The Descendants (2011) – English

by Karundhel Rajesh February 15, 2012   English films

மேட் (Matt), தனது மனைவி படுத்திருக்கும் அறைக்குள் வருகிறான். கட்டிலில் படுத்திருக்கும் மனைவியைப் பார்க்கிறான்.

“என்னிடம் டைவர்ஸ் கேட்கலாம் என்றா நினைத்தாய்? எவனோ ஒருத்தனுடன் நீ சுற்றவேண்டும் என்றால் அதற்கு நானா கிடைத்தேன்?என்ன விளையாடுகிறாயா? யார் நீ? உன்னைப்பற்றிய பிம்பம் உடைந்து நொறுங்கிவிட்டது. என்னைப்பொறுத்தவரை, இனிமேல் நீ வெறும் பொய்களால் நிரம்பிய ஒரு உருவம். அவ்வளவுதான்! எங்கே…. வழக்கமாக சிரித்து பசப்புவாயே…. அதைச் செய் பார்க்கலாம்… உன்னுடன் வாழ்வது எப்போதுமே பிரச்னையாகவே இருந்து வந்திருக்கிறது எனக்கு. உண்மையைச் சொல்கிறேன். நானே உன்னை டைவர்ஸ் செய்யவேண்டும் என்று நினைத்தேன்!”

அங்கேயிருக்கும் ஒரு கரடி பொம்மையைக் கோபத்துடன் தூக்கி வீசுகிறான். சுவற்றில் அந்தப் பொம்மை ஏற்படுத்திய சத்தம், அந்த அமைதியான அறையில் பெரிதாகக் கேட்கிறது.

”கோமாவில் படுத்திருக்கும்போதும் ஏன் என்னை இப்படி வதைக்கிறாய்?” – மேட்டின் குரல் உடைகிறது. கண்களில் கண்ணீர் தளும்புகிறது.


“ஹாய் ப்ரயன்… நான் மேட். எலிஸபெத்தின் கணவன். அவளை உனக்கு நன்றாகத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்”.

ப்ரயனின் புன்னகை ஒரே நொடியில் மறைகிறது. அவனுக்குப் பக்கத்தில் அவனது மனைவி. ஆகவே, புன்னகை ஒன்றை வலிய வரவழைத்துக்கொள்கிறான்.

இருவரும் வீட்டினுள் செல்கிறார்கள்.

”எலிஸபெத் இறந்துகொண்டிருக்கிறாள். ஃபக் யூ. இன்று காலையில்தான் அவளை இன்ஹேலரில் இருந்து அகற்றியிருக்கிறோம். எந்நேரமும் அவள் இனி இறக்கக்கூடும்”

”………………..”

”எலிஸபெத் உன்னை விரும்பினாளா?”

“ஆம்”

“நீ அவளை விரும்பினாயா?”

“……..”

”ம்ம்ம்.. அவளை நீ விரும்பவே இல்லை. வெறும் உடல் சுகத்துக்கு அவளை உபயோகித்துக்கொண்டாய். ஆனால் என் மனைவியோ, உன்னை மிகவும் விரும்பினாள்.. ச்சே… எப்படிப்பட்ட மனிதன் நீ”

“இல்லை. இது வெறும் செக்ஸ். ஈர்ப்பு. அவ்வளவுதான். அவள் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பாகிவிடமுடியாது. என் மனைவியை நான் விரும்புகிறேன். தயவுசெய்து வெளியே இருக்கும் என் மனைவியிடம் இந்த விஷயத்தை சொல்லிவிடாதே. என் வாழ்வே நாசமாகி விடும்”

”அவள் க்வீன்ஸ் ஹாஸ்பிடலில் இருக்கிறாள். இறப்பதற்கு முன்னர் நீ ஒருவேளை அவளைப் பார்க்க விரும்பினால் அங்கே வரலாம். அதைச் சொல்லத்தான் உன்னைத் தேடிக் கண்டுபிடித்தேன்”

“…………….”


உலகின் செக்ஸியான ஆண்களில் ஒருவர் என்று இரண்டுமுறைகள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ஒருவர், கிட்டத்தட்டத் தோல்வியின் விளிம்பில் இருக்கக்கூடிய மனிதனின் கதாபாத்திரத்தில் நடிக்கச் சம்மதிப்பாரா? அல்லது பொருத்தமில்லாத வயதில்,இளம்வயது கதாநாயகியைக் காதலித்து, ஃபைட்கள், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவற்றோடு ஆபாச அசைவுப் பாடல்களில் ஆடி நடிப்பாரா?

முதல் உதாரணத்தில் சொல்லப்பட்ட நபர் ஜார்ஜ் க்ளூனி (இவருக்கு தமிழ்ப் பதிவுலகில் பலவிதமான பெயர்கள் உண்டு. உதா: ஜாரஜ் குலுனி, சார்ஜ் குலூனி, ஜர்ஜ் குலூனி முதலியன. ஓசியன்ஸ் லெவன் என்ற ஹிந்திப் படத்தில் வேறு இவர் நடித்திருக்கிறாராம்)என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். கடந்த சில வருடங்களாக, நடிப்பை வெளிக்காட்டும் படங்களில் அதிகம் நடித்துவரும் இவர், இதிலும் நன்றாக நடித்திருக்கிறார். இரண்டு மகள்களை வைத்துக்கொண்டு, மனைவியும் இல்லாமல், அவர்களுடன் பேச, நெருக்கமாக முயற்சிக்கும் தந்தை. இரண்டு மகள்களும் இரண்டு துருவங்களில் வாழ்கிறார்கள். அவர்களுடன் கம்யூனிகேட் செய்வதே கடினம். இருப்பினும் மெல்ல மெல்ல எப்படி உறவு மலர்கிறது என்பது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது (இதுவும் ஒரு ஹாலிவுட் டெம்ப்ளேட்தான். ஆனாலும் அந்த டெம்ப்ளேட்டை ரசிக்கும்படி கொடுத்திருப்பதே இப்படத்தின் வெற்றி).

படத்தில் ஜார்ஜ் க்ளூனி என்ற சூப்பர்ஸ்டார் மாயமாக மறைந்து, நடுத்தர வயது மனிதன் ஒருவனே தெரிவது, குலூனி ச்சே… க்ளூனியின் வெற்றி.

படத்தைப் பற்றி எதுவுமே சொல்லப்போவதில்லை. மேலே விவரித்துள்ள இரண்டு காட்சிகளே படத்தைப் பற்றி நிறைய சொல்கின்றன. இந்த ஆண்டு ஆஸ்கரில் ஐந்து பிரிவுகளுக்கு நாமிநேட் செய்யப்பட்டிருக்கிறது இப்படம். ஏற்கெனவே இரண்டு கோல்டன் க்ளோப்களை வாங்கிவிட்டது.

இப்படத்தின் திரைக்கதை எனக்குப் பிடித்தது. படம் தொடங்கும்போது ஒரு சம்பவம். அதனை வைத்துதான் படமே நகரப்போகிறது என்று நினைக்கையில், டக்கென்று இன்னொரு சம்பவம். அதிலிருந்து கதை பிரியப்போகிறது என்று நினைக்கையில், இன்னொரு சம்பவம். இப்படி சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது இந்தத் திரைக்கதை.

படத்தின் முதல் ப்ளாட் பாயிண்ட்டை வைத்து வரும் சம்பவங்களில் ஒன்றுதான் நான் மேலே கொடுத்த முதல் காட்சி. அடிப்படை திரைக்கதை விதிகளை மீறாமல், அதே சமயம் மிக சுவாரஸ்யமாக, அழகாக, உருக்கமாக, நகைச்சுவையாக எடுக்கப்படும் அதே டெம்ப்ளேட். படத்தைப் பற்றி ஆரம்பத்திலேயே முழுதாகத் தெரிந்திருந்தாலும், பார்க்காமல் இருக்க முடியாது.


இம்முறை ஆஸ்கரில், இதைப்போலவே இதே டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் வூடி ஆலனின் ‘Midnight in Paris‘ (எனது ஆங்கில விமர்சனத்தைக் க்ளிக் செய்து படிக்கலாம்) படமும் போட்டியில் உள்ளது. ஆனால், ஸ்பீல்பெர்க்கின் ‘WarHorse‘ படமும், ’The Artist‘ படமும் இப்படங்களை மிஞ்சக்கூடும் என்று நினைக்கிறேன். Tree of Life படம் எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. ஒரு நிமிடம் கூட. ‘The Help‘ படம், நல்ல படமாகவே இருந்தால்கூட, இம்முறை விருது வாங்குவது கடினம்.

அலெக்ஸாண்டர் பேய்ன் (பேயோன் அல்ல), ஏற்கெனவே திரைக்கதைக்காக ஆஸ்கர் வாங்கியவர் (Sideways). இம்முறை, கொஞ்சம் கடினம் என்று தோன்றுகிறது. லிஸ்ட்டில் ஹெவிவெய்ட்கள் உள்ளனவே?

தவறாமல் இப்படத்தைப் பார்க்க முயற்சி செய்யும்படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

The Descendants படத்தின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு – இப்படத்தின் பெயருக்கும் இக்கதைக்கும் உள்ள தொடர்பையும் படத்தில் காண்பீர்கள்.

  Comments

10 Comments

  1. நான் கட்டாயம் பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் படம். இன்னும் ஒரிஜினல் ப்ரிண்ட் வரவில்லை.

    வழக்கம் போல அழகான விமர்சனம். நன்றி.

    Reply
  2. இவரின் Up in the Air படம் பார்த்திருக்கீங்களா? அதிலும் அழகான ஒரு பர்ஃபாமன்ஸை குலுனி … சீ … க்ளூனி கொடுத்திருப்பார்.

    Reply
  3. நானும் படம் பார்த்தேன் தல,எனக்கு பிடித்து இருந்தது,ஆனால் ஆஸ்கார் வாங்க அதிக வாய்ப்புள்ள படம் The Artist என்றே தோன்றுகிறது, கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கு பின் படத்திற்கு விமர்சனம் எழுதி உள்ளீர்கள் (LOTR தவிர ) என்று நினைகிறேன், அடிக்கடி எழுதுங்கள்

    Reply
  4. போன வீக் எண்ட் பார்த்தேன். க்ளூனி தன்னோட Perfomance -ல மொத்த படத்தையும் தூக்கு நிறுத்துறார்.., நம்ம ஆளுங்க (Mostly கலாச்சார காவலர்கள்) கிட்ட ஒரு நினைப்பு உண்டு வெள்ளைகாரங்க யார் கூட வேணும்னாலும் எப்போ வேணாலும் போவாங்கன்னு அவங்க கலாச்சாரம் மேல ஒரு மோசமான அபிப்ராயம் இருக்கு அவுங்கள எல்லாம் இது மாதிரி படம் பாக்க சொல்லனும்..,

    Reply
  5. @ ஹாலிவுட் ரசிகன் – என்னாது Up in the Air பார்த்திருக்கீங்களாவா ? 🙂 . . ஏதோ எங்களால முடிஞ்ச இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு படங்களை தவறாம பார்த்துர்றது 🙂 . .

    @ டெனிம் – அட ஆமாம்ல.. கிட்டத்தட்ட மூணு மாசம் கழிச்சி எழுதிக்கீறேன்…. இனிமே அடிக்கடி வரும் 🙂

    @ ஆனந்த் – //நம்ம ஆளுங்க (Mostly கலாச்சார காவலர்கள்) கிட்ட ஒரு நினைப்பு உண்டு வெள்ளைகாரங்க யார் கூட வேணும்னாலும் எப்போ வேணாலும் போவாங்கன்னு அவங்க கலாச்சாரம் மேல ஒரு மோசமான அபிப்ராயம் இருக்கு அவுங்கள எல்லாம் இது மாதிரி படம் பாக்க சொல்லனும்..,// – எஸ். கட்டாயம் அவங்களை இத்த பார்க்க சொல்லணும்.

    Reply
  6. நண்பா
    இதோ இன்றே பார்த்து விடுகிறேன்,ஜார்ஜ் க்ளூனியை நானும் இப்படியே எழுதுவதையே விரும்புகிறேன்,தவிர பேயோன் செம சிரிப்பை வரவழைத்தது,இரு நடிகர்கான ஒப்பீடும் அருமை,என்னை பொருத்தவரை ஜார்ஜ் க்ளூனி மற்றும் ப்ராட் பிட் எப்போதுமே இமேஜ் பற்றி கவலை படாதவர்கள்,டிரக்டர்ஸ் டார்லிங்ஸ். கோயனின் பர்ன் ஆஃப்டர் ரீடிங் ல் இவர் ஏற்ற கோமாளித்தனமான வருவாய் அதிகாரி வேடம் ஒரு சான்று,மற்றோர் கோயன் படமான ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ படத்தில் இவர் நடித்த கோமாளித்தனமான குடும்பஸ்தன் பாத்திரம் மற்றோர் சான்று,மீண்டும் கோயன் படமான இண்டாலரபுள் க்ரூயல்டியில் இவர் ஏற்ற டிவோர்ஸ் ஸ்பெஷலிஸ்ட் அட்டார்னி வேடம் என நிறைய சொல்லலாம்.மைக்கேல் க்ளேட்டனில் என் மனம் கவர் ஹீரோ ஆனார்.நண்பா அட்டகாசமான இரு காட்சிகளை குறிப்பிட்டு படம் உடனே பார்க்க ஆவல் ஏற்படுத்தி விட்டீர்கள்.

    Reply
  7. நேற்றே விமர்சனம் படித்துவிட்டேன்..கருத்து சொல்ல என்ன இருக்கிறது..தங்களது திறனை அனைவரும் அறிவர்..சிறப்பாக உள்ளது.
    என்னை போன்றவர்களுக்கு மென்மேலும் சினிமா மட்டுமன்றி பல விஷயங்களில் ஒரு பெரிய உதாரணமாக விளங்குகிறீர்கள்..ஒரு தகவல் உலகமாகவே தங்களது வலைத்தளத்தை கருதுகிறேன்..உங்களிடம் நிறையவே கற்றுக்கொள்கிறேன்.

    நானும் முடிந்த வரையில் தங்கள் பதிவுகளை படிக்க முயன்றும், பல நேரங்களில் சில பதிவுகளை தவறவிட்டிடுவேன்..தங்களது திரைப்பட விமர்சனங்களை கோப்புகளாக சேர்த்து வைத்துள்ளேன்..சைனாடவுன், ஆல் தெ பிரசிடென்ஸ் மென் என்று நிறைய நல்ல படங்களை தங்களது விமர்சனம் வழியே பெரிதளவில் தெரிந்துக்கொண்டேன்…இதனை பல முறை சொல்ல வேண்டும் என்று நினைத்து இன்று பின்னூட்டமாக்கிறேன்..தங்களது பணி இன்னும் நிறையவே தொடர வேண்டும்..எனது மனமார்ந்த நன்றிகள்.

    Reply
  8. dear karundhel and geethapriyan
    remember my sms / mail on oscar 2012 nominated film screenings ( it is my pleasure to invite you both though you would have watched / downloaded the movies )
    thanks to the organisers, watched 7 out of 9 nominated movies ( money ball and incredibly close on mon & tue )
    for me the descendants was the best of the lot( 7 )
    for the sake of the readers could you explain the ending of the descendants, the last scene — all 3 watching TV — hope you would have gone thru the credits as there is a link for the last scene and thats the directors answer to the audience for the future of the family in that way i think descendants will win though the artist will definitely give a tough fight as it also carries the same kind of subtle message by the director to the audience on how the silent era star bounced back in the talkie era too both films are neck to neck in the best films and best actor category in my opinion jean dujardin deserves slightly less than clonney best actress and best supporting actress definitely goes to the help ( viola davis and octavia spencer ) my fav janusz kaminski (war horse ) and the cienmatographer for tree of life will vie for each other
    best music score for the artist ( the artist has a lot of scope for acting and music so if performed well then it will be a cake walk for the performers ) i think midnight in paris may clinch the screenplay oscar this time since i feel the flow and interchangeable period was well handled without confusing the audience. these are my predictions but yet to watch the other two and i may again differ and change. just want to share my taste, interest and predictions to you guys expecting your predictions too thanks.

    Reply
  9. இந்த படத்தை ரசித்து பார்த்தது போல, நான் வேறு எந்த படத்தையும் அப்படி ரசித்து பார்த்தது இல்லை. அப்படி ஒரு ஸ்டைலான படம்….காரணம் ஜோர்ஜ் குஞ்சுண்ணி.
    சன் பிக்சர்ஸ் – கலாநிதி மாறன் வழங்கிய ஓசியன் 11 படத்தில் நடித்த அதே அரேபிய நடிகர் தான் இந்த குஞ்சுண்ணி. எப்பவுமே அவரது மேன்லீநஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    Reply
  10. படம் மனச கஷ்டப்படுத்தாதே?

    Reply

Join the conversation