Dev Anand – Abhi Na Jao Chhod Kar. .

by Karundhel Rajesh December 5, 2011   Hindi Reviews

Eulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும் முதலாவது நபர், கிஷோர் குமார். அவரைப் பற்றி சென்ற வருடம் ஒரு கட்டுரை (க்ளிக்கிப் படிக்கலாம்) எழுதியிருந்தேன். அதற்கு அடுத்ததாக எழுதவேண்டும் என்று நினைத்தது தேவ் ஆனந்த் பற்றி. ஆனால், என்னுடைய சோம்பேறித்தனத்தால் அதனைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து, இப்போது தேவ் ஆனந்த் இறந்தே விட்டார். இந்த சூழ்நிலையில் Eulogy எழுதினால், இப்படி இரங்கல் கட்டுரை எழுதுவதையே ஹாபியாக வைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவருக்குப் போட்டியாக என்னை நினைத்துவிட வாய்ப்பு இருக்கிறது (??!!). அதையும் மீறி எழுதுவதற்குக் காரணம், இறக்கும் தருணம் வரை வாழ்வை அனுபவித்து வாழ்ந்த மனிதரான தேவ் ஆனந்தை என்னால் மறக்க இயலாததே.

சரி. என்னென்ன வேலைகள் உங்களுக்கு இருக்கின்றனவோ அத்தனையையும் கொஞ்ச நேரம் ஒத்திப்போடுங்கள். மனதை அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஆயிற்றா? முடிந்தால் உங்களுக்குப் பிடித்த மதுபானம் ஒன்றைத் தயார் செய்துவைத்துக்கொள்ளுதல் நலம் (அல்லது பழரசம்).

இப்போது இந்தப் பாடலைப் பாருங்கள். Hum Dono (1961) என்ற படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் இது. மொஹ்மத் ரஃபியின் இனிமையான குரலில், ஜெய்தேவின் அருமையான இசையில், தேவ் ஆனந்த் மற்றும் ஸாத்னா ஷிவ்தஸானி நடித்த பாடல்.

  Comments

8 Comments

  1. good one mate ..!

    im not a fan of hindhi songs or anything (coz i dont understand ’em )
    but these that u mentioned really cracked me up …

    thanks for this post … !!

    Reply
  2. sir ,pechuku solla villai…ungal ulaipum,arpanipum intha post la theriuthu…. master piece of K K ….

    Reply
  3. போன வருடம் அவரோட பிறந்தநாளுக்கு நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்….. இந்த வருடம் போய்ட்டாரு..:(( ஒருமுறை உ.பி.யில் நடந்த ஷுட்டிங் போது அவரை பார்க்க பெருங்கூட்டம் கூடியது, வழக்கம்போல பெண்களின் கூட்டம்… அதில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்த பார்த்த ஒரு பெண் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கீழே விழுந்து இறந்தபோனதாக கேட்டிருக்கிறேன்…. …. அவரின் காஸ்ட்யும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அப்புறம் தலைய சரிச்சு ஒரு நடை நடப்பாரு…..கிரேட் ஆக்டர்…

    ஐசே ந முஜே தும் தேக்கோ சீனே சே லகாலுங்கா… – இந்தப்பாட்டு எனக்கு மனப்பாடம் :)))

    Reply
  4. அட்டகாசமான கட்டுரை………..ஆனா அவர் இறப்புக்கு பிறகு வர மாதிரி ஆகிப் போச்சே…

    எனக்கு தேவ் ஆனந்த் தெரிய வந்தது, ரங்கோலி மூலமாக தான்……The Guideன்னு நெனைக்கிறேன்…….மாடிப்படிகளில் ஒரு பாட்டு வருமே………

    ஷம்மி கபூரும் – தேவ் ஆனந்தும் தான் அப்ப எனக்கு புடிச்சது….(இப்பவும் தான்)…..ஒரு ஸ்டைல் இருக்கும்……பின்னாடி, 2000ஆம் ஆண்டு வாக்குல அவர் டைரக்ட் செஞ்ச படத்த பாத்து மெர்சலாயிருச்சு……..

    Reply
  5. Guide ஒரு வெற்றி படமில்லை நண்பரே!!! இதை தேவ் ஆனந்தே ஒட்டரும் கொண்டு விட்டார்….

    Reply

Join the conversation