Exam (2009) – English

by Karundhel Rajesh January 10, 2013   English films

புதிர்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை அல்லவா? குறிப்பாக, கேள்விகள் கேட்டு வாங்கப்படும் விடையை விட, நமது கண் முன்னர் இருக்கும் ஒரு கேள்வியற்ற புதிரை உடைப்பது மிக மிக சுவாரஸ்யமானது. எனக்கு அது மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் இது பிடிக்கும் என்றால், இந்தப் படமும் பிடிக்கும்.

யோசித்துப் பாருங்கள். நாம் எல்லோருமே பல நேர்முகத் தேர்வுகளை சந்தித்திருக்கிறோம். அதேபோல் கல்லூரியில் படிக்கும்போது aptitude testகளையும் எழுதியிருப்போம். அப்படி ஒரு டெஸ்ட் உங்களுக்கு இப்போது அளிக்கப்படுகிறது. உங்கள் கையில் ஒரு வெள்ளைத்தாள். ஆனால் அதில் எந்தக் கேள்வியும் இல்லை. ஒரே ஒரு பேப்பர். அவ்வளவே. இந்த நிலையில் உங்களது எதிர்வினை எவ்வாறாக இருக்கும்? (’பேப்பரை கொடுத்துவிட்டு வெளியேறிவிடுவேன்’ என்று சொல்லத் தோன்றுகிறதா?)

ஓகே. இந்தப் படம் இப்படித்தான் துவங்குகிறது. இங்லாண்டில் ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் பல்வேறு வடிகட்டல்களுக்குப் பிறகு எட்டுபேர் இறுதியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இன்னும் ஒரே ஒரு ரௌண்ட் தான் பாக்கி. அதில் தேர்ச்சி பெற்றவருக்குத்தான் இந்த வேலை. ஆனால், இந்தக் கடைசி ரௌண்டில் உள்ள பிரச்னை என்னவெனில், அது ஒரு தேர்வு. மொத்தம் இருக்கும் எட்டு பேருக்குமான மேஜைகளில், ஒவ்வொருவருக்கும் ஒரு பேப்பர் கொடுக்கப்படுகிறது. அதில், ஒவ்வொரு நபருக்கும் ஒரு எண் எழுதப்பட்டிருக்கிறது. எட்டுபேரும் சென்று அமர்ந்தபின், உள்ளே ஒரு செக்யூரிட்டி வந்து காவல் நிற்கிறார். அவருடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது. இதன்பின் இறுதியாக உள்ளே வரும் கண்காணிப்பாளர்,இந்தத் தேர்வுக்கான நிபந்தனைகளை ஒவ்வொன்றாக சொல்கிறார்.

1. கண்காணிப்பாளரிடமோ அல்லது செக்யூரிட்டியிடமோ பேச முயற்சித்தால் தேர்வெழுதும் தகுதியை இழக்க நேரிடும்.
2. அந்த அறையை விட்டு வெளியே சென்றாலும் தகுதி போய்விடும்.
3. எக்ஸாம் பேப்பரை பாழ் செய்பவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள். (ஆனால் பாழ் செய்தல் என்பது என்ன என்று விளக்கப்படுவதில்லை)
4. இவர்களது கண் முன்னர் இருக்கும் ஒரு கேள்விக்கான ஒரு பதில், தேர்வு நேரம் முடிவதற்குள் கொடுக்கப்படவேண்டும்.

தேர்வுக்கான நேரம் மொத்தம் 80 நிமிடங்கள்.

ஆரம்பிக்கிறது தேர்வு. ஆனால் கண்முன் இருக்கும் வெள்ளைத்தாளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது யாருக்கும் புரிவதில்லை. கேள்வி எங்கே? கேள்வி தெரிந்தால்தானே விடையைப் பற்றி யோசிக்கமுடியும்?

இப்படியொரு அட்டகாசமான ஆரம்பத்துடன் தொடங்கும் இந்தப் படம், இறுதி நிமிடம் வரை அந்த விறுவிறுப்பை நன்றாகவே கொண்டுசெல்கிறது. இந்த எட்டு பேரும் இந்தத் தேர்வின் விதிகளை எப்படியெல்லாம் புரிந்துகொண்டு அதன் சொல்லப்படாத விதிகளை கவனித்து தேர்வை வெல்லப் பார்க்கிறார்கள் என்பது நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர். இவர்களது குணாதிசயங்கள் எப்படி அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதும் இப்படத்தில் கவனிக்கவேண்டிய விஷயம்.

இதற்குமேல் இந்தப் படத்தைப் பற்றி எழுத முடியாது. சஸ்பென்ஸ் உடைய வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான் கட்டுரையையும் மிகச்சிறியதாகவே முடிக்கிறேன். படத்தைப் பாருங்கள். அதன்பின்னர் உங்களுக்கே புரியும். இந்தப்படம், இங்லாண்ட் இயக்குநர் ஸ்டூவர்ட் ஹாஸல்டீனின் (Stuart Hazeldine) முதல் படம்.

இதோ Exam படத்தின் ட்ரய்லர்.

  Comments

27 Comments

  1. Nice Movie.I have seen it.The Climax Twist will be unpredictable.The Thrill will last till the end.

    Reply
    • Rajesh Da Scorp

      Yeap Krishna. That’s wat made me to watch this film with a kinda thrill 🙂

      Reply
  2. கிளைமாக்ஸ் வரை எழுத்துகொண்டுபோகும் விறுவிறுப்பு தான் படத்தின் பெரிய பிளஸ் . .
    நம் யோசிக்கும் சில விசயங்களும் படத்தில் வருவதால் என்னும் சுவாரஸ்யம் . .

    இந்த படம் பற்றி எழுதுவீர்கள் என ஓராண்டாக எதிர்பார்த்திருந்தேன் . .
    நன்றி அண்ணா . .

    Reply
    • Rajesh Da Scorp

      ஆம் துருவன். ஒவ்வொரு விஷயமும் சஸ்பென்சை அதிகரிக்கவே செய்தது. ஒரு வருடமாக எதிர்பார்த்தீர்களா? அடடா. ஒரு மெயில் அனுப்பியிருக்கலாமே

      Reply
  3. Omar Sheriff

    இதைப் போல் ஒரு மைன்ட் கேம் ஸ்டோரிக்காகத்தான் waiting. Need to watch soon.

    Reply
    • Rajesh Da Scorp

      Super. Please watch Omar. U might like it

      Reply
      • Avinash

        cannot find the movie… pls give full name of the film….
        and thanks for the review .. such expert to see the film…

        Reply
        • Rajesh Da Scorp

          The full name itself is ‘Exam’ boss. Search with the year – 2009.

          Reply
          • Avinash

            no bro… i’m not asking exam.. i find it on the day, you mention (Please watch Omar. U might like it). it only i can’t be find out…. sorry for the late reply?

          • Avinash

            sorry bro …. some little confusion.. it was a person name. sorry sorry bro.. late pick up

  4. Every Character is of different nationality, yethavathu maraimugama solla varangala…

    Reply
    • Rajesh Da Scorp

      ஹா ஹா… இருக்கலாம் பாஸ். ஆக்சுவலா மொதல்ல எனக்கு அந்த ஃபீல் இருந்தது.

      Reply
  5. what is your opinion about the movie “CUBE”,pls review that movie if you like it…

    Reply
    • Rajesh Da Scorp

      I think you have psychic powers Baskar.. I have already set my eyes on ‘Cube’ and then happened to read your comment. Telepathy?

      Reply
  6. உங்கள் புண்ணியத்தில் நேற்றுத்தான் பார்த்தேன். சுப்பர்ப்! இறுதிவரையில் சுவாரசியம் குறையாமல் சென்றது.அனைவரதும் பாத்திரப்படைப்புகள் பலவற்றை சொல்வது போல உணர்ந்தேன். நுணுக்கமான உணர்வுகள், குணாம்சங்களை கொண்ட பாத்திரங்கள். மிக்க நன்றி ராஜேஸ்! உங்களது அடுத்த பட அறிமுகத்திற்காக வெயிட்டிங்க். ) God Bless u Man!

    Reply
    • Rajesh Da Scorp

      இந்தப்படம் உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ச்சி சர்ஹூன்

      Reply
  7. Harris

    Scorp., You might have watched Mind Hunters . Please write about that too,

    Reply
    • Rajesh Da Scorp

      I know about teh film, but haven’t seen it Harris. I will try seeing and will try writing. Thanks.

      Reply
  8. அண்ணே உங்கள் பதிவுகளை பல மாதங்களாக படிக்கிறேன் ஆனால் இதுதான் என் முதல்comment, நான். உங்கள் பதிவு களின் +ஹாலிவுட் பாலா பதிவுகளின் மூலமாகதான் பல நல்ல சினிமாக்களையும் தமிழ் சினிமாவின் ஈயடிச்சான் காப்பிகளையும் தெரிஞ்சுகிட்டேன். உங்கள் பதிவுகள் எல்லாம். ரொம்ப நல்லா இருக்கு ஆனால்.பதிவுகளின் தாமதம்தான் மைனஸ்

    Reply
  9. அண்ணே. அந்த ஏலியன்ஸ் பற்றின பதிவை மீண்டும் சீக்கிரமா தொடங்குங்க

    Reply
  10. manimaran

    enaggu padathai patriya puthirkalai neengal vilakinal paravayillai.puriyavillai.please.

    Reply
  11. Siva

    Your reviews are excellent boss…….. Get going……….

    Reply
  12. Siva

    Why dont you write about “Vanilla Sky” or “Looper”? Both these movies are bit confusing………

    Reply
  13. MUTHUVENTHAN A

    I have to watch & Your reviews are excellent………..

    Reply
  14. Ashok Kumar A

    HI Rajesh,

    In Telugu, they have copied this Movie completely. it is acted by Jagabathi babu. the Name of the Movie is KEY. I remember your post on copyright only.

    Reply
  15. sekar

    i am confused in climax . can u explained me brother..?

    Reply
  16. Pratheep M

    Film was good.It was a bit confusing,but the twist cleared my doubts..! nice movie,thanks scorp.

    Reply

Join the conversation