The Expendables (2010) – English

by Karundhel Rajesh August 14, 2010   English films

  1. நீங்கள், சின்னஞ்சிறு வயதில், ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படங்கள் பார்த்து வளர்ந்தவரா?
  2. அப்படிப் பார்க்கையில், யதேச்சையாக ரேம்போ பார்த்துவிட்டு, ஸ்டாலோனின் விசிறியாக மாறியவரா?
  3. ஒரே வீச்சில், எதிராளியின் தலையயோ கையையோ அல்லது உடலையோ கிழித்து, ரத்தம் பீறியடிக்கும் காட்சிகளைப் பார்த்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று பொங்குமா?
  4. ஸ்டாலோனின் படங்களில் வரும் புத்திசாலித்தனமான ஒன் லைனர்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

அப்படியென்றால், இது உங்களுக்குரிய படமே தான். ஓடுங்கள் தியேட்டருக்கு !

ஏற்கெனவே, மனித எரிமலை பதிவில் நான் சொன்னதுபோல், ஸ்டாலோனின் மேல் ஒரு மரியாதை எனக்கு உண்டு. சூப்பரான ஒரு எலிகன்ஸ் அவரது ஸ்க்ரீன் ப்ரஸன்ஸில் இருக்கும். ஒரு கூலர் போட்டுக்கொண்டு, அவர் கெத்தாக ஒரு காட்சியில் தோன்றினால், அடுத்து அதிரடிதான் !

ஸ்டாலோனே திரைக்கதை எழுதிய படங்களில், விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்லும். ஃபர்ஸ்ட் ப்ளட் படத்தை மறக்க இயலுமா? அதேபோல், அவரது படங்களில், அட்லீஸ்ட் ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸிலாவது, நம்மை ‘வாவ்’ என்று சொல்ல்ல வைக்கும் கோரியோக்ராஃபி இருக்கும்.

இதற்கெல்லாம் மேல், படத்தில் வரும் வில்லனும், ஸ்டாலோனுக்கு இணையான கெத்தில் இருப்பது வழக்கம் (ஸ்பெஷலிஸ்ட், டிமாலிஷன் மேன், ஃபர்ஸ்ட் ப்ளட், கெட் கார்ட்டர், அஸாஸின்ஸ்…இப்படிப் பல படங்கள்).

இப்போதும், அந்தப் படங்களைப் பார்க்கையில், நமது குழந்தைப்பருவம் வந்து நிழலாடிச்செல்வதைத் தவிர்க்கவே முடியாது. நாம் தொண்ணூறுகளில் பார்த்த அதிரடி ஆக்‌ஷன் படங்களின் ஸ்டைலில் இப்போது ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும்?

’எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அப்படத்தை எதிர்நோக்க ஆரம்பித்தேன். நான் மட்டுமல்ல. என்னுடைய நண்பர்கள் கும்பலில், ஸ்டாலோனின் வெறியர்கள் பலர் உண்டு. நாங்கள் அனைவருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு படம் இது. ஆனால், அதே சமயம், எதிர்பார்ப்பு அதிகம் இருந்தால், அப்படம் அதே அளவு ஃப்ளாப்பாக மாறும் என்பதை, பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒலக திரைப்பட மேதை, டைரக்டர் மௌண்ட் (அட.. இயக்குநர் இமயம்ங்க) ரணி மத்னம் சொல்லியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆக, எக்ஸ்பெண்டபிள்ஸ் எப்படி இருக்கும்? அறுவையா, அல்லது சூப்பரா?

படம் துவங்கும்போதே ஆக்‌ஷன். சில விஷமிகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும் பொறுப்பு, எக்ஸ்பெண்டபிள்ஸ் என்ற குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் தலைவன், ராஸ் (ஸ்டாலோன்). அந்த கும்பலின் மற்ற மெம்பர்கள் லீ (ஜேஸன் ஸ்டதாம்), யின் யாங் (ஜெட்லி), டால் ரோட் (ரேண்டி கோட்டுரே), சீஸர் (டெரி க்ரூஸ்) மற்றும் ஜென்ஸன் (டால்ஃப் லண்ட்க்ரென் – சிறுவயதில் வெளிவந்த ஹீ மேன் படம் நினைவிருக்கிறதா?). ஆனால், ஜென்ஸன் செய்யும் ஒரு குளறுபடியால், சண்டையில் இறங்க வேண்டிவந்து, அத்தனை கடத்தல்காரர்களையும் கொல்ல வேண்டிய ஒரு சிக்கல் வந்துவிடுகிறது. மேலும், யின் யாங்கைப் பிடிக்காத ஜென்ஸன், அவனைக் கொல்ல முனைகிறான். அதனைத் தடுக்கும் ராஸ், ஜென்ஸனைத் தனது குழுவில் இருந்து வெளியே அனுப்பிவிடுகிறான்.

இது ஆரம்பம் அதன்பின், தென்னமெரிக்காவின் ஒரு சிறிய நாடான விலேனாவின் சர்வாதிகாரி கார்ஸியாவைக் கொல்லும் பொறுப்பு, ராஸிடம் வழங்கப்படுகிறது. அமெரிக்க சிஐஏவின் சார்பில் ராஸிடம் வந்து பேசுபவர், சர்ச் என்ற ஒரு அதிகாரி (ப்ரூஸ் வில்லிஸ்). கூடவே, ட்ரென்ச் என்ற அரசியல்வாதியும் (ஷ்வார்ஸெனிக்கர்).

தனக்கு ஒப்புவிக்கப்பட்ட வேலையின் ஆழத்தைப் புரிந்து கொள்வதற்காக, விலேனாவுக்கு, தனது டீமில் ஒருவனான லீயை அழைத்துக்கொண்டு செல்கிறான் ராஸ். அந்தத் தீவில், அவர்களது தொடர்பு, ஒரு பெண். அதிபர் கார்ஸியாவின் மகளான ஸாண்ட்ரா. தனது தந்தையின் கொடுங்கோல் ஆட்சியில் வெறுப்புற்ற ஸாண்ட்ரா, ராஸுக்கு உதவுகிறாள். அவளது உதவியோடு அதிபர் மாளிகையைக் கண்காணிக்கும் ராஸையும் லீயையும் வளைக்கிறது ராணுவம்.

ஆரம்பிக்கிறது அட்டகாசமான ஆக்‌ஷன். இருவருமாகச் சேர்ந்து ராணுவ கும்பலைக் கொன்றுகுவித்துவிட்டு, தீவில் இருந்து தப்பிக்கிறார்கள். அங்கு நேர்ந்த அழிவையும், தீவிலேயே விட்டுவிட்டு வந்த ஸாண்ட்ராவையும் நினைத்து, இந்த வேலையை மறுக்க முனையும் ராஸுக்கு வருகிறது ஆபத்து.. பழைய சகாவான ஜென்ஸன் வடிவில்.

தீவில் ராஸினால் நடந்த அழிவினால் கோபம் கொண்டிருக்கும் கார்ஸியாவுடன் சேர்கிறான் ஜென்ஸன். ராஸைத் தொடர்ந்து வரும் ஜென்ஸன், அவனைக் கொல்ல முனைகிறான். அதிலிருந்து தப்பிக்கும் ராஸ், ஜென்ஸனைப் படுகாயப்படுத்தி விட, இறக்கும் தருவாயில், வெலேனாவின் அதிபர் மாளிகையை நெருங்கும் ரகசியங்களைச் சொல்கிறான் ஜென்ஸன்.

அதன்பின், எக்ஸ்பெண்டபிள்ஸ் குழு, விலேனாவுக்குச் சென்று இறங்குகிறது. அதிபர் மாளிகைக்குள் ஊடுரூவி, எல்லா இடங்களிலும் குண்டுகளைப் பதித்து, அங்கிருக்கும் காவலர்களை வீழ்த்தி, பெரும் அழிவை விளைவித்து, இறுதியில் வெற்றியோடு திரும்புவதே மீதிக்கதை.

படத்தின் மிக முக்கியமான விஷயம் – ஆக்‌ஷன். படத்தின் அத்தனை ஆக்‌ஷன் காட்சிகளும் சூப்பர். குறிப்பாக, தனியே விலேனாவுக்கு வரும் ராஸும் லீயும், அங்கிருந்து தப்பிக்கையில், தீவின் ராணுவத்தினர் மீது விமானத்தில் இருந்தபடியே நடத்தும் தாக்குதல், அட்டகாசம் ! நான் மட்டுமல்ல, தியேட்டரே கரகோஷத்தில் ஆடியது !!

அதேபோல், ஸ்பெஷலிஸ்ட் படம் பார்த்தவர்கள், அதில் வரும் பஸ் சண்டைக்காட்சியை மறந்திருக்கவே இயலாது (சுட்டியைக் க்ளிக்கிப் பாருங்கள்). என்றென்றும் நினைவில் இருக்கும் ஒரு அதிரடி அது. அதே போல், இதிலும் ஒரு சண்டை வருகிறது. ஆனால், புத்திசாலித்தனமாக, ஸ்டாலோன் அதனை ஜேஸன் ஸ்டதாமுக்குக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இன்னொரு ஜாலியான அம்சம், மிக்கி ரூர்க். பச்சை குத்தும் டாட்டூக்கடையின் ஓனராக நடித்திருக்கிறார். எக்ஸ்பெண்டபிள்ஸ் கும்பல் சந்திக்கும் ஒரு இடம் அது. கெட் கார்ட்டர் படத்தின் ஆக்ரோஷ வில்லனாக மிக்கி ரூர்க் வந்ததை மறக்க முடியுமா? (அதேபோல், கெட் கார்ட்டரின் லிஃப்ட் ஸீன் – அது ஒரு Bang ! இதோ அந்தக் காட்சி).

அதேபோல், ஸ்டாலோன் ரசிகர்களுக்குப் பரிச்சயமான இன்னொரு முகம், எரிக் ராபர்ட்ஸ். ஸ்பெஷலிஸ்ட் படத்தின் வில்லன். அவரைப் பார்த்ததுமே, நாஸ்டால்ஜியா போட்டுத் தாக்கி விட்டது. படத்தில் அவரது ரோல், கார்ஸியாவின் கூடவே இருந்து அவரைக் கவிழ்க்கும் வேடம். ஒரு சிறிய கொசுறு என்னவென்றால், எரிக் ராபர்ட்ஸின் தங்கை, ஒரு மிகப்பெரிய ஹாலிவுட் நடிகை. ஜூலியா ராபர்ட்ஸ்.

இந்தப் படம், பழைய ஆக்‌ஷன் படங்களுக்கு ஒரு ட்ரிப்யூட் என்றே தோன்றியது. ஸ்டாலோன், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால், சிங்கம், எப்போதுமே சிங்கம் தானே?

படத்தின் இறுதிக்காட்சியும், அப்பட்டமான நோஸ்டால்ஜியா காட்சி. அப்படியே பழைய ஆக்‌ஷன் படங்களில் வருவது போலவே.

மொத்தத்தில், நாங்கள் இருவரும் மிகவும் ரசித்த படம் இது. அப்படியே ஒரு தமிழ் அதிரடி காமிக்ஸ் படிப்பது போலவே இருந்தது. தியேட்டருக்கு வந்த மக்கள் அனைவருமே நாஸ்டால்ஜியா ஃபேன்கள் என்பது அவர்களைப் பார்த்தவுடனே தெரிந்தது. ஸ்டாலோன் வெறியர்களுக்கு, இது ஒரு கும்மாங்குத்து பிரியாணி ! இப்படத்தை நான் பார்க்கையில், ஒன்று தோன்றியது. எத்தனையோ ஆக்‌ஷன் ஹீரோக்கள் வரலாம் (ஷ்வார்ஸெனிக்கர் உட்பட). ஆனால், ஸ்டாலோனுக்கு அருகில் கூட எவரும் நெருங்க முடியாது ! Stallone Rockz !

எக்ஸ்பெண்டபிள்ஸ் படத்தின் ட்ரெய்லர் இங்கே

பி.கு – எனக்குப் பிடித்த இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோ, ஸ்டீவன் ஸெகால். படு சூப்பரான மூவ்களில் எதிராளியை வீழ்த்தும் மார்ஷியல் ஆர்ட்ஸ் எக்ஸ்பர்ட். Never Say Never again படத்தின் சண்டைக்காட்சியின்போது, ஷான் கானரியின் சுட்டு விரலை உடைத்தவர். அவருக்கும் நான் விசிறி.

  Comments

57 Comments

  1. நித்தியிருக்கறப்போ இவனுங்கல்லாம் இன்னும் படத்துல நடிக்கனுமா 🙂

    Reply
  2. //நடத்தும் தாக்குதல், அட்டகாசம் ! நான் மட்டுமல்ல, தியேட்டரே கரகோஷத்தில் ஆடியது //

    சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……

    வேணும்னா.. கமெண்ட்டை ஓப்பன் பண்ணிடுறேன். வந்து இன்னும் நாலு குமுறு குமுறுங்க. ஏன் இப்டி???

    Reply
  3. படத்தில் மிக அருமையாக நடித்திருந்த அந்தப் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே?

    Reply
  4. கேள்வி: 1. நீங்கள், சின்னஞ்சிறு வயதில், ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படங்கள் பார்த்து வளர்ந்தவரா?

    பதில் : ஆம்

    கேள்வி: 2. அப்படிப் பார்க்கையில், யதேச்சையாக ரேம்போ பார்த்துவிட்டு, ஸ்டாலோனின் விசிறியாக மாறியவரா?

    பதில் : ஆம்

    கேள்வி: 3. ஒரே வீச்சில், எதிராளியின் தலையயோ கையையோ அல்லது உடலையோ கிழித்து, ரத்தம் பீறியடிக்கும் காட்சிகளைப் பார்த்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று பொங்குமா?

    பதில் : ஆம்

    கேள்வி: 4. ஸ்டாலோனின் படங்களில் வரும் புத்திசாலித்தனமான ஒன் லைனர்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

    பதில் : ஆம்

    சொல்யூஷன் : அப்படியென்றால், இது உங்களுக்குரிய படமே தான். ஓடுங்கள் தியேட்டருக்கு

    ரிஸல்ட் : அதே வேகத்தில் வெளியே ஓடிவந்தது மட்டுமே நினைவில் உள்ளது.

    Reply
  5. ஹி.. ஹி.. ஹி..

    இன்னொரு 30 கமெண்ட் இங்க போடனும்னு தோணுது. அப்பாலிக்கா கூட்டம் சேர்ந்ததும்.. இங்கனதான்…!! 🙂

    Reply
  6. யோவ் ஹாலிவுட்டு!! உம்ம தளத்துல 2700 கமென்ட் போட்டாங்கன்றதுக்காக இப்புடியா கமென்ட் போடுறதை தடை பண்ணுவீரு?? ‘The Expendables’ விமர்சனத்துக்கு ஒரு முழ நீள பின்னூட்டம் போட்டா மெம்பர்ஸீக்கு மட்டும் தான் அனுமதின்னு வருது.

    ஸ்டுடன்ட் டிஸ்கவுன்ட் போக கொடுத்த 6 டாலர் வெட்டியா போச்சு. ஸ்வீட்டில் கூட மசாலா தேடும் என் மனத்திற்கு அனு அளவிலும் ‘The Expendables’ தீனி போடவில்லை….

    Reply
  7. ரைட்டு.. கமெண்டை ஓப்பன் பண்ணிடலாம்.

    ஆனா.. நாளைக்கு…!!! காரணமும்.. நாளைக்கு.

    Reply
  8. 2700 கமெண்ட் போட்டதனால க்ளோஸ் பண்ணினேன்னு யாருங்க சொன்னா?

    நான் க்ளோஸ் பண்ணினதுக்கு ரீஸன் டெம்ப்ளேட் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி போரடிக்குதுன்னுதானே.

    Reply
  9. இன்னா.. மேன்..,

    இந்தியா பூரா கரண்டை புடுங்கிட்டாங்களா? ஒருத்தரையும் காணாம்? அப்ப நான் தூங்கப் போறேன்.

    Reply
  10. கேள்வி: 1. நீங்கள், சின்னஞ்சிறு வயதில், ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படங்கள் பார்த்து வளர்ந்தவரா?

    பதில் : ஆம்

    கேள்வி: 2. அப்படிப் பார்க்கையில், யதேச்சையாக ரேம்போ பார்த்துவிட்டு, ஸ்டாலோனின் விசிறியாக மாறியவரா?

    பதில் : ஆம்

    கேள்வி: 3. ஒரே வீச்சில், எதிராளியின் தலையயோ கையையோ அல்லது உடலையோ கிழித்து, ரத்தம் பீறியடிக்கும் காட்சிகளைப் பார்த்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று பொங்குமா?

    பதில் : ஆம்

    கேள்வி: 4. ஸ்டாலோனின் படங்களில் வரும் புத்திசாலித்தனமான ஒன் லைனர்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

    பதில் : ஆம்

    சொல்யூஷன் : அப்படியென்றால், இது உங்களுக்குரிய படமே தான். ஓடுங்கள் தியேட்டருக்கு

    கண்டிப்பா பாத்துடுறோம். ஆக்‌ஷன் படத்துல லாஜிக் பார்க்கும் அண்ணாச்சி ஹாலிபாலி ஒழிக ஒழிக…. 🙂

    Reply
  11. பழைய action படங்களை பார்த்து வளர்ந்த பயபக்கிகளில் நானும் ஒருத்தன் தான்.அதிலும் stallone நடித்த rambo- first blood எனக்கு வேதம். 🙂

    என்ன ஒரு படம் அது!action,sentiment னு கலந்து கட்டி அடிச்ச படம்.அந்த அளவுக்கு இந்தப் படம் இருக்குமான்னு எல்லாம் தெரியல.ஆனா,நீங்க சொன்ன மாதிரி sweet memories காகவே இந்தப் படத்துக்கு கண்டிப்பா போறேன்.

    இப்ப வர்ற மார்வல் லின் மொக்கை சூப்பர் ஹீரோ கதைகளின் நடுவே,இது எம்புட்டு மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை.இன்னொரு விஷயம்,இது போன்ற படங்கள் இனிமேல் வருவதும் சந்தேகமே.அதுக்கு காரணம்,அதே மார்வல்.நாதாரிங்க,தமிழ் சினிமா மாதிரி ஹாலிவுட் action படத்தையும் கெடுத்து வச்சு இருக்கானுங்க.

    அப்புறம்,arnold and stallone பத்தி…
    arnold படங்கள் சிலதே நமக்கு பிடிக்கும்.ஆனால்,stallone அப்படியல்ல.அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அருமையான படங்கள்.

    Reply
  12. ணா..
    //4 வயசில என் அப்பா First Bloodக்கு வீட்டுக்கு பக்கத்தில புதுசா ஆரம்பிச்ச அன்னை அபிராமி தியேட்டருக்கு கூட்டிட்டு போனார். stallone ட்ரக் மேல குதிப்பது இன்னும் ஞாபகமிருக்கு// இது என் முதல் பதிவுல சொன்னது. Cliff Hanger படத்துக்கு டிக்கெட் கெடைக்காம கஷ்டப்பட்டு பார்த்தது நினைவிருக்கு. Assasins படத்துல பன்டேரசுக்கும் சமமான பாத்திரம் இருக்கும்.
    ஆனா First Blood-4 எடுக்காமயே இருந்திருக்கலாம்கறது என் கருத்து. எப்ப பார்த்தாலும் அமெரிக்கா-வியட்நாம்னா எனக்கு அதுக்கு பின்னாடி உள்ள அரசியல் தான் ஞாபகம் வருகிறது. ஓவர் வன்முறை வேற. Ignorance is bliss. என் ப்ளாக்குக்கு கொழந்தயைனு பேர் வைக்க அதான் காரணம். உங்கள மாதிரி ஆட்களுக்கும் இந்த அரசியல் விஷயங்கள் தெரிஞ்சிருந்தாலும், உங்களால படங்களை படங்களா மட்டும் பார்க்கும் பக்குவம் இருக்கு. (நா சின்னப்பையன் தானே. பழக நாளாகும். நம்ம பெரிய ஆளுன்னு நினைகிறதாள வர வினை)
    ஆனா ஒண்ணு. இந்த மாதிரி படங்கள் சின்ன வயச ஞாபகப்படுத்துதுன்னு சொன்னிங்க. முற்றிலும் உண்மை.(என்ன..நீங்க பல வருடங்கள் பின்னாடி போகணும். எனக்கு சில மாதங்கள்)

    Reply
  13. //ரணி மத்னம்//
    இந்த மேட்டர் நல்லாக்கீதே நண்பா.
    இனி இப்படியே அழைக்ககடவுக.
    ===
    ஸ்டாலோன் படம் நிச்சயம் பாக்கனும்,லாஜிக்கெல்லாம் பார்க்கனுமா?ஆக்‌ஷன் படத்துல,என்ன கெர்த்,என்ன ஸ்டைல்.வீட்டுல நெட் இல்லை,அதுதான் லேட்டாயிடுச்சி.காலைல பார்த்தா 2 பதிவு.
    நல்ல விமர்சனம் நண்பா

    Reply
  14. ஸ்டால்லோன் படங்களின் பெரிய கலக்‌ஷனே என்னிடம் உண்டு.அது பாட்ஷா படம் போல எப்போ பார்த்தாலும் சலிக்காது.

    Reply
  15. கருந்தேள்,

    //எனக்குப் பிடித்த இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோ, ஸ்டீவன் ஸெகால்.// இவரும் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருடன் இருந்த முன்-மனக்கசப்பு காரணமாக இவர் நடிக்கவில்லை.

    //படு சூப்பரான மூவ்களில் எதிராளியை வீழ்த்தும் மார்ஷியல் ஆர்ட்ஸ் எக்ஸ்பர்ட். Never Say Never again படத்தின் சண்டைக்காட்சியின்போது,// என்ன கொடுமை சார் இது? சிகாலின் அக்மார்க் படமான அண்டர் சீஜ் பற்றி எதுவுமே கூறாததால், கருந்தேளுக்கு பசுநேசன் நடித்தது விரைவில் எந்திரனுக்கு போட்டியாக வர இருக்கும் “மேதை” படத்தின் ஸ்பெஷல் பிரிவியூ ஷோவுக்கு நோ டிக்கெட்ஸ்.

    Reply
  16. //இப்படத்தின் இன்னொரு ஜாலியான அம்சம், மிக்கி ரூர்க்//

    இவர்தான் மிக்கி என்பதை நண்பர் கூறியே தெரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தார். கொடுமை சார் இது. வேன் டேம்மின் டபுள் டீமில் இவரது உடல் கட்டமைப்பையும், ஸ்டைலையும் ரசித்த எனக்கு இந்த படத்தில் அடையாளம் தெரியாமல் போகும் அளவிற்கு இருப்பதை காண சகிக்கவில்லை.

    Reply
  17. கருந்தேள்,

    நேத்தே இந்த படத்தை முதல் காட்சியாக பார்த்தாயிற்று. எக்ஸ்பெண்டபிள்ஸ் இஸ் எக்ஸ்பெண்டபிள் என்று கூட நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாயிற்று. ஆனால், நம்மை போன்ற வெறியர்களுக்கு படம் ஓக்கேதான்.

    ஹாலிபாலா,
    //இந்தியா பூரா கரண்டை புடுங்கிட்டாங்களா? ஒருத்தரையும் காணாம்? //

    என்ன கொடுமை சார் இது? நீங்க வழக்கம் போல மிட் நைட்டுல வருவீங்க, நாங்க தூங்காம இருக்கனுமா? ஒவ்வொரு நாளும் இதேப்போல லேட்டா தூங்கி விடியற்காலையில எழுந்துக்க முடியல. அதான் தூங்கிட்டேன்.

    Reply
  18. @ கார்த்திகைப் பாண்டியன் – ரைட்டு தல 😉

    @ இராமசாமி கண்ணன் – கீஈஈஈஈஈஈழ கிங் விஸ்வாவின் கமெண்டைப் பார்க்கவும் 😉 ஹீ ஹீ

    @ பாலா – ஹாஹ்ஹா.. தல.. என்னைப் பொறுத்த வரை, ஸ்டாலோன் ஒரு தெய்வம் தல.. ஸோ, அவரு படங்கள் எனக்கு போரே அடிக்காது தல 😉

    @ பிரசன்னா – ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்கி பாஸ்.. 😉 எங்களுக்குப் புடிச்சிருந்துச்சி 😉

    @ மயிலு – //கண்டிப்பா பாத்துடுறோம். ஆக்‌ஷன் படத்துல லாஜிக் பார்க்கும் அண்ணாச்சி ஹாலிபாலி ஒழிக ஒழிக…. :)//

    அடடா… 😉 இது எப்பலேர்ந்து 😉 ஹீ ஹீ

    @ இலுமி – சூப்பர்.. ஃபர்ஸ்ட் ப்ளட்டை மறக்கவே முடியாது..இந்தப் படம் அந்த லெவல்ல நிச்சயம் இல்லை. ஆனால், ஸ்டாலோனுக்காக கண்டிப்பா பார்க்கலாம்னு தான் சொல்வேன்.

    அர்நால்டை என்னிக்குமே எனக்குப் புடிச்சது இல்லை. காரணம் ரொம்ப சிம்பிள். அது ஒரு தத்தி. சொந்தமா யோசிக்கவே தெரியாத பயல். 😉

    @ கொழந்த – னீங்களும் நம்மளைப் போல்தான்னு தெரிஞ்சதுல சந்தோஷம்.. ஓவர் வன்முறை பத்தி… அட அதுதான் பாஸ் ஜாலி.. கை கால் பிஞ்சி ரத்தம் பீச்சறத பார்த்தா உங்களுக்கு சந்தோஷம் வராதா 😉 அப்ப நீங்க பாக்க வேண்டியது கிம் கி டுக் தான்.. அவரு படங்களைப் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க 😉

    அப்புறம், அது என்ன //ஆனா ஒண்ணு. இந்த மாதிரி படங்கள் சின்ன வயச ஞாபகப்படுத்துதுன்னு சொன்னிங்க. முற்றிலும் உண்மை.(என்ன..நீங்க பல வருடங்கள் பின்னாடி போகணும். எனக்கு சில மாதங்கள்)//

    நக்கல் தானே 😉 எங்களுக்கும் சில மாதங்கள் தான் 😉 நாங்களும் யூத்து தான் நாங்களும் யூத்து தான் 😉

    @ கார்த்திகேயன் – நண்பா.. அது ஆக்சுவலா, சனி ரத்னம்னு தான் போட்ருக்கணும்.. சரி பரவால்லன்னு தான் இப்புடி போட்டேன் 😉

    ஸ்டாலோன் கலெக்‌ஷன் வெச்சிருக்கீங்களா? சூப்பர் !!

    @ விஸ்வா – ஹா ஹா.. ஸெகாலின் அண்டர் சீஜ், என்னோட மிகப்பிடித்த படங்களில் ஒன்று. அதிலும், அந்த கேக்குக்குள்ள இருந்து வருமே ஒரு ஃபிகரு… அட்டகாசம் ! 😉

    மிக்கி ரூர்க்குக்கு வயசாயிருச்சி விஸ்வா 😉 தொப்பையை தள்ளிக்கினு இருக்காரு 😉

    //என்ன கொடுமை சார் இது? நீங்க வழக்கம் போல மிட் நைட்டுல வருவீங்க, நாங்க தூங்காம இருக்கனுமா? ஒவ்வொரு நாளும் இதேப்போல லேட்டா தூங்கி விடியற்காலையில எழுந்துக்க முடியல. அதான் தூங்கிட்டேன்.//

    ஹாஹ்ஹா.. அது ! 😉

    Reply
  19. தல ரொம்ப நாள் கழிச்சு உங்க ஏரியா வந்திருக்கேன், ஹாலி பாலி படம் மொக்கைன்னு சொன்னாரு, நீங்க படம் நல்லா இருக்கு சொல்றீங்க, ஓகே பார்ப்பது நம் கடமை. பார்ப்போம்.

    அப்போ ஜெட் லி ஊறுகாயா??? அவரப் பத்தி ஒண்ணுமே சொல்லல. Trailer ல ஜெட்லிய நக்கல் பண்றானுங்க, படத்தில எப்படி ??

    ஆங்…மறந்திட்டேன்

    WISHING YOU MANY MORE HAPPY INDEPENDENCE DAY! 🙂

    Reply
  20. நேத்து பாலா விமர்கசனம் பார்த்துட்டு….படம் பார்க்க போகலை…இப்ப உங்க விமர்சனம் பார்க்க தூண்டுது…

    Reply
  21. //அப்போ ஜெட் லி ஊறுகாயா??? அவரப் பத்தி ஒண்ணுமே சொல்லல. Trailer ல ஜெட்லிய நக்கல் பண்றானுங்க, படத்தில எப்படி ?? //

    ஆமாம் என்பதை சொல்லவும் வேண்டுமோ? அவரே நான் குள்ளம், குள்ளம் என்று வெறி சொல்லிக் கொள்ளுகிறார்.

    //மிக்கி ரூர்க்குக்கு வயசாயிருச்சி விஸ்வா 😉 தொப்பையை தள்ளிக்கினு இருக்காரு ;-)//

    அண்ணன் பாலா வாழ்க.

    Reply
  22. தேளு,

    அந்த ஹீரோயினவில்லனோட ஆட்கள் சுருட்டால சுட பார்க்கும்போது வரும் ஸ்டால்லன் அந்த சுருட்டுடன் அவன் கையை வெட்டும் காட்சியும், இரண்டாவது ஆளின் கழுத்தில் கத்தியை வைத்தி குத்தி இருக்கும் காட்சியுமே படத்தின் டிக்கெட்டுக்கு போதும்.

    என்ன நான் சொல்றது?

    வெங்கட்,

    வெடிகுண்டு வெங்கட்.

    த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)

    Reply
  23. தேளு,

    உங்க பதிவு சூப்பர். நாமளும் அந்த காலத்து ஹீரோக்கள ரசிச்சவங்க தான். அதான் என்னோட பதிவுக்கு இந்த டைட்டிலு.

    வெங்கட்,

    வெடிகுண்டு வெங்கட்.

    த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)

    Reply
  24. ரேம்போ படத்தின் ஐந்தாம் பாகம் இனிமேல் வராது என்று சோகமாக இருந்தபோதுதான் இந்த படத்தை பார்த்தேன். இனிமேல் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. (வரும் என்றே நம்புகிறேன்)

    வெங்கட், வெடிகுண்டு வெங்கட்.

    த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)

    Reply
  25. தேளு,

    //கேள்வி: 4. ஸ்டாலோனின் படங்களில் வரும் புத்திசாலித்தனமான ஒன் லைனர்கள் உங்களுக்குப் பிடிக்குமா?பதில் : ஆம்// இந்த படத்தில் ஒரு காட்சியில் ஹீரோயின் வந்து ஸ்டால்லனிடமும் , ஜேசனிடமும் உங்கள் பெயர் என்னவென்று கேட்பாள். அப்போது ஜேசன் “ராசியில்லாதவன், ஞானி” என்று இருவரையும் அறிமுகப்படுத்திக்கொள்வார். தியேட்டரில் ஒரே அதகளம்.

    அதுபோலவே அர்னால் வரும்போதும் ஒரே விசில் சத்தம். நான் தமிழில்தான் பார்க்கவேண்டும் என்று வெயிட் செய்து நேற்றிரவுதான் பார்த்தேன். இது போன்ற படங்களை முதலில் தியேட்டரில் தமிழிலும் பின்னர் டிவிடியில் ஆங்கிலத்திலும் பார்ப்பவன் நான்.

    வெங்கட்,

    வெடிகுண்டு வெங்கட்.

    த எக்ஸ்பெண்டபிள்ஸ் (1947 – 2010 – ?!)

    Reply
  26. மொதல்ல… நம்ம வெங்கட்டுக்கு வெடிகுண்டு வைக்கனும். அவரு எதுனா பதிவெழுதினா மட்டும்தான் கமெண்ட் போட, அதுவும்.. அவுரு லிங்கோட கமெண்ட் போட வர்றாரு.

    இல்லைன்னா.. மத்தவங்க ஏரியாலதான் இருக்காரு. சீக்கிரம் ஒரு கவித எழுத வேண்டியதுதான்.

    Reply
  27. //என்ன கொடுமை சார் இது? நீங்க வழக்கம் போல மிட் நைட்டுல வருவீங்க, நாங்க தூங்காம இருக்கனுமா?//

    பாவிகளா.. அது இந்தியா டைம்ல காலைல 9 மணிக்கு போட்ட கமெண்ட்.

    நானு வழக்கம்போல என்னோட மிட்நைட்லதான் வந்தேன். காலைல 9 மணி வரைக்கும் தூங்கறவங்களுக்காக ஒரு கவித மனசுல ஓடுது.

    எழுதிட வேண்டியதுதான்.

    Reply
  28. வாங்க பாலா.

    //இந்தியா டைம்ல காலைல 9 மணிக்கு// எங்கள மாதிரி யூத்துகளோட பீலிங்க்ஸ்’ஐ நீங்க எல்லாம் எப்போதான் புரிஞ்சிப்பீங்களோ? அதுதாங்க சன்டேல மிட் நைட்டு.

    Reply
  29. பாலா,

    //காலைல 9 மணி வரைக்கும் தூங்கறவங்களுக்காக ஒரு கவித மனசுல ஓடுது.எழுதிட வேண்டியதுதான்//

    எங்க செட்லையும் கூட உங்கள மாதிரி ஒரு பயிருமுத்து இருக்காரு. அவரையும் வச்சு நாங்களும் கவிஜ எழுதுவோம்ல. சாம்பிளுக்கு ஒன்று:

    நிலா,

    வானம்,

    இட்லி.

    எக்ஸ்பெண்டபிள்ஸ்

    படத்தில்,

    ஜெட்லி.

    எப்புடி?

    Reply
  30. தல,

    //நம்ம வெங்கட்டுக்கு வெடிகுண்டு வைக்கனும். அவரு எதுனா பதிவெழுதினா மட்டும்தான் கமெண்ட் போட, //

    வாங்க பாசு. நமக்கும் ரெகுலரா வரணும்னு ஆசைதான். முடியலையே? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்.

    Reply
  31. ணா.. இத ஏற்கனவே ஹா.பாலா பதிவுல அவர்ட்ட கேட்டுட்டேன். உங்க கருத்தையும் தெரிஞ்சிக்க விழைகிறேன்.

    1. நமக்கு பிடிச்ச விசயத்த-அது இந்தந்த வகைல பிடிக்குதுன்னு-மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவது தவறா?

    2. எந்த பிடிச்ச விசயத்தைப் பத்தியும், so called இலக்கியவாதிகள்(அவர்களுக்கு அதைப்பற்றி அவ்வளவா தெரியாட்டி கூட) மட்டும்தான் எழுதனுமா? ஒரு ரசிகன் என்ற முறையில் என்னை மாதிரி சாமானியன் எழுதக்கூடாதா?

    3. இதுவும் ஒருவித அராஜகம் இல்லையா? நாங்க தான் இதெல்லாம் செய்வோம்-நீ இதுக்கு லாயக்கில்லேன்னு-சொல்லாம சொல்றமாதிரி இருக்கே.

    4. // இலக்கியத்தை உள்வாங்கி வாசிக்கமுடியாத ஒருவர் சினிமாவை மட்டும் அப்படி பார்த்துவிட முடியுமா என்ன?// எழுத-படிக்க தெரியாத ஒருவர்-ரசிப்புத்திரனுடன் ஒரு படத்தை பார்க்க முடியாதா?

    5. சினிமா இலக்கியத்தை எல்லாம் மீறிய கலையா? இல்லையா?

    தயவுசெஞ்சு இந்த சந்தேகங்கள யாராவது தீர்த்து வையுங்க.

    (எங்க அவரு கீதப்ப்ரியன், அவரு தான் ஆரம்பிச்சுது. இந்த கேள்விகளை உங்களுக்கும்-இந்த பதிவுல பின்னுட்டமிட்டிறுக்குற அனைவரிடமும் கேட்கிறேன். என் சந்தேகத்தை போக்குபவர்களுக்கு தம்பி அர்ஜுனா படத்திற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்)

    Reply
  32. //வாங்க பாசு. நமக்கும் ரெகுலரா வரணும்னு ஆசைதான். முடியலையே? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்.
    //

    என்னுடைய கமெண்ட்டை அழிக்காமல், பதிவர்களுக்குள் சண்டை மூட்டிவிடும் கருந்தேளை கடுமையாக எதிர்க்கிறேன்.

    வெடிகுண்டு இதுக்கு ஒரு பதிவு போடணும்!! 🙂

    அய்யா.. சீரியஸா எடுத்துக்கலைதானே??

    Reply
  33. ராக்கி அப்புறம் ராம்போ படத்துல எனக்கு ஸ்டாலோன எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஆனா மத்த அவரோட மத்த ஆக்‌ஷன் படங்கள பாக்கும் போது பிடிக்க மாட்டேங்குது 🙁 🙁 விதிவிலக்கு கிளிப்ஹாங்கர் மட்டும்..

    இதுக்கு போலாமா-னு யோசிச்சிட்டு இருக்கேன்…

    உங்களோட ஸ்டாலோன பத்தின முந்தைய பதிவையும் படிச்சேன்… நல்லா இருந்துது 🙂 🙂

    Reply
  34. கொழந்த லூஸ்ல விடுங்க. எல்லாருக்கும் வயித்தெரிச்சல்-ன்னு சொல்லலாம்.

    நாலு புக் எழுதிட்டா நாந்தான் பெரியவன்னு தோணும் போலயிருக்கு. நாம நாக்கை பிடுங்கறா மாறி கேட்டாலும், படிக்காத மாறியே மூஞ்சை திருப்பிக்குவாங்க.

    இருந்தாலும்.. என் கை பரபரங்கறதை அடக்க முடியலை. சினிமா போறதுக்கு டைமிங் தப்பாயிடுச்சு. திரும்ப இன்னும் 30 நிமிசத்தில் கிளம்பனும்.

    டாய் ஸ்டோரி பார்க்கப் போற மூடை கெடுத்துக்க வேணாம்னுதான் அடக்கிட்டு இருக்கேன்.

    Reply
  35. தல,

    //அய்யா.. சீரியஸா எடுத்துக்கலைதானே?// நீங்க எங்க அப்பா மாதிரி (நெறைய வயசுல, கொஞ்சம் அறிவுல கூட ) . உங்களப்போயி நான் எப்புடி தப்பா எதுதுக்கறது?

    பாஸ், இப்போ நீங்க சீரியசா எடுத்துக்கலைதானே?

    //வெடிகுண்டு இதுக்கு ஒரு பதிவு போடணும்// நாளைக்கே ஒட்டுடறேன் ஐயா.

    Reply
  36. தல,

    //டாய் ஸ்டோரி பார்க்கப் போற மூடை கெடுத்துக்க வேணாம்னுதான் அடக்கிட்டு இருக்கேன்//

    பதிவு உண்டா? காதலர் ஏற்கனவே பாத்துட்டார்.

    Reply
  37. தல மன்னிக்கவும்,,

    உங்க பதிவ ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே என்று பார்த்தால், ஆமாம் நீங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவிட்டு விட்டீர்கள்.

    மன்னிக்கவும்.

    Reply
  38. எல்லா கமெண்டையும் இப்பத்தான் படிச்சேன்.. கொழந்தயின் கமெண்ட் உட்பட. ஆனா இப்ப தூக்கம் கண்ண இருட்டிக்கினு வர்ரதுனால, அத்தனை கமெண்டுகளுக்கும் நாளை காலை இங்கே பதில் போடப்படும் . . பின்னிரலாம் ! 😉

    Reply
  39. விமர்சனம் நன்றாக இருக்கிறது! ஆனால் யார் சொல்றத கேக்கறதுன்னே தெரியலை!

    Reply
  40. ஸ்டீவன் சீகல் பயன்படுத்துவது ஜுடோ என்ற கலை

    Reply
  41. நண்பரே,

    ஸ்டாலோன் ரசிகர்களிற்கு மட்டும்தானா விருந்து :)) சாரோன் ஸ்டோனுடன் ஸ்டாலோன் குளிக்கும் ஒரு அற்புதமான காட்சியை என்னாலும்தான் மறக்க முடியவில்லை.

    Reply
  42. அங்கங்கெ லிங்க் கொடுத்து எழுதுற ஊங்க சினிமா விமர்சனம் நயம். ஸ்டாலோனோட ரசிகர்ங்கிறதெக் கணக்குல எடுத்துக்காம, சினிமா அறிவுல பெரிய ஆளு சொல்லிட்டாரேன்னு இன்னிக்குக் காலைல படத்துக்குப் போயிருந்தேன். ‘கமலா’ சினிமாவுல எண்ணி (நம்புங்க, எண்ணிப் பார்த்தேன்) இருபது பேரு வந்திருந்தாங்க. (அங்கெ, பெங்களூருல நல்ல கூட்டமா?)

    ஆனா, படம் அவ்வளவு மோசம் ஒன்னும் இல்ல. எனக்குப் பிடிச்சிருந்திச்சு. க்ளைமக்ஸ் ஃபைட்டுதான் பெரிய குழப்பம் (க்ளோஸ்-அப் ஷாட்டுகள் கூடுதல், இடைவெட்டி வரவேண்டிய ஜெனரல் ஷாட்டுகள் குறைவுங்கிறது என் அபிப்பிராயம்). உங்களைப்போல எல்லா நடிகர்களோட முகமும் தெரிந்தவர்களுக்குக் குழப்பம் குறைவா இருந்திருக்கும்.

    நன்றி.

    Reply
  43. // இந்தப் படம், பழைய ஆக்‌ஷன் படங்களுக்கு ஒரு ட்ரிப்யூட் என்றே தோன்றியது. ஸ்டாலோன், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால், சிங்கம், எப்போதுமே சிங்கம் தானே? //

    ஹி ஹி ஹி கொஞ்சம் வயசான சிங்கம் :))

    .

    Reply
  44. சொல்ல மறந்துட்டேன் me the 50th

    படத்த இன்னிக்கே கண்டிப்பா பாத்துடுவோம் :))
    .

    Reply
  45. வால் பையன்,

    //ஸ்டீவன் சீகல் பயன்படுத்துவது ஜுடோ என்ற கலை// ஐயம் சாரி. அந்த கலையின் பெயர் ஐகிடோ. ஜூடோ அல்ல.

    Reply
  46. கும்மிக்கு வருவீங்கன்னு நம்பி.. பதிவு போட்ட பாலாவை என்ன பண்ணலாம் சொல்லுங்க?

    //ஐயம் சாரி. அந்த கலையின் பெயர் ஐகிடோ. ஜூடோ அல்ல //

    தற்காப்புக் கலைகளையே பாதுகாக்கும் அண்ணன் விஸ்வா வாழ்க.

    Reply
  47. உங்க விமர்சனம் அருமை, படம் பார்க்க வேண்டும் போல தூண்டுகிற்து

    Reply
  48. சென்னையில் குளோப் என்ற தியேட்டரை ரீமாடல் செய்து அலங்கார் என்று பெயரிட்டு பர்ஸ்ட் ரீலிஸ்…பர்ஸ்ட் ப்ளட்….படம் பார்த்துவிட்டு சென்னை சாலைகளில் டூவீலரில் முறுக்கி கொண்டு பறந்தது நினைவுக்கு வந்தது. இன்று வரை இதற்க்கு இணையான ஆக்சன் படம் இல்லை. உங்கள் பதிவை பார்த்த பிறகே இப்படத்தை பார்க்க எண்ணியுள்ளேன்

    Reply
  49. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    கொழந்த சில கேள்விகளைக் கேட்டிருப்பதால், அவற்றுக்கு இதோ எனது பதில்கள்..

    1. நமக்கு பிடிச்ச விசயத்த-அது இந்தந்த வகைல பிடிக்குதுன்னு-மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவது தவறா?

    கண்டிப்பா கிடையாது. அதுல எந்தத் தப்புமே இல்லை..

    2. எந்த பிடிச்ச விசயத்தைப் பத்தியும், so called இலக்கியவாதிகள்(அவர்களுக்கு அதைப்பற்றி அவ்வளவா தெரியாட்டி கூட) மட்டும்தான் எழுதனுமா? ஒரு ரசிகன் என்ற முறையில் என்னை மாதிரி சாமானியன் எழுதக்கூடாதா?

    அட நீங்க வேற.. எதை வேனாலும் யாரு வேணாலும் எழுதத்தான் நாம இங்க வந்துருக்கோம்.. இதுல நீங்க வேற இப்புடியெல்லாம் கேட்டுகினு.. ரசிகன்ற முறைல , யாரு வேணாலும் எழுதலாம் தலைவா..

    3. இதுவும் ஒருவித அராஜகம் இல்லையா? நாங்க தான் இதெல்லாம் செய்வோம்-நீ இதுக்கு லாயக்கில்லேன்னு-சொல்லாம சொல்றமாதிரி இருக்கே.

    உண்மைதான். நீங்க இங்க எழுதிருக்குறது, சமீபத்துல ஜெயமோகன் வயித்தெரிச்சல்ல எழுதின பதிவுக்கான உங்க எதிர்வினைன்னா – இதோ என்னோட பதில். அது வேற ஒன்யுமில்ல.. பதிவர்கள் நிறைய பேரு இப்ப எழுத வந்தாச்சி.. அது மட்டுமில்லாம, பல அட்டகாசமான உலகப்படங்களைப் பத்தி நாம எழுதறது பார்த்து,அண்ணனுக்கு ஜொரம் வந்துருச்சி.. ஏன்னா, அவருக்கு இந்தப் படங்களோட பேருக்குக் கூட ஸ்பெல்லிங் தெரியாது.. அதான் ரீசன் 😉 .. ஒருவேளை சாரு ஜெய்க்கு எழுதின பதிலையும் உங்க எதிர்வினைல சேர்த்தா.. வெல்.. ஜெய் கடிதத்தையும், சாருவோட பதிலையும் இன்னொரு வாட்டி படிங்க. . அது ஏன்னு அதுலயே பதில் கீது..

    4. // இலக்கியத்தை உள்வாங்கி வாசிக்கமுடியாத ஒருவர் சினிமாவை மட்டும் அப்படி பார்த்துவிட முடியுமா என்ன?// எழுத-படிக்க தெரியாத ஒருவர்-ரசிப்புத்திரனுடன் ஒரு படத்தை பார்க்க முடியாதா?

    முடியும். கட்டாயம் முடியும். ஆனால், இதுல மட்டும் என்னோட பர்சனல் கருத்து என்னன்னா, இலக்கியம் ஆழ்ந்து ஒருத்தன் படிச்சா, வாழ்வின் அத்தனை வண்ணங்களும் நமக்குத் தெரிவதோட, நம்ம வாழ்வியல் முறை கட்டாயம் மாறும். இன்னமும் பண்படும். அதுக்குக் காரணம், அந்த இலக்கியத்தில் காணப்படும் அழகியல் கூறுகள். அவைகளை, நம்ம வாழ்வோட நாம கம்பேர் பண்ணிப் பார்த்துக்க முடியும்… ஸோ, இலக்கியம் படிச்சிட்டு ஒரு நல்ல படம் பார்த்தா, அது மனசுல இன்னமும் ஆழமான அதிர்வுகளை எழுப்பும்ன்றது உண்மை..

    5. சினிமா இலக்கியத்தை எல்லாம் மீறிய கலையா? இல்லையா?

    ஒரு அருமையான படத்தை எடுக்கும் போது/ பார்க்கும்போது, சினிமா என்பது இலக்கியத்தோட ஒரு நீட்சிதான். அதுவே மொண்ணைப் படம் எடுக்கும்போது / பார்க்கும்போது, சினிமா வெறும் படங்களின் கலவையாகிறது. இலக்கியம்றது என்ன? அது வேற ஒண்ணுமில்லை. சாதாரண, உலக வாழ்க்கையில் காணப்பெறும் அபத்தங்களையும் இன்னும் பல விஷயங்களையும், ஒரு படைப்பாகக் கொடுப்பதே. அது வெறும் பல்ப்பாக இருக்கவே இருக்காது. மனித வாழ்வைப் பற்றிய ஒரு (ஆழமான/ அங்கதமான / சோகமான / சந்தோஷமான / satiricaலான) பதிவே இலக்கியம். இந்த traitஸ சினிமவில் எடுக்கும்போது, அதுவும் இலக்கியமாகிறது (கொதார், கீஸ்லோவ்ஸ்கி, பெர்க்மன், குப்ரிக், ஸ்கார்ஸெஸி, டேரபாண்ட்.. இன்னும் பலர்)..

    அவ்ளதான் 😉

    Reply
  50. ணா..
    உங்கள் கருத்துக்களையும் அறிய முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.

    5 பதில் சம்பந்தமா ஒண்ண பகிர்ந்துக்கிற நினைக்கிறேன்.
    இது வரை வந்த பல அற்புதமான திரைப்படங்களை பார்த்தா..பெரும்பாலும் அது ஒரு நாவலாளையோ-சிருகதையையோ அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
    (நீங்க ஒருத்தராவது இத பகிர்ந்துகிட்டனதுனால இந்த லிங்க் ப்ரீ:)
    இத ஏற்கனவே பார்த்தாலும் பரவயில்ல. குழந்தைகள் ஜாக்கிரதை (இத ஹா.பாலா அனுப்பிச்சுருந்தேன்))
    http://www.youtube.com/watch?v=w0iXYpHXWIA

    http://www.youtube.com/watch?v=VdaQ_HjMXkw

    Reply
  51. நான் (யென்னது நான் யார்ரா?) இப்பவும் மீசையில்லாமல் இருக்கேன்னா அதுக்கு காரணம் ஸெகல்-தான். அந்த அமைதிப்பார்வை, மெத்தென்ற அதே சமயம் தீர்க்கமான பேச்சு, ‘சிறு குதிரை’ வால் கொண்டை, நெடிய உயரம் மற்றும் லேசான தொப்பை… ம்ம்ம்… நாஸ்டாக்கிலியாதான். அவரால் தான் ஜிம்முக்கு போகாம லேசான (ஹி ஹி!!) தொப்பையோட இன்றும் வலம்.

    ஸெகல்-னு பார்த்தல மத்த உங்க விமர்சனலாம் மறந்துடுத்து… அருமை.

    Reply

Join the conversation