The Dark Knight – Begins

by Karundhel Rajesh July 13, 2012   English films

Batman என்ற கதாபாத்திரத்தின் பின்னணி என்ன?அதாகப்பட்டது என்னவென்றால் (என்று ஆரம்பித்து இந்த பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது (1939 ல் சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாப் கேனால் உருவாக்கப்பட்டது), அதன் குணாதிசயங்கள் என்னென்ன (இது எல்லாருக்குமே தெரியுமே), அதன் வில்லன்கள் யார் (யோவ். நிறுத்தமாட்டியா நீயி), இதுவரை எந்தெந்த பேட்மேன் படங்கள் வந்துள்ளன (ஜாக் நிகல்ஸன் ‘ஹீரோ’வாக நடித்த Batman, அப்பால Batman Returns, அப்பால Val Kilmer ஸ்பெஷல் – Batman Forever followed by Batman & Robin எல்லாத்தையும் நாங்க பார்த்துட்டோம். மவனே வளவளன்னு எயுதி கொலைவெறியை தூண்டாத) ஆகிய விபரங்களை இந்தமுறை எழுதப்போவதில்லை. ஆகவே தப்பித்தீர்கள்) என்றெல்லாம் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கமாட்டேன். அதற்குப் பதிலாக . . . . .

Batman & Robin படத்தின் படப்பிடிப்பின்போதே அதன் இயக்குநர் ஜோயல் ஷூமேக்கரின் (Joel Schumacher) படமாக்கும் திறமையால் கவரப்பட்ட வார்னர் ப்ரதர்ஸ், ஐந்தாவது பேட்மேன் படமாக Batman Triumphant என்ற படத்தை இயக்கச்சொல்லி அவரை அணுகியது. இதற்கு முந்தைய இரண்டு பேட்மேன் படங்களின் திரைக்கதையாசிரியரான அகிவா கோல்ட்ஸ்மேன் (Akiva Goldsman) இந்த வாய்ப்பை ஒட்டுமொத்தமாக நிராகரித்து எஸ்கேப் ஆகிவிட்டதால், வேறு ஒரு ஆளை வைத்து (Mark Protosevich) திரைக்கதை ரெடி செய்யப்பட்டது. படத்தின் வில்லனாக ஸ்கேர்க்ரோ (Scarecrow) இந்தக் கதையில் வருவதாகவும், ஸ்கேர்க்ரோவின்  fear toxin என்ற மருந்து பேட்மேனுக்குள் inject செய்யப்பட்டுவிடுவதால், பேட்மேனின் மனதில் எழும் பிரமைகளில் ஜோக்கர் உலவப்போவதாகவும் திரைக்கதை பின்னப்பட்டது. ஜோக்கராக அதே ஜாக் நிகல்ஸன். பேட்மேனாக அதே ஜார்ஜ் குஞ்சுண்ணி . . ச்சே.. க்ளூனி.

ஆனால், அதுவரை வெளிவந்த பேட்மேன் படங்களிலேயே அரத மொக்கையாக Batman & Robin இருந்ததால், அதன் வசூல் இருப்பதிலேயே குறைவாக அமைந்தது (குறைவு என்றால் ஃப்ளாப் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. கிட்டத்தட்ட 238 மில்லியன் வசூல். படத்தின் பட்ஜெட் 125 மில்லியன்). இதனால் வார்னர் ப்ரதர்ஸின் கவனம் ஐந்தாவதாக அமைய இருந்த Batman Triumphant படத்திலிருந்து நழுவியது. ஜோயல் ஷூமேக்கர் ஏமாற்றமடைந்தார்.

இதன்பின் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம், எக்கச்சக்கமான பேட்மேன் ஸ்க்ரிப்ட்களை பரிசோதித்தது. சில வருடங்கள் இப்படிக் கழிந்தன. இறுதியாக இயக்குநர் டேரன் அரனாவ்ஸ்கி (Darren Aronofsky) வார்னரால் அமர்த்தப்பட்டார். உடனேயே அரனாவ்ஸ்கி புகழ்பெற்ற காமிக்ஸ் ஆர்டிஸ்ட் ஃப்ராங்க் மில்லரை (Frank Miller இவரது 1986 The Dark Knight Returns காமிக்ஸே தொய்ந்து போயிருந்த பேட்மேன் சீரீஸை உயிர்ப்பித்தது) உள்ளே இழுத்துவிட்டார். இந்தக் கூட்டணி, பேட்மேன் கதையை ஆரம்பத்திலிருந்து மறுபடி எடுக்கப்போவதாக அறிவித்தது. இவர்கள் பேட்மேனாக நடிக்கச்சொல்லி அணுகியது – – – – – Christian Bale ! வருடம் – 2002.

ஆனால் க்ரிஸ்டியன் பேல் இந்த வாய்ப்பை உடனடியாக நிராகரித்தார்.

இதன்பின் மறுபடியும் ஆர்வம் குறைந்த வார்னர் ப்ரதர்ஸ், இம்முறை Batman Vs Superman என்ற கதையை படமாக எடுப்பதாக அறிவித்தது. பழைய திரைக்கதையாசிரியர் அகிவா கோல்ட்ஸ்மேன் ஒரு திரைக்கதையை முழுமையாக எழுதியும் முடித்தார்.

இந்தப் படத்திலும் பேட்மேனாக நடிக்க வார்னர் ப்ரதர்ஸ் அணுகிய நபர் – அதே க்ரிஸ்டியன் பேல்! மறுபடியும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இந்த வாய்ப்பை அவர் நிராகரித்தார். ஆனால் இந்தப் படத்தை இயக்க வார்னர் ப்ரதர்ஸ் ஒப்பந்தம் செய்த வுல்ஃப்கேங் பீட்டர்ஸன், டபக்கென்று Troy இயக்க ஓடிவிட்டதால், இந்தப் படமும் கைவிடப்பட்டது. வருடம் 2003.

இந்த நேரத்தில்தான் வார்னர் ப்ரதர்ஸ்,  அதுவரை மூன்றே மூன்று படங்கள் இயக்கியிருந்த ஒரு இயக்குநரை, ஒரு புதிய பேட்மேன் படம் இயக்கித்தரச்சொல்லி அணுகியது. அதற்குக் காரணம், திரைக்கதையில் அவர் அசத்தியிருந்த படம் ஒன்று – இதுவரை முதல் தடவை பார்த்த யாருக்கும் புரியாத லோ பட்ஜெட் படம். அதன் பெயர் – Memento.

அந்த இயக்குநர், அவருடைய முதல் பெரிய பட்ஜெட் வாய்ப்பை ஒப்புக்கொண்டார். உடனடியாக, காமிக்ஸ்களில் சம்மந்தம் உடைய David S Goyer திரைக்கதை எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரும், க்ரிஸ்டோபர் நோலன் என்ற அந்தப் புதிய இளம் இயக்குநரும் அமர்ந்து, கதையை விவாதித்தனர். அப்போது, ஆல்ரெடி வெளிவந்து பட்டையைக் கிளப்பிய The Long Halloween என்ற காமிக்ஸ் பற்றி Goyer நோலனுக்கு விளக்க, அந்தக் காமிக்ஸ் அளிக்கும் இருண்ட, தீவிரமான கதை சொல்லல் முறையையே தனது படத்துக்கும் அமைக்க முடிவு செய்தார் நோலன்.

அந்தக் காமிக்ஸ் கதை, டூ ஃபேஸின் உருவாக்கத்தையும் விளக்கக்கூடிய கதை. ஆகவே, முதலில் எடுக்கப்படப்போகும் பேட்மேன் படத்தில் டூ ஃபேஸ் கதாபாத்திரம் வருவதாக முடிவு செய்தனர் இருவரும். ஆனால் அதன்பின் கதை உருவானபோது டூ ஃபேஸ் கதாபாத்திரத்துக்கான தளம் இந்தக் கதையில் இல்லாததால், வேறொரு சந்தர்ப்பம் அமைந்தால் அப்போது டூ ஃபேஸை உபயோகித்துக்கொள்வதாக முடிவு செய்தனர்.

இந்தக் கதையில் நோலன் பேட்மேனாக நடிக்க அணுகிய நபர் – அதே க்ரிஸ்டியன் பேல்.

ஒருவழியாக, இம்முறை மீண்டும் நான்காவது தடவை பேட்மேனாக நடிக்க வாய்ப்பு வந்தபோது (ஏற்கெனவே வந்த இரண்டு வாய்ப்புகளுக்கு மத்தியில் மூன்றாவதாக வேறு ஒருமுறை பேட்மேன் வாய்ப்பை ரிஜக்ட் செய்திருந்தார் கொடாக்கண்டன் பேல்), உட்கார்ந்து யோசித்த க்ரிஸ்டியன் பேல், இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டார்.

இதன்பின், இந்தப் படத்தில், ஸ்பெஷல் எஃபக்ட்களுக்கு முக்கியத்துவம் தராமல், கதைக்கும், ப்ரூஸ் வேய்னின் குணாதிசயத்துக்கும் முக்கியத்துவம் தரப்போவதாக நோலன் முடிவு செய்தார்.  இதுவரை வந்த Batman படங்களில் அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி இருக்காது. ஆகவே, அதனை ஆடியன்ஸ் மனதில் பதியும்படி காண்பிக்கவேண்டும் என்பதும் நோலனின் முடிவு.

இப்படியாக தனது படத்துக்கு Batman Begins என்று பெயர் வைத்த நோலன், திரைக்கதை முடிந்ததும் படப்பிடிப்பைத் துவக்கினார்.

  Comments

11 Comments

  1. /* இருண்ட, தீவிரமான கதை சொல்லல் */

    இதையே the amazing spiderman படத்துக்கும் கடைபிடித்துள்ளார்கள் இல்லையா???

    Reply
  2. இதற்கு முன் வந்த பேட்மேன் ஒரு படம் கூட பார்த்தது இல்லை…நோலன் டைரக்ட் செய்து வெளிவந்த பொது இதுவரை ஒரு படம் கூட பார்க்கவில்லையே என்று தான் பார்த்தேன்…அண்ணா அடுத்த பதிவு உண்டு தானே..

    Reply
  3. christian bale இன் உழைப்பு பிரமிக்க வைக்கிறது..அல் பசினோ டி நிரோ போன்ற மெதட் ஆக்டர் விட்டு சென்ற வெற்றிடத்தை இவர் நிரப்ப வாய்ப்புகள் அதிகம்..சைக்கலாஜிகளாக அந்த பாத்திரத்தை செய்து அசத்துகிறார்…அதுவும் பேட்மேன் என்ற இருண்ட பின்னணி கொண்ட ஒரு கதாபாத்திரத்துக்கு ஒரு விதமான இருண்ட மன நிலையை நடிப்பின் மூலம் நம்மை உணர வைக்கிறார்…
    அப்பால அண்ட் டுஷ்கின் இதை உல்டா செய்கிறாராம்..ஆண்டவா முடியல…

    Reply
  4. @ லக்கி – அமேஸிங் ஸ்பைடர்மேன் படத்துல அந்த அளவு சீரியஸ்நெஸ் இல்லைன்னுதான் நான் சொல்லுவேன். நோலன் அதை கரெக்டா புடிக்கிறாரு. ஆனாலும் மத்த ஸ்பைடர்மேன் படங்களைவிட இந்த புது படத்துல கொஞ்சம் இருளும் தீவிரத்தன்மையும் இருக்கிறது உண்மைதான்.

    @ Chinna Malai – இதுவரை வந்த பேட்மேன் படங்கள்ல நோலன் படங்கள் மட்டும் பார்க்கவும். கூடவே முடிஞ்சா முதல்ல வந்த பேட்மேன் படம். மத்ததெல்லாம் இப்போ பார்த்தா காமெடியா இருக்கும்.

    @ Sekar ranjith – முகமூடி பத்தி அந்தப் படம் வந்ததும் எழுதிரலாம் தலைவா

    @ viki – க்ரிஸ்டியன் பேல் பத்தி நீங்க சொன்னதை ஒத்துக்குறேன். கொஞ்சம் கொஞ்சமா ஒரு அட்டகாசமான நடிகரா மாறிக்கினு வர்றாரு அவரு. அப்பால மொகமூடி பத்தி – படம் வரட்டும் தலிவா. பார்த்துருவோம். அப்பால அது உருவலா இருந்தா கலாய்ப்போம் 🙂

    Reply
  5. Reply
  6. Karundhel,
    I was just browsing though the net and found this.
    Thought you might be interested.
    “As Chris Nolan and Christian Bale have both said The Dark Knight Rises will be their last Batman movie, it appears we won’t see the director’s vision of fan-favourite bad guy, The Riddler… unless we’ve already seen him, that is. The character in The Dark Knight who discovers Batman’s identity is named Coleman Reese, or Mr. Reese. Mister Reese. Mysteries. Geddit? It’s a bit too similar to The Riddler’s alter-ego of E. Nigma to be mere coincidence, but it’s more likely an easter egg than a serious suggestion of riddling to come.”

    Reply
  7. @ seethavatar – Super ! That’s a fantastic Easter egg!

    Reply
  8. இதற்கு அடுத்த கட்டுரை எது? கொஞ்சம் என்டிங்-ல லிங்க் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.

    Reply

Join the conversation