Crime Spree (2003) – French/ English
திருட்டு. பலசமயம் மிகவும் சீரியஸாக முடியும் ஒரு விஷயம், மிகச்சில சமயங்களில் காமெடியாக முடிந்து விடுவதும் உண்டு. அதுவும், திருடர்கள் ‘ஸ்டேட்டு உட்டு ஸ்டேட்டு’ போய்த் திருடும்போது, சில குழப்பங்கள் நடந்து, அவர்கள் மாட்டிக் கொள்வது, எப்பொழுதாவது நடக்கும் ஒரு விஷயம். நாமே செய்தித்தாள்களில் படித்திருப்போம். சமீபத்தில் பெங்களூரில், விசாரிக்கச் சென்ற போலீஸ்காரர்களே, கும்மாங்குத்து வாங்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாம் முழுமையாக உடனிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்?
‘தவம்’ படத்தில் வடிவேலு, கீரிப்புள்ள’ என்ற பெயரில், திருடச் செல்லும் காமெடியைப் பார்த்திருப்பீர்கள். திருடத்தெரியாமல் திருடிவிட்டு, பின்னர் போலிசிடம் மாட்டிக்கொள்வார். ஏனெனில், அவர் திருடியதே ஐ.ஜி. வீட்டில்! அதுமட்டுமல்லாமல், அவரது ‘அப்ரசந்தி’ பாலாஜி, தற்குறித்தனமாக அவரை மாட்டிவைத்து விடுவார். இதைப்போலவே ஒரு முழுநீளக் காமெடிதான் ‘Crime Spree’.
ஃப்ரான்ஸ் நாட்டில் ஒரு லோக்கல் திருட்டுக்கும்பல். அவர்களுக்கு ஒரு ‘அஸைன்மென்ட்’ ஒரு உள்ளூர் தாதாவினால் கொடுக்கப்படுகிறது. அவர் கொடுக்கும் முகவரியில் போய், அங்கிருக்கும் நகைகளைத் திருடிக்கொண்டு வருவது தான் அந்த வேலை. ஆனால், அந்த முகவரி இருப்பது அமெரிக்காவில். வேறு வழியே இல்லாமல், இதில் உள்ள சூதும் தெரியாமல், அந்த கும்பல் அங்கு போய், பல கஷ்டங்களை அனுபவித்து, எப்படியோ அந்த வீட்டிற்குள் ரகசியமாகச் சென்று திருடும்போது அந்த வீட்டின் சொந்தக்காரர் எழுந்து வர, அவரைப் பிடித்துக் கண்டபடி கட்டிவைத்து, அவர் கண் முன்னாலேயே திருடிவிட்டுச் செல்லும்போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரியவருகிறது. அந்த ஆள், சிகாகோ மாஃபியாவின் பாஸ் என்று! படுபயங்கரமான அதிர்ச்சிக்குள்ளாகும் அந்த கும்பல், அங்கிருந்து ஓடிவிடுகிறது.
தன் வீட்டிலேயே ஆட்டையைப் போட்ட கும்பலின் மேல் கடுப்பாகும் மாஃபியா பாஸ், கும்பலைக் கண்டுபிடிக்க தன்னுடைய (தத்தித்தனமான) கும்பலை ஏவிவிடுகிறார்.
நாடு விட்டு நாடு போய், முதலில் மாஃபியாவால், பின்பு போலீஸால், அதன்பின், சில மர்ம ஆசாமிகளால் துரத்தப்பட்டு, கண்டபடி ஓடும் ஒரு தற்குறி கும்பலின் கதை தான் Crime Spree.
இந்தக் கும்பலை அறிமுகம் செய்வதே ஒரு சுவாரஸ்யம். எடுத்த எடுப்பில், அவர்கள் ஒரு வீட்டில் திருடுவதுடன் படம் ஆரம்பிக்கிறது. திருட்டுக்குத் தேவையான அனைத்து சாமான்களையும், ஒரு லிஸ்ட்டை வைத்து வாங்கும் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன், அதில் பாட்டரிகள் இல்லாததால், வெறும் டார்ச்சை மட்டும் வாங்கிவந்துவிடுகிறான். அந்த இருவருக்கும், வீட்டின் உள்ளேயே சண்டை நடக்கிறது.
நம்ம சுப்பாண்டி ரேஞ்சுக்கு சிந்திக்கும் ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு கனிவான இதயம் இருக்கிறது. ஓருவரையும் விட்டுக்கொடுக்காத குணமும் இருக்கிறது. இத்தனை துரத்தலுக்கும் என்ன காரணம், அவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதே படத்தில் மீதி.
படத்தின் முக்கிய கேரக்டர்கள்: Zero, Sami, Daniel, Julien, Raymond மற்றும் Marcel. இவர்களில் ஜீரோ, தன்னைத்தானே பன்மையில் அழைத்துக்கொள்ளும் ஒரு கேரக்டர். கும்பலின் காட்டடி கந்தசாமி இவரே. ரேமண்ட் ஒரு சாந்தசொரூபி. எல்லோரிடமும் பண்பாகப் பழக வேண்டும் என்பது இவரது லட்சியம். ஒரு பயங்கர பரபரப்பான சூழ்நிலையில், ஊரே பற்றி எரிகிறது என்றாலும்கூட, சாந்தமாக, அடுத்தவர் கோபத்தில் சொன்ன வார்த்தைகளைப் பற்றி எடுத்துக் கூறி, அவரைத் திருத்த முயல்பவர். மார்செல், இவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய தாதாவின் ஆள். சேமி ஒரு துடிப்பான பிக்பாக்கட். டானியல், நம்ம பீம்பாய் மாதிரி. ஜுலியன் தான், டார்ச்சுக்கு பாட்டரி வாங்காமல் வந்த ஆள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து, ஃப்ரான்ஸிலிருந்து அமெரிக்காவுக்குக் கொள்ளையடிக்கப் போனால், எப்படி இருக்கும்?
எப்படியோ சிகாகோ சென்று, முகவரியைக் கண்டுபிடித்து, திருடும்போது, இவர்கள் கட்டிப்போடும் அந்த மாஃபியா பாஸ்தான் Harvey Keitel (Pulp Fiction புகழ், மற்றும் பல படங்கள்). ஒரு கொடூரமான பாஸ். தனக்கே ஆப்பு வைத்த ஒரு ஃப்ரெஞ்சு கும்பலைப் பற்றிய உச்சபட்ச கடுப்பில், நகரெங்கும் அவர்களைத் தேட ஏற்பாடு செய்கிறார். நமது கும்பல் மாட்டியதா இல்லையா என்பது தான் படம்.
படத்தின் அத்தனை வசனங்களிலும் இருப்பது, முழுநீள நகைச்சுவை. இந்தப்படத்தின் ப்ளஸ் பாயிண்டே அதுதான். மனதுவிட்டு சிரிக்கவைக்கும் வசனங்கள். முதலில் 2003 இல் ஃப்ரென்ச்சில் (வான்ட்டட் என்ற பெயரில்) வெளியிடப்பட்ட படம், பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.
படத்தின் இயக்குநர் Brad Mirman. இவர் மொத்தமாக இயக்கிய படங்களே இரண்டுதான். இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர். அண்ணாத்தையின் திரைக்கதைதான் நம்ம எல்லாருக்கும் பிடிச்ச, பரங்கிமலை ஜோதி மடோன்னா புகழ் ‘Body of Evidence’.
இவரு ஒரு கய் ரிட்சீ ரசிகர் போல.. படம் பூராவும் அந்த ஸ்டைல் மேக்கிங் தான். ஆனா ஒரு தபா கட்டாயம் பார்க்கலாம். இது ஒரு ஹாலிவுட் பஞ்சதந்திரம்.
இதன் ட்ரைலருக்கு இங்கே
கலக்கல்…!! இதையும் நோட் பண்ணிக்கறேன்!!
சும்மா.. போட்டுத்தாக்கறீங்க தல!!!
summa pattaiya kelaputhe unga vemarsanam. Keep it uppppppppppu!
@ பாலா – எல்லாமே உங்க ஸ்கூல்ல கத்துகிட்டதுதானே தல.. 🙂 . . நீங்கதான் குருசாமி .
@kolipaiyan – நன்றிங்ண்ணா . . .உங்க வாழ்த்துகளுக்கு . . 🙂
interesting review.. Keep up da good work 🙂
Interesting read reviews in Tamil about interesting non-Tamil movies.
Will visit often to read more.
@ Anonymous and @ On my way – உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கண்டிப்பா மறுபடி வாங்க 🙂 . .
கலக்குறீங்க தல. வாழ்த்துக்கள்.
சூப்பர்ப் விமர்சனம் 🙂
விமர்சனம் நல்லா இருக்கு. உங்களுக்கும் பாலா தான் குருவா..? கலக்குங்க.
@ சரவணக்குமார், @ சென்ஷி – நன்றிங்க்ணா . . .:)
@ அறிவுGV – நம்ம எல்லாருக்குமே அவுருதான குருஜி.. 😉 . .
Jaishankar fan? Just asking this based on your blog name
கருந்தேள் கண்ணாயிரம்…பேரே டரியலா இருக்கே… தல…
பாலாவோட ஆஸ்மரத்துலேருந்து இன்னொரு நல்லவரா… சந்தோஷம்…
விமர்சனம் சூப்பர் தல… நம்ம இட்டாலியன் ஜாப் படம் மாதிரி சுவாஸ்யமா இருக்கும்னு நினைக்கிறேன் பார்த்திடலாம்..
தல அப்புறம் ஒருவிசயம்: டெம்ப்ளேட்டு ரொம்ப டெரரா இருக்கு. படிக்க கொஞசம் சிரமமா இருக்கு. லைட் பேக்ரவுண்டுல கறுப்பு எழுத்துக்களா இருந்தா இன்னும் எளிதாகப்படிக்கலாம்… நம்ம தல பாலாவோடது மாதிரி… ட்ரை பண்ணுங்க…
@ Booksforlife – ஜெய்சங்கர புடிக்குண்ணா. . ஆனா ஃபேன் இல்ல 🙂 . . இது மனோகர் பேரு இல்ல? கைதி கண்ணாயிரம் படத்துல?
@ நாஞ்சில் பிரதாப் – உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.. படம் காமெடி பீசு.. நல்லா சிரிக்கலாம்.. அப்பறம், நம்ம டெம்ப்ளேட்டு சீக்கிரமே மாத்தப்போறேன்.. அதுனால, படிக்குறதுக்கு ரம்மியமா சீக்கிரமே பண்ணிரலாம். உங்க ஃபீட்பேக்குக்கு நன்றி..
nice review boss……
தம்பி நட்டுவாக்களி,
பெரியாரின் எழுத்துக்களை காபி பேஸ்டு செய்து எங்களைப்போல வலையில் எழுதி நாத்திகம் வளர்க்கலாம் வாப்பா. பாப்பானை உலகை விட்டே விரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கு
அய்யா சங்கமித்திரரே . . பெரியாரின் கருத்துகளை ஏற்கனவே பல பேரு காப்பி பேஸ்ட் தான் பண்ணுறாங்க. . யாரும் அதன்படி வாழ்வதில்ல.. நானு அப்படி வாழ முயற்சி பண்ணுற ஆளு . .அதுனால, இங்க நோ காப்பி பேஸ்ட். . ஒன்லிப்ராக்டிகல் தான் . . 🙂
பி கு – அப்படியே அவரு சொன்ன மத்த கருத்துக்களான பெண்ணுரிமை, சுயமரியாதை . . இந்த மாதிரி மத்த விஷயத்தையும் கொஞ்சம் வளர்க்கலாமே 🙂