Fiddler on the Roof (1971) – ஒரு தந்தையின் கதை
மிகச்சில சமயங்களில், ஹாலிவுட், உலக சினிமாக்களின் தரத்தை எட்டுவதுண்டு. அத்தகைய ஒரு படமே இந்த ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’. இது, ம்யூஸிகல் என்ற வகையைச் சேர்ந்தது. அஃதாவது, நம்ம ஊரில் வருகிறதே – படத்தின் இடையே பாடல்கள் – அந்த வகையில், ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களே ம்யூஸிகல்கள். மட்டுமல்லாது, மிக வெற்றிகரமாக ஓடிய ஒரு ப்ராட்வே நாடகமும் ஆகும் இது. சராசரியான மனித வாழ்வில் நடக்கும் மென்சோகமும் வருத்தமும் கலந்த நிகழ்வுகளை, அங்கத பாணியில் விமர்சிக்கும் ஒரு படம்.
யூதர்கள் நிரம்பிய ‘அனடெவ்கா’ என்ற ருஷ்ய கிராமத்தில், ஸார் மன்னர்களின் காலத்தில் – 1905ல் – நிகழும் ஒரு கதை இது. டெவ்யே, ஒரு ஏழை. பால் வியாபாரம் செய்து பிழைப்பை நடத்தி வருகிறான். அவன் வாழும் கிராமமான அனடெவ்கா, பலவகையான மாந்தர்கள் நிரம்பிய ஒரு ஊர். கசாப்புக் கடைக்காரர் லேசர் வுல்ஃப், அந்த ஊரின் ராபை (தலைமைக் குரு), அவரது மகன், ஊரின் டெய்லர், திருமண புரோக்கர் யெண்டே என்ற கிழவி… இப்படிப் பல எளிமையான மனிதர்கள் நிரம்பிய ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் இரண்டு பிரிவுகள். சிறுபான்மை யூதர்கள் ஒருபுறம்; பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் மறுபுறம். ஆனால், இதுநாள்வரையில், இரு சாராருக்கும் பிரச்னைகள் வந்ததில்லை.
டெவ்யே, இவைகளைச் சொல்லும் காட்சியில் படம் தொடங்குகிறது. பரம ஏழையான டெவ்யேவுக்கு, ஐந்து பெண்கள். அதில் மூன்று பெண்கள், திருமண வயதை ஒட்டி நிற்பவர்கள். அந்த ஊரில் காலங்காலமாக வந்த நம்பிக்கைகளை வைத்தே அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். டெவ்யேவின் மூத்த பெண் ட்ஸெய்டல், அந்த ஊரின் டெய்லரான மோட்டலை விரும்புகிறாள். ஆனால், காதல் தடுக்கப்பட்டிருக்கும் அந்தச் சமூகத்தில், ஏழைகளான இவர்களது காதலை வெளியே சொல்லப் பயப்பட்டுக்கொண்டு, இருவரும் அமைதி காக்கின்றனர். அந்த ஊரின் மேட்ச் மேக்கர் – யெண்டே என்ற கிழவி கொண்டு வரும் வரன்களை நம்பிக்கொண்டு, டெவ்யேவும் அவனது மனைவியும் காலம் கழிக்கின்றனர். திருமணம் செய்துவைக்கத் தங்களிடம் பணம் இல்லாததே காரணம்.
அவள் கொண்டுவரும் வரன்கள், மிக வயதான ஆட்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், அந்த ஊரில் பெர்சிக் என்ற புரட்சிக்கார இளைஞன், டெவ்யேவுக்கு அறிமுகமாகிறான். காலம்காலமாக இவர்கள் வழிபடும் நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கிறது அவனது பேச்சு. அவனைத் தனது வீட்டில் இருப்பவர்களிடம் அறிமுகப்படுத்துகிறான் டெவ்யே.
கசாப்பு வியாபாரியான லேசர் வுல்ஃப், டெவ்யேவின் மூத்த மகளான ட்ஸெய்டலை விரும்புகிறான். அவனுக்கு, டெவ்யேவின் வயது. மேட்ச் மேக்கர் யெண்டேவிடம் இதைச் சொல்லி, அவளைத் தூது அனுப்புகிறான். அவனைச் சென்று சந்திக்கும் டெவ்யே, அவனது பணத்தினால் கவரப்பட்டு, சம்மதித்து விடுகிறான். ஆனால், அவனது மகளோ, டெய்லர் மோட்டலைக் காதலிக்கும் விஷயத்தைச் சொல்லி அழ, மன உளைச்சலுக்கு ஆளாகும் டெவ்யே, கடைசியில் சம்மதித்து விடுகிறான். மோட்டலுக்கும் ட்ஸெய்டலுக்கும் திருமணம் நடக்கிறது.
அந்தத் திருமணத்தில், கிறிஸ்தவர்களான போலீஸ்காரர்கள், யூதர்களை அடித்து, அவர்களது வீடுகளை நாசப்படுத்தி விடுகின்றனர். ருஷ்யா முழுதுமே யூதர்கள் இப்படித்தான் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதனை, ஒரு கான்ஸ்டபிள் மூலமாக அறிகிறோம்.
இஷற்கிடையில், டெவ்யேவின் இரண்டாவது மகளான ஹோடல், மார்க்ஸிஸ்டான பெர்சிக்கைக் காதலிக்கத் துவங்குகிறாள். இந்தத் திருமணத்தையும் எதிர்க்கும் டெவ்யே, கடைசியில் சம்மதிக்கிறான். ஆனால், மாஸ்கோவில் ஸார்களின் ஆட்சிக்கு எதிராக நடக்கும் புரட்சியில் கலந்துகொள்ளச் செல்லும் பெர்சிக்கைப் போலீஸ் கைது செய்து, சைபீரியாவின் சிறைக்கு அனுப்புகிறது. அவனைப் பிரிய மனமில்லாமல், தானும் சைபீரியாவுக்குச் செல்கிறாள் ஹோடல்.
முதல் மகள் ட்ஸெய்டலுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அவள் கணவனான டெய்லரும், ஒரு புதிய தையல் மிஷின் வாங்குகிறான். அவர்களது வாழ்வு, மெல்ல மெல்ல குதூகலமாக மாறுகிறது.
இந்த நேரத்தில், டெவ்யேவின் மூன்றாவது பெண்ணான சாவா, அந்த ஊரின் பெரும்பான்மை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். தங்களுடைய இனத்தின் கொள்கையை மீறி வேறு இனத்தைச் சேர்ந்த இளைஞனைக் காதலித்ததற்காக, மகளின் மீது கடுமையாகக் கோபித்துக் கொள்கிறான் டெவ்யே. மறுநாள் காலை, சாவா அந்த இளைஞனுடன் ஓடிவிடுகிறாள். மகளுடனான அத்தனை உறவுகளையும் துண்டித்துக்கொள்கிறான் டெவ்யே.
அப்பொழுதுதான் ஒரு தகவல் இடி போல அந்த யூதர்களைத் தாக்குகிறது. அத்தனை யூதர்களும் மூன்றே நாட்களில் அந்த கிராமத்தைக் காலி செய்துவிடவேண்டும் என்ற செய்தியே அது. ருஷ்யா முழுவதும் இதேபோல் யூதர்களை வெளியேற்றும் கொடுமை அரங்கேறுகிறது. தங்களின் பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு, பல காலம் வாழ்ந்த மண்ணை விட்டு, அந்த அப்பாவியான யூதர்கள், வெறித்த பார்வையுடன் வெளியேறுகின்றனர்.
குடும்பத்துடன் தள்ளாடி நடக்கும் டெவ்யேவை நாம் பார்த்துக் கண்கலங்குகையில், படம் முடிகிறது.
இப்படம் முழுவதுமே மிகக் குதூகலமான முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், இடையே வரும் மென்சோகம் நிரம்பிய காட்சிகள், நம்மை அழ வைக்கின்றன. தங்களது வாழ்வை அமைதியாக வாழ்ந்துவரும் ஒரு இனத்தை, மற்றொரு இனம் தங்களது இடத்திலிருந்து வெளியேற்றும் காட்சிகள், நிகழ்கால வரலாற்றை நமக்கு நினைவுபடுத்துகின்றன.
டெவ்யேவாக நடித்துள்ள டோபோல், இங்கிலாந்தின் அரங்குகளில் இந்த பிராட்வேயில் டெவ்யேவாகவே நடித்த பெருமையுடையவர். பழமையில் நிலைத்து நின்றுகொண்டு, புதுமையை வரவேற்கத் தயங்கும் ஒரு முதிய தந்தையின் வேடத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். எப்பொழுது பார்த்தாலும் அண்ணாந்து பார்த்துக்கொண்டு, கடவுளிடம் முறையிடும் ஒரு நபர் டெவ்யே. மட்டுமல்லாது, தனது குடும்பத்தின் மீது பாசம் உள்ளவன். ஆனால், அதேசமயத்தில், தனது மத நம்பிக்கைகளையையும் உயிரென மதிப்பவன். இந்த முரண்பாட்டை இப்படத்தில் மிக அழகாகக் காட்டியுள்ளார் டோபோல்.
இப்படத்தில், நமது நெஞ்சை நெகிழ்விக்கும் பல காட்சிகள் உள்ளன. படத்தின் இறுதியில், ஊரைக் காலி செய்ய வேண்டி, தங்களது எஞ்சிய உடமைகளை எடுத்துக்கொண்டு, அடுத்து எங்கு செல்வதென்றே தெரியாமல், வெறித்த பார்வையுடன் நடைபிணங்களைப் போல் அந்த மக்கள் செல்வது, எனது நெஞ்சைத் தொட்டது. என்னால் நிகழ்காலத்தில் நமது கண் முன் நடக்கும் அராஜகத்தை, இக்காட்சியுடன் தொடர்பு படுத்திப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. இருந்த வீட்டை இழந்து, போவதற்கு ஓரிடம் இல்லாமல் நிற்கும் கொடுமை, யாருக்குமே வரக்கூடாத ஒரு துயரம்.
அதேபோல், தனது இரண்டாம் மகளைச் சைபீரியாவுக்குச் செல்ல ரயிலேற்றிவிட வரும் டெவ்யேவின் மனதில் எழும்பும் எண்ணங்களை, அவனது முகம் அருமையாகச் சொல்கிறது. இந்தக் கணத்திற்கு அப்பால், தனது மகளை இனி என்று அவன் காண்பானோ என்ற துயரம், நமது நெஞ்சினிலும் பரவுகிறது.
இன்னமும் இதைப்போல் மிக அருமையான காட்சிகள் படம் நெடுகிலும் உண்டு. ஆனால், இவற்றைப் படித்து, படம் ஒரு சோக டிராமா என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இப்படம், மிகச் சந்தோஷமான முறையில் எடுக்கப்பட்டிருப்பதாகும்.
படத்தில் வரும் பாடல்களும் அருமை. மிக அழகான, பொருள் பதிந்த வசனங்கள் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
மொத்தத்தில், என்னால் மறக்க இயலாத படங்களில் ஒன்றாக மாறிவிட்டது இந்த ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’. எவ்வளவு முறைகள் பார்த்தாலும், அவ்வளவு முறைகளும் எனது நெஞ்சை நெகிழ்விக்கப்போகும் ஒரு படம் இது. இத்தனை நாட்கள், இப்படத்தின் பெயரை மட்டுமே நினைத்து, ஏதோ ஒரு வயலின் வாசிப்பாளனின் சோகக்கதை என்று நினைத்து இப்படத்தைப் பார்க்காமல் இருந்தது எத்தனை தவறு என்பதைப் படத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்.
Fiddler on the Roof படத்தின் ட்ரெய்லர் இங்கே.
எப்படிங்க உங்களுக்கு இந்த படம்லாக் கிடைக்குது.
me the second.
Thanks to Dr 7 (Who introduced many such classics to me), i’ve also got this film.
on another very, very short tour. Will comment on morning in a detailed manner.
@ இராமசாமி கண்ணன் – அது தொழில் ரகசியம் . . கேக்கக்கூடாது 🙂
@ விஸ்வா – ஆஹா . . மூணு நிமிஷத்துல உங்கள ராமசாமி முந்திகினாரு . . ஆனா நீங்க இன்னமும் டூர்ல தானே கீறீங்க . . முடிச்சிகினு வாங்க . .
டாக்டர் செவன் பத்தி பாராட்டா? நம்ப முடியவில்லை . . வில்லை . .வில்லை . . 🙂
நண்பரே,
சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு அற்புதமான படைப்பை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள்.
இயல்பான எழுத்து நடையில் மனதில் நழுவிச் செல்கிறது உங்கள் பதிவு.
ஆனால் வேடிக்கையைப் பாருங்கள்.. வெளியேற்றப்பட்ட இதே இனம்தான் இன்று சுவரையும் கட்டி, அராஜகத்தனமாக இன்னொரு இனத்தை தன் கீழ் கொண்டு வர முயல்கிறது.
சிறப்பான பதிவு நண்பரே.
This comment has been removed by the author.
இப்படியே ரிவர்ஸ்ல போனீங்கன்னா… ரைட்டு திரும்பி.. லெஃப்டுல.. நிறைய ஊமைப்படமெல்லாம் இருக்கும். அதுக்கும் எழுதிடுங்க!! 🙂 🙂
//on another very, very short tour. Will comment on morning in a detailed manner.//
அண்ணாத்த… ரோட்டு டீ குடிக்க போறதையெல்லாம். டூர்ன்னு.. சொல்லிகினு..!! 🙂
விமர்சனம் அருமை .. கலக்குங்க ..
\இப்படியே ரிவர்ஸ்ல போனீங்கன்னா… ரைட்டு திரும்பி.. லெஃப்டுல.. நிறைய ஊமைப்படமெல்லாம் இருக்கும். அதுக்கும் எழுதிடுங்க//
ஹாலி ஹி ஹி ஹி
Fiddler on the roof…..
ஒருவேளை கடவுளைக் குறிக்கிறதோ?
ஒரு நல்ல படத்தை அறிமுகம் செய்ததற்கு மிக நன்றி.
அப்புறம்,கன்னுக்குட்டி return ஆய்டுச்சு போல? 😉
நண்பரே கலையின் உன்மத்தம் இந்த படம்னு சொல்லலாமா? 🙂 எங்க மனசிலும் இப்படம் ஸ்டூல் போட்டு உக்காரும்னு நம்பிக்கை இருக்கு.நன்றி தல.
@ காதலரே – மிகவும் உண்மை. வெளியேற்றப்பட்ட அந்த இனம் இப்பொழுது செய்யும் கொடுமைகளுக்கு அளவேயில்லை. என்ன செய்வது? இதுதான் வாழ்வின் முரண்பாடு போலும் ! உங்களது கருத்துக்கு நன்றி நண்பரே . .
@ பாலா – ஆஹா . . . நைசா ஓட்டிப்புட்டீங்க . . 🙂 ஊமைப்படங்களையும் பத்தி சீக்கிரம் எழுதலான்னு தான் இருக்குறேன் . . அதான் சொல்லிட்டீங்கல்ல. . ஆரம்பிச்சிருவோம் . . 🙂
@ Romeo – நன்றி பாஸ் . .
@ Illuminati – இந்தப் படத்துலயே அந்த அலெகோரிய பத்தி சொல்றாங்க . . கூரை மேல பேலன்ஸ் செஞ்சிக்கினு, அதே சமயம் கரெக்டாவும் வாசிக்கிற ஒரு ஃபிட்லர் மாதிரி, ஏழ்மைலயும் வாழ்வை வாழ முயலும் சில மனிதர்களைத்தான் இது குறிக்குதுன்னு . .
அப்பறம் . . Yea. . back to pavilion !! 🙂
@ மயிலு – கலையின் உன்மத்தம்னு தாராளமா சொல்லலாம் .. . பார்க்க முயற்சி பண்ணுங்க. . உங்களுக்குக் கண்டிப்பாப் பிடிக்கும் . . நன்றி . . .
//அண்ணாத்த… ரோட்டு டீ குடிக்க போறதையெல்லாம். டூர்ன்னு.. சொல்லிகினு..!! ://
ஒரு டீ குடிக்க யாராவது பெங்களூரு போவாங்களா? என்ன கொடுமை சார் இது? டுடே ஐயம் பேக்.
தலைவா… கொஞ்சம் டமால் டுமீல் படங்கள்….?
நான் சொல்ல நினச்சத ராமசாமி கண்ணன் முதல் ஆளா சொல்லிட்டாரு..அந்த தொழில் ரகசியம் என்னன்னு…ஹி ஹி ஒரு GK தான் பாஸ்…
நேத்து தான் நெனச்சேன் என்னடா நம்மாளு எதுவுமே எழுதலையேன்னு…நெறைய எழுதுங்க பாஸ், உலக அறிவ வளத்துக்குவோம்..
// ஏதோ ஒரு வயலின் வாசிப்பாளனின் சோகக்கதை என்று நினைத்து இப்படத்தைப் பார்க்காமல் இருந்தது எத்தனை தவறு என்பதைப் படத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டேன் //
அடடா.. இதேதான் எனக்கும்.. நல்ல விமர்சனம்..
@ விஸ்வா – அடுத்த தபா பெங்களூரு வரும்போது, ஒரு கால் பண்ணுங்கோ . . . நம்பரு மெயிலு பண்ணுரேன் . . 🙂
@ லக்கி – இந்தப் பதிவு எழுதும்போதே, நீங்க கேப்பிங்களேன்னு நினைச்சிகினே தான் எழுதினேன் . . 🙂
அடுத்து டமால் டுமீல் தான் . . ஷ்யூர் . .
@ பருப்பு – கண்டிப்பா எழுதலாம் பாஸ் . . நன்றி . . உங்க வலைப்பூ பக்கமே வரமுடியல. . தப்பா எடுத்துக்காதீங்க . . சீக்கிரமே வந்து கமெண்டு போடுறேன் . .
@ ஜெய் – ஐ !! சேம் பின்ச் !! 🙂
நமக்குள்ள என்ன புடலங்கா formality ….நம்ம கடை எங்கயும் போகாது..நீங்க பொறுமையா வாங்க..
வர்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்த சொல்லிட்டீங்கன்னா, பேனர், ப்ளெக்ஸ் தார தப்பட்டை, எல்லாம் ரெடி பண்ணிரலாம்…
Rajesh enga irruthu intha padam ellam aha pudkira . mudiyala . naan neriya padam parakala oru rendu padam parthen un blog la irruthu rendum super .. neriya parga try pannuren 🙂
இன்னா தேளு, உன்ன மாதிரியே இங்கிலீஷ் படத்தை கிழிச்சு போடுவாப்புல பேரு கூட ஹாலிவுட் பாலா னு. ஆஅ…ங் பின்னூட்டத்துல கூட இருக்கார் பாரேன் பா.
எதுனா எடுத்து சொல்லி இன்னும் நாலு படம் விமர்சனம் எயித சொல்லுபா. உன்ன எம்மாந்தூரம் பேசி கன்வின்ஸ் பண்ணி தமிழ்ளலாம் எயித வெச்சார். நெனச்சி பாத்தியா நீ.
தல பாலா……… பாத்து செய், உன்ன தான் நம்பினுக்கிறேன்…… நல்லதா நாலு 18+ படம் சொல்லு.
party. No matter how you serve these moist cupcake treats, they are sure to be a hit. Source Java Cupcake Share : Pin ItTweet Posted by Miss Cupcake in Animal Cupcakes, Cupcake Toppers, Fruit Cupcakes
//அடுத்த தபா பெங்களூரு வரும்போது, ஒரு கால் பண்ணுங்கோ . . . நம்பரு மெயிலு பண்ணுரேன்//
அடச்சே, நினைவிலேயே இல்லாத விஷயம் – கருந்தேளின் இருப்பிடம். மன்னிக்கவும்.
திடீரென்று கிளம்பியதால் என்னுடைய ஆருயிர் நண்பன் மோசடி மோகனைக் கூட இந்த முறை பெங்களூருவில் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக மீட்டலாம்.
படத்தை முதன்முதலாக ஸ்டார் மூவீஸ்-லதான் பார்த்தேன்! படத்தின் டைட்டில் போடும் போது கூரையின் மேல் நின்று ஃபிடில் வாசிக்கும் அந்த காட்சியமைப்பும், இசையும் என்னைக் கட்டிப் போட்டுவிட்டது! அதற்கு பிறகு படம் முடிந்த பின்புதான் சேனலை மாற்றினேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
@ பருப்பு – ரைட்டு நண்பா . . பின்னிரலாம் உடுங்க . . அப்புடியே ரெண்டு குஜிலிங்களயும் ஆட உட்டுரலாமா ? 🙂
@ பூபா – அந்தக் கேள்விய மட்டும் கேக்கப்டாதுன்ன ப்டாதுதான் . . . 🙂 ரெண்டு படம் பார்த்தது குறித்து சந்தோஷம் . . அடிக்கடி வந்து, கமெண்டு போடுக . . எப்ப கல்லாணம் ? 🙂
@ லகுடப்பாண்டி – அக்காங் மாமே . . சொன்னாங்காட்டியும், னமக்கு ஒரு பிராப்பளம்னா, நாம தல கிட்ட போலாம் . . ஆனா தலைக்கே ஒரு பிராப்பளம்னா . . . ஆஆஆஆஆ (நம்ம ஜிவாஜி பாணில படி மாமே) . . இதோ தல வர்து . . 🙂
@ விஸ்வா – மோசடி மோகன் – பெயர்க்காரணம் யாது? ஏதாவது பக்திப்பட சீடீய மாத்தி குடுத்து ஏமாத்துனதுனாலயா? ஆனா படா சோக்காக்கீது பேரு . . 🙂 நெக்ஸ்ட்டு டைமு மீட் பண்ணலாம் . . இதோ நம்பரு மெயில்ல வருது . .
@ பயங்கரவாதி – சூப்பரு நைனா . . .அப்பல்லாம் நானு இது ஏதோ சோகப்படம்னு சேனல மாத்திபுட்டேன் . . 🙁 அது தப்புன்னு இப்பதான் தெர்து . . .
நண்பா கண்டிப்பா பாத்துடுறேன்
m பார்த்தேன்,30களில் மாபெரும் முயற்சி,முடிஞ்சா pawnbroker பாருங்க சிட்னி லூமெட் என்னும் இயக்குனரும் rod steiger என்னும் நடிகரும் கலக்கியுள்ளனர்.அப்புறம் sophie scholl என்னும் ஜெர்மானிய படமும் பாருங்கள்,செம படம்
நண்பா – சிட்னி லூமெட் பத்தி கேள்விப்பட்டுருக்கேன் . . ஆனா அவரு படங்கள் பார்த்ததில்லை . . நீங்க சொன்ன ரெண்டு படங்களும் நோட் பண்ணியாச்சி . . . கண்டிப்ப பாக்குறேன் . . நன்றி நண்பா . .
நமஸ்காரம் சார்.இதை சொல்லிடறேன்.உலக வலைப்பதிவு வரலாற்றில் முதல் முறையாக,எந்த வலைப்பதிவனும் 13 ப்ளாக் வச்சுக்கிட்டது இல்லை.இவை என் பிளாக்குகள்.அவசியம் வரவும்.ஹிந்தியிலும் தொடங்க போறேன்.வேர்ட்ப்ரஸ் லைவ்ஜ்ர்னலிலும் தொடங்க போறேன்.அவசியம் ஆதரவளிக்கவும்.
TAMIL VASAM ,
hardybodywindymi… ,
இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் ,
நிர்வாண உண்மைகள் ,
PAURUSHAM
INDIAN POLITICAL CLOSEUP
The Blog
వాణీ పుత్రుని వాణి
Woman voice
kamasuthra
The Tiger
kavithai365
C.K.THE TIGER
Focus on Tomorrows
Two Legends
அனுபவ ஜோதிடம்
//சிட்னி லூமெட் பத்தி கேள்விப்பட்டுருக்கேன் . . ஆனா அவரு படங்கள் பார்த்ததில்லை//
சிட்னி லூமெட் படங்களில் பார்த்து ரசிக்க எத்தனையோ படங்கள் உள்ளன! இவற்றில் நான் பார்த்து மிகவும் ரசித்தவை!
12 ANGRY MEN – ஸிட்னி லூமெட்டின் முதல் படம்! அட்டகாசமான COURTROOM DRAMA! அவரது சிறந்த படமும் கூட! ஹென்றி ஃபோண்டாவின் அற்புத நடிப்புடன்! இனையத்திலே பலரும் இதை விமர்சித்துள்ளனர்!
SERPICO – அல் பசினோவுடன் இவர் இனைந்து பணியாற்றிய படம்! நிஜவாழ்வில் வாழ்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை! அல் பசினோவின் தீவிர ரசிகனாக என்னை மாற்றியது காட்ஃபாதர் அல்ல, இந்தப் படம் தான்!
MURDER ON THE ORIENT EXPRESS – அகதா க்றிஸ்டியின் நாவலின் மிகச்சிறந்த படமாக்கம்!
DOG DAY AFTERNOON – மீண்டும் அல் பசினோ! இந்த படத்தை SWORDFISH படத்திலே ஓபெனிங் காட்சியிலே ஜான் ட்ரவோல்டா ரெஃபெர் பண்ணுவாரு! அல் பசினோ வர்ற காட்சிகளில் AS USUAL அனல் பறக்கும்!
THE VERDICT – பால் நியூமென் நடிப்பில் வெளிவந்த மற்றொரு COURTROOM DRAMA!
இன்னும் நான் PAWNBROKER படம் பாக்கல! DVD கிடைக்கல! அதே போல இவரின் NETWORK படத்தையும் பாகக்னும்னு ரொம்ப நாளா DVDஐ வேட்டையாடிகிட்டிருக்கேன்! டவுன்லோடு பண்ணியாவது பாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன்! ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
@ சித்தூர் முருகேசன் – ரைட்டுண்ணா . . பின்னிப் பெடலெடுக்குறீங்க போல. . அவசியம் நம்ம விசிட் உண்டு . . 🙂
@ பயங்கரவாதி – மர்டர் ஆன் த ஒரியண்ட் எக்ஸ்ப்ரஸ் படம், நம்ம ஏ அக்ஸ் என்ல அடிக்கடி போடுவானுங்க . . ஆனா பார்த்ததில்ல. . இப்ப சொல்லிட்டீங்கல்ல. . இனி அவசியம் பார்த்துடரேன் . .ஹெர்க்யூல் பாய்ரோ(ட்) கதைகள் படிச்சதேயில்ல. .. பட் எதுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கணுமுல்ல. . 🙂
டாக் டே ஆஃப்டர்னூன் – என்னோட கையில இருந்த டி வி டி. ஆனா எடுக்கலன்னு தூக்கி எறிஞ்சிட்டேன் . . 🙁 எப்படியும் அதையும் பார்க்கணும் . .
உங்க விபரமான பின்னூடத்துக்கு நன்றி . . இந்தப் படங்கள் நோட் பண்ணியாச்சி . .
@ பயங்கரவாதி,&ராஜேஷ்
விபரமான பின்னூட்டத்துக்கு நன்றி,டாக் டே ஆஃப்டர்னூன் பார்க்க ஆரம்பித்துள்ளேன்,சிட்னிலூமெட் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் இயக்கும் படி கேட்கப்பட்டாராம்,ஏற்கனவே பான்ப்ரோக்கரில் கேம்ப் பற்றி கவர் செய்தமையால் அந்த படம் செய்யவில்லையாம்,இந்தப் படங்கள் நோட் பண்ணியாச்சி . .
@ பயங்கரவாதி,&ராஜேஷ்
விபரமான பின்னூட்டத்துக்கு நன்றி,டாக் டே ஆஃப்டர்னூன் பார்க்க ஆரம்பித்துள்ளேன்,சிட்னிலூமெட் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் இயக்கும் படி கேட்கப்பட்டாராம்,ஏற்கனவே பான்ப்ரோக்கரில் கேம்ப் பற்றி கவர் செய்தமையால் அந்த படம் செய்யவில்லையாம்,இந்தப் படங்கள் நோட் பண்ணியாச்சி . .
@ பயங்கரவாதி – //வேட்டையாடிகிட்டிருக்கேன்! //
//ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்!//
ஆஹா . . . உங்கள ஏதோ ஒரு ‘கெட்ட’ காத்து அடிச்சிருச்சி . . இதுக்குத்தான் சுறா படத்துக்குப் போகாதீங்க போகாதீங்கன்னு அடிச்சிகிட்டோம் . . கேட்டீங்களா . . இப்ப பன்ச்சு பன்ச்சா பேச ஆரம்பிசிட்டீங்க . . என்ன கொடும இது !!
@ கார்த்திகேயன் – ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட் ந்யூஸ் புதுசு . . நன்றி நண்பா . .
கருந்தேள்,
நான் கூட இந்த படத்தை ஏதோ சொகப்படம்னுதான் இன்னமும் பாக்காம இருக்கேன்., உங்க பதிவு கண்ணா தொரந்துடுச்சு. நன்றி.
தமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா – സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?
சிட்னிலூமெட், ஹெர்க்யூல் பாய், ஹென்றி ஃபோண்டா
====
என்ன எழவு பேரு இதெல்லாம்??? உங்களுக்கெல்லாம்.. SP. ராஜ்குமார் யாருன்னு தெரியுமா? அவுரு எப்பேர்பட்ட டைரக்டருன்னு தெரியுமா?
குமுதம் அரசு அவர்களுக்கு சமீபத்தில் 1976-ல் நான் இட்ட கேள்வி இது:
“Fiddler on the roof படம் பார்த்து விட்டீர்களா? அதில் கதாநாயகனாக வரும் எனது அபிமான இஸ்ரவேல யூத நடிகர் டோப்போலின் நடிப்பு எப்படி?
அதற்கு அரசு அவர்களின் பதில் (நினைவிலிருந்து தருகிறேன், வார்த்தைகள் சற்று முன்னே பின்னே இருக்கலாம்). “இஸ்ரவேலர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் நாடின்றி அலைந்ததை இக்கதையின் மூலம் இயக்குனர் கூற முயன்றுள்ளார். டோப்போலின் நடிப்பு அபாரம்”.
சில பாடல்களுக்கான சுட்டி:
If I were a rich man
http://www.youtube.com/watch?v=RBHZFYpQ6nc
Tradition (opening song).
http://www.youtube.com/watch?v=gRdfX7ut8gw&feature=related
அன்புடன்,
டோண்டு ராகவன்
Fiddler on the Roof படத்தின் ட்ரெய்லர் மட்டும்தானா படம் கிடையாத
@தல ஹாலிபாலி,
//என்ன எழவு பேரு இதெல்லாம்??? உங்களுக்கெல்லாம்.. SP. ராஜ்குமார் யாருன்னு தெரியுமா? அவுரு எப்பேர்பட்ட டைரக்டருன்னு தெரியுமா?//
தல s.p.ராஜ்குமார்னா யாரு?தேவயானி புர்ஷனா?தல எனக்கு லலால்லா லல்லலால்ல்லா bgm போடும் s.a.ராஜ்குமார் தெரியும்.
@ வெடிகுண்டு – இதோ பார்த்தாச்சுண்ணா . . பின்றீங்க போங்க !!
@ பாலா – அய்யய்யோ !!! அது வருது (ராஜ்குமார்) . . எல்லாரும் ஓடுங்க !!!!!!!!
@ டோண்டு ராகவன் – நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில், ட்ரெடிஷன் பாடல் எனது மனதைக் கவர்ந்தது . . மிக அருமையான முறையில், படத்தையும் துவக்கி வைக்கிறது அப்பாடல் !! அதே போல், இஃப் ஐ வேர் எ ரிச் மேன் பாடலையும் மிகவும் ரசித்தேன் . . மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் !!! நன்றி
@ Soundar – படம் http://www.isohunt.com ல் தாராளமாகக் கிடைக்கிறது . . அதனைப் பார்த்து நீங்களும் இன்புறுங்கள் . . நன்றி
@ கார்த்திகேயன் – அடப்பாவி. . அண்டவெளி இயக்குநர் எஸ் பி ராஜ்குமார தெரியாதா? ஒரு காலத்துல இந்த ரெண்டு ராஜ்குமாருங்களும் சேர்ந்து நம்ம கண்னையும் காதையும் கண்டபடி படம் எடுத்து பதம் பார்த்துகிட்டு இருந்தாங்க . . அப்பறமா ஹைபர்னேட் அயி, தலைவர் இப்ப வீறுகொண்டு களம் எறங்கிட்டாரு . . இனி என்னவெல்லாம் ஆகப்போகுதோ . . பூமாதேவி வாயப்பொளக்கபொறா . . அல்லாரும் ஓடுங்க 🙂