From Dusk till Dawn (1996) – English
இதோ . . மீ த பேக் ! எனது ‘கம்பேக்’ விமர்சனம், ஒரு ஜாலியான, சற்றே தற்குறித்தனமான ஒரு படத்தைப் பற்றி இருக்கப்போகிறது. படத்தின் இயக்குநர், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த க்ரியேட்டிவ் திறன் படைத்த, எனது மனதிற்கு மிகவும் பிடித்தமான, ராபர்ட் ரோட்ரிகஸ். ’ப்ராடிஜி’ எனப்படும் அசாதாரணத் திறமை வாய்க்கப்பெற்றவர். மிகச்சிறு வயதிலேயே காமரா பிடித்து, குறும்படங்களை இயக்க ஆரம்பித்தவர். வெறும் ஏழாயிரம் டாலர்களை வைத்து அவர் இயக்கிய ‘எல் மாரியாச்சி’ என்ற அவரது முதல் படம், சக்கைப்போடு போட்டதில், பயங்கரப் பிரபலமாகி, அதன்பின் ஹாலிவுட்டின் உச்சத்தை வெகு விரைவில் எட்டியவர். ஹாலிவுட்டின் ஆல்ரௌண்டர்களில் ஒருவர். இயக்கம், எடிட்டிங், இசை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தையும் சகஜமாகத் தனது படங்களில் கையாள்பவர். (இவரது டைட்டில்களில், எடிட்டிங் என்ற வார்த்தை இருக்காது; ‘Chopped by’ என்றே இருக்கும்) .
இவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும், ஒரு ஜாலி இருக்கும். படு ஜாலியாக தியேட்டருக்கு வந்து, எஞ்ஜாய் செய்துவிட்டுப் போகும்படி படங்கள் எடுப்பதில் தலைவர் கில்லாடி. ‘தெஸ்பராதோ’ ஒன்றே போதும். ‘சின்சிட்டி’, ‘ஃபோர் ரூம்ஸ்’ (நான்கு இயக்குநர்களில் ஒருவர்), ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ’ , ‘ப்ளானட் டெர்ரர்’ (அட்டகாசமான ஆக்ஷன் படம்.. அப்படியே ஒரு தமிழ் காமிக்ஸ் படிப்பதைப் போன்ற உணர்வினைத் தரும்)போன்ற அதிரடித் திரைப்படங்கள் இவரது கைவரிசையே. எல்லாவற்றுக்கும் மேல், க்வெண்டின் டாரண்டீனோவும் இவரும், சகோதரர்கள் என்றே அழைக்கப்படும்படியான நட்போடு இருப்பவர்கள். க்வெண்டினின் அனைத்துப் படங்களிலும் ரோட்ரிகஸின் பங்களிப்பு இருக்கும் (கில் பில்லுக்கு இசையமைத்தவர்களில் ரோட்ரிகஸும் ஒருவர்). அதே போல், ரோட்ரிகஸின் படங்களிலும் க்வெண்டினின் பங்களிப்பு இருக்கும்.
இப்படிப்பட்ட ராபர்ட் ரோட்ரிகஸ், லந்துக்காகவே எடுத்த ஒரு படம் தான் ‘ஃப்ரம் டஸ்க் டில் டான்’. இப்படத்துக்குத் திரைக்கதை, வழக்கப்படி நமது க்வெண்டின். அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருப்பார்.
படம், ஒரு பழைய கடையில் தொடங்குகிறது. வரண்ட ஒரு பகுதி. ’அரிஸோனாவில் ஒரு மதிய நேரம்’ என்று நமது டெக்ஸ் வில்லர் கதைகள் தொடங்குமே, அப்படி ஒரு மதிய நேரம். கடையின் சிப்பந்தியைத் துப்பாக்கி முனையில் வைத்து, கடையைக் கொள்ளையடிக்கின்றனர் இருவர். சிறையில் இருந்து தப்பிய சைக்கோ சகோதரர்களான சேத் (ஜார்ஜ் க்ளூனி… யெஸ்) மற்றும் கெக்கோ (க்வெண்டினே தான்). கெக்கோ ஒரு அசல் சைக்கோ. அனைவருமே தனக்கு எதிராகவே செயல்படுகிறார்கள் என்று எப்பொழுதும் நம்பிக்கொண்டிருப்பவன். கண்ணில் கிடைத்த பெண்களைத் தாறுமாறாக ரேப் செய்து கொல்பவன்.
கடையைக் கொள்ளையடித்துவிட்டு, சிப்பந்தியையும் அங்கு வரும் ஒரு போலீஸ் காரரையும் (கில் பில் படத்தில், அந்த சர்ச்சுக்கு வரும் ஷெரீப்பை நினைவிருக்கிறதா.. அவரே தான்) கொன்றுவிட்டுத் தப்பிக்கின்றனர். அத்தனை போலீஸும் இவர்கள் பின்னே வர, கொஞ்சமும் பதற்றப்படாமல், மெக்ஸிகோ சென்றுவிட்டால் தப்பித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு, அவ்வழியே ஒரு ட்ரிப் மேற்கொள்ளும் ஒரு கேரவேனை வழிமறித்து, அதனை ஓட்டிவரும் ஜேக்கப்பின் (ஹார்வி கீட்டல்) வளர்ப்பு மகனையும், மகள் கேட்டையும் துப்பாக்கி முனையில் வைத்து, மெக்ஸிகோ செல்ல வைக்கின்றனர். கேட்டின் மீது கெக்கோவுக்கு ஒரு கண். அவளை எப்படியாவது ரேப் செய்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறான்.
செல்லும் வழியில், ‘டிட்டி ட்விஸ்டர்’ என்று ஒரு மதுபானக் கடை. அங்குதான் தனது மெக்ஸிகோ சகாவை சேத் சந்திக்க வேண்டும்.
அனைவரும் உள்ளே நுழைகின்றனர். எங்கு பார்த்தாலும் அழகிய பெண்களின் ஆடையில்லா நடனம். தண்ணீராக ஓடும் விஸ்கி.. அங்கு அமர்ந்து, சகா வரும்வரை மதுபானம் அருந்தலாம் என்று சேத் முடிவெடுக்கிறான்.
அப்பொழுது ஆரம்பிக்கிறது ஒரு நடனம். பேரழகியான ‘ஸாண்ட்டானிகோ பேண்டமோனியம்’ (ஸல்மா ஹாயெக்), தன்னைச் சுற்றி ஒரு மலைப்பாம்பை வைத்துக்கொண்டு ஆடுகிறாள். அனைவரும் வாயைப் பிளந்துகொண்டு பார்க்கின்றனர் (நாமும் தான் . . ஹீ ஹீ ஹீ).
இதுவரை, படு விறுவிறுப்பாகப் படம் செல்லும். இதன்பின், சற்றும் எதிர்பாராமல் ஒரு தற்குறித்தனமான, விழுந்து விழுந்து சிரிக்கும்படியான திரைக்கதை ’ட்விஸ்ட்’. டிப்பிக்கல் ரோட்ரிகஸ் பாணி நக்கல். ரோட்ரிகஸும் க்வெண்டினும் சேர்ந்து, நம்மை சிரிக்க வைத்திருப்பார்கள்.
ரோட்ரிகஸுக்கும் க்வெண்டினுக்கும், பழைய விண்டேஜ் அதிரடி மற்றும் வேம்ப்பயர் படங்கள் என்றால் உயிர். இதற்காகவே, அடிக்கடி இருவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் படங்களைப் போலவே இப்பொழுதும் படங்கள் எடுத்து வெளியிடுவார்கள் (ப்ளானட் டெர்ரர் ஒரு உதாரணம்). அப்படிப்பட்ட ஒரு ‘ட்ரிப்யூட்டே’ இந்தப் படமும்.
ஜாலியாகப் பாருங்கள். சிரியுங்கள். இந்த ரோட்ரிகஸ் – க்வெண்டின் ஜோடியை ரசியுங்கள்.
இதோ ட்ரைலர் இங்கே
இனி அதிரடி தான். நாளை சந்திக்கிறேன்.
பி.கு – திருமணத்துக்கு வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் வாழ்த்துகளோடு, நாங்கள் எங்களது வாழ்வைத் தொடங்கிவிட்டோம் நண்பர்களே. . . மீண்டும் நன்றி.
மிக்க நன்றி.. மீண்டும் சந்திப்போம்
தேளு திரும்பவும் திருமண வாழ்த்துக்கள்….ஆயுள் தண்டனை கிடைச்சிடுச்சா… நல்லாரு தல…
//இயக்கம், எடிட்டிங், இசை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தையும் சகஜமாகத் தனது படங்களில் கையாள்பவர்//
அட அப்ப அங்ககூட ஒரு டி.ராஜேந்தர் இருக்காரு போல…ஏய் டண்டனக்கா…
நேத்துதான் சல்மா ஹயாக்க கிளிப்பிங்ஸ பார்த்து டொரண்ட்ல போட்டேன். பார்த்துட்டு சொல்லுறேன்.
@ அண்ணாமலையான் – நன்றி தல. .
@ நாஞ்சில் பிரதாப் – உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… ஆயுள் தண்டனைன்னு சத்தம்போட்டு சொல்லிராதீங்க . . அப்புறம் எனக்கு தர்ம அடிதான் . . 🙂 . அப்பறம், ரோட்ரிகஸ்ஸ பத்தி எழுதும்போதே நம்ம டி ஆர பத்தி சொல்லலாம்னு நினைச்சி மறந்தாச்சு . . . கரெக்டா புடிச்சீங்க . . ஏ டணக்குனக்கா . . !
@ ஜீவன்பென்னி – உடாதீங்க . . அத்தன க்ளிப்பயும் அமுக்குங்க . . அப்புடியே எனக்கு ஒரு காப்பி . . 🙂
வாங்க பாஸ் வாங்க … கல்யாணமானவர்கள் கூட்டணியில் சேந்துட்டீங்க …
நண்பா நலமா?
வெல்கம் பேக்,வந்தவுடனே செம ரகலையான படதோடயா?
சூப்பர்.
இந்த படம் எனக்கு ஃபஸ்ட் ஆஃப் மிகவும் பிடித்தது,அந்த பஸ்சில் போய் அந்த ட்ராகுலா களப் வர்ம் வரை பிடித்தது,அதன் பின்னர் சல்மா ஹயேக் மற்றும் பரிவாரங்கள் கொல்ல கொல்ல எழுந்து வந்தது உவ்வே.
ஜார்ஜ் க்லூனிக்கு தம்பி க்வெண்டின்,செம காமெடியில்ல அது,அந்த பஸ்சில் பிணைக்கைதியாய் கூட்டி போகும் காட்சியெல்லாம் அருமை.
க்வெண்டின் செய்யும் அவசரக்கொலைகள் அநியாயம்.
சூப்பர நண்பா,தொடர்ந்து கலக்குங்க.
வாம்பயரை ட்ராகுலான்னு சொல்லிட்டேன்,எவ்வளவு தெளிவாயிருந்தாலௌம் மாத்தியே எழுதிடுறேன்.:)
நன்றி நண்பா. கலயாண வாழ்த்துக்கள் மறுபடியும்.
சூப்பர் தேள். பதிவுலகமும்,எங்க சங்கமும் தங்களை அன்புடன் வரவேற்கிறாது. படம் டவுன்லோட் போட்டுட்டேன்.நன்றி( பிகாஸா லிங்க் மெயில்ல தாடி வுடுங்க)
தாடி இல்ல தாட்டி வுடுங்க….ஸ்பெல்லிங் மிஸ்டேகாயிருச்சி…
ஹாய் கருந்தேள், ரொம்ப நாளா ஆளையே காணோம்! ஹனிமூன் எல்லாம் முடிஞ்சுதா? அண்ணி எப்பிடி இருக்காங்க?
வாழ்த்துக்கள் தலைவரே!
@ லக்கி – 🙂 சேர்ந்துட்டேன் . . இனி நம்ம கூட்டணிய முன்னேத்துறது எப்புடிங்குற சிந்தனைல தான் என்னோட வாழ்க்க கழியும் (ஸ்ஸ்… ஆரம்பிச்சிட்டாய்ங்களே) . .:-)
@ கார்த்திகேயன் – நண்பா . .ஆமாம். . எனக்கும் ஃபர்ஸ்ட் ஹாஃப் ரொம்ப புடிச்சது. செகண்ட் ஹாஃப் பார்த்து உளுந்து உளுந்து சிரிச்சேன் . .:-) க்வெண்டினோட நடிப்பு டமாஸு . . 🙂 நன்றி நண்பா . .
@ இராமசாமி கண்ணன் – மிக்க நன்றி நண்பா . . .
@ மயில் – தாடி தான் உட்டுருக்கேன் . . நாலு நாளு முள்ளு தாடி . . அப்புடித்தான் வழக்கமா இருப்பேன் . . ஆனா கல்லாணத்துக்கு மொழு மொழு ஷேவ் பண்ண வேண்டியதாயிடுச்சி . . 🙂
@ கரிகாலன் – இதோ நம்ம ஹியாட்டஸ் முடிஞ்சிருச்சி . . இனிமே நோ ப்ரேக் . . ஷ்ரீ நல்லா இருக்காங்க . . மிக்க நன்றி நண்பா . .
@ சென்ஷி – வாழ்த்துகளுக்கு நன்றி . . 🙂
நண்பரே,
மீண்டும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. சல்மா ஆண்டியின் டான்ஸுக்காகவே படத்தை பார்க்கலாம். அந்தப் படத்தை பிரசுரித்து என்னைக் குஷியாக்கி விட்டீர்கள் 🙂 தொடருங்கள் உங்கள் அதிரடிகளை.
கலக்கலா எழுதி இருக்கீங்க ராஜேஷ்…
படத்த இன்னக்கே டவுன்லோடு செஞ்சுட வேண்டியதுதான்…!!!
– இப்படிக்கு,
கொச்சி நகர சல்மா ரசிகர் மன்றம்.
@ காதலரே – 🙂 என்னாது சல்மா ஆண்ட்டியா? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் . . இதனைக் கண்டிக்கும் வகையில், வரிசையாக சல்மாவின் க்ளிப்புகளை நான் ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்யப் போகிறேன் . . 🙂
@ சிவன் – பட்டையக் கிளப்புங்க . . – இப்படிக்கு, அகில யூனிவர்ஸ் சல்மா ரசிகர் மன்றம் 🙂
இரண்டாம் பகுதி செம காமெடி.
செமையா நக்கல் பண்ணியிருக்காங்க.
ஹாஹா . . அங நிக்குறாயிங்க நம்ம ரோட்ரிகஸ் – டாரெண்டினோ ஜோடி.. இல்லையா . . 🙂
/////வாம்பயரை ட்ராகுலான்னு சொல்லிட்டேன்,எவ்வளவு தெளிவாயிருந்தாலௌம் மாத்தியே எழுதிடுறேன்.:)/////
ஜாய்ன் த கன்ஃப்யூஷன் க்ளப்..!!! 🙂 Twilight படத்துக்கு இதைத்தான் பண்ணினேன்.
கருந்தேள்,
இந்த படம் (அஸ் யூசுவல்) நமக்கு பிடித்த படம் தான், என்னுடைய நண்பர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட படம் இது. ஆனால் நான் இதன் இரண்டாம் பாகத்தையும் விட்டு வைக்க வில்லை (ஆனால் அது உலக மகா மொக்கை படம்). அதனுடன் கம்பேர் செய்யும்போது மூன்றாம் பாகம் சூப்பர்.
நீங்கள் ஒரு விஷயத்தினை சொல்ல மறந்து விட்டீர்கள். படம் முடியும்போது ஒரு டாப் ஆங்கிள் ஷாட்டில் அந்த விடுதியை காட்டுவார்கள். அதில் அந்த விடுதி இருந்தது ஒரு பழங்கால கோவில் போன்ற அமைப்பாக தோன்றும். அதனை சார்ந்தே இந்த மூன்றாம் பாகம் இருக்கும் (ப்ரீகுவல்). இந்த மூன்றாம் பாகத்தில் நம்முடை சல்மா (ஸாண்ட்டானிகோ பேண்டமோனியம்) அவர்கள் எப்படி ஒரு ரத்தக் காட்டேரியாக மாறினார்கள் என்பதே கதை. முடிந்தால் பாருங்கள்.
//
ரோட்ரிகஸுக்கும் க்வெண்டினுக்கும், பழைய விண்டேஜ் அதிரடி மற்றும் வேம்ப்பயர் படங்கள் என்றால் உயிர். இதற்காகவே, அடிக்கடி இருவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் படங்களைப் போலவே இப்பொழுதும் படங்கள் எடுத்து வெளியிடுவார்கள்//
ப்ராஜெக்ட் கிரைண்ட் ஹவுஸ்.
வாங்க..:))
@ பாலா – ஹீ ஹீ . . 🙂 அதெல்லாம் பரவாயில்ல . . நானெல்லாம் பேரு, மத்த டீட்டேயிலே மாத்தி எழுதுறவன் . . 🙂
@ விஸ்வா – அஸ் யூஸ்வல் . . லப்டப் பதி . .:-) எனக்கும் எனது படு க்ளோஸ் நண்பனுக்கு மட்டுமே பிடித்த படம் இது ! ஆனால் நான் இன்னமும் அதன் இரண்டாம், மூன்றாம் பகுதிகளைப் பார்க்கவில்லை . . பார்த்து விடுகிறேன் . . பேண்டமோனியத்தின் கதை அவசியம் தெரிய வேண்டுமே !! 🙂
ப்ராஜக்ட் க்ரைண்ட் ஹௌஸ் – ரிப்பீட்டேய் !!
@ ஷங்கர் – வந்தாச்சு !! 🙂
Jared, I think you were spot on about all of the dead space in the images. I know you do7n8#21&;t like cropping but a lot of them could be saved with a simple crop.