Death in the Andes – மரியோ பர்காஸ் யோசா

by Karundhel Rajesh June 3, 2010   Book Reviews

எனக்கு மிகப் பிடித்த ஒரு விஷயம், திரைப்படங்கள் தவிர – புத்தகம் படிப்பது. சிறுவயதில், காமிக்ஸ்களிலிருந்து வாசித்தல் ஆரம்பமாகி, ஆங்கிலப் புத்தகங்கள் மீது (ஆங்கில பல்ப் . . ஹாட்லி சேஸ் இத்யாதி) தாவி, சிறுகச்சிறுக உலக இலக்கியத்தின் மேல் திரும்பியது. நான் உலகின் சில நல்ல எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்ததற்கு முழுமுதல் காரணம், நமது சாரு. அவர் கூறியதனாலேயே நபக்கோவ், மார்க்கேஸ், மரியோ பர்காஸ் யோசா, கஸான்ஸாக்கிஸ் மற்றும் போர்ஹேஸ் போன்ற அருமையான எழுத்தாளர்களைப் படிக்க நேர்ந்தது. அதற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அப்படிப் படித்த புத்தகங்களைப் பற்றி இனி அவ்வப்போது எழுதலாம் என்றிருக்கிறேன். இதோ அந்த வரிசையில் முதல் புத்தகம்.

தென்னமெரிக்கா. இயற்கை வளங்களை அபரிமிதமாகத் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு கண்டம். இக்கண்டத்திலுள்ள பல நாடுகளுக்கும் ஒரே விதமான பிரச்னை உண்டு. சர்வாதிகாரத்தினால் துன்புறும் மக்கள் என்பது தான் அது. பெரு, அப்படிப்பட்ட ஒரு அழகான தேசம். அமேஸான் நதி ஓடும் உயிரோட்டமான ஒரு நாடு. ஆண்டெஸ் மலைகளின் இருப்பிடம். மிகப்பழமையான இன்கா பழங்குடியினர் வாழ்ந்து செழித்த பூமி. இன்னமும் மண்ணின் மைந்தர்களான பழங்குடி இந்தியர்கள் வாழும் இடம். இப்படிப்பட்ட ஒரு அழகிய, மர்மமான, இயற்கை வளம் நிரம்பிய ஒரு இடத்தில் நடக்கும் கதையே ‘டெத் இன் த ஆண்டெஸ்’. தென்னமெரிக்காவில் கொண்டாடப்படும் எழுத்தாளர் மரியோ பர்காஸ் யோசாவின் படைப்பு.

ஆண்டஸ் மலைகளின் பக்கலில், நேக்கோஸ் என்ற இடத்தில், ஒரு சாலை போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு பேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில், பெருவின் பழங்குடியினரான ’கம்யூனெரோஸ்’ என்று அழைக்கப்படும் மக்களே பெரும்பான்மையினர். அந்த இடத்தில் ஒரு ராணுவ போஸ்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. கார்ப்போரல் லிதுமாவும், அவரது உதவியாளர் சிவில் கார்ட் தாமஸ் கரீன்யோவும் மட்டுமே அந்த போஸ்ட்டில் இருக்கும் நபர்கள். இவர்களை ஒப்புக்குச் சப்பாக அந்த இடத்தில் பெருவின் அரசு போட்டிருக்கிறது. இது அவர்களுக்கும் தெரிந்தாலும், வேறு வழியின்றி அங்கு அவர்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை.

அவ்விடத்தில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள், ஆவிகள், பிசாசுகள், மாந்திரீகம் ஆகியவற்றில் மிகவும் நம்பிக்கையுடையவர்கள். என்ன நடந்தாலும், கடவுளர்களின் சீற்றம் அல்லது மகிழ்ச்சி என்று எண்ணக்கூடியவர்கள்.

அந்த ராணுவ போஸ்ட், ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில், அந்தப் பிராந்தியத்தின் ஒரே மதுக்கடை. அதனை நடத்திவருபவர்கள், டையனீஸியோவும் அவனது மனைவி ஆட்ரியானாவும். இவர்கள் இருவரைப் பற்றியே பல மர்மமான வதந்திகள் அங்கு உலவிக்கொண்டிருக்கின்றன. ஆட்ரியானா, ஒரு ரத்தக்காட்டேறியைக் கொன்றவள் என்று ஒரு வதந்தி. அவள் மக்களின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வதிலும் வல்லவள். இதுவும், மக்களிடையே இந்த இருவரையும் பற்றிய ஒரு பயத்தை உண்டுபண்ணிக் கொண்டிருக்கிறது.

ஓர்நாள், லிதுமாவை ஒரு பழங்குடிப் பெண் காண வருகிறாள். அவளது சைகைகளிலிருந்து, லிதுமாவுக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரியவருகிறது. அவளது கணவனை, கடந்த சில நாட்களாகக் காணவில்லை.

இது, அங்கு நடக்கும் மூன்றாவது நிகழ்ச்சி. மூன்று பேர் , கடந்த சில வாரங்களில் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை யாராலும் சொல்ல முடிந்ததில்லை. இது, லிதுமாவைக் கலக்கத்திற்குள்ளாக்குகிறது.

அதற்கு முக்கியக் காரணம், அந்தப் பிராந்தியத்தில், தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம். அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் இந்தத் தீவிரவாதிகள், அவ்வப்போது கிராமங்களில் புகுந்து, ஏழை மக்களுக்குத் தீங்கிழைத்தவர்களைக் கல்லாலேயே அடித்துக் கொல்வது வழக்கம். எனவே, மூன்று பேர் காணாமல் போனது, தீவிரவாதிகளால் கூட இருக்கலாம் என்று லிதுமா எண்ணத் தொடங்குகிறார்.

இவர்கள் இருவரும் இருக்கும் முகாம், ஒரு மிகச்சிறிய கட்டிடம். ஆஸ்பெஸ்டாஸ் கூரை; அறையை இரண்டாகப் பிரிக்கும் ஒரே தடுப்பு; ஒருபுறம் தங்குவதற்கு இரண்டு படுக்கைகள்; சில சாமான்கள்; மறுபுறம், ராணுவ போஸ்ட் என்பதைக் காட்ட, சில குறிப்பேடுகள் மற்றும் ஒரு பழைய ஒயர்லெஸ்.. இவையே அந்த முகாமின் தளவாடங்கள்.

இவர்கள் முகாமுக்கு நேர் எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம், ஆண்டெஸ் மலை பரந்துவிரிந்துள்ளது. இரவுகளில், அதன் இருப்பு மிகப் பிரம்மாண்டமாக லிதுமாவுக்குத் தோன்றுகிறது. அந்த மலைகளில் இருக்கும் எண்ணற்ற குகைகளில்தான் ரத்தக்காட்டேறிகளும் பேய்களும் வாழ்வதாக அந்தப் பழங்குடி மக்கள் நம்புகின்றனர். அங்கு அடிக்கடி மழை பெய்யும். ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், அந்த மழை, மண்வாசனையோடு சேர்த்து, மக்களின் இந்தப் பழம் நம்பிக்கைகளையும் மேலெடுத்துக் கொண்டு வருவதாக, லிதுமா அடிக்கடி நினைப்பதுண்டு.

இரவுகளில், இந்த இருவருக்கும் இவர்களே தான் துணை. எந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கலாம்; இவர்கள் கொல்லப்படலாம் என்ற சூழல். காணாமல் போன மனிதர்களைப் பற்றிய எந்தத் துப்பும் இல்லை. அவர்களைப் பற்றி லிதுமா விசாரிக்கப் போனாலே, மக்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். போதாக்குறைக்கு, மதுக்கடை நடத்தும் டயனீஸியோவின் கிண்டல்கள் வேறு. அவனைப் பற்றிய புகார்களும் லிதுமாவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அவன் ஒரு ஹோமோ என்று லிதுமா அறிகிறார்.

தன்னைச் சுற்றியும் முற்றிலும் ‘ஹாஸ்டைல்’ என்றே சொல்லக்கூடிய ஒரு நிலைமை லிதுமாவுக்கு. இப்படி இருக்கையில், தன்னுடன் இருக்கும் சிவில் கார்ட் கரீன்யோவுடன் பேசுவதிலேயே அவருடைய இரவுகள் கழிகின்றன. அப்படி ஒரு இரவில், கரீன்யோ, அவனது வாழ்வின் ஒரே நம்பிக்கையாக இருந்த ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறான்.

அந்தப் பெண்ணின் பெயர் மெர்ஸிடிஸ். அவளைத் தான் ஒரு கொடுமதியாளனின் பிடியிலிருந்து காத்ததை நினைவுகூரும் கரீன்யோ, அன்றிலிருந்து தாங்கள் கழித்த நாட்களைப் பற்றி மனம் திறந்து சொல்கிறான். அவனது இந்தக் கதை, நாவலின் முதல் அத்தியாத்திலிருந்து தொடங்கி, கடைசி அத்தியாயம் வரை வருகிறது. அவனது கதையை அவன் சொல்லச்சொல்ல, இடையிடையே லிதுமா எழுப்பும் கேள்விகள், அக்கேள்விகளுக்குக் கரீன்யோவின் பதில்கள் என மிகச் சுவாரஸ்யமாகச் செல்கிறது கரீன்யோவின் இந்தக் கதை.

நாவல் நெடுக வந்தாலுமே, கரீன்யோவின் கதை இந்த நாவலின் முக்கியப் பகுதி அல்ல. காணாமல் போன மூவரைப் பற்றி லிதுமா மேற்கொள்ளும் முயற்சிகளே இக்கதையின் முக்கிய அம்சம். அவ்வப்போது இரவுகளில் கரீன்யோ, தனது கதையை விட்ட இடத்திலிருந்து தொடர்வான்.

காணாமல் போனவர்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் லிதுமாவுக்கு, அவ்வப்போது சில முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. முதலில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர் என்று அவர் எண்ணியது தவறு என்று அவருக்குத் தெரிகிறது. அதனைவிட மர்மமான, இருண்ட உண்மைகள் அவருக்குத் தெரிய வருகின்றன. அந்தப் பிரதேசத்தில் இருக்கவே கூடாது என்று அவர் எண்ணுமளவு பயங்கரமான செய்திகள் அவை.

இடையிடையே, தீவிரவாதிகளையும், அவர்களது கொலைகளையும் நாம் பார்க்கிறோம். அந்தத் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்து, நேக்கோஸ் வந்து தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் ஒருவனும், இந்தக் காணாமல் போனவர்களில் ஒருவன். அதனாலேயே தீவிரவாதிகள் மேல் சந்தேகம் கொண்டிருந்த லிதுமா, பின்னர் வேறு சில உண்மைகளையும் அறிகிறார்.

இறுதியில், மிகக்கடைசியில், லிதுமாவுக்குப் ப்ரமோஷன் உத்தரவும், அவரை வேறோரிடத்துக்கு மாற்றப்பட்டுள்ள உத்தரவும் கிடைக்கின்றன. சந்தோஷமடையும் லிதுமா, மதுக்கடைக்குச் செல்கிறார். அந்தக் கடையில், கடைசி முயற்சியாக, தான் அடுத்தநாள் அங்கிருந்தே செல்லப்போவதாகவும், எனவே அந்த மூவருக்கும் என்ன ஆயிற்று என்று சொல்வதற்கு யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் சொல்ல, அங்கு தலைக்கு மேல் குடித்திருக்கும் ஒருவன், அவருக்கு நடந்ததைச் சொல்கிறான். அதனைக் கேட்டு லிதுமா தனது வாழ்வின் உச்சபட்ச அதிர்ச்சியை அடைகிறார். இத்துடன் நாவல் முடிகிறது.

இந்த நாவலின் நெடுக, ஆண்டெஸ் மலையையும், அதன் பழங்குடியினரையும், பெருவில் நிலவும் அரசியல் சூழலையும் பற்றி நாம் பல தகவல்களை அறிகிறோம். அந்த வகையில், இந்த நாவல் ஒரு அதிமுக்கிய நாவலாகக் கொண்டாடப்படுகிறது. மட்டுமல்லாமல், எடுத்தால் கீழேயே வைக்க முடியாத அளவுக்கு ஒரு சுவாரஸ்யமான நாவலாகவும் இது விளங்குகிறது. நாவலை எழுதிய யோசாவைப் பற்றிப் பல தகவல்களை விக்கியில் அறிந்துகொள்ளலாம்.

மொத்தத்தில், என்னால் மறக்கவியலா நாவல்களில் இதுவும் ஒன்று. படித்துப் பாருங்கள்

  Comments

28 Comments

  1. Hello boss..Initially i thought u wer interested only in world movies..now for my surprise u r started writing about novels also.. imm..kalakkunga..best of luck

    Reply
  2. 🙂 மதன் – இப்பத்தான் உங்க முதல் கமெண்ட்ட போடுறீங்க நம்ம சைட்ல. . அடிக்கடி எழுதுங்க . . உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி . . அட ஆமா . . நீங்க தான் ஃபர்ஸ்ட் !! 🙂

    Reply
  3. நண்பரே,

    மிக மிக மகிழ்ச்சி. இது தென் அமெரிக்க காட்டின் பருவ மழை போல் தொடரட்டும். நாவலை நான் தேடிப்படித்து விடுவேன். உங்கள் விறுவிறுப்பான நடையால் சஸ்பென்ஸை மூடி வைத்துக் கொண்டு அழகான கோலம் போட்டிருக்கிறீர்கள். பல படைப்புக்களையும் உங்கள் வலைப்பக்கம் அறிமுகம் செய்வது அலாதியான ஒன்று. மந்திரவாதியே மந்திரங்கள் தொடரட்டும் :))

    நண்பரே சீய்யர்ஸ் :))

    Reply
  4. நான் தான் செகண்டு… பாதி வடையாவது கொடுத்துரு தேளு…

    நல்ல ஒரு தமிழ்நாவலை சொல்லுங்க தல… இங்கிலிபிசுல்ல நான வீக்கு…
    ஐ லைக் டமில் வெரி மச் யா… :))

    Reply
  5. // நபக்கோவ், மார்க்கேஸ், மரியோ பர்காஸ் யோசா, கஸான்ஸாக்கிஸ் மற்றும் போர்ஹேஸ் //
    அப்பப்பா.. எவ்வளவு படிக்கறீங்க.. எனக்கு புத்தகம்னாலே கொஞ்சம் அலர்ஜி..

    Reply
  6. “ஒருவன், அவருக்கு நடந்ததைச் சொல்கிறான். அதனைக் கேட்டு லிதுமா தனது வாழ்வின் உச்சபட்ச அதிர்ச்சியை அடைகிறார்”

    அவருக்கு நடந்ததைச் சொல்கிறான்

    கருந்தேள் என்ன சொன்னான்?

    This story make it any movie??

    “அப்படிப் படித்த புத்தகங்களைப் பற்றி இனி அவ்வப்போது எழுதலாம் என்றிருக்கிறேன்”

    தங்களின் இந் நல்ல முயற்ச்சிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் & பூகொத்து.

    நன்றி.

    Reply
  7. உங்க பொருமைய மெச்சனும் தோழர்களே.. பத்திரிக்கையில் இரு பக்கம் முழுக்க எழுத்துகளை படிக்கவே நான் காத தூரம் ஓடுகிறேன். நாவல் நமக்கு ரொம்ப தூரமுங்க… ஆனாலும் விமர்சனம் மூலம் படிச்ச திருப்தி கிடைக்குது.

    அதுவும் அந்த காணாமல் போன மூவர், அந்த மர்ம உண்மை முடிச்சுகள் அபார்ம்… தொடருங்கள் உங்கள் அறிமுகங்களை.

    Reply
  8. Anonymous

    This comment has been removed by a blog administrator.

    Reply
  9. @ காதலரே – என்னளவில் நான் படித்து இன்புற்ற ஒரு நாவலை அறிமுகம் செய்வோமே என்று எழுதியதே இது. உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

    மந்திரத்தைத் தொடர்ந்துவிடுவோம் !! சீய்யர்ஸ் !! (ஆனா இன்னும் மந்திரவாதி, மந்திரமே போடவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் 🙂 )

    @ நாஞ்சில் பிரதாப் – ஆஹா. . வட போச்சே . . நீங்க தேர்டு . . 🙂 பரவால்ல வடைக்கு பதில் வேற எதாவது திரவம் கொடுத்துருவோம் . . 🙂

    தமிழ்லயும் நல்ல நாவல்கள் இருக்கு . . ‘என் பெயர் ராமசேஷன்’ – ஆதவன் எழுதுனது. . படிச்சிப் பாருங்க . . சும்மா பின்னும் !

    @ ஜெய் – இதெல்லாமே நானா படிக்கல. . சாரு சொல்லித்தான் படிச்சேன் . . படித்ததும் பிடித்தது..

    @ புதுவை சிவா – உங்களது பூங்கொத்துக்கு மிக்க நன்றி நண்பா . .அடிக்கடி வந்து, பூங்கொத்து தரவும்..

    @ ரஃபீக் – எல்லாப் புகழும் சாருவுக்கே . . 🙂 அவர் அறிமுகப்படுத்தியது தான் இந்த நாவல். மேலும் பல உள்ளன. . ஒவ்வொன்றாக வரும் . . நன்றி

    @ அனானி – நானு எந்தப் பாலிடிக்ஸுக்கும் போகாம என்னோட வேலைய பார்த்துக்கினு கீறேன் நண்பா . .நீங்க இப்புடி ஒரு கமெண்ட்டு போட்டுருக்கும் காரணம் நிஜம்மாவே எனக்குப் புரியல. . கொஞ்சம் தெளிவு படுத்துங்க . .

    நான் எப்பவுமே ஒரு நடுனிலையாளன் தான் தலைவா .. கவலையே வேண்டாம்.

    Reply
  10. Anonymous

    Hi,
    “Death in Andes” IMHO, though is a good book, pales in comparison with Losa’s other works like The feast of the goat and Aunt Julia and the scriptwriter. Vargas is one of the best story tellers of our age.

    But as you have said, the descriptions of the pre-historic people living in the andes and the environment are indeed good.

    Reply
  11. @ கார்த்திகேயன் – இதோ லின்க்கை ரிமூவ் செய்தாயிற்று நண்பா . . இன்னுமே அந்தக் கமெண்ட்டுக்கு என்ன அர்த்தம்ன்னு எனக்குப் புரியல. . உங்க கருத்துக்கு மிக்க நன்றி நண்பா . .

    @ அனானி – நீங்கள் சொல்வது சரியே . . ஆண்ட் ஜூலியாவுடனும் ஃபீஸ்ட் ஆஃப் த கோட்டுடனும் ஒப்பிட்டால், இதில் கொஞ்சம் பெப் கம்மிதான் . . இருந்தாலும், இக்கதையில் எதுவோ ஒன்று என்னைக் கவர்ந்தது.. படிக்கையில், ஆண்டஸ் மலையிலேயே நான் வாழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதுதான் எழுதினேன் . . உங்களது கருத்துக்கு மனமார்ந்த நன்றி. .

    Reply
  12. நண்பா பல வருடம் முன்பு விகடன் உலக சினிமாவில் ஒரு படம் படித்தேன்,அந்த திரி மட்டும் நினைவிருக்கு பெயர் நினைவில்லை,

    ஊரைவிட்டு ஓடவோ எதற்கோ பணம் தேவைப்படும் கர்ப்பிணிப்பெண்,
    போதை மருந்துகளோ,வைரமோ கொண்ட கேப்சூல்களை விழுங்கி விமானத்தில் பயணிப்பாள்,விமானத்தில் கழிவறையில் இவளையும் மீறி அந்த கேப்சூல் கழிவறை கோப்பைக்குள் விழுந்துவிடும்,அதை இவள் விழுங்கியே தீரவேண்டும்,இல்லையென்றால் மாட்டிக்கொள்வாள்.
    மாட்டிக்கொண்டால் மாஃபியாவால் காதலன் கொலைசெய்யப்படுவான் என நினைக்கிறேன்,அந்த படம் உலக சினிமாவில் ரன் லோலா ரன் வெளிவந்த அடுத்த வாரம் விகடனில் வந்தது என நினைக்கிறேன்,ரொம்ப நாளாய் கூகிளில் எதேதோ போட்டு தேடுகிறேன்,ஆப்படலை,நீங்கள் முயன்று பார்க்கவும்.உடனே பார்த்துவிடுவோம்.

    Reply
  13. நண்பா.. அது ‘மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ்’ (Maria Full of Grace). . நான் ஆல்ரெடி பார்த்துவிட்டேன் . . சூப்பரான படம். . அதுதான் தமிழில், ‘அயன்’ என்ற பெயரில் அட்டக்காப்பி செய்யப்பட்டு வந்தது. .

    Reply
  14. கருந்தேள் அவர்களே,

    ஆயிரம் தான் படம் பார்த்தாலும்,ஒரு நல்ல புக் கொடுக்குற closeness எதுலயும் கிடைக்காது.இது என் கருத்து.எனக்கு படங்கள விட பிடிச்சது புக்ஸ் தான்.ஒரு நல்ல கதைய அறிமுகம் பண்ணினதுக்கு நன்றி.கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்.

    Reply
  15. நிறைய புத்தகங்கள் பற்றி எழுத வாழ்த்துக்கள் பாஸ்.

    Reply
  16. @ இல்யூமினாட்டி – நன்றி. . அவசியம் படியுங்கள். .

    @ பாஸ்கி – வாங்க தல. . எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம் . . . 😉

    Reply
  17. எனது பாசத்துக்குரிய நண்பர் கருந்தேளு அடுத்த கட்டத்துக்கு தன்னை இட்டு சென்றுள்ளார் என்பது மறுக்க முடியாத நிஜம்.நண்பரே இதுதான் தேவை பாஸ். அப்பப்போ இப்படி சிலவற்றையும் எழுதுங்க. ஐ நோ யூ ஆர் வெர்சடைல்…..சூப்பர் நண்பா.

    Reply
  18. ///காரணம், நமது சாரு. அவர் கூறியதனாலேயே நபக்கோவ், மார்க்கேஸ், மரியோ பர்காஸ் யோசா, கஸான்ஸாக்கிஸ் மற்றும் போர்ஹேஸ் போன்ற அருமையான எழுத்தாளர்களைப் படிக்க நேர்ந்தது///

    சார்… சார்.. ஒரு டவுட்டு!!

    அவரு சொல்லி நீங்க படிச்சிட்டீங்க ஓகே.!! இதையெல்லாம் அவரு படிச்சிட்டாரான்னு கேட்டீங்களா?? 🙂 🙂

    (இதுக்குத்தான்.. என்னை எழுத கூப்பிடக்கூடாதுன்னு சொன்னேன்! 🙂 :))

    Reply
  19. @ மயில்ராவணன் – உங்கள் கருத்துக்கு நன்றி. . உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற முயல்கிறேன் . .

    Reply
  20. @ பாலா – கிண்டலுக்குன்னே கேக்குறீங்க. . இருந்தாலும் சொல்கிறேன். .

    இந்தப் படைப்புகளைப் பற்றி எவ்வளவோ முறை, சாருவிடம் உரையாடியிருக்கிறேன். இந்த ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும், அவர்களது படைப்புகள் பற்றியும் பலமுறை அவர் பல சுவையான தகவல்களைக் கூறியிருக்கிறார். படிக்காமல் அப்படிப்பட்ட விஷயங்களைக் கூறவே இயலாது. மட்டுமல்லாமல், அந்தக் கதைகளை அவர் கூறும்போது கேட்டால், நாம் அவற்றைப் படிக்கவே தேவையிருக்காது.

    பதில் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். . நன்றி.

    உங்களுக்கு அவுருமேல ஏதோ காண்டுன்னு தெரியுது.. 😉

    Reply
  21. dear karundel,

    epdipa english novel ellam porumaya ungalala padikka mudiyuthu. it is very tough to me. Epdi develop pannikarathunu oru idea kudungalen.

    Reply
  22. டியர் ராஜா,

    நானு ஒரு காலத்துல ஒரு எழுத்து கூடப் படிக்கத் தெரியாம, இங்கிலிபீசுன்னாலே ஓடிப்போனவன். . ஆனா அப்பறம் ஒண்ணொண்ணா எழுத்துக் கூட்டிப் படிச்சி, இப்ப கொஞ்சம் பரவாயில்லாம படிக்க ஆரம்பிச்சிட்டேன் . . மொதல்ல சிம்பிள் கதைகளா படிக்கலாம்.. (உதா: சிட்னி ஷெல்டன், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) . . அப்பறம், ஒரு கைப்பதம் வந்தவுடனே அடிச்சி ஆடவேண்டியது தான் பாஸ் . . ! கவலையே படாதீங்க . . பின்னிருவீங்க!

    Reply

Join the conversation