Gangs of Wasseypur – Contd . .

by Karundhel Rajesh June 28, 2012   Hindi Reviews

முன்குறிப்பு – இந்த விமர்சனத்தின் முதல் பாகம் படிக்க – Gangs of Wasseypur (2012) – Hindi


Thanks to the Madurai Triumvirate – Bala, Ameer Sultan & Sasikumar
For inspiring me to get back to my roots
மதுரையின் மூவேந்தர்களான பாலா, அமீர் சுல்தான் மற்றும் சசிகுமாருக்கு
நன்றி.
என்னை எனது வேர்களைத் தேடிச் செல்ல வைத்ததால்

இந்த வார்த்தைகளுடன் துவங்கும் இந்தப் படத்தில் நாம் காண்பது, சர்தார் கான் என்ற மனிதனின் வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் சித்தரிப்பில், சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவிலிருந்து தொடங்கி, எண்பதுகளின் இறுதிவரை பல்வேறு கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தக் கதாபாத்திரங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பின் விளைவாகவே இந்தப் படத்தின் கதை நமக்கு சொல்லப்படுகிறது.

ஷாஹீத் கான் – சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் வஸேபூர் கிராமத்தில், சுல்தானா ‘டாகு’ என்று அழைக்கப்பட்ட குரேஷி வம்சத்தை சார்ந்த மிகப்பெரும் கொள்ளையன் பெயரை போலியாக உபயோகித்து ரயில்களைக் கொள்ளையடிக்கிறான். இது தெரிந்து, சுல்தானா டாகு, ஷாஹீத் கானுடன் இருக்கும் அத்தனை பேரையும் கொன்றுவிட்டு, ஷாஹீத் கானை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துவிடுகிறான். தன்பாத் என்ற பக்கத்து ஊருக்கு தனது தம்பி ஃபர்ஹானுடன் சென்று, ரமாதீர் சிங் என்ற நிலக்கரி சுரங்க உரிமையாளரிடம் வேலைக்கு சேர்கிறான் ஷாஹீத். ஆனால், அங்கே அவனது மனைவி, சர்தார் என்ற குழந்தையைப் பெற்றுவிட்டு இறக்க, இந்த செய்தி தனக்கு வராமல் தடுத்த மனிதனை கல்லாலேயே அடித்துக் கொல்கிறான். இதனால் ரமாதீர் சிங்கின் பிரதான அடியாளாகிறான். ஆனால் ஒருநாள் தம்பியிடம் ரமாதீர் சிங்கைக் கொன்று, அந்த நிலக்கரி சுரங்கத்தை பறிக்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இதை ஒட்டுக்கேட்கும் ரமாதீர் சிங்கினால் வாரணாசிக்கு அனுப்பப்பட்டு கொல்லப்படுகிறான். அவனது தம்பி, சர்தாரைத் தூக்கிக்கொண்டு தப்பிக்கிறான். வளரும் சர்தாரிடம் ரமாதீர் சிங்கைப் பற்றிச் சொல்லி, ரமாதீர் அவமானப்பட்டு, அவனைச்சுற்றியிருக்கும் அனைவரும் சிறுகச்சிறுக இல்லாமல் போய், தனியாளாக அவனை நிறுத்தி, அதன்பின் கொல்வேன் என்று சபதம் எடுக்க வைக்கிறான் ஃபர்ஹான்.

இதன்பின் நடப்பவையே கதை.

ஒரு கமர்ஷியல் படத்தின் இன்றியமையாத டெம்ப்ளேட் ஒன்றை அப்படியே எடுத்துக்கொண்டு, அந்த டெம்ப்ளேட்டின் வாயிலாக, மிகத்தரமான ஒரு படத்தை அனுராக் காஷ்யப் வழங்கியிருக்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், ஆயிரம் முறை சொல்லப்பட்டிருக்கும் டெம்ப்ளேட் இது. ஆனால், இந்த டெம்ப்ளேட்டின் சினிமாத்தனங்களை மிக மிக கவனமாக அகற்றியிருக்கிறார் காஷ்யப். அதனாலேயே இந்த டெம்ப்ளேட் இப்படத்தில் மிக இயல்பாகவும் ரியலிஸத்துடனும் அமைந்துவிட்டது.

ஒரு டெம்ப்ளேட்டை திரையில் காட்டும்போது இரண்டு வகையில் காட்டலாம். ஒன்று: அந்த டெம்ப்ளேட்டுக்கான அத்தனை சினிமாத்தனங்களையும் ஒன்றுவிடாமல் அப்படியே வைத்து, மசாலாவான ஒரு படத்தை வழங்கலாம். உதாரணம்: இரண்டு தாதா கும்பல்களுக்குள் நடக்கும் சண்டை என்ற டெம்ப்ளேட்டை லைட்டாக மாற்றி பாஷா, சண்டைக்கோழி ஆகிய மசாலாக்களாகக் கொடுக்கலாம். இதிலேயே சினிமாத்தனங்களை கொஞ்சம் மாற்றி, ரியலிஸ உணர்வை இடையில் நுழைக்க விரும்பினால் அது Sathya என்று ராம் கோபால் வர்மாவினால் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு தாதா கும்பல் என்பதில் ஒருபுறம் ஒரே ஒரு ஹீரோ – மற்றொருபுறம் ஒரு தாதா என்று இதே டெம்ப்ளேட்டை பலவகையில் வைத்து பல்வேறு படங்களைக் கொடுக்க முடியும்.

இரண்டு: அதே டெம்ப்ளேட்டை உற்றுக் கவனித்து, அதில் உள்ள சினிமாத்தனங்களை கவனமாக நீக்கினால் போதும். அதாவது, புதிதாக ரியலிஸம் என்ற ஒன்றை புகுத்தவே தேவையில்லை. இருக்கும் மசாலா ஐட்டங்களை வெட்டிவிட்டாலே போதும் – ஆரண்ய காண்டம் போன்ற அருமையான படம் நமக்குக் கிடைத்துவிடும். (மசாலா டெம்ப்ளேட்டில் அந்த மசாலாவை நீக்கிவிடுவதில், பருத்தி வீரனையும் சொல்லமுடியும்). மசாலாவை நீக்குவதாக எண்ணிக்கொண்டு ‘ரியலிஸ’ காட்சிகளை உள்ளே புகுத்த முயன்றால், அந்தப் பரிசோதனை கோளாறாகிவிடுவது உண்டு (குருதிப்புனல் ஒரு உதாரணம். ஏன்? படத்தில் சொல்லப்படும் ‘நக்ஸலைட்’கள் பற்றிய கருத்துகளை கவனித்தாலே புரிந்துவிடும். அதேபோல் ஆய்த எழுத்து இன்னொரு உதாரணம். இதிலும் கதாபாத்திர உருவாக்கத்தில் பல முரண்பாடுகளை பார்க்க முடியும்).

இருக்கும் மசாலா டெம்ப்ளேட் ஒன்றை லபக்கென்று கவ்விக்கொண்டு, அதன் சினிமாத்தனங்களை வெட்டி எறிந்துவிட்டு, அந்த இடங்களில் இந்த மசாலா ஆயிட்டங்களினால் அமுங்கிப்போயிருந்த உண்மையான எளிய விஷயங்களை மேலே மிதக்கவிட்டால் (நாம் எதையும் நுழைக்கத் தேவையில்லை. தண்ணீரில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் தட்டின் மீது வைக்கப்பட்டிருந்த கல்லை எடுத்து எறிந்ததும், அந்த தட்டு இயல்பாகவே மேலே வந்துவிடுகிறது), வஸேபூர் ரெடி.

படத்தில் நெடுகக் காண்பிக்கப்படும் சர்தார் கான் எப்படிப்பட்டவன்? சிறுவயதில் அப்பாவி. அதன்பின் விபரம் தெரிந்த வயதில், கிடைக்கும் வாய்ப்பை இறுகப்பற்றிக்கொள்வதில் கில்லாடி. அவன் வளர்க்கப்படுவதே ஜல்லிக்கட்டுக் காளைக்கான பயன்பாட்டுக்காகத்தான். சிறுவயதில் இருந்து அவனுள் விதைக்கப்பட்ட பழியின் வெறியே அவனை வாழவைக்கிறது. ரமாதீர் சிங் என்ற மனிதன், அவனது சிறுவயதில் இருந்தே இவனால் கொல்லப்படுவதற்கே வாழ்ந்து வருவதைப் போன்ற வெறி அது. அதே சமயம் சர்தார் கான் இயல்பில் வேண்டுமென்றே தீங்கு செய்வதில்லை. இந்தப் படம் முழுக்க, ரமாதீர் சிங் செய்யும் காரியங்களுக்கு எதிர்வினையாற்றுவதைப் போலவே சர்தார் கானின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஓரிரு காட்சிகளில் சர்தார் கான் வலியச் சென்று ரமாதீர் சிங்கை வம்புக்கிழுக்கிறான். ஆனால் அதுவும் கூட ரமாதீர் யோசிக்காமல் செய்த ஆரம்ப செயலுக்காகவே.

சர்தார் கான் வளர்ந்து, தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான். அவனுக்கென மனைவி, குழந்தைகள், அடியாட்கள் ஆகியவர்கள் மெல்ல மெல்ல அமைகின்றனர். இவர்கள் அனைவருடனும் சர்தார் கான் பழகும் காட்சிகளை மட்டும் பார்த்தால், அவன் இந்தப் படத்தின் ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் மட்டுமே என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். அவனுக்கென்று எந்த முக்கியத்துவமும் இல்லாத ஸீன்கள் தான் இப்படத்தில் அதிகம். அதுதான் இந்தப் படத்தின் பிரமாதமான அம்சமாக எனக்குத் தோன்றியது.

இவனுக்கு நேர் எதிராக ரமாதீர் சிங் என்ற கதாபாத்திரம் காட்டப்படுகிறது. சர்தார் கானின் கதாபாத்திரம் மூலமாக மட்டுமே இந்த ரமாதீர் சிங் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் நாம் பார்க்கிறோம். அவனுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளிலும் கூட ரமாதீர் சிங்குக்கு சர்தார் கானின் இயல்பான காட்சிகளைப் போன்று எதுவும் வருவதில்லை (குடும்பத்துடன் ரமாதீர் சிங் பேசும் காட்சிகளோ, மற்றவர்களுடன் இயல்பாக ரமாதீர் சிங் பழகும் காட்சிகளோ இப்படத்தில் வேண்டுமென்ற வைக்கப்படவில்லை). ரமாதீர் சிங்தான் இப்படத்தின் வில்லன் என்று மிக வெளிப்படையாகவே நமக்குத் தெரிகிறது.

இந்த இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, இவர்களின் கதையில் ஊடாடும் பிற மனிதர்களின் வாயிலாக இக்கதை அருமையாக நகர்கிறது.

சர்தார்  கான் என்ற மனிதனாக அருமையாக நடித்திருப்பவர், மனோஜ் பாஜ்பாய். அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை சுல்தான் கானாகவே பிய்த்து உதறியிருக்கிறார் (என்று சொன்னால் அது வழக்கமான விமரிசன டெம்ப்ளேட்தான். ஆனால் வேறு என்ன செய்வது? அந்த வாக்கியம் ஒரு டெம்ப்ளேட்டாக மாற்றப்பட்டுவிட்டதே?). இந்த நடிப்பு எப்படி சாத்தியப்பட்டது? போகிற போக்கில் சர்தார் கான் உதிர்க்கும் ஒரு வசைச்சொல்லுக்குக் கூட ஆடியன்ஸின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறதே?

இந்தக் கதாபாத்திரம், தேவையான சமயங்களில் மட்டும் பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது. பிற சமயங்களில், தெருவோரம் குந்திக்கொண்டு பீடி பிடிக்கும் ஒரு சாதாரண மனிதன்தான் சர்தார் கான். சர்தார் கான் எதிர் கும்பலின் ஆட்களை வேட்டையாடும் காட்சிகள் எனக்குப் பிடித்தன. அந்தக் காட்சிகளிலுள்ள மிக இயல்பான எதார்த்தம் (இந்த எதார்த்தம் என்ற வார்த்தையுமே ஒரு டெம்ப்ளேட்தான்). கத்தியை வைத்துக்கொண்டு இன்னொருவனை குத்தும்போது சர்தார் கானின் கண்களில் தெரியும் பயம் – அந்த மனிதன் எப்படி எதிர்வினை செய்வானோ என்ற பயம் அது – இந்த நுணுக்கமான நடிப்பு எப்படி சாத்தியப்படுகிறது? கையில் குண்டுகளை வைத்துக்கொண்டு, புல்லட்டில் ட்ரிபிள்ஸில் வளைத்து வளைத்து குண்டுகளை வீசி,  ஒவ்வொரு குண்டு வெடிக்கும்போதும் அவனது கண்களில் மின்னும் சந்தோஷம் – வெறி – ‘கொய்யால அப்புடியேதாண்டா’, ‘ சாவுங்கடா சாவுங்கடா’ என்று அவன் கத்துவது – Amazing !

சர்தார் கானைப் பற்றிய விவரிப்பு போதும். இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் – இந்தப் படத்தை நமக்கு விவரிக்கும் பின்னணிக் குரலுக்குச் சொந்தக்காரரான ஃபர்ஹான் (பியுஷ் மிஷ்ரா – அனுராக் காஷ்யப்பின் குலால் படத்தில், வில்லன் கே கே மேனனின் வீட்டிலேயே ஆர்மோனியம் வாசித்துக்கொண்டிருக்கும் நபரை நினைவிருக்கிறதா? அதே படத்துக்கு இசையும் இவரே. அருமையான தியேட்டர் ஆர்டிஸ்ட். வெற்றிகரமான திரைக்கதையாசிரியரும் கூட). சர்தார் கானை வளர்க்கும் நபர். அவனுடனே இருக்கும் நிழல். சர்தார் கானின் தந்தை ஷாஹீத் கானின் அடியாள் (அல்லது தம்பி. பிஹாரி ஹிந்தி சரியாகப் புரியாததால் வந்த வினை இது). படம் முழுக்கவே பல முக்கிய இடங்களில் இவரது பின்னணிக் குரலே நம்மை அழைத்துச் செல்கிறது. கூடவே, படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான ஸீன் இவருடையது.

இதைத்தவிர, சர்தார் கானின் மனைவிகள் நஹ்மா மற்றும் துர்கா (ரீமா சென்). சர்தார் கானின் மகன்கள் டேனிஷ் கான், ஃபைஸல் கான் மற்றும் பெர்பெண்டிகுலர் (இரண்டாம் பாகத்தில் பட்டையைக் கிளப்ப வருகிறான் இந்த பெர்பெண்டிகுலர்). இதுதவிர, சர்தார் கானின் தந்தையை ஊரை விட்டே துரத்திய குரேஷிகள்.

படத்தில் சர்தார் கானும் ரமாதீர் சிங்கும் மோதிக்கொள்ளும் பல நிமிடங்கள் வருகின்றன. அவர்கள் எப்படி மோதிக்கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள். பதிலுக்கு பதில் என்பதை சுவாரஸ்யமாக நமக்குக் காண்பிக்கும் நிமிடங்கள் அவை.

இன்னமும் இந்தப் படத்தைப் பற்றி வரிவரியாக விவரிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக – பின்னணியில் வரும் பாடல்கள். இசையமைத்தது – இளம்பெண் ஸ்நேஹா கன்வல்கர் (Sneha Khanwalkar). ஒவ்வொரு பாடலும் அட்டகாசம்! குறிப்பாக, சர்தார் கான், இரண்டாவது மனைவியாகப்போகும் துர்காவுடன் கழிக்கும் அந்தக் குறும்பான நிமிடங்களில் வரும் பாடலான -‘ஓ வுமனியா ஆஹா உமனியா‘.

அதே போல் இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் பாடலான –பிஹார் கே லாலா (Bihar ke Lala). கடைசியாக இப்படியொரு இசையைக் கேட்டது – ஆரண்ய காண்டம் க்ளைமேக்ஸ் தாதா சண்டையில். இந்த இசை வரும் சூழ்நிலையை கவனியுங்கள். அப்போதுதான் நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று புரியும்.

படத்துக்கு அட்டகாசமாக பின்னணி இசையமைத்திருப்பது – ஜி.வி பிரகாஷ் குமார்!

இன்னும் கூட இந்தப் படத்தின் நடிப்பு, இசை, கதையின் சுவாரஸ்யங்கள் ஆகியவற்றைப் பற்றி இன்னொரு கட்டுரை எழுத முடியும். ஆனால் இதைப் படிக்கும் நண்பர்களின் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை என்பதால், இத்துடன் முடிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை, Gang-war படங்களுக்கு இது ஒரு baseline. இந்தப் படத்தை மீறி இதைவிட அட்டகாசமாக ஒரு படம் அடுத்த சில வருடங்களுக்காவது வெளிவர வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.

It’s seldom possible for anybody to surpass this film, at least for the next few years!

Gangs of Wasseypur ட்ரைலர் இங்கே.

படத்தின் டைட்டில்கள் முடிந்தபின் வரும் Gangs of Wasseypur part 2 ட்ரைலரை காணத் தவறாதீர்கள்.

  Comments

23 Comments

  1. /////இந்தப் படத்தை மீறி இதைவிட அட்டகாசமாக ஒரு படம் அடுத்த சில வருடங்களுக்காவது வெளிவர வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.

    It’s seldom possible for anybody to surpass this film, at least for the next few years! //////

    ////
    hanks to the Madurai Triumvirate – Bala, Ameer Sultan & Sasikumar
    For inspiring me to get back to my roots
    மதுரையின் மூவேந்தர்களான பாலா, அமீர் சுல்தான் மற்றும் சசிகுமாருக்கு
    நன்றி.
    என்னை எனது வேர்களைத் தேடிச் செல்ல வைத்ததால்//////

    சந்தேகமேயில்லை. மேஜர் ஆவிதான்.

    Reply
  2. என் ராஜபாட்டையில் நேத்து.. முந்தாநேத்து, நாளிக்கு, இன்னிக்கு.

    Reply
  3. இத்தனை ‘கான்’-ஐ போட்டு இவனுங்க படமெடுத்தா.. ஆஹா ஓஹோ-ன்னுங்க. ஆனா கமல் ஒரு கான் -ஐ போட்டு ஹேராம் படமெடுத்தா மட்டும் உங்களுக்கு பார்ப்பனீசம் பொத்துகிட்டு வந்துடுது.

    Reply
  4. ஆழ்ந்த விமர்சனம். நீங்கள் ஊ…லல்லா படம் பார்த்து விட்டீர்களா…..விமர்சனம் இதுவரை எழுதவில்லை என்றால் சீக்கிரம் நீங்கள் எழுதி படிக்க ஆசை

    Reply
  5. உங்கள் விமர்சனம் படித்துவிட்டுதான் படம் பார்க்கலாம் என்றிருந்தேன். ப்ரோமீதியஸ் கூட அப்படித்தான் பார்த்தேன்..நல்ல விமர்சனம்…

    இன்று என் தளத்தில்: hyperlinkகுடன் சேர்த்து கமென்ட் போடுவது எப்படி ??

    Reply
  6. Superb review……i am a big fan of anurag kashyap. His sholay is my all time favorite movie…..

    Reply
  7. நேரம் கிடைக்கும்போது டெட்ரிஸ் கேமிற்கு விமர்சனம் எழுதவும். நான் அதுதான் இப்ப விளையாடிகிட்டு இருக்கேன்.

    Reply
  8. அட்டகாசம். நீங்க எழுதினவுடனேதான் நான் பாத்ரூம் போகனும்னு இருந்தேன்.

    நிச்சயம் போய்டுவேன்

    Reply
  9. //கடைசியாக இப்படியொரு இசையைக் கேட்டது – ஆரண்ய காண்டம் க்ளைமேக்ஸ் தாதா சண்டையில். //

    ஆரண்ய காண்டம் படத்தின் இந்த இசை.. இந்த ஸ்பானிய படத்திலிருந்து உருவப்பட்டது என்பதை தாங்கள் அறிவீரா?

    Reply
  10. தமிழர்களின் முக்காத கவலை : ஆரண்ய காண்டம் இசை காப்பியா?

    Reply
  11. அனுராக் காஷ்யப் படங்கள் புடிக்காத சவீ தா பாபி க்கு இங்க என்ன வேல ??????

    ————-

    // ரியலிஸ உணர்வை இடையில் நுழைக்க விரும்பினால் அது Sathya என்று ராம் கோபால் வர்மாவினால் வழங்கப்படுகிறது. //

    சத்யா – ஸ்க்ரீன்ப்ளே…….அனுராக் காஷ்யப் (பாபியின் கவனத்திற்கு)

    ஆனா, இந்த படம் ஏகத்துக்கும் gangs of newyork படத்துடன் பொருந்தாதே…(நா இன்னும் பாக்கல..உங்க பதிவே தெளிவா கதய புரிய வெச்சிருச்சே). ஒருவேள காஷ்யப் ஸ்கோர்சேசேயின் வெறித்தனமான விசிறி என்பதால் – ஒரு tribute மாதிரி எதுவும் படத்தில் மென்ஷன் செஞ்சிருக்காரா ?

    பாலகணேசன் சொல்லியிருக்குற மாதிரி, வரவர பதிவுகளில் எல்லாம் திரைக்கதை பத்திய விஷயங்கள் தூக்கலா இருக்கு.

    // ஆரண்ய காண்டம் போன்ற அருமையான படம் நமக்குக் கிடைத்துவிடும். (மசாலா டெம்ப்ளேட்டில் அந்த மசாலாவை நீக்கிவிடுவதில், பருத்தி வீரனையும் சொல்லமுடியும்). //

    ஒரு சந்தேகம்…..பருத்திவீரன் பக்கா மசாலா படம் தான ?

    Reply
  12. என்ன கொடுமைனா….மதுரகாரய்ங்க பத்தி ஓப்பனிங் ஸ்லைட் வரும்படும்…..மதுர உட்பட – திண்டுக்கல்ன்னு…இந்த ஏரியாவுல எங்கேயுமே ரிலீஸ் ஆகல…

    Reply
  13. characterization பற்றிய விவரிப்புகள் அட்டகாசம். திரும்ப ஒருக்கா படிக்கிறேன். க்ரேட்..

    ———–

    மேல இருக்கும் எல்லா கமென்டையும் காப்பி செஞ்சு FB, G+ன்னு எல்லா பக்கமும் பேஸ்ட் செஞ்சிர்றேன். அதான நம்ம வழக்கம்…

    Reply
  14. சார் சூப்பர் ரிவியூ சார்.. உங்க ரெவியூ படிச்சுட்டு தான் படத்துக்கு போலாம் ன்னு இருந்தேன்… நான் உங்கலோட பெரிய பேன்….பை தி வே ஹாலிவூட் பாலா ன்னு ஒரு பதிவர் இருந்தாரே .. அவரு ஏன் இப்ப எழுதுறது இல்ல….

    Reply
  15. ஹாய் சவித்தா பாபி ஆண்ட்டி .. உங்க கதை எல்லாம் படிச்சுருக்கேன்… சாரி பாத்துருக்கேன்… பாலா அங்கிள் தான் ரெபர் பண்ணாரு உங்க கதை எல்லாம்… செம பர்பாமன்ஸ் ஆன்டி நீங்க எல்லா கதை லையும்…

    கருந்தேள் சார் நீங்க ஏன் சவித்தா ஆண்டிக்கு த்ரிபியுட்டா அவங்க காமிக்ஸ்க்கு விமர்சனம் எழுத கூடாது.. அவேன்ஜெர்ஸ் மார்வேல்ஸ் ன்னு உங்க ப்லாக் ல படிச்ச என்ன மாறி ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியா இருக்கும்.. என்ன ஆன்டி சொல்றிங்க..?? 😛 😛

    Reply
  16. இந்த படம் எங்கள் நாட்டில் ரிலீஸ் ஆகப் போவதில்லை….. உங்கள் பதிவே படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது…பதிவை படிக்க ஆரம்பித்தவுடன் டவுன்லோட் போட்டுவிட்டேன்…..

    Reply
  17. டெம்ப்ளேட் = குறியீடு

    Reply
  18. உங்கள் பதிவுகளை கடைந்த ஒரு மணிநேறமாக படித்து வருகிறேன்,
    உங்கள் பதிவுகளை பாடிக்கும் போது எண்ணையும் மீறி அழுகாச்சி பீறிக்கொண்டு வருது,
    நீங்கல் ரிலீஸ் ஆகாத பாடங்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும்,
    எங்கள் நாட்டு பக்கம் வந்தால் கண்டிப்பாக போன் செய்யவும்,

    Reply
  19. பக்காவா ப்ளான் செஞ்ச மாதிரியே எல்லாரும் கமென்ட் போட்டுட்டீங்க…..இனி ஒரு பய இங்க கமென்ட் போடுவான்…..அவ்ளோதான்….சக்சஸ்…சக்சஸ்…..

    Reply

Join the conversation