Fade In முதல் Fade Out வரை – 17

by Karundhel Rajesh September 4, 2014   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை பற்றிய டிப்ஸ்களைப் பார்த்து வருகிறோம். திரைக்கதை எழுதுவதில் உள்ள பிரச்னைகளை ப்ளேக் ஸ்னைடரின் பாணியில் கவனித்து வருகிறோம் (இவற்றில் பலவற்றையும் ஸிட் ஃபீல்ட் வாயிலாக ஏற்கெனவே பார்த்துவிட்டாயிற்று என்பதை மறக்கவேண்டாம். அதனால் ஓரளவு repetition இருக்கும்)

Fade In முதல் Fade Out வரை


Turn, Turn, Turn

திரைக்கதை எழுதுவதில் இதுவரை விளக்கப்பட்டுள்ள அத்தனை வழிமுறைகளிலும் இது ஒரு முக்கியமான ஒன்று (ஆனால் நாம் பலமுறை பல்வேறு அத்தியாயங்களில் பார்த்ததுதான்). என்னவென்றால், திரைக்கதையில் சொல்லப்படும் கதையும் காட்சிகளும் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கோ அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கோ அல்லது ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கோ செல்கையில், முந்தைய காட்சியைவிடவும் சுவாரஸ்யமாக, ஆடியன்ஸைக் கவரும் வகையில் இருக்கவேண்டும்.

ஒரு மலைமுகடைக் கற்பனை செய்துகொள்ளலாம். அந்த முகட்டை நோக்கி நாம் ஏறுகையில் எப்படி சமதளத்திலிருந்து மெல்ல மெல்ல மேலே செல்கிறோம்? பயணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடினப்பட்டு, இறுதியில் முகட்டைத் தொட்டவுடன் ஒரு சந்தோஷம் எழுகிறதல்லவா? அப்படி இல்லாமல், முதலில் சமதளம், பின்னர் சிறிது தூரம் ஏறுகிறோம்; மறுபடியும் சமதளம்; சற்று ஓய்வு; பின்னர் மறுபடியும் மேடு; பின்னர் பள்ளம்; பின்னர் சமதளம் என்றெல்லாம் இருந்தால்? முகடைத் தொடும் அந்த உற்சாகமும் adventureம்  நம்மை விட்டுப் போய், எப்போதடா சேர்வோம் என்ற அலுப்பு வந்துவிடும். அதுதான் Turn, Turn, Turn.

சில படங்களில் நாம் இதைக் கவனித்திருப்போம். படம் துவங்கி ஒரு மணி நேரம் ஆனாலும் எதுவுமே நடந்திருக்காது. கதையே இன்னும் துவங்காமல் கதாபாத்திரங்கள் மட்டும் அங்குமிங்கும் நடமாடி, பாடல்கள் பாடி, சண்டைகள் போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதன்பின் இடைவேளை வந்துவிடும். இந்த ஒருமணி நேரத்தில் சுவாரஸ்யமாக எதுவுமே வந்திருக்காது. இதுபோன்று திரைக்கதை எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, முதல் பக்கத்தில் இருந்து ஒவ்வொரு பக்கமாக சுவாரஸ்யம் கூடிக்கொண்டே வந்து, இறுதியில் அட்டகாசமான ஒரு க்ளைமேக்ஸால் ஆடியன்ஸைத் திருப்திப்படுத்தும் விதமாகத் திரைக்கதை எழுதினால் அது எப்படி இருக்கும்?

கதையின் போக்கு செல்லச்செல்ல, கதையின் மூலமாகவே மனது கதாபாத்திரங்களைப் பற்றிய செய்திகள் சொல்லப்படுவதுதான் ஹாலிவுட் பாணி. மாறாக எடுத்த எடுப்பில் எல்லாத் தகவல்களையும் சொல்லிவிட்டு, அதன்பின்னர் வரும் காட்சிகளைக் காண்பித்தால் கதாபாத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எதுவுமே இருக்காது. இதுவும் படத்தின் தொய்வுக்குக் காரணமாகலாம். கதாபாத்திரங்களின் பிரச்னைகள், அவர்களால் அடையமுடியாத விஷயங்கள், அவர்களது பயங்கள், சந்தேகங்கள் போன்றவற்றையெல்லாம் இயல்பாக ஆங்காங்கே காட்டுவதன்மூலம் கதாபாத்திரங்களை இயல்பாக்கலாம். கதையையும் சுவாரஸ்யமாக நகர்த்திச்செல்லலாம். ஸிட் ஃபீல்ட் இதைப்பற்றி, ‘ஒரு இருட்டு அறையின் நான்கு மூலைகளில் உள்ள விளக்குகளை ஒவ்வொன்றாகப் போடுவதன்மூலம் அந்த அறையை ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு கோணத்தில் நம்மால் பார்க்கமுடியும்; அதைப்போலவே கதாபாத்திரங்களின் ஒவ்வொரு குணாதியசயத்தையும் ஒவ்வொரு முறை அவர்கள் பிறரோடு பழகுகையில் காட்டினால் அது சுவரஸ்யத்தை அதிகரிக்கும்’ என்று சொல்லியிருப்பதை நமது ஸிட் ஃபீல்ட் தொடரில் முன்னர் கவனித்திருக்கிறோம். அதுவேதான் இங்கே ப்ளேக் ஸ்னைடர் சொல்வதும்.

The Emotional Color Wheel

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் அதில் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கின்றன என்பது பெரும்பங்கு வகிக்கிறது. ‘உணர்ச்சிகள்’ என்றால் – திரையில் ஒரு கதாபாத்திரம் கஷ்டப்பட்டால் ஆடியன்ஸுக்கு மனதில் வலிப்பது. திரையில் கதாபாத்திரங்கள் சிரித்தால், ஆடியன்ஸ் சிரிப்பது. இப்படி, ஆடியன்ஸின் அடிப்படை உணர்ச்சிகளைத் திரையில் இயல்பாகக் காட்டுவது. இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். தெரியாத விஷயம், நமது திரைக்கதை ஒருவேளை ஒரு முழுநீள நகைச்சுவைப் படமாகவோ, முழுநீள உணர்ச்சிபூர்வமான படமாக இருந்தாலோகூட, அவற்றில் எதுவோ குறையலாம் என்பதே.

விளக்கமாகக் கவனித்தால், பல சமயங்களில் திரைப்படங்கள் ஒரே உணர்ச்சியை முழுதும் கொண்டிருத்தல் போதுமானது அல்ல என்று ஸ்னைடர் சொல்வது புரியும். அப்படியென்றால் என்னதான் செய்யவேண்டும்? இங்கே அவர் ஃபாரல்லி சகோதரர்களை உதாரணமாகக் கொடுக்கிறார். இவர்களது படங்களைப் பலரும் பார்த்திருக்கக்கூடும் (There is something about Mary, Dumb and Dumber, Shallow Hal, Stuck on You, Me, Myself & Irene). இவர்கள் பெரும்பாலும் நகைச்சுவை இயக்குநர்கள் என்றே அறியப்பட்டவர்கள். இருந்தாலும், இவர்களது படங்கள் முழுதும் நகைச்சுவையாக இருக்காது. ஆங்காங்கே பல்வேறு உணர்ச்சிகளுடன் அமைந்த சுவாரஸ்யமான – ஆடியன்ஸின் உணர்ச்சிகளை பாதிக்கக்கூடிய காட்சிகள் இருக்கும். உதாரணமாக, There is Something About Maryயில் ஒரு அருமையான சிறுவயதுக் காதல் இருக்கும். Me, Myself & Irene படத்தில் ஒருவித மென்சோகம். இப்படி, உணர்ச்சிகள் பல்வேறுவகையாகத் திரைக்கதையில் ஆங்காங்கே இருப்பது நல்லது என்பது ஸ்னைடரின் கருத்து. உடனே, ‘ஸ்னைடரே சொல்லிவிட்டார்’ என்பதால் போலியாக இப்படிப்பட்ட காட்சிகளை எழுதி, ஆடியன்ஸை ஏமாற்றக்கூடாது. ஆங்காங்கே இயல்பாக அவை எழுதப்படவேண்டும்.

இதற்கான தமிழ் உதாரணமாக ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைச் சொல்லலாம். படத்தில் நகைச்சுவை உண்டு. Action உண்டு. காதல் உண்டு. காமம் உண்டு. கிண்டல் உண்டு. ஏமாற்றப்படுதல் உண்டு. உணர்வுபூர்வமான சோகம் உண்டு. ஆனால் இவையெல்லமே இயல்பாக எழுதப்பட்டிருக்கும். எதுவுமே துருத்திக்கொண்டு தெரியாது.

போலவே, நமது திரைக்கதையில் எழுதப்பட்டுள்ள எந்த உணர்ச்சிகரமான காட்சியும் ஆடியன்ஸைப் பாதிக்கப்போவது இல்லை என்ற சிறிய சந்தேகம் இருந்தால் கூட, சில முக்கியமான காட்சிகளை எடுத்துக்கொண்டு, அவைகளை வேறு ஒரு உணர்ச்சியின்மூலம் மாற்றி எழுதமுடியுமா என்று யோசித்துப் பார்க்கலாம். உதாரணமாக ஒரு நகைச்சுவையான காட்சியை எப்படி மென்சோகத்துடன் மாற்றலாம்? ஒரு சாதாரண காட்சியை எப்படி எதாவது ஒரு உணர்ச்சியைக் கலப்பதன்மூலம் இன்னும் நன்றாக மாற்றலாம்? இப்படி யோசித்தால் அந்தக் காட்சிகளை இன்னும் நன்றாகக் கொண்டுவரமுடியும்.

‘HI HOW ARE YOU; I AM FINE’

ஹீரோ வருகிறார். அவரிடம் ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் பேசுகிறது.

‘என்னப்பா.. எங்க கிளம்பிட்ட?’

‘வில்லனை கொல்லப்போறேன்’

“ஓ அப்புடியா? அவன் என்ன செஞ்சான்?’

‘என் குடும்பத்தை சிதைச்சிட்டான்’

‘அடப்பாவமே.. ரொம்பக் கஷ்டமா இருக்குப்பா’

‘ஆமாம். எனக்கும் அப்புடித்தான் இருக்கு’

‘சரி. நான் மார்க்கெட்டுக்குப் போறேன். நீ வில்லனை கொன்னுட்டு வீட்டுக்குப் போயி நல்லா ரெஸ்ட் எடு’

‘சரி. டாட்டா’

இன்னொரு காட்சி. இது ஒரு ரொமான்ஸ் காட்சி. ஹீரோ ஹீரோயினிடம் காதலைச் சொல்லப்போகிறார்.

‘ஹாய்’

‘ஹாய்’

‘எனக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு. ஐ லவ் யூ’

‘எனக்கு உன்னைப் புடிக்கல’

‘ஓகே ரைட்டு. ஸீ யூ’

இப்படிப்பட்ட மிகமிகச் சாதாரண வசனங்கள்தான் இந்தத் தலைப்பில் பேசப்படுகின்றன. இதுபோலெல்லாம் நிஜ வாழ்க்கையில் வேண்டுமானால் எப்போதாவது நடக்கலாம். திரைப்படங்களில் இதெல்லாம் அவசியம் நடக்காது. நடக்கவும் கூடாது. திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் இதுபோலெல்லாம் சாதாரணமாகப் பேசவே கூடாது. அவர்களது பேச்சு இயல்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதில் அவர்களது குணாதிசயங்கள் தெரியவேண்டும். திரைக்கதையில் இதுபோன்ற தட்டையான வசனங்கள் இடம்பெறுவது ஒரு குற்றம். காரணம் என்ன? தட்டையான வசனங்களால் இயல்பிலேயே எழக்கூடிய சுவாரஸ்யம் பாதிக்கப்பட்டு நல்ல கதையும் சாதாரணமான கதையாக மாறிவிடுகிறது.

கூடவே, கதாபாத்திரங்களை சுவாரஸ்யமாகக் காட்டக்காட்ட அவர்களின் பேச்சும் சுவாரஸ்யமடையும். மணி ரத்னம் படங்களில் கதாபாத்திரங்கள் எப்படிப் பேசுகின்றன? அவர்களின் பேச்சைக் கேட்டாலே அவர்களின் குணாதிசயம் புரிகிறதல்லவா? (‘அப்பா.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்’…’நான் செத்தாத்தாண்டா அது நடக்கும்’…. ‘அவ்வளவு நாள் என்னால காத்திருக்க முடியாது’). ஸிட் ஃபீல்ட் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். ‘வசனம் என்பது இரண்டு விதங்களில் பயன்படுகிறது. ஒன்று – ஒரு கதாபாத்திரத்தின் தன்மைகள் அந்த வசனங்களால் வெளிப்படவேண்டும். இரண்டு – அந்த வசனங்களால் கதை முன்னால் நகர வேண்டும். இது இரண்டுமே உங்கள் வசனங்களில் இல்லை என்றால் அந்த வசனம் வீண்‘. இதுதான் ப்ளேக் ஸ்னைடர் சொல்லவருவதும்.

நமது திரைக்கதையை ஒருமுறை படித்தாலே, வசனங்கள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குப் புரிந்துவிடும். ஒருவேளை வசனங்கள் சாதாரணமாக இல்லை; அவை அருமையாக இருக்கின்றன என்று நமக்குத் தோன்றினால் (யாருக்குமே முதலில் அப்படித்தான் தோன்றும்), அதற்கு ப்ளேக் ஸ்னைடர் ஒரு சிறிய டெஸ்ட்டைப் பரிந்துரைக்கிறார்.

கதாபாத்திரங்களின் பெயர்களை மறைத்துக்கொள்ளலாம். இப்போது அந்த வசனங்களை வாய்விட்டுப் படித்துப் பார்க்கலாம். இப்படிச் செய்தால், எல்லாப் பாத்திரங்கள் பேசும் எல்லா வசனங்களுமே ஒரேபோன்று இருப்பதை நம்மால் உணர முடியும். நூற்றூக்குத் தொண்ணூற்றைந்து சதவிகிதம் இப்படித்தான் இருக்கும்.

மாறாக, நமது வசனங்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால், வசனங்களைப் படித்தாலேயே கதாபாத்திரத்தின் குணாதிசயம் நமது மனதில் வந்து நிற்கவேண்டும். எல்லா க்வெண்டின் டாரண்டினோ படங்களும் அப்படித்தான் இருக்கும். உதாரணத்துக்கு Pulp Fiction திரைக்கதையைப் படித்துப் பார்க்கலாம். அதில் புட்ச், வின்ஸெண்ட், ஜூல்ஸ், மியா, மார்ஸெலஸ் வாலஸ், வுல்ஃப், பம்ப்கின், ஹனிபன்னி ஆகிய யாரையுமே வசனங்களை வைத்து எளிதாக சுட்டிக்காடிவிட முடியும். இது ஏன் என்று யோசிக்கலாம்.

all6

முதலில் ஹனி பன்னி & பம்ப்கின் – பம்ப்கின்னின் நோக்கம் – அந்த ரெஸ்டாரண்ட்டைக் கொள்ளையடிப்பது. ஹனி பன்னியிடம் அவனது திட்டத்தை விளக்குகிறான். இடையிடையே ஹனி பன்னி அவனைக் கேள்வி கேட்கிறாள். அப்போதெல்லாம் அவன் அவர்களது பழைய கொள்ளை முயற்சிகளைப் பற்றிப் பேசி, அவள் அங்கே என்னென்ன செய்தாள் என்பதைப் பேசுகிறான் (You’re crowd control, I’ll handle the employees). அதேபோல் அவனது வசனங்களைப் பார்த்தால், திட்டமிடுபவன் அவன் தான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். விதவிதமான கடைகளைப் பார்த்துக்கொள்பவர்கள், அவர்களின் குணங்கள், அந்தக் காலகட்டத்தின் பிரச்னைகள், இவர்கள் இனி எப்படி வாழப்போகிறார்கள் என்பதெல்லாம் அவனது வாழ்மொழியாகவே பேசப்படுகின்றன. இதற்கு ஹனி பன்னி அவ்வப்போது பதில் சொல்வதன்மூலம் அவளது இயல்பும் புரிந்துவிடுகிறது.

அடுத்து ஜூல்ஸும் வின்ஸெண்ட்டும். இந்த இருவரும் அறிமுகம் ஆகும் கார் காட்சியில், ஜூல்ஸிடம் வின்ஸெண்ட் அவனது ஆம்ஸ்ட்டர்டாம் அனுபவங்களைப் பற்றி வரிசையாக சொல்லிக்கொண்டு வருகிறான். ஜூல்ஸ் கறுப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனது வசனங்களே அவனது இயல்பைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன. ஜூல்ஸ்தான் எப்போதும் திட்டமிடுபவன்; சீனியர்; கோபக்காரன்; எப்பொதும் ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூவிலேயே பேசுபவன். இதெல்லாமே அவனது வசனங்களைப் படித்தாலே தெரியும். வின்ஸெண்ட் சற்றே இயல்பானவன். பெண்களைப் பற்றிய ஜூல்ஸின் பல கருத்துகளை மறுப்பவன். இதுவும் எளிதில் புரிந்துவிடும் (மேலே இருக்கும் படம், ஷுட்டிங் ஸ்பாட்டில் டாரண்டினோ பிறருடன் எடுத்துக்கொண்ட படம் அல்ல. இது ஒரு மிகவும் நகைச்சுவையான காட்சி. படத்திலேயே வருவது. ஆனால் பிறகு வெட்டப்பட்டுவிட்டது. அவர்களின் முகபாவங்களைக் கவனியுங்கள். அதுதான் அவர்களது இயல்பு. இந்தக் காட்சியின் வசனங்களைப் பார்த்தால், ஒவ்வொருவரும் எப்படிப் போஸ் கொடுக்கத் தயாராகின்றனர் என்பது புரியும். இதுபற்றி டாரண்டினோ சீரீஸில் நமது Pulp Fiction கட்டுரையில் விரிவாகக் கவனிக்கப் போகிறோம்).

இதுபோலவே மியா மற்றும் பிறரின் கதாபாத்திரங்களும் மிக மிக மிக எளிதாகப் புரியும்படி – அவர்களின் வசனங்களிலேயே அவர்களின் பல்வேறு குணாதிசயங்கள் வெளிவரும்படித்தான் டாரண்டினோவின் வசனங்கள் இருக்கும்.

எனவே, வசனங்களை எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு விசேட இயல்பைக் கொடுக்கும்படி ஸ்னைடர் அறிவுறுத்துகிறார். இப்படி யோசித்துப்பாருங்கள்.

‘முரடன்’ என்பதை வெறும் வசனங்களால் எப்படி வெளிப்படுத்துவது? ‘சாது’, ‘ரவுடி’, போலீஸ்’, திருடன்’, ‘மருத்துவர்’, ‘பொறியாளர்’, ‘ஆன்மீகவாதி’, போலி சாமியார்’ – இவர்களையெல்லாம் எப்படி உங்கள் வசனங்களில் வெளிப்படுத்துவீர்கள்? பிறர் இவர்களைப்பற்றி விவரிக்கும் வசனங்களாக இருக்கக்கூடாது. இவர்களே இயல்பாகப் பேசும் அன்றாட வசனங்களில் இது தெரியவேண்டும். முரடன் என்பவன் எடுத்தெறிந்து பேசலாம். சாது, பம்மிப்பம்மிப் பேசலாம். போலீஸ் என்பவர் கம்பீரமாக, பயப்படாமல், உரக்கப்பேசலாம். இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்கலாம். அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ இருப்பதாக யோசித்தால் அதனை வைத்து வசனங்களைக் கொஞ்சமாவது சுவாரஸ்யமாக எழுதலாம். தமிழில் மணி ரத்னம், பாக்யராஜ் போன்றவர்களைக் கவனித்துப் பார்க்கலாம். ஸ்ரீதர் ஒரு அருமையான இயக்குநர். அவரது வசனங்கள் மிகவும் இயல்பானவை. கதையை எளிமையாகச் சொல்லக்கூடியவை.

தொடருவோம்….

  Comments

16 Comments

  1. Selva

    I have been reading ur articles for the past 3 years. Really good to see how the way u review movies. More helpful for aspirants. I would like to say few things. U keep on repeating about quantin t and his movies alone. I feel his movies are vulgar and violence. Kinda spoiling society. Example.college students see those movies and feel those are fun and behave like tat. Esp vulgar words. Its my view. Btw need ur review on paruthiveeran. According to me its my favourite and Best in indian cinema.

    Reply
    • vivek

      தப்பு பண்ணிட்டீங்களே…. நீங்க கருந்தேளைக் கூட திட்டி இருக்கலாம். ஆனால் அவரோட காதலர் குயின்டினை பத்தி கருத்து சொல்லிட்டீங்களே… கருந்தேள் கொட்டும் முன் ஓடி விடும்.
      – ஜஸ்ட் கிடிங்..

      சமீபத்திய கருந்தேள் படைப்புகளில், குயிண்டினைப் பற்றி, இப்படியும் இலக்கியம் படிக்கலாம் என்று குறிப்பிட்டு இருப்பார்.
      ராமாயணமும், பாரதமும் பட்டும் காவியம் அல்ல. தரை லோக்கல் மொழியிலும் இலக்கியம் படைக்கலாம் அதற்கு உதாரணம் என்று கருந்தேள் கூறுவது குயிண்டின் மட்டுமே. வெறும் எப் வார்த்தைகளை மட்டும் வைத்து குயிண்டினை மதிப்பிட வேண்டாம்.., வார்த்தைகளைத் தாண்டி அவரிடம் ஏதோ ஒரு திறமை இருக்கிறது.

      பருத்தி வீரன் ஒரு நல்ல படம்தான்… ஆனா அதை விட மிக நல்ல படங்கள் தமிழில் எடுத்திருக்கிறார்கள்.

      Reply
      • Selva

        Ofcourse yes, i do agree that quentin is good in the way how he protray the movie and the style. Wat i pointed is vulgar and violence.

        Those must be avoided. As u mentioned, yes we can show case local as same as epic. But we need to think about consequences. For example, vadivelu comedies.

        Those are fun so we used to talk and use those dialogues since it inspired and it makes us laugh if we use. Same in terms of quentin movies. All vulgar words, when we with friends we enjoy since it makes fun around us.

        Same can we use if we with family or parents around? Nopes. I hate to the core the words m..r f..r, b….h. Ya i accept the character is like that so he/she use it.

        Instead creating a character like that we can avoid those rite?

        Please dont misunderstand, im trying to convey that we must avoid. Aranya kandam inspired by pulp fiction. Even in that movie vulgar words. Again a different will come inspired by aranya kandam and again it go on.

        We dont have that matured society to see movie as movie. We still have stupid people who worship hero and heroines and behave like them or by that character.

        Regarding paruthiveeran, ya there are more good movies in tamil. But why it different from others is, character selection, movie theme, background music etc. Even it has few which would have been avoided.

        To me its the best in india so expecting a review from Mr. Rajesh. Not comparing with any:-)

        Reply
        • vivek

          ஓகே ஆபீசர்… நான் உங்கள் கருத்தை ஒப்புக் கொள்கிறேன்… வன்சொற்கள் உள்ளதை சீர்குலைக்கும்..

          பருத்தி வீரனுக்கு கருந்தேள்தான் [பெட்டர்மாஸ்ட் லைட்டேதான்] வேணுமா?

          கருந்தேள் அந்த படத்த பார்த்துட்டு, இது ஒரு குப்ப படம்-ன்னு சொல்லவும் வாய்ப்பு இருக்கு., அல்லது, இது அஹாலே ஊஹூ என்ற பழைய தெலுங்கு படத்தில் இருந்து 4 காட்சி இன்னும் பிற படங்களில் இருந்து 4 காட்சி எடுத்து அப்பட்ட காப்பிப் படம் என்று சொல்லவும் வாய்ப்பு இருக்கு.

          இன்னும் கொஞ்சம் மேல போயி, இதுல அமீர் சிட் பீல்ட் ரசிகர் மாதிரி ஒரு சில திரைக்கதை எழுதி இருக்காரு., இவரு இன்ஸ்பயர் ஆகல, காப்பி அடிச்சிருக்காரு.. -ன்னு சொல்லவும் வாய்ப்பு இருக்கு..

          ஆதலால், மனதைத் திடப் படுத்திக் கொள்ளவும்…

          Reply
          • Selva

            That is the reason why I’m requesting Mr. Rajesh to review since he have more knowledge. If it is a copycat I stop praising tat movie and see the original version. So ya.:-)

          • Rajesh Da Scorp

            Hi Selva and Vivek,

            Looks like the conversation is going on in a very colorful manner 🙂 .. Sure deal. Actually I like Paruthi veeran. I have written about it in my Dinagaran screenplay series, which is gonna be released soon. But I will try writing an analysis in my blog too soon, when time permits. Cheers. About Selva’s opinion about violence and Tarantino, I will post it in detail when I write a post about the violence in his films. Cheers.

          • Selva

            Thanks for your reply rajesh. Waiting for it. Also if possible please suggest list of must watch movies on each genre. I need your opinion since whatever movies you suggested i have seen and all are nice. Recent one “Source Code”. Aspirants can learn how to make a movie with low budget and minimum number of cast. Memento, source code etc… Thanks for those nice articles. Awaiting more:)

            PS: I am not into this field. But passion to watch movies and keen in this art:) esp after visiting this blog portal. Hatsoff to rajesh.

  2. Vivek

    விஜய், சந்தானம் போன்ற நடிகர்கள், தமிழில் ஏராளமான சென்னை வட்டார மொழிக் கெட்ட வார்த்தைகளை நமது மனதில் பதிய வைத்து இருக்கிறார்கள்…

    போடாங்கோ.. [விஜய் பாட்டே பாடி இருக்கிறார்]
    ஓ–தா
    டாஷ்
    அடிங்க்..
    ங்கொக்கா மக்க…
    ங்கொய்யால

    அது என்னவென்று புரியவில்லை, உலக கெட்ட வார்த்தைகள் அனைத்தும் கலவி நிகழ்வுகளைக் கொச்சைப் படுத்தியோ, அல்லது கலவி உறுப்புகளை இழிவு படுத்தியோ வழங்கி வருகின்றன., இது ஏன்? இப்படி இருக்கையில் குயிண்டினை மட்டும் குறை சொல்வது ஒருதலைப் பட்சமாக தெரிய வாய்ப்பு உள்ளது.

    Reply
    • Rajesh Da Scorp

      ஆமாம். நானும் ஒப்புக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, திரைப்படங்களில் இருப்பவற்றை மக்கள் பின்பற்றுவது நம்மூரில் மட்டுமே. ஹாலிவுட்டில் தலைகீழ். மக்களின் வாழ்க்கையைத்தான் திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக ஸ்கார்ஸேஸி, டாரண்டினோ படங்கள்.

      Reply
      • Vivek

        சற்றே அலச வேண்டிய தலைப்பு… கோழியில் இருந்து முட்டையும், மக்கள் வாழ்கையை மீடியாவும் – எது முதலில் வந்தது, மீடியாவைப் பார்த்தே மக்கள் கற்கவில்லை என்றால், எப் டிவி எதில் இருந்து கற்கிறது?
        இது போன்ற முன்னுக்குப் பின் முரணான வாதங்களை உங்கள் சிந்தனை வெள்ளத்திலேயே நான் மிதக்க விட்டு விடுகிறேன்.

        ஒருவர் விற்கிறார், மக்கள் நுகர்கிறார்கள்., இதில் பணம், அரசியல் போன்ற பெரிய கட்டுப் படுத்தும் காரணிகளே, என் கண்ணுக்குத் தெரிகின்றன… மற்றவை வெற்றி எல்லாம் இரண்டாம் பட்சமே..
        டை ஹார்ட் -4-இல் பல குப்பை லாரி கொள்ளளவு தங்கம் அமெரிக்காவில் இருக்கிறது என்று வால் ஸ்ட்ரீட்-இன் கெத் காண்பித்து இருப்பார்கள்., அது சமீபத்தில் அமேரிக்கா மீது வெளியான டாலர் அச்சிட்ட வழக்கிற்கான பதில்…

        நீங்கள் ஒரு கலைஞனைப் போல., எவ்வாறு தவறுகள் செய்யக் கூடாது என்று திரைக் கதையில் கற்றுக் கொடுக்கிறீர்கள்., எவ்வாறு சுவாரஸ்யம் சேர்க்கலாம் என்பதற்கு துல்லியமான விசயங்களைக் கைவசம் வைத்திருக்கிறீர்கள்…

        ஆனால், “திரைப்படங்களில் இருப்பவற்றை மக்கள் பின்பற்றுவது நம்மூரில் மட்டுமே. ஹாலிவுட்டில் தலைகீழ். மக்களின் வாழ்க்கையைத்தான் திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன. ” – என்ற தங்களது கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை.

        மக்களின் வாழ்க்கைக்கும் திரைப் படங்களுக்கும் ஒற்றுமை இருந்திருக்கலாம், அல்லது நிஜ வாழ்க்கையையே படமாக எடுத்து இருக்கலாம்., ஆனால் மக்கள் திரைப் படங்களில் இருந்து நிறைய கற்கின்றனர்.

        தெரிந்தோ, தெரியாமலோ, நாகரீகம் கலாச்சாரம், ட்ரெண்ட் என்ற பல வஸ்துக்கள் மக்களை வசியப் படுத்த திரைப்படங்களும் ஒரு கருவியாக செயல்படுகிறது. [ஒன் ஒப் தி ]
        – எனப் மொக்கை.

        Reply
        • Selva

          பொதுவாக சொல்லவேண்டுமென்றால், நம்மால் முடியாதது அல்லது நமக்கு பிடித்தது திரையில் வந்தால் மட்டுமே நாம் ரசிக்கிறோம். மாறாக எது ஏற்புடையதாக இருக்குமோ அதை நம் மனது ஏற்க மறுக்கிறது. நான் உட்பட. உலகளாவிய சிந்தனை, நன்மை தீமை பற்றிய புரிதல் வேண்டும். உதாரணத்திற்கு தமிழ், தமிழர், என் நாடு, நாட்டுப்பற்று என்று பேசுவதை விட மனிதம் பற்றி எண்ணுவதே சிறந்தது.
          — இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

          Reply
        • Selva

          ஹன்கோவெர் திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

          Reply
          • Vivek

            ஹ ஹா ….
            இங்கே பிரச்னை என்னன்னா, மீடியாவைப் பார்த்து மக்கள் வாழ்க்கை முறை மாறுதா, இல்ல மக்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து மீடியா மாறுதா? -ன்றது..

            உங்களுக்கு இருக்கும் பகுத்தறிவு படம் பார்க்கும் முக்கால்வாசி ஜனங்களுக்கு இல்ல, அதுதான் என்னோட வருத்தமே.

    • Selva

      Yes. Here people take everything close to heart. Not sure why and how this this was made. Must get educated in all. I mean one has to realize on their own.

      PS: Sorry to post in english. Doesn’t have settings to type in tamizh :).

      Reply

Join the conversation