Drive Angry 3D (2011) – English
நரகத்தில் இருந்து தப்பிக்கும் கதாநாயகன் – ஒரு படு விறுவிறுப்பான காமிக்ஸ் கதைக்கு சரியான கதைக்களனாக அமைந்துவிடுகிறது. எனக்குத் தெரிந்து, இதுபோன்ற ஒரு காமிக்ஸ் கதைக்குப் பொருத்தமான ஹீரோ, இரும்புக்கை நார்மன். அவரை வைத்து இப்படி ஒரு கதையை எழுதினால், பின்னியெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்துக்கொண்டு, 3 -டியில் ஒரு படம் வந்திருக்கிறது. பல நாட்கள் முன்னரே, இந்த டிரய்லரைப் பார்க்கும்போதே பயங்கரமாக இம்ப்ரஸ் ஆகி, படத்தைப் பார்த்தே விடுவது என்ற முடிவில் இருந்தேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் முகுந்தா தியேட்டரில்வேறு படத்தைப் போட்டுவிட்டனர். அப்புறம் என்ன? படத்துக்கு ஓடிவிட்டோம் நானும் ஷ்ரீயும். படம் ஆரம்பிக்குமுன், ‘Thor ‘ படத்தின் டிரெய்லர் போட்டனர். நான் டூம்ப் ரெய்டர் அண்டர்வேர்ல்ட் ஆடிய காலத்தில் இருந்தே, தோரை எனக்குப் பிடிக்கும். அண்டர்வேர்ல்டில், தோரின் குகைக்குள் செல்லும் ஒரு லெவல் உண்டு. அட்டகாசமான ஒரு ஆகிருதியுடன், கையில் ஒரு மெகா சைஸ் சுத்தியலை வைத்துக்கொண்டு எல்லோரையும் அடித்துத் த்வம்சம் செய்யும் ஒரு கடவுளை யாருக்குத்தான் பிடிக்காது? அந்தக் காமிக்ஸ் எப்படி இருக்கிறது என்று அதைப் படித்த அன்பர்கள் யாராவது சொல்லுங்கள் சாமிகளா.
நிற்க. ஒரு காலத்தில், ஸ்பான் (Spawn) என்று ஒரு படம் வெளிவந்ததே.. அதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு சதியில் இறந்துபோய் விடும் மனிதன் ஒருவன், சூப்பர்ஹீரோவாகத் திரும்பி வந்து எதிரிகளைப் பந்தாடுவான். இது ஒரு காமிக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட படம். நான் சின்னஞ்சிறு சிறுவனாக இருந்தபோது, விரல் சூப்பிக்கொண்டே ஹெச்பிஓ (HBO)வில் பார்த்த படமாக்கும் இது. ட்ரைவ் ஆங்ரி பார்க்கும்போது, ஸ்பானின் நினைவு வந்தது. தோர் டிரைலர் முடிந்ததும், வேறு மூன்று டிரெய்லர்கள் வந்தன. அதற்குப்பின், படம் தொடங்கியது. படத்தைப் பற்றி மேலும் எழுதுமுன், நம்ம லக்கிமேன் படம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதன் 3 டி வடிவமே இந்தப்படம் என்று அறிக.
ரைட். ஜான் மில்லர் என்பவன், நரகத்தில் கொடுந்தீயில் வெந்துகொண்டிருப்பவன். பூமியில் இருக்கையில், பாவங்கள் பல செய்து, அதன் விளைவாக, இறந்தபின் நரகத்துக்குக் சென்றுவிட்டவன். அவனுக்கு ஒரு மகள் உண்டு. அந்த மகளுக்குப் பிறந்த ஒரு குழந்தையும் உண்டு. அந்த மகளை, சாத்தான் வழிபாடு செய்யும் ஒரு குழுவில் சேர்த்துக்கொண்டு, இந்தக் குழந்தை பிறந்ததும், கொன்றுவிடுகிறான் ஜோனா கிங் என்பவன். ஒரு மாந்திரீக ஆசாமி. இந்தக் குழந்தையைக் கொன்று, சாத்தானின் ஆட்சியைப் பூமியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவனது தீய நோக்கம். நரகத்தில் வேகும் மனிதர்களின் கண் முன்னர், அவர்களது உற்றார் உறவினர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் விரியும். இந்த வேதனைகளைக் கண்ணுற்றும், அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பது, அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் தண்டனை. எனவே, ஜான் மில்லரின் கண் முன்னர் அவனது மகள் கொல்லப்படும் காட்சி விரிகிறது. இதனைக்கண்டு கோபமுறும் மில்லர், கடவுள்களைக் கொல்லப் பயன்படும் ஒரு துப்பாக்கியைக் களவாடி (துணுக்குச் செய்தி – இந்தத் துப்பாக்கியால் சுட்டால், நோ சொர்க்கம் ஆர் நரகம். எல்லையில்லாப் பாழியில் விழுந்து அங்கேயே கிடக்க வேண்டியதுதான்), அதன்மூலம் நரகத்தின் காவலர்களைக் கொன்று, பூமிக்குத் தப்பித்து வருகிறான். வில்லன் ஜோனா கிங்கைக் கொல்வதே அவனது நோக்கம்.
நரகத்தில் இருந்து தப்பிக்கும் ஒரு ஆசாமியைச் சும்மா விட்டுவிட முடியுமா என்ன? எனவே, நரகத்தின் அக்கவுண்டன்ட் (இவரது பெயரே அக்கவுண்டன்ட் தான்), ஜானைத் துரத்திக் கொண்டு, பூமிக்கு வருகிறார். ஜான் துரத்தும் வில்லன் ஒருபக்கம்; ஜானையே துரத்தும் அக்கவுண்டன்ட் மறுபக்கம்; என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
பொதுவாக, ரைட்ராயல் அடிதடிப் படங்கள், எனக்குப் பிடிக்கும். அந்த வகையில், இதுவும் பிடித்தது. படத்தின் முதல் காட்சியில் இருந்து, கடைசிக் காட்சிவரை, முழுக்க முழுக்க அடிதடி. காது ஜவ்வு பிய்ந்து தொங்கும் வகையில், ‘டமால், டுமீல், டிஷ், அய்யய்யோ, கும்கும், கிராக்க்க், டும்ம்ம்,’ ஆகிய சத்தங்கள், மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வருகின்றன. என்னைப்பொறுத்தவரையில், பள்ளி நாட்களில், ஒரு அதிரடிக் காமிக்ஸ் படித்த திருப்தியைக் கொடுத்தது இந்தப் படம். கெட் கார்ட்டர் (ஸ்டாலோன் நடித்த புதிய வெர்ஷன்) உங்களுக்குப் பிடிக்குமா? (எனக்குப் பிடிக்கும்). அப்படியென்றால், இதுவும் பிடிக்கும்.
மற்றபடி, படத்தின் ஹீரோயின் ஆம்பர் ஹெர்ட், ஒரு மாதிரி ஜிகுஜிகுவான கெட்டப்பிலேயே படம் முழுக்க வந்துபோகிறார். அவரால் ஒரு பயனும் இல்லாதபோதிலும், இந்த ரீதியிலான அதிரடிப்படங்களில், இப்படி ஒரு ஹீரோயின் வருவது சகஜம்தான் என்பதால், அதுபாட்டுக்கு ஒரு பக்கம் ஜாலியாக இருக்கிறது. படத்தில், 3டியினால், ஒரு பயனும் இல்லை. கார் சேஸ்களின் பொது, உடைந்து சிதறும் துண்டுகள், நமது முகத்தில் வந்து அறைவது ஒன்றே 3 டியின் பயன்.
எந்த லாஜிக்கும் பார்க்கக்கூடாத படங்களில் இதுவும் ஒன்று (உடனே, ’டாய்ய்ய்ய் .. அது என்னடா தமிழ்ப்படத்துல இப்புடியெல்லாம் இருந்தாமட்டும் அது மொக்கைன்னு அறிக்கை உடுறே.. இங்கிலிபீசுல இப்புடி எடுத்தா, ஜாலியா இருக்குன்னு சொல்றே? அடிங்க’ – என்று யாரும் கமென்ட் இட வேண்டாம். தமிழில், ஜாலியாக இல்லை.. அட கொஞ்சம் மொக்கையாக இல்லாதபடிக்கூட படம் எடுக்கலாம் இல்லையா? தமிழில் இப்படி வரும் படங்கள் படு மொக்கையாக இருக்கின்றன என்பதால்தான் அப்படி எழுதுகிறேன்).
படத்தில் அக்கௌண்டண்டாக வரும் வில்லியம் ஃபிச்னரைப் பல படங்களில் துக்கடா வேடங்களில் பார்த்திருப்பீர்கள். டார்க் நைட் படத்தில், ஆரம்ப பேங்க் கொள்ளையின்போது, ஜோக்கரின் அடியாட்களை ஷாட்கன்னால் சுட்டுக்கொண்டே வரும் பேங்க் மேனேஜரை நினைவிருக்கிறதா? அவரே இவர். லக்கிமேன் படத்தில் கௌண்டமணி செந்தில் இருவரும் செய்த வேடத்தை இவர் ஒருவரே செய்திருக்கிறார். ஆகவே, இவரைப் படத்தில் பார்க்கையில், சிரிப்பதா அல்லது சீரியஸாக விசிலடிப்பதா என்ற ஒரு சந்தேகம் வந்து, எதாவது ஒரு முடிவு எடுப்பதற்குள், படமே முடிந்துவிடுகிறது. எனவே, எதோ ஒரு முடிவு எடுத்துக்கொண்டு, அதன் பிறகு படம் பார்க்கச் செல்வது சாலச்சிறந்தது.
அதேபோல், படத்தில் பல மஜாவான காட்சிகள் ஆரம்பிப்பது போல் தொடங்கி, ஆரம்பிப்பதற்குள் முடிந்துபோய் விடுகிறது. எனவே, மஜாவை எதிர்பார்த்துக்கொண்டு இப்படத்துக்குச் சென்றால், கஜகஜா ஆகிவிடும் என்றும் அறிக.
இப்படம் பார்த்து முடிக்கும்போது ஒரு எண்ணம் எழுந்தது. அது இதுதான்.
‘அடப்பாவிகளா ! தொண்ணூறுகளில் எடுத்து வெளியிட்டிருக்க வேண்டிய ஒரு படத்தை இவ்வளவு லேட்டாக வெளியிட்டிருக்கிறீர்களே …. இதுதானாய்யா உங்க டக்கு?’ இவ்வளவு தாமதமாக ஒரு படத்தை வெளியிட்டால், அது ஃப்ளாப் ஆகாமல் வேறு என்ன ஆகும்?
எனிவே, நான் ஏற்கெனவே சொன்னதுபோல், கண்டபடி அடித்துக்கொண்டு அலறும் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இப்படத்தைப் பார்க்கக் கடவீர்களாக.
Drive Angry படத்தின் அதிரடி டிரெய்லர் இங்கே.
மீ த ஃபர்ஸ்ட்டு!
முதல் நாளே இந்த மொக்கை படம் பார்த்து நொந்தவர்கள் சங்கம் – சென்னை கிளை.
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் – வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு – புலி வளர்த்த பிள்ளை
இந்த படத்தை தியேட்டரில் பார்க்கையில் ஒருவர் அடித்த கமென்ட்: “டேய், இதையெல்லாம் நாங்க டெர்மினேட்டர் படத்துலேயே பார்த்துட்டோம், அர்னால்ட் எடத்துலே நிக்கோலஸ் கேஜா? சரத்குமார் ரோலில் வையாபுரியா?” என்றெல்லாம் கலாட்டா செய்துக்கொண்டு இருந்தார்கள். பல இடங்களில் அப்படியே டெர்மினேட்டர் இரண்டாம் பாக காட்சிகளை கொண்டு இன்ஸ்பயர் ஆகி இருப்பது கண்கூடு.
முதல் நாளே இந்த மொக்கை படம் பார்த்து நொந்தவர்கள் சங்கம் – சென்னை கிளை.
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் – வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு – புலி வளர்த்த பிள்ளை
ஹாஹ்ஹா 🙂 . . நான் பார்த்தது பெங்களூர்ல.. தியேட்டரும் ரொம்ப சின்னதாச்சா… ஸோ, விசிலடிச்சி, தொடங்கி வெச்சதே நான் தான் 🙂 .. ஹீ ஹீ
william fichtner kicks ass as “agent alex mahone” in “prison break” – the tv series ..!!
try to watch that !!
ஹாஹாஹா,செம பல்பா நண்பா
ஆம்பர் ஹேர்டை நான் எங்கு பார்த்தாலும் ரசிப்பேன்,அதற்கும் படத்தில் வழி இல்லை என்கிறீர்களே!!அயகோ.
நிக்கோலஸ்கேஜுக்கு சமீபத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் இல்லை,அவர் காலிகூண்டு ஆகிவிட்டார் போலும்.இதுல 3ட் வேறா?
தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13
நரகத்தில் இருந்து தப்பிக்கும் நாயகன் என்பதை விட, சாத்தானிடம் தன்னுடைய ஆன்மாவை அடகு வைக்கும் அல்லது ஒரு தீய சக்திக்கு அல்லக்கையாக இருந்து பின்னர் மனம் மாறி நல்லது செய்யும் ஹீரோக்கள் கொண்ட காமிக்ஸ்கள் அதிகம். உதாரணம், ghost rider, hell boy, silver surfer…
ஆனா படத்தில நரகத்தில் இருந்து தப்பிக்கும் கான்செப்ட் புதுசில்ல. The Crow ஒரு உதாரணம்.
தோர் வைக்கிங் கடவுள்.God of thunder. மார்வல் காமிக்ஸில் ஒரு முக்கிய கதாப்பாத்திரம். தோர் பங்குபெறும் கதைகள் படித்து இருந்தாலும், சோலோ கதைகள் படித்ததில்லை. நன்றாகவே இருக்கும். சிலது வழக்கம் போல, சாவடிக்கும். 🙂
//அதுபாட்டுக்கு ஒரு பக்கம் ஜாலியாக இருக்கிறது.//
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு… 😉
பட trailer பார்த்தேன்.மோசமில்ல.முடிஞ்சா,எவனாவது கூட்டிப் போனா ஓசில பாரக்கலாம்னு இருக்கேன். 🙂
பி.கு:ghost rider ரெண்டாம் பாகம் ரெடியாவுதாம்.கொடூரம்.அதிலும் அண்ணன் தான்.இதையாவது ஒழுங்கா செய்ங்கடா டேய்.
படம் செம மொக்க, ப்ளஸ். குப்பை!! தமிழ்படங்களுக்குப் போட்டியா வந்திருக்குன்னு சொல்லலாம். நல்லவேளை, 1.5 மணி நேரத்தில முடிஞ்சது. + பாட்டு இல்ல…
சமீபத்தில் பார்த்த மெக்கானிக் இதற்குப் பரவாயில்லைன்னு தோணிச்சு..
நண்பரே,
நான் தப்பித்துக் கொண்டேன்:)) மஜா காட்சிகள் இல்லாமல் படமெடுக்கும் இயக்குனர்களிற்கு பேதி மாத்திரை தேனீரில் கலந்து பருக்குவோர் கழகம்.
டாய்ய்ய்ய் .. அது என்னடா தமிழ்ப்படத்துல இப்புடியெல்லாம் இருந்தாமட்டும் அது மொக்கைன்னு அறிக்கை உடுறே.. இங்கிலிபீசுல இப்புடி எடுத்தா, ஜாலியா இருக்குன்னு சொல்றே? அடிங்க
@காப்பி/டீ ரைட் : கருந்தேள்
—
இப்பல்லாம்… தியேட்டரில் பல்பு வாங்குவது ரொம்ப ரொம்ப கம்மியாகிடுச்சிங்க தல. பாவம்… நீங்களும்.. காதலனும்..! 🙁 🙁
—
நிக்கோலட Matchstick Men (2003) படத்தை 2-3 வாரம் முன்னாடி பார்த்தேன் தல. நீங்க பார்த்துட்டீங்களா? அப்புறம் LOTR பதிவு எப்ப எழுதப் போறீங்க?
உங்களுக்கு ஆங்கில நாடகமெல்லாம் பார்க்க விருப்பமிருக்கான்னு தெரியலை. இருந்தால்.. இதையெல்லாம் பார்க்க முயற்சி பண்ணுங்க.
Dexter 5 seasons
Spartacus 2 seasons
Lost 6 seasons
Two and a Half Men 8 Seasons
Everybody Loves Raymond 9 Seasons
Prison Break 4 seasons (முதல் சீசன் மட்டும் நல்லாயிருக்கும்)
கருண்தேல போலீசு தேடுதாமே?!!! இங்கே ஆதாரம் 😉
http://charuonline.com/blog/?p=1937
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். சென்ற வாரம் முழுமையும் இண்டர்நெட் பக்கம் வர முடியாத சூழல். எனவே, இப்பொழுது நேரம் கிடைத்தவுடன் இதனை எழுதுகிறேன்.
@ சைத்தான் – தல.. எனக்கு சீரியல்ஸ் பாக்குறதுல இண்ட்ரஸ்ட் உண்டு. குறிப்பா, டெஸ்பரேட் ஹௌஸ்வைவ்ஸ் போன வருஷம் தான் அத்தனை சீஸனும் பார்த்தோம். I liked them. அதேபோல், டெக்ஸ்டர், இங்க இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு. அஞ்சு சீஸனும் தினம் ஒரு எபிஸோடா போடுறாங்க.. we both juz luv it. பின்னியெடுக்குது !
two and a half men, frasier, friends, everybody loves raymond எல்லாம் அப்பப்ப எதாவது ஒரு எபிஸோட் பார்ப்பேன். ஸ்பார்ட்டகஸ், மொத்தமா லேப்டாப் வந்தவுடனே இறக்கிடுறேன். . 🙂