Drag Me to Hell (2005) – English

by Karundhel Rajesh December 1, 2009   English films

சாதாரணமாகவே நமக்குத் தனியாக இருக்கும்போது ஒரு கதவு திறந்து மூடினாலே போதும். ஜன்னிதான். அதுவும், இரவு நேரம் என்றால், பக்கத்தில் ஒரு துப்பாக்கியே இருந்தாலும், பயந்து சாகும் ஒரு கேரக்டர் நான். அப்படி இருக்கும்போது, பேய்ப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தபோதே நான் உஷாராகி இருக்க வேண்டும். பாழும் மனம் கிடந்து அடித்துக்கொண்டதால், சென்ற மாதம் முழுவதும் பேய்ப்படங்கள் தான். படம் பார்க்கும்போது, எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு வேறு (ஒரு வீறாப்பு தான்) பார்ப்பது வழக்கம். எனக்கு நேர் எதிரில் ஒரு ஜன்னல் – அதைத் திறந்து வேறு விட்டுவிடுவேன். பத்து மணிக்கு மேல், இரவில், அந்த ஜன்னலில் குளிர்காற்று பின்னியெடுக்கும்போது, அக்கம்பக்கத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்ட பின், நம்ம ஃபிலிம்ஷோ ஆரம்பிக்கும். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, அந்த ஜன்னலில் லேசாக நிழலாடினாலேயே, உள்ளுக்குள் பகீரென்று ஒரு பந்து கிளம்பி நெஞ்சை அடைக்கும்.

இவ்வளவு பெரிய முன்னோட்டம் ஏனென்றால், அப்படிப் பார்க்கும் படங்கள் தரமான இயக்குனர்களின் படமாக சிலசமயம் அமைந்து விடுவதுண்டு (The shining – ஒரு உதாரணம்). இந்த இயக்குநர்களுக்கு, படமெடுக்கும்போது அப்படி ஒரு குஷி கிளம்பிவிடுகிறது. அதுவும், பேய்ப்படம் எடுக்கும்போது, பொண்டாட்டியை நினைத்து எடுக்கிறார்களோ என்னமோ, ‘ஆத்தா ஆள வுடு’ என்று கத்தும் அளவு பயப்படுத்திவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, நம்ம ஊரில் செண்டி பட இயக்குநர், ரொமான்ஸ் பட இயக்குநர், மொக்க பட இயக்குநர் என்று இருப்பதுபோல், பேய்ப்படம் எடுத்து, பயமுறுத்தியே தீருவேண்டா கொய்யாலே என எடுப்பவர்கள் அங்கு அதிகம்.

குறிப்பாக, சாம் ரெய்மி.

தலைவர் முதன்முதலில் எடுத்த பேய்ப்படம், ஹாலிவுட்டில் தறிகெட்டு ஓடியது. அது வந்த புதிதில், நம்ம ஊரு பத்திரிகைகள் எல்லாம் அதனைப் பாராட்டி எழுதின. நான் பள்ளியில் படிக்கும்போது அதை வீடியோவில் பார்த்து, நண்பர்களிடம் பெருமையடித்துக்கொள்வது ஒரு கெத்து.எனக்குத் தெரிந்து அந்தப்படத்தைச் சிறு வயதில் பல முறை பார்த்திருக்கிறேன் (பயந்திருக்கிறேன் என்று படித்துக்கொள்ளவும்). நீங்களும் அதனைக் குறைந்தது ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள். அது தான் ‘Evil Dead’. தலைவர் அந்தப்படத்தின் மூலமே, வாழ்நாள் புகழை அடைந்துவிட்டார். அதன் பாக்கி இரண்டு பாகங்களை எடுத்துவிட்டு, க்ரைம் த்ரில்லர்களையும், ரொமன்டிக் காமெடிகளையும் ஒரு கை பார்த்துவிட்டு, ஸ்பைடர்மேன் படங்களை எடுத்துவிட்டு, சற்று ரிலாக்ஸ் ஆனபின், பேக் இன் ஃபார்ம் ஆகி அவர் எடுத்த படம் தான் ‘Drag me to Hell’. படத்தின் செலவு வெறும் 30 மில்லியன். எடுத்த லாபமோ கிட்டத்தட்ட 80 மில்லியன்.

படத்தைப் போட்டது இரவு பத்து மணி. செம குளிரு. வழக்கப்படி, திறந்த ஜன்னல். மூடிய கதவுகள். தனிமை. இருட்டு. இதற்கெல்லாம் மேல், ஒரு சூப்பர் ஹெட் ஃபோன் வேறு.

படம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஒரு பத்து நிமிடம், ‘Constantine’ போல் இருந்தது. சரி, தலைவரின் சரக்கு குறைந்துவிட்டது டோய் என எண்ணி சற்று அலட்சியமாக (ஒரு வீரத்துடன் ??!!) பார்க்க ஆரம்பித்தபோதுதான், சாம் ரெய்மியின் முத்திரைக்காட்சிகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. அதன்பின், டரியல் ஆனவன் தான்!!

மிகச்சாதாரணமான ஒரு கதையைக்கூட இவ்வளவு திகிலாக எடுக்கமுடியும் என்பது சாம் ரெய்மியின் திறமை.

படத்தின் கதாநாயகி Christine ஒரு வங்கியில் பணிபுரியும் துடிப்பான பெண். துணை மேலாளர் பொறுப்பு கிடைப்பதில் இவளுக்கும் இன்னொரு ஆசாமிக்கும் போட்டி. இவள் செய்துகொடுத்த ஒரு லோன் ஒப்பந்தம் பட்டையைக் கிளப்பியதில், இவளுடைய பெயர் தான் லிஸ்டில் முதலில் இருக்கிறது. எப்படியும் பதவி கிடைத்துவிடும் என்ற சந்தோஷத்தில் இருக்கிறாள்.

அப்போது ஒரு நாள், ஒரு கிழவி அந்த வங்கிக்கு வருகிறாள். அவளுடைய வீடு ஜப்தி செய்யப்படும் தறுவாயில் இருக்கிறது. மெலும் சிறிது அவகாசம் வேண்டும் என்று இவளிடம் இறைஞ்சுகிறாள். முதலில் பரிதாபப்படும் க்ரிஸ்டி, மேலாளரிடம் பேசுகையில், அவர் இவளுடைய முடிவுக்கே விட்டுவிட, புதிய பொறுப்பு கிடைக்கவேண்டும் என்றால், தயவு தாட்சண்யம் இல்லாமல் முடிவெடுத்தால்தான் உண்டு என்று எண்ணிக்கொண்டு, கிழவியிடம் மறுத்துப்பேசி விடுகிறாள். கிழவி இவள் காலில் விழுந்து கெஞ்சியும், மறுத்து விடுகிறாள். கிழவி கோபத்தில் க்ரிஸ்டியைத் தாக்குகிறாள். செக்யூரிட்டிகளின் உதவியோடு, கிழவி பலவந்தமாக வெளியேற்றப்படுகிறாள்.

அன்று இரவு, யாருமற்ற பார்க்கிங்கில் காரை எடுக்க வரும் க்ரிஸ்டி, சற்று தூரத்தில், கிழவியின் கார் நிற்பதைப் பார்க்கிறாள். அதனுள் இருந்து, கிழவியின் மெல்லிய இருமல் சத்தம் மட்டும் கேட்கிறது. அவசரமாக ஓடிவரும் க்ரிஸ்டி, காரை எடுக்கிறாள்.

அப்போது. . . . . .

அதகளம் ஆரம்பம்! சாம் ரெய்மி, ‘எடுக்குறேண்டா ஒரு பேய்ப்படத்த ங்கொக்கமக்கா!’ என்று வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கிறார். குறிப்பாக, அந்தக் கிழவி! லயன் காமிக்ஸில் ‘கறுப்புக்கிழவியின் கதைகள்’ என்று வெளியிடப்பட்ட பகுதியைக் காமிக்ஸ் ரசிகர்கள் படித்திருக்கலாம். அந்தக் கறுப்புக் கிழவியை நேரில் நிறுத்தினால், இப்படித்தான் இருக்கும்! கதிகலங்க வைக்கும் ஒரு மேக்கப்! தூக்கி வாரிப்போடும் இசை வேறு (Christopher Young – மற்றொரு திறமைசாலி). இவர்கள் எல்லாரும் சேர்ந்து, நம் வயிற்றைக் கலக்குவதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், இது என்னை கதிகலங்க அடித்த ஒரு படம். பார்த்து விட்டு சொல்லுங்கள். பார்க்கும்போது, துணைக்கு யாராவது இருந்தால் நலம்.

டிஸ்கி:- இதைப்பார்த்துவிட்டு, ‘யோவ் கண்ணாயிரம்! ஒரு ம*ரும் இல்ல.. படம் ஒரு மொக்க’ என்று உங்களுக்குத் தோன்றினால், ‘ஹாரர் கொண்டான்’ என்ற பட்டம் உங்களுக்கு அளிக்கப்படும் . .:) மற்றபடி, ஒரு படத்தை யாராவது பாராட்டினால், அதைப் பார்க்கும்போது மொக்கையாகத் தோன்றுவது நம்ம தமிழனின் குணம் ? . . ஒருவேளை படம் பிடிக்கவில்லையென்றால், பொறுத்தருள்க.

ட்ரைலர் இங்கே

  Comments

18 Comments

  1. தல… இந்தப் படத்தை ‘சூப்பர்’ படம்னு சொல்லி… பின்னூட்டத்தில்.. ஒரு பெரிய கும்மாங்குத்தே நடந்துடுச்சி. அன்னில இருந்து.. யாராண்டையும் இத சொல்லுறதே இல்லை.

    இங்க போய் பாருங்க! 🙂 🙂

    http://www.hollywoodbala.com/2009/11/antichrist-2009-18.html

    =======

    முதல்… தமிழ் விமர்சனத்திற்கு .. மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙂

    Reply
  2. இன்னும் தமிழிஷில் இணைக்கலை போல?

    அப்படியே தமிழ்மணப் பட்டையும் ஆட் பண்ணிட்டு, லேபிளில்,

    சினிமா, விமர்சனம், சினிமா விமர்சனம்-ன்னு போட்டுட்டீங்கன்னா… மேட்டர் ஓவர்!

    Reply
  3. வணக்கம் பாலா,

    பார்த்தப்ப பயங்கரமா பயக்க வெச்ச படம் இது.. 🙂 . . உங்க லிங்கயும் போய் பார்த்தேன்.. சில மக்களுக்குப் புடிக்கல போல.. ஆனா இது நிச்சயமா ஒரு நல்ல படம் தான் .. 🙂 . . freeya உடுங்க.. 🙂 ..

    அப்பறம், தமிழிஷ் ல போய் register பண்ணிட்டேன்.. அந்த பட்டையையும் என்னோட ப்ளாக் ல போட்டுட்டேன்.. தமிழ்மணம் ல பதிவு பண்ணிட்டேன்.. அது நாப்பத்தெட்டு மணிநேரம் கழிச்சிதான் அச்செப்ட் ஆகும்னு சொல்லிச்சி. பட் ஏன் தமிழிஷ் ல வரலன்னு தெரியல . நான் தமிழ் ப்ளாக்கிங் ல இன்னும் பழகணும்னு நெனைக்குறேன்.. 🙂

    Reply
  4. தமிழிஷில் இணைச்சிருக்கேன். தமிழிஷில் இணைக்க, எப்பவும்.. உங்க ப்ளாகில் இருந்து, அந்த பட்டையை க்ளிக் பண்ணுங்க.

    அப்புறம் தலைப்போடு.. கூடவே ‘திரை விமர்சனம்’ மாதிரி ஒன்னு ரெண்டு தமிழ் வார்த்தைகள் இருக்கனும் இல்லைன்னா… தெரியாது. (என்னோட ‘தமிழிஷ்’ பதிவுகளை படிச்சிப் பாருங்க) (செப்டம்பர் மாதத்தில் இருக்கும்).

    Reply
  5. ஓ ரைட்டு .. இப்போ புரிஞ்சிது.. இப்போ தான் உங்க போஸ்ட்டுகள படிச்சேன். இனி தலைப்புகள்ல தமிழ் வார்த்தைகள போட்டுற வேண்டியது தான். நன்றி பாலா.

    Reply
  6. Its good movie. I have seen this… good Terror movie.

    Reply
  7. @ kolipaiyan – ஆமாங்க.. நல்ல படம்..
    @ உதயன் – நன்றிங்ணா . . உங்க ஊர் இப்போ எப்புடி இருக்கு? நிலைமை பரவாயில்லையா? அங்கிருந்து நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்..

    Reply
  8. ரொம்ப நாளா சிஸ்டம்ல இருக்கு. இன்னைக்கு நைட்டு பாத்துர(பயந்துற) வேண்டியதுதான். நீங்க சொன்ன அதே மெத்தட்ல தான் நானும் படம் பாப்பேன். என்ன, ஜன்னல் மட்டும் பின்னாடி இருக்கும் 🙂 ஒரு சின்ன டிஸ்டர்பன்ஸ் இருந்தா கூட பிடிக்காது.

    தல பாலா சொன்ன மாதிரி செஞ்சுடுங்க. எனக்கும் அவர் தான் சொல்லிகுடுத்தார். நன்றி தல.

    Reply
  9. ஹாரர் கொண்டான் பட்டத்தை நான் வாங்கிக்கிறேன் ஹி ஹி ஹி

    படத்த விட உங்க விமர்சனம் நல்லா இருக்கு 😉

    Reply
  10. @ அறிவுGV – பின்னாடி ஜன்னலா? பார்த்து.. எதாவது ஒரு கை வந்து உங்க தோள்ல கப்புனு விழப்போகுது.. இத நெனைச்சாலே பயமா இருக்கே !!! 🙂

    @ கிரி – வணக்கண்ணா. . .நம்ம சர்நேம் உங்க பேரு தாண்ணா.. உங்க வாழ்த்துக்கு நன்றி.. 🙂

    Reply
  11. ஹஹஹ நமக்கு நல்ல தீனி…. எனக்கும் ஹாரர் படம் பார்க்கும்போது டிஸ்டர்ப் இருக்ககூடாது. நான் திகில் படம் விசிறி…. இந்தபடத்தையும ஒருகைபார்த்துர்றேன்.. பார்த்துட்டு சொல்றேன்… எப்படின்னு

    Reply
  12. Tamil typing theriathu. Mannichikonga. I saw this movie yesterday night sitting alone and some scenes were really thrilling, but we could feel the climax a bit earlier as similar to tamil cinema, when the covers get exchanged. Good movie to watch.

    Reply
  13. @ நாஞ்சில் பிரதாப் – 🙂 . . எப்புடிண்ணா இருந்திச்சு படம் . . .

    @ சாந்தமூர்த்தி – ஆமாம். . கடைசி கிளைமாக்ஸ் வர்ரமுன்னாடியே எல்லாம் தெரிஞ்சிரும். . ஆனாலும், ஒரு நல்ல மசாலாப்படம் இது . .நெறையவே என்ன பயமுறுத்தின ஒரு படம் 🙂 . .

    Reply
  14. கருந்தேள், சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன்… அம்மணி காரிலே என்வலப்பை நழுவ விடும் போதே க்ளைமாக்சை ஓரளவு ஊகித்து விட முடிகிறது…. ஆனாலும் கடைசியில் பச்சாதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது…

    இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாமோ ? 🙂

    முதல் தமிழ் பதிவிற்கு லேட்டா வாழ்த்துகள் சொல்லிக்கிறேனுங்கோ… 🙂

    Reply
  15. Thala…
    Movie sema mokka…
    i saw that…but it look like a comedy…
    but i read all of your reviews…our taste is same except for this one….
    keep on writing….

    Reply

Join the conversation