில் வித்தவுட்டாக ஒரு சீன் வேறு (ஆனால் அதில் ஒன்றும் தெரிவதில்லை என்பது வேறு விஷயம்) //

    olivia Wilde………….

    அதவுடுங்க……படத்த கூட பாத்திரலாம் போல….இம்புட்டு பெரிய விமர்சனமா………………….ஆண்டவா…….

    Reply
  4. Daniel Craig – Munich – Defiance – Road to perdition – அப்பறம்….மொத பான்ட் படம்….என்னாது அது…..பேரு மறந்து போச்சு………….அதோட சரி..போல……..என்னாச்சோ…….ஹாரிசன் போர்டுக்கு 84 வயசாச்சாமே……பேசாம உக்கார வேண்டியதுதான…..எதுக்கு இந்த வி.எஸ்.ராகவன் வேல…..

    Reply
  5. //யோவ் அவருக்கு 69 தான் யா !! // என்ன இது படு டபுள் மீனிங் கமெண்ட்டா இருக்கு…

    Reply
  6. நீங்கள் முனி – 2 காஞ்சனா பார்த்து விட்டீர்களா ? அருமையான படம்…

    Reply
  7. ப்லாக் எழுதாததின் நன்மைகள் என்ன?

    9. இது போன்ற மொக்கைகளை முதல் நாளே பார்த்து, வெந்து, நொந்து.. பதிவெழுதி.., ஓட்டுப் பட்டைகளில் சேர்த்து………………… ஹும்……

    Reply
  8. இன்று நாளைக்குள்… LOTR வரவில்லையென்றால்… கொழந்தயும்.. நானும் பதிவெழுதுவோம் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.

    Reply
  9. கொழந்த அல்ரெடி இலக்கிய ரசம் சொட்ட சொட்ட ஒரு பதிவு எழுதிட்டு இருக்காராம்…

    Reply
  10. //அது என்ன ஜட்டியா? கிஸ் அடித்தவுடன் கழன்று விழுந்துவிடுவதற்கு? //

    ஹா…ஹா…ஹா

    நண்பரே!
    கடுப்பிலதான் காமெடி சரமாரியா வருது.

    Reply
  11. நண்பரே!ரொம்ப நாளா கவுபாய் படம் பாக்கணும்னு ஆசைப்பட்டேன்.மண்ணள்ளிப்போட்ட அந்த டைரடக்கருக்கு பவர்ஸ்டார் படம் டிவிடி அனுப்பப்போறேன்.

    Reply
  12. கோளிக்காமிக்ஸின் கோடிக்கணக்கில்லாத ரசிகர்கள் சார்பாகவும், சூசைட் ஹீரோ, பக்கா லோக்கல் வைரம் கோயாவியின் ரசிகர்கள் சார்பாகவும் அவரின் திரு நாமத்தை போஸ்டரில் உபயோகித்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்பதை நன்றிகளுடன் கூறிக் கொள்கிறோம் :))

    Reply
  13. நண்பரே,

    என்ன செய்யலாம், பறக்கும் தட்டுக் கடத்திய பாட்டு வாத்தியார் கதையில் ஏலியன்களை வேறுவிதமாக கோளிக்காமிக்ஸில் காட்டியிருப்பார்கள் 🙂 அது உண்மையான சம்பவங்களை ஆதராமாக கொண்டு உருவாக்கப்பட்டது, இவ்வகையான அமெரிக்க வசந்தத்தின் வசூல் அள்ளி செயற்கைத்தனங்கள் அதில் இருக்காது. இத்திரைப்படத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறீர்கள், பதிவிலும் கோயாவி வந்திருக்கிறார் எனவே உங்களிற்கு பாலைவனத்தில் 10மா 10மா இதழ் எடிட்டர்ஸ் கட் உடனடியாக கூரியரில் அனுப்பி வைக்கப்படும் 🙂

    Reply
  14. எனக்கென்னமோ இந்த படம் ரொம்ப பிடிச்சுருக்கு (என்னை பொறுத்த வரையில்). உங்களுக்கு எப்படியோ தெரியல… தி பெஸ்ட் ஒன் ஐ எவர் சீன்….

    Reply
  15. ஆமா தல… கொழந்த கருத்தே எனதும்… படம் சக்கைய இருக்கு… இங்க சவுத் புளோரிடாவில் சக்கை போடு போடுது… எனக்கும் ரொம்ப புடிச்சுர்க்கு…

    Reply
  16. @Karundhel
    உரைநடையை மடக்கி எழுதி அதை கவிதை என்று தம்பட்டம் அடிக்கும் அந்த கவிஞர் வடக்குபட்டி ராமசாமி என்ற பெயரில் தானே ஒரு போலி profile இல தனது Alter ego வை நிறுவி பரபரப்பை ஏற்படுத்தி பிரபலம் ஆக நினைக்கிரார்.இதெல்லாம் ஒரு பொழப்பா அவருக்கு?ஐயோ!!

    Reply
  17. விமர்சனத்தில் உங்கள் ஆதங்கம் புரிகிறது.
    அதிலும் ஆயுதம் கழன்றுகொண்ட காட்சிக்கு நீங்கள் சொன்ன உதாரணம்.. ஆதங்கத்தின் உச்சம்.

    முதல் முறை வருகிறேன்.
    நல்லதொரு விமர்சனத்தைப் படித்த திருப்தி உள்ளது.
    பாராட்டுக்கள்.

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    Reply
  18. // இங்க சவுத் புளோரிடாவில் சக்கை போடு போடுது… //

    எலேய்… ஜாக்ஸன்வில் எந்த ஃப்ளோரிடாவில் இருக்குன்னு தெரிஞ்சிகிட்டாவது.. எலிக்குஞ்சு பேர்ல கமெண்ட் போடுங்கவே.

    Reply
  19. @ கொழந்த – டிரைவ் ஆங்ரில ஆக்ஷனாவது இருக்கும். Expendables படம், முழுக்க முகுக்கத் தலைவர் ஸ்டாலோன் படம். ஸ்டாலோன் ரசிகரா இருந்தா அது கட்டாயம் புடிக்கும். ஆனா இந்தப் படம் இருக்கே. ஃபோர்ட் அல்லது டானியல் க்ரெய்க் ரசிகனா இருந்தாக்கூட இது புடிக்காது. மரண மொக்கை.

    @ ஆனந்த் – முனி – 2 இனிதான் பார்க்கலாம் என்று இருக்கிறேன். என் ரிவ்யூவுக்குப் பதிவுலகமே வெயிட்டிங்க்னு தெரியும் 🙂 . இருந்தாலும் அதை இப்ப போட மாட்டேன். அடுத்த வருஷம் போடலாம்னு இருக்கேன் :-).

    @ எலிக்குஞ்சு – என்னாது ஒட்டுப்பட்டைல சேர்க்குறதா? கண்ட மொக்கைச்சாமி எல்லாம் அப்புடிப் பண்ணும்போது நாம பண்ணுனா என்ன ? 🙂 . . அதான் அப்புடி விடாம சேர்த்திக்கினு வாரேன். தமிழ்ப்பதிவுலகம் ராக்ஸ் 🙂

    @ உலக சினிமா ரசிகரே – கடுப்பு என்பது மிகவும் டீசன்ட்டான வார்த்தை. அதை இப்புடித்தான் சொல்லணும் – @*#&$^%@#@ பயலுங்க . . பவர் ஸ்டார் படம்? ஹிஹிஹிஹி . . 🙂 . .

    @ காதலரே – பாலைவனத்தில் பத்துமா பத்துமா இதழின் எடிட்டர்ஸ் கட் எனக்கு வரப்போவதை எண்ணி இறும்பூது எய்துகிறேன் . உலகிலேயே அதனைப்பெறப்போகும் முதல் ரசிகன் நான் தன் என்று என்னும்போது, காணாமல்போன தனது ஜட்டி கிடைத்தவுடன் வேதாளன் மகிழ்ச்சியுறுவானே. . அத்தகைய குதூகலம் எனது உள்ளத்தில் கவ்விக் கொள்கிறது. கொயாவியை இனி பல படைப்புகளில் உபயோகித்திடலாம். கவலையை விடுங்கள்.

    @ டுபாகூர் கொழந்த & டுபாகூர் எலிக்குஞ்சு – இந்தத் தளம் ஒரு புனிதமான இடம். இங்க வந்து நாறடித்தால், நான் பதுக்கி வைத்திருக்கும் அனானி ஐடிக்க்களை வெளியில் விட்டுவிட நேரும் என்று எச்சரித்துக் கொள்கிறேன். தமிழ்ப்பதிவுலகம் ஒரு கோயில். அதில் மணியை ஆட்ட பலர் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    @ கேபிள் – ஹீ ஹீ 🙂 . . நீங்களுமா? சேம் பின்ச் 🙂

    @ ஹமீத் – நீங்கள் நிஜமான ‘அவரா’? அப்படியெனில், உங்கள் வருகை நல்வரவு ஆகுக. நீங்கள் சொல்லும் கவிஞ்சர் யாரென்று புரியவில்லையே? வடக்குப்பட்டி ராமசாமி? போலி ஐடி? வெளிப்படையா பேரைச்சொல்லிருங்க .. இல்லேன்னா தூக்கமே வராது 🙂

    @ d – ரைட்டு :_) . . அதையும் மார்க் பண்ணியாச்சி

    @ இந்திரா – வருகைக்கு நன்றி. அடிக்கடி வரவும் (டெம்ப்ளேட் உபயம் – தமிழ்ப்பதிவுலகம் ) .. வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

    @ கேரளாக்காரன் – அய்யோ இங்கயும் அதே. நான் போயி ஒரு டோனட் சாப்புட்டதுல, எக்ஸ்ட்ரா அறுபது ரூபாயும் அவுட்டு. மொத்தம் 300 எனக்கு 🙁

    Reply
  20. //படீலென்று ஒரு கிஸ் அடித்தால், மனம் வெறுமையாகி, ஆயுதம் கழன்றுவிடுமாம் – அது என்ன ஜட்டியா? கிஸ் அடித்தவுடன் கழன்று விழுந்துவிடுவதற்கு?//

    தூள்!

    Reply
  21. போலி ஐடி? வெளிப்படையா பேரைச்சொல்லிருங்க .. இல்லேன்னா தூக்கமே வராது :-)////////
    .
    .
    தூக்கம் வராததும் நல்லதுக்குதான்!!

    Reply
  22. Ayoo ayoo nethu padam paka poi kanchana effect theater la motham 4 peru yappa kodutha 100 rupaiku kuvatar vangi adicha kooda mappavathu eri irukum nasama pochu ….-jagadeesh

    Reply

Join the conversation