Expendables 2 (2012) – எ பதிவு பை ஹாலிவுட் பாலா
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… ரெண்டு வருஷத்துக்கு முன்னால டகால்னு அப்ஸ்காண்ட் ஆன ஹாலிவுட் பாலா இதோ இப்போ ரீ-எண்ட்ரி. நம்ம ப்லாக் மூலமா.. பழைய காரம் இதுல இருக்கா? படிச்சிட்டு கமெண்ட் போடுங்க.. அவரு வந்து ரிப்ளை பண்ணுவாரு…
அப்போ இனி அடுத்து?
ஹா ஹா ஹா ஹா ஹா !
— கருந்தேள்
சரியா ரெண்டு வருசம் முன்னாடி எக்ஸ்பெண்டபிள்ஸ் படத்துக்கு விமர்சனம்(?) மாதிரி ஒன்னு எழுதினது (பாலாவின் பதிவை க்ளிக் செய்து படிக்கலாம் – கருந்தேள்). இப்ப திரும்பவும் ரெண்டாவது பார்ட்டுக்கு நானும் ஸ்டலோனும் ரிட்டன் ஆகியிருக்கோம். அதாவது 1980-களில் கோலேச்சிய B-movie ஹீரோ வில்லனெல்லாம் ஒன்னா சேர்ந்து ஒரு படமெடுக்க யார் தலையில் வத்தல் காயப்போடலாம்னு நினைக்கும் போதுதான்…, முதல் பார்ட்டை ஏற்கனவே கய்வி கய்வி ஊத்தின பின்னாடியும், ரெண்டாவது பார்ட்டுக்கு அந்த ஏரியால நான் டிக்கட் வாங்கிட்டு இருந்தேன்.
ஆச்சா….!!! முதல் பார்ட்டின் இண்ட்ரோ மாதிரி ஒரு அட்டு சீனை நீங்க 1980-ல் வந்த கேவலமான ஆக்ஷன் படத்தில் கூட பார்த்திருக்க மாட்டீங்க. இதிலும் அதே மாதிரி டாப் ஆங்கிள்ல ‘நேபாள்’ன்னு காமிச்சிட்டு, அட்டை’ன்னு அப்பட்டமா தெரியுற செட்டில் படம் ஆரம்பிக்கும் போதே…. எனக்கு கொஞ்சம் அடிவயிறு கலக்க ஆரம்பிச்சது. ஆனா பாருங்க… அண்ணன் இதில் சுதாரிச்சிக்கிட்டார்!! எக்ஸ்ப்ளோஸிவ்!!! சும்மா ஒரு பத்து பதினஞ்சி நிமிஷத்துக்கு அந்த அட்டை’ செட் அத்தனையையும் அடி பிரிச்சி எடுக்கறாங்க. நேபாள்-ல இவங்க காப்பாத்துறது கவர்னர் அர்னால்டை. அவரு… ‘I owe u one’-ன்னு சொல்லிட்டு அப்ஸ்காண்ட் ஆகறாரு. அப்படின்னா என்னன்னா இனிமே க்ளைமாக்ஸில்தான் திரும்ப வருவாராமாம்! குறியீடு!!!
அடுத்து இன்னும் கொஞ்ச நேரம், நம்ம எம்ஜியார் படத்திலெல்லாம் படகு சண்டையில் நம்பியார் துரத்தும் போது, சைடில் பாம் வெடிக்குமே.. அதே மாதிரி கொஞ்ச நேரம் வெடிக்க விடுறாங்க. சரி இண்ட்ரோ முடிஞ்சிடுச்சின்னு பார்த்தா… அடச்சே…… தண்ணில போய்கிட்டு இருக்கற ஃப்ளைட் டேக்காஃப் ஆக மாட்டேங்குது. ஆப்போஸிட்ல பெரிய டேம்!! எந்த நேரத்திலும் மோதிடுங்கற மாதிரி ஃப்ளைட் தண்ணில போய்கிட்டு இருக்கு. அப்பத்தான் நம்ம அண்ணனுக்கு அவரு பார்த்த ‘படிக்காதவன்’ படத்தோட சீன் நினைவு வந்திருக்கும் போல. ‘லட்சுமி ஸ்டார்ட்… லட்சுமி ஸ்டார்ட்’ -ன்னு நம்ம தலீவரு சொல்லுற மாதிரியே.. அண்ணன் ஸ்டலோனும்… ‘கமான் டேக்காஃப்.. கமான் டேக்காஃப்’-ன்னு ப்ளைட் கிட்ட சொல்லுறாரு. அடுத்த ஷாட்- என்னன்னு டிக்கட் கிழிக்கிறவன் கூட சொல்லிடுவான். லோ ஆங்கிள் ஷாட்ல ‘ஃப்ளைட் டேக்காஃப்’ ஆகுது!!! போட்றா விசிலை!!!
மேலே சொன்ன ரெண்டு சீனையும், நம்மூர் எம்ஜியார், ரஜினி படத்திலிருந்துதான் ஸ்டலோன் காப்பியடிச்சிருக்கார்ங்கறது உள்ளங்கை நெல்லிக்கனி!! இனிமே எந்த பேமானியாவது நம்மூர் ஆளுங்கதான் ஹாலிவுட்டை காப்பியடிக்கறானுங்கன்னு பதிவெழுதுங்க… மவனே வகுந்துடுறேன். எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வருசம் கழிச்சி ‘இந்திய சினிமா’வை பார்த்துத்தான் நான் இன்ஸ்பயர் ஆனேன்னு அண்ணன் பேட்டி கொடுப்பார். அப்பால வச்சிக்கிறேன் இந்த கருந்தேளை!! உசிர அண்ணே.. நான் உங்க கச்சிண்ணே!!! ஹ்ம்ம்..!! இப்பத்தான் இண்ட்ரோ சீனே முடிஞ்சிருக்கா…! மொத்தத்தையும் எக்ஸ்ப்ளெயின் பண்ணுறதுக்குள்ள 73 பதிவு தேவைப்படும் போலக்கீதே?!
சரி வுடுங்க! மேல பார்ப்போம்!! நேபாள்ல இருந்து திரும்பி போற வழியில அண்ணன் ஜெட்லி பாராஷூட்டை கட்டிகிட்டு ‘பை பை.. இனிமே திரும்ப வர வாய்ப்பு இருக்கான்னு தெரியுது.. தெரியலை.. மேபி… ஒருவேளை வந்தாலும் வரமாட்டேன்’ன்னு ஒரு மாதிரி குழப்படியா சொல்லிட்டு எஸ்ஸாகிடுறாரு. குறியீடு!! ஒரு ச்சைனீஸ் போனா.. அதை சரிகட்ட இன்னொன்னு வேணுமில்லையா?!! போட்றா ஒரு அட்டு சைனீஸ் பிகரை!!! ஏங்க சீரியஸாதான் கேக்கறேன். இந்த ஸ்டலோனுக்கு ஹீரோயினை செலக்ட் பண்ணவே தெரியாதா? முதல் பார்ட்டுல வர்ற மொக்கை ஃபிகரே தேவலாங்கற கணக்கா இது பைக்கில் இண்ட்ரோ கொடுக்குது. நாசமா போக!!!
சரி.. முதல் பார்ட்டுல எதோ கோல்ட் தேடுனானுங்க.. ஓகே-ன்னு ஒத்துக்கலாம்!!! இதுல ப்ளூட்டோனியமாம்!! அதுவும் கொஞ்ச நஞ்சமில்லை!! எதோ அஞ்சி டன்னோ என்னவோ. அதையெல்லாம் வான் டேம் எடுத்து ஹோல்ஸேலா, வேற யாருக்கோ கொடுக்கலாம்னு இருக்காராம். ப்ளூட்டோனியத்தை என்னவோ நம்மூர் கொழாபுட்டு புழியற குழாய் கணக்கா.. எதோ ஒன்னுல ரஷ்யாகாரன் போட்டு வச்சிருக்கான். அந்த இடத்தை ஒரு ப்ளூப்ரிண்ட்ல வச்சிருக்காங்க. அந்த ப்ளூப்ரிண்டை ஒரு டப்பாக்குள்ள வச்சிருக்காங்க. அந்த டப்பாவை ஒரு லாக்கருக்குள்ள வச்சிருக்காங்க. அந்த லாக்கரை ஒரு ஏரோப்ளேன்குள்ள வச்சிருக்காங்க. அந்த ப்ளேன் க்ராஷ் ஆகிக்கிடக்குது. லாக்கர் 120 செகண்டுக்கு ஒரு தபா ரீஸெட் ஆகுதாம். அதை ப்ரேக் பண்ணத்தான் இந்த ச்சைனீஸ் பொண்ணு!! அது எதோ… The Hunter படத்துல ஜோசப் ச்சேண்ட்ரா செவப்பு ஒயரை பிடுங்கற மாதிரி.. ரெண்டு நம்பரை எண்டர் பண்ணினதும்.. எல்லாம் ஓகே ஆகிடுது. இங்கதான் பெரிய ட்விஸ்ட்டே!!!
வெளிய வில்லன் வேன் டாம் நிக்கிறாரு (படத்துல வில்லனோட பேரு வில்லன். ஆனா ஹீரோவோட பேரு ஹீரோயில்லை. பார்னி). அவுரு அல்லேக்கா அந்த ப்ளூப்ரிண்டை எடுத்துகினு கூடவே.. ‘ரெஸ்பெக்ட்..ரெஸ்பெக்ட்’ன்னு டயலாக் சொல்லிட்டு.. அண்ணனோட புது லெஃப்ட் ஹேண்டை போட்டுத்தள்ளிடுறாரு. போன பார்ட்டுல பச்சை குத்தின கேப்பில் மிக்கி வுட்ட டயலாகில் அண்ணனுக்கு சிலிர்த்துச்சி இல்லையா!! இந்த தபா.. அவராவே டயலாக் சொல்லிடுறாரு. நமக்கு சிலிர்க்குது. டேய்…. வில்லன் வேன் டாம்.. நீ காலிடா!!
அப்பாலிக்கா படத்துல சொல்லுறதுக்கு… டப்பு.. டப்ப்பு.. டுப்பு.. டுப்பு.. டமால்.. டுமீல்… பூம்… மட்டும்தாங்க இருக்கு!!!
அப்பால ஜேசன். முதல் பார்ட்டுல ஜெட்லிக்கு சண்டையெல்லாம் கொடுத்துட்டனாலயோ என்னவோ… இந்த பார்ட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மேட்டரெல்லாம் இவரு பார்த்துக்கறாரு. இன்னொரு நிஞ்சா அஸாஸின் பார்த்த மாதிரியிருக்குங்க இவரோட ஸ்டண்ட் கொரியோக்ராஃபியெல்லாம். வெல் அத்தனை அருமைன்னு சொல்ல முடியாது. ஆனாலும்… மச் பெட்டர்!!
மத்தபடிக்கு மத்த முதல் பார்ட் அல்லக்கையெல்லாம்.. இதிலும் அல்லக்கையாவேதான் வருது. அப்புறம் க்ளைமாக்ஸில் கவர்னர், ப்ரூஸ் வில்லீஸ், ச்சக் எல்லாம் சேர்ந்து வில்லன் க்ரூப்பை கும்மு கும்முன்னு கும்மிடுறாங்க. வான் டாமும் படத்துல வந்ததுக்கு அவரோட ஸிக்னேச்சர் கிக்-க்கை ஒரு ரெண்டு தபா கிக்கிட்டு ரத்தம் கக்கிடுறாரு. ஸ்டலோன் இன்னும் கூட சும்மா கும்முன்னுதான் இருக்காரு. ஆனா ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் கவர்னர்தான் பாவம்!! ரொம்ப ரொம்ப பாவம்!! அத்தனை பரிதாபமா இருக்காரு. அடுத்த வருசம் இவரோட The Last Stand படமும் அப்புறம் ரெண்டு அண்ணன்களும் சேர்ந்து நடிக்கற The Tomb படமும் வருது. தாங்கிடுவார்ன்னுதான் தோணுது!! பார்ப்போம்.
நல்லவேளை இந்த தபா.. நானேதான் டைரக்ட் பண்ணுவேன்னு அண்ணன் காமெடி பண்ணாம, அதை Con-Air படத்தோட டைரக்டர் சைமன் வெஸ்ட் கிட்ட கொடுத்து நம்மை பாதி காப்பாத்திட்டார். சைமனும் அவரால முடிஞ்சளவுக்கு எதையோ பண்ணியிருக்காரு. அவரு மட்டும் என்ன பண்ணுவாரு சொல்லுங்க. நம்மாளுங்க என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்ணுறாங்க?! ஒரு பயபுள்ள ஒரு எக்ஸ்ப்ரஸனை ஒழுங்கா கொடுத்து பார்க்கனுமே?!! ஹும்…!! எனிவே.. இவங்க என்ன ஆஸ்கருக்கு அனுப்பறதுக்கா படத்தை எடுத்தாங்க?!! அதான் எடுக்கும் போதே… 1980-ல் வந்த ‘மோசமான ஆக்ஷன் படங்களின் உல்டா’-ன்னே சொல்லிட்டுத்தான் எடுத்திருக்காங்க.
அதனால அதுக்கேத்த மாதிரியான மைண்ட்செட்டோட போனோமா.. எஞ்சாய் பண்ணினோமான்னு இருந்தா… இது அந்த பாடாவதி பேட்மேன் படத்துக்கு நூறு மடங்கு பெட்டர்.
சாமி சத்தியம்!!!!!!
—ஹாலிவுட் பாலா
Expendables 2 Trailer
//இது அந்த பாடாவதி பேட்மேன் படத்துக்கு நூறு மடங்கு பெட்டர்//
எக்ஸ்பெண்டபிள்ஸ் 2 அடுத்த வாரந்தான் இந்தியால வருது. அதுனால அது பத்தி என்னால சொல்ல முடியாது. ஆனா டார்க் நைட் ரைஸஸ் இருக்கே- கொய்யால நோலன்.. இர்ரா நம்மூரு பேரரசு, இராம நாராயணன் படங்களை உனக்கு பார்சல்ல அனுப்புறேன்
Vada
இது.. கொயந்த கிட்ட பந்தயத்தில் தோத்துப்போனதுக்காக எழுதினது. யாருனாவது ‘வெல்கம் பேக்’ன்னு கமெண்ட் போடுங்க … அப்பால வச்சிக்கிறேன்.
Welcome Back Thala…:)
‘I owe u one’-ன்னு சொல்லிட்டு அப்ஸ்காண்ட் ஆகறாரு. அப்படின்னா என்னன்னா இனிமே க்ளைமாக்ஸில்தான் திரும்ப வருவாராமாம்! குறியீடு!!! – உங்களின் ஒன்று விட்ட மச்சானும் இங்கு ஓட்டப்படுவார் -சரியான குறியீடு தல
Welcome bag 🙂
This comment has been removed by the author.
ஆவ் நான் தான் கொஞ்சம் அவசர பட்டுடேனா
தலிவரே…என்றும் பதினாறு மாதிரியே அதே துள்ளல் நடையோட இருக்கிறீங்களே!
நீங்க அப்பால வச்சிக்கிட்டாலும் சரி..இப்பவே வச்சிக்கிட்டாலும் சரி..எங்க கடமையை நாங்க செய்வோம்: வெல்கம் பேக்!
பந்தயத்துல தோத்ததுக்காக எழுதுன பதிவா..அப்போ நீங்க அடிக்கடி தோக்கணும் தல!
இது உண்மையாகவே தல ஹாலிவுட் பாலாவான்னு டவுட்டுடன் பதிவு படிக்க ஆரம்பித்தேன் ஆனால் இந்த வரியை கடந்தவுடன்
\முதல் பார்ட்டை ஏற்கனவே கய்வி கய்வி ஊத்தின பின்னாடியும், ரெண்டாவது பார்ட்டுக்கு அந்த ஏரியால நான் டிக்கட் வாங்கிட்டு இருந்தேன்.\
தலைவன் தான் என்பது பலமடங்கு உண்மையை சொல்கிறது ;))
திரும்ப வா தலைவா ;))
Thanks guys.
Welcome Back Bala! 🙂
http://www.karundhel.com/2010/08/expendables-2010-english.html
Look at the comments. That’s called nostalgia.
தல பாலா….உங்கள் பதிவை கூகிள் பிளஸ்ஸில் ஷேர் பண்ணட்டும்மா….
இங்க 24 தான் ரிலீஸ்… ஆனாலும் பாக்குற மூட்லே தான் இருக்கேன்… எல்லா பயலுகளும் இருக்கானுங்கள்ளா, பாக்க பாம்பேல ஒரு 10 ஃபிகர் theatre வராது???
இது.. கொயந்த கிட்ட பந்தயத்தில் தோத்துப்போனதுக்காக எழுதினது. யாருனாவது ‘வெல்கம் பேக்’ன்னு கமெண்ட் போடுங்க … அப்பால வச்சிக்கிறேன்.
//
யு ஹாவ் டன் அ குட் ஜாப் தல! :))
அன்பின் பால்ல்ல்ல்லா,
உங்க பதிவு படம் பார்க்க தூண்டுகிறது. ஃபார்மாலிட்டி டன்.
அன்பின் தேள்,
உங்க தமிழ்மணப்பட்டை பணிசெய்யவில்லை என நினைக்கிறேன்.
அன்புடன்
கீதப்பிரியன்
அன்பு பாலா,
படம் பார்க்கிற நேரம் போக மிச்ச நேரம் சாஃப்ட்வேர்
செய்யுங்க 🙂
இப்படிக்கு
கேபிள் சங்கர்
ஏ ஏகாதிபத்திய கருந்தேளே, எங்கத் தலைவன் ஆலிவுட்டிலிருந்து சுடுகிறார் என்று கூப்பாடு போட்டீர்களே, அப்படி அவர் ஒருக்காலும் செய்வதில்லை என்பதற்காக இதோ சான்று..
http://rprajanayahem.blogspot.in/2012/08/carnal-thoughts-6.html
வாங்க பாலா. கலக்குங்க
எனக்கு தெரியும்.. நீ கட்டாயம் வருவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்.
to BALA ….சார் ..அக்கரைச்சீமை ….பேரே பல எண்ணங்கள உண்டாக்குது … இதே பேர்ல தொடர்ந்து எழுதுங்க சார் ….அப்போ என்ன காரணத்துனால எழுதறத நிறுத்தி வச்சிங்கன்னு தெரியல …ஆனா எல்லா நேரத்திலும் என்னை மாதிரி [??]நல்ல வாசகர்களும் இருப்பாங்க ,,அவங்க சார்பா தான் இத நான் சொல்றேன் …தப்பா இருந்தா சாரி ….
மிக்க மகிழ்ச்சி பாலாவின் பதிவிற்கு:-)
தல நலமா?
ரொம்ப சந்தோஷமா இருக்கு,உங்க தளத்துல எழுதாட்டியும் இங்க நண்பர்களின் தளத்துலயாவது ஷேர் பண்ணுங்க.எக்ஸ்பெண்டபில்ஸ் நான் பார்க்க போறதில்ல,ஆனால் பதிவை படிச்சேன்,சிரிசேன்,வினோத் கவுதம் துர்க்மினிஸ்தான் நாட்டுக்கு வேலைக்கு போயிருக்கார்.சொன்னாரா?நாட்டுக்கு முக்கியமான செய்திகளை இங்க இதுபோன்ற படங்களின் விமர்சனங்கள் மூலமா பதிவிடவும்.நண்பா கருந்தேள் கொழந்த ஹாலிபாலி திரும்ப எழுத வைத்தமைக்கு நன்றி
வெல்கம் பேக் பாலா!
waiting for scorp’s review for expendabbles 2 as well ..
welcome back bala … hope u stay mate … big fan
– harikrish
HI BALA
Welcome Back. I have recently visited your site. Unga sitela neenga marupadiyum varuveergal yendru yezhudha pattu irundhadhu. vandhey vitteergal. All the best. Please continue writing. Ungal sevai yengalukku thevai.
— Arun
Welcome Back Mr.Bala..!!! wow..what a writing & great..its called expandables 2012..from 2010..(am i right!!!)
good work..let watch movie whenever i see..
// யாருனாவது ‘வெல்கம் பேக்’ன்னு கமெண்ட் போடுங்க … அப்பால வச்சிக்கிறேன்.
//
வெல்கம் பேக்
வெல்கம் பேக்
வெல்கம் பேக்
🙂
அப்பா போட்ட காசு கிடைச்சுருமா
நல்ல பயனுல்ள்ள தகவல்கள்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அய்யோ படம் டப்பா வா..
நான் மிகவும் எதிர்பார்த்த படம்..
பட் உங்க விமர்சனம் அருமை..
வாழ்த்துக்கள்.
welcome back 🙂
கேபிள் சங்கரும் நீங்களும் எங்களுக்கு குடுத்த சினிமா வியாபாரம் என்ற புத்தகத்தை வாசித்தேன். ரொம்ப அருமையான புத்தகம். சினிமாவில் இருப்பவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். ஆனால் அதில் வரும் ஒரு வரி என்னை அதிகம் காயப்படுத்தி விட்டது. “சரியாக வியாபாரம் செய்ய வில்லை என்றால் எந்த படமாக இருந்தாலும் உலக சினிமாவில் ஐக்கியம் ஆகிவிடும்” என்று சொல்லி இருக்கிறீர்கள். உலக சினிமா என்றால் அவ்வுளவு இளக்காரமாக போய்விட்டதா என்ன? அப்படி என்றால் Expendables-2, Batman போன்ற படங்கள் மாறி எடுக்க சொல்கிறீர்களா என்ன?
நம்க்கு எதுத்தாப்ல குந்திகினு கத சொல்ராப்ல கீது..சிறப்பான விமர்சனத்துடன் ரீ என்றி குடுத்திருக்கும் பாலவிற்கு நன்றி. உங்க மின் புத்தகத்தை படித்து உங்க மேல தனி இன்ஸ்பிரேசன்.
இந்தமாறி படத்து மூலமாவா “ரீ-என்ட்ரி” குடுக்குறது……அதென்ன ரீ-என்ட்ரி….கரெக்ட்டா தான் உசிர சொல்லியிருக்காரு…….இப்படி எதுனா எழுதி ராஜேஷ் ப்லாகின் மதிப்பை குறைக்க சதி செய்றீங்க…….அதான உங்க ப்ளான் ??
நானாவது பரவாயில்லை பூச்சையானேன். நீங்க பூச்சாண்டியாகிட்டீங்களே?
@சிங்கார வேலன் : மன்னிக்கனும். அந்த புத்தகத்தில் என்னோட பங்களிப்பு வெறும் ஹாலிவுட் வியாபாரத்தோட தகவலை திரட்டி கொடுத்தது மட்டுமே. உங்க கேள்விக்கு கேபிள்தான் பதில் சொல்லனும் (நானின்னும் இன்னும் அந்த புக்கை படிக்கலை).
தலிவர் இன்னும் பலயா ஃபார்முக்கு வரல…பழைய பன்னீர்செல்வமா வர்னும்…:)
யப்பா..சிரிச்சி மாளலை..!!!!
கருந்தேளு..என்னய்யா நம்மாளுன்களைப் போட்டு இந்தாமாதிரி ஓட்டுறாரு??