Eternal Sunshine of the Spotless Mind (2004) – English
காதலில் இருக்கும்போது, நாம் எத்தனைமுறை சண்டையிட்டிருக்கிறோம்? எவ்வளவோ சந்தோஷங்களைத் தரும் ஒரு இனிய அனுபவமாகக் காதல் இருந்தாலும், பல முறை, கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு நிலையில், இரு காதலர்கள் என்ன செய்கிறார்கள்; அதனால் அவர்களுக்கு என்ன நேர்கிறது என்ற ஒரு மிக எளிமையான கருவை வைத்துப் பின்னப்பட்ட ஒரு அட்டகாசமான படம் தான் இந்த ‘Eternal Sunshine of the Spotless Mind’. இதுவும் ஒரு காதல் கதைதான். ஆனால், இதுவரை எடுக்கப்பட்டுள்ள காதல் கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு அனுபவம் இது.
ஜோயல் (ஜிம் கேரி) ஒரு தனிமையான மனிதன். எப்பொழுதும் ஒருவித மென்சோகத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பவனும் கூட. ஒரு காதலர் தினத்தன்று, தனிமையான ஒரு இடத்துக்கு (மாண்டாக்) அவன் செல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த இடத்தில், அவன் க்ளெமண்டைனை (கேட் வின்ஸ்லெட்) சந்திக்கிறான். அவளுமே அந்த ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் நின்று எதையோ யோசித்தவண்ணமே இருக்கிறாள். வலிய வந்து ஜோயலிடம் பேசி, தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். திரும்பச் செல்லும் வழியிலேயே, தனிமையான ஜோயலின் இதயத்தில் இடம் பிடித்து விடுகிறாள். வீட்டுக்கு வந்து, அவளைத் தொலைபேசியில் அழைக்கிறான் ஜோயல். அவள் அவனை, ஒரு உறைந்து போன ஏரிக்கு அழைத்துச் செல்கிறாள். இரவு முழுவதும் அங்கு இருந்து விட்டு, மறுநாள் ஜோயல், அவளை அவளது வீட்டில் ட்ராப் செய்கிறான். தான் மறுபடித் தூங்க விரும்புவதாகவும், தனது டூத்ப்ரஷ்ஷை எடுத்துவருவதாகவும் சொல்லிவிட்டு, க்ளெமண்டைன் அவளது வீட்டுக்குள் செல்கிறாள்.
காத்திருக்கும் ஜோயலின் கார்க்கண்ணாடி தட்டப்படுகிறது. ஒரு இளைஞன், “நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று ஜோயலைக் கேட்கிறான். அவனுக்கு என்ன வேண்டும் என்று ஜோயல் திருப்பிக் கேட்க, அந்த இளைஞன் அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
அடுத்த காட்சியில், ஜோயல் விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறான். தனது நன்பனிடம் சென்று, க்ளெமண்டைன் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொல்லிப் புலம்புகிறான். தான் அவளைக் காண, அவள் பணிபுரியும் இடத்துக்கே சென்றதாகவும், அவள், தன்னை ஒரு அந்நியனைப் பார்ப்பதைப் போல் பார்த்ததாகவும் சொல்கிறான். அவள் தன்னை வேண்டுமென்றே அவமதிப்பதாகச் சொல்லி அழுகிறான்.
அவனது நண்பன், ஜோயலிடம் ஒரு தபால் கார்டைக் கொடுக்கிறான். அந்தத் தபாலைப் படிக்கும் ஜோயல் அதிர்ச்சி அடைகிறான்.
இந்த இடத்தில் இருந்து, இப்படம் முற்றிலும் வேறான ஒரு தளத்தில் பயணிக்கத் தொடங்குகிறது. அதனைப் பற்றி நான் இங்கு எழுதினால், படத்தின் ரகசியத்தை உடைத்தது போல ஆகிவிடும் என்பதால், இந்த இடத்திலேயே இந்த விமரிசனத்தை நிறுத்திக்கொள்கிறேன்.
படம் நெடுக, ஜோயலுக்கும் க்ளெமண்டைனுக்கும் இடையேயான காதல் காட்சிகள் இடம்பெறுகின்றன. க்ளெமண்டைன் ஒரு அப்பட்டமான extravert. ஜோயலோ ஒரு முழுமையான introvert. இவர்கள் இடையே மலரும் காதல், இருவரின் மூலமாகவும் எப்படி வெளிப்படுகிறது என்பது அடுமையாகக் காட்டப்படுகிறது. க்ளெமண்டைன் ஒரு இரவில், வெகுநேரம் கழித்து, குடித்துவிட்டு வருகிறாள். அதனைப் பார்க்கும் ஜோயல், அவளைச் சந்தேகப்படுகிறான். அது க்ளெமண்டைனுக்குப் பிடிப்பதில்லை. க்ளெமண்டைன் எப்பொழுதும் உற்சாகத்துடன் இருக்கப் பிரியப்படுபவள். ஜோயலோ, எப்பொழுதுமே தனிமையில் இருக்க விருப்பப்படுபவன். எனவே, இருவருக்கும் சண்டை அடிக்கடி நேர்கிறது.
இந்தக் கதாபாத்திரத்தை, ஜிம் கேரியைவிட நன்றாக வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவரது வழக்கமான சேஷ்டைகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, நன்றாக நடித்திருக்கிறார். அதுவும், க்ளெமண்டைனை, அவள் சொல்வதற்கெல்லாம் குத்தலாகப் பதில் சொல்லும்போது, அங்கு நிற்பது ஜோயலேதான் என்ற பிரமை ஏற்படுகிறது. கேட் வின்ஸ்லெட், அழகான , சுதந்திரமான க்ளெமண்டைனை அருமையாகப் பிரதிபலித்திருக்கிறார். மிக அழகாக இருக்கிறார்.
இரண்டு காதலர்களுக்கும் இடையே நேர்கிற இந்த ஈகோ பிரச்னைகளை இப்படம் நேர்த்தியாகக் காட்டுகிறது. இதனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் , தங்களது வாழ்வில் இதைப் போல் நடந்த பிரச்னைகளை நினைவு கூரலாம்.
இப்படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன. நான் அவை எதையும் பற்றி எழுதப்போவதில்லை. நீங்களே பாருங்கள். ஒரு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் அது.
இப்படத்தின் டிரைலர் இங்கே.
Good movie. I jus started writing about this movie, but didnt completed that, and its sleeping in draft.. 🙂
ஆஹா . . நீங்களும் எழுதுங்க தல. . நல்லா இருக்கும் . . 🙂 சீக்கிரமே ரிலீஸ் பண்ணுங்க . .
என்னங்க இது. விமர்சனம்னு சொல்லிட்டு, இப்படி இடைவேளை போடுற மாதிரி முடிச்சுட்டீங்க. ரெண்டு தடவை இந்த படத்த எடுத்துட்டு, பார்த்தா புரியாதுன்னு, பார்க்காமலே குடுத்துட்டேன். உங்க விமர்சனம் பார்த்தா கதை புரியும்னு நினைச்சேன். கவுத்திட்டீங்க 🙂
அடடா . .நீங்க அப்புடி சொல்றீங்களா? சரி.. ஒண்ணு பண்ணலாம் . . ரெண்டு மூணு நாள் பொறுக்கலாம். . நம்ம மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம். அப்பறம், முழு விமரிசனத்த போட்டுறலாம். . என்ன.. இது ஓகே தானே . 🙂
கருந்தேள்,
எனக்கு நிகவும் நன்றாக தெரிந்த நண்பர் (பிரபல இயக்குனர்) ஒருவரின் லட்சியமே இந்த படத்தை தமிழில் எடுப்பது தான். அதற்காக அவர் ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி செய்து பல வருடங்களாக காத்துக் கொண்டு இருக்கிறார். அவரின் இரண்டு படங்களுமே தமிழில் ஹிட் என்பதால் அவருக்கு கமர்ஷியல் படங்களே வருகின்றன. இப்போதும் அவரை பார்க்கும்போதெல்லாம் இந்த படத்தை பற்றித்தான் பேசி சிலாகிப்போம்.
அவர் யாரென்று பொதுவில் கூற இயலாமைக்கு வருந்துகிறேன். அந்த அளவுக்கு இது ஒரு நல்ல படம். இந்த படம் அநேகமாக இந்த ஆண்டு ஹிந்தியில் வந்து விடும் என்று நம்புகிறேன்.
ஆர்வத்த தூண்டிட்டீங்க.. இனி டோரண்டாய நமஹ தான்.. (ஆமா பொங்கல்லாம் எப்டி?)
தமிழில் இந்த படம் வேலைக்கு ஆகாது என்பது நன்றாக தெரிந்தும் இந்த படத்தின் மீதுள்ள காதல் அவரை ஆட்கொண்டு உள்ளது. படம் பார்க்கும் அனைவரும் இரண்டே இரண்டு வகையில் தான் வருவார்கள்.
ஒன்று: படத்தின் ரசிகர்கள் ஆகி விட்டவர்கள்.
இரண்டு: படத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள்.
அவ்வளவுதான். மேலே சொல்ல வேறொன்றும் இல்லை.
@ விஷ்வா – சூப்பர்!! தமிழில் இப்படத்தைப் பற்றி ஒரு முயற்சி எடுக்கப்படுவதைக் குறித்து மகிழ்ச்சி. தரமான ஸ்க்ரிப்டாக இருந்தால், கட்டாயம் வெற்றி பெறும். . அந்த இயக்குனருக்கு எனது வாழ்த்துகள். . (ஆனால், அப்படி படம் வெளியாகும்போது, டைட்டிலில் இப்படத்துக்கு ஒரு acknowledgement அவர் கொடுத்தால் நன்றாக இருக்கும் (என்பது என் தாழ்மையான கருத்து) . . 🙂
ஆமாம். நீங்க சொல்றது கரெக்ட். ஒன்று இப்படம் புரிந்து, அதை சிலாகிப்பவர்கள். இல்லை, அது புரியாமல் போய் விடுபவர்கள். ஆனால், இரண்டு தரப்புக்குமே, இப்படம் எடுக்கப்பட்ட விதம் மிகவும் பிடிக்கும் என்பது என் அனுமானம்.
@ அண்ணாமலையான் – பொங்கலெல்லாம் பட்டைய கிளப்பிருச்சு . .நெறைய பொங்கல் சாப்புட்டு, மலைப்பாம்பு போல உருண்டுகினு இருந்ததுதான் மிச்சம் . .:) அங்க எப்புடி?
தனியாதானே பாம்பு உருண்டுச்சு? இல்ல சாரப்பாம்பு எதாவது…? நமக்கு பொங்கல் செங்கல்லாம் இல்ல.. நாளை மற்றொரு நாளே.. அவ்வளவுதான்..
அட ஏங்க வயித்தெரிச்சல கொட்டிகிட்டு . . சாரப்பாம்பெல்லாம் இல்ல . . 🙁 தனியாதான் மலைப்பாம்பு உருண்டுச்சு . . ஹும்ம் . . என்ன பண்ணுறது . .
நண்பரே,
சில நினைவுகளை அவை எவ்வளவுதான் இடைஞ்சலாக இருந்தாலும் உள்ளத்திலிருந்து அழித்துவிடமுடியாதல்லவா :)) அப்படியே அழித்தாலும் சில வேளைகளில் விதி வேலை செய்து விடுமல்லவா!!
புதுமையான படம், நல்ல விமர்சனம்.
I have seen a drama based on this concept in podhigai long long ago… but so indianish…. sentimentish….
Acknowledging the original film would result in tamil would result in copyright infringement.May be tats why they are not acknowledging it…
@ காதலரே – அது!! நினைவுகளை அழிக்க முடியாமல், விதி வேலை செய்த ஒரு தருணம் தான் இப்படத்தின் முக்கிய அம்சமே . . 🙂 . . கரெக்டாகப் பிடித்தீர்கள் !!
@ pappu – டிராமா வந்துருக்கா என்ன? புது விஷயமா இருக்கு . . 🙂 நீங்க சொன்னதுகூட இருக்கலாம் . .காப்பிரைட் விஷயத்துக்கு . . 🙂 . .
நல்லா கொண்டு போயி பொசுக்குனு நிப்பாட்டிப்புட்டீகளே.சீக்கிரம் முழுசா சொல்லிருங்க.எனக்கெல்லாம் பொறுமையும் கெடையாது,படம் பாத்து கரேட்டா புரிஞ்சுக்கிற அளவுக்கு brainல நெறயா convulutionsம் கெடையாது..(+2ல படிச்சது பின்ன்னூட்டம் போடவாவது யூஸ் ஆச்சு 🙂 )
இந்தப் படத்துக்கு ஜிம்முக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு நினைச்சேன். பறி போய்டுச்சி. எப்பவும் அஷ்டகோணலா வாயை வைக்கும் ஜிம்மை மட்டுமே எல்லோருக்கு தெரிஞ்சிருக்கும் போது… இப்படி கூட என்னால் நடிக்க முடியும்னு பொடனியில் அறைஞ்சிருப்பார்.
மெமண்டோ எழுதினப்ப.. இர்ரவர்ஸிபிளையும், இதையும் கணக்கில் வச்சிருந்தேன். அப்புறம் விட்டுப் போச்சி. முதலாவதை சரவணன் எழுதிட்டார். 🙂 🙂
—
விஸ்வா… அந்த டைரக்டர் ‘அவருதானே?’ 🙂 🙂 🙂 எதுக்கு என் பேரை அவர் கிட்ட சொல்லி வைங்க. என்னிக்காவது… எதுனா ஹெல்ப் தேவைப்பட்டா… ஒரு டீபாய் வேலையாவது கிடைக்குமில்ல?? 🙂
ஆமா.. நீங்க வேற ‘மூடில்’ இருக்கற மாதிரி தெரியுது?! ஒரே ரொமாண்டிக்கா போகுதே ஏரியா??? என்னா விஷயம்??? ஹா…?! 😉
@ மயில்ராவணன் – நீங்க இத பாக்க நேர்ந்தா பார்த்துருங்க . .கொஞ்ச நாள்லயே இந்தப் படத்தப் பிரிச்சி மேஞ்சிரலாம் . .சீக்கிரமே விரிவான பதிவு எழுத முயற்சி பண்றேன் . .:-) . . ஆமா. . அது என்னங்க Convolutions ??? நாங்கெல்லாம் ட்யுப் லைட்டுங்கன்னோவ் . . 🙂
@ பாலா – ஜிம்முக்கு ஆஸ்கர் கெடைச்சிருந்தா நல்லா தான் இருந்திருக்கும் . . பரவாயில்ல உடுங்க . .
அப்பறம், ‘அந்த’ டைரக்டர் கிட்ட நம்ம எலா பேரையும் விஸ்வா சொல்லிருப்பாரு . . கும்பலா அவருகிட்டே ஒருநாள் ஓடிருவோம் !! 🙂
அந்த ரொமாண்டிக் மேட்டர் பத்தி . ஹி ஹீ . .. எல்லாம் அப்புடி செட்டாயிருச்சு . .சீக்கிரமே வேறே காடகரில போட்டுறலாம் . . 🙂
//க்ளெமண்டைன் ஒரு அப்பட்டமான extravert. ஜோயலோ ஒரு முழுமையான introvert. //
இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்….
அட வுடுங்கண்ணா . . ஏதோ தெரியாம ரெண்டு இங்கிலிபீசு வார்த்தை வந்துருச்சு . . அதுவும் தப்பா . . அதைப்போய் அருஞ்சொற்பொருள் கேட்டுகினு . . ஹீ ஹீ . . .
ஜிம் கேரி நடித்த சீரியஸ் படமா….கண்டிப்பா பாக்கணுமே தலையோட நடிப்ப… விமர்சனத்துக்கு நன்றி 🙂
கண்டிப்பா பாருங்க. . பட்டைய கிளப்பும் . . 🙂
“அங்கதான் நாங்க கதைல ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கோம்
அங்க கொடுபோயா வச்சிங்க”
அப்படி twist and turns உள்ள ஒரு படம். கிட்டத்தட்ட psychological thriller மாதிரி இருந்தாலும் எனக்கு இந்த படம் better னு பீல் பண்றேன்
sema movie than thala…
Jim and Kate….kalakkal acting….
very very different….
keep on writing…
I’m extremely impressed with your writing abilities and also
with the structure for your weblog. Is that this a paid theme or did
you modify it yourself? Either way stay up the nice quality writing, it
is uncommon to see a great weblog like this one these days..